ஈரோடு மாநகரம் என்ற அமைப்பு
இங்கு ஒரு மண் கோட்டை இருந்தது.
கோட்டை யில் சிறிய படை இருந்தது. தளவாய் கந்தாசாரம், சேனபாகம், சேர்வைக்காரர், அட்டவணை, என்கிற அதிகாரிகள் இங்கு வசித்துவந்தனர்.
இங்கு 2ஆயிரம் வீடுகள் இருந்தன.
அப்போது மதுரை நாயக்கர், மைசூர் உடையார், ஐதர்அலி, திப்பு சுல்தான் ஆகியோர் மேற்கொண்ட போர்களில்
ஈரோடு கோட்டை முக்கிய இடம் பெற்றது, இந்த போர்களால், ஈரோடு கோட்டை பெரிய அழிவை சந்தித்தது.
அந்த காலகட்டத்தை குறித்து பதிவு செய்து இருக்கும் ஸ்வார்ட்ஸ் பாதிரியார்,
2ஆயிரம் வீடுகள் இருந்த இடத்தில் 400 வீடுகள் மட்டுமே எஞ்சியது என்று குறிப்பிட்டுள்ளார்.
1871 ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 16ம் தேதி
ஈரோடு நகர பரிபாலனை சபை உருவாக்க பட்டது.
முதல் தலைவராக A. M மெக்ரீகர் என்ற ஆங்கிலேயர் பதவி ஏற்றார்.
அவருடன் 7 நியமன உறுப்பினர்களும் பதவி ஏற்றனர்.
இந்த நாள் தான் ஈரோடு நகர வளர்ச்சிக்கு தொடக்க நாளாக அமைந்தது.
இந்த நிலையில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பஞ்சம் மக்களை வாட்டியது. (1878)ம் ஆண்டு இந்த பஞ்சத்தால் வறட்சி நிவாரண பணியாக கோட்டை இடிக்கப்பட்டது.
கோட்டையை ஒட்டி இருந்த அகழி முழுமையாக மூடப்பட்டது.
அப்படி மூடப்பட்ட அகழிதான் இப்போது அகில்மேடு வீதி என அழைக்கப்படுகிறது.
ஈரோட்டின் தல புராணம் ?
பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை என்ற 2"ஓடைகளின் நடுவில் அமைந்துள்ள ஊர் என்பதால் ஈரோடை என்பது மருவி ஈரோடு ஆகியது என்றும் கூறப்படுகிறது.
மறந்தை, உறந்தை, மயிலை, கபாலபுரி, என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
சோழர் காலத்து கல்வெட்டு ஒன்று," ஈரோடான மூவேந்த சோழச் சதுர்வேதி மங்கலம் "என்று கூறுகிறது.
ஈரோட்டில் 3 சிவன் கோவில்கள், 3 பெருமாள் கோவில்கள், 3 அம்மன் கோவில்கள், 3 மாரியம்மன் கோவில்கள், அமைந்துள்ளது.
இவற்றில் கொங்கு நாட்டின் முதல் கோவிலான பள்ளி கொண்ட பெருமாள் கோவில்.
கி. பி. 907ம் ஆண்டு சோழர் கட்டியதாகும்.
கி. பி 932-ம் ஆண்டு கொங்கு சோழன் மகிமாலய இருக்குவேள் ஆன வீர சோழன், மகிமாலீஸ்வரர் கோவில் கட்டினார்.
காவிரி கரையில் கரிகாலன் கட்டிய கரிகால சோழீஸ்வரர் கோவிலும் உள்ளன.
கொங்கு நாட்டை வெற்றி பெற்ற பிற நாட்டு அரசர்கள், ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் வந்து அரசராக முடிசூட்டிக்கொள்வது வழக்கமாக இருந்தது.
எனவே இந்த கோவில் "ராஜ்ய அபிஷேக விண்ணகரம் என்று அழைக்கப்பட்டு வந்தது
🌹
நன்றி
கல்வெட்டு அறிஞர்.
புலவர் செ. ராசு அவர்கள்
🌹
No comments:
Post a Comment