நம் உடலைப் பற்றி அறிவோம்...
பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள்
ஆரோக்கியமாக வாழ்வது.
ஒரு தலைமுறை என்பது
33 ஆண்டுகளைக் குறிக்கும்.
மனித முகத்தில்
14 எலும்புகள் உள்ளன.
மனித மூளையில்
6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
ஒரு மனிதனின் உடலிலுள்ள
நரம்புகளின் மொத்த நீளம்
சுமார் 72 மீட்டர்.
நமது ரத்தம் ஒரு நாளில்
30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.
நுரையீரல் ஒரு நாளைக்கு
23,040 முறை சுவாசத்தை
உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.
நமது இதயம் ஒரு நாளில்
1,03,689 முறை துடிக்கிறது.
மனிதனின் நாக்கில் உள்ள சுவை
அறியும் செல்களின் எண்ணிக்கை
மூன்று ஆயிரம்.
உடலில் உள்ள மின்சாரத்தின்
அளவு 25 வாட்.
ஒரு சராசரி மனிதனின் உடலில்
ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
கைரேகையைப் போலவே
நாக்கில் உள்ள வரிகளும்
ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
மனித உடலில் சதை அழுத்தம்
அதிகம் உள்ள பகுதி நாக்கு.
கண் தானத்தில் கறுப்பு விழிகள்
மட்டுமே அடுத்தவருக்குப்
பொருத்தப்படுகின்றன.
900 பென்சில்களைத் தயாரிக்கும்
அளவிற்கு மனித உடலில்
கார்பன் சத்து இருக்கிறது.
மனித உடலில் மிகவும் பலமான
பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின்
சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின்
கொம்புகளில் காணப்படுவதாகும்.
மரணத்திற்கு பிறகும் கூட மனிதனின்
நகத்திற்கு ஒன்றுமே ஆகாது....
அதிசயங்கள் நிறைந்த மனித உடல்...
மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது
அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும்,
தூங்கி எழுந்தப் பிறகு மீண்டும்
பழைய உயரமே இருப்பார்.
இதற்கு காரணம் மனிதன் உட்காரும் போது
அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின்
காரணமாக எலும்புகளின் மீது
ஏற்படும் அழுத்தமாகும்.
ரத்த நாளங்கள், செல்கள் :-
1. நமது உடல் எடையில் 14 சதவிகிதம்
எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம்
ரத்தம் ஆகும்.
2. நுரையீரலில் 300,00 மில்லியன்
ரத்த நாளங்கள் உள்ளன. இவை
அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால்
அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும்.
3. ஒவ்வொரு சிறுநீரகமும்
ஒரு மில்லியன் வடிகட்டிகளை (Filters)
கொண்டுள்ளது. அவைகள்
ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை
வடிகட்டுகிறது. மேலும்
ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை
வெளியேற்றுகிறது.
4. மனிதனின் ஒரு தனித்த
ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர
60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
5. மனித உடலின் மிகப் பெரிய செல்
பெண்ணின் கருமுட்டையாகும், மிகச் சிறிய செல்
ஆணின் விந்தாகும்.
6. நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின்
நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது
இந்த தொலைவில் நாம் இரண்டு முறை
உலகத்தைச் சுற்றி வந்து விடலாம்.
தசை :-
1. கண்களின் தசையானது ஒருநாளில்
100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான
வேலையை உங்கள் கால்களுக்குக்
கொடுக்க வேண்டும் என்றால் தினமும்
80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்.
2. மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க
200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன.
கால்கள் :-
1. காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளைக்
கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள்
ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளைக்
கொண்டிருக்கும்.
2. கட்டை விரலின் நீளமும், மூக்கின்
நீளமும் சமமாகும்.
3. மனித கால்களில் ஒரு ட்ரில்லியன்
வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும்.
கண்கள் :-
நமது கண்களின் எடை சராசரியாக
28 கிராம், 500 விதமாக ஒளிகளைப்
பிரித்தெரியும் சக்தியுண்டு.
மூளை :-
1. மனித மூளையில் சுமார்
100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன,
35 வயது அடைந்தது முதல் மூளையில்
தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
2. நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில்
20 சதவிகிதம் மூளைக்குச் செல்கிறது.
3. நமது மூளை 80 சதவிகிதம் நீரால்
ஆனது, மூளையின் செயல்திறன் பகலை
விட இரவில் அதிகமாக இருக்கும்.
இறப்பு :
மனிதன் உயிரிழந்தப் பின்பு
உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்
கண்கள்- 31 நிமிடங்கள்
மூளை- 10 நிமிடங்கள்
கால்கள்- 4 மணிநே ரம்
தசைகள்- 5 நாட்கள்
இதயம்- சில நிமிடங்கள்
Courtesy : Mr.Manoharan kunnathur