Tuesday, May 1, 2018

#கொங்கு #வேளாளர்--BC வரலாறு

#கொங்கு #வேளாளர் பிற்படுத்தப்பட்ட வகுப்பில்
சேர்ந்த #வரலாறு

அனைத்துக் கட்சியிலும் உள்ள கொங்கு வெள்ளாளர் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் அனைவரும் கோரிக்கை
மனுவில் கையெழுத்திட்டு #முதல்வர் #கலைஞரிடம் அளித்தனர்.

அப்பொழுது மாண்புமிகு அமைச்சர் திரு. கண்ணப்பன் அவர்களும் உடனிருந்தார்.

கொங்கு வெள்ளாளர் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்ட வரலாற்று நாயகர்கள்:
திருவாளர்கள்

1. என். நாச்சிமுத்து ,ஒட்டனசத்திரம் தொகுதி
2. ளு. நல்லுசாமி, கரூர்
3. ஆ. சின்னுசாமி, மொடக்குறிச்சி
4. என்.மு.பழனிசாமி, பெருந்துறை
5. ஆ சுப்பரமணி,ஈரோடு
6. என். பழனிசாமி, பொங்கலூர்
7. சுப்பரமணியம், சத்தியமங்கலம்
8. ஏ.மு. ராமசாமி ,பவானிசாகர்
9. ளு.ஆ. பழனியப்பன், கோபி
10. யு.ஆ. இராஜா, பவானி
11. அப்பன் பழனிசாமி, வெள்ளகோவில்
12. பி. சண்முகசுந்தரம், பொள்ளச்சி
13. மாணிக்கவாசகம், தொண்டாமுத்தூர்
14. ஊ.ஏ. வேலப்பன்,கபிலர்மலை
15. சின்ன வெள்ளைய கவுண்டர், சேந்தமங்கலம்
16. நைனாமலை, இராசிபுரம்
17. பழனிவேல் கவுண்டர், ஆத்தூர்
18. நு. ஆ. நடராசன், அந்தியூர்
19. மு. முத்துசாமி,வேடச்சந்தூர்
20. குமாரசாமி, பல்லடம்
21. ளு. துரைசாமி, திருப்பூர்
22. செ. கந்தப்பன், திருச்செங்கோடு
23. கோவை செழியன், காங்கயம்
24. அப்துல் ஜபார்,அரவக்குறிச்சி
25. பாவலர் முத்துசாமி எம்.பி., நாமக்கல்
26. மு. கண்ணன் எம்.பி., சேலம்
27. செ. முத்துசாமி எம்.எல்.சி., நாமக்கல்

முஸ்லீம் லீக்
கட்சியைச் சேர்ந்த #அரவக்குறிச்சி எம்.எல்.ஏ #திரு.#அப்துல்ஜபார் அவர்கள் கொங்கு வெள்ளாளர் கோரிக்கைக்கு ஆதரவாக கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டு தந்தது மிகவும் #பெருமைப்படத் #தக்கதாகும்.

1975-ஆம் ஆண்டில் சட்டசபையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடந்தபொழுது கொங்கு வெள்ளாளர் எம்.எல்.ஏ.க்கள் திரு. #கோவை #செழியன் அவர்களும் #திரு. #செ.#கந்தப்பன் அவர்களும் முதல்வரிடம்
நமது கோரிக்கையை ஏற்குமாறு கேட்டுக்கொண்டனர்.

சட்டசபையில் அன்றைய தினம் முதல்வர் கலைஞர் அவர்கள் கொங்கு வெள்ளாளர் கோரிக்கையை
ஏற்று கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தின் 20 ஆண்டுகாலக்
கனவு நனவாகியது.

வரலாற்று உண்மைகளை யாரும் மறைக்க முடியாது. வரலாற்றை மாற்றி எழுத 20 ஆண்டு காலம் உருண்டு போனது.

அந்த
20 ஆண்டு காலம் கொங்கு வெள்ளாளர் சமுதாயத்திற்கு இருண்ட காலமாகும். 1975ல் முதல்வர் கலைஞரின் அறிவிப்புதான் இருண்டு கிடந்த கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு விடிவெள்ளி
ஆனது. அனைத்து உட்பிரிவுகளையும் உள்ளடங்கிய கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து தெளிவான #அரசாணையாக 16.05.1975 #அன்று (பு.ழ.ஆ.ள. ழே 371.னவ.16.05.1975) கலைஞரின் தமிழக அரசு வெளியிட்டது.

அதன் பிறகுதான் கொங்கு வெள்ளாளர் இனத்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள், மருத்துவம், பொறியியல்
போன்ற கல்லூரிகளில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடும் கிடைக்க ஆரம்பித்தது.

கொங்கு வேளாளர் சமுதாயம் புதிய அத்தியாயம் காணத் தொடங்கியது.
ஒரு சமுதாயம்
அடுத்த நிலைக்கு முன்னேறி இருக்கிறது.
...........

No comments:

Post a Comment