Wednesday, August 16, 2017

மதங்கள் -ஆச்சிரியமூட்டும் உண்மைகள்.

ஆச்சிரியமூட்டும் உண்மைகள்....

கிறிஸ்துவ மதம் :-
-----------------------------
    தேவன் ஒருவனே ( இயேசு கிறிஸ்து), ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ,உலகெங்கும் ஒரே மதம் (கிறிஸ்துவம்)

  ஆனால்... "லத்தீன் கத்தோலிக்" பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் "சிரியன் கத்தோலிக்" பிரிவு தேவாலயத்துக்குள் செல்ல மாட்டார்கள்.

   இந்த இரண்டு பிரிவினரும் "மார்த்தோமா" இன சர்ச்சுக்குள் செல்வதில்லை.

   இந்த மூவருமே " பெந்தகொஸ்தே " திருச்சபைக்குள் நுழைய முடியாது.

    மேற்கண்ட நான்கு பிரிவினரும் "சால்வேஷன் ஆர்மி " தேவாலயத்துக்குள் செல்ல முடியாது.

     இந்த ஐவரும் "செவன்த்டே அட்வென்டிஸ்ட் " இன சர்சுக்குள் போக மாட்டார்கள்.

    இவர்கள் ஆறு   பிரிவினருமே "ஆர்த்தோடக்ஸ்" பிரிவு ஆலயத்துக்குள் போவதில்லை.

   இந்த ஏழு பிரிவுகளை சேர்ந்தவர்கள் "ஜேகோபைட் " பிரிவினரின் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.

     இது போல் மொத்தம் 146 பிரிவுகள் கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே...

     ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்ற பிரிவினருடன் தங்கள் தேவாலயத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

   ஆனால்... ..
             தேவன் ஒருவனே ( இயேசு கிறிஸ்து), ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ஒரே மதம் (கிறிஸ்துவம்)     
               

அடுத்து முஸ்லீம் மதம் :-
------------------------------------
   "அல்லாஹ்" ஒருவரே கடவுள், ஒரே மதப் புத்தகம் ( குர்ஆன்), ஒரே இறைத்தூதர் நபிகள் நாயகம்.

  ஆனால்... இந்த ஒற்றுமையான மதத்திற்குள்ளே "ஷியா " மற்றும் "சன்னி " பிரிவினர் ஒருவரையொருவர் தாக்குவதும், கொன்று விடுவதும் அனைத்து இஸ்லாமிய நாடுகளில் சகஜம். கிட்டத்தட்ட பெரும்பாலான முஸ்லீம் நாடுகளில் மத ரீதியான சண்டை நடைபெறுவது இந்த இரு பிரிவினருக்கு இடையே தான்.

     "ஷியா "பிரிவு முஸ்லீம்கள்" சன்னி " பிரிவு முஸ்லீம்களின் மசூதிக்குள் நுழையவே முடியாது.

     இந்த இரு பிரிவினரும்" அஹமதியா "பிரிவு முஸ்லீம்களின் மகதிக்குள் போக முடியாது.

    இந்த மூவருமே "ஷபி" பிரிவு மசூதிக்குள் நுழைய அனுமதியில்லை.

    மேலே குறிப்பிட்ட நான்கு பிரிவினருமே "முஜாஹைதீன் "இன மசூதிக்குள் செல்ல முடியாது.

  இது போல் இஸ்லாமில் 13 பிரிவினர் உள்ளனர்.

,ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை மொத்தமாக அழிப்பது இதெல்லாம் இவர்களுக்குள் சர்வ சாதாரணம்.

   அமெரிக்கா ஈராக்கை தாக்கி அதன் அதிபர் சதாம் உசேனை கொல்வதற்கு ஈராக்கை சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்காவுக்கு தங்கள் முழு ஆதரவை அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால்... .

அல்லாஹ் ஒருவரே கடவுள், ஒரே மதப் புத்தகம் ( குர்ஆன்), ஒரே இறைத்தூதர் நபிகள் நாயகம்.

"அமைதி மார்க்கம் இஸ்லாம்" ...

அடுத்தது "இந்து மதம் " :-
---------------------------------------
       இந்து மதத்தில் மொத்தம் 1280 மதப் புத்தகங்கள், 10,000 துணை நூல்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெளிவுரை நூல்கள், எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்கள், பல்வேறு விதமான ஆச்சாரியார்கள், ஆயிரக் கணக்கான ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள்.

இருந்தும் ....
         எவரும் எந்த ஆலயத்தித்குள்ளும் செல்லலாம், தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்யலாம், தாங்கள் விரும்பிய தெய்வங்களை வணங்கலாம்.
ஓர் இனத்தவரின் வழிபாடுகளில் மற்றவர் கலந்து கொள்ளலாம். தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொள்ளலாம்.இறைவனுக்கு படைக்கப்பட்டதை வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கலாம்.

   கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளாக மதத்திற்குள் சண்டைகள் இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அமைதியையும், அன்பையும் மட்டுமே அனைவருக்கும் போதிக்கும் ஒரே மதம் "இந்து" மதமே.....

Tuesday, August 15, 2017

அன்னை தெரசா

அன்னை தெரசா

🌹 அன்னை தெரசா 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி ஓட்டோமான் பேரரசிலுள்ள அஸ்கபில் (தற்போது மாக்கடோனியக் குடியரசின் ஸ்கோப்ஜே) பிறந்தார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியு  ஆகும்.

🌹 1950ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர்.

🌹 1970ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இவர் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980-ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.

🌹 அன்னை தெரசா 1997ஆம் ஆண்டு செம்டம்பர் 5ஆம் தேதி தன்னுடைய 87-வது வயதில் மறைந்தார். அன்னை தெரசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது.

Monday, August 14, 2017

காந்தி : நிஜமுகம்

காந்தி : நிஜமுகம்
.
13வயதில் திருமணம் செய்தவர் காந்தி. 
திருமணம் முடிந்த சில நாட்களிலே 
மனைவியுடன் சண்டைபோட்டு 
தேடி சென்றார் காந்தி.
.
வெளிநாடு சென்று கல்லூரி படிப்பை 
படித்தார். அதன்பின் ஆங்கிலேயர்களிடம் 
பணிபுரிந்தார். அதை பெருமையாக
 எண்ணினார்.
.
ரயில் பயணித்தின்போது ஆங்கிலேயர்கள், 
காந்தியை அடிமை என அழைத்து
 அடித்தனர். இதனால் ஆங்கிலேயர்களை
 பழிவாங்க எண்ணினார்
. சுதந்திர போராட்டம் உச்சியில் இருந்த 
சமயத்தில் அதை தனக்கு சாதகமாக 
பயன்படுத்தினார்.
.
ஆங்கிலேயர்களை எதிர்த்து புரட்சி படை,
 ராணுவ படை உருவான நேரத்தில் 
அப்பாவி மக்களை அகிம்சை போராட்டம்
 என்னும் பெயரில் ஆங்கிலேயர்களிடம் 
அடிவாங்க வைத்தார்.
.
ஆங்கிலேயர்கள் பொதுமக்களின்
 பாவங்களை போக்க மதம் மாற்றம் 
செய்ய வேண்டும் கூறி இந்துக்களை 
மதம் மாற்றினார்கள் அதற்கு காந்தி உதவினார்.
.
இரண்டாம் உலகபோரில் பல்லாயிரம் 
வீரர்களை இழந்த ஆங்கிலேயர்கள் 
நேதாஜியின் இந்திய ராணுவத்தின் 
தாக்குதலை சமாளிக்க பயந்து ஓடினார்கள்.
 இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி 
அகிம்சையால் சுதந்திரம் கிடைத்தது 
என்றார் காந்தி.
.
இந்தியாவை இரண்டாக பிரிக்க
 "ஜின்னா" கேட்டதால் உடனே 
சம்மதித்தார் காந்தி. அப்போது ஏற்பட்ட
 கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான 
இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
.
பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள்
 இந்தியா வந்தபோது அவர்களை காக்க
 இந்திய இந்துக்கள் சென்றனர் அதை த
டுத்தார் காந்தி. அப்போதும் 
இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
.
70 வயதில்கூட தன்னுடைய ஆசிரமத்தில்
 உள்ள 16 வயது சிறுமிகளை தன்னுடன்
 நிர்வாணமாக படுக்க வைத்தார் 
அதை யோகநிலை என்றார் காந்தி.
அந்த பெண்கள் உண்மையை
 சில ஆண்டுகளுக்கு முன் சொன்னார்கள்.
.
ஆங்கிலேயர்களுடன் செய்துகொண்ட
 ஒப்பந்தம்படி சுதந்திர இந்தியாவில் 
ஆங்கிலேய அதிகாரிகளை 
நியமித்தார் காந்தி.
.
சுதந்திர போராட்டத்தில் 
லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட
போதும் காந்தியின் குடும்பத்தில் 
ஒருவர் கூட இறக்கவில்லை. 
பெரிய காயம்கூட ஏற்படவில்லை.
 காந்தியின் பேரன்கள் கூட இந்தியர்களாக
 இல்லை. ஆங்கிலேயர்களுடன் 
செய்துகொண்ட உடன்படிக்கையின்படி 
காந்தியின் வாரிசுகள் வெளிநாடுகளில் 
தற்போதுவரை வசதியாக 
வாழ்ந்து வருகின்றனர்.
.****************

Saturday, August 12, 2017

சிங்கங்கள்

ஆகஸ்ட் '10 '  தேதி  
              உலக_சிங்க_தினம் !

உலகளாவியரீதியில் அருகிவருகின்ற உயிரனமாக IUCN அமையத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ள சிங்கங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக உலக சிங்க தினம் கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில், சிங்கங்கள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!

சிங்கங்களின் கர்ஜனை ஓசை 5 மைல்களுக்கு அப்பாலும் கேட்கக்கூடியதாகும்.

சிங்கங்கள் நடக்கின்றபோது அவற்றின் குதிகால்கள் தரையில் படுவதில்லை.

சிங்கங்கள் ஒரு நாளில் 16 – 20 மணி நேரஙகளை தூக்கத்திலும், ஓய்விலுமே செலவிடுகின்றன.

சிங்கங்கள் மிகச்சிறப்பான இரவு நேர பார்வையினைக் கொண்டவையாகும்.

இதன் காரணமாக அவை சில வேட்டையாடுதல்களை இரவு நேரத்திலேயே மேற்கொள்கின்றன.

ஆண் சிங்கங்களை விடவும், பெண் சிங்கங்களே பெரும்பாலான வேட்டையாடல்களை மேற்கொள்கின்றன.

ஆண் சிங்கங்கள் தனது ஆட்சிபுலத்துக்குரிய பிராந்தியத்தினையும், தனது குட்டிகளினையும் பாதுகாப்பதிலேயே தனது நேரத்தினை செலவிடுகின்றது.

பெரிய பூனை இனங்களில் சிங்கங்கள் மாத்திரமே சமூகவியலானவையாகும்.

சிங்கங்கள் வழமையில் குழுக்களாகவே வாழ்கின்ற இயல்பினைக் கொண்டவையாகும்.  ஒரு குழுவில் சமாராக 30 வரையான சிங்கங்கள் ஒன்றாகவே வாழ்கின்றன.

சிங்கங்கள் மணிக்கு 81 கிலோ மீட்டர் (50 mph) வேகத்தில் ஓடக்கூடியவையாகும்.

சிங்கங்கள் 5-6 நாட்கள் வரையில் நீரின்றி தனது காலத்தினை கழிக்கக்கூடியவையாகும்.

தனது உடற் பருமனுடன் ஒப்பிடுகின்றபோது மிகச்சிறிய இதயத்தினைக் கொண்டுள்ள விலங்கினம் சிங்கம் ஆகும்.

சிங்கத்தின் இதயமானது, அதன் உடற்பருமனில் 1% இலும் குறைந்த பாகத்தினையே வகிக்கின்றது.

ஒரேஅமர்வில் சிங்கங்கள் 30 kg இறைச்சியினை உட்கொள்ளும் ஆற்றலைக் கொண்டவையாகும்.

உலகில் மிகப்பிரபலமான தேசிய விலங்கு என்கின்ற பெருமைக்குரிய விலங்கினம் சிங்கம் ஆகும்.

ஆர்மேனியா, நெதர்லாந்து, பெல்ஜியம், , பல்கேரியா, லக்ஸ்சம்பேர்க், இங்கிலாந்து, எதியோப்பியா, ஈரான், கென்யா, லைபீரியா, லிபியா, மஸிடோனியா, மொராக்கோ  ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு சிங்கம் ஆகும்.

Thursday, August 10, 2017

சோதிடம் ...ஓர்பார்வை


சோதிடம் .ஓர்பார்வை

உலகில் உள்ள சுமார் 2 கோடி உயிர் இனங் களில் 
ஒரே யொரு ஒற்றை இனம் தான் ஹோமோ சேபி யன்ஸ் எனப்படும் 
நமது மனித இனம் என்பது உண்மை.
 எனவே உலகில் உள்ள சுமார் 700 கோடி மனிதர் களும் ஒருவரே.

இன்றைய உலகில் விஞ்ஞானம்மிக மிக வளர்ந்திருக்கிறது. சரி! விஞ்ஞானப்பூர்வ மனோ பாவம் அதே அளவு வளர்ந்திருக்கிறதா? இல்லை! 

அதுவும் இந்தியா போன்ற பழம்பிரதேசங்களில் மூட நம்பிக்கைகள் கொடிகட்டி பறப்பதை கண்கூடாகவே காண முடிகிறது. நமது நாட்டில் மெத்தப் படித்த பலமேதாவிகள் கூட சூரியனையும் சேர்த்துத்தான் “நவக்கிரகம்” என்று நம்புகிறார்கள்! வழிபடுகிறார்கள்! 

ஆனால் உண்மை அதுவா? இல்லை! சூரியன் ஒரு நட்சத்திரம்! 

அதேபோல 

“ராகுகால” நம்பிக்கை! பூமத்திய ரேகையையொட்டி பூமியின் சுற்றளவு சுமார் 40ஆயிரம் கிலோ மீட்டர். அந்த தூரத்தை 24 மணி நேரத்தில் பூமிதன்னைத்தானே சுற்றுவதன் மூலமாக கடக்கிறது என்றால், 

ஒரு நிமிடத்தில் அது கடக்கும் தூரம் சுமார் 27 கி.மீ.மேற்கிலிருந்து கிழக்காக பூமி சுழல்வதால், இந்தியாவைப் பொறுத்தமட்டில் முதலில் வரும் கொல்கத்தாவிற்கும் தொடர்ந்து வரும் மும்பைக்கும் உள்ளகால வித்தியாசம் ஒரு மணி நேரம்.

அதே போல் சென்னைக்கும் நீலகிரிக்கும்உள்ள நேர வித்தியாசம் 15 நிமிடங்கள். இதில் ராகுகாலம் என்று நாம் குறிப்பிடும் ஒன்றரை மணி நேர காலவரம்பு சென்னைக்கும் நீலகிரிக்கும் எப்படி ஒரு சேரப் பொருந்தும்?

அதே போல 

நட்சத்திரங்கள் பற்றி நம்முடைய பஞ்சாங்கங்கள் குறிப்பிடும்செய்தியும் கணிப்பும் அறிவியல் பூர்வமற்ற அப்பட்டமான கேலிக்கூத்துகளே! “அம்மாவின் புடவையை மடிக்க முடியாது அப்பாவின் சில்லறையை எண்ணமுடியாது! அது என்ன?” என்ற விடு கதைக்கு விடையாக “வானத்தையும் நட்சத்திரத்தையும்” குறிப்பிடுவார்கள். 

அதையேஇன்றைய விண்ணியற்பியல் விஞ்ஞானம்பொய்யாக்கிவிடும் போலும்! 

பிர பஞ்சத்திலுள்ள மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை 1019 (லட்சம் கோடி கோடி)என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக் கிறார்கள். 

அதில் ஒரு 27 நட்சத்திரங் களையும் 

இல்லாத ராகு, கேது உள்ளிட்ட சில கிரகங்களையும் வைத்துக்கொண்டு

 நம்முடைய பிறப்புக்கும் அவைகளுக்கும் ஒரு முடிச்சு போடுகிறார்கள் 
 நம் ‘‘பெரியவர்கள்’’ “

விண்வெளியிலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் இவற்றுக்கும் மனித வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

ஆகவே ஜோதிடம் என்பது விஞ்ஞான பூர்வமற்ற ஒரு அபத்தமே!” என்றுஆணி அடித்தாற்போல தெளிவுபடுத்தி யவர்தான் 

அண்மையில் நோபல் பரிசுபெற்ற அமெரிக்கவாழ் இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் என்பதை இங்கே பதிவு செய்தாக வேண்டும்!

 அந்த ஜோதிடத்தை, விஞ்ஞானப் பூர்வமானது என்று நிரூபிப்பதற்கும் பல்கலைக்கழகங்களில் ஒருபாடமாக வைப்பதற்கும் வளர்ப்பதற்கும் இன்று  எவ்வளவு போராட்டங்கள் என்ப என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

பூமியிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள சூரியனிடமிருந்து வெளிச்சம் நமக்கு வந்து சேர எடுத்துக் கொள்ளும் நேரம் சுமார் 8 நிமிடங்கள். அப்படியென்றால் நம்மை அடைய சுமார் 4 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் வெளிச்சத்தை தரும் “பிராக்சிமா சென்டூரி” என்ற நட்சத்திரம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள்.

இத்தனைக்கும் அந்த நட்சத்திரம்தான் சூரிய குடும்பத்துக்கு மிகமிக அருகில் இருக்கும் நட்சத்திரம். 

இதுபோன்ற விஷய ஞானமோ, நட்சத்திரம் என்பது அடிப்படையில் ஒரு நெருப்புக்கோளம் என்ற தெளிவோஇல்லாமல், நமது முன்னோர்களில் சிலர், அவர்களுக்கு வாய்த்த அரைகுறையான அறிவைக் கொண்டு கற்பிதம் செய்து வைத்ததை இந்த விஞ்ஞான யுகத்தில் நாம் ஏற்பது எப்படி சரியாகும்?

இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் படிக்காதவர்களிடம் மட்டுமல்ல படித்தவர்களிடமும் இருக்கிறது. படிப்புக்கும் பகுத்தறிவுச் சிந்தனைக்கும் சம்பந்தம் இல்லாத ஒரு கல்வி முறைதான் நமது நாட்டில் நடப்பிலுள்ளது. 

ஆன்மீகக்கருத்துகளுக்கு இடம் தருகிற பாட நூல்கள் ஏன் நாத்திகக் கருத்துகளுக்கு இடம்தரக்கூடாது? அப்படி இடம் தந்தால்ஒரு இருபதே ஆண்டுகளில் இந்த சமுதாயத்தை விஞ்ஞானப் பூர்வமாகச்சிந்திக்கிறமனித நேயப் பொதுவுடைமைச் சமுதாயமாக மாற்றிக்காட்ட முடியும். 
அந்த அடிப்படையில் இருபத் தோராம் நூற்றாண்டில் பயணம் செய்யும் மனித சமுதாயத்துக்கு ஒரு பத்து கேள்வி பதில்கள் தேவையான சிந்தனைத் தெளிவைத் தரக்கூடும்.

1. நாம் வாழும் இந்த பூமியின் வயது என்ன? 460 கோடி ஆண்டுகள்.

2. முதல் உயிரினம் முதன் முதலாக பூமியில் எப்போது தோன்றியது?(சைனோ பைட்டா பாசி போன்றது) 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக.

3. கடவுள் தான் மனிதனை படைத்தார்என்று எல்லா மதங்களும் சொல்கின்றன.மனிதன் திடீரென்று படைக்கப்பட்ட வனல்ல பரிணாம வளர்ச்சிப்படி உருவானவன் என்று டார்வின் கொள்கை கூறுகிறது! இரண்டில் எது சரி? டார்வின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையே சரி. சைனோ பைட்டா பாசி போன்ற முதல் உயிரிலிருந்து“நீர்வாழ் உயிர்கள்” தோன்றின.நீர்வாழ் உயிரினங்களிலிருந்து “நில நீர் வாழ்வன” தோன்றின. நிலநீர் வாழ்வன உயிரினத்திலிருந்து “ஊர்வன” தோன்றின. இவ்விரண்டுஇனங்களுக்கும் இணைப்பாக தண்ணீர்ப்பாம்பு, ஆமை போன்றவற்றை குறிப்பிட லாம். ஊர்வன உயிரினங்கள் “பறப்பன” வாக பரிணாம வளர்ச்சி அடைய இணைப்பாக உருவான உயிரினம் பறக்கும் பல்லி!

அதேபோல் “பறப்பன” உயிரினம்“பாலூட்டி” இனமாக வளர்ச்சியுற்ற போதுஇணைப்பாகத் தோன்றிய உயிரினம் வவ்வால்கள் எனலாம். ஏனென்றால் வவ்வால்கள் பறக்கவும் செய்யும் குட்டிபோட்டு பால் கொடுக்கவும் செய்யும்;அந்த பாலூட்டிகள் இனத்தில் பலப் பல உயிர்கள்தோன்றிய பிறகு நாம் “ஹோமோ சேபியன்ஸ்” தோன்றினோம். இப்படி டார்வின் முன்வைத்த“பரிணாம வளர்ச்சிக் கொள்கை” நிரூபணமானதொரு உண்மை. ஆனால் கடவுள் மனிதனைப் படைத்தார் என்று மதங்கள் காலங்காலமாகச் சொல்லி வருவது விஞ்ஞானப்பூர்வமாக எந்தவிதத்திலும் நிரூபிக்கப்படாத அப்பட்டமான கற்பனையே!

4)டார்வின், வாலஸ் போன்றோர் முன்வைத்த பரிணாம வளர்ச்சிக் கொள்கைப்படி நம்மிலிருந்து (ஹோமா சேபியன்ஸ்) ஏன் புதிதாக ஒரு இனம் தற்காலத்தில் தோன்றவே இல்லை?

பரிணாம வளர்ச்சி மாற்றம்என்பது நீண்டகால இடைவெளியில் தேவைகளின் நிர்ப்பந்தத்தால் நிகழ்வது! உதாரணமாக 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியகொரில்லா இனத்திலிருந்து உயிரியல் ரீதி யாக கொஞ்சமே வேறுபடும்

சிம்பன்சி இனம் தோன்ற காலம்எடுத்துக் கொண்ட இடைவெளி ஆண்டுகள் 25 லட்சம்! ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனித இனத்தின் முன்னோடி இனமான “ஹோமோ எபிலிஸ்” 17.5 லட்சம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய“ஹோமோ எரக்டஸ்” - அந்த இனத்திலிருந்து பரிணாமம் பெற்ற நாம் அதாவது “ஹோமோ சேபியன்ஸ்” தோன்றி5 லட்சம் ஆண்டுகள் கூட முடியவில்லை. ஆகவே “ஹோமோசே பியன்ஸ்” எனப்படும் நமது மனிதஇனத்திலிருந்து புதிதாக ஒரு வளர்ந்த இனம் பரிணாமம் பெறசில லட்சம் ஆண்டுகள் ஆகக் கூடும்.

ஆனால் பாலின செல்களில் (செக்ஸ் செல்கள்) இருந்து உயிர்கள் தோன்றுவதற்கு மாறாக உடல் செல்களிலிருந்தே (சோமாடிக் செல்கள்) உயிர்களை இனப் பெருக்கம் செய்யும் “குளோனிங் முறை” போன்ற மரபணுவியல் விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சி இயல்பாக நடக்க வேண்டிய மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை அதன் போக்கில் விடாமல், மனிதஇனமாகிய நாமே வெகு வேகமாக முந்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதை மறந்து விடக்கூடாது!

5) சுமார் 360 கோடி ஆண்டுக்கு முன்னால் தோன்றியது போல் புதிதாக ஒரு உயிரினம் பூமியில்இன்று ஏன் தானாகத் தோன்ற வில்லை? (இனப்பெருக்க முறை யில் மட்டும்தானே தோன்றுகிறது?)இந்த பூமியில் முதல் உயிரி தானாக தோன்றிய போது காற்று மண்டலத்தில் ஹைட்ரஜன், நைட் ரஜன், கரியமில வாயு, மீத்தேன் போன்ற வாயுக்கள் இருந்தன. ஆக்சிஜன் மட்டும் கொஞ்சம் கூட கிடையாது. ஆனால் இப்போது ஆக்சிஜன் இருக்கிறது.

அது உயிரி தோற்றத்தை முற்று முழுதாகத்தடுத்து விடுவதால் புதிய உயிரினம் தானாகத் தோன்றவில்லை. (அல்டேன்/ஒபரின், மில்லர்/ஊரே ஆய்வுகள்) இனப்பெருக்க முறையில் மட்டுமே தோன்றுகிறது!

6. சூரியன் என்பது யாது?13 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கிவிடும் விஸ்தாரமான பரும அளவு கொண்ட ஒரு நட்சத்திரம். ஹைட்ரஜன், ஹீலியம் அணுக்கள்கொண்ட நெருப்புக்கோளம். உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கு மான மூலசக்தி! அதன் உட்புற வெப்பநிலை லட்சம் டிகிரி சென்டி கிரேடு. வெளிப்புற வெப்ப நிலை 6000. இந்த மாபெரும் நெருப்புக்கோளமான சூரியனை பகவானாக்கிசூரிய வாகனத்தை குதிரைகள் இழுத்து செல்லும் புராண அபத்தத்தை என்னவென்று சொல்ல?

7.விண்வெளியிலுள்ள மொத்த நட்சத்திரம் எத்தனை?10இன் மடங்கு 19 நட்சத்திர ங்கள். (லட்சம் கோடி கோடி நட்சத்திரம்) எண்ணிப் பார்க்கவே நமக்கு தலை சுற்றவில்லையா? 8. பூமியில் உள்ளது போல் வேறுகிரகங்களில் உயிர்கள் வாழ்கிறதா?வாழலாம்.

கோடி நட்சத்திர த்திற்கு ஒரு கிரகம் இருந்து, அதில்உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தால் கூட லட்சம் கோடி கிரகங்களில் (10ன் மடங்கு 12) பூமியைப் போல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதைக் கண்டறிய நமது விஞ்ஞானம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.

9. பிரபஞ்சத்திற்கு எல்லை கண்டறியப்பட்டுள்ளதா? ஏறக்குறைய 1250 கோடி ஒளிஆண்டுகள் தூரம் பிரபஞ்சத்தின் எல்லை என்று டாஃப்ளர் விளை வின்படி கணித்துள்ளார்கள் விஞ்ஞானிகள். அதாவது பூமி தோன்று வதற்கும் (460 கோடி ஆண்டுகள்) முன்னால் பிரபஞ்சத்தின் ஒரு முனையிலிருந்து புறப்பட்ட வெளிச்சம் நொடிக்கு 3 லட்சம் கி.மீ.வேகத்தில் பயணம் செய்துகூடஇன்னும் நம்மை வந்தடைய வில்லை. அதாவது ஒரு ஒளி ஆண்டு என்பது சுமார் 10 லட்சம் கோடி கி.மீ. அப்படியென்றால் பிரபஞ்சத்தின் எல்லை சுமார் 1250 கோடி ஒளி ஆண்டுகள் தூரம்.

அதாவது சுமார் 125 கோடி கோடி கோடி கி.மீ. இதைவிட நமக்கு ஆச்சரியம் தரும் விஷயம் வேறெது? சிந்தித்து பாருங்கள்! அந்த பிரபஞ்சத்திற்கும் அப்பால்என்ன என்று ஒரு கேள்வி போட்டால் தலை சுற்றலைத் தவிர எதுவுமே மிஞ்சாது!

10. மறுபிறப்பு என்பது உண்டா?இதயம், கார்னியா (கண்), சிறுநீரகம், கல்லீரல் போன்ற மாற்றக் கூடிய உடல் உறுப்புகளை - இல்லாதவர்களுக்கு, பழுதடைந்தவர் களுக்கு தானம் செய்பவர்கள்தான் மறுபிறப்பு அடைபவர்கள் எனச்சொல்லலாம். மற்றபடி மறுபிறப்புஎன்பதெல்லாம் வெறும் கற்பனை தான்!இவை போன்ற அடிப்படை யான, தெரிந்து கொள்ள வேண்டிய அறிவியல் உண்மைகளை ஒவ் வொரு மனிதனும் கட்டாயம் அறியச்செய்ய வேண்டும். ஆனால், இன்று விஞ்ஞானப்பூர்வ மனோபாவத்துக்கு நேர் எதிரான புராணக் குப்பைகளை பாடத் திட்டங்களில் புகுத்தும் ” கல்வித்திட்டத்தை யல்லவா நடைமுறைப்படுத்த எத்தனிக்கிறது?

நமது மனித இனம் “ஹோமோ சேபியன்ஸ்” மிகச் சரியாக 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக் காவில் தோன்றி 2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆசியாவில் குடிபெயர்ந்தது என்பதை மனித மண்டையோடுகள், எலும்புக் கூடுகள் இவைகளை “ஐசோடோப் டேடிங்” முறையில் ஆய்வு செய்து தெளிவாக கணக்கிடுகிறது இன்றைய நவீன விஞ்ஞானம்! ?


ஆரணி மு. பாண்டியன் நெடுஞ்செழியன்

Wednesday, August 9, 2017

நமது தேசியச் சின்னம்!

நமது தேசியச் சின்னம்!...
**********************************
குழந்தைகளே! நமது தேசியச் சின்னம் 
என்ன தெரியுமா? 
சாரநாத்திலுள்ள அசோகர் ஸ்தூபியில் 
இருந்து எடுக்கப்பட்ட
 அசோகச் சக்கரமாகும். 
அதில் இருப்பவை
 நான்கு சிங்கங்கள்! 
ஒன்று மறுபுறத்தில் இருப்பதால் 
நம்மால் 
பார்க்க முடிவதில்லை. அவற்றின் 
கீழே ஒரு சக்கரமும்
 (தர்ம சக்கரம்-WHEEL OF LAW)
 இடையே சீறிப்பாயும்
 குதிரைகளும், காளைகளும்
 பொறிக்கப்பட்டுள்ளன. பீடத்தின்
 கீழே முண்டக உபநிடதத்திலிருந்து 
எடுக்கப்பட்ட
 "வாய்மையே வெல்லும்' என்னும் 
பொருள் கொண்ட 
"சத்ய மேவ ஜயதே' என்ற வார்த்தைகள் 
தேவநாகரி எழுத்துக்களில் 
பொறிக்கப்பட்டுள்ளன.

1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி 
இது இந்தியாவின் தேசியச் சின்னமாக 
அங்கீகரிக்கப்பட்டது!
இந்த தேசியச் சின்னத்தை நமது 
இந்திய அரசாங்க அலுவலக
 நோக்கங்களுக்கு மட்டுமே 
பயன்படுத்த முடியும்!

இந்திய குடியரசுத் தலைவர், 
மத்திய அமைச்சர்கள் மற்றும் 
அமைச்சகங்கள், வெளிநாடுகளில் 
உள்ள தூதரகங்கள், மாநில ஆளுநர்கள், 
அரசின் தலைமை அதிகாரிகள்,
 மாநில அமைச்சர்கள் மற்றும் 
தேசிய இலாகாக்களின் ஒரே 
அதிகார பூர்வ முத்திரை இதுவே!

தேசியச் சின்னம், அமைச்சர்கள் பயன்படுத்தும் 
எழுதுதாள்களிலும், சில மிக முக்கிய 
அதிகாரிகள், மற்றும் வெளிநாட்டு 
அரசுடனான தொடர்புக்கான 
எழுது தாள்களிலும் நீல வண்ணத்தில் 
அச்சிடப்பட வேண்டும். 
அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் 
எழுது தாள்களில் சிகப்பு வண்ணத்திலும் 
அச்சிடப்பட வேண்டும்.
மக்களவை உறுப்பினர்கள்
 பச்சை வண்ணத்திலும், மாநிலங்களவை 
உறுப்பினர்கள் சிவப்பு வண்ணத்திலும் 
தேசியச் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும்.

தேசியக் கொடி!
***********************
கடும் காவி, கடும் பச்சை, 
மத்தியில் தூய வெண்மை 
ஆகிய மூன்று நிறங்களும் 
வரையறுக்கப்பட்ட
 நீள, அகலங்களும் கொண்ட 
மூவர்ணக் கொடியே இந்தியாவின் 
தேசியக் கொடி.
 வெண்பட்டையின் நடுவே ஓர் 
அசோகச் சக்கரமும்
 (கடல் நீல வண்ணம் கொண்டது) 
அதை சுமந்து 24ஆரக் கால்களும் 
உள்ளன.

தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் 
தைரியம் மற்றும் 
தியாகத்தையும், வெண்மை நிறம் 
உண்மை மற்றும் அமைதியையும், 
பச்சை நிறம் நம்பிக்கையையும், 
வீரத்தையும் குறிப்பதாக கற்பிக்கப்பட்டது.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 
"பிங்களி வெங்கைய்யா' என்பவரே 
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர்.
தேசியக் கொடியின் நீள, அகலம் 3:2 என்ற 
விகிதத்தில் அமைய வேண்டும்.

மூவர்ணக் கொடியை அரசியல் நிர்ணய சபை
 1947 ஜூலை 22இல் ஒருமித்த கருத்துடன் 
அங்கீகரித்தது.
 
1947ஆம் ஆண்டு 15ஆம் தேதி 
இந்தியா சுதந்திரக் காற்றைச்
 சுவாசித்தபோது ராஷ்டிரபதிபவன் 
என்று பெயர் சூட்டப்பட்ட
 தில்லி வைஸ்ராய் ஹவுஸில்
 31 குண்டுகள் முழங்க இந்திய தேசியக் கொடி
 முதல் முதலாகப் பறக்க விடப்பட்டது.

எல்லா வருடமும் ஆகஸ்டு 15ஆம் தேதி 
தில்லி செங்கோட்டையில் 
தேசியக் கொடியேற்றும் 
1948முதல் துவங்கியது.

இந்திய தேசியக் கொடி முதன்முதலாக
 விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது
 1971இல்! அமெரிக்காவின் அப்பல்லோ-15 
என்னும் செயற்கைக் கோள் 
இதை விண்வெளிக்குச் சுமந்து சென்றது.

தேசிய கீதம்!
*******************
வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரால் 
எழுதப்பட்டது!
 (தாகூரின் இந்த முழுப் பாடல் மொத்தம் 
ஐந்து செய்யுள் கொண்டது. 
எனினும் முதல் செய்யுள் மட்டுமே 
தேசிய கீதமாகப் பாடப்பட்டு வருகிறது.) 

இந்தியாவின் பூபாளப் பாடல் என்னும் 
இப்பாடலின் சாராம்சம் வருமாறு...

இந்தியத் தாயே! 
மக்களின் இன்ப துன்பங்களைக் 
கணிக்கின்ற நீயே
எல்லோருடைய மனத்திலும் 
ஆட்சி செய்கிறாய்!
நின் திருப்பெயர் பஞ்சாப்பையும், 
சிந்துவையும், 
குஜராத்தையும், மராட்டியத்தையும், 
திராவிடத்தையும், ஒரிசாவையும், 
வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி 
அடையச் செய்கிறது!
நின் திருப்பெயர் விந்திய, 
இமயமலைத் தொடர்களில் 
எதிரொலிக்கிறது. யமுனை, கங்கை, 
ஆறுகளின் இன்னொலியில் 
ஒன்று படுகின்றன. இந்தியக் 
கடலலைகளால் வணங்கப்படுகிறது.
அவை நின்னருளை வேண்டுகின்றன
. நின் புகழைப் பரப்புகின்றன
. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் 
கணிக்கின்ற தாயே, 
உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

இந்தப் பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் 
பாடி முடிக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புக் குழு
 1950 ஜனவரி 24இல் "ஜன கண மன....
பாடலை நாட்டின் தேசிய கீதமாக
 அங்கீகரித்தது. 

தாகூர் வங்காள மொழியில் எழுதிய
 பாடலின் 
இந்தி மொழி பெயர்ப்பே அதிகாரபூர்வமாக 
அங்கீகரிக்கப்பட்டது.

1911, டிசம்பர் 27ஆம் தேதி கல்கத்தாவில்
 நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் 
மகா நாட்டில்தான் இது முதன் முதலாகப் 
பாடப்பட்டது. (மகா நாட்டின் இரண்டாம் தினம்) 
முதல் நாளில் "வந்தே மாதரம்' 
பாடலே பாடப்பட்டது.

1912இல் தாகூரின் தத்துவபோதினி 
பத்திரிகையில் "பாரத விதாதா' என்னும் 
தலைப்பின் கீழ் இது வெளியிடப்பட்டது.
1919இல் "பஏஉ ஙஞதசஐசஎ நஞசஎ ஞஊ ஐசஈஐஅ' 
எனும் தலைப்பில் தாகூரே இதை 
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
வந்தே மாதரம்!
************************
"ஜன கண மன' தேசிய கீதமாக
 அங்கீகரிக்கப்பட்டபோதே 
சுதந்திர போராட்டத்தில் மக்களுக்கு
 உத்வேகமூட்டிய வந்தே மாதரம்
 பாடலுக்கும் தேசிய கீதத்துக்கு 
வழங்கப்படும் உயர்ந்த இடத்தை 
வழங்கவேண்டும் என்று 
தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பாடல்.......

வந்தே மாதரம்!
************************
சஸ்ய சுபலாம் மலயஜ சீதலாம்
சஸ்ய சியாமலாம் மாதரம்!
சுப்ரஜோத்சனா புளகீத யாமி னீம்
புல்லகுசுமித துருமதள சோபினீம்
சுகாசினீம் சுமதுர பாஷிணீம்
சுகதாம் வரதாம் மாதரம்!.
.....
இப்பாடலை அரவிந்தர் 
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்! 

அதன் தமிழ்ப்பொருள்..
..
""அம்மா வணங்குகின்றேன். 
இனிய நீர்ப்பெருக்கினை,
 இன் கனி வளத்தினை, 
தனி நறுமலயத் தண்காற்
(மலைகளின் குளிர்ச்சி)
சிறப்பினை, பைந்நிறப்
(சியாமள நிறம்)படினம் பரவிய 
, வணங்குகிறேன். வெண்ணிலாக்
 கதிர் விரித்திடும் இரவின்
 மலர் மணிப் பூந்திகழ் மணம்
 பல செறிந்தனை. குறுநகையுடன் 
குலவிய மாண்பினை. நல்குவை 
இன்பம்! வரம் பல நல்குவை! 
அம்மா வணங்குகிறேன்!

1882இல் வெளியான பங்கிம் சந்திரரின் 
ஆனந்த மட் எனும் நாவலில் 
இடம் பெற்ற ஒரு பாடலின்
 முதல் செய்யுள் இது. 

சமஸ்கிருத மொழியில்தான் 
வந்தே மாதரம் எழுதப்பட்டது.
1896இல் நடைபெற்ற இந்திய தேசியக்
 காங்கிரஸ் மகாநாட்டில்தான்
 இது முதன் முதலாகப் பாடப்பட்டது.
 இதற்கு இசையமைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.

தேசிய மொழி!
**********************
அரசியல் சட்டத்தின் பிரிவு 343(1) இன் படி
 தேவநாகரி லிபியிலான 
இந்தியே நாட்டின் அதிகாரபூர்வமான 
மொழி. இத்துடன் ஆங்கிலத்தையும் 
அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் 
அரசியலமைப்புச் சட்டம் 
அனுமதித்துள்ளது. 

அரசியல் சட்டத்தின் எட்டாம் 
அட்டவணையில் முதன்முதலாக
 14 மொழிகள் நாட்டின் அதிகாரபூர்வ
 மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. 

தற்போது இதில் மொத்தம் 22 மொழிகள் இடம் 
பெற்றுள்ளன. அவை.....,
1.இந்தி, 2.தமிழ், 3.மலையாளம், 4.வங்காளி,
 5.அசாமி, 6.தெலுங்கு, 7.மராத்தி, 8.ஒரியா, 
9.பஞ்சாபி, 10.சமஸ்கிருதம், 
11.சிந்தி, 12.குஜராத்தி, 13.காஷ்மீரி, 
14.உருது, 15.கன்னடம், 16.கொங்கணி, 
17.மணிப்பூரி, 18.நேப்பாளி, 19.தோஹ்ரி
,20.போட்டோ, 21.சந்தாலி, 22.மைதிலி 
போன்றவை.

தேசியக் காலண்டர்!
*******************************
சைத்ர மாதத்தை முதல் மாதமாகக் கொண்ட 
"சக' வருடக் காலண்டரே
 (1957 மார்ச் 22ஆம் தேதி காலண்டர்) 
மறு சீரமைப்புக் கமிட்டியால் 
அங்கீகரிக்கப்பட்ட 
இந்திய தேசியக் காலண்டர்.

சக வருடக் காலண்டர் கி.பி. 78இல்
 மன்னர் கனிஷ்கரால் 
துவங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
சக ஆண்டு 365 நாட்கள் கொண்டது. 
சாதாரண ஆண்டில் சைத்ர முதல் தேதி 
மார்ச் 22ஆகும். லீப் வருடத்தில்
 சைத்ர முதல் தேதி 21ஆம் தேதியாகும்.
தேசிய நாட்காட்டி சக ஆண்டு 1879இல்
 சைத்ர முதல் நாளில் (கி.பி.1957 மார்ச் 22) 
தொடங்கியது. 

சக வருட மாதங்கள் சைத்ரம்,
 வைசாக, ஜேஷ்ட, ஆஷாட, 
ச்ராவண, பாத்ர, ஆஸ்வின,
 கார்த்திக, அக்ரஹாயன, 
பெüஷ, மாகம், பால்குன.
இதனுடன் நாம் இன்று வெகுவாகப் 
பயன்படுத்தும் ஆங்கிலக் கிரிகோரிய
 காலண்டரும் புழக்கத்தில் உள்ளது. 

கிரிகோரியன் காலண்டர் வருடத்திலிருந்து 
78ஐக் கழித்தால் அப்போதைய சகவருடம் 
கிடைக்கும். (சான்றாக....2016-78=1938--சக வருடம்)

தேசிய விலங்கு!
************************
புலி! ஆம்! இதுவே தேசிய விலங்காகத் 
தேர்ந்தெடுக்கப்பட்டது! 
ஆசியப் பகுதியின் சிறப்பு மிக்க 
விலங்கு இது!
புலி இனம் அழிந்து போகாமல் இருக்க
இந்தியாவில் புலி பாதுகாப்புத் திட்டம் 
1973இல் துவங்கப்பட்டது.

தேசியப் பறவை!
************************
மயில்! 1963இல் இந்தியாவின் 
தேசியப் பறவையாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
 சமஸ்கிருத மொழியின் ஆதி நூலான
 ரிக்வேதத்தில் மயில் பற்றிய குறிப்புகள் 
உள்ளன. 

தேசிய மரம்!
*******************
""அட! அற்புதம்!'' என்று நினைக்கும்படியான 
மரம்! ஆம் ஆலமரம்! எவ்வளவு சரியான தேர்வு!
 பல்வேறு மாநிலத்தவரும்,
 பல்வேறு மொழியினரும் விழுதுகளாய் 
பாரதத் தாயால் உருவாக்கப்பட்டோம்!
 இன்று அத்தாயை இவ்விழுதுகள் போல் 
வேரூன்றிக் காப்போம்! என்று கட்டியம்
 கூறுவது போல் அல்லவா 
இது அமைந்துள்ளது!

தேசியக் கனி!
*********************
"பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும்
 "மாம்பழம்' தான் நமது தேசியக் கனி!
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே
 இந்தியாவில் மாங்கனிச் சாகுபடி நடந்ததாம்!
 (அன்னை, தந்தையே உலகம் என்று
 எல்லோருக்கும் விநாயகர் 
மூலமாக ஞானம் வழங்கிய கனி அல்லவா?)

தேசிய விளையாட்டு!
*********************************
ஹாக்கி! இதுவரை இந்தியா
இந்த விளையாட்டில் 8 தங்கப் பதக்கங்கள் 
வென்றுள்ளது! இந்த விளையாட்டின் சிறந்த
 வீரரான தியான்சந்திரன் பிறந்த தினமான 
ஆகஸ்டு 29ஆம் நாள் 
"தேசிய விளையாட்டு 
தினமாகக் கொண்டாடப் படுகிறது.

தேசிய விருதுகள்!
****************************
பாரத ரத்னா! இந்தியாவின்
 மிகச் சிறந்த விருது இதுதான்! 
இன்னொரு சுவாரசியமான செய்தி
! இந்தியாவைப் போல் பாகிஸ்தானின் 
மிக உயர்ந்த விருது "நிஷான் இ பாகிஸ்தான்' 
ஆகும். இந்த இரு விருதுகளையும் பெற்ற 
ஒரே நபர் மொரார்ஜி தேசாய்!
பாரத ரத்னாவிற்கு அடுத்த 
நிலையிலுள்ள உயர்ந்த சிவிலியன் 
விருதுகள் முறையே 
பத்ம விபூஷண்! பத்ம பூஷண்! பத்மஸ்ரீ! 
ஆகியவை!

தேசிய தினங்கள்!
*************************
குடியரசு தினம்..........ஜனவரி 26
சுதந்திர தினம்............ஆகஸ்டு 15
காந்தி ஜெயந்தி...........அக்டோபர் 2

தேசிய நீர் வாழ் உயிரி!
***********************************
டால்பின்! இந்தியாவில் கங்கை நதியிலும், 
பிரம்மபுத்திரா நதியிலும் 
மற்றும் கடல் பகுதிகளிலும் 
காணப்படும் கடல் வாழ் உயிரினம்! 
அழகும் நட்பும் நிறைந்தது!
 1972 வன உயிரியல் பாதுகாப்புச் 
சட்டத்தின் கீழ் இவ்வுயிரினம்
 உட்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப் படுகிறது.

தேசிய நதி!
*****************
2008ஆம் ஆண்டு இந்தியாவின்
 தேசிய நதியாக "கங்கை' அறிவிக்கப்பட்டது!
 இந்தியாவின் நீளமான நதி, 
புனிதமான நதி, மிக அதிக தண்ணீர் பரப்பு
 கொண்ட நதி. அதிக எண்ணிக்கையிலான 
துணை நதிகள் கொண்ட நதி என்று 
பல சிறப்புகள் உடையது இது!

தேசியப் பாரம்பரிய விலங்கு!
******************************************
இந்திய வரலாற்றிலும், கலாசாரத்திலும்
 மிக முக்கிய பங்கு வகிக்கும் "யானை'யே 
இந்தியாவின் தேசியப் பாரம்பரிய
 விலங்காகக் கருதப்படுகிறது. 
ஆசிய யானைகளில் 60 சதவிகிதமும்
 இந்தியாவிலேயே உள்ளன.

இன்னும் இந்தியாவின் 
எண்ணில் அடங்காது! எத்தனை மொழி! 
எத்துணைக் கலாசாரம்! இந்நாட்டின்
 கலாசாரத்தையும், மாண்பையும், 
காப்போம்! கல்வி, விளையாட்டு
 போன்ற அத்தனை துறைகளிலும் 
மேன்மேலும் சாதிப்போம்! 
நம் தாய்க்குப் பெருமை சேர்ப்போம்! 
ஒற்றுமையுடன், அன்புடன், 
உறவாடுவோம்! ஜெய்ஹிந்த்!

நன்றி : தினமணி நாளிதழ் - 12.08.2016
*************