Saturday, September 16, 2017

தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!எந்த மொழியிலும் இல்லாத

எந்த மொழியிலும் இல்லாத
தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

- ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.


இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது.
இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!


'''வாழ்க தமிழ் வளர்க தமிழ்.'''
                                                        

Friday, September 15, 2017

தமிழர்களின் கட்டிட கலையின் உச்சம்.தஞ்சை பெரியகோவில்

தமிழர்களின் கட்டிட கலையின் உச்சம்.

சமீபத்தில்  தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர்
ஒருவர் மூலம் நான் பெற்ற, தஞ்சை பெரியகோவில்
கட்டுமானம் பற்றிய  தகவல்..தந்து இருக்கிறார்

படித்து பாருங்கள்

கோபுர உச்சியை சற்றே உற்று நோக்குங்கள்..

கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்.
பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்.
இது ஒரு கல்லோ,  அல்லது பல கற்களின் சேர்க்கையோ
 இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர
கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.
. அந்த கல்லும் 80 டன்.. அந்த சதுரக்
கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம்
எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன்.
ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்..

இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்..

இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்..
 தலைகீழான கூற்றாய் உள்ளதே..?

நாம் ஒரு, செங்கற்களை கொண்டு 
ஒரு வீடு கட்டும்போது,  கட்டிடத்தின் 
உயரம் 12 அடி என்றால்
4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்..

பெரியகோவில் உயரம் 216 அடி..
 முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட
கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்..
இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு
அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல
அஸ்திவாரம் வேண்டும்..
 இந்த அளவு சாத்தியமே இல்லை
. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும்
புகை மண்டலமாகத்தான் இருக்கும்..

ஆனால் ..
 பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும்
5 அடிதான்..

மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..?

இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு
அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..

பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள்
இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள்.
அதாவது Loose joint என்கிறார்கள்.. 
அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது,
ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்..

எதற்க்காக..?

நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை
நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பினைப்பு
லூஸாகத்தான் இருக்கும்..
 அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது,
 கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்.. 
கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது..

இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் ..

லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று,
அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை
அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி
மிக பலமான இணைப்பை பெறுகின்றன...

இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட,
ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி..

அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற
அதிசியம் இது..

எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று
இருக்கும்..

உலகம் உள்ள வரை இக்கோவிலும் இருக்கும்.
என்ற  இராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை 
எந்த காலத்திலும் பொய்க்காது..

Thursday, September 14, 2017

சனிப் பெயர்ச்சி

சனிக் கோள் நகர்வதை சனிப் பெயர்ச்சி

என்றும் அதனால் தனிப்பட்ட மனிதர்கள் வாழ்வில் மாற்றங்கள் வரும் என்கிறார்களே? அது எப்படி??

சனி கிரகத்தின் பெயரையே வசைச் சொல்லாக ஆக்கி விட்டனர். ‘சனியன் பிடித்த பஸ் தினமும் லேட்டா வருது’. இந்த சனியன் எப்பதான் சாவுமோ தெரியல’சனியன் பிடித்த மழை எப்ப நிக்குமோ தெரியல?’ அட சனியனே என இப்படியாக எதற்கெடுத்தாலும் சனி கிரகத்தைத் திட்டித் தீர்ப்பது நம்மை அறியாமலேயே புழக்கத்தில் நாம் எல்லோரும் பேசிவருகின்றோம்.

சுமார் 122 கோடி கி.மீ. தொலைவிலுள்ள சனிக் கோள், பூமியில் இருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குகிறது என்று எண்ணுவதே மடமை ஆகும். அப்படியே அவர்களின் எண்ணப்படியே கணக்கிட்டாலும் அதுவும் மிக மிகத் தவறான ஒன்றே! அதாவது, 15 கோடி கி.மீ.

தொலைவிலுள்ள சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமிக்கு வந்து சேர்வதற்கு 8 நிமிடம் ஆகிறது. அதற்குள் பூமி ஒரு நிமிடத்திற்கு 28 கி.மீ. வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டும், ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் தன் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிப் பெயர்ந்து கொண்டுமிருக்கும்.

எனில் அந்த 8 நிமிடத்திற்குள் பூமி 223 கி.மீ. தன்னைத்தானே சுற்றியிருக்கும். நாம் பார்க்கும் நேரத்தில் கிளம்பும் சூரிய ஒளிக்கதிர் பூமியில் விழும் இடம் 223 கி.மீ. மாறியிருக்கும். (அதாவது சென்னைக்கு விருத்தாசலத் துக்கும் உள்ள தொலைவு) 14300 கி.மீ. தொலைவு சூரியனைச் சுற்றி யிருக்கும். இதற்கிடையில் பூமி 23.5 டிகிரியில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது தனிக் கணக்கு. 15 கோடி கி.மீ.க்கே இப்படி என்றால்? 127 கோடி கி.மீ.க்கு எப்படி? அதுவும் சனிக்கோள் ஒளி உமிழக் கூடியதும் அல்ல.
சோதிட சாத்திரம் சொல்வது போல் அதன் நிறம் கறுப்பு அல்ல. அதன் நிறம் கறுப்பு என்பதோ, அதன் வாகனம் காக்கை என்பதோ வெறும் மூடநம்பிக்கை.
சனி பகவானுக்குரிய சனிக்கிழமையில் ஒருவன் செத்தால், அந்த வீட்டில் தவறாமல் வேறொரு வரும் சாவான்(ள்)! நிச்சயம் இது நிகழ்ந்ததே, தீருமாம்! சனிப்பிணம் தனிப் போகாது! என்ற பழமொழி வேறு வழங்குகிறதாம்!

எனவே இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப் பெயர்ச்சி ஒரு இயற்கையான நிகழ்ச்சி. சனீசுவரனைப் போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பது எல்லாம் சனிக் கோள் பற்றிய சரியான ஆய்வும் அறிவும் இல்லாத காலத்தில், குறிப்பாகத் தொலைநோக்கி, விண்வெளிக் கலங்கள் இல்லாத காலத்தில் முன்னோரின் மூடநம்பிக்கை ஆகும்.

சனிக்கோள் பற்றி நாம் விளங்கிக் கொள்வது- தெளிவு பெறுவது- இன்றியமையாதது?

• சூரிய மண்டலத்திலுள்ள இரண்டாவது பெரிய கோள் சனி.
• சூரியனிலிருந்து 142 கோடியே 60 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.
• சூரியக் குடும்பத்தின் 6ஆவது கோளாகும். 47 துணைக் கோள்கள் இருக்கின்றன. அதாவது 47 நிலவுகள், சனிக்கோள்
• சூரியனை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு (பூமியின் ஆண்டுக் கணக்குப்படி) 30 ஆண்டுகள் ஆகின்றன. சனிக்கோளுக்கு அதுதான் ஓர் ஆண்டு. அதாவது, சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்குள் பூமி சூரியனை 30 முறை சுற்றி வந்துவிடும்.
• சனி, பூமியை விட சுமார் பத்து மடங்கு பெரியது.
• ஒரே மட்ட அமைப்பில் ஏகமைய வட்டங்களில்[Concentric Circles] பல வளையங்களை அணிந்து மிக்க எழிலுடன் இலங்கும் சனிக் கோளுக்கு ஈடு, இணை சூரிய மண்டலத்தில் எந்தக் கோளும் இல்லை. அது ஒரு சடப்பொருள். அங்கு மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று இல்லை.
• சனிக்கோள் மட்டுமல்ல வேறு எந்தக் கோளிலும் மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று, தண்ணீர் இல்லை. கோள்களுக்கும் மனிதனுக்கும் தொடர்பே இல்லை.
• சனிக் கோளினை வெற்றுக் கண்களால் பார்க்கும்போது மஞ்சள் நிறமாகத் தெரியும்.
• 1610 ஆம் ஆண்டில் கலிலியோ தொலைநோக்கியைக் கொண்டு சனிக் கோளை உற்று நோக்கினார்.
• வெறும் கண்ணால் பார்த்தால் தெரிகின்ற புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் வானில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும். இவற்றில் சனி கிரகம் தான் மிக மெதுவாக நகருகிறது. கெப்ளர் (Kepler) என்ற ஜெர்மன் வானவியல் நிபுணர் கண்டறிந்து கூறிய விதிகளின்படி ஒரு கிரகம் எந்த அளவுக்கு சூரியனிலிருந்து மிக அப்பால் உள்ளதோ அந்த அளவுக்கு அது தனது சுற்றுப் பாதையில் மெதுவாகச் செல்லும்.

சனிக் கோள் (Saturn)
விட்டம் – 120,660 கிமீ (74,978 மைல்)
மேற்பரப்பு – வாயு மற்றும் நீர்மம் (Gas and liquid)
ஈர்ப்பு விசை – 1.16 (புவி 1)
திணிவு – 95.2 (புவி 1)
வளிமண்டலம் – நீரகம் (hydrogen) 88 விழுக்காடு கீலியம் (helium) 11 விழுக்காடு
வெப்பம் – 288 பாரன்கைட் (-178 செல்சியஸ்)
அச்சின் சாய்வு – 26.73 பாகை
தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம் – 10 மணி 40 மணித்துளி, 0 வினாடி (0.436 புவி நாள்)
தன்னைத்தானே சுற்றும் வேகம் – நொடிக்கு 9.87 கிமீ (மணிக்கு 35,500 கிமீ)
ஞாயிறைச் சுற்நி வர எடுக்கும் காலம் – 9 ஆண்டுகள் 167 நாள்கள் (29.46 புவி ஆண்டுகள்)
ஞாயிறைச் சுற்றும் வேகம் – நொடிக்கு 9.64 கிமீ
புவியில் இருந்து பொதுமேனி தொலைவு – 1280.00 மில்லியன் கிமீ (798.30 மில்லியன் மைல்)
உங்கள் எடை (200) – சனியில் 212.8 கிலோ
நிலாக்கள் – 31

சனியின் உட்பகுதியில் விரைவில் உச்சமாக்கி நீரகம் திரவமாய்த் தணிவடைகிறது [Condenses into a Liquid] உட்கருவில் திரவ நீரகம் மிக்கப் பேரழுத்தத்தால் இரும்பாய் இறுகி, உலோக நீரகம் [Metallic Hydrogen] பாறை ஆகி, மின்கடத்தியாக (Electrical Conductor] மாறுகிறது. சனிக்கோளம் ஒரு பிரமாண்டமான காந்தக் களமாக (Magnetic field) இருப்பதற்கு இதுவே காரணம்.
சனியின் நடுவே ஒரு வேளை கடும் பனிக்கரு உறைந்துபோய் இருக்கலாம்! அல்லது கன மூலகங்கள் (Heavey elements) பேரழுத்தத்தில் பாறையாகி ஏறக்குறைய 15,000 பாகை C வெப்பம் உண்டாகியிருக்கலாம்! 4.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சூரிய குடும்பத்தில் பிறந்த வியாழன் சனி இரண்டும் ஈர்ப்பியல் கொந்தளிப்பு [Gravitational Settlement] அடங்கி இன்னும் நிலைப்பாடு [Stability] பெறவில்லை. அதனால் அண்டத்தின் கருச் சுருக்கம் (Contraction) வெப்பத்தை மிகுந்து வெளிப்படுத்தி, சனிக்கோள் தான் சூரியனிடமிருந்து பெறும் வெப்பத்தைவிட மூன்று மடங்கு மிகையாக விண்வெளியில் அனுப்புகிறது!

பூமியில் உள்ள நவீன தொலை நோக்கி மூலம் பார்த்தாலும் சனி மண்டலத்தில் ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளிக்கு மேல் ஆராய முடியாது. புவிச் சுழல்வீதியில் (Earth’s Orbit) சுற்றி வரும் ஹப்பிள் விண்வெளித் தொலை நோக்கியில் (Hubble Space Telescope] 1990 ஆம் ஆண்டு, முதன் முதலில் சனிக் கோளில் ஒரு மாபெரும் வெண்ணிறத் தளம் (White Spot) கண்டு பிடிக்கப் பட்டது. பல மில்லியன் மைல் தூரத்தில் சூரிய மண்டலத்தின் வெளிக்கோள்களில் ஒன்றாக, ஆமை வேகத்தில் சுற்றி வரும் சனிக்கோளை, விண்வெளி ஆய்வுக் கலங்கள் (Space Probes)மூலமாகத்தான் அறிய முடியும்.

1979 ஆம் ஆண்டில் தொடங்கி பயனீர்–1, வாயேஜர்-1, வாயேஜர்-2 ஆகிய ஆளில்லா விண்கலங்கள் சனி கிரகத்தை ஆராய்ந்தன. 1997 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டு 2004 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை சென்றடைந்த காசினி-ஹைகன்ஸ் (Cassini-Huygens) விண்கலம் தொடர்ந்து சனி கிரகத்தை ஆராய்ந்து படங்களை அனுப்பி வருகிறது.

மண்ணையும் விண்ணையும் துல்லியமாக ஆய்வு செய்வதில் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய அறிவியல் காலத்தில் தமிழர்கள் மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு பகுத்தறிவோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பகுத்தறிவு புலன் அறிவு, கவனித்தல், சோதித்து அறிதல், ஊகித்து அறிதல் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் அறிவை அடித்தளமாகக் கொண்டது அறிவியல் தெளிவு பெறுவோம்.

Wednesday, September 13, 2017

சக்தி தென்னை நாற்றுப்பன்னை

சக்தி தென்னை நாற்றுப்பன்னை


எஸ்.போத்திராஜா.Dip. (Agri).,(cell&whatsapp)9043261924

எங்களிடம் குறைந்த விலையில் தரமான வீரிய ஒட்டு தென்னங்கன்றுகள் & அனைத்துப் பழக்கன்றுகள் & மரக்கன்றுகள் & அழகு கன்றுகள் & ஆர்கானிக் உரங்கள்  கிடைக்கும்.    1)D×T குட்டை×நெட்டை (Original) ரகம் Rs 250.(2.5 வருடத்தில் பலன் தரும்).             (2)கங்காபாண்டம் இளநீர் ரகம் Rs 250. (2.5 வருடத்தில் பலன் தரும். 650 ml to 750 ml இளநீர் இருக்கும்)                                                                              (3)COD செவ்இளநீர் ரகம் Rs 150. (3 வருடத்தில் பலன் தரும்).                                                                                     (4)ஒட்டு கன்று Hybrid Fruits Trees கிடைக்கும். (1 to 2 வருடத்தில் பலன் தரும்). 1)மாங்கன்று  2)எலுமிச்சை கன்று பாலாஜி ரகம் , 3)சிகப்பு  மாதுளை பகவா ரக கன்று, 4) பன்ருட்டி பலா கன்று, 5)கொய்யா கன்று L 49, VNR 3 ரகம் 6)நெல்லி கன்று, 7)நாவல் கன்று,8)சப்போட்டா கன்று, 9)ஆரஞ்சு கன்று 10)சாத்துக்கொடி கன்று 11)அத்திப்பழக்கன்று,  12)ஜாதிக்காய் கன்று Rs 350.  13)முள்  சீத்தா, ராமர் சீத்தா.14)மலை இழந்தை கன்று. 15) பன்னீர் திராட்சை கன்று                                                                                                                     (5)சணப்பு, தக்கைப்பூண்டு விதைகள் 1Kg Rs 50.   (6)தென்னை மரத்தில் காய்ப்பு தன்மையை அதிகரிக்கவும், குரும்பை உதிர்வதை தடுக்கவும் உரங்கள் கிடைக்கும்.                                        (1)தென்னை டானிக் 1L Rs 750.( 40 மரத்திற்க்கு வேரில் கட்டலாம். காய்ப்பு திறனை அதிகரிக்கும்.)     (2)கடல் பாசி ஜெல்  10 Kg for 70 மரத்திற்க்கு பயன்படுத்தலாம்.                        (7) தென்னை மரம் ஏறும் கருவி Rs 3750.   (8)மேலும், தென்னை விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.                       (9) தென்னை மரத்தை சிதைக்கும்  கூண்வண்டு, காண்டாமிருக வண்டு பிரச்சனையை சரி செய்ய வாலிகள் கிடைக்கும்.  (10)திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் பழக்கன்றுகள் &  மரக்கன்றுகளை வழங்குங்கள். அனைவரும் பயன் பெறட்டும் , நாடும் பசுமை அடையட்டும். எங்களிடம் அனைத்து நாட்டு விதை கன்றுகளும் Rs 10 to 20 விலைக்கு கிடைக்கும். தொடர்புக்கு: S. போத்திராஜா,Dip(Agri)., Cell No: 9043261924 (What's up Number).  தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் சக்தி நர்சரி பண்ணை . அனைத்து மாவட்டங்களுக்கும் கன்றுகள் S.T கூரியர்  மூலமும் & A.B.T பார்சல்  மூலமும் அனுப்பி வைக்கப்படும்.

Tuesday, September 12, 2017

பறவைகள் சரணாலயங்கள் (புகலிடங்கள்)

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் 
சரணாலயங்கள் (புகலிடங்கள்)

•    வேடந்தாங்கல்
•    கரிக்கிளி (காஞ்சிபுரம் மாவட்டம்)
•    கஞ்சிரங்குளம்
•    சித்திரங்குடி
•    மேல்செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்)
•    பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்)
•    உதயமார்த்தாண்டம் (திருவாரூர் மாவட்டம்)
•    வடுவூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
•    கரைவெட்டி (பெரம்பலூர் மாவட்டம்)
 •    வேட்டங்குடி (சிவகங்கை மாவட்டம்)
•    வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)
•    கூந்தன்குளம்(திருநெல்வேலி மாவட்டம்)
•    கோடியக்கரை (நாகப்பட்டினம் மாவட்டம்)

நீல்ஆம்ஸ்ட்ராங்

நீல்ஆம்ஸ்ட்ராங்

நிலவில் முதன்முதலில் கால்
வைத்தவர் யார்?
இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும்
உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்,
நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.
நிலவில் முதன் முதலில் கால்
வைத்திருக்க வேண்டியவர் யார்
தெரியுமா?

 பல பேருக்கு தெரியாது
அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான்
நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின்
 பைலட்.அதாவது விமானி.

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப்
படையில் பணிபுரிந்தவர். மேலும்
விண் நடை அனுபவம் உள்ளவர்.
அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின்
கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான்
இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார். 

அவர் கோ-பைலட்அதாவது இணை விமானி.
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம்
நிலவை அடைந்ததும்நாசாவிலிருந்து 
பைலட் பர்ஸ்ட்என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில்
சின்ன தயக்கம்.இடது காலை எடுத்து வைப்பதா?
வலது காலை எடுத்து வைப்பதா?என்றல்ல. 
‘நிலவில் முதன் முதலில்கால் எடுத்து 
வைக்கிறோம்.புவியீர்ப்பு விசையற்ற இடத்தில்
இருக்கிறோம். கால் வைக்கும் இடம்
எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால்,
எரி மணலாகஇருந்து காலை சுட்டுவிட்டால்’
தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. 
சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.
அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது 
கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

 கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட்ராங் 
கட்டளை வந்த அடுத்த நொடி காலடி
 எடுத்துவைத்தார்.உலக வரலாறு,
ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. 

திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை 
யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த
உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல. 
தயக்கம், பயம்
இவை எந்த அளவுக்கு நம்
வெற்றியை பாதிக்கும்
என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம்
இந்தச் சம்பவத்தை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப்
பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது.

 நாம் எல்லோருமே மிகப்பெரும்
சாதனைகளை படைக்கிற
வல்லமை உடையவர்கள்தான்.
நம்முடைய தயக்கம், பயம், கூச்சம்
இவைதான் நம் முதல் எதிரி.