Monday, November 2, 2020

THOUGHTS....

கடவுள் இருக்கார்..
கோயில்ல....சிலையா !
வீட்ல அப்பா அம்மாவா !!
/////////////
 பணம் ஒரு மிக மோசமானஎஜமான் .
ஆனால் மிக சிறந்த வேலைக்காரன்
////////
மரங்கள்மட்டும்
 "WIFI" சிக்னல் தருமானால் 
மரங்களாக நட்டுத் தள்ளியிருப்போம்...
 ஆனால் பாவம், மரங்களால் 
சுவாசிக்க "ஆக்சிஜன்" 
மட்டுமே தர முடிகிறது ...
//////////////////

கடவுளை  தேடாதீர்கள்......!
உங்களின் உணவுக்காக
உழைத்து கொண்டு
 இருக்கிறார்
நிலத்தில்  உழவனாக ...!!
/////////////////////////////
கடவுள் நம்மை காப்பார் என்பது
"நம்பிக்கை "     
கடவுளையே 100 ரூபாய் பூட்டு தான்
காக்கின்றது  என்பது
"உண்மை "     
//////////////////////////////// 
கோயிலுக்கு வெளியே 
செருப்புக்கு டோக்கன் 
போட்டபோதே புரிந்துகொண்டேன்...
கடவுள் மீதான உங்கள்
 நம்பிக்கையை!
////////////////////////////////////
பணத்தை கேட்காமலே 
கொடுத்து விட்டு செல்கின்றனர்
 "இறைவனுக்கு"
கேட்டும் அளிப்பதில்லை
 "பிச்சைகாரனுக்கு"..
///////////////////////////
 தேவைபடும் பாேது
"நீ "
தேடப்படுவாய்  ....
அதுவரை
 "நீ "
அமைதியாய் இரு ..
////////////////////////

 வெற்றி வரும்வரை 
குதிரை
வேகத்தில் ஓடு
வெற்றி வந்தபிறகு 
குதிரையைவிட
வேகமாக ஓடு
அப்போழுதுதான்
 உன்வெற்றி
உன்னிடம் நிலைத்து
 நிற்கும்..
////////////
கடவுளுக்கு நீங்களாகவே
 ஒரு உருவம் 
கொடுத்து விட்ட படியால்..
 கடவுள் உங்கள் எதிரில்
 இருந்தாலும்
 தெரிவதில்லை...!!!
///////////////////////// 
 பயன்படுத்தபடாத அறிவும்
 பயண்படுத்தபடாதா பாதையும்
 பயனற்றவை
/////////////////// 
விழுதல் என்பது 'வேதனை'....!!
விழுந்த இடத்திலேயே 
எழுவது என்பது
 "சாதனை"..
/////////////////////
ஏசி என்பது நாம் இருக்கும்
 சின்ன அறையை குளிராகவும்
 இந்த பெரிய பூமியை
 சூடாகவும் மாற்றுகிறது...!!!
////////////////////
 தோல்வி தான் 
வெற்றிக்கு 
முதல் படி.
தோல்வி என்ற படிகளில்

 கால் வைத்துத் தான்
 வெற்றிக்கான ஏணியில்
 ஏறிச் செல்ல முடியும்
////////////////////////////////// 
செய்யும் தொழிலே 
தெய்வம். 
அதில் திறமை தான் 
நமது செல்வம்.
////////////////
பத்தில் ஒன்றாய் இரு
அந்த ஒன்றும் 

நீயாய் இரு 
/////////////
வருவாய்க்கு ஏற்ப
உன் தேவையை 

குறைத்து 
கொண்டால்
நீ புத்திசாலி

தேவைக்கு ஏற்ப
 வருவாயை 
அதிகரித்து
கொண்டால்
நீ திறமைசாலி 

//////////////////////
 முடியாது என்பதை
பிறகு சிந்தியுங்கள்
            முடியும் என்பதை
எப்பொழுதும்
சிந்தியுங்கள். 
////////////////
முயன்று தோற்றால் 
அனுபவம்.
முயலாமல் தோற்றால் 

அவமானம்.
////////////////////
வெற்றி நிலையல்ல
தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து 

தான் வெற்றி, தோல்வி..
////////////////////
ஜெயிப்பது எப்படி என்று
 யோசிக்காதே! 
தோற்றது எதனால் 
என்று 
யோசித்து பார்!!!
 ஜெயிப்பது நீயாக 
மட்டுமே இருப்பாய்!!!
////////////////////
எங்கே இருக்கிறீர்கள் 
என்பது
 முக்கியமல்ல
 என்னவாக 
நினைக்கிறீர்கள் 
என்பது தான் முக்கியம்!
//////////////
வியாபாரத்துல தர்மம்
 பார்க்ககூடாது,
 தர்மத்துல வியாபாரம் 

பார்க்ககூடாது
//////////// 
  தைரியம் எண்ணற்ற
எதிரியை
கொன்று விடும்!!!!
///////////////
 புரிய வையுங்கள்
புகுத்தாதீர்கள்
கற்றுக் கொடுங்கள்
கட்டாயப்படுத்தாதீர்கள்
///////////
  உன்னால் முடியும் 
என்று எண்ணுவதையோ
 அல்லது முடியும் என்று 
கனவு காண்பதையோ
 துணிந்து தொடங்கு.
 உனது துணிவிலேயே
அறிவும், ஆற்றலும்
மந்திரமும் அடங்கியுள்ளன.
                                                                           ////////////////


சுடுகாடு 
தானேன்னு சீப்பா
நினைக்காதீங்க. அங்க வரப்
போறதுக்காக அவஅவன்
உயிரையே கொடுக்குறான்..!!
//////////////
மனதை
பூந்தோட்டம்" போல்...
வைத்திருப்பவர்கள்...
அதில்
"குப்பைகள்" விழுந்தாலும்...
"உரமாக"
மாற்றி கொள்வார்கள்...
 /////////////////////////
 எவன் மனிதர்களை அடக்கி 
ஆள்கின்றானோ
அவன் குழப்பத்தில் வாழ்கின்றான்.
எவன் மற்றவர்களால் 
அடக்கி ஆளப்படுகின்றானோ
அவன் துன்பத்தில் வாழ்கின்றான்....
////////////
எதையும் எதிர்பார்த்து வாழாதே,
 எதிர்பார்த்தது கிடைக்கவில்லை
 எனில் மிஞ்சுவது 
ஏமாற்றமும், மனக்கஷ்டமும் தான்...
உனக்கு கிடைக்கும் என்று விதி இருந்தால் 
அது நிச்சயம் உன்னை 
தேடி வரும்.. அதற்காக காத்திரு...
////////////
வாழ்க்கையில் அதிகமாக 
பாதையில் டர்னிங் பாய்ண்ட்களை 
சந்தித்தவர்கள்
 டிரைவர்களாகத்தான் 
இருக்க முடியும் !
//////////////
ஆடம்பரம் என்பது 
ஆடும் "பம்பரம்". 
எப்பொழுது வேண்டுமானாலும் 
சாய்ந்து விடலாம்
////////////////

வேறு வழியே
இல்லையெனும் போது
வரும் தைரியத்திற்கு பலம்
அதிகம்
//////////
தவறுகள் வெற்றியின் முதற்படி
என்பது உண்மையல்ல..!
திருத்தப்பட்ட தவறுகளே
வெற்றியின் முதற்படி..!
///////////////
செய்தியை கேட்ட உடனே
நம்பிவிடாதீர்கள்,
ஏனென்றால் பொய்,
உண்மையை விட வேகமாக
பரவக் கூடியது!
//////////////////
என்னை யாருக்கும்
பிடிக்கவில்லை" என்று
கவலைபடுவதற்கு நீ
சந்தையில் நிற்கும்
பொம்மையல்ல. நீ என்பது
நீயே.. உன்னை உனக்கு
பிடித்தால் போதும்.
/////////////////////
கோபத்தில்
ஒரு முடிவும் எடுக்காதே..
மகிழ்ச்சியில்
ஒரு வாக்கும் கொடுக்காதே..
அழுகையில்
ஒருவரையும் நம்பாதே..
//////////////////////
 கோபம் தேவைப்படும்
போது கேடயமாக
இருக்கலாமே தவிர,
ஒரு போதும் ஆயுதமாக
இருக்க கூடாது....!
//////////////////
நாம் இல்லாவிட்டால் யாரும்
வருத்தப்பட போவதில்லை,
நம் இடத்திற்கு வேறு ஒருவரை
தேர்ந்தெடுத்து கொள்ள
போகிறார்கள்.
///////////////////
எளிமையானவர்கள்
என்ற சொல்லுக்கு
ஏழைக்கு அங்கீகாரம்
கிடையாது. அதுவும்
வசதியானவர்களுக்கு
மட்டுமே!
///////////////
"எனக்கும் தெரியும்"
என்பதற்கும்
"எனக்குத்தான் தெரியும்"
என்பதற்கும் நிறைய
வித்தியாசம் இருக்கு.
சிலருக்கு இது
புரிவதேயில்லை.
////////////////////
 பச்சோந்தி ஒன்று 
தற்கொலை
செய்யும் முன் ஒரு
கடிதத்தில்
இப்படி 
எழுதி இருந்தது?
#நிறம் மாறும் போட்டியில்
மனிதர்களிடம்
நான் தோல்வி அடைந்தேன்
 //////////////////////////////
  ஆதிக்கம் செலுத்தாமல்
 நடத்திக்காட்டுவதும்
ஆணையிடாமலே
அடிபணியவைப்பதும் தான்
சிறந்த நிர்வாகம்.
//////////////
 நம்பிக்கையோடு
உன் முதலடியை
எடுத்து வை.
முழுப் படிக்கட்டையும் நீ
பார்க்க வேண்டிய அவசியமில்லை.
 முதல் படியில் ஏறு.
/////////////////
 நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, 
எப்போதும் ரோஜாதான்
 கண்ணில் படும்;
முட்கள் இல்லை
//////////////////////////
 முட்டாளின் முழு வாழ்கையும்
 புத்திசாலியின்
 ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம்
///////////////////////////////////
 ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் 
செய்ய வேண்டியது இருந்தால்,
 அதை இப்போதே செய்ய முடியுமா 
என்று பார். நாளை செய்ய வேண்டியதை 
இன்றே செய்ய முடியுமா 
என்று பார். இப்படிச் செய்தால், 
அறுபது வருட வாழ்க்கையை, 
உன்னால் இருபது வருடங்களில் 
வாழ்ந்து விட முடியும்.
///////////////////////
 ஆசையில்லாத முயற்சியால்
 பயனில்லை.
 முயற்சியில்லாத ஆசையால்
பயனில்லை.
////////////
 நான் மெதுவாக 
நடப்பவன்தான்; ஆனால், 
ஒருபோதும் 
பின்வாங்குவதில்லை
//////////
 உன்னை அறிந்தால் - நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!!
- கவிஞர் கண்ணதாசன்.
////////////////////////////////////
 ஒரு மனிதனின் உண்மையான 
தன்மையை அறிய
 வேண்டுமானால், 
அவனுக்கு அதிகாரத்தை
 கொடுத்துப் பாருங்கள்
/////////////////////////////////////////////
 ஒரு மனிதன் விழாமலே
வாழ்ந்தான் என்பது பெருமையல்ல
விழுந்தபோதெல்லாம்
 எழுந்தான் என்பதுதான் பெருமை
//////////////////////////
 விதைத்துக்கொண்டே இரு.
 முளைத்தால் மரம்; 
இல்லையேல் உரம்.
///////////////////////////
 முடியாது என்று சொல்வது
 மூட நம்பிக்கை!
முடியுமா என்று கேட்பது
அவநம்பிக்கை!
 முடியும் என்று சொல்வதே
தன்னம்பிக்கை
///////////////////////
 மாற்ற முடியாததை
 மாற்றிக் காட்ட முயலாதே
மாற்றக்கூடியதை 

மாற்றாமல் விடாதே
//////////////////////
 “Energy rightly 
applied and directed 
will accomplish anything.”
////////////////
 “Be brave......Take risks.
 ///////////////////

Nothing can 
substitute experience.”
///////////////
 “If we all do one random 
act of kindness daily
we just might set the world

 in the right direction.”
/////////////////
 “Faith makes all things possible.
Hope makes all things work.
Love makes all things beautiful.”

////////////////
 “If we counted our blessings
 instead of our money,
we would all be rich.”

///////////
 “A fool and his money
 are soon elected.”
////////////////////////
Having a soft heart in a cruel
 world is courage
not weakness.”
//////////
 “Success is never final
and failure never fatal.
It is courage that counts.”
////////////////////
  “When elephants fight,
it is the grass that suffers”

/////////////////////
“Today a reader, 
tomorrow a leader
///////////////////////////
 “A child educated only
 at school is an uneducated child.”
//////////////
 "Education is not the learning of facts, 
but the training of the mind to think...

"You always pass to failure
 on the way to success....
/////////////////////
  திறமைசாலி 
பிரச்சனையை 
அணுகுகிறான். 
அறிவாளி அதில் இருந்து
 தப்பிக்க நினைக்கிறான்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
////////////////////
ராமசாமி நெல் சாகுபடி செய்தார்..!!
நெல் ராமசாமியை
 "சாகும்படி" செய்தது...!!
/////////////////////// 
  நீங்கள்
ஒரு கல்லை எடுத்து
நாயை பார்த்து அடியுங்கள்,
 அந்த நாய் பயந்து ஓடிவிடும்...

அதே கல்லை கொண்டு தேன் கூட்டில்
 உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், 
உங்களை
ஒரு கை பார்த்து விடும்...

தேனீக்கவிட வலிமையானது
நாய் தானே?
அப்படியானால்
நாய் ஏன் பயந்து ஓடியது?

தேனீக்கள் ஏன்,
நம்மை ஓட வைத்தது?

காரணம் *நாய் தனியாகவும்*,
*தேனீக்கள் கூட்டாக* இருந்ததால்...!

நாம் எவ்வளவு தான் 
சக்திவாய்ந்த தனிமனிதனாக
இருந்தாலும்,

*ஒற்றுமையாக இருந்தால் 
நம் பலமே தனி! !! !!!*
*சிந்தனை செய்  மனமே,
 சிறப்புற வாழ! !! !!!*
//////////////////
 

சூழ்நிலைகள் 

உங்களை கட்டுப்படுத்த 

அனுமதிக்காதீர்கள்.     

        உங்களுக்கு 

ஏற்றார்போல் 

சூழ்நிலைகளை 

மாற்றிக் #கொள்ளுங்கள்

************************

 

 


 

Sunday, October 11, 2020

சீட்டு விளையாட்டில்.. சுவாரஸ்யமான உண்மைகள் ....

 

 

 நீங்கள் விளையாடும் அட்டைகளின் 

பாரம்பரிய தளம் ஒரு காலெண்டரின் 

ஒத்திசைவான வடிவம் என்பது 

உங்களுக்குத் தெரியுமா?


ஒரு வருடத்தில் 52 வாரங்கள் உள்ளன. 

எனவே ஒரு சீட்டுக்கட்டில் 52 விளையாட்டு

 சீட்டுகள் உள்ளன.

ஒவ்வொரு பருவத்திலும் 13 வாரங்கள் 

உள்ளன

. இதனால் ஒவ்வொரு குரூப்பில்

 13 சீட்டுகள் உள்ளன.

ஒரு வருடத்தில் 4 பருவங்கள் - 

அந்த வகையில் 4 குறியீட்டு சீட்டுகள் 

 உள்ளன.

 ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன

. எனவே 12 நீதிமன்ற அட்டைகள் உள்ளன

 (ஒவ்வொரு குரூப்பிலும் ஜாக், ராணி, கிங் 

என்ற முகங்களைக் கொண்டவர்கள்) 

சிவப்பு அட்டைகள் பகலைக் குறிக்கின்றன.

கருப்பு அட்டைகள் இரவைக் குறிக்கின்றன. 


நீங்கள் அனுமதித்தால்

 ஜாக்ஸ் = 11, குயின்ஸ் = 12

, மற்றும் கிங்ஸ் = 13,  பின்னர்

 1 + 2 + 3 +… 13 = 91 வரை

 அனைத்து தொகைகளையும்

 சேர்க்கவும். 

இதை 4 ஆல் பெருக்கி,

 4 வழக்குகளுக்கு, 

எனவே 91 x 4 = 364, ஜோக்கர் என்று 

1 ஐச் சேர்க்கவும்,

 ஒரு வருடத்தில் நாட்கள் என்ற 

365 எண்ணை 

நீங்கள் அடைவீர்களா?


இது வெறும் தற்செயலானதா

 அல்லது

 அதிக புத்திசாலித்தனமா?


 சீட்டுகளின் அனைத்து 

பெயர்களிலும் 

உள்ள மதிப்புகள் கூட்டுத்தொகை ; 

எ.கா: "ஒன்று, இரண்டு, மூன்று, 

நான்கு, ஐந்து, 

ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, 

பத்து, ஜாக், ராணி, 

கிங்" = 52!

 மண்வெட்டி உழுதல் / வேலை 

செய்வதைக்

 குறிக்கிறது.

உங்கள் பயிர்களை நேசிப்பதை 

இதயங்கள் குறிக்கின்றன.

 கிளப்புகள் செழிப்பையும்

 வளர்ச்சியையும்

 குறிக்கின்றன.

 வைரங்கள் செல்வத்தை அறுவடை 

செய்வதைக்  குறிக்கின்றன. 

மேலும், சில அட்டை 

விளையாட்டுகளில்,

 2 ஜோக்கர்கள்  பயன்படுத்தப்படுகிறார்கள். 

லீப் ஆண்டைக் குறிக்கிறது. 

கார்டுகளை விளையாடுவதை விட 

ஆழமான தத்துவம் உள்ளது. 

கணிதம் பரிபூரணமானது.

 

**********

Friday, October 9, 2020

வலம் இடமாக வாசிக்கவும்

 *சொல்லின் முதலெழுத்தை எடுத்துக் 

கடைசியில் சேர்த்து - வலம் இடமாக 

வாசிக்கவும். வரும் வார்த்தை- அதே;அதே.*


கம்பம்

பொன்னன்

ரம்பம்

பாதிமதி

சிம்மம்

நீதிபதி

கும்பம்

அன்பன்

அதிபதி

காசிவாசி 

கோடுபோடு

இடுகாடு- சுடுகாடு

வீடுதேடு

கோல்மால்

பாசிஊசி

ஆல்போல்

பிம்பம்

சோலைமலை

கடைமடை

கூடைமுடை 

சடுகுடு

சின்னன்- சின்னான்

மெய்யாய்-பொய்யாய்

கைலைமலை

பாரிஓரி

மன்னன்...

                       *-யாமறிந்த மொழிகளிலே 

தமிழ்மொழிபோல்  இனிதாவதெங்குங் 

காணோம்....

*********************** 

Thursday, October 8, 2020

ஆசிரியர் மகிமை

 

ஆசிரியர் மகிமை..."


T - Tact. - சாமர்த்தியம்

E - Education. -கல்வியறிவு

A - Ability. - திறமை

C - Character. நன்னடத்தை

H - Health. - ஆரோக்கியம்

E - Enthusiasm. - ஊக்கம்

R- Regularity ஒழுங்குமுறை

♦♦♦

 

SCHOOL 

என்ற ஆறு எழுத்து சொல்லிற்கு 

விளக்கம்.


S - Sincere. - உண்மை

C - Character. - நடத்தை

H - Health. - ஆரோக்கியம்

O - Obedient. - கீழ்ப்படிவு

O - Order. - ஒழுங்கு

L - Learn. - அறிவு

Wednesday, October 7, 2020

ரகசியத்தை அந்த #இயற்கை வைத்துள்ளது

       உண்ணும்உணவினால் தான்,

மனிதன் உயிர் வாழ்கிறான் 

எனில்,இந்த உலகில் 

எந்த மனிதனும்

#மரணமடைய கூடாது.


சுவாசிக்கும் காற்றால் தான்

, மனிதன் உயிர் வாழ்கிறான் 

எனில்,சுவாசிக்கும் எந்த மனிதனும்

#மரணமடைய கூடாது.


மனிதன் உயிர் வாழவும்,

மரணமடையவும்

ஏதோ ஒரு ரகசியத்தை

அந்த #இயற்கை வைத்துள்ளது



Tuesday, October 6, 2020

Wonderful questions

  *Wonderful questions 
to your General Knowledge

3.  How many teaspoons make 

a Table spoon? 


4 . How many Vedas are there 

in Hindu Mythology?


6.  How many countries have

 larger area than India?


7.  What is the Ph value of water?


8.  How many planets are

 there in Solar System?


10. How many  Millimeters

 make a Centimeter?


11. How many players are

 there in a Football team?


12. How many inches 

make a feet?


15. One-time vehicle tax is

 valid for how many years?


16. How many feathers are

 there in a shuttle cock?


17. How many languages are

 printed in an Indian Currency?


18. How many Chapters are 

there in Mahabharata?


19. Which Commonwealth Game 

hosted in India in 2010?


20. How many overs per team are

 there in T-20 cricket?  


21. How many years did 

Mahatma Gandhi spend

 in South Africa?


23. How many chromosomes are

 there in human body?


24. How many spokes are there in 

an Asoka Chakra ?


ML25. What is the qualifying age for 

becoming a MLA?


 *Don't panic, please.* 

*The question numbers are the #answers.*



Monday, October 5, 2020

மனுதர்மநூல்

 

மனுதர்மநூலை_ஆங்கிலத்தில்_

மொழிபெயர்த்தவர்_

சர்_வில்லியம்_ஜோன்ஸ்

(1794)


“தனது கால் தடத்தை தானே 

அழித்துக்கொண்டு செல்ல வேண்டும். 

எச்சில் துப்ப கழுத்தில் கலையம்.


#மனுதர்ம ஆட்சியின் போது

 #தலித் மக்களுக்கு எங்கெல்லாம் 

#தடைகள் இருந்தது??


1.பொதுக்கிணற்றில் நீர் எடுக்க தடை.

2. சுடுகாட்டில் தம் பிணம் எரிக்கத் தடை.

3. குளங்களில் குளிக்க தடை.

4. தெருக்களை பயன்படுத்த தடை.

5. மேற்சட்டை, வேட்டி, சால்வை அணிய தடை.

6. மீசை விடத்தடை.

7. தாவணி, தங்க ஆபரணங்கள் போடத்தடை.

8. செருப்பு அணிய தடை.

9. குடுமி, கடுக்கண் போட தடை.

10. ரயில் பயணிக்க தடை.

11. பேருந்துகளில்  இருக்க தடை.

12. பாடசாலையில் படிக்க தடை.

13. கோவில் பயன்படுத்த தடை.

14. பொது நிறுவனங்களில் உட்புக தடை.

15. மருத்துவ வசதி தடை.

16. வேற்று உழைப்பு வழிமுறை தடை.


* இவையெல்லாம் இந்த மண்ணில்

 பல சமூகம் அனுபவிக்க காரணமே இ

ங்கிருந்த மனுதர்ம ஆட்சி முறைகளே..


* இத்தனை தடைகளையும் ஒரு 

சமூகம் 2000 ஆண்டுகளாக அனுபவித்த

 கொடுமை உலகில் எங்கேனும் உண்டா?? 


* 70 ஆண்டுகால அரசியலைமைப்பை

 இவர்களால் சகித்துக் கொள்ள இயலாத போது

 .. 2000 ஆண்டுகால மனுதர்ம 

கொடுங்கோல் ஆட்சி முறைகளை எப்படி 

ஒடுக்கப்பட்ட மக்களால்

 ஏற்றுக்கொள்ள இயலும்??


* சொந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு

 அரசு இடம் ஒதுக்கி வீடு கொடுக்கும் 

நிலைக்கு தள்ளியது இந்த மனுதர்ம 

ஆட்சி முறையால் தான்.


* இந்த மனுதர்ம நூல் 2685 

செய்யுட்களாகவும்,

 3 பகுதிகளாகவும், 

12 அத்தியாயங்களாகவும் 

அமைந்துள்ளது. 


* இந்நூலை முதலில் கல்கத்தா

 உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் 

சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 

1794ல் சமசுகிருதத்தில் இருந்து 

ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

. ….. …. 



Sunday, October 4, 2020

மேல ஒருத்தன் இருக்கிறானாம்.?

 

மேல ஒருத்தன்

 இருக்கிறானாம்.

எல்லாத்தையும் 

பார்க்கிறானாம்.


பிறப்பதையும் 

பார்க்கிறானாம்.

இறப்பதையும் 

பார்க்கிறானாம்.


கல்லைக் கடவுளாக 

உணர்வதையும் பார்க்கிறானாம்.

கருவறையில் தன் 

காலடியில் புணர்வதையும் 

பார்க்கிறானாம்.


உண்டியல்ல காசு

 போடறதையும் 

பார்க்குறானாம்.

உண்டியலையே 

களவாடறதையும் 

பார்க்கிறானாம்.


சிலை வணக்கத்தையும்

 பார்க்கிறானாம்.

சிலை கடத்தலையும் 

பார்க்கிறனாம்.


பெண்ணை 

வணங்கினாலும்

 பார்க்கிறானாம்.

தீட்டுன்னு விரட்டினாலும்

 பார்க்கிறானாம்.


பிஞ்சு கையால 

படையல் சோறு 

போட்டாலும் பார்க்கிறானாம்.

அப்பிஞ்சையே அறுத்து கூறு

 போட்டாலும் பார்க்கிறானாம்..


மேல ஒருத்தன் இருக்கிறானாம்...?


எல்லாத்தையும்

வேடிக்கைதான் பார்ப்பான் போல...?


வேடிக்கைதான் 

நாமே நல்லா பார்ப்போமே... 

அவன் என்னாத்துக்குங்க...??? 

 

#படித்ததில்_சிரித்தது