Sunday, May 28, 2017

நீங்கள் அதிர்ஷடசாலி தான்.


* உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால், உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.

* உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் ஒருவன். உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

* நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

*நோயின்றி காலையில், புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே, உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி.

* பார்வையும், செவித் திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும், இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்.

* போர், பட்டினி, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்.

*கொடுமைகளுக்கு உள்ளாகாமல், நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால், உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்.

* உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால், நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!

* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.
உலகம் முழுதும், சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

* கல்வி அறிவு பெற்று, இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால், உலக அளவில் எழுத படிக்க இயலாத 80 கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்.

* இணையத்தில் இந்த செய்தியை, உன்னால் படிக்க முடிந்தால், அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால், அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும், நம்பிக்கையும் இல்லாதவர்களை விட, நீ கொடுத்து வைத்தவன்..!!

* நீங்கள் அனுபவித்து வரும், வசதிகளையும்.. தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல், ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல், கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது, நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன..??

* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!!

Saturday, May 27, 2017

தமிழ்நாட்டில் சிவனுக்குரிய ஸ்தலங்களின் பெருமைகள்

தமிழ்நாட்டில் சிவனுக்குரிய  
ஸ்தலங்களின்
பெருமைகள்...

ராஜ கோபுரத்தை விட

 மூலவருக்கு உயர்ந்த விமானம்
 உள்ள இடங்கள்

1,தஞ்சை – பிரகதீஸ்வரர்
2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
4,திருபுவனம் – கம்பேஸ்வரர்

சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள்.

1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்

சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள்.

1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை

காசிக்கு சமமான ஸ்தலங்கள்

1, திருவெண்காடு. 2, திருவையாறு.
 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு. 6, ஸ்ரீவாஞ்சியம்.
 7, விருத்தாசலம். 8, மதுரை.
9, திருப்புவனம்

தருமநூல்கள் 18.

கடவுளால் வகுத்தது தருமத்தை
 பற்றி மட்டும் உபதேசித்தது.

1.மனு, 2.அத்தி, 3.விண்டு, 4.வாசிட்டம்,
 5.யமம், 6.ஆபத்தமம், 7.யாஞ்ஞ வற்கியம்,
 8.பராசரம், 9.அங்கீரசம், 10.உசனம், 
11.காத்தியாயனம், 12.சம்பவர்த்தம்,
 13.வியாசம், 14.பிரகற்பதி, 
15.சங்க்லிதம், 16.சாதாதபம்.
 17.கௌதம், 18.தக்கம்.

பாரதத்தின் முக்தி ஸ்தலங்கள்

1,காசி 2,காஞ்சி 3,மதுராபுரி 4,அரித்துவார் 
5,உஜ்ஜையினி 6,அயோத்தி 7,துவாரகை.

பாரதமே பரமசிவம்.

1,திருப்பரும்பதம் – தலை உச்சி
2,திருக்கேதாரம் – நெற்றி.
3,காசி – புருவநடு
4,பிரயாகை – நெஞ்சு
5,தில்லை – இதயம்
6,திருவாரூர் – மூலம்.

முக்தி தரும் ஸ்தலங்கள்.

திருவாரூர் – பிறக்க முக்தி
காசி – இறக்க முக்தி
திருவண்ணாமலை – நினைக்க முக்தி
சிதம்பரம் – தரிசிக்க முக்தி
வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி
மதுரை – கூற முக்தி
அவினாசி – கேட்க முக்தி.

ஐந்து அற்புதங்கள்.

1, ஆவுடையார் கோவில் கொடுங்கை. 
2, கடாரங்கொண்டான் மதில்
3, திருவீழிமிழலை வௌவ்வால் 
ஒட்டிமண்டபம்
 4, தஞ்சாவூர் கோபுரம் 
5, திருவலஞ்சுழி பலகணி

திவசம் சிறப்பு இடம் 
{பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்.}

காசி, கயா {விஷ்னுபாதம் ஆலமரம்}
திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்}
பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, 
திலதர்ப்பணபுரி, செதிலப்பதி,
 {தசரதன்,ஜடாயுக்கு இராமன்
 லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.}
இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார்,
இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர்.

12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும்.

1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. – பிரம்மா, 
சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு 
{விஷாவகன் – பிரம்மா}
2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, 
மாசி – விஷ்ணு. பிறக்கும்நேரம் 
விஷ்ணுபதி புண்ணிய காலம்.
3, ஆனி, புரட்டாசி, மார்கழி, 
பங்குனி – சிவம். பிறக்கும் நேரம்
 “ஷடசீதி” {ஷடாங்கன் – சிவன்}
ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன 
– புண்ணியகாலம் – சூரியன் தெற்கு
 பயனிப்பது.
தை மாதப் பிறப்பு உத்தராயண –
 புண்ணியகாலம் – சூரியன் வடக்கு
 நோக்கி பயனிப்பது.

பெரிய தேர்கள் உள்ள ஸ்தலங்கள்.

திருவாரூர், திருநெல்வேலி, 
ஸ்ரீவில்லிபுதூர், திருவண்ணாமலை, 
சிதம்பரம், காஞ்சி, மதுரை.

பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்.

1, கேதாரம் – இமயம் {கேதாரேஸ்வரர்}
2, சோமநாதம் – குஜராத் {சௌராஷ்டிரம்,
சோமநாதேஸ்வரர்}
3, மகாகாளேசம் – உஜ்ஜையினி 
{மகா காளேஸ்வரர்}
4, விஸ்வநாதம் – காசி 
{விஸ்வநாதேஸ்வரர்}
5, வைத்தியநாதம் –
{மகாராஷ்டிரம், வைத்தியனாதர்}
6, பீமநாதம் – 
{மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.}
7, நாகேஸ்வரம் – 
{மகாராஷ்டிரம்,
 தாருகாவனம், நாகேஸ்வர்}
8, ஓங்காரேஸ்வரம் –
 மத்தியப்பிரதேசம் 
{அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்}
9, த்ரயம்பகம் –
 {மகாராஷ்டிரம், கௌதம்}
 திரயம்பகேஸ்வரர்.
10, குசுமேசம் – 
மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர்.
11, மல்லிகார்ஜுனம் –
 {ஆந்திரம்} ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர்.
12, இராமநாதம் – 
இராமேஸ்வரம் {தமிழ்நாடு}

சப்த விடங்கத் ஸ்தலங்கள்.
1, திருவாரூர் – வீதிவிடங்கர் – 
அஜபா நடனம்.
2, திருநள்ளாறு – நகரவிடங்கர் – 
உன்மத்த நடனம்.
3, நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் –
 வீசி நடனம்.
4, திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – 
குக்குட நடனம்.
5, திருக்கோளிலி – அவனிவிடங்கர் –
 பிருங்க நடனம்.
6, திருவாய்மூர் – நீல விடங்கர் – 
கமல நடனம்.
7, திருமறைக்காடு – புவனி விடங்கர் –
 ஹம்ஸபாத நடனம்.

பஞ்ச சபைத் ஸ்தலங்களும்,
 பஞ்சாட்சர வடிவமும்.

1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய
திருச்சிற்றம்பலம்
சிவயநம

- *சித்தர்களின் குரல்..

Tuesday, May 16, 2017

SYMBOLS WITH KEYBOARD..

HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD
Alt + 0153..... ™... trademark symbol
Alt + 0169.... ©.... copyright symbol
Alt + 0174..... ®....registered ­ trademark symbol
Alt + 0176 ...°......degre ­e symbol
Alt + 0177 ...±....plus-or ­-minus sign
Alt + 0182 ...¶.....paragr ­aph mark
Alt + 0190 ...¾....fractio ­n, three-fourths
Alt + 0215 ....×.....multi ­plication sign
Alt + 0162...¢....the ­ cent sign
Alt + 0161.....¡..... ­.upside down exclamation point
Alt + 0191.....¿..... ­upside down question mark
Alt + 1...........sm ­iley face
Alt + 2 ......☻.....bla­ck smiley face
Alt + 15.....☼.....su­n
Alt + 12......♀.....female sign
Alt + 11.....♂......m­ale sign
Alt + 6.......♠.....spade
Alt + 5.......♣...... ­Club
Alt + 3............. ­Heart
Alt + 4.......♦...... ­Diamond
Alt + 13......♪.....e­ighth note
Alt + 14......♫...... ­beamed eighth note
Alt + 8721.... ∑.... N-ary summation (auto sum)
Alt + 251.....√.....s­quare root check mark
Alt + 8236.....∞..... ­infinity
Alt + 24.......↑..... ­up arrow

 Alt + 25......↓...... ­down arrow
Alt + 26.....→.....ri­ght arrow
Alt + 27......←.....l­eft arrow
Alt + 18.....↕......u­p/down arrow
Alt + 29......↔...left right arrow