Saturday, August 30, 2025

திருக்குறள் - அறிவோம்

        

திருக்குறள் மூலத்தை முதன் 

முதலில் அச்சிட்டவர் ?

Ans : தஞ்சை ஞானப்பிரகாசர்

****
  அணுவைத்‌ துளைத்து ஏழ்‌ கடலைப்‌  புகட்டிக் குறுகத்‌ தறித்த குறள்‌”எனக் கூறியவர் --ஒளவையார்‌  
 *******
 கடுகைத் துளைத்து ஏழ் கடலைப்  
புகட்டிக்  குறுகத் தறித்த குறள்"  
என்று கூறியவர்--  இடைக்காடர் 
 *********

 1)முதன் முதல் அச்சிட்ட ஆண்டு
  : 1812 ஆம் ஆண்டு
 2) முதல் பெயர்  : முப்பால்
 3) மொத்த குறள்கள்  :1330
          (அறத்து  பால் : 380
            பொருட்பால்  : 700
            காமத்து பால் : 250)

4) மொத்தம் பயன்படுத்திய சொல்  : 14000
 5) பயன் படுத்தாத ஒரே உயிர் எழுத்து  : "ஒள"
 6) அதிகம் பயன்படுத்திய சொல் :  "னி" (1705)
7) இடம் பெறாத எண்  :9 

 8) நரிக்குறவர்கள் பேசும் வாக்ரி போலி  
 (வக் போலி ) மொழி பெயர்க்கப்பட்ட 
ஒரே நூல் :   திருக்குறள் 
 மொழி பெயர்த்தவர்-  கிட்டு சிரோன்மணி 
 (வாக்’ என்றால் மராத்தியில் ‘புலி’ 
என்று பொருள்; ‘வாக்ரி’ என்றால் 
‘புலியினத்தவ’ர் என்றும் பொருள்

 9)    தமிழ்நாட்டில் திருவள்ளுவர் தினம் கொண்டப்படும் நாள்: தை -2

10)கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எந்தஆண்டு மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது -  ஜனவரி -2000

 11)   திருவள்ளுவர் ஆண்டு எதை உறுதி  செய்து  கணக்கிடப்படுகிறது  கி.மு.31

 12)   திருக்குறளில் இருமுறை  வரும்  ஒரே அதிகாரம் -- குறிப்பறிதல் 

  13)   திருக்குறளில் அதிக அதிகாரங்களை  கொண்ட இயல் -அமைச்சியால் 

 14)   திருக்குறளில் "ஏழு "என்னும்  எண்ணு பெயர்  எத்தனை குறட்பாவில்       இடம்  பெற்றுள்ளது  ? " 8"

 15) திருக்குறளுக்கும் எந்த எண்ணுக்கும்  பெரிதும் தொடர்பு உள்ளது ? எண் - "07"   

9)Thiruvalluvar Day is observed in Tamil Nadu: Thai -2 

10) In which year was the Thiruvalluvar statue in Kanyakumari opened for  public viewing - January -2000 

11) What is the basis for calculating the Thiruvalluvar year? 31 BC 

12) The only authority that appears twice in the Thirukkural is-- Notation 

13) Who has the most authority in the Thirukkural - By the Ministry 

14) In how many verses does the number "seven" appear in the Thirukkural? "8" 

15) Which number is most closely associated with the Thirukkural? Number - "07"

 **********************

திருவள்ளுவர் உருவ படத்தை
வரைந்த ஓவியர் யார் ?

     கே.ஆர்.வேணுகோபால் சர்மா
தமிழக அரசாலும், மக்களாலும்
அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர்
 படத்தை வரைந்தவர் ஆவார்.

       ( இவர் 17.12.1908 இல்
அன்றையசேலம் ஜில்லா
காமாட்சிப்பட்டிகிராமத்தில்
 பிறந்தவர்.இன்று அது, கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் அடங்கியுள்ளது).

***********

 திருக்குறள் மதுரையில்
அரங்கேற்றப்பட்டது,

    
கம்பராமாயணம்
     திருவரங்கத்திலும்,

பெரியபுராணம்
 சிதம்பரத்திலும்
அரங்கேற்றப் பட்டன!”

**********

 திருக்குறள் முதன்முதலில்
அச்சிடப்பட்ட ஆண்டு எது? 1812
திருக்குறளின் முதல் பெயர்
என்ன? முப்பால்
 திருக்குறள் அறத்துப்பாலில் 
உள்ள குறட்பாக்கள் எத்தனை? 380
 திருக்குறள் பொருட்பாலில்
 உள்ள குறட்பாக்கள் எத்தனை? 700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள 
குறட்பாக்கள் எத்தனை? 250
  
  திருக்குறள் எதில் தொடங்கி 
எதில் முடிகிறது
திருக்குறள் "அ"கரத்தில் தொடங்கி
 "ன"கரத்தில் முடிகிறது.
  திருக்குறளில் உள்ள சொற்கள் 
எத்தனை? 14,000
திருக்குறளில் உள்ள மொத்த 
எழுத்துக்கள் எத்தனை? 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 
247-இல் எத்தனை எழுத்துக்கள் 
மட்டும் இடம் பெறவில்லை? -37
 
திருக்குறளில் இடம்பெறும் 
இருமலர்கள் எவை அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே 
பழம் எது? நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே 
விதை எது? குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத 
ஒரே உயிரெழுத்து எது? ஒள
திருக்குறளில் இருமுறை வரும் 
ஒரே அதிகாரம் எது? குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு 
மரங்கள் எவை? பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம்
 பயன்படுத்தப்பட்ட ஒரெ எழுத்து எது? னி
 
"னி" என்ற எழுத்து எத்தனை முறை
      பயன்படுத்தப்பட்டுள்ளது? 1705
     திருக்குறளில் ஒரு முறை மட்டும் 
     பயன்படுத்தப்பட்ட இரு 
   எழுத்துக்கள் எவை? ளீ,
 
திருக்குறளில் இடம்பெறாத 
இரு சொற்கள் எவை? தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில்
 அச்சிட்டவர் யாா்? தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில்
உரை எழுதியவர் யாா்? மணக்குடவர்
 
திருக்குறளை முதன் முதலில் 
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யாா்? 
 ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 
10-வது உரையாசிரியர் யாா்?
பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் எது?
 ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் 
எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது? ஏழு
 
"எழுபது கோடி" என்ற சொல் எத்தனை
 குறளில் இடம்பெற்றுள்ளது-
ஒரே ஒரு குறளில்
"ஏழு" என்ற சொல் எத்தனை குறட்பாக்களில்
 எடுத்தாளப்பட்டுள்ளது?-எட்டுக் குறட்பாக்களில்
  திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் 
வெளிவந்துள்ளது? 26 மொழிகளில்
திருக்குறளை ஆங்கிலத்தில் எத்தனை போ் 
மொழிபெயர்த்துள்ளனர்? 40 பேர் 
*********
 ஒரே சொல் 6 முறை வரும் குறள் எது?
 

திருக்குறளில், "பற்றுக" என்ற சொல்

 ஆறு முறை வரும் குறள்,

"பற்றுக பற்றற்றான் பற்றினை 

அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" )

ஆகும்.

இக்குறளில், "பற்று" என்ற சொல் 

ஆறு முறை மீண்டும் மீண்டும்

 பயன்படுத்தப்பட்டுள்ளது.

 
************
 திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள்: 

தெய்வப்புலவர், பொய்யில் புலவர், 

வான்புகழ் வள்ளுவர். 

திருவள்ளுவரின் வேறு பெயர்கள்: 

நாயனார், தேவர், முதற்பாவலர், 

நான்முகன், மாதானுபாங்கி, 

செந்நாப்போதார், பெருநாவலர்.

******************** 

 கன்னியாகுமரியில் விவேகானந்தர் 
பாறை நினைவிடத்திற்குப் பக்கத்தில்,
 ஒரு பாறையில் அமைந்துள்ள,
 திருவள்ளுவர் சிலை, 
இந்திய சிற்பி வி. கணபதி யால்
 (ஸ்தபதி) உருவாக்கப்பட்டு,
 ஜனவரி 1, 2000 அன்று 
அப்போதைய தமிழக முதல்வர் 
மு. கருணாநிதியால் தமிழக 
மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது
*************************

கன்னியாகுமரியிலுள்ள 

அய்யன் திருவள்ளுவர் சிலை..

இடம்

கன்னியாகுமரி, தமிழ்நாடு, 

இந்தியா

வடிவமைப்பாளர்

கணபதி (சிற்பி)

வகை

சிலை-- கட்டுமானப் பொருள்

பாறை மற்றும் பைஞ்சுதை

உயரம்

40.5 மீட்டர்கள் (133 )

துவங்கிய நாள்

செப்டம்பர் 6, 1990

முடிவுற்ற நாள்--- 1999

திறக்கப்பட்ட நாள்

சனவரி 1, 2000

************* 

 திருவள்ளுவர் ஆண்டு 
எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

   பரவலாகப் பயன்படுத்தப்படும்

 கிரிகோரியன் நாட்காட்டியுடன்

 ஒப்பிடும்போது, 

திருவள்ளுவர் ஆண்டுக்கு 

கூடுதலாக 31 ஆண்டுகள்

 இருக்கும்.

         உதாரணமாக, 

கிரிகோரியன் நாட்காட்டியில்

 2025 ஆம் ஆண்டு திருவள்ளுவர் 

ஆண்டில் 2056 ஆகும்.

 திருவள்ளுவர் ஆண்டு என்பது 

வள்ளுவரின் பிறந்தநாளை

 அடிப்படையாகக் கொண்ட 

தமிழ் நாட்காட்டியாகும்.

******************* 

திருக்குறளில் உதடுகள் 
ஒட்டாமல் சொல்லக்கூடிய
 ஒரு குறள் உள்ளது. அது
 "யாதனின் யாதனின் நீங்கியான்
 நோதல் 
அதனின் அதனின் இலன்" 
என்ற குறளாகும்
*****************. 
திருக்குறளில் உதடுகள் ஒட்டும்
 ஒரு குறள் 

 "பற்றுக பற்றற்றான் பற்றினை 

அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு"

**************

திருவள்ளுவர் ஆண்டு 

கணக்கிடும் முறை

+ 31 = திருவள்ளுவர் ஆண்டு.

எடுத்துக்காட்டு: 2013 +31 = 2044

(கி.பி. 2013ஐத் திருவள்ளுவர்

 ஆண்டு 2044 என்று கூறுவோம்

******************

திருக்குறளுக்கும் 

ஏழு என்னும் எண்ணுக்கும் 

பெரிதும் தொடர்புள்ளது.

திருக்குறள் ஏழு சீரால் அமைந்த 

குறள் வெண்பாக்களைக்

கொண்டது.

'ஏழு' என்னும் எண்ணுப்பெயர் 

எட்டுக் குறட்பாவில் 

இடம்பெற்றுள்ளது.

அதிகாரங்கள், 133. இதன்

 கூட்டுத்தொகை ஏழு. 

மொத்தக் குறட்பாக்கள் 1330 

இதன் கூட்டுத்தொகையும் ஏழு

*********** 

  "வள்ளுவன் தன்னை 

உலகினுக்கே தந்து வாண்புகழ் 

கொண்டத் தமிழ் நாடு" - பாரதியார்

 **********

 "வள்ளுவனைப் பெற்றதாய் 

பெற்றதே புகழ் வையகமே" 

என்றும், 'இணையில்லை

 முப்பாலுக்கு இந்நிலத்தே' என்றும்,

 பாவேந்தர் பாரதிதாசன் 

திருக்குறளைப் போற்றிப் 

புகழ்ந்துள்ளார்.

 **************

.மனிதன் மனிதனாக வாழ,
மனிதன் மனிதனுக்கு 

கூறிய அறிவுரை”- திருக்குறள்
****
தமிழ்மொழி அழகான சித்திர
வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு
; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள
தங்க ஆப்பிள் ; தமிழ் என்னை 

ஈர்த்தது ; குறளோ என்னை

 இழுத்தது என்று கூறியது
- டாக்டர் கிரௌல்

*****
ஆலும் வேலும் பல்லுக்குறுதி,
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
என்னும் பழமொழியில் 'இரண்டு'
என்பது குறிப்பது
விடை: திருக்குறள்
**********



 

 

 

         

 

 

 

                                


 

No comments:

Post a Comment