Wednesday, December 12, 2018

மனு தர்ம சாஸ்திரங்களில் சில....

 

இந்துத்துவ புனித  
மனு தர்ம சாஸ்திரங்களில் சில....

1. "பிராமண குலத்தில் பிறந்தவன் 
ஆசாரமில்லாதவனாயினும்,
 அவன் நீதி செலுத்தலாம்.
 சூத்திரன் ஒரு போதும் நீதி 
செலுத்தலாகாது"
 (*அத்தியாயம் 8. சுலோகம் 20.*)

2. "சூத்திரர் நிறைந்த தேசம் 
எப்பொழுதும் 
வறுமை யுடையதாயிருக்கும்" 
(அ.8. சு.22.)

3. "சூத்திரனாகவும், 
மிலேச்சனாகவும், பன்றியாகவும்
 பிறப்பது தமோ
 குணத்தின் கதி" (அ.8.சு. 22.)

4. "ஸ்தீரிகள் புணர்ச்சி 
விஷயத்திலும், பிராமணரைக் 
காப்பாற்றும் விஷயத்திலும்
 பொய் சொன்னால்
 குற்றமில்லை" (அ.8. சு.112.)
5. "நீதி ஸ்தலங்களில் பிரமாணம் 
செய்ய வேண்டிய பிராமணனை
 சத்தியமாகச் சொல்லுகிறேன்
 என்று சொல்ல செய்ய
 வேண்டும். பிரமாணம் செய்ய 
வேண்டிய சூத்திரனை 
பழுக்கக் காய்ச்சின
 மழுவை எடுக்கச் 
சொல்ல வேண்டும்; 
அல்லதுதண்ணீரில்
 அமிழ்த்த வேண்டும்.
 சூத்திரனுக்கு
 கை வேகாமலும்,
தண்ணீரில் 
அமிழ்த்தியதால்
 உயிர் போகாமலும் 
இருந்தால் 
அவன் சொன்னது
 சத்தியம்
 என உணர வேண்டும்" 
(அ. 8. சு. 113115.)

6. "சூத்திரன் பிராமணனைத்
 திட்டினால் அவனது நாக்கையறுக்க 
வேண்டும்" (அ.8. சு. 270.)
7. "சூத்திரன் பிராமணர்களின் 
பெயர், ஜாதி இவைகளை சொல்லித்
 திட்டினால் 10 அங்குல நீளமுள்ள
 இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய 
எரிய அவன் வாயில் 
வைக்க வேண்டும்" (அ.8. சு.271.)

8. "பிராமணனைப் பார்த்து
, "நீ இதைச் செய்ய வேண்டும், 
என்று சொல்லுகிற சூத்திரன் 
வாயிலும் காதிலும் எண்ணெயைக்
காய்ச்சி ஊற்ற வேண்டும்" (அ.8. சு.272.)

9. "சூத்திரன் பிராமணனுடன்
 ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் 
அவனது இடுப்பில் சூடு போட்டாவது
 அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது 
அறுத்தாவது ஊரை விட்டுத் 
துரத்த வேண்டும்" (அ.8. சு.281.
 
10. "பிராமணனைக் காப்பாற்றும் 
பொருட்டு 
பிராமணரல்லாதாரைக்
 கொன்றவனுக்கு 
பாவமில்லை" (அ.8. சு.349.)

11. "சூத்திரன் பிராமணப் பெண்ணைப்
 புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும்
 வரையும் தண்டிக்க வேண்டும்."
"பிராமணன் கொலைக் குற்றம்
 செய்தாலும் அவனைக் கொல்லாமலும், 
எத்தகைய தண்டனைக்கும் 
ஆளாக்காமலும் பொருளைக் 
கொடுத்து 
அனுப்பிவிடவேண்டும்." (அ.8. சு.380.)

12. "அரசன் சூத்திரனை பிராமணர்
 முதலிய உயர்ந்த சாதிக்கு பணி விடை
 செய்யும்படி கட்டளையிட வேண்டும். 
சூத்திரன் மறுத்தால்
 அவனைத் தண்டிக்க வேண்டும்
." (அ. 8. சு.410.)

13. "பிராமணன் கூலி கொடாமலே 
சூத்திரனிடம் வேலை வாங்கலாம்
; ஏனென்றால் பிராமணனுக்குத் 
தொண்டு
 செய்யவே கடவுளால் சூத்திரன் 
படைக்கப் பட்டிருக்கிறான்" (அ. 8. சு.413.)

14. "பிராமணன் சந்தேகமின்றி
சூத்திரன் தேடிய பொருளைக்
 கைப்பற்றலாம். ஏனென்றால்
 அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் 
பொருளுக்கும் உடையவனாக
 மாட்டான்" (அ. 8. சு.417.)

15. "சூத்திரன் பொருள் சம்பாதித்தால், 
அது அவனுடைய எஜமானனாகிய
 பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி 
சம்பாதித்தவனுக்குச் சேராது" (அ. 9. சு.416.)

16. "பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு
 பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு
 தந்தை சொத்தில் பங்கில்லை" (அ. 8. சு.155.)

17. "பிராமணன் பொருளை
 அபகரித்த சூத்திரனை சித்தரவதை
 செய்து கொல்ல வேண்டும். ஆனால் 
சூத்திரனுடைய பொருளை பிராமணன் 
தம் இஷ்டப்படி 
கொள்ளையிடலாம்." (அ.9. சு.248.)
18. "பிராமணன் மூடனானாலும் 
அவனே மேலானதெய்வம்" (அ. 9. சு. 317.)

19. "பிராமணர்கள் இழி 
தொழில்களில்
 ஈடுபட்டிருந்தாலும்
 பூஜிக்கத்தக்கவர்கள் 
ஆவர்கள்." (அ. 9. சு.319.)

20. "பிராமணனிடமிருந்து 
சத்திரியன் உண்டானவனாதலால் 
அவன் பிராமணனுக்கு துன்பஞ் 
செய்தால் 
அவனை சூன்னியம் செய்து 
ஒழிக்க வேண்டும்." (அ.9 சு. 320.)
 
21. "சூத்திரனுக்கு பிராமணப்
 பணி விடை ஒன்றே பயன் 
தருவதாகும். 
அவன் பிராமணனில்லாத
விடத்தில்
 க்ஷத்திரியனுக்கும்,
 க்ஷத்திரியனில்லா விடத்தில் 
வைசியனுக்கும் தொண்டு 
செய்ய வேண்டும்.
 அதிகமான செல்வமும், பசுக்களும்
 வைத்திருக்கிறவன், பிராமணன்
 கேட்டுக் கொடுக்காவிட்டால், 
களவு செய்தாவது, பலாத்காரம் 
செய்தாவது அவற்றை பிராமணன் 
எடுத்துக் கொள்ள 
உரிமையுண்டு." (அ.11. சு.12.)
 
22. "சூத்திரன் வீட்டிலிருந்து
 கேளாமலும் யோசிக்காமலும்
 தேவையான பொருளைப் பிராமணன் 
பலாத்காரத்தினால்
 கொள்ளையிடலாம்." )அ.11. சு.13.)

23. "யோக்கியமான அரசன்
 இவ்விதம் திருடிய பிராமணனைக்
 தண்டிக்கக் கூடாது." (அ.11. சு.20.)

24. "பெண்களையும் சூத்திரரையும்
 கொல்லுவது மிகவும்
 குறைந்த பாவமாகும்." (அ.11. சு.66.)
25. "ஒரு பிராமணன் தவளையைக் 
கொன்றால் செய்ய வேண்டிய
 பிராயச்சித்தம்
 ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் 
கொன்றாலும் 
செய்ய வேண்டும்." (அ.11. சு.131.)

25(அ). "அதுவும் முடியாவிடில்
 வருண மந்திரத்தை
 3 நாள் ஜெபித்தால்
 போதுமானது." (அ.11. சு.132.)

26. "க்ஷத்திரியன் இந் நூலில்
 (மநுதர்ம சாஸ்திரத்தில்) 
சொல்லப்பட்டபடி
 ராஜ்யபாரம் பண்ணுவதே 
தவமாகும்.
 சூத்திரன் பிராமண பணி விடை 
செய்வதே தவமாகும்." (அ.11 சு.285.)
 
27. "சூத்திரன் பிராமணனுடைய
 தொழிலைச் செய்தாலும் சூத்திரனே 
யாவன். பிராமணன் சூத்திரனுடைய 
தொழிலைச் செய்யின்
 பிராமணனேயாவன்.
 ஏனெனில் கடவுள் அப்படியே 
நிச்சயம் செய்துவிட்டார்." (அ.10. சு.75)

28. "பிராமணரல்லாதவன் 
உயர்குலத்தோருடைய தொழிலைச்
 செய்தால் அரசன் அவனது பொருள்
 முழுவதையும் பிடுங்கிக் கொண்டு 
அவனை நாட்டை விட்டுத்

 துரத்திவிட வேண்டும்." (அ.10. சு.96.)

29. "சூத்திரன் இம்மைக்கும்,
 மோட்சத்திற்கும் பிராமணனையே 
தொழ வேண்டும்." (அ.10. சு.96.)
30. "பிராமணன் உண்டு மிகுந்த 
எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த
 ஆடையும், கெட்டுப் போன
 தானியமும், 
சூத்திரனுடைய ஜீவனத்துக்கு 
கொடுக்கப்படும்." (அ.10. சு.125.)

31. "சூத்திரன் எவ்வளவு 
திறமையுடையவனாகயிருந்தாலும்
 கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது.
 சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் 
அது பிராமணனுக்கு
 துன்பமாய் முடியும்." (அ.10. சு.129)

32. "மனுவால் எந்த வருணத்தாருக்கு 
இந்த மனுதர்ம சாஸ்திரத்தால்
 என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ,
 அதுவே வேத சம்மதமாகும். 
ஏனென்றால், அவர் வேதங்களை 
நன்றாய் உணர்ந்தவர்." (அ.2. சு.7.)
இன்னும் இதைப் போன்று 
ஆயிரக்கணக்கான அநீதியானதும்,
 ஒரு சாராருக்கு நன்மையும்,
 மறுசாரருக்குக் 
கொடுமையும் செய்வதுமான
 விதிகள் மனுதர்மத்தில்
 நிறைந்திருக்கின்றன....

ஆகையால் தோழர்களே...இந்நூலை
"மனுதர்மம்"என்று கூறுவதா?
அல்லது "மனு அதர்மம்"
என்று கூறுவதா?
# முடிந்தால்  சிந்திக்கவும். ...
*******************
 
திவசம் செய்கின்ற 
போது சொல்லப்படும்
மந்திரத்தின் அர்த்தம் என்ன?

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண…

இந்த மத்திரத்தின் அர்த்தம்:
என்னுடைய அம்மா பத்தினியாக
 இல்லாது இருந்து, என்னை வேறு 
ஒருவருக்கு பெற்றிருந்தால், 
இந்த திவசத்திற்கு உரிமை கோரி 
என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார்.
 அப்படி இல்லாது என்னுடைய 
அம்மாவின் கணவரே இந்த திவசத்தை 
பெறட்டும். இதுதான் இந்த மந்திரத்தின் 
அர்த்தம். அதாவது திதி கொடுப்பவனுடைய
 தாய் சில வேளைகளில் சோரம் போய்
 வேறு யாருக்காவது அவனைப்
 பெற்றிருக்கலாம் என்று இந்த 
மந்திரம் சொல்கிறது. உன்னுடைய 
அப்பா வேறு யாராவதாக இருக்கலாம்,
 நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம் 
என்று இந்த “புனித” மந்திரம் சொல்கிறது.

தந்தைக்கு திவசம் செய்கின்ற 
போதுதான் இப்படி என்று நினத்து விடாதீர்கள்.
 தாய்க்கு செய்கின்ற திவசத்திலும் 
வஞ்சகம் வைக்கவில்லை. 
அம்மாவிற்கு திவசம் 
செய்கின்ற போது சொல்கின்ற 
ஒரு மந்திரம் இது

என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம….

என்னுடைய அம்மா யாருடன்
 படுத்த என்னைப் பெற்றாளோ 
தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் 
அவளை என்னுடைய அப்பாவின்
 மனைவியாகக் கருதுகின்றேன். 
அந்த அம்மாவிற்கு இந்த திவசம்
போய் சேரட்டும்.
நம்மை பெற்றெடுத்த தாய்
 தந்தையரை இழிவுபடுத்தும் 
இப்படிபட்ட மந்திரங்களையா
 நாம் சொல்லிவருகிறோம் !

மூதாதையர்களின் மூட
 நம்பிக்கையை
 பின்பற்றுவதை விட்டுவிட்டு 
சுயமாக சிந்தித்து செயல்படுவோம்.
 
********* 

Tuesday, December 11, 2018

கணியன் பூங்குன்றனார்.

ஒரே பாடலில் வாழ்க்கைப் 
பாடத்தை கற்பித்த 
கணியன் பூங்குன்றனார்.

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை 
அடுத்த மகிபாலன்பட்டி 
சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம்
 பூங்குன்றம். இங்கு பிறந்த 
கணியன் பூங்குன்றனார் 
எழுதிய  பழமையான பாடல் இது.

 *யாதும் ஊரே யாவரும் கேளிர்*

இதன் முதல் வரி மட்டுமே பிரபலம்.
பாடலின்
எல்லா வரிகளும் வாழ்வின்
முழு தத்துவத்தைச் 
சொல்கிறது.

முழு பாடலும் அதன் பொருளும்👇.

*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்,*

*தீதும் நன்றும் பிறர்தர வாரா,*

*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,*
*சாதலும் புதுவது அன்றே,*

*வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே,*

*முனிவின் இன்னாது என்றலும் இலமே*

*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*
*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*

*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*
*முறைவழிப் படூஉம் என்பது* *

திறவோர்காட்சியின் தெளிந்தனம்*
*ஆதலின் மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும் இலமே,*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*

*பொருள்*👇

*"யாதும் ஊரே யாவரும் கேளிர்"* 

எல்லா ஊரும் எனது ஊர்.
எல்லா மக்களும் எனக்கு உறவினர் 
என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை, 
ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு 
நமக்கு எவ்வளவு இனிமையானது, சுகமானது.

*"தீதும் நன்றும் பிறர் தர வாரா"*

'தீமையும் நன்மையும் அடுத்தவரால்
 வருவதில்லை' எனும் உண்மையை 
உணர்ந்தால்
சக மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு 
இல்லா ஒரு சம நிலை சார்ந்த 
வாழ்வு கிட்டும்.

*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன"*

துன்பமும் ஆறுதலும் கூட
மற்றவர் தருவதில்லை.
மனம் பக்குவப்பட்டால்,
அமைதி அங்கேயே கிட்டும்.

*"சாதல் புதுமை யில்லை"*

பிறந்த நாள் ஒன்று உண்டெனில்,
இறக்கும் நாளும் ஒன்று உண்டு.
இறப்பு புதியதல்ல. அது
இயற்கையானது.
எல்லோருக்கும்
பொதுவானது.
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் 
வாழ்ந்தால்
எதற்கும் அஞ்சாமல்
வாழ்க்கையை வாழும் 
வரை ரசிக்கலாம்.

*"வாழ்தல் இனிது என* *
மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே"*

இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்ன ஆகும் என்று
எவர்க்கும் தெரியாது.
இந்த வாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.
அதனால், இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்.
துன்பம் வந்தால் வாழ்க்கையை 
வெறுக்கவும் வேண்டாம்.
வாழ்க்கையின் இயல்பை
 உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்.

*"மின்னோரு* *வானம்* *தண்துளி தலைஇ* *
ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *
பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *
ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது 
திறவோர் காட்சியின் தெளிந்தனம்"*

இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது.
நாம் வாழ 
மழையையும்
தருகிறது. இயற்கை வழியில் 
அது அது
அதன் பணியை செய்கிறது.
ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி
 செல்லும் படகு போல,
வாழ்க்கையும், சங்கடங்களில் 
அவரவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும்.
இது இயல்பு என மனத்தெளிவு 
கொள்ளல் வேண்டும்.

*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்* *இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"*

இந்த தெளிவு
பெற்றால்,
பெரிய நிலையில் உள்ள 
பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் 
வேண்டாம்.
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு
அவற்றில் அவரவர்கள்
பெரியவர்கள்.

*இதை விட வேறு எவர்*
*வாழ்க்கைப் பாடத்தை*
*சொல்லித் தர முடியும்?*💐💐