வாழ்வியல் என்றால் என்ன?
ஒவ்வொரு நபரிடமும் இந்த மண் சார்ந்த,
மரம் செடி, கொடி, உயிர் மற்றும்
இயற்கை சார்ந்த அனுபவங்கள்
வாழ்வியலாகப் படிந்துள்ளன
ஆம்லெட் போடுவது எப்படி என இரண்டு பக்கத்தில் எழுதி
ஒரு மாணவியிடம் கொடுங்கள்,
மற்றொரு மாணவிக்கு நேராகச்
செய்து காட்டுங்கள்.
நேராகப் பார்த்துப் பழகிய மாணவி 1 நிமிடத்தில்
100 தடவை செய்யச் சொன்னாலும்
நேர்த்தியாகப் போட்டுக் கொடுப்பாள்..
படித்துப் பழகிய மாணவி
100 தடவைக்கு 500 கேள்விகள் கேட்பாள்
வாழ்வியல் தெரிந்தவனுக்கு வாழ்க்கை எளிது.
///////////////////////
ஐம்பெரும் பூதங்கள்::
ஐம்பெரும் பூதங்கள் ஐம்புலன்களாக முகத்தில் உள்ளது.
ஐம்புலன்களும் ஐந்து முக்கிய உள்ளுறுப்புகளுடன் இணைந்துள்ளன. காதின் வடிவமும் சிறுநீரகத்தின் வடிவமும் ஒன்றுதான். மூக்கின் வடிவமும் நுரையீரலின் வடிவமும் ஒன்றுதான். நாக்கின் வடிவமும் இதயத்தின் வடிவமும் ஒன்றுதான். கண்ணின் வடிவமும் கல்லீரலின் வடிவமும் ஒன்றுதான். உதட்டின் வடிவமும் இரைப்பையின் வடிவமும் ஒன்றுதான்.
காலையில் எழும் போது உடம்பு கனமாகத் தோன்றாமல் இருந்தாலே நலமுடன் இருக்கிறோம் எனக் கருதலாம்.
இதைப் போன்றே கட்லை விரல் நெருப்பு, ஆட்காட்டி விரல் காற்று, நடுவிரல் வானம், மோதிர விரல் நிலம், சுண்டுவிரல் நீர் என ஐந்து விரல்களும் ஐம்பூதங்களின் தொடர்புள்ளவை.
சின், ஞான முத்திரை கட்டை, ஆட்காட்டி விரல் நுனிகள் தொடுதலாகும். இதயத்திலிருந்து இரத்தம், நுரையீரலுக்கு வந்து உயிர்வாளியை (ஆக்ஸிஜன்) எடுத்துக் கொண்டு மூளைக்குச் செல்வதால் மனக்குவிப்பு, நினைவாற்றல், புரிந்துகொள்ளல் அதிகரிக்கும்.
ஆற்றலை அதிகரிக்க ஞான முத்திரை.
குறைக்க வாயு முத்திரை.
கட்டை விரலால் ஆட்காட்டி விரலை மடக்கிப்பிடிப்பது,
தொடர்ச்சியான இரத்த நாளங்களும், நரம்பு மண்டலமும் அனைத்து உறுப்புக்களையும் இணைத்துள்ளன. அவற்றின் முனைகள் கைகளிலும், கால்களிலும் முடிகின்றன.
சூஜோக், ரெப்லக்ஸாலஜி அவற்றை முறைப்படுத்தி வகைப்படுத்தியுள்ளது. வலி வந்தவுடன் அந்த இடத்தைத் அழுத்திச் சரி செய்யும் முயற்சி விலங்குகளிடம் கூட உண்டு.
நாய், பூனை, ஆடு, மாடு நிலத்தில் படுத்துப் புரள்வதைப் பார்த்திருப்பீர்கள். ஒரே பாணியில் அதிக நேரம் இருந்தால் இரத்த நாளமும், நரம்பு மண்டலமும் செயலற்ற நிலைக்குச் சென்றுவிடும். அதைச் சரி செய்யும் செயலே இது. இதுதான் அக்குபங்சர்.
வலியுள்ள இடத்தை தொடுதல் மூலம் குணப்படுத்த முடியும். வர்மம் இதில் சற்று வேறுபட்டது. வலி நீக்கலில் அக்குபங்சரும், வர்மமும் மிகச் சிறந்த மருத்துவ முறைகள்.
முத்திரை, யோகா, தியானம், மெஸ்மரிசம், ஹிப்னாடிசம், ப்ராணிக் ஹீலிங், வண்ணம், மணம், மலர், சிரிப்பு, வர்மம், அக்கு என மருந்தற்ற மருத்துவ முறைகள் 100க்கும் மேலுள்ளது. செலவு குறைவான பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறைகள் அவை.
///////////////////////////////
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்::
ஐம்புலன்களும் ஐந்து முக்கிய உள்ளுறுப்புகளுடன் இணைந்துள்ளன.
அவைகளில் ஏற்படும் ஆற்றல் குறைவோ அதிகமோ நோயாகிறது.
ஐம்புலன்கள் வெளிரினால் ஆற்றல் குறைவு என்றும் சிவப்போ, கருப்போ காட்டினால் ஆற்றல் மிகுதி என்பதை மருத்துவர்கள் அறிவர்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் பழமொழி இதைக் குறிப்பதே.
//////////////////////////////////
தொல்காப்பியம். :
5000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு இலக்கண நூல் தொல்காப்பியம்.
6 அறிவுகளையும் அவை சார்ந்த உயிரினங்கள் பற்றிய பாடல் அதில் உள்ளது.
இதைத் தான் சட்டமுனி சித்தர் அண்டத்தில் ( பிரபஞ்சத்தில்) உள்ளது – பிண்டத்தில் (உடலில்) உள்ளது என்று பாடியுள்ளார்.
பூதங்களின் கூட்டுதான் உறுப்பாக, உணர்வாக, விளைவாக, வெளிப்பாடாக, குணமாகப் பரிணமிப்பதை யூகிசிந்தாமணிப் பாடல் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்கியுள்ளது. அமாவாசை, பெளர்ணமி நாட்களில் கடல் சீற்றத்துடன் இருப்பதும் மன நோயாளிகள் மன உணர்வு மிகுந்து இருப்பதையும் நாம் அறிவோம்.
///////////////////////////
பருவங்கள்:
பருவங்கள்:
பருவங்களை 6 ஆகக் கொண்டவர்கள் தமிழர்களே.
அதனால் தான் பள்ளிகளில் தமிழாசிரியர் பருவங்கள் 6 எனக்கற்பிப்பார்.
ஆங்கில ஆசிரியர் 4 சீசன்ஸ் எனக் கற்பிப்பார்.
தாய்மொழியில் குழந்தை கற்றிருந்தால் ஏன் என்று கேட்டிருக்கும்.
புரிதல் தாய்மொழியின் தனிச்சிறப்பு.
மனப்பாடம் செய்யும் குழந்தைகளிடம் வாழ்வியல் பக்குவம் வளர முடியாமைக்கு மொழிச் சிக்கலே காரணம்.
முதல் மூன்று வகுப்பு வரை கல்வியில் குழந்தையின் முன்னேற்றத்தைப் பாருங்கள். பின் தங்கிய பாதியை ட்யூசன் அது இது என அலைக்கழிக்காமல் தாய் மொழிக் கல்விக்கு மாற்றினால் மன அழுத்தம் குறையும். வாழ்வியல் பாங்கு வளரும்.
////////////////////////////
:சுழற்சிதான் இயக்கத்தின் அடிப்படை:
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை
என்கிறார் வள்ளுவர்.
சுழற்சிதான் இயக்கத்தின் அடிப்படை.
சூரியனைச் சுற்றிக் கோள்கள் நீள்வட்ட வடிவில் சுற்றுகின்றன. ஒரு ஆண்டில் இருமுறை அருகில் வருவதும், இருமுறை விலகிச் செல்வதும் நீள்வட்டப் பாதையின் தன்மை.
அருகில் வரும்போது அதிக வெப்பத்தையும், விலகிச் செல்லும் போது குறைந்த வெப்பத்தையும் பூமி பெருகிறது. பூமி தன்னைத்தானே சுற்றுவதால் பகல், இரவு உண்டகிறது. பகலில் அதிக வெப்பத்தையும், இரவில் குறைந்த வெப்பத்தையும் நாம் பெருகிறோம்.
காற்றும், நீரும் வெப்பத்தால் இலேசாகும் தன்மை கொண்டவை. அவை இலேசாகும் போது அடர்த்தி குறைந்து விரிவடைவதால் வெப்பம் குறைவான பகுதியை நோக்கி இயல்பாகவே செல்லும்.
இதனால் பூமியின் மேல்புரத்தில் வடகிழக்கு, தென் மேற்குப் பருவக் காற்றுகளும், கடலில் எல்நினோ, லாநினோ, நீரோட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. தொல்தமிழர்கள் இந்த நான்கையும் நன்கறிந்திருந்தனர்.
ஆமை தான் கடல் நீரோட்டத்தைக் கற்பித்த விலங்கு.
அதனால் தான் பண்டைத் தமிழர்கள் நாவாய் எனும் பெரிய படகுகள் மூலம் கடல் வணிகம் செய்து எகிப்து, சுமேரிய மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
நீர்ச் சுழற்சிதான் இடி, மின்னல், மழை, வெள்ளம், சுனாமி என்றும்
காற்றுச் சுழற்சிதான் புயல், சூறாவளி, எரிமலை, காட்டுத்தீ எனப் பேரிடர்களாக உலகையே அழித்தொழிக்கிறது.
உயிரினங்கள் நீரின்றி 4 நாட்கள் வாழ முடியும்.
காற்றின்றி 4 நிமிடம் தான் வாழ முடியும்.
இயற்கையின் இந்த நான்கு நிமிட உயிர்ப்பிச்சையில் வாழும் மனிதன் தான், தனது என்ற பேராசையால் நாள்தோறும் இயற்கையைக் கொள்ளையடிக்கிறான்.
மூன்றடி வெள்ளம் வரும் என மூன்று நாளுக்கு முன்னரே உணர்ந்து அதற்கு மேலே உணவைச் சேமிக்கும் 2- அறிவுள்ள எறும்பை வாழவைப்பது
இயற்கையறிவு எனும் வாழ்வியல்
இன்றைய நமது நிலை எப்போது வெடிக்கும் என எதிர் நோக்கும்
எரிமலை மேல். அவரவர் உயிர் அவரவர் பொறுப்பு என உணர்ந்து
எறும்பைப் போல பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்
///////////////////
No comments:
Post a Comment