Saturday, July 29, 2017

கொங்கு நாட்டை ஆண்ட கவுண்டர்கள்

கொங்கு நாட்டை ஆண்ட 
24 நாட்டு கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்

மதுக்கரை பட்டயம் (சுமார் 900 வருடங்களுக்கு முன்பு)

01.தென்கரசை நாடு

கொத்தனுர்க்கோட்டை மகா- - ஸ்ரீ முத்துசங்கர வேனாவுடையாரவர்கள்,
மூலனூர் வேலப்பகவுண்டர்,
நீலம்பூர் ரதினசலகவுண்டர்,
வீராச்சிமங்கலம் ராமசமிகவுண்டர்,
ஊதியூர் அருணாசலக்கவுண்டர்.

02. காங்கய நாடு

காடையூர் மகா- - ஸ்ரீ இம்முடி குமாரக் காங்கய மன்றாடியாரவர்கள்,
பழைய கோட்டை மகா- - ஸ்ரீ நல்லதம்பிச் சக்கரை மன்றாடியாரவர்கள்
காங்கயம் மகா- - ஸ்ரீ கணபதி பல்லவராயவர்கள்,
முத்தூர் முருகப்பகவுண்டர்,
கன்னபுரம் அண்ணாமலைக்கவுண்டர்.

03. பூந்துரை நாடு

ஈரோடு பொங்காளிகவுண்டர்,
பெருந்துறை அவனாசிகவுண்டர்,
நசையனுர் நஞ்சப்பகவுண்டர்,
துருவம் குருசாமிகவுண்டர்,
அரச்சலூர் அரச்சாலைகவுண்டர்.

04. ஆறு நாடு

பேரூர் பட்டியாகவுண்டர்,
அவனாசி வார்ணவாசிகவுண்டர்,
சேகூர் செல்லபகவுண்டர்,
திருமுருகன்பூண்டி திருமூர்த்திகவுண்டர்,
கணபதி பச்சையாகவுண்டர்.

05. குருப்ப நாடு

ஆதியூர் கருப்பனகவுண்டர்,
திங்களூர் சங்கரகவுண்டர்,
விஜையமங்கலம் மசையாண்டி கவுண்டர்,
வீரசங்கிலி நாராயனகவுண்டர்,
தோரனவாவி மாரியனகவுண்டர்.

06. அரைய நாடு

கவலகுறிச்சி கந்தசாமிகவுண்டர்,
கபிலமலை சிவனாண்டி கவுண்டர்,
ராமதேவம் சாமிநாதகவுண்டர்,
தாழைக்கரை கூழையப்பக்கவுண்டர்,
காருவழி ஆருமுகக்கவுண்டர்.

07. கிழங்கு நாடு

புகளியூர் கண்டியகவுண்டர்,
தோட்டகுறிச்சி வேட்டையணகவுண்டர்,
வேலாயுதம்பாளையம் வள்ளியனகவுண்டர்,
கடம்பகுறிச்சி இடும்பகவுண்டர்,
அய்யம்பாளையம் வையாபுரிக்கவுண்டர்.

08. வேங்கல நாடு

கரூர் பசுபதிகவுண்டர்,
பவுத்திரம் பகபதிக்கவுண்டர்,
காசிபாளையம் ராசியனகவுண்டர்,
நாகம்புள்ளி வெள்ளையப்பகவுண்டர்,
நிமந்தபட்டி குமாரகவுண்டர்.

09. மன நாடு

கோடந்தூர் வடமலைகவுண்டர்,
தென்னிலை சென்னிமலைகவுண்டர்,
கூடலூர் குப்பனகவுண்டர்,
ஆரியூர் வீரப்பகவுண்டர்,
ஊத்துப்பட்டி காத்தகவுண்டர்.

10. தட்டய நாடு

ராமகிரி சாமியனகவுண்டர்,
புலியூர் பொன்னையகவுண்டர்,
வெள்ளியணை புள்ளாக்கவுண்டர்,
வெள்ளோடு நல்லிகவுண்டர்,
கருங்குளம் திருமலைகவுண்டர்.

11. தலைய நாடு
மானூர் சொக்கய்யகவுண்டர்,
அரவக்குறிச்சி பெரியாகவுண்டர்,
தலையூர் சிறைமீட்டாகவுண்டர்
மஞ்சிவளி வஞ்சியகவுண்டர்
புங்கம்பாடி தங்கவேலுகவுண்டர்

12. அண்டநாடு

ஆயிக்குடி அருணாசலகவுண்டர்
அமரர்பூண்டி குமரவேலு கவுண்டர்
கணக்கம்பட்டிதிருக்கைவேலுகவுண்டர்
பொருளூர் கருமலைகவுண்டர்
கரியாம்பட்டி சரவணகவுண்டர்

13. வையாபுரி நாடு

பழனியூர் மங்கலகவுண்டர்,
வாகரை பழனிகவுண்டர்,
மேகரைப்பட்டி தேவணகவுண்டர்
கூத்தம்பட்டி தீத்தாகவுண்டர்
பரித்தியூர் சிற்றம்பலகவுண்டர்

14. பொன்குலிக்கிநாடு

பொன்னாபுரம் குன்னுடையாகவுண்டர்,
புத்தரைச்சல் வத்தகவுண்டர்,
பொங்கலூர் வெங்கிடாசலகவுண்டர்,
புத்தூர் சிற்றம்பலகவுண்டர்,
மாதப்பூர் மாந்திரிகவுண்டர்.

15. வாரக்க நாடு

பல்லடம் காளியனகவுண்டர்,
சிற்றம்பலம் முத்துகவுண்டர்,
மங்கலம் தங்கசாமி கவுண்டர்,
சூலூர் நீலியப்பகவுண்டர்,
குரிச்சி குருநாதகவுண்டர்.

16. நல்லுருக்க நாடு

சமத்தூர் சுப்பிரமணியகவுண்டர்,
மானுப்பட்டி மாரப்பகவுண்டர்,
வாழைவாடி காளிங்கராயகவுண்டர்,
பூலாங்கிணறு பொன்னிமலைகவுண்டர்,
சித்தூர் சென்னிமலைகவுண்டர்.

17. காவடிக்க நாடு

புள்ளாச்சி தாயணகவுண்டர்,
ஊத்துகுழி உருமனகவுண்டர்,
நெகமம் நாச்சிமுத்துகவுண்டர்,
ராமபட்டணம் சாமியணகவுண்டர்,
சுந்தராபுரம் சுந்தரகவுண்டர்,

18. ஆனைமலை நாடு

ஆனைமலை ஆறுமுககவுண்டர்,
அருணாச்சலகவுண்டர்.

19. ராசிபுர நாடு

ராசிபுரம் காசியணகவுண்டர்,
சிங்களாந்தபுரம் சின்னராசிகவுண்டர்,
கள்ளக்குறிச்சி செல்லக்குமாரகவுண்டர்,
ஒடுவங்குரிச்சி திருமுடிகவுண்டர்,
சீராப்பள்ளி முருகய்யகவுண்டர்.

20. வாழவந்தி நாடு

நாமக்கல் சாமிகவுண்டர்,
கீரம்பூர் சீரங்ககவுண்டர்,
தோளூர் காளியப்பகவுண்டர்,
சாத்தம்பூர் கூத்தககவுண்டர்,
நடந்தை நாகமலைகவுண்டர்.

21. பூவானி நாடு

ஓமலூர் பூமனகவுண்டர்,
தாரமங்கலம் திருமலைகவுண்டர்,
சோழபாண்டி காளியப்ப கவுண்டர்,
பூதம்பாடி குருநாதகவுண்டர்,
அமரமணி குமரகவுண்டர்.

22. நரய நாடு

நரயனூர் நாகப்பகவுண்டர்,
பசுபதிகவுண்டர்.

23. காஞ்சி ஒடுவங்க நாடு
சத்தியமங்கலம் தாண்டவகவுண்டர்,
பெருந்தலூர் குருநாதகவுண்டர்,
கொடிவேரி வடிவேலுகவுண்டர்,
கூவலூர்ஆயிகவுண்டர்,
தடுப்பள்ளி சடையப்பகவுண்டர்.

24. வடகரை நாடு

பவானி வஞ்சியனகவுண்டர்,
சம்பை தம்பியனகவுண்டர்,
எழுமாத்தூர் குழந்தைவேலுகவுண்டர்,
நெருஞ்சிப்பேட்டை குருசாமிகவுண்டர்,
மயிலம்பாடி அயிலியகவுண்டர்.

நியரஸ்ட் கரெக்ட்

ஒரு இண்டர்வியூல ஒருத்தன் கிட்ட எட்டை 
மூன்றால் பெருக்கினால் என்ன விடை வரும்னு கேட்டாங்களாம்..
அவன் 23 என்று சொன்னதால் அவனைதான் செலக்ட் செய்தாங்களாம்.

அவனுக்கு இதை பற்றி தெறிஞ்சுக்க ஆசை.. ஆனால் இப்ப சொன்னா வேலை போய்டுமே என்று சில மாதம் வேலை செய்த பின் மேலாளரை அணுகி, " சார் 8 × 3 = 24 தானே? நான் 23 என்று சொன்னேன்.. ஒருவேளை தெரியாம வேலை கொடுத்துடிங்களோ.... எப்படி என்று கேட்டானாம்...

மேலாளர் அப்படியெல்லாம் இல்லப்பா... அன்னைக்கு நிறைய பேர் நேர்முக தேர்வுக்கு வந்து இருந்தாங்க. எல்லார்கிட்டவும் இந்த கேள்விய கேட்டோம் வந்தவங்களிலயே நீதான் Nearest correct answer "நியரஸ்ட் கரெக்ட் ஆன்ஸர்" (நெருக்கமான பதில்) சொன்ன என்று சொன்னாராம்.

இதுல பெரிய வாழ்க்கை தத்துவமமே அடங்கியிருக்கு.
குறையே இல்லாமல் உலகத்துல 100க்கு நூறு பர்பெக்ட் என்று யாரும் இல்லை.. மனிதன் குறைகளையும் நிறைகளையும் உடையவன்.

யார் ஒருவர் 100 பர்செண்ட் பர்பெக்ட் எதிர்பார்க்குறாங்களோ அவங்க கொஞ்சம் டென்ஷனும், எரிச்சலுடன்தான் வாழ்க்கையை கழிக்க நேரிடும். ஏனென்றால் அவர் எதிர்பார்ப்புக்கு தக்கபடி யாரும் இருக்க போவது இல்லை.

நாம் பல விஷயங்களில் நியரஸ்ட் கரெக்ட் ஆண்சர்களை ஒப்புக்கொண்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும். மனைவி, பிள்ளைகள், சுற்றம், நட்பு எல்லாவற்றிலும் நியரஸ்ட் ஆன்சரை மட்டுமே பாருங்கள்.

அதே நேரம், இது எல்லா நேரத்திற்க்கும் பொருந்தாது.. ஒரு ரயிலை இயக்குபவர், சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடம் கடக்க வேண்டும், கடந்துதான் ஆகவேண்டும்.. அப்பொழுது தான் அடுத்து வரும் ரயில் இதன் மீது மோதாமல் விபத்தின்றி செல்ல முடியும்.
உதாரணமாக: அழகான வாழ்க்கை துணை வேண்டும் என்பதில் நியரஸ்ட் கரெக்ட் ஆன்ஸரையும்; அவர் அன்பானவராக இருக்க வேண்டும் என்பதில் பர்பெக்ட் ஆன்ஸர்ரையும் எதிர் பாருங்கள்.

வரும் பாராளுமன்ற தேர்தலில், பர்பெக்ட் தலைவருக்குதான் ஓட்டு போடுவேன் என்று அடம் பிடித்தால், நாம் என்றைக்கும் ஓட்டு போட முடியாது.. இருப்பவர்களில் ஒரு நியரஸ்ட் கரெக்ட் தலைவரை தேர்ந்து எடுத்து வாக்களியுங்கள்...

Tuesday, July 18, 2017

தெரிந்து கொள்வோம் 2

பொது அறிவுத் தகவல்கள்!

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.
பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.
Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.
Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!
எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.
கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.
‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.
ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.
ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.
முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.
ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.
பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.
கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .
ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.
இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.
பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.
‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.
இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.
மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.
ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).
ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.
ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.
தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.
விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.
இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.
உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.
DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!
1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.
உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.
தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.
இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.
உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.
ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.
அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.
ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’
காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’
டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.
Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.
இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.
விலாடிமிர் இலியச் லெனின் என்பது லெனினின் இயற்பெயர்.
சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.
ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.
டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.
ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.
நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.
பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.
1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம்ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.
டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.
ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.
நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.
பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.
இந்தியாவின் முதல் வைசிராய் கானிங் பிரபு.
அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா.
அங்கோலா நாட்டு நாணயத்தின் பெயர் குவான்சா.
பூமியின் விட்டம் 12 ஆயிரத்து 754 கிலோமீட்டர்கள்.
இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவின் முதல் தலைவர் விக்ரம் சாராபாய்.
* வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் வல்லுநரால் 1781-ல் யுரேனஸ் கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
* யுரேனசுக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருப்பதைப் போல 19 மடங்கு
• மிகப் பெரிய பறவைகள் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஈமு பறவையை ஆஸ்திரேலியாவில் மாடு மேய்க்கப் பழக்குகின்றனர்.
• இமயமலைப் பகுதிகளில் காணப்படும் கல்தூரா என்ற பறவை மிக இனிமையான குரலையுடையது. மலைப் பகுதி மக்களுக்கு இப்பறவையின் குரலைக் கேட்பது ஓர் இனிமையான அனுபவம். ஆரம்பத்தில் முதன்முதலாய் விசிலடிக்கத் துவங்கும் ஒரு சின்னப் பையனைப் போல ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக மிக அருமையாக விசிலடிக்கும்.
• பூநாரை என்ற பறவை இனத்தில் ஆண் பறவையும் குஞ்சுகளுக்குப் பால் ஊட்டுகிறது. இப்பாலில் புரதச் சத்தும் கொழுப்புச் சத்தும் அதிகமாக இருப்பதால் புழு பூச்சிகள், மீன்களைச் சாப்பிடாமலேயே குஞ்சுகள் நல்ல ஆரோக்கியத்தோடு வளர்கின்றன.
• அதிக இறகுகள் உள்ள பறவை அன்னப் பறவையாகும். பொதுவாக அன்னப் பறவைகளுக்கு 25,216 இறகுகள் உண்டு.
இந்தியா வசம் உள்ள அக்னி ஏவுகணை 5 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று எதிரியின் இலக்கை தாக்கக் கூடியது.
* இந்திய கடற்படை வசம் உள்ள நீர்மூழ்கி மற்றும் விமானம் தாங்கி கப்பலின் பெயர் ஐ.என்.எஸ்.அரிகன்ட், அட்மிரல் கோர் ஸ்கோப்
* பசிபிக் கடலில் கண்டறிந்த அரிய வகை திமிங்கலத்தின் பெயர் ஸ்பேடு டூத்டு பீக்டு வேல்.
* ஆராய்ச்சியாளர்களால் தக்காளி பழத்தின் ஜீன் அமைப்பு முற்றிலுமாக வரிசைப் படுத்தப்பட்டுவிட்டது.
* இந்தியாவில் வேகமாக அழிந்துவரும் உயிரினம் கிரேட் இன்டியன் பஸ்டர்டு எனும் பறவையினம்.
* இந்தியாவின் முதன்மையான மிகப்பெரிய அணுக்கரு ஆற்றல் ஆராய்ச்சி மையம் மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையம் ஆகும்.
* பரப்பளவின் அடிப்படையில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவின் பெரிய மாநிலம் ‘மத்தியப்பிரதேசம் ஆகும்.
* இந்திய அரசின் மிக உயர்ந்த சிவிலியன் விருது ‘பாரத ரத்னா’ என்ற விருதாகும்.
* வெப்பம் உமிழாமல் வெளிச்சம் தரும் உயிரினம் ‘மின்மினிப்பூச்சி’ ஆகும்.
* புரதத்தை செரிமானம் செய்ய உதவும் பொருள் ‘பெப்ஸின்’ என்பதாகும்.
* இந்திய தேசிய மகாகவி என்றழைக்கப்படுபவர் ‘ரவீந்திரநாத் தாகூர்’.
* இந்தியாவில் முதல் சென்சஸ் 1911-ம் ஆண்டு எடுக்கப்பட்டது.
* நீரூக்கு அடியில் இருக்கும் மணலை அளக்க ஹைட்ரோஃபோன் என்ற கருவி பயன்படுகிறது.
* அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் என்பவர் ஆவார்.
 ++++++ 

1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
சாணக்கியர்
2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
நைல் நதிக்கரையில்
3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டிருக்கின்றன ?
பிராமி,
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
6 கி.மீ
5.பாம்புகளே இல்லாத கடல் எது ?
அட்லாண்டிக் கடல்
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
காரியம் , களிமண், மரக்கூழ்
7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
70 ஆயிரம் வகைகள்
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
அலகாபாத்
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
பாலைவனத்தில்
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
உள்ள மாநிலம் எது ?
கேரளா.
11.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
வாசுகி
12.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
விழுப்புரம்
13.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
லிட்டில்பாய்
14.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
காபூல்
15.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
தியாகம்
16.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
கிரான்ஸ்டட்
17.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
நாங்கிங்
18.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
தைராக்ஸின்
19.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
பங்காளதேஷ்
20.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
கே.ஆர்.நாராயணன்
 தேசியக்கொடி இல்லாத நாடு எது?
விடை
:மசிடோனியா

 //////////////////


பூமிக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள தூரம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 86 மையில்கள்.

ஓவியர் லியோனார்டா டாவின்சி வரைந்த உலகப் புகழ் பெற்ற ஓவியம் மோனாலிசா. அப்பெண்மணி ஒரு பூ வியாபாரியின் மனைவி.
இலங்கையின் ஆங்கிலேயர் ஆட்சிக் கால பெயர் சிலோன். அது ஸ்ரீலங்கா என்று பெயர் மாற்றம் பெற்றது 1972 - ம் ஆண்டு மே மாதம் தான்.
வானும் கடலும் நீல நிறமாக இருப்பதற்கான காரணத்தை விளக்கியவர் நம் நாட்டு விஞ்ஞானி சி.வி.ராமன்.
கிரக்கணங்கள் தோன்றுவதற்கான காரணத்தை முதன் முதலில் வெளியிட்டவர் ஆரியப்பட்டா.
இந்திய தபால்த் துறையில் வி.பி.பி. முறை 1877 - ம் ஆண்டும், மணியாடர் முறை 1880 - ம் ஆண்டும், அஞ்சலக சேமிப்பு முறை 1882 - லும், பின் கோடு முறை 1972 - லும் அறிமுகமாயின.
 ///////////
 இன்டர்நெட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - வின்ட் ஸர்ப்

  கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்சேர்கி பிரின்

 விகிபீடியா வலைதளத்தை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்

  விகிபீடியா வலைதளத்தை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்

சி++ எனும் கணினி மொழியை வடிவமைத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்

MS-Dos எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிப் பாட்டர்ஸன்

ஆப்பிள் கணினியை துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்

 CD என்ற குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்

Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம் தான் VIRUS

Commonly operated machine purposely used for trade and Engineering research என்பதன் சுருக்கம் தான் COMPUTER

கணினி மவுஸை கண்டுபிடித்தவர் - டக்ளஸ் எங்கல்பர்ட்

 Uniform Resource Location என்பதன் சுருக்கம் தான் URL முகவரியாகும்

இங்கிலாந்தில் வெளியிடப்படும் தபால் தலைகளில் அந்நாட்டின் பெயர் பொறிக்கப்படுவதில்லை.

இந்தியாவில் அதிக தடவை பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய அமைச்சர் மொரார்ஜி தேசாய்.
வரலாற்றில் 38 நிமிடமே நீடித்த மிகச்சிறிய போர் 1896-ம் ஆண்டு பிரிட்டன் - சான்சிபார் இடையே நடந்தது.
முதன் முதலில் சூரியகிரகணம் பதிவு செய்யப்பட்டது.கி.மு. 721 -ல் பாபிலோனாவில்.
உலகில் முதன் முதலில் வேலை வாய்ப்பு அலுவலகங்களைத் தொடங்கிய நாடு அமெரிக்கா.


நெல்சன் மண்டேலா 27 வருடங்களாக சிறை வைக்கப்பட்ட இடம் ரோபன் தீவு.
அமெரிக்க அதிபராக ஒரே ஒரு நாள் பதவியில் இருந்தவர் டேவிட் ரைஸ் அட்கின்சன்.
இந்தியாவில் ரேசன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது வங்காள பெரும் பஞ்சத்தின் போது.
இந்தியாவைப் போல தாமரையை தேசிய மலராக கொண்ட நாடு எகிப்து.
உலகில் அதிக அளவு மீன் பிடிக்கும் நாடு ஜப்பான்.
குங்குமப்பூ ஈராக் நாட்டில் தான் அதிக அளவு விளைகிறது.
இந்தியாவில் ரயில் பாதைகளே இல்லாத மாநிலம் மணிப்பூர்.
கரடி பின்னோக்கி மரம் ஏறும் திறன் படைத்தது.
செவ்வாய் கிரகத்தில் வானம் ஆரஞ்சு நிரமாக இருக்கும்.
மாவீரன் அலெக்சாண்டர் மிகவும் குள்ளம். அவருக்கு ஒரு கண்ணின் நிறம் கறுப்பு. மறு கண்ணின் நிறம் நீலம்.

சுவிச்சர்லாந்து நாட்டின் மரணதண்டனை கிடையாது. 

 பள்ளிக் குழந்தைகளுக்கான நர்சரி பாடல்களை உலகிலேயே முதல் முறையகத் தொகுத்தவர் ’தாமஸ் பிளிட்’ என்பவர் ஆவார்.
விலங்குகளில் ஊமையானது ஒட்டகச்சிவிங்கி ஆகும். இதனால் சாதாரண ஒலியைக் கூட எழுப்பமுடியாது.
முள்ளம் பன்றியின் முதுகில் உள்ள முட்களின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம் ஆகும்.
பெருக்கலுக்கு ‘x’ என்ற குறியை முதன் முதலில் ‘ஆதிரட்’ என்ற மதகுரு பயன்படுத்தினார்.


ஞாயிற்றுக்கிழமையை முதன் முதலில் விடுமுறை நாளாக அறிவித்த ரோமானிய சக்கரவர்த்தி கான்ஸ்டான்டைன்.

பூமியின் நிலப்பரப்பில் இருப்பது போல கடலுக்குள்ளும் எரிமலைகள் உள்ளன. அவை வெடித்தால் பெரிய அலைகள் ஏற்ப்பட்டு கடற்கரை ஒரத்தில் உள்ள இடங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும்.



 இங்கிலாந்தை ஆண்ட மன்னர்களுள் ஒருவரான முதலாம் ஜார்ஜ் மன்னருக்கு ஆட்சி மொழியான ஆங்கிலம் பேசத் தெரியாது.
 

இணையற்ற வீரராக இத்தாலியை வென்ற மாவீரன் நெப்போலியனுக்கு பூனை என்றால் மிகவும் பயம்

Sunday, July 16, 2017

அஷ்டமி நவமியில் தொட்டது துலங்காது..ஏன் ????

மருவுதலும் மக்களின் மடத்தனமும்

அஷ்டமி நவமியில் தொட்டது துலங்காது என்பது இப்போது வழங்கப்படும் பழமொழி? உண்மையில் அது அஷ்டமி நவமி துஷ்டருக்கு துலங்காது ... என்பதே... இந்த பழமொழியே மேற்சொன்னவாறு மருவி வழக்கத்தில் உள்ளது.... இதன் அர்த்தம்தான் என்ன? உண்மையில் அஷ்டமி அன்று கிருஸ்ணனும் நவமி அன்று இராமனும் தோன்றி துஷ்டர்களை (கம்சன், இராவணன் முறையே) அளித்ததால்(புராணங்களின் படி ) அன்று துஷ்டருக்கு துலங்காது

Saturday, July 15, 2017

அஷ்டமி, நவமி என்றால் என்ன?

 அஷ்டமி, நவமி என்றால் என்ன?

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.
1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.
2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.
3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?
4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.
5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.
6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.
7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?
8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.
9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.
10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.
11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.
12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.
13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + த
என்றால் பத்து ஆகப் பதிமூன்று.
14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.
சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள். 
 
இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.
வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது(10 நாட்கள்).
மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது அல்ல(4நாட்கள்).
பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை(2 நாட்கள்).
ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?
என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?

Friday, July 14, 2017

இந்திய திருநாட்டின் பிரதமர்கள்

இந்திய திருநாட்டின் பிரதமர்கள் ஒரு பார்வை

 நரேந்திர மோடி                                           26-05-2014
( நரேந்திர தாமோதர தாஸ் மோதி.ஈஸ்வர்)


எண்
பெயர்
தொடக்கம்
முடிவு

1.

ஸ்ரீ ஜவகர்லால் நேரு

15-08-1947

27-05-1964

2.

ஸ்ரீ குல்ஜரிலால் நந்தா

27-05-1964

09-06-1964

3.

ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி

09-06-1964

11-01-1966

4.

ஸ்ரீ குல்ஜரிலால் நந்தா

11-01-1966

24-01-1966

5.

இந்திரா காந்தி

24-01-1966

24-05-1977

6.

ஸ்ரீ மொரார்ஜி தேசாய்

24-03-1977

28-07-1979

7.

ஸ்ரீ சரண் சிங்

28-07-1979

14-01-1980

8.

ஸ்ரீ இந்திரா காந்தி

14-01-1980

31-10-1984

9.

ஸ்ரீ ராஜீவ் காந்தி

31-10-1984

02-12-1989

10.

ஸ்ரீ வி. பி. சிங்

02-12-1989

10-11-1990

11.

ஸ்ரீ சந்திரசேகர்

10-11-1990

21-06-1991

12.

ஸ்ரீ பி. வி. நரசிம்ம ராவ்

21-06-1991

16-05-1996

13.

ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய்

16-05-1996

01-06-1996

14.

ஸ்ரீ தேவ கௌடா

01-06-1996

21-05-1997

15.

ஸ்ரீ ஐ. கே. குஜரால்

21-05-1997

19-03-1998

16.

ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய்

19-03-1998

22-05-2004

17.

ஸ்ரீ மன்மோகன் சிங்

22-05-2004

        26-05-2014

Thursday, July 6, 2017

ஒரே கிளிக் ..தமிழர்கள் வாழ்வியல் ..அறிய..

வாழ்வியல் என்றால்  என்ன?  

 ஒவ்வொரு நபரிடமும் இந்த மண் சார்ந்த,
 மரம் செடி, கொடி, உயிர் மற்றும் 
இயற்கை சார்ந்த அனுபவங்கள் 
வாழ்வியலாகப் படிந்துள்ளன
ஆம்லெட் போடுவது எப்படி என இரண்டு பக்கத்தில் எழுதி 
ஒரு மாணவியிடம் கொடுங்கள்,
 மற்றொரு மாணவிக்கு நேராகச் 
செய்து காட்டுங்கள்.  
நேராகப் பார்த்துப் பழகிய மாணவி 1 நிமிடத்தில்
 100 தடவை செய்யச் சொன்னாலும் 
நேர்த்தியாகப் போட்டுக் கொடுப்பாள்..
படித்துப் பழகிய மாணவி 
100 தடவைக்கு 500 கேள்விகள் கேட்பாள்
 வாழ்வியல் தெரிந்தவனுக்கு வாழ்க்கை எளிது.
/////////////////////// 
 ஐம்பெரும் பூதங்கள்::
ஐம்பெரும் பூதங்கள் ஐம்புலன்களாக முகத்தில் உள்ளது.
 ஐம்புலன்களும் ஐந்து முக்கிய உள்ளுறுப்புகளுடன் இணைந்துள்ளன.  காதின் வடிவமும் சிறுநீரகத்தின் வடிவமும் ஒன்றுதான்.  மூக்கின் வடிவமும் நுரையீரலின் வடிவமும் ஒன்றுதான்.  நாக்கின் வடிவமும் இதயத்தின் வடிவமும் ஒன்றுதான்.  கண்ணின் வடிவமும் கல்லீரலின் வடிவமும் ஒன்றுதான்.  உதட்டின் வடிவமும் இரைப்பையின் வடிவமும் ஒன்றுதான்.  
காலையில் எழும் போது உடம்பு கனமாகத் தோன்றாமல் இருந்தாலே நலமுடன் இருக்கிறோம் எனக் கருதலாம்.
இதைப் போன்றே கட்லை விரல் நெருப்பு, ஆட்காட்டி விரல் காற்று, நடுவிரல் வானம், மோதிர விரல்  நிலம், சுண்டுவிரல் நீர் என ஐந்து விரல்களும் ஐம்பூதங்களின் தொடர்புள்ளவை. 
 சின்,  ஞான முத்திரை கட்டை, ஆட்காட்டி விரல் நுனிகள் தொடுதலாகும். இதயத்திலிருந்து இரத்தம், நுரையீரலுக்கு வந்து உயிர்வாளியை (ஆக்ஸிஜன்) எடுத்துக் கொண்டு மூளைக்குச் செல்வதால் மனக்குவிப்பு, நினைவாற்றல், புரிந்துகொள்ளல் அதிகரிக்கும். 
ஆற்றலை அதிகரிக்க ஞான முத்திரை.  
குறைக்க வாயு முத்திரை.
கட்டை விரலால் ஆட்காட்டி விரலை மடக்கிப்பிடிப்பது,
தொடர்ச்சியான இரத்த நாளங்களும், நரம்பு மண்டலமும் அனைத்து உறுப்புக்களையும் இணைத்துள்ளன.  அவற்றின் முனைகள் கைகளிலும், கால்களிலும் முடிகின்றன. 
 சூஜோக், ரெப்லக்ஸாலஜி அவற்றை முறைப்படுத்தி வகைப்படுத்தியுள்ளது.  வலி வந்தவுடன் அந்த இடத்தைத் அழுத்திச் சரி செய்யும் முயற்சி விலங்குகளிடம் கூட உண்டு.
  நாய், பூனை, ஆடு, மாடு நிலத்தில் படுத்துப் புரள்வதைப் பார்த்திருப்பீர்கள்.  ஒரே பாணியில் அதிக நேரம் இருந்தால் இரத்த நாளமும், நரம்பு மண்டலமும் செயலற்ற நிலைக்குச் சென்றுவிடும்.  அதைச் சரி செய்யும் செயலே இது.  இதுதான் அக்குபங்சர். 
வலியுள்ள இடத்தை தொடுதல் மூலம் குணப்படுத்த முடியும்.  வர்மம் இதில் சற்று வேறுபட்டது.  வலி நீக்கலில் அக்குபங்சரும், வர்மமும் மிகச் சிறந்த மருத்துவ முறைகள்.
முத்திரை, யோகா, தியானம், மெஸ்மரிசம், ஹிப்னாடிசம், ப்ராணிக் ஹீலிங், வண்ணம், மணம், மலர், சிரிப்பு, வர்மம், அக்கு என மருந்தற்ற மருத்துவ முறைகள் 100க்கும் மேலுள்ளது.  செலவு குறைவான பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறைகள் அவை. 
///////////////////////////////
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்::

ஐம்பெரும் பூதங்கள் ஐம்புலன்களாக முகத்தில் உள்ளது.  
ஐம்புலன்களும் ஐந்து முக்கிய உள்ளுறுப்புகளுடன் இணைந்துள்ளன. 
 அவைகளில் ஏற்படும் ஆற்றல் குறைவோ அதிகமோ நோயாகிறது. 
 ஐம்புலன்கள் வெளிரினால் ஆற்றல் குறைவு என்றும் சிவப்போ, கருப்போ காட்டினால் ஆற்றல் மிகுதி என்பதை மருத்துவர்கள் அறிவர்.  
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் பழமொழி இதைக் குறிப்பதே. 
////////////////////////////////// 
 தொல்காப்பியம். :

5000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு இலக்கண நூல் தொல்காப்பியம். 
 6 அறிவுகளையும் அவை சார்ந்த உயிரினங்கள் பற்றிய பாடல் அதில் உள்ளது.
இதைத் தான் சட்டமுனி சித்தர் அண்டத்தில் ( பிரபஞ்சத்தில்) உள்ளது – பிண்டத்தில் (உடலில்) உள்ளது  என்று பாடியுள்ளார்.  
பூதங்களின் கூட்டுதான் உறுப்பாக, உணர்வாக, விளைவாக, வெளிப்பாடாக, குணமாகப் பரிணமிப்பதை யூகிசிந்தாமணிப் பாடல் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்கியுள்ளது.  அமாவாசை, பெளர்ணமி நாட்களில் கடல் சீற்றத்துடன் இருப்பதும் மன நோயாளிகள் மன உணர்வு மிகுந்து இருப்பதையும் நாம் அறிவோம்.
/////////////////////////// 
 பருவங்கள்:

பருவங்களை 6 ஆகக் கொண்டவர்கள் தமிழர்களே.  
அதனால் தான் பள்ளிகளில் தமிழாசிரியர் பருவங்கள் 6 எனக்கற்பிப்பார்.  
ஆங்கில ஆசிரியர் 4 சீசன்ஸ் எனக் கற்பிப்பார்.  
தாய்மொழியில் குழந்தை கற்றிருந்தால் ஏன் என்று கேட்டிருக்கும். 
புரிதல் தாய்மொழியின் தனிச்சிறப்பு. 
 மனப்பாடம் செய்யும் குழந்தைகளிடம் வாழ்வியல் பக்குவம் வளர முடியாமைக்கு மொழிச் சிக்கலே காரணம். 
 முதல் மூன்று வகுப்பு வரை கல்வியில் குழந்தையின் முன்னேற்றத்தைப் பாருங்கள்.  பின் தங்கிய பாதியை ட்யூசன் அது இது என அலைக்கழிக்காமல் தாய் மொழிக் கல்விக்கு மாற்றினால் மன அழுத்தம் குறையும்.  வாழ்வியல் பாங்கு வளரும்.
////////////////////////////
 :சுழற்சிதான் இயக்கத்தின் அடிப்படை:
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை 
என்கிறார் வள்ளுவர்.

சுழற்சிதான் இயக்கத்தின் அடிப்படை. 
சூரியனைச் சுற்றிக் கோள்கள் நீள்வட்ட வடிவில் சுற்றுகின்றன.  ஒரு ஆண்டில் இருமுறை அருகில் வருவதும், இருமுறை விலகிச் செல்வதும் நீள்வட்டப் பாதையின் தன்மை.  
அருகில் வரும்போது அதிக வெப்பத்தையும், விலகிச் செல்லும் போது குறைந்த வெப்பத்தையும் பூமி பெருகிறது.   பூமி தன்னைத்தானே சுற்றுவதால் பகல், இரவு உண்டகிறது.  பகலில் அதிக வெப்பத்தையும், இரவில் குறைந்த வெப்பத்தையும் நாம் பெருகிறோம்.
காற்றும், நீரும் வெப்பத்தால் இலேசாகும் தன்மை கொண்டவை.  அவை இலேசாகும் போது அடர்த்தி குறைந்து விரிவடைவதால் வெப்பம் குறைவான பகுதியை நோக்கி இயல்பாகவே செல்லும். 
 இதனால் பூமியின் மேல்புரத்தில் வடகிழக்கு, தென் மேற்குப் பருவக் காற்றுகளும், கடலில் எல்நினோ, லாநினோ, நீரோட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. தொல்தமிழர்கள் இந்த நான்கையும் நன்கறிந்திருந்தனர்.  
ஆமை தான் கடல் நீரோட்டத்தைக் கற்பித்த விலங்கு.  
அதனால் தான் பண்டைத் தமிழர்கள் நாவாய் எனும் பெரிய படகுகள் மூலம் கடல் வணிகம் செய்து எகிப்து, சுமேரிய மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
 நீர்ச் சுழற்சிதான் இடி, மின்னல், மழை, வெள்ளம், சுனாமி என்றும் 
காற்றுச் சுழற்சிதான் புயல், சூறாவளி, எரிமலை, காட்டுத்தீ எனப் பேரிடர்களாக உலகையே அழித்தொழிக்கிறது.

உயிரினங்கள் நீரின்றி 4 நாட்கள் வாழ முடியும்.  
காற்றின்றி 4 நிமிடம் தான் வாழ முடியும்.  
இயற்கையின் இந்த நான்கு நிமிட உயிர்ப்பிச்சையில் வாழும் மனிதன் தான், தனது என்ற பேராசையால் நாள்தோறும் இயற்கையைக் கொள்ளையடிக்கிறான். 

மூன்றடி வெள்ளம் வரும் என மூன்று நாளுக்கு முன்னரே உணர்ந்து அதற்கு மேலே உணவைச் சேமிக்கும் 2- அறிவுள்ள எறும்பை வாழவைப்பது
இயற்கையறிவு எனும் வாழ்வியல்
 இன்றைய நமது நிலை எப்போது வெடிக்கும் என எதிர் நோக்கும் 
எரிமலை மேல்.  அவரவர் உயிர் அவரவர் பொறுப்பு என உணர்ந்து 
எறும்பைப் போல பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்
  
///////////////////