Friday, October 13, 2017

தமிழ்...தொன்மொழி அறிக

உலகில் ஆறாயிரம் மொழிகள் வழக்கில்
இருக்கின்றன. அவற்றுள் காலத்தால்
அழியாமல் மக்களால் வழங்கப்பட்டு
வரும்  மிகப்பழைமையான பத்து
மொழிகளின் பட்டியல் இது.

10.இலத்தீனம் - இத்தாலியத்
தீபகற்பத்தில் மட்டும்  வழக்கில்
இருக்கிறது. உயர்கல்வியில் மட்டும்
கற்பிக்கப்படுகிறது. இன்றுள்ள நவீன
ஐரோப்பிய மொழிகளுக்குத் தாய்.

9.ஆர்மீனியன் - ஆர்மீனியா,நகோர்னா
கரபாக் குடியரசு ஆகிய நாடுகளின் 
மொழியாக விளங்குகிறது.

இம்மொழியைத் தற்போது ஐம்பது
இலட்சம் மக்கள் பேசுகிறார்கள்.

8.கொரியன்- வட தென்கொரிய
நாடுகளின் மொழி.


ஏழு கோடி மக்கள் இம்மொழி
வாழும் பரப்பில் வாழ்கிறார்கள்.

7.ஹீப்ரு - இஸ்ரேல் நாட்டின் மொழி.


தொண்ணூறு இலட்சம்
மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

6.அராமிக் - ஹீப்ருவும்
அரபு மொழியும் இம்மொழியிலிருந்து
 கிளைத்திருப்பதாகக் கருதப்படுகிறது
. அரபுக்கும் அதன் கிளை மொழிகளும்
 ஈரான், ஈராக், சிரியா, இஸ்ரேல், 
இலெபனான் ஆகிய நாடுகளில் 
வழக்கில் இருக்கின்றன.

5.சீனம் - சீன மொழிதான் நூற்றிருபது
கோடி மக்களால் பேசப்படுகிறது.
மிகப்பெரிய மொழிக்குடும்பத்தின்
 முதன்மொழி. உலகளாவிய பல்வேறு
துறைகளில் சீனமொழியே
முன்னணியில் இருக்கிறது.

4. கிரீக் - கிரீஸ், தெற்கு இத்தாலி,
அல்பேனியா, சைப்ரஸ் ஆகிய
பகுதிகளில் வாழும் மொழி. வாழும்
மொழிகளுக்குள் மிகத் தொன்மையான
எழுத்துச் சான்றுகள் இதற்கே உள்ளது.
பல மொழிக்குடும்பங்களின் எழுத்து
முறைகளுக்கும் இம்மொழியே காரணம்.
ஒரு கோடியே முப்பது இலட்சம் மக்கள்
இதனைப் பயன்படுத்துகிறார்கள்,
ஐரோப்பிய மொழிகளில் இஃதே மிகப்
பழையது.

3.எகிப்து - இன்றைய எகிப்து நாட்டில்
பழைய எகிப்து மொழியும் அரபியும்
கலந்த வடிவமான ‘எகிப்தியன் அராபிய
மொழி’ அரசு மொழியாக இருக்கிறது.
பதினேழாம் நூற்றாண்டு வரை இதன்
மருவிய வடிவமான எகிப்திய காப்டிக்
மொழி பேசப்பட்டது.

2. சமஸ்கிருதம் - இந்தியாவின்
தொன்மையான மொழிகளில் ஒன்று,
இந்து, மஹாயான பௌத்த சமயச்
செல்வாக்கு பெற்ற மொழி.
உத்தராகண்டு மாநிலத்தின்
ஆட்சிமொழி.

1.தமிழ் - உலகெங்குமுள்ள
எட்டுக்கோடித் தமிழ்மக்களின்
பயன்பாட்டில் இருப்பது. சீனத்திற்கு
அடுத்து ஒரு தொன்மொழி மிகுதியான
மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது
என்றால் அது தமிழ்தான். சிங்கப்பூர்,
இலங்கை, மலேசியா நாடுகளில்
முதன்மைமொழி.  இந்தியாவில்
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின்
ஆட்சிமொழி.


உலகத் தொன்மொழிகள் குறித்த
அடிப்படை நமக்குத்
தெரியவேண்டும்.
//////////////////
 தமிழ் சாெற்களுக்கு
ஆங்கிலத்தில் சொற்களே இல்லை
என்பதற்கு இதுவே சான்று.

அப்பா -Father
அம்மா -Mother
சகோதரன் -Brother
சகோதரி -Sister
தம்பி -Younger Brother
அண்ணா -Elder Brother
தங்கை -Younger Sister
அக்கா -Elder Sister
மாமா -Uncle
மாமி -Aunty


அத்தான் -?
அத்தை -?
சித்தப்பா -?
சித்தி -?
பெரியப்பா -?
பெரியம்மா -?

மேலும் பல சொற்களுக்கு
ஆங்கிலத்தில் 
சொற்களே இல்லை.!
உலகிலேயே சொல்வளமும் 
பொருள வளமும் மிக்க மொழி,
 நம் தமிழ் மொழி.
/////////
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு
  சில விளக்கங்கள்...

 "ண", "ன" மற்றும் "ந"
எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
 "ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், 
மூன்று சுழி "ண"
என்பதெல்லாம் வெறும்
 பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம்
என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் –
என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி
 "ணகர" ஒற்றெழுத்து வருதோ,
அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து
 'ட' வர்க்க எழுத்தாகத்தான்
இருக்கும். இதனால
இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. 
(சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம்
 இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து
வருதோ, அதையடுத்து வர்ர
 உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க 
எழுத்தாகத்தான்
 இருக்கும். இதனால
இதுக்கு "றன்னகரம்" னு பேரு
. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா?
சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை,
 "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே.
 (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம்
/////////////////////////
 தமிழில்
 மூன்று வகையான 
ல,ள,ழ இருக்குதானே?
 அதை எப்படி
 சொல்லுவீங்க
 'ல' 'ள' 'ழ'
இவைகளுக்கு 
தனித்தனியாக 
பெயர்கள் இருக்கு.
 'ல' மேல் நோக்கி லகரம்.
'ள' கீழ் நோக்கி ளகரம்.
'ழ' சிறப்பு ழகரம்." 
//////////////////////////////////



Thursday, October 12, 2017

நொய்யல் ஆறு உருவாவது எப்படி?

நொய்யல் ஆறு உருவாவது எப்படி?


​கோவையில் நொய்யல் ஆறு ..
ஒரு ஆழமான பார்வை.


​கோவையில் நொய்யல் ஆறு 
என நாம் குறிப்பிட்டால் இப்போது 
இருக்கும் மக்களுக்கு அது 
சிறுவாணி அணை நீர் என
 நினைக்கின்றனர்.


பலரும் நொய்யல் என்றால் 
தண்ணீரே வராத ஒரு ஆறு
 என நினைக்கின்றனர்.
ஆனால் உண்மை அதுவல்ல.


எத்தனையோ தடைகளை கடந்து 
கோவையை நோக்கி வரும் 
நொய்யலுக்கும் 
ஒரு பின்னணி உண்டு. நொய்யல்
 ஆறு எங்கிருந்து எப்படி உருவாகிறது 
என தெரிந்துகொண்டால் அதை
 நாம் போற்றத் துவங்கி விடுவோம்.


மேற்கு தொடர்ச்சி மலையில் 
கோவைக்கு மேலே சரியாக
 2 ஆயிரம் அடி உயரத்தில் 
பெய்யும்போது அது பல்வேறு
 சிறு ஓடைகளாக உருப்பெறுகிறது.


இப்படி 7 ஓடைகள் ஒன்று சேர்ந்து
 அது குஞ்சரான் முடி என பெயர் பெற்று
 மலைகளில் இருந்து பெரும் ஆறாக
 பெருக்கெடுத்து ஓடி வருகிறது.


இதுதான் நீங்கள் சிறுவாணி 
அடிவாரத்தில் காணும் 
கோவை குற்றாலம் இதை 
பெரியாறு என்றும் அழைக்கிறார்கள்.


மற்றொரு புரத்தில் ஏறத்தாழ
 வெள்ளிங்கிரி மலையிலும்
. அதை ஒட்டிய பகுதிகளிலும் 
பெய்யும் மழை, 5 ஓடைகளாக 
ஒன்று சேர்ந்து மத்திமர கண்டி ஓடை
 என பெயர் பெற்று ஏற்கனவே ஓடிவரும்
 பெரியாறுடன் செம்மேடு 
அருகே ஒன்று சேர்கிறது.


இந்த பெரியாறு மட்டும் நொய்யல்
 என அழைக்கப்படுவதில்லை.
 இத்துடன் தூத்துமலை ஓடை, 
கொடுவாய்புடி ஓடை
 பெரியாறு ஓடை ஆகியவை 
ஒன்று சேர்ந்து சின்னாறு
 என அழைக்கப்படுகிறது.


இந்த சின்னாறு சாடி வயல் 
வழியாக நாம் ஏற்கனவே
 கூறிய பெரியாறுடன் சோலை 
படுகையில் ஒன்று சேர்கிறது. 
அவ்வளவு தானா நொய்யல்
 என கேட்க வேண்டாம்.


பெரியாறு சின்னாறு சேர்ந்த உடன்
 இவற்றுடன் மேற்கு தொடர்ச்சி 
மலையில் 20 ஓடைகளை ஒன்று 
சேர்த்துவரும் தொள்ளாயிரம் மூர்த்தி
 கண்டி என்ற ஆறும் தொம்பிலிபாளையத்தில்
 ஒன்று சேர்கிறது.


இந்த தொள்ளாயிரம் மூர்த்தி 
கண்டிதான் நீங்கள் சினிமாவில் 
பார்த்த வைதேகி நீர்வீழ்ச்சி.


தொம்பிலிபாளையத்தில் 
ஏறக்குறைய எல்லா ஆறுகளும் 
ஒன்று சேர்ந்த பின்னர்தான் அங்கு 
நொய்யல் என பெயர் பெறுகிறது.


பின்னர் பேரூர், கோவை நகர்,
 சூலூர், திருப்பூர், கொடுமணல்
, காங்கயம் வழியாக கரூர் மாவட்டம் 
சென்று நொய்யல் என்ற கிராமத்தில்
 காவிரியுடன் நமது ஜீவ நதி கலக்கிறது.


நொய்யலின் சராசரி 
நீளம் 160 முதல் 170 கிலோ மீட்டர்.
 இந்த ஆற்றின் சராசரி அகலம் 30 அடி. 
நொய்யலில் குறுக்கே கட்டப்பட்ட
 தடுப்பு அணைகள் 32.


நொய்யல் ஆற்று நீரை
 நம்பி தற்போது உள்ள குளங்களின்
 எண்ணிக்கை 19.


நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும்
 வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. 
ஆனால் ஏறத்தாழ ஆலந்துறை வரை 
ஆண்டுக்கு 10 மாதங்கள் 
தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


இந்த நீரையும் மழை காலத்தில்
 கிடைக்கும் பெரும் வெள்ளத்தையும்
 நாம் முறைாக பயன்படுத்தினால் 
இன்னும் 20 ஆண்டுகளுக்கு 
கோவை மாவட்டத்தில்
 தண்ணீர் பஞ்சமே வராது.


நொய்யல் ஆற்றில் தண்ணீர்
 பெருக்கெடுத்து ஓடிவரும்போது
 அதை தடுப்பணையில் தடுத்து
 அங்கிருந்து சிறிய வாய்கால்கள் மூலம்
 குளங்களுக்கு நீரை கொண்டுசெல்லும் 
முறை நொய்யலில் பயன்படுத்தப்படுகிறது.


நொய்யலில் பெரும் வெள்ளம் 
செல்லும்போது பலரும் இந்த
 நீரை அப்படியே குளங்களுக்கு
 திருப்பினால் என்ன என 
கேள்வி கேட்கின்றனர். 
இது மிகவும் அபாயகரமானது.


காரணம் நொய்யல் ஆற்றில் 
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 
அதன் வேகம் மாறுபட்டுக்கொண்டே
 இருக்கும். இந்த நீரை குளங்களுக்கு 
திருப்பினால் ஒரு சில மணி நேரங்களில்
 குளம நிரம்பிவிடும்.


பின்னர் இந்த நீரை தடுக்க
 இயலாமல் குளமே காணாமல் 
போய்விடும். எனவே தான் நொய்யல் 
ஆற்று நீரை தடுத்து வாய்க்கால்கள்
 மூலம் குளங்கள் நிரப்பப்படுகிறது.


கிளை வாய்க்கால்கள் மூலம் 
குளங்களை நிரப்பும் முறை 
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
 சோழர்கள் காலத்திலும் பின்னர்
 மதுரையில் பாண்டிய மன்னர்கள் 
காலத்திலும் நடை
முறைப்படுத்தப்பட்டுள்ளது.


நொய்யல் என கூடுதுறையில்
 பெயர் பெற்றதும் இந்த ஆறு கோவையை 
நோக்கி ஓடி வருகிறது. நொய்யலில்
 குறுக்கே எந்த தடுப்பு இருந்தாலும் 
அதை தகர்த்துக் கொண்டு 
ஓடி வருவதற்கு காரணம் உள்ளது.


கூடுதுறையில் இருந்து 
ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டர் 
தூரத்திற்கும் 
ஒரு மீட்டர் தாழ்வாக 
நொய்யல் அமைந்துள்ளது.


எனவே 30 கிலோ மீட்டர் தூரமுள்ள
 கோவைக்கு நொய்யல் வரும்போது
 அதன் நிலை 15 மீட்டர் கீழே இறங்கியுள்ளது.


இது கோவை வரை மட்டுமல்ல.
 காவிரி ஆற்றுடன் கலக்கும் வரை
 இதே போல இயற்கையாகவே
 நொய்யலில் அமைந்துள்ளது.


இதன் காரணமாகத்தான் 
நொய்யல் ஆக்ரோஷமாக
 பாய்ந்து வருகிறது.
/////////////////////////////////////

Tuesday, October 10, 2017

TRAIN - டிக்கெட் புக் ஆகும்முறை!

 பஸ்களில் விருப்பமான சீட் புக் செய்ய 
வாய்ப்புகள் இருக்கும் போது 
ரயில்களில் மட்டும் இல்லை 
என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா ?


உண்மையில் இதற்கு பின்னாடி 
இருப்பது  இயற்பியல்காரணம்...

தியேட்டரும் ரயில் வண்டியும்!

நாம் திரையரங்கில் எந்த இருக்கை வேண்டுமானாலும்
 நமது விருப்பத்தின் பேரில் புக் செய்யலாம். 
ஹவுஸ்புல் ஆனாலும், ஓரிரு இருக்கைகள் புக் ஆனாலும் 
எந்த பாதிப்புகள் இல்லை. 
ஏனெனில் இது நகர்வு தன்மை அற்ற இடம்.

ஆனால், ரயில் என்பது 
அதிக வேகத்தில் பயணிக்க கூடிய
 நகர்வு பொருள். 

இங்கே நமது விருப்பதின் பேரில் இருக்கை
 புக் செய்யும் போது பல தவறுகள் மற்றும் 
எளிதாக அபாய விபத்துக்கள் 
உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

கோச்! 
பொதுவாக ரயில்களில் S1, S2 S3....
 என பல கோச்கள் இருக்கும். 
ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கைகள் இருக்கும். 
மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை 
அமைப்பும் கொண்டிருக்கும்.

டிக்கெட் புக் ஆகும்முறை!

நீங்கள் டிக்கெட் பதிவு செய்யும் போது 
ஒவ்வொரு கோச்சிலும் மத்திய பகுதியில் இருக்கும்
 இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். 
அதாவது. 30 - 40 என்ற எண்களுக்குள் இருக்கும்
 இருக்கைகள் தான் பதிவு செய்வார்கள். 
எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கைகள் பதிவான பிறகு. 
அதற்கடுத்த இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும்.

பர்த் பதிவுகளும் இப்படி தான் பதிவு செய்வார்கள். 
முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், 
அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப்படும்.

புவியீர்ப்பு மையம்!

ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான்
 ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் 
பாதிக்கப்படாமல் இருக்கும். 
ரயில் ஓடும் போது அதன் சமநிலை 
பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக
 இந்த முறை பின்பற்றப்படுகிறது.

கடைசி நேரத்தில்...

கடைசி நேரத்தில் டிக்கெட் யாராவது கேன்சல் செய்து
 உங்களுக்கு இருக்கை கிடைத்தால், 
அது 2,3 அல்லது 71,72 என்ற இருக்கையாக கிடைப்பதற்கு 
இந்த முறை தான் காரணம்.

சற்று யோசியுங்கள்!

நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் 
ரயிலில் S1, S2, S3 முழுவதும் நிரம்பியும், 
S4, S5, S6 காலியாக இருந்து, 
இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகியிருந்தால், 
கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, 
ப்ரேக் போடும் போது விபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு
.
இதை தவிர்க்கதான்  இந்த முறையில்  டிக்கெட்புக் செய்யப்படுகிறது