Wednesday, May 30, 2018

நடிகவேள் speech

*1973 ஆம் ஆண்டு தந்தை பெரியார்
 மறைந்த நினைவேந்தல் கூட்டத்தில்
 #நடிகவேள்_இவ்வாறு_பேசினார்......*

"படிக்காத என்னை ஏன் அழைத்தீர்கள் 
என்று உரையைத் தொடங்கியவர் ,,,,,, 

*1920 களில் பெரியார் முதல் வலம் 
வருகிறார்.*
அப்போது நாடகக்குழுவில் சிறுவனாக 
வேலை செய்து வந்தேன். காலையில் 
நாடகக் குழுவினருக்கு காபி தேநீர் 
வாங்கச் செல்வேன்.

அய்யர் கடையில் 20 அடி 
தூரத்திலிருந்து "அய்யா சாமி" என்று 
உரத்தக் குரலில் கத்துவேன். 
"டேய் வரேன்டா" என்று கூறிவிட்டுப் 
பாத்திரத்தில் காபியை அய்யர் 
எடுத்து வருவார். 
நான் எடுத்துவந்த பாத்திரத்தையும்,
 பணத்தையும் மண் தரையில் 
வைக்கச் சொல்வார். 
நீண்ட கைப்பிடியுடன் உ
ள்ள அவரது பாத்திரத்திலிருந்து 
காபியை ஊற்றுவார்.

*1930களில் தமிழ்நாடெங்கும் 
பெரியார் மீண்டும் வலம் வருகிறார்.*

காபி கடைக்கு மிக அருகில் 
செல்ல முடிகிறது. "சாமி காபி கொடுங்கள்" 
என்று கூறியவுடன் "இதோ வரேன்டா!" 
பாத்திரத்தையும் பணத்தையும்
 உணவகத்தின் மேஜை மீது வைக்க 
முடிந்தது. "டேய்" என்ற ஆணவச் சொல்
 காணாமல்  போய்விட்டது.

*1940களில் மீண்டும் பெரியார் 
வலம் வருகிறார்.* 

உணவகத்தின் நாற்காலியில் அமர்ந்து
 கொண்டு "அய்யரே! காபி கொடு, 
காசு கொடுக்கிறன்" என்று மிடுக்கோடு 
பேச முடிந்தது. 

"இதோ தரேன்! வாங்கிக்கப்பா"
 இப்படியாக, படிப்படியாக 
அனைவருக்கும்
 மரியாதையும், சம உரிமையும் 
கிடைக்கிறது. 
இதை யார் வாங்கித்தந்தது?

*#அய்யா_சாமி : டேய் வரேன்டா ......*
*#சாமி : வரேன்டா .....*
*#அய்யரே : வாங்கிக்கப்பா .......*
மாணவர்களே! சற்றுச் சிந்தித்துப் 
பாருங்கள் ,,,,,,,

ஒரு முறை இந்தச் சொற்களைச் 
சொல்லிப்பாருங்கள்,  இந்த ஒலி சத்தத்தின் 
வேறுபாடுகளில்  *தந்தை பெரியாரின் உழைப்பும், 
சீர்திருத்தமும் பிரிக்க முடியாதபடி  ஒட்டிக்கொண்டிருக்கும்.*

ஒரு நிமிடம் இவற்றை சிந்தித்துப்
 பாருங்கள்...

பதிவு : Vetriventhan K

No comments:

Post a Comment