Friday, October 13, 2017

தமிழ்...தொன்மொழி

உலகில் ஆறாயிரம் மொழிகள் வழக்கில்
இருக்கின்றன. அவற்றுள் காலத்தால்
அழியாமல் மக்களால் வழங்கப்பட்டு
வரும்  மிகப்பழைமையான பத்து
மொழிகளின் பட்டியல் இது.

10.இலத்தீனம் - இத்தாலியத்
தீபகற்பத்தில் மட்டும்  வழக்கில்
இருக்கிறது. உயர்கல்வியில் மட்டும்
கற்பிக்கப்படுகிறது. இன்றுள்ள நவீன
ஐரோப்பிய மொழிகளுக்குத் தாய்.

9.ஆர்மீனியன் - ஆர்மீனியா,நகோர்னா
கரபாக் குடியரசு ஆகிய நாடுகளின் மொழியாக விளங்குகிறது.

இம்மொழியைத் தற்போது ஐம்பது
இலட்சம் மக்கள் பேசுகிறார்கள்.

8.கொரியன்- வட தென்கொரிய
நாடுகளின் மொழி.


ஏழு கோடி மக்கள் இம்மொழி
வாழும் பரப்பில் வாழ்கிறார்கள்.

7.ஹீப்ரு - இஸ்ரேல் நாட்டின் மொழி.


தொண்ணூறு இலட்சம்
மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

6.அராமிக் - ஹீப்ருவும்
அரபு மொழியும் இம்மொழியிலிருந்து கிளைத்திருப்பதாகக் கருதப்படுகிறது. அரபுக்கும் அதன் கிளை மொழிகளும் ஈரான், ஈராக், சிரியா, இஸ்ரேல், இலெபனான் ஆகிய நாடுகளில் வழக்கில் இருக்கின்றன.

5.சீனம் - சீன மொழிதான் நூற்றிருபது
கோடி மக்களால் பேசப்படுகிறது.
மிகப்பெரிய மொழிக்குடும்பத்தின் முதன்மொழி. உலகளாவிய பல்வேறு
துறைகளில் சீனமொழியே
முன்னணியில் இருக்கிறது.

4. கிரீக் - கிரீஸ், தெற்கு இத்தாலி,
அல்பேனியா, சைப்ரஸ் ஆகிய
பகுதிகளில் வாழும் மொழி. வாழும்
மொழிகளுக்குள் மிகத் தொன்மையான
எழுத்துச் சான்றுகள் இதற்கே உள்ளது.
பல மொழிக்குடும்பங்களின் எழுத்து
முறைகளுக்கும் இம்மொழியே காரணம்.
ஒரு கோடியே முப்பது இலட்சம் மக்கள்
இதனைப் பயன்படுத்துகிறார்கள்,
ஐரோப்பிய மொழிகளில் இஃதே மிகப்
பழையது.

3.எகிப்து - இன்றைய எகிப்து நாட்டில்
பழைய எகிப்து மொழியும் அரபியும்
கலந்த வடிவமான ‘எகிப்தியன் அராபிய
மொழி’ அரசு மொழியாக இருக்கிறது.
பதினேழாம் நூற்றாண்டு வரை இதன்
மருவிய வடிவமான எகிப்திய காப்டிக்
மொழி பேசப்பட்டது.

2. சமஸ்கிருதம் - இந்தியாவின்
தொன்மையான மொழிகளில் ஒன்று,
இந்து, மஹாயான பௌத்த சமயச்
செல்வாக்கு பெற்ற மொழி.
உத்தராகண்டு மாநிலத்தின்
ஆட்சிமொழி.

1.தமிழ் - உலகெங்குமுள்ள
எட்டுக்கோடித் தமிழ்மக்களின்
பயன்பாட்டில் இருப்பது. சீனத்திற்கு
அடுத்து ஒரு தொன்மொழி மிகுதியான
மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது
என்றால் அது தமிழ்தான். சிங்கப்பூர்,
இலங்கை, மலேசியா நாடுகளில்
முதன்மைமொழி.  இந்தியாவில்
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின்
ஆட்சிமொழி.


உலகத் தொன்மொழிகள் குறித்த
அடிப்படை நமக்குத்
தெரியவேண்டும்.
//////////////////
 தமிழ் சாெற்களுக்கு
ஆங்கிலத்தில் சொற்களே இல்லை
என்பதற்கு இதுவே சான்று.

அப்பா -Father
அம்மா -Mother
சகோதரன் -Brother
சகோதரி -Sister
தம்பி -Younger Brother
அண்ணா -Elder Brother
தங்கை -Younger Sister
அக்கா -Elder Sister
மாமா -Uncle
மாமி -Aunty


அத்தான் -?
அத்தை -?
சித்தப்பா -?
சித்தி -?
பெரியப்பா -?
பெரியம்மா -?

மேலும் பல சொற்களுக்கு
ஆங்கிலத்தில் 
சொற்களே இல்லை.!
உலகிலேயே சொல்வளமும் 
பொருள்
வளமும் மிக்க மொழி, நம் தமிழ் மொழி.
/////////
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு
  சில விளக்கங்கள்...

 "ண", "ன" மற்றும் "ந"
எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
 "ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண"
என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம்
என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் –
என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி
 "ணகர" ஒற்றெழுத்து வருதோ,
அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து
 'ட' வர்க்க எழுத்தாகத்தான்
இருக்கும். இதனால
இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம்
 இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து
வருதோ, அதையடுத்து வர்ர
 உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான்
 இருக்கும். இதனால
இதுக்கு "றன்னகரம்" னு பேரு
. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா?
சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை,
 "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே.
 (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம்
/////////////////////////
 தமிழில்
 மூன்று வகையான 
ல,ள,ழ இருக்குதானே?
 அதை எப்படி
 சொல்லுவீங்க
 'ல' 'ள' 'ழ'
இவைகளுக்கு 
தனித்தனியாக 
பெயர்கள் இருக்கு.
 'ல' மேல் நோக்கி லகரம்.
'ள' கீழ் நோக்கி ளகரம்.
'ழ' சிறப்பு ழகரம்." 
//////////////////////////////////



No comments:

Post a Comment