Friday, August 29, 2025

பொது அறிவு

   இந்தியாவில் யாருடைய  வாகனத்தில்  நம்பர் பிளேட் இருக்காது?
 விடை: ஜனாதிபதி ( president )  

 (Whose vehicle in India does not have a number plate?Answer: President

 citizen என்ற சொல் எந்த மொழியிலஇருந்து வந்தது ?
 சிட்டிசன்" என்ற சொல்  லத்தீன் மொழியிலிருந்து
 வந்த ஒரு சொல் ஆகும். சிட்டிசன்" என்ற சொல்  "சிவிஸ்" என்ற லத்தீன்  சொல்லிலிருந்து பெறப்பட்டது. சிவிஸ் என்ற லத்தீன் சொல்லுக்கு "நகரத்தின் உறுப்பினர்" அல்லது "குடிமகன்" என்று பொருள். இந்த சொல் ஆங்கிலத்தில் "
citizen"என்று ஆனது  

( Which language did the word citizen
come from?
The word "citizen" is a word that comes
from the Latin language.The word "citizen"
is derived from the Latin word "civis".
The Latin word "civis" means
 "member of the city" or "citizen".
This word became "citizen" in English )

அமெரிக்காவின் பகுத்தறிவு பெரியார் 
என்று அழைக்கப்படுபவர் - இங்கர்சால் 
**************** 
 current affairs
**** 
2026 ஆம் ஆண்டு  
 பெண் விவசாயிகள் ஆண்டு
2026 is the Year of the
Women Farmer
***** 
 2025–ம் ஆண்டிற்கான தேசிய
 நல்லாசிரியர்  விருது பெரும் 
 தமிழ்நாட்டைச் சேர்ந்த  இருவர் யார்? யார்?
 1)ஆசிரியை ரேவதி 
(சென்னை மயிலாப்பூர் பி.எஸ். 
சீனியர் செகண்டரி பள்ளியின் முதல்வர்.)
2)ஆசிரியை விஜயலட்சுமி
(திருப்பூர்-உடுமலைப்பேட்டை 
 பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் 
உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியை.)
Who are the two Tamil Nadu national
 good teacher awardees for the 
year 2025? Who are they?
1) Teacher Revathi
(Principal of Mylapore B.S. Senior Secondary
School, Chennai.)
2) Teacher Vijayalakshmi
(Teacher of Tiruppur Bharathiar Centenary 
Government Girls High School.)
  ******
 சமீபத்தில் பிரதமர் மோடி "டிஜிட்டல் வைரம்  
என்று எதை  அழைத்தார்?
A) UPI -பணப் பரிவர்த்தனை
B) கிரிப்டோ கரண்சி
c) ஆர்டிஃபீஜியல் இன்டெலி இன்ட்
D) செமிகண்டக்டர் (விடை )
Recently, what did Prime Minister Modi
call
"Digital Diamond"?
A) UPI -Money Transfer
B) Crypto Currency
C) Artificial Intelligence
D) Semiconductor (Answer)
   ******
 தமிழ்நாட்டின் குறுகிய கால முதலமைச்சர் யார்? 
என். ஜானகி ராமச்சந்திரன் மிகக் குறுகிய பதவிக்
 காலம் (23 நாட்கள் மட்டுமே)
Who is the shortest-serving 
Chief Minister of Tamil Nadu?
N. Janaki Ramachandran
Very short tenure (
only 23 days)
 *******
 உலகில் முதன் முதலில் கார் ஓட்டிய பெண்மணி?
பெர்தா பென்ஸ் (Bertha Benz)
இவர் ஏற்றி சென்ற காரின் பெயர் 
பெடண்ட்வேகன் (Patent-Motorwagen)
இவர், 1888 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
 தனது குழந்தைகள் இருவருடன், 
கணவர் அறியாமலேயே பெடண்ட்வேகன் 
(Patent-Motorwagen) என்ற காரை சுமார் 
106 கிலோமீட்டர் தூரம் ஜெர்மனியில் 
உள்ள மான்கெயிம் சாலையில் ஓட்டிச் சென்றார்.
 
Who was the first woman to drive a car in the world? 
 Bertha Benz 
The name of the car she drove was Patent-Motorwagen.
 In August 1888, she drove a car called Patent-Motorwagen
 with her two children, without her husband's knowledge, 
for about 106 kilometers  on the Mannheim road in Germany.
 ****** 
 சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு
என்று மாற்றும் முயற்சியில்
சாகும்வரை
உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் யார் ?
Answer :சங்கரலிங்கனார்
Who died on a fast unto death in an attempt 
to change the name of Chennai state 
to Tamil Nadu?
Answer
:Sankaralinganar
 
தியாகி சங்கரலிங்கனார் ஒரு இந்திய தமிழ் சுதந்திர 
ஆர்வலர் மற்றும்  இந்திய ஒன்றியத்தின் காந்தியவாதி 
ஆவார் அவர் சென்னை மாநிலத்தின் பெயரை 
தமிழ்நாடு என்று மாற்றும் முயற்சியில் சாகும்வரை 
உண்ணாவிரதம் இருந்தார் அவர் ஒரு தமிழ்நாடு மாநில
 ஆர்வலர் ஆவார்.

Tyagi Sankaralinganar was an Indian
Tamil independence activist and
Gandhian of the Indian Union,
who fasted until his death in an attempt
to change the name of the Madras state
to Tamil Nadu. He was a Tamil Nadu
state activist. 

தமிழ்நாடு பெயர் மாற்றம் பின்னாளில் ஆட்சிக்கு வந்த அண்ணாவின் தலைமையிலான  திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு 1967, ஏப்ரல் 14 அன்று
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை 'தமிழக அரசு'   ஆக மாறியது.
அதன் தொடர்ச்சியாக,  1968 சூலை 18இல்     சென்னை மாநிலத்தை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம்  செய்யும் தீர்மானம்  கொண்டுவரப்பட்டது.
Who named Tamil Nadu?
The name change of Tamil Nadu was made after the Dravida Munnetra Kazhagam government led by Anna came to power and on 14 April 1967, the Fort St. George, Chennai became the 'Government of Tamil Nadu'. Following this, on 18 July 1968, a resolution was passed to rename the state of Chennai as 'Tamil Nadu'

 **********

"ஒரு பைசா தமிழன்" என்ற பெயரில்
ஒரு வாராந்திரப் பத்திரிக்கையை தொடங்கியவர்?
   பண்டிதர் அயோத்தி தாசர்

"ஒரு பைசா தமிழன்" என்ற வார இதழை எழுதியவர் பண்டிதர் அயோத்திதாசர் ஆவார். இந்த இதழ் சென்னை இராயப்பேட்டையில் இருந்து 1907 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதழின் நோக்கம்:
 சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களது மதிப்புக்காகவும் இந்த இதழ் தொடங்கப்பட்டது. "ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என்று இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்" என்று அயோத்திதாசர் கூறினார்.
 பெயர் மாற்றம்:
ஓராண்டு காலத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 26, 1908 முதல், மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இதழின் பெயர் "ஒரு பைசா" நீக்கப்பட்டு "தமிழன்"என்று மாற்றப்பட்டது. 

Who started a weekly magazine named "Oru Paisa Tamilan"? Ayothidasar
The author of the weekly magazine "Oru Paisa Tamilan" was Pandit Ayothidasar.This magazine was started from Royapettai,  Chennai on June 19, 1907.    

    Purpose of the magazine:
This magazine was started for the rights and dignity of the oppressed people in the society.
Ayothidasar said, "Those who talk lightly about not getting the oppressed for a penny,  if they fully understand the Oru Paisa Tamilan, they will say that it is worth a crore of gold."
Name change:
After a year, from August 26, 1908, the name of the magazine was changed to "Tamilan" as per the request of the people.
  *******

பேரறிவு சிலை என்று
அழைக்கப்படும்
சிலை எது ?
Answer :கன்னியாகுமரியில் உள்ள
திருவள்ளுவர் சிலை 
(தமிழக முதல்வரால் (திரு மு க ஸ்டாலின்) 
பேரறிவு சிலையென்று பெயரிடப்பட்டது)
(Which statue is called the Perarivu Statue?
The Thiruvalluvar Statue in Kanyakumari
named the Perarivu Statue by the
Tamil Nadu Chief Minister (M.K. Stalin))
********** 
  2026 ஆம் ஆண்டு
பெண் விவசாயிகள் ஆண்டு
2026 is the Year of the Women Farmer
  *****
 மொழி போர் தியாகிகள் தினம்
என்று கொண்டாடப்படுகிறது
விடை
:ஜனவரி 25
(Language War Martyrs Day
is celebrated on
Friday: January 25)
 ******
ஆண்டுதோறும் எந்த வாரத்தில்
திருக்குறள் வாரம்
கொண்டாடப்படுகிறது ?
விடை
டிசம்பர் கடைசி வாரம்
(In which week of the year is
Thirukkural Week celebrated?
Last week of December )
******* 
  12.08.2025 அன்று தமிழக முதல்வர்
 தொடங்கிய 'முதலமைச்சரின் 
தாயுமானவர் திட்டத்தின்' நோக்கம்?
முதியோர், மாற்றுத்திறனாளிகள்  
வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கல்
(Door-to-door distribution of ration items
to the
elderly and the disabled
 ****
2025 ஆம் ஆண்டுக்கான UNDP
 பூமத்திய ரேகை பரிசு யாருக்கு 
அறிவிக்கப்பட்டுள்ளது 
(UNDP Equator Prize 2025)
விடை : பீபி பாத்திமா மகளிர் 
சுயஉதவிக் குழு
 Who has been awarded the UNDP Equator Prize 2025?
 (UNDP Equator Prize 2025)
 Answer: Bibi Fatima Women's Self-Help Group
   *********
 10 ஆகஸ்ட் 2025 அன்று 
பிரதமர் மோடி தொடங்கி வைத்த
 இந்தியாவின்மிக நீளமான 
வந்தே-பாரத் எக்ஸ்பிரஸ் 
வழித்தடம்?
விடை : அஜ்னி (நாக்பூர்) - புணே
(
சுமார் 12 மணி நேரத்தில்
 881 கி.மீ. தூரம்)
India's longest Vande Bharat Express
 route inaugurated by Prime Minister Modi
on 10 August 2025:
 
ANSWER : Ajni (Nagpur) - Pune
(881 km in about 12 hours)
***** 
 இந்தியாவின் சுதந்திர தினம்
 ஆகஸ்ட் 15, அன்று என்ன கிழமை ?
விடை :
வெள்ளிக்கிழமை
 ****
  தமிழக அரசின் மாநில கல்விக்
 கொள்கையை வடிவமைக்க யாருடைய 
 தலைமையில் குழு அமைக்கப்பட்டது?
 
விடை : த. முருகேசன்
( டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள்
தலைமை நீதிபதி த.முருகேசன்
தலைமையில் 14 பேர் கொண்ட
குழு 2022-ல் அமைக்கப்பட்டது.) 
(Under whose leadership was the committee
formed to formulate the
State Education Policy of the
Tamil Nadu Government?
Answer: T. Murugesan
(A 14-member committee headed by
former Delhi High Court Chief Justice
T. Murugesan was formed in 2022.)
 
 *************
தமிழ் செம்மொழியாக 
அறிவிக்கப்பட்ட நாள் எது?
  ஜூன் 6, 2004 ஆகும்.
இந்த நாள் இந்திய அரசால் 
அங்கீகரிக்கப்பட்ட முதல்
 செம்மொழியாகும்.
விளக்கம்:
இந்த அறிவிப்பு, இந்திய அரசால்
அங்கீகரிக்கப்பட்ட முதல் 
செம்மொழியாக தமிழை 
உருவாக்கியது. இந்த அறிவிப்பு 
மூலம், தமிழ் மொழி இலக்கியம்,
 இலக்கணம் மற்றும் தொன்மை 
ஆகியவற்றின் அடிப்படையில் 
செம்மொழிக்கான தகுதியை 
பெற்றது.
On what date was Tamil declared
 a classical language?
The date on which Tamil was
declared a classical language was 
June 6, 2004.This date marks the
 first classical language to be 
recognized by the Government of India. 
 *********
 1.தேசிய கொடியின்
 நீள அகலம் - 3:2ஆகும்.
2 .நமது தேசிய கொடியை 
 
ஆந்திராவைச் சேர்ந்த 
"பிங்காலி வெங்கையா"
வடிவமைத்தார்.
3 .விடுதலை இந்தியாவின் முதல்
தேசியக் கொடி தமிழ் நாட்டில்
உள்ள 
குடியாத்தத்தில் 
 (வேலூர் மாவட்டம்) 
நெய்யப்பட்டது.
4.இக் கொடியைப் பண்டித
 ஜவஹர்லால் நேரு 15.08.1947 இல்
செங்கோட்டையில் ஏற்றினார்.
5.
தற்போது இக் கொடி சென்னை
புனித ஜார்ஜ் கோட்டை
  அருங்காட்சியகத்தில் உள்ளது.
1.The length and width of the
national flag are -3:2.
2.Our national flag was designed
by "Pingali Venkaiah" 
from Andhra Pradesh.
3.The first national flag of 
independent India was woven in
 Gudiyatham
(Vellore district) in Tamil Nadu.
4.This flag was hoisted by
 Pandit Jawaharlal Nehru at the 
Red Fort on 15.08.1947.
5.Currently, this flag is in the

Fort St. George Museum, Chennai
  *******
    இந்தியாவில் முதல் முதலா
உருவாக்கப்பட்ட மாவட்டம் எது?

தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம்தான்  
இந்தியாவில் முதலில் உருவாக்கப்பட்ட மாவட்டம்.
1792 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி பிரிட்டிஷ் 
ஆட்சியாளர்களால் இது உருவாக்கப்பட்டது.
 Which is the first district formed in India?  
Salem district in Tamil Nadu was the first district  formed in India.
  It was formed by the British rulers on 4th April 1792.
  ********** 
 THIS IS THE FIRST TIME IN 
THE HISTORY OF ENGLISH 
LANGUAGE THAT A QUESTION
 AND THE ANSWER ARE EXACTLY 
THE SAME !!!
Question: Who declared Coronavirus
as a pandemic?
Answer.: WHO declared Coronavirus
as a pandemic.  
 ************ 
 இந்திய ரிசர்வ் வங்கி சின்னத்தில் 
உள்ள மரம் எது?
 இந்திய ரிசர்வ் வங்கியின் 
சின்னத்தில் உள்ள மரம் 
பனை மரம் ஆகும்.
 
இது இந்திய ரிசர்வ் வங்கியின் 
முத்திரையில் புலியுடன் சேர்த்து
 இடம்பெற்றுள்ளது. இந்த சின்னம்,
 கிழக்கிந்திய கம்பெனியின்
 முத்திரையை அடிப்படையாகக் 
கொண்டது.
 (What is the tree in the emblem of the Reserve Bank of India? 
The tree in the emblem of the Reserve Bank of India is a palm tree. 
It is featured on the emblem of the Reserve Bank of India along 
with the tiger. The emblem is based
 on the emblem of the East India Company.)
****** 
முதன் முதலில் நவீன ஆச்சு
 இயந்திரத்தை கண்டுபிடித்தது யார் ? 
ஜோஹன்னஸ் கூட்டன்பர்க் .
முதன் முதலில் அச்சிட்ட நூல்
 கூட்டன்பர்க் பைபிள் ஆகும். 
*************** 
ஜோஹன்னஸ் கூட்டன்பர்க்
 முதன் முதலில் நூல்
கூட்டன்பர்க் பைபிள் ஆகும்.
இது 1455 இல்
 ஜெர்மனியின் மைன்ஸ் 
நகரில் அச்சடிக்கப்பட்டது
 மேற்கில் அசையும் வகையிலிருந்து
 அச்சிடப்பட்ட முதல் முழுமையான 
புத்தகமாகும்.  கூட்டன்பர்க் பைபிள், 
      முதன்முதலில் லத்தீன் இரண்டு  
பதிப்புகளில் விவிலியம் (பைபிள்)  
வெளியானது,
     ஒவ்வொன்றும் 300 பக்கங்களைக் 
கொண்டிருந்தது,  ஒவ்வொரு 
பக்கத்திலும் 42 வரிகள் உள்ளன 
           இது தகவல் புரட்சிக்கு 
ஒரு முக்கிய படியாக  அமைந்தது, 
இது புத்தகங்களை மலிவாகவும்
விரைவாகவும் அச்சிட உதவியது,
 இதன் மூலம் பொது மக்களுக்கு
எழுதப்பட்ட வார்த்தையை 
அணுகுவதை விரிவுபடுத்தியது. 
**************
 1. முதல் மௌனப் படம் - கீசகவதம் (1916)
2. முதல் பேசும் படம் - காளிதாஸ் (1931)
3. முதல் வண்ணப் படம்
    அலிபாபாவும் 40 திருடர்களும்
4. முதல் நாவல்
   பிரதாப முதலியார் சத்திரம்
5. முதல் செய்தித்தாள்
   மெட்ராஸ் மெயில் (1873)
*******
தென்னிந்தியாவின் முதல் ஒலியில்லா திரைப்படம் எது தெரியுமா?
      கீசக வதம் (KEECHAKA VADHAM) தமிழில் வெளிவந்த முதல் ஒலியில்லா திரைப்படம். 1918ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை, ஆர். நடராஜ முதலியார் தயாரித்து இயக்கினார்.
 இத்திரைப்படம் மகாபாரதத்தில் இடம்பெறும் ஒரு சிறுகதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதுவே
 தென்னிந்தியாவின் முதல் ஒலியில்லா அதாவது ஊமைத் திரைப்படம் என கூறப்படுகிறது. 1917ம் ஆண்டு ஐந்து வாரங்களுக்கு படப்பிடிப்புகள் நடந்தது, பின்னர் 1918ம் ஆண்டு ஜனவரி திங்கள் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
இப்படத்தின் அன்றைய பட்ஜெட் ₹35000 எனவும் படத்தின் வசூல் ₹50,000 எனவும் குறிப்பிடப்படுகிறது.
Do you know which was the first silent film of South India? KEECHAKA VADHAM was the first silent film released in Tamil. This film was released in 1918 and was produced and directed by R. Nataraja Mudaliar. This film is based on a short story from the Mahabharata. This is said to be the first silent film of South India. The shooting took place for five weeks in 1917, and then the film was released on a Monday in January 1918. The budget of the film at that time was ₹35000 and the collection of the film was mentioned as ₹50,000.

*******
உலகத்தமிழ் மாநாடுகள்
 
1.முதல் மாநாடு (1966)
கோலாலம்பூர்
2.இரண்டாம் மாநாடு (1968) -
சென்னை
3.மூன்றாம் மாநாடு (1970) -
பாரிஸ்
4.நான்காம் மாநாடு(1974) -
யாழ்ப்பாணம்
5.ஐந்தாம் மாநாடு(1981)-
மதுரை
6.ஆறாம் மாநாடு(1987)-
கோலாலம்பூர்
7.ஏழாம் மாநாடு (1989) -
மொரிசியஸ்
8.எட்டாம் மாநாடு (1995)-
தஞ்சாவூர்
9.ஒன்பதாம் மாநாடு (2015)
கோலாலம்பூர்
10.பத்தாவது மாநாடு: (2019)
   சிகாகோ
*******
 உலக அதிசயங்கள் 7
1.எகிப்தியப் பிரமிடுகள்.
2.தாஜ்மஹால்
3.கிரேண்ட் கேன்யான்
(Grand Canyon )
4.பனாமா கால்வாய்
5.எம்ப்பையர் ஸ்டேட் கட்டிடம்.
 (Empire State Building )
6. செயின்ட் பீட்டர் பேஸிலிக்கா
 (வாடிகன்)
7. சீனப் பெருஞ்சுவர்

7 - Wonders of the World
1. Egyptian Pyramids
2. Taj Mahal
3. Grand Canyon
4. Panama Canal
5. Empire State Building
6. St. Peter's Basilica
7. Great Wall of China
 *******
  திராவிட மொழி என்பது 
தென்னிந்தியா மற்றும் இலங்கையில் 
பேசப்படும் மொழிகளின் குடும்பம் ஆகும். இந்த மொழி 
குடும்பத்தில் தமிழ், தெலுங்கு,
 கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள்  உள்ளன
 இந்த மொழிகள் அனைத்தும்
 ஒரு பொதுவான மூல  மொழியிலிருந்த  
வந்தவை என்று  கருதப்படுகிறது
Dravidian is a family of languages
spoken in South India and Sri Lanka.
This language family includes Tamil, Telugu,
Kannada, and Malayalam.All of these
languages believed to have come from
common root language.
 
  1. திராவிடம் என்னும் சொல்லை
முதன்முதலில் உருவாக்கியவர் யார்?

(A) வீரமாமுனிவர்
(B) கால்டுவெல்
(C) ஈராஸ் பாதிரியார்
(D) குமரிலபட்டர்
Answer: (D) குமரிலபட்டர்

2. வேதாரண்ய புராணம் என்ற
 நூலை எழுதியவர்
(A) பரஞ்சோதிமுனிவர்
(B) சேக்கிழார்
(C) வீரமாமுனிவர்
(D) மூன்றாம்நந்திவர்மன்
Answer: (A) பரஞ்சோதிமுனிவர்

3. புலவர் புகழேந்தியை ஆதரித்தவர்
(A) வரபதியாட் கொண்டார்
(B) சந்திரன்சுவர்க்கி
(C) சடையப்பவள்ளல்
(D) சீதக்காதிவள்ளல்
Answer: (B) சந்திரன்சுவர்க்கி

4. கவிவேந்தர் என அழைக்கப்படுபவர்
(A) சாலை இளந்திரையன்
(B) தேவதேவன்
(C) ஆலந்தூர் மோகனரங்கன்
(D) ஈரோடு தமிழன்பன்
Answer: (C) ஆலந்தூர் மோகனரங்கன்

5. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
(A) சடையப்ப வள்ளல்
(B) சந்திரன் சுவர்க்கி
(C) அரிமர்தன பாண்டியன்
(D) வரபதியாட் கொண்டார்
Answer: (A) சடையப்ப வள்ளல்

6. கம்பர் யாருடைய அவையில்
 அவைப்புலவராக இருந்தார்?

(A) சடையப்ப வள்ளல்
(B) சந்திரன் சுவர்க்கி
(C) அரிமர்தன பாண்டியன்
(D) குலோத்துங்கச் சோழன்
Answer: (D) குலோத்துங்கச் சோழன்

7. திருக்குறளுக்கு பதின்மர் எழுதிய
 உரையில்
சிறந்த உரையாக யாருடைய
 உரை கருதப்படுகிறது?

A) பரிமேலழகர்
B) பரிப்பெருமாள்
C) காளிங்கர்
D) பரிதி
Answer: A) பரிமேலழகர்

. பொருந்தா சொல்லை கண்டறிக
(A) திருமலையர்
(B) மல்லர்
(C) மணக்குடவர்
(D) கம்பர்
Answer: (D) கம்பர்

9. இந்திய நாட்டை மொழிகளின்
காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர் யார்?

(A) அகத்தியலிங்கம்
(B) முஸ்தபா
(C) மு.வரதராசனார்
(D) கால்டுவெல்
Answer: (A) அகத்தியலிங்கம்

10. கீழ்கண்ட மொழிகளில் தென் திராவிட
 மொழி அல்லாத மொழி எது?
(A) தெலுங்கு
(B) கன்னடம்
(C) இருளா
(D) தோடா
Answer: (A) தெலுங்கு
.........
 1. மிக உயரமான சிகரம் - தொட்டபெட்டா
2. மிகப்பெரிய அணை - மேட்டூர் அணை
3. பழைய அணை - கல்லணை
4. மிக நீளமான ஆறு - காவிரி
5. மிக நீளமான பாலம் - பாம்பன் பாலம்
6. மிகப்பெரிய தேர் - திருவாரூர் தேர்
7.மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை
8. மிகப்பெரிய தொலைநோக்கி -
   வைணு பாப்பு தொலைநோக்கி
9.முதல் அச்சிடப்பட்ட புத்தகம் -
   தம்பிரான் வணக்கம் (1578)

10- முதல் தமிழ் செய்தித்தாள் 

சுதேசமித்திரன்

11. முதல் கார்ப்பரேஷன் -

  சென்னை (மெட்ராஸ் - 1688)

  *********
 சுதந்திர போராட்ட பத்திரிகைகள்
 1. யங் இந்தியா -காந்திஜி
2. நியூ இந்தியா
  -அன்னி பெசன்ட்
3. இந்தியா,விஜயா
   -பாரதியார்
4. கேசரி, மராட்டா
   -பால கங்காதர திலகர்
5. நேஷனல் ஹெரால்ட்
   - ஜவகர்லால் நேரு
6. இண்டி பெண்டன்ட்
    -மோதிலால் நேரு
7. பெங்காலி
  - சுரேந்திரநாத் பானர்ஜி
8. திஹிண்டு
  - சுப்பிரமணிய ஐயர்
9. அல்ஹிலால்
– அபுல்கலாம் ஆசாத்
10. நவசக்தி, தேசபக்தன்
- திரு.வி.க
11. ஞானபானு
- சுப்பிரமணிய சிவா
12. பாலபாரதி
-வ.வே.சு. ஐயர்
13. காமன் வீல்
-அன்னிபெசன்ட்
*******
  குடியரசுத் தலைவர்கள்  பட்டியல்
1.   இராஜேந்திரப் பிரசாத் 1950-1962
2   சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
    1962-1967
3. ஜாகீர் உசேன்  1967 - 1969
4.  வி.வி.கிரி1969 - 1969
5.  முகம்மது இதயத்துல்லா 1969 -1969
6.  வி வி கிரி 1969 - 1974
7.  பக்ருதின் அலி அகமது 1974 - 1977
8  .பசப்பா தனப்பா ஜாட்டி 1977-1977
9  .நீலம் சஞ்சீவி ரெட்டி 1977 - 1982
10.ஜெயில் சிங்1982 - 1987
11 .ரா.வெங்கட்ராமன் 1987-1992
12 .சங்கர் தயாள் சர்மா 1992-1997
13. கே.ஆர்.நாராயணன் 1997-2002
14. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 2002 - 2007
15 .பிரதீபா பட்டீல் 2007 - 2012
16  .பிரணப் முக்கர்ஜி 2012 - 2017
17 .ராம் நாத் கோவிந்த் 2017 -2022
18.திரௌபதி முர்மு 2022 - தற்போது
 List of Presidents
1. Rajendra Prasad 1950-1962
2. Sarvapalli Radhakrishnan
1962-1967
3.
 Dr. Zakir Husain 1967 - 1969
4. V.V. Giri1969 - 1969
5. Muhammad Idhayatulla 1969 - 1969
6. V.V. Giri 1969 - 1974
7. Fakhruddin Ali Ahmed 1974 - 1977
8. Pasappa Thanappa Jati 1977-1977
9. Neelam Sanjeevi Reddy 1977 - 1982
10. Jail Singh1982 - 1987
11. Ra. Venkatraman 1987-1992
12. Shankar Dayal Sharma 1992-1997
13. K.R. Narayanan 1997-2002
14. A.P.J. Abdul Kalam 2002 - 2007
15. Pradeepa Patil 2007 - 2012
16. Pranab Mukherjee 2012 - 2017
17. Ram Nath Kovind 2017 -2022
18. Draupadi Murmu 2022 - Present
Send feedback
  ......
இந்தியாவின் பிரதமர்களின் 
பட்டியல் 
- ஜவஹர்லால் நேரு - 1947 1964 -
குல்சரிலால் நந்தா --- 1964 1964
லால் பகதூர் சாஸ்திரி - 1964 1966 -
குல்சரிலால் நந்தா 1966 1966
> இந்திரா காந்தி - 1966-1977
மொரார்ஜி தேசாய் - 1977-1979
சரண் சிங் --1979 1980
இந்திரா காந்தி 1980 - 1984
> ராஜீவ் காந்தி - 1984 - 1989
> விஸ்வநாத் பிரதாப் சிங் -1989-1990
சந்திர சேகர் ---
1990 1991
பி.வி.நரசிம்மராவ் - 1991-1996
அடல் பிஹாரி வாஜ்பாய் - 1996-1996
- எச்.டி.தேவேகவுடா -- 1996-1997
இந்தர் குமார் குஜ்ரால் - 1997 1998
அடல் பிஹாரி வாஜ்பாய் 1998 2004 ----
மன்மோகன் சிங் -2004-2014
நரேந்திர மோடி -2014-
……
தமிழகத்தின் சிறப்பு 
பெயர்களும், ஊர்களும்
* தமிழகத்தின் ஹாலந்து - திண்டுக்கள்
* முத்து நகரம் தூத்துக்குடி
* தமிழகத்தின் நுழைவு வாயில் - தூத்துக்குடி
* பருத்தி நகரம் - இராஜபாளையம்
* குட்டி ஜப்பான் - சிவகாசி [விருதுககர்]
* வியாபார  நகரம் -விருதுநகர். -
* திரவ உந்து ஏவுதளம் - மகேநீதிரகிரி
* தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
    - பாளையுங் கோட்டை
* தமிழ்நாடிேன் சிரபுஞ்சி - வால்பாறை
* மஞ்சள் நகரம் - ஈ.ரோடு
* தமிழகத்தின் சிலிக்கான் பள்ளதாக்கு
    - சென்னை
* மாங்கனி நகரம் - சேலம்
* நெசவு பள்ளதாக்கு-
    ஈரோக திருப்பூர் கோவை.
* சிமிண்ட் நகரம் - அரியலூர்
* ஏலக்காய் நகரம் -
    போடிநாயக்கனூர் (தேனி)
* தமிழகத்தின் ஏதென்ஸ் - மதுரை
* குட்டி இங்கிலாந்து - தளி, ஓசூர்
* ஏழைகனின் ஊட்டி ஏற்காடு சேலம்.
* மலைகளின் இளவரசி -
    கொடைக்கானல்
* மலைகளின் அரசி நீலகிரி
* தென்னிந்தியாவின் காசி
   - ராமேஸ்வரம்
* தென்னாத்தியாவின் திரிவேணி
    பவானி கூடுதுறை
* தமிழகத்தின் புனித பூமி - ராமநாதபுரம்
+ சரித்திரம் உறையும் பூமி - சிவகங்கை
………
பிரபலங்களும் பிறந்த இடமும்
பாரதியார் -எட்டயபுரம்
பாரதிதாசன் -பாண்டிச்சேரி
சுப்பிரமணிய சிவா -வத்தலக்குண்டு
திருப்பூர் குமரன் -சென்னிமலை
ராஜாஜி -தொரப்பள்ளி
வ.உ.சி. -ஒட்டப்பிடாரம்
ஈ.வெ.ரா. -ஈரோடு
திரு.வி.க. -திருமயம்
கவிமணி -தேரூர்
காமராசர் -விருதுநகர்
அண்ணாதுரை -காஞ்சீபுரம்
ஜீவா-பூதப்பாண்டி
கருணாநிதி -திருக்குவளை
எம்.ஜி.ஆர்.-நாவலப்பிட்டி
ஜெயயலிதாமேல்கோட்டை
அப்துல்கலாம்இராமேஸ்வரம்
******
8 - இன் சிறப்பு 
 தஞ்சாவூரில் நடந்த உலகத் 
தமிழ்மாநாடு எட்டாவது ஆகும்.
காந்தி திரைப்படம் பெற்ற ஆஸ்கார் 
விருதுகள் எட்டாகும்.
பைசா நகரத்து மாடியின் 
அடுக்குகள் எட்டாகும்.
 மனிதனின் முகத்தில் உள்ள 
எலும்புகள் மொத்தம் எட்டாகும்.
மனிதனின் உயரம் அவரவர் 
கைச்சாணுக்கு எட்டாகும்.
ஆடுகளின் கால் குளம்புகள் 
எட்டாகும்.
கோழியின்கால்விரல்கள் 
மொத்தம் எட்டாகும்.
******************
 ஆசிரியர் மகிமை..."

T - Tact. - சாமர்த்தியம்

E - Education. -கல்வியறிவு

A - Ability. - திறமை

C - Character. நன்னடத்தை

H - Health. - ஆரோக்கியம்

E - Enthusiasm. - ஊக்கம்

R- Regularity ஒழுங்குமுறை

♦♦♦

 SCHOOL 

என்ற ஆறு எழுத்து 

சொல்லிற்கு விளக்கம்.

S - Sincere. - உண்மை

C - Character. - நடத்தை

H - Health. - ஆரோக்கியம்

O - Obedient. - கீழ்ப்படிவு

O - Order. - ஒழுங்கு

L - Learn. - அறிவு

  *******
கணினி மற்றும் இணையம்
 பயன்பாட்டில் இருந்து வரும்
பல புதிய சொற்களுக்கு
 இணையான தமிழ்ச்சொற்களை
 மலேசியத் தமிழ் அமைப்பு ஒன்று
 வெளியிட்டிருக்கிறது. 
அது குறித்த பட்டியல்
 
1. WhatsApp - புலனம்
2. youtube - வலையொளி
3. Instagram - படவரி
4. WeChat - அளாவி
5. Messanger - பற்றியம்
6. Twtter - கீச்சகம்
7. Telegram - தொலைவரி
8. skype - காயலை
9. Bluetooth - ஊடலை
10. WiFi - அருகலை
11. Hotspot - பகிரலை
12. Broadband - ஆலலை
13. Online - இயங்கலை
14. Offline - முடக்கலை
15. Thumbdrive - விரலி
16. Hard disk - வன்தட்டு
17. GPS - தடங்காட்டி
18. cctv - மறைகாணி
19. OCR - எழுத்துணரி
20 LED - ஒளிர்விமுனை
21. 3D - முத்திரட்சி
22. 2D - இருதிரட்சி
23. Projector - ஒளிவீச்சி
24. printer - அச்சுப்பொறி
25. scanner - வருடி
26. smart phone திறன்பேசி
27. Simcard - செறிவட்டை
28. Charger - மின்னூக்கி
29. Digital - எண்மின்
30. Cyber - மின்வெளி
31. Router - திசைவி
32. Selfie - தம் படம் - சுயஉரு
33. Thumbnail - சிறுபடம்
34. Meme - போன்மி
35. Print Screen - திரைப் பிடிப்பு
36. Inket - மைவீச்சு
37. Laser - சீரொளி
******
தமிழில் அச்சிடப்பட்ட 
முதல்  தமிழ் நூல்?
தம்பிரான் வணக்கம்" என்ற நூல்

     (
தம்பிரான் வணக்கம்
 1578 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
 ஒரு தமிழ் நூல் ஆகும். இந்த நூலை
 என்றிக்கே என்றீக்கசு என்பவர் 
எழுதினார்
. தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய 
மொழியில் எழுதப்பட்டகிறிஸ்துவ 
சமய போதனை நூலின் தமிழாக்கம்.
 இது தமிழில் அச்சில் வெளிவந்த 
முதல் நூலாகக் கருதப்படுகிறது)
**********
தேசிய நூலக தினமாக ஆகஸ்ட் 12
கொண்டாடப்படுகிறது.

 அன்று, இந்திய நூலக அறிவியலின்
தந்தை என்று அறியப்படும்
 சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன்
 அவர்களின் பிறந்த நாள்.
அவரை நினைவு கூரும் வகையில்
 இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 
***********
கோலன் (Colon classification) 
முறை என்றால் என்ன?
        கோலன் வகைப்படுத்தல் 
(Colon classification) என்பது
 நூலகங்களில் உள்ள 
புத்தகங்களை வகைப்படுத்தப்
 பயன்படும் ஒரு முறை. 
இது சீர்காழி இரா. அரங்கநாதனால்
 உருவாக்கப்பட்டது. 
இந்த முறையில், புத்தகங்கள்
 அவற்றின் பொருளடக்கத்தின்
 அடிப்படையில் பிரிக்கப்பட்டு,
 ஒரு குறிப்பிட்ட குறியீட்டால்
 குறிக்கப்படுகின்றன. இது,
 நூலகங்களில் புத்தகங்களைத் 
தேடுவதையும், ஒழுங்கமைப்பதையும் 
எளிதாக்குகிறது. 
******* 
 அடால்ப் இட்லர் எழுதிய புத்தகமே
மெயின் கேம்ப் (Mein Kampf)

 இதன் ஜெர்மன் மொழி உச்சரிப்பு
 மைன் கம்ப் எனது போராட்டம் மற்றும் 
எனதுயுத்தம் என்ற பொருள்படும் 
தலைப்பில் தன்சுயசரிதை மற்றும்
தேசிய பொதுவுடமைக் கட்சியின்
கொள்கை விளக்கம் இரண்டையும்
 உள்ளடக்கி அடால்ப் இட்லர்

 எழுதிய புத்தகமே மெயின் கேம்ப்.
********* 
நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய
ஒரே பறவை ஆந்தை
வயிற்றில் நான்கு பகுதிகளைக் கொண்ட
 விலங்கு மாடு
நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம்
 டால்பின்
நுரையீரல் இல்லாத உயிரினம்
எறும்பு
**************
 Literature
   
Who wrote ‘Romeo and Juliet’?
    Answer: William Shakespeare
   
Who is the author of the 
    ‘Harry Potter’ series?
    Answer: J.K. Rowling
   
Which novel begins with the line 
    ‘Call me Ishmael’?
    Answer: Moby-Dick
   
Who wrote ‘Pride and Prejudice’?
    Answer: Jane Austen
   
Which Indian author wrote
    ‘The God of Small Things’?
    Answer: Arundhati Roy
   
Who is known as the Bard of Avon?
    Answer: William Shakespeare
    
Which book features the character 
     ‘Big Brother’?
    Answer: 1984 by George Orwell
   
Who wrote ‘The Adventures
     of Tom Sawyer’?
    Answer: Mark Twain
   
Which epic poem is attributed 
     to Homer?
    Answer: The Iliad
   
Who wrote ‘The Jungle Book’?
    Answer: Rudyard Kipling
*************
        *GK Questions
1) Which country is known as 
  “the Land of festivals”?
    India
2) Where is Himalayan 
    Mountaineering Institute 
    located?
    Darjeeling, India
3) For how many disciplines is 
    Nobel Prize awarded?
   
6 disciplines
    (Physics, Chemistry, Medicine, 
     Literature,Economics, Peace)
4) Name the tennis Player 
   who is known as “The King of Clay”?
-Rafael Nadal
5) Which Indian City has been 
   declared as World Heritage 
   City (WHC) by UNESCO recently?
   - Ahmadabad
6) Who wrote the famous novel 
   “James pond”?
   
Ian Lancaster Fleming
7) Who won Oscar award 
    for 36 times?
  
Walt Disney
8) Who established the first
    Blood Bank?
   
Bernard Fantus
9) Who is the Indian to beat the
    computers
     in Mathematical Wizardry?
   
Shakunthala Devi
10) Which Country Hosted 2017
 World Petroleum Congress (WPC)
International Conference?
Turkey
11) Who wrote the book,
    “India at risk”?
    
Jaswanth Singh
12) Where is the International
     court of Justice located?
   
Hague (Netherlands)
13) What is Limnology?
    
Study of lakes
14) Which City in India is known 
     as the “City of Joy”?
    
Kolkata
15) Who was the first Asian winner 
      of the Nobel Prize?
      
Rabindranath Tagore
********
 *சொல்லின் முதலெழுத்தை எடுத்துக்  கடைசியில் சேர்த்து  வலம் இடமாக வாசிக்கவும்.வரும் வார்த்தை- அதே;
கம்பம்
பொன்னன்
ரம்பம்
பாதிமதி
சிம்மம்
நீதிபதி
கும்பம்
அன்பன்
அதிபதி
காசிவாசி
கோடுபோடு
இடுகாடு- சுடுகாடு
வீடுதேடு
கோல்மால்
பாசிஊசி
ஆல்போல்
பிம்பம்
சோலைமலை
கடைமடை
கூடைமுடை
சடுகுடு
சின்னன்- சின்னான்
மெய்யாய்-பொய்யாய்
கைலைமலை
பாரிஓரி
மன்னன்...
       
*-யாமறிந்த மொழிகளிலே
 தமிழ்மொழிபோல்  
இனிதாவதெங்குங் காணோம்....* 
*********** 

இந்த 26 வார்த்தைகள்..! 

 A - Appreciation

மற்றவர்களின் நிறைகளை 

மனதாரப் பாராட்டுங்கள்.

B - Behaviour

புன்முறுவல் காட்டவும் சிற்சில

  அன்புச் சொற்களைச் சொல்லவும் 

கூட நேரம் இல்லாதது போல் 

நடந்து  கொள்ளாதீர்கள்.

C - Compromise

அற்ப விஷயங்களைப் பெரிது 

படுத்தாதீர்கள். மனம் திறந்து

  பேசி சுமுகமாக தீர்த்துக்

கொள்ளுங்கள்.

D - Depression

மற்றவர்கள் புரிந்து

கொள்ளவில்லையே என்று

 சோர்வடையாதீர்கள்.

E - Ego

மற்றவர்களை விட உங்களை

 உயர்வாக நினைத்துக் கொண்டு 

கர்வப்படாதீர்கள்.

F - Forgive

கண்டிக்கக்கூடிய அதிகாரமும்

 நியாயமும் உங்கள் பக்கம் 

இருந்தாலும்,

  எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி

  இருக்கிறதா என்று பாருங்கள்.

G - Genuineness

எந்த விஷயத்தையும் நேர்மையாகக்

 கையாளுங்கள்.

H - Honesty

தவறு செய்தால் உடனே மன்னிப்பு 

கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

I - Inferiority Complex

எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள்.

 நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற 

தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

J - Jealousy

பொறாமை வேண்டவே வேண்டாம். 

அது கொண்டவனையே கொல்லும்.

K - Kindness

இனிய இதமான சொற்களை 

மட்டுமே  பயன்படுத்துங்கள்.

L - Loose Talk

சம்பந்தமில்லாமலும் 

அர்த்தமில்லாமலும் பின் விளைவு 

அறியாமலும் பேச வேண்டாம்.

M - Misunderstanding

மற்றவர்களைத் தவறாகப் புரிந்து

கொள்ளாதீர்கள்.

N - Neutral

எப்போதும் எந்த விஷயத்தையும்,

  முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம்.

 பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை 

தவறாதீர்கள்.

O - Over Expectation

அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு 

வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக 

ஆசைப்படாதீர்கள்.

P - Patience

சில சங்கடங்களை சகித்துத்தான் 

ஆகவேண்டும் என உணருங்கள்.

Q - Quietness

தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். 

அநேகப் பிரச்னைகளுக்குக் 

காரணம், தெரியாததைப்

 பேசுவதுதான் கூடுமானவரை 

பேசாமலே  இருந்துவிடுங்கள்.

R - Roughness

பண்பில்லாத வார்த்தைகளையும், 

தேவையில்லாத மிடுக்கையும்  

காட்டாதீர்கள்.

S - Stubbornness

சொன்னதே சரி, செய்ததே சரி என 

பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

T - Twisting

இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே

 கேட்டதை இங்கேயும் 

சொல்வதை விடுங்கள்.

U - Underestimate

மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு 

என்பதை மறவாதீர்கள்.

V - Voluntary

அடுத்தவர் இறங்கி வரவேண்டும் 

என்று காத்திராமல் நீங்களே பேச்சை 

முதலில் தொடங்குங்கள். பிரச்னை 

வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் 

கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

W - Wound

எந்தப் பேச்சும் செயலும் யார்

 மனதையும் காயப்படுத்தாமல்  

இருக்கட்டும்.

X - Xerox

நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த 

வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, 

அப்படியே மற்றவர்களை

 நாம் நடத்துவோம்.

Y - Yield

முடிந்தவரை விட்டுக் கொடுங்கள்.

 விட்டுக் கொடுப்பவர்கள் 

கெட்டுப் போவதில்லை; கெட்டுப் 

போகிறவர்கள் விட்டுக் 

கொடுப்பதில்லை.

 Z - Zero

இவை அனைத்தையும் 

கடைப் பிடித்தால்  பிரச்னை என்பது  

பூஜ்ஜியம் ஆகும்...

 **********

No comments:

Post a Comment