Wednesday, October 4, 2017

மனு தர்ம சாஸ்திரங்களில் சில....

இந்துத்துவ புனித  
மனு தர்ம சாஸ்திரங்களில் சில....

1. "பிராமண குலத்தில் பிறந்தவன் 
ஆசாரமில்லாதவனாயினும்,
 அவன் நீதி செலுத்தலாம்.
 சூத்திரன் ஒரு போதும் நீதி 
செலுத்தலாகாது"
 (*அத்தியாயம் 8. சுலோகம் 20.*)

2. "சூத்திரர் நிறைந்த தேசம் 
எப்பொழுதும் 
வறுமை யுடையதாயிருக்கும்" 
(அ.8. சு.22.)

3. "சூத்திரனாகவும், 
மிலேச்சனாகவும், பன்றியாகவும்
 பிறப்பது தமோ
 குணத்தின் கதி" (அ.8.சு. 22.)

4. "ஸ்தீரிகள் புணர்ச்சி 
விஷயத்திலும், பிராமணரைக் 
காப்பாற்றும் விஷயத்திலும்
 பொய் சொன்னால்
 குற்றமில்லை" (அ.8. சு.112.)

5. "நீதி ஸ்தலங்களில் 
பிரமாணம் 
செய்ய வேண்டிய 
பிராமணனை
 சத்தியமாகச் 
சொல்லுகிறேன்
 என்று சொல்ல செய்ய
 வேண்டும். 
பிரமாணம் செய்ய 
வேண்டிய 
சூத்திரனை 
பழுக்கக் காய்ச்சின
 மழுவை 
எடுக்கச் 
சொல்ல வேண்டும்; 
அல்லது
தண்ணீரில்
 அமிழ்த்த வேண்டும்.
 சூத்திரனுக்கு
 கை வேகாமலும்,
தண்ணீரில் 
அமிழ்த்தியதால்
 உயிர் போகாமலும் 
இருந்தால் 
அவன் சொன்னது
 சத்தியம்
 என உணர வேண்டும்" 
(அ. 8. சு. 113115.)

6. "சூத்திரன் பிராமணனைத்
 திட்டினால் அவனது நாக்கையறுக்க 
வேண்டும்" (அ.8. சு. 270.)

7. "சூத்திரன் பிராமணர்களின் 
பெயர், ஜாதி இவைகளை சொல்லித்
 திட்டினால் 10 அங்குல நீளமுள்ள
 இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய 
எரிய அவன் வாயில் 
வைக்க வேண்டும்" (அ.8. சு.271.)

8. "பிராமணனைப் பார்த்து
, "நீ இதைச் செய்ய வேண்டும், 
என்று சொல்லுகிற சூத்திரன் 
வாயிலும் காதிலும் எண்ணெயைக்
காய்ச்சி ஊற்ற வேண்டும்" (அ.8. சு.272.)

9. "சூத்திரன் பிராமணனுடன்
 ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் 
அவனது இடுப்பில் சூடு போட்டாவது
 அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது 
அறுத்தாவது ஊரை விட்டுத் 
துரத்த வேண்டும்" (அ.8. சு.281.)

10. "பிராமணனைக் காப்பாற்றும் 
பொருட்டு 
பிராமணரல்லாதாரைக்
 கொன்றவனுக்கு 
பாவமில்லை" (அ.8. சு.349.)

11. "சூத்திரன் பிராமணப் பெண்ணைப்
 புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும்
 வரையும் தண்டிக்க வேண்டும்."
"பிராமணன் கொலைக் குற்றம்
 செய்தாலும் அவனைக் கொல்லாமலும், 
எத்தகைய தண்டனைக்கும் 
ஆளாக்காமலும் பொருளைக் 
கொடுத்து 
அனுப்பிவிடவேண்டும்." (அ.8. சு.380.)

12. "அரசன் சூத்திரனை பிராமணர்
 முதலிய உயர்ந்த சாதிக்கு பணி விடை
 செய்யும்படி கட்டளையிட வேண்டும். 
சூத்திரன் மறுத்தால்
 அவனைத் தண்டிக்க வேண்டும்
." (அ. 8. சு.410.)

13. "பிராமணன் கூலி கொடாமலே 
சூத்திரனிடம் வேலை வாங்கலாம்
; ஏனென்றால் பிராமணனுக்குத் 
தொண்டு
 செய்யவே கடவுளால் சூத்திரன் 
படைக்கப் பட்டிருக்கிறான்" (அ. 8. சு.413.)

14. "பிராமணன் சந்தேகமின்றி
 சூத்திரன் தேடிய பொருளைக்
 கைப்பற்றலாம். ஏனென்றால்
 அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் 
பொருளுக்கும் உடையவனாக
 மாட்டான்" (அ. 8. சு.417.)

15. "சூத்திரன் பொருள் சம்பாதித்தால், 
அது அவனுடைய எஜமானனாகிய
 பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி 
சம்பாதித்தவனுக்குச் சேராது" (அ. 9. சு.416.)

16. "பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு
 பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு
 தந்தை சொத்தில் பங்கில்லை" (அ. 8. சு.155.)

17. "பிராமணன் பொருளை
 அபகரித்த சூத்திரனை சித்தரவதை
 செய்து கொல்ல வேண்டும். ஆனால் 
சூத்திரனுடைய பொருளை பிராமணன் 
தம் இஷ்டப்படி 
கொள்ளையிடலாம்." (அ.9. சு.248.)

18. "பிராமணன் மூடனானாலும் 
அவனே மேலானதெய்வம்" (அ. 9. சு. 317.)

19. "பிராமணர்கள் இழி 
தொழில்களில்
 ஈடுபட்டிருந்தாலும்
 பூஜிக்கத்தக்கவர்கள் 
ஆவர்கள்." (அ. 9. சு.319.)

20. "பிராமணனிடமிருந்து 
சத்திரியன் உண்டானவனாதலால் 
அவன் பிராமணனுக்கு துன்பஞ் 
செய்தால் 
அவனை சூன்னியம் செய்து 
ஒழிக்க வேண்டும்." (அ.9 சு. 320.)

21. "சூத்திரனுக்கு பிராமணப்
 பணி விடை ஒன்றே பயன் 
தருவதாகும். 
அவன் பிராமணனில்லாத
விடத்தில்
 க்ஷத்திரியனுக்கும்,
 க்ஷத்திரியனில்லா விடத்தில் 
வைசியனுக்கும் தொண்டு 
செய்ய வேண்டும்.
 அதிகமான செல்வமும், பசுக்களும்
 வைத்திருக்கிறவன், பிராமணன்
 கேட்டுக் கொடுக்காவிட்டால், 
களவு செய்தாவது, பலாத்காரம் 
செய்தாவது அவற்றை பிராமணன் 
எடுத்துக் கொள்ள 
உரிமையுண்டு." (அ.11. சு.12.)

22. "சூத்திரன் வீட்டிலிருந்து
 கேளாமலும் யோசிக்காமலும்
 தேவையான பொருளைப் பிராமணன் 
பலாத்காரத்தினால்
 கொள்ளையிடலாம்." )அ.11. சு.13.)

23. "யோக்கியமான அரசன்
 இவ்விதம் திருடிய பிராமணனைக்
 தண்டிக்கக் கூடாது." (அ.11. சு.20.)

24. "பெண்களையும் சூத்திரரையும்
 கொல்லுவது மிகவும்
 குறைந்த பாவமாகும்." (அ.11. சு.66.)

25. "ஒரு பிராமணன் தவளையைக் 
கொன்றால் செய்ய வேண்டிய
 பிராயச்சித்தம்
 ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் 
கொன்றாலும் 
செய்ய வேண்டும்." (அ.11. சு.131.)

25(அ). "அதுவும் முடியாவிடில்
 வருண மந்திரத்தை
 3 நாள் ஜெபித்தால்
 போதுமானது." (அ.11. சு.132.)

26. "க்ஷத்திரியன் இந் நூலில்
 (மநுதர்ம சாஸ்திரத்தில்) 
சொல்லப்பட்டபடி
 ராஜ்யபாரம் பண்ணுவதே 
தவமாகும்.
 சூத்திரன் பிராமண பணி விடை 
செய்வதே தவமாகும்." (அ.11 சு.285.)

27. "சூத்திரன் பிராமணனுடைய
 தொழிலைச் செய்தாலும் சூத்திரனே 
யாவன். பிராமணன் சூத்திரனுடைய 
தொழிலைச் செய்யின்
 பிராமணனேயாவன்.
 ஏனெனில் கடவுள் அப்படியே 
நிச்சயம் செய்துவிட்டார்." (அ.10. சு.75)

28. "பிராமணரல்லாதவன் 
உயர்குலத்தோருடைய தொழிலைச்
 செய்தால் அரசன் அவனது பொருள்
 முழுவதையும் பிடுங்கிக் கொண்டு 
அவனை நாட்டை விட்டுத்
 துரத்திவிட வேண்டும்." (அ.10. சு.96.)

29. "சூத்திரன் இம்மைக்கும்,
 மோட்சத்திற்கும் பிராமணனையே 
தொழ வேண்டும்." (அ.10. சு.96.)

30. "பிராமணன் உண்டு மிகுந்த 
எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த
 ஆடையும், கெட்டுப் போன
 தானியமும், 
சூத்திரனுடைய ஜீவனத்துக்கு 
கொடுக்கப்படும்." (அ.10. சு.125.)

31. "சூத்திரன் எவ்வளவு 
திறமையுடையவனாகயிருந்தாலும்
 கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது.
 சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் 
அது பிராமணனுக்கு
 துன்பமாய் முடியும்." (அ.10. சு.129)

32. "மனுவால் எந்த வருணத்தாருக்கு 
இந்த மனுதர்ம சாஸ்திரத்தால்
 என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ,
 அதுவே வேத சம்மதமாகும். 
ஏனென்றால், அவர் வேதங்களை 
நன்றாய் உணர்ந்தவர்." (அ.2. சு.7.)

இன்னும் இதைப் போன்று 
ஆயிரக்கணக்கான அநீதியானதும்,
 ஒரு சாராருக்கு நன்மையும்,
 மறுசாரருக்குக் 
கொடுமையும் செய்வதுமான
 விதிகள் மனுதர்மத்தில்
 நிறைந்திருக்கின்றன....

ஆகையால் தோழர்களே...
இந்நூலை
"மனுதர்மம்"
என்று கூறுவதா?
அல்லது
"மனு அதர்மம்"
என்று கூறுவதா?
# முடிந்தால்  சிந்திக்கவும். ...
////////////////////////////////////

Tuesday, October 3, 2017

திவசம் - சொல்லப்படும் மந்திரத்தின் அர்த்தம்

திவசம் செய்கின்ற போது சொல்லப்படும்
மந்திரத்தின் அர்த்தம் என்ன?

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண…

இந்த மத்திரத்தின் அர்த்தம்:

என்னுடைய அம்மா பத்தினியாக
 இல்லாது இருந்து, என்னை வேறு 
ஒருவருக்கு பெற்றிருந்தால், 
இந்த திவசத்திற்கு உரிமை கோரி 
என்னுடைய உண்மையான
 தகப்பனார் வருவார். அப்படி இல்லாது 
என்னுடைய  அம்மாவின் கணவரே
இந்த திவசத்தை  பெறட்டும். இதுதான் 
இந்த மந்திரத்தின்  அர்த்தம். அதாவது திதி 
கொடுப்பவனுடைய
 தாய் சில வேளைகளில் சோரம் போய்
 வேறு யாருக்காவது அவனைப்
 பெற்றிருக்கலாம் என்று இந்த 
மந்திரம் சொல்கிறது. உன்னுடைய 
அப்பா வேறு யாராவதாக இருக்கலாம்,
 நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம் 
என்று இந்த “புனித” மந்திரம் சொல்கிறது.

தந்தைக்கு திவசம் செய்கின்ற 
போதுதான் இப்படி என்று நினத்து 
விடாதீர்கள். தாய்க்கு செய்கின்ற 
திவசத்திலும்  வஞ்சகம் வைக்கவில்லை. 
அம்மாவிற்கு திவசம்  செய்கின்ற 
போது சொல்கின்ற  ஒரு மந்திரம் இது

என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம….

என்னுடைய அம்மா யாருடன்
 படுத்த என்னைப் பெற்றாளோ 
தெரியவில்லை. ஒரு
 நம்பிக்கையில்தான் 
அவளை என்னுடைய அப்பாவின்
 மனைவியாகக் கருதுகின்றேன். 
அந்த அம்மாவிற்கு இந்த திவசம்
போய் சேரட்டும்.

நம்மை பெற்றெடுத்த தாய்
 தந்தையரை இழிவுபடுத்தும் 
இப்படிபட்ட மந்திரங்களையா
 நாம் சொல்லிவருகிறோம் !

மூதாதையர்களின் மூட
 நம்பிக்கையை
 பின்பற்றுவதை விட்டுவிட்டு 
சுயமாக சிந்தித்து செயல்படுவோம்.
/////////////////////////////

Monday, October 2, 2017

மேட்டுர் அணை-வரலாறு

 மேட்டுர் அணை வரலாறு நமக்கு
அறிந்ததும் அறியாததும் :

மேட்டுர் அணை வரலாறு :
நமக்கும் நம்தலைமுறைக்கும் சம்பந்தமே
இல்லாதமண் இது என்று தெரிந்தும்
ஒருவர்தமிழகம் செழிக்கும்
 வண்ணம்பிரம்மாண்டமான
மேட்டூர் அணையை
கட்டி கொடுத்துச் சென்றுள்ளார்
 ராயல்என்ஜீனியர்  
கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ்.
இன்றைக்கு 48 ஆயிரம் கோடி
 ரூபாய்கொட்டினால் கூட கட்ட
முடியாதபிரம்மாண்டத்தை
கொண்டுள்ள இந்த
அணையை அன்றைக்கு
 4 கோடியே 80லட்சம் ரூபாய்
திட்டத்தில் கட்டி
முடித்துள்ளனர்.

மலைக்க வைக்கும்
மாபெரும் திட்டம். யாவரும்
வியக்கும்மதி நுட்பம். மேட்டூர்
 அணையைஇதுவரை இரண்டு
 முறை மின்னல்தாக்கியது.

 இருப்பினும் அணைக்கு
எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
தமிழகத்தில் காவிரி கரையோரமாக
நிறைய நிலங்களும், விவசாயம்
செய்யக்கூடிய ஆட்களும் இருந்தும்
 போதியநீர்ப்பாசன வசதி இல்லாததால்
 விவசாயம்
சரிவர செய்ய முடியவில்லை.

 இதைஉணர்ந்த ஆங்கிலேயே அரசு
காவிரியின் குறுக்கே அணை கட்ட
முடிவு செய்து இடத்தை தேடியது.

15 ஆண்டுகள் கழித்து அன்றைய
ஆங்கிலேய அரசின் சென்னை
மாகாணகவர்னர் ஸ்டான்லி
காவிரியின்குறுக்கே அணைக்
கட்ட உத்தரவிட்டார்.

இந்த உத்திரவை போட்ட
 கவர்னர்
ஸ்டான்லியின் பெயரால்
 மேட்டூர்
அணை இப்போது ஸ்டான்லி
 நீர் தேக்கம்என்றும் அழைக்கப்படுகிது.

 இந்தஅணையில் கடல் போல
 காட்சியளிக்கும்அளவுக்கு தண்ணீர்
 தேக்கப்பட்டது.அணையை கட்டிய
பொறியாளர்டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை
மேட்டூர்அணையின் சிற்பி அன்றும்,
இன்றும்புகழப்படுகிறார்.
 இனி என்றும்புகழப்படுவார்.

இந்திய அளவிலான
பெரிய அணைகளில் ஒன்றான
 இதன் உச்சநீர் மட்ட அளவாக
 120 அடி வரை நீரைத்தேக்கலாம்.

அதன் பிறகு ஓடிவரும் நீர்
வரத்து யாவும் உபரியாக
அணைக்கட்டில் நிற்காமல்
 நிரம்பாமல்தானாகவே வெளியேறிச்
 செல்லும்அற்புதமான இயற்கையுடன்
 இணைந்த
கட்டுமானப்பணி, எந்தக் காலத்திலும்
அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான
அமைப்புகளுக்கோ ஒருக்காலும்
ஊறுவிளைக்கமுடியாத
 தன்மைகளுடன்
அமைக்கப்பட்டிருக்கிறது.

மேட்டூர்
அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்:
21.8.1934
அணைக் கட்ட ஆன செசலவு 4.80
கோடி.

அணையின் நீளம் 5.300 அடி

அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.

அணையின் உயரம் 214 அடி

 அணையின்அகலம் 171 அடி

 அணையின் சேமிப்பு
உயரம் 120 அடி

 அணையின் நீர்பிடிப்பு
பரப்பளவு 59.25 சசதுர மைல்
 2,71,000 ஏக்கர்
பாசன வசதி அடைகிறது.

 அணையின்
மூலம் தினமும் 240 மெகாவாட்
 மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

 சேலம்,நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை,
திருவாரூர், நாகப்பட்டனம் என
மொத்தம்11 காவிரிப் பாசனப்
 பகுதிமாவட்டங்களுக்கு
 மேட்டூர் தண்ணீர்போகிறது.

மொத்தம் 16 லட்சம் ஏக்கர்
நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அது மட்டுமல்லாமல், மேட்டூர்
அணையை நம்பி 4000 மீனவர்கள்
குடும்பங்களும் உள்ளன.

மேட்டூர்அணையிலிருந்து
 வெளியே வரும்காவேரி
அதே பெயரில் 106, கிலோமீட்டர்
 தூரம் செல்கிறது.

 இதன் கிளைநதிகளாக
 கொள்ளிடம்,
 பொன்னியாறு,கல்லணை
 கால்வாய், வெட்டாறு,
வெண்ணாறு,
குடமுருட்டி என்ற
பெயரில் பல நதிகளாக
 694 கிலோ மீட்டர்தூரம் செல்கிறது.

 இதை தாண்டி, 1904
கிலோ மீட்டர்தூரத்துக்கு
வாய்கால்
மூலம் பாசன வசதியை
கொடுக்கிறது.

இப்படி தமிழகத்தை
நெற்களஞ்சியமாக்கும்
வகையிலும்,பல்வேறு மாவட்ட
மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும்
,கிட்டத்தட்ட பத்து
ஆண்டுகள் தன் மண்,மக்கள்,
உறவு மறந்தும், உணவும்தூக்கமும்
துறந்தும் மேட்டூர் அணை
என்ற பிரம்மாண்டத்தை வடிவமைத்து
கட்டிக்கொடுத்த கர்னல் டபுள்யூ.எம்.எல்
லீஸ், 

/////////////////////////////////////

Sunday, October 1, 2017

ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது..?

 
ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது..?
Automatic Teller Machine (ATM)

Automatic Teller Machine என்பதன் சுருக்கம் தான் ATM. நம்முடைய அட்டையில் 16 எண்கள் கொண்ட ஒரு எண் இருக்கும். இது நம்மைப் பொறுத்தவரையில் ஒருசாதாரண எண். ஆனால் இதன் ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்தனி அர்த்தங்கள்உண்டு.

முதல் ஆறு எண்கள் அட்டை எந்த வங்கியிடமிருந்து பெறப்பட்டிருக்கிறதுஎன்பதைக் குறிக்கும். அதற்கடுத்த ஒன்பது எண்களும் சேவை வழங்குநிறுவனங்களின் விருப்பத்தைப் பொறுத்த எல்லைக்குள் இருக்கும். கடைசி எண்ஒரு ரகசிய எண். அதுதான் உங்கள் அட்டை பயன்படுத்தக் கூடியதா இல்லையாஎன்பதைச் சொல்லும்.

மாஸ்டர்கார்ட் எண்கள் ஐந்து எனும் எண்ணில் ஆரம்பிக்கும், விசா எண்கள்நான்கு எனும் எண்ணில் ஆரம்பிக்கும் என்பது ஒரு சிறு சுவாரஸ்யத் தகவல்.

அட்டைகளை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று கிரடிட் கார்ட்எனப்படும் கடனட்டைகள். இன்னொன்று டெபிட் கார்ட் அல்லது செக் கார்ட். கடனட்டையில் நாம் செலவழிக்கும் பணத்தை மாதம் ஒருமுறை செலுத்தினால்போதும். செக் கார்ட் மூலம் செலவழிக்கும் பணம் நம்முடைய வங்கிக்கணக்கிலிருந்து உடனே கழிக்கப்பட்டு விடும்.

ஏடிஎம் முன்னால் சென்று அட்டையை உள்ளே செலுத்தி நம்முடைய சங்கேதஎண்ணைக் குறிப்பிட்டபின் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதைக்குறிப்பிட்டு பொத்தானை அமுக்குகிறோம். நம்முடைய அட்டையின் பின்னால்இருக்கும் மேக்னட்டிக் ஸ்ட்ரைப் நம்முடைய அட்டையின் எண்ணை மென்குறியீடாக்கி உள்ளே அனுப்பும். அதற்குப் பயன்படும் இடம் தான் கார்ட் ரீடர்எனப்படும் நாம் அட்டையை உள்ளே நுழைக்கும் இடம். அப்போது கட்டளைஏடிஎம் முனையிலிருந்து சுவிட்ச் என அழைக்கப்படும் கணினிமென்பொருளுக்குள் நுழைகிறது. இங்கே இரண்டு விதமான சோதனைவளையங்கள் இருக்கின்றன. முதலில் நாம் பயன்படுத்தும் அட்டை சரியானதுதானா ? அதற்கு நாம் கொடுத்த சங்கேத எண் சரியானது தானா என்பதைச்சரிபார்க்கும் சோதனை.

இந்தச் சோதனை தோல்வியடைந்தால் நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம்என்று பொருள். ஒருவேளை சங்கேத எண்ணைத் தவறாகச்சொல்லியிருக்கலாம்.

இரண்டாவது சோதனை நம்முடைய வங்கிக்கணக்கில் நாம் கேட்கும் பணம்இருக்கிறதா ? நான் பணம் எடுப்பதில் இன்றைய தினத்தின் உச்ச வரம்பைஎட்டியிருக்கிறோமா ? என்பது குறித்த சோதனைகள். முதல் சோதனைமுடிந்தபின், இரண்டாவது சோதனைக்குள் நுழைந்து இரண்டும் சரியாய்இருந்தால் பணம் கொடுக்கலாம் எனும் பதில் தானியங்கி முனைக்கு வரும். இந்தஇரண்டு சோதனைகளையும் கடக்க பல இலட்சம் தகவல்கள் அடங்கியிருக்கும்மென் கோப்புகளில் தேடுதல் நடக்கும்.

இந்த தேடுதல் முடிந்து தானியங்கி முனைக்கு வரும் தாமதம் சில வினாடிகளே. இந்த வினாடிகள் அதிகரிக்கும் போது தான் நாம் சலித்துக் கொள்கிறோம்.

பணத்தை எண்ணித் தரும் பணம் பட்டுவாடா இயந்திரமும் நுட்பமானசென்சார்களால் ஆனது. இது தவறு இழைப்பதில்லை. இரண்டு நோட்டுகள் ஒட்டிவரும் எனும் ஆசை நப்பாசையாய் போய்விடும் என்பது திண்ணம்.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் அடங்கியிருக்கிறது. நாம் நம்மிடம் ஒருவங்கியின் அட்டை இருந்தாலும் வேறு வங்கியின் தானியங்கி நிலையமும்நமக்குக் பணம் கொடுக்கும். எப்படி ?

இதை செட்டில்மண்ட் என்பார்கள். அதாவது வங்கிகள் எந்தெந்த வங்கிஅட்டைகளுக்குப் பணம் கொடுக்கிறதோ அந்தந்த வங்கிகளின் கணக்கில் அந்தப்பணத்தைச் சேர்த்துக் கொள்ளும். அன்றைய தினத்தின் இறுதியில் வங்கிகள்மற்ற வங்கிகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை கணக்கிட்டுஉடன்பாடு செய்து கொள்கின்றன.

மின் பண பரிமாற்றம் எனப்படும் இந்த தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதும், பணம் ஈட்டக் கூடியதுமாகும். பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் இதைநடத்துகின்றன.

சரி, மென்பொருள் நிறுவனங்களுக்கு இதனால் எப்படி காசு கிடைக்கிறது ? இந்ததானியங்கி நிலையத்திலிருந்து செல்லும் கட்டளைகள் மென்பொருளோடு இணையாவிடில் ஒன்றுக்கும் உதவாது. இதன் பின்னால் இருக்கும் மென்பொருள்தான் வரும் தகவல்களைச் சரிபார்த்தல், பணம் பட்டுவாடா செய்யஉத்தரவிடுதல், மீதம் கணக்கிடுதல் என ஒட்டுமொத்தப் பணியையும் செய்கிறது. அனைத்து விவரங்களையும் மென் கோப்புகளில் சேமித்தும் வைக்கிறது. இந்தசுவிட்ச் எனப்படும் இந்த மென்பொருளுக்குள் வரும் தகவல்கள், அல்லதுவிண்ணப்பங்களுக்கு ஏற்ப மென்பொருள் நிறுவனம் வங்கிகளிடம் பணம்பெற்றுக் கொள்கின்றன.
அதாவது நீங்கள் பத்து முறை பணம் எடுக்கிறீர்கள் என்றால் மென்பொருளுக்குக்கிடைப்பது பத்து தகவல்கள். ஒவ்வொரு தகவலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைமென்பொருள் நிறுவனத்துக்குச் செல்லும். தினமும் பல ஆயிரக்கணக்கானதானியங்கிகளில் நிகழும் இந்த பரிவர்த்தனை மூலம் பல கோடிக்கணக்கானபணம் மென்பொருள் நிறுவனங்களுக்குப் போய் சேர்கிறது. இதற்காகத் தான்ஆயிரக்கணக்கான மென்பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். அதிலும்ஒவ்வொரு வங்கிக்கும் உரிய பிரத்தேக சட்டங்களின் அடிப்படையில்மென்பொருள் இயங்குவது தான் முக்கியம். குறிப்பாக சில வங்கிகள் ஒரு நாள்பத்தாயிரம் ரூபாய் மட்டுமே

ஏடிஎம் வழியாக எடுக்க அனுமதிக்கும். சில வங்கிகள் ஐம்பதாயிரம் ரூபாய் வரைஅனுமதிக்கும். இதற்குத் தக்க படி மென்பொருள் தயாராக்கப் பட வேண்டும்.

Saturday, September 30, 2017

தேர்தல் களம்

மக்கள் தெளிவாக இருக்கிறாரார்கள்

சென்ற பொது தேர்தலில்
இரண்டு கட்சிகளை தவிர
மற்ற எல்லா  கட்சிகளையும்
மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் ....
அவர்கள் இன்னும்
எந்திரிக்கவே இல்லை
எந்த போராட்ட கலத்திலுமே காணவில்லை
தற்போது நடந்த இடை தேர்தலில் மக்கள்
இரட்டை இலையையும்
 நிராகரித்தார்கள்
தற்போது எதிர்க்கட்சி மட்டுமே 
மக்கள்  பிரச்சனைக்கு
போராடி வருகிறது ..

மக்கள் தெளிவாக இருக்கிறாரார்கள்

Friday, September 29, 2017

முழுமையான தமிழ் தாய் வாழ்த்து

முழுமையான
தமிழ் தாய் வாழ்த்து
(UnEdited Version of Tamil Thai vazhthu)

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

//"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து"//
சிதையாவுன்சீரிளமைத் திறம்வியந்து
செயன்மறந்து வாழ்த்துதுமே!"

மனோன்மணியம் சுந்தரனார்