தமிழின் சிறப்பு
தமிழில் மொத்தம் 18 மெய் எழுத்துக்களில் ய்,ர்,ழ் - என்ற இந்த 3 மெய் எழுத்துக்களுடன் மட்டுமே இன்னொரு மெய் எழுத்து தொடர்ந்துவரும்
********
  "வே" என்றால் 'மறை' (மறைத்து வைத்தல்)  என்றுபொருள்.
1. தாவர வேர் மண்ணுக்குள் மறைந்து  கிடப்பதால் அது 'வே'ர் ஆனது!
2. மறைந்திருந்து தாக்குவதால் 'வே'ட்டன் எனப்பட்டடான்!
3. சுற்றி மறைத்துப் பாதுகாப்பதால்
   'வே'லி எனப்பட்டது!
4. சுடுநீரில் மூலிகைகள் இட்டு துணி கொண்டு  முகத்தை மூடி, முகர்ந்து நோய் போக்கும்  நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது!
5. பெண்ணின் அடர் கூந்தல் அவள் முழு உடலையும்  கவிழ்த்து மறைப்பதால் சங்க இலக்கியங்களில் 'வே'ய்குழல் எனப்பட்டது.
6. உடல் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பதால் 'வே'ட்டி எனப்பட்டது!
7. நிஜமுகத்தை மறைத்து இருப்பதாலேயே  நடிகர்கள் 'வே'டம் போடுவதாகச் சொல்கிறோம்.
8. மறைவாக, விரைவாகச் செல்வதால் 'வே'கம் ஆனது.
9.கசப்பு வெளியே தெரியாமல் இருப்பதால் 'வே'ம்பு  எனப்பட்டது.
***********
ஓரெழுத்து சொல் 42
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 இதில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
அவையாவன பின்வருமாறு
அ -----> எட்டு
ஆ -----> பசு
இ -----> அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
எ -----> வினா எழுத்து, ஏழு என்பதின்
தமிழ் வடிவம்
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஒ -----> ஒழிவு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
ஒள -----> பூமி, ஆனந்தம்
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கு -----> இருள்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு,
பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
ஞா -----> பொருத்து, கட்டு
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
ம -----> சந்திரன், எமன்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை,
வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்
ள -----> தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு -----> நான்கில் மூன்று பகுதி,
முக்கால் என்பதன் வடிவம்
று -----> எட்டில் ஒரு பகுதி அரைக்கால்
எனபதன் வடிவம்
*************
No comments:
Post a Comment