ஏர் கண்டிஷனர் பெட்டிகளை வாங்க போகும் போது அவற்றின் திறனை டன் கணக்கில் சொல்லுகிறார்கள். நாமும் டன் கணக்கைப் பார்த்து வாங்குகிறோம்.
எப்போதாவது ஏன் குளிர்காற்று உருவாக்கும்
ஒரு கருவிக்கு டன் கணக்கீடு வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது
என்று யோசித்திருக்கிறோமா?
ஏர் கண்டிஷனர் கெப்பாசிட்டி
ஏன் டன்-னில் சொல்லப்படுகிறது?
ஒரு 4 டன் A.C என்பது 4 டன் எடை கொண்டதல்ல !
ஒரு மணி நேரத்தில் அது வீட்டின் அறையிலிருந்து
எவ்வளவு உஷ்ணத்தை வெளியேற்றும் என்ற அளவே அது!
உதாரணத்திற்கு 4 டன் ஏசி ஒருமணி நேரத்திற்கு 48000 BTU (பிரிட்டிஷ் தர்மல் யூனிட்) உஷ்ணத்தை வெளியேற்றும்!
ஒரு BTU என்பது ஒரு தீக்குச்சியை முழுவதும் எரித்தால்
உண்டாகும் வெப்பத்தின் அளவாகும்!
எனவே ஒரு டன் ஏசி என்பது ஒருமணிநேரத்தில் 12000 BTU உஷ்ணத்தை வெளியேற்றும் அளவாகும் !
இதற்கு ஏன் டன் என்ற அளவு ஏற்கப்பட்டது ?
AC மெஷின் கண்டுபிடிக்கும் முன்னர் கோடைகாலத்தில் மக்கள் ஆறுகளிலும் ஏரிகளிலும் படர்ந்தீருந்த பனிக்கட்டியை வெட்டிக் கொண்டு வந்து தங்கள் வீட்டையும் உணவையும் குளிரூட்ட பயன்படுத்தினர் ! அவ்வாறு குளிரூட்டும்போது ஒரு டன் பனிக்கட்டி ( 2000பவண்டு) ஒரே அளவில் நாள் முழுதும் உருக எடுத்துக் கொள்ளும் உஷ்ணத்தின் அளவு 286000 BTU ஆகும்!
அதாவது சராசரியாக ஒருமணி நேரத்திற்கு 11917 or 12000 BTU ஆகும்!
எனவே ஒரு டன் பனிக்கட்டி ஒருமணி நேரத்தில் ஒரே அளவில் உருகுவதற்கு 12000 BTU தேவைப்படும் அளவை வைத்தே A.C-க்கு டன் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது !
No comments:
Post a Comment