Saturday, September 30, 2017

தேர்தல் களம்

மக்கள் தெளிவாக இருக்கிறாரார்கள்

சென்ற பொது தேர்தலில்
இரண்டு கட்சிகளை தவிர
மற்ற எல்லா  கட்சிகளையும்
மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் ....
அவர்கள் இன்னும்
எந்திரிக்கவே இல்லை
எந்த போராட்ட கலத்திலுமே காணவில்லை
தற்போது நடந்த இடை தேர்தலில் மக்கள்
இரட்டை இலையையும்
 நிராகரித்தார்கள்
தற்போது எதிர்க்கட்சி மட்டுமே 
மக்கள்  பிரச்சனைக்கு
போராடி வருகிறது ..

மக்கள் தெளிவாக இருக்கிறாரார்கள்

புத்தகம் பற்றி ...

ஒருகோடி ரூபாய் கிடைத்தால்
 என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் 
மகாத்மா
கரண்டியைப் பிடுங்கி விட்டு 
புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் 
தந்தை பெரியார்
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால்
 என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது
 புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து 
விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் 
 ஜவஹர்லால் நேரு
என் கல்லறையில் மறக்காமல்
 எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு 
உறங்குகிறதென்றாராம்
 பெட்ரண்ட் ரஸல்
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு 
எது என்று வினவப்பட்டபோது சற்றும் 
யோசிக்காமல் புத்தகம்
 என பதிலளித்தார் 
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம்
 சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் 
அனுமதிக்க வேண்டும் என்றாராம் 
நெல்சன் மண்டேலா
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் +
என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும்
 என சற்றும் தயக்கமின்றி 
லெனின் கூறிட குவிந்த
 புத்தகங்கள் பல லட்சம்

ஒவ்வொரு படமும் நடிக்க
 ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் 
பணத்தில் முதல் நூறு டாலருக்கு 
புத்தகம் வாங்குவாராம்
சார்லிசாப்லின்
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் 
ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் 
என்றார் 
வின்ஸ்டன் சர்ச்சில்
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள்
எவை என கேட்கப்பட்டபோது
 புத்தகங்கள்தான் என்றாராம்
 மார்டின் லூதர்கிங்
தான் தூக்கிலிடப்படுவதற்கு
 ஒரு நிமிடம் முன்பு வரை 
வாசித்துக்கொண்டே இருந்தாராம்
 பகத்சிங்
நான் இன்னும் வாசிக்காத 
நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே 
என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்
ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன்
 ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்;
 அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்
உலக வரைபடத்திலுள்ள மூலை
முடுக்குகளுக்கெல்லாம் போக
 விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்
போதும் என்று நொந்துபோய், 
புதுவாழ்வைத் தேடுகிறீர்களா…
 ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
இங்கர்சால்
சில புத்தகங்களை சுவைப்போம்…
 சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்…
 சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
பிரான்சிஸ் பேக்கன்
புரட்சிப் பாதையில் 
கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்
உண்மையான வாசகன்,
 வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ 
அதுபோல மனதுக்குப் பயிற்சி 
புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்
பழங்காலத்திய மகா புருஷர்களை 
நேரில் தரிசித்து, அவர்களுடன் 
உரையாட வேண்டுமா? 
நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்

Friday, September 29, 2017

முழுமையான தமிழ் தாய் வாழ்த்து

முழுமையான
தமிழ் தாய் வாழ்த்து
(UnEdited Version of Tamil Thai vazhthu)

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

//"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து"//
சிதையாவுன்சீரிளமைத் திறம்வியந்து
செயன்மறந்து வாழ்த்துதுமே!"

மனோன்மணியம் சுந்தரனார்

Monday, September 18, 2017

தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)

தாமஸ் ஆல்வா எடிசன்
 (Thomas Alva Edison)

 பிறந்ததினம் பிப்ரவரி 11

உலக வரலாற்றில் 
அதிக கண்டுபிடிப்புகளுக்குச் 
சொந்தக்காரர்

அமெரிக்காவின் ஓஹையோ 
மாநிலத்தில் பிறந்தவர்.
 குடும்பம் மிச்சி கனில் உள்ள யூரோன்
 துறைமுகப் பகுதிக்கு
 இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. 
சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் 
பாதிக்கப்பட்ட 
எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க் கப்பட்டார்.

ஆசிரியர் திட்டியதால்
 மூன்றே மாதங்களில் 
அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய 
அம்மா, 
தானே பாடம் சொல்லித்தந்தார்.
 பாடங்களோடு, பைபிள், நல்ல
 நூல்களைப் படிக்குமாறு
 அப்பா கூறினார். ஒவ்வொரு 
புத்தகம் படித்து 
முடித்த போதும் 10 சென்ட் அளித்து 
உற்சாகப்படுத்தினார்.

பார்க்கும் எதையும் சோதித்து 
அறியும்
 ஆர்வம் சிறு வயதில் இருந்தே
 அவருக்கு உண்டு. 
கோழி அடைகாத்து குஞ்சு பொரிப்பதைப்
 பார்த்த 
சிறுவன் எடிசன் தானும்
 முட்டைகள் மேல் அமர்ந்து
 சோதனை செய்து பார்த்தி ருக்கிறான்.

ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், 
சர் ஐசக் நியூட்டன் 
ஆகியோரின் புத்தகங்கள் உட்பட 
ஏராளமான புத்தகங் களை
 11 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார் எடிசன்.

ரயில் நிலையத்தில் தந்தி இயக்குபவராகப் 
பணியாற்றிய போது, ரயில் பெட்டியையே 
அச்சகமாக மாற்றி ‘வீக்லி ஹெரால்டு’ 
வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்.
 அங்கு சோதனைக் கூடம் அமைத்து 
கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார்.

ஒருமுறை அங்கு அவர் வைத்திருந்த
 பாஸ்பரஸ் எரிந்து ரயில் பெட்டியில் 
தீப்பற்றியது.
 ரயில்வே அதிகாரி ஆத்தி ரமடைந்து
 அறைந்ததில் 
அவரது ஒரு பக்கக் காது கேட்காமல்
 போனது.

இவர் தன் வாழ்நாளில் 
கண்டறிந்த விஷயங்கள்
 மொத்தம் 1300. உலக சரித்திரத்தில்
 வேறு எவரும் அருகில் 
நெருங்க முடியாத 
எண்ணிக்கை இது.
 1093 கண்டுபிடிப்பு களுக்கு
 காப்புரிமை பெற்றார்.
 இத்தனைக்கும் அறிவியல், கணிதம் 
என்று எதையும் முறையாக
 கற்றவர் அல்ல.

மென்லோ பார்க் பகுதியில்
 1876-ல் ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். 
மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர்,
 டெலிகிராப் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன்,
 ரேடியோ வால்வ், 
மெகா போன், மோட்டார், மின்சார
 இருப்புப் பாதை, 
தொலைபேசி ஸ்பீக்கர்,
 ஒலிபெருக்கி, கிராமஃபோன், 
மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் 
ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் 
குறிப்பிடத்தக்கவை.

ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, 
அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் 
அங்கே இருக்கமாட்டார். 
அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் 
கூடத்துக்குள் போயிருப்பார்.
 இதுபற்றி கேட்டால், ‘நேற்றைய 
கண்டு பிடிப்பு பற்றி பேசி 
இன்றைய நேரத்தை வீணடிக்க 
விரும்பவில்லை’ என்பார்.

எடிசன் 84 வயதில் மறைந்தார். 
அவரது உடலை அடக்கம் செய்யும்போது, 
அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர்
 உத்தரவின் பேரில், 
அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் 
ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.

Sunday, September 17, 2017

ஜாதகம் - ஜோதிடம் - செவ்வாய்தோசம்

ஜாதகம்
ஜோதிடம்
செவ்வாய்தோசம்

இவற்றைபற்றி அறிய

ஜோதிடம் என்றாலே பலவகை ஜோதிடங்கள் உண்டு.
 ஒவ்வொருவரும் தங்கள் பிழைப்புக்காக 
உருவாக்கி கொண்டவை.

ரேகை ஜோதிடம், ஜாதக ஜோதிடம், 
எண் ஜோதிடம், நாடி ஜோதிடம், வாஸ்து ஜோதிடம்,
 கிளி ஜோதிடம் என்று பட்டியல் நீள்கிறது...

இவ்வாறான பித்தலாட்டங்கள் இன்றும்
 நிலைபெற்றிருக்க காரணம் மனிதனுக்கு 
எதிர்காலத்தைபற்றி தெரிந்துகொள்ளவேண்டும்
 என்ற பேராசையே.

இவற்றை விமர்சிப்பதற்கு முன்
 பெரியார் கூறியதையோ, 
நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானிகள் 19 பேர் ஒன்றாக
 சேர்ந்து இவற்றை விமர்சித்து 
அறிக்கை சமர்ப்பித்ததையோ குறிப்பிடாமல்

விவேகானந்தர் "ஜோதிடத்தின்பால் 
உங்களுக்கு நாட்டம் வருமானால்
 நல்ல மருத்துவரை அணுகுங்கள்" 
என்று  கூறியதை இங்கே மேற்கோள்
 காட்டி தொடர்கிறேன்.  

மற்றய ஜோதிடங்களை 
புறந்தள்ளிவிட்டு பரவலாக உள்ள 
ஜாதக ஜோதிடத்தை பற்றி விரிவாக
 பார்ப்போம். 
இதுதான் இன்று பாடாக படுத்துகின்றது.

அதற்கு முன் ஒரு சிறு மீட்டல்.
இன்று நிரூபிக்கப்பட்ட உண்மைகள். 
தெரியாதவர்கள் இருந்தால் அவர்களுக்காக.

வானத்தில் இருப்பவை
 (பதிவுடன் சம்பந்தப்பட்டவை) எட்டு கிரகங்கள், 
170ற்கும் மேற்பட்ட துணைக்கிரகங்கள், 
எண்ணிலடங்கா நட்சத்திரங்கள்.

எட்டு கிரகங்களான
 புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன்,
 சனி, நெப்டியூன், யுரேனஸ் என்பன
 நட்சத்திரமான சூரியனை நீள்வட்ட பாதையில் 
சுற்றிவருகின்றன. அத்துடன்
 துணைக்கிரகங்கள் கிரகங்களை 
சுற்றிவருகின்றன.
 இவை நிரூபிக்கப்பட்டவை
. சரி இனி ஜாதக ஜோதிடம் என்ன
 கூறுகிறது என்று பார்ப்போம்.

ஜாதகம் கூறுவது..

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு,
 சுக்கிரன், சனி, இராகு, கேது என்ற ஒன்பது கிரகங்கள்
 பூமியை சுற்றி வருகின்றன.
இதில் கவனிக்க வேண்டியது. நட்சத்திரமான
 சூரியனை கிரகம் என்கிறது. 

துணைக்கோளான சந்திரனை கிரகம் என்கிறது. 
நிழல் கிரகங்களான் ராகு கேதுவை கிரகங்கள் என்கிறது.
 ஒரு கிரகமான பூமியை கிரகமாகவே 
எடுத்துக்கொள்ளவில்லை.
 ஜாதகத்தில் துணைக்கிரகங்களே கிடையாது. 
எல்லாகிரகங்களும் பூமியை சுற்றிவருகின்றனவாம்.
 இந்த லட்சணத்தை வைத்துக்கொண்டுதான்
 பிறக்கும் குழந்தைகளுக்கு பலன் கூறுகிறார்கள்.

முதல் கோணல் முற்றும் கோணல் என்றாலும் 
அவர்கள் என்னதான் கூறுகிறார்கள்
 இவற்றை எப்படி கணிக்கிறார்கள் 
என்பதையும் பார்த்துவிடுவோம்.

 12 ராசிகள்.

மொசப்பத்தேனியா நாகரீகத்தில் இருந்து
 இது தொடங்குகின்றது. 
இரவு நேரங்களில் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை
 பார்க்கும்போது, அந்த நட்சத்திரங்களை புள்ளிகளாக 
கருதிக்கொண்டு, அந்த புள்ளிகளை இணைக்கும்போது
 ஒரு படம் கற்பனையில் வருகிறதா 
அதை 12 இராசி ஆக்கினார்கள். இந்த இராசி்களிலும்
 ஆண் இராசி பெண் இராசி உண்டாம்.
 1,3,5,7,9,11, ஆண் இராசியாம். 2,4,6,8,10,12 பெண் இராசியாம்.

அவை பின்வருமாறு..

மேடம் - ஆடு
இடபம் - எருது
மிதுனம் - இரட்டையர்
கடகம் - நண்டு
சிம்மம் - சிங்கம்
கன்னி - கல்யாணமாகாத பெண்
துலாம் - தராசு
விருச்சகம் - தேள்
தனுசு - வில்
மகரம் - வெள்ளாடு
கும்பம் - குடம்
மீனம் - மீன்

இந்த உருவங்கள் மற்றும் 
ஆண் பெண் எல்லாம் எவ்வாறு
 நட்சத்திர கூட்டங்களுக்கூடாக 
தெரிந்தது என்பது நானறியேன்.

*. நட்சத்திரங்கள் 27

அடுத்து ஜாதகப்படி
 நட்சத்திரங்கள் 27 மட்டும்தான் 
என்கிறது.
 (எண்ணற்ற நட்சத்திரங்கள் அல்ல.)

அவையாவன...
அஸ்வினி, பரணி, கார்த்தி்கை, ரோகினி, 
மிருகசீருடம், திருவாதிரை,
 புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம்,
 பூரம், உத்தரம், அஸ்தம், சித்திரை, 
சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, 
மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம்,
 அவிட்டம், சதயம், பூரட்டாதி, 
உத்திரட்டாதி, ரேவதி என்பனவாகும். 
அதாவது வானத்தில் 
உள்ள 27 நட்சத்திரங்களும் 
இவை மட்டும்தான் என்கிறது.
 மற்றவை என்ன கணக்கு 
என்பது புரியவில்லை.

*. பஞ்சாங்கம்

இவை எல்லாவற்றையும்பற்றி சொல்கின்ற 
புத்தகத்திற்கு பெயர் பஞ்சாங்கம். 
பஞ்ச என்றால் ஐந்து. அதாவது ஐந்து செய்திகளைபற்றி 
சொல்லுகின்ற புத்தகம் பஞ்சாங்கம். 
திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கர்மம் என்ற 
ஐந்தைப்பற்றி கூறுகின்றது.
 பஞ்சாங்கம் என்பது பெரிதாக ஒன்றுமில்லை 
ஒரு அந்தக்காலத்தைய நாட்காட்டி அவ்வளவுதான்.

*. திதி

இனி பஞ்சாங்கத்தில் கூறப்படும் திதி என்றால் என்ன .
 அமாவாசையில் இருந்து
 பௌர்ணமி வரைக்கும் நாட்கள் நகரும்போது
 அமாவாசை/பௌர்ணமி முடிந்து 
எத்தனையாவது நாள் என்று கூறுவதுதான் திதி.

வெறும் வடமொழி சொற்களால் ஆனதால்
 இவை புரிவதில்லை.
 கிருஸ்ணபட்ச திதி, சுக்கிலபட்ச திதி 
என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.
 அது வேறு ஒன்றுமல்ல
 சுக்கில என்றால் வட மொழியில்
 வெளிச்சம் என்று அர்த்தம்
. சுக்கில பட்சம் என்றால்
 இருட்டில் இருந்து வெளிச்சத்தைநோக்கி
 நகரும் காலப்பகுதி.
 கிருஸ்ண என்றால் வட மொழியில்
 கறுப்பு என்று அர்த்தம். 
கிருஸ்ண பட்சம் என்றால் வெளிச்சத்தில் இருந்து 
இருட்டைநோக்கி நகரும் நாட்கள். இவ்வளவுதான்.

இனி அந்த நாட்களை எவ்வாறு குறிக்கிறார்கள் 
என்று பார்ப்போம். ஒன்றுமல்ல வெறும்
 எண்களை வடமொழியில் குறிப்பிடுகிறார்கள்.

பிரதமை - (பிரத=1)
துவிதியை - (துவி=2)
த்ரிதியை - (த்ரி=3)
சதுர்த்தி - (சதுர்=4)
பஞ்சமி - (பஞ்ச=5)
சஷ்டி - (சஷ்டி=6)
சப்தமி - (சப்த=7)
அஷ்டமி - (அஷ்ட=8)
நவமி - (நவ=9)
தசமி - (தச=10)
ஏகாதசி - (ஏக் தசி=11)
துவாதசி - (துவ் தசி=12)
த்ரயோதசி - (த்ர தசி=13)
சதுர்தசி - (சதுர் தசி=14)
அமாவாசை / பௌர்ணமி

பஞ்சாங்கம் என்பது வெறும் அந்தக்காலத்தைய நாட்காட்டி.
 இதைவைத்துதான் பலன் கூறுகிறார்கள்.
 இன்றைக்கு யாராவது ஆங்கில நாட்காட்டியை
 கையில் வைத்தபடி பலன் உங்களிற்கு கூறினால் 
அவரை எவ்வாறு பார்ப்பீர்களோ அதற்கு ஒப்பானதே இதுவும்.

*. லக்னம்
அடுத்தது லக்னம்.
ஜாதகத்தில் ஒருகோடுபோட்டு "ல"
 என்று எழுதிவைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். 
அது ஒன்றுமில்லை. ஒருவர் பிறந்த திகதியில் 
வானில் இருந்த நட்சத்திரக்கூட்டம் 
எந்த அமைப்பில் இருந்தது, அதாவது 
எந்த இராசி அருகில் இருந்தது என்பதே லக்னம்.

*. செவ்வாய்தோசம்
இனி இறுதியாக முக்கியமான செவ்வாய் தோசம்
 என்ற பிரச்சனைக்குள் வருவோம்.

ஒவ்வொரு கிரகங்களுக்கும் 
ஒவ்வொரு வீடுகள் உண்டு.
 12 கட்டங்கள்.
 உதாரணமாக செவ்வாய் கிரகம் 
அதற்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் இருக்காமல்
 2, 4, 7, 8, 12 ஆகிய வேறுவீட்டில் இருந்தால் 
அந்த ஜாதகம் செவ்வாய் தோசமுள்ள ஜாதகம். 
 பரிகாரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு கணிக்கும்போது 40% ஆனவர்களுக்கு
 செவ்வாய்தோசம் வருவதால் அதற்கும்
 சில விலக்கு கொடுத்தார்கள். 
ஏனெனில் எல்லோருக்கும் பரவலாக
 செவ்வாய்தோசம் இருந்தால் 
இவர்கள் பிழைப்பு ஓடாதே!  
அதனால் 4, 8 வீடுகளில் இருந்தால்
 பரவாயில்லை என்றும்
, 2, 7, 12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால்
 கூடவே கூடாது என்றும் கூறினார்கள்.
 மீறி திருமணம் செய்தால் தோசமுள்ளவரின் 
மாமியார் இறந்துவிடுவாராம்.

எத்தனையோ கோடி மயில்களுக்கு அப்பால்
 உள்ள செவ்வாய் கிரகம் எவ்வாறு 
இந்த மாமியாரை கண்டுபிடித்து 
போட்டுத்தள்ளும் என்பது எனக்கு
 புரியவில்லை. புரிந்தவர்கள் கூறலாம். 
வெளிநாடுகளில் இந்த பிதற்றல்களே தெரியாத பலர் 
இன்றும் நலமாகவே வாழ்கின்றனர். 
உலகம் மிக பெரியது. குண்டு சட்டிக்குள் 
குதிரை ஓட்டாமல் 
வெளி உலகையும் எட்டிப்பாருங்கள்.

எல்லாவற்றையும்விட முக்கியமானது

நவகிரகங்களிலும் நால் வர்ணம் உள்ளது. 
அதாவது விசாலமான வியாழனும் 
பளபளக்கும் வெள்ளியும் பிராமண கிரகங்களாம்.
 ஞாயிறு, செவ்வாய் சத்திரியர்களாம்.
 திங்களும் புதனும் வைசியராம்,
 எதெல்லாம் உருப்படாது என்று கூறுகிறார்களோ 
அது சூத்திர கிரகங்களாம். அதாவது சனி, ராகு, கேது.

ராகு காலம், ஏழரை நாட்டுசனி பார்க்கும் சூத்திரர்கள் 
இதை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.