Saturday, September 26, 2015

ஹால்மார்க் முத்திரை---சுத்தமான தங்கம் என்பதன் அடையாளம்

ஹால்மார்க்!
 

சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.அதிக அளவில் உலோகத்தைக் கலக்கும்போது தங்கத்தின் சுத்தத் தன்மை குறைந்துவிடுகிறது. வாங்கும் போது 22 கேரட்டுக்கான விலை கொடுத்து வாங்கிவிட்டு, விற்கும்போது அது வெறும் 18 கேரட் தங்கம்தான் என்பது தெரியவரும்போது வாங்கியவர்கள் நொந்துபோய் விடுகிறார்கள்.
 

யார் வழங்குகிறார்கள்?

இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.
 

தர பரிசோதனை!

தங்களுக்குத் தேவையான நகைகளை பொற்கொல்லர்களை வைத்து செய்வது தான் நகைக் கடைகளின் முந்தைய வழக்கம். ஆனால், இப்போதோ வளையலுக்கு ஒருவர், நெக்லஸுக்கு ஒருவர், மோதிரத் திற்கு இன்னொருவர் என பலரிடமிருந்து நகைகளை மொத்தமாகச் செய்து, அதை வாங்கி விற்கின்றனர் நகைக் கடைக்காரர்கள். இப்படிச் செய்யப்படும் நகைகளை ஹால்மார்க் டீலர்களிடம் கொடுத்து நகையின் தரத்தைப் பரிசோதிக்கின்றனர்.


இப்படி தரம் பரிசோதிக் கப்பட்ட நகைகள் 22 கேரட் எனில் 91.6% ஹால்மார்க் முத்திரையைத் தருகின்றனர். 18 கேரட் நகை எனில் 75% ஹால்மார்க் முத்திரை தருவார்கள். எனவே, ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்ப்பதோடு, அது 91.6 சதவிகிதமா, இல்லை 75 சதவிகிதமா என கட்டாயம் பார்ப்பது அவசியம்.
 

முத்திரையில் ஏமாற்றினால்..?

நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் என தெரிய வந்தால் உடனடியாக பி.ஐ.எஸ். அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது. தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள்
பரிசோதித்து புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள்.
எந்த கடையில் நகை வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு
வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு டீலருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.
ஹால்மார்க் முத்திரை என்பதை ஏதோ ஐ.எஸ்.ஐ. முத்திரை போல பொதுவான ஒரு விஷயமாக மக்கள் நினைக் கிறார்கள். தரத்திற்கேற்ப இந்த முத்திரையும் மாறும் என்பதில் கவனம் கொண்டால், நகை வாங்கும்போது நாம் ஏமாற வாய்ப்பில்லை என்பது நிச்சயம்.

Friday, September 25, 2015

சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்

Tuesday, September 22, 2015

மேற்கு நோக்கி ஓடுகின்ற ஆறுகள்

கேரளாவில் மொத்தம் 44 ஆறுகள் ஓடுகின்றன.
 

இவற்றில் பெரியாறு, பாரதப்புழா, பம்பை,
சாலக்குடி மற்றும் நெய்யாறு உட்பட 41
ஆறுகள் மேற்கு நோக்கியும்,

  
 கபினி, பவானி
மற்றும் பாம்பாறு ஆகிய ஆறுகள் கிழக்கு
நோக்கியும் ஓடுகின்றன.

தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்

தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்:

குற்றாலம் – திருநெல்வேலி
பாபநாசம் - திருநெல்வேலி
கல்யாண தீர்த்தம் - திருநெல்வேலி
ஒகேனக்கல் – தருமபுரி
சுருளி – தேனி
திருமூர்த்தி – கோவை

முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்

 முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்

காவேரி – 760 கி.மீ
தென்பெண்ணை – 396 கி.மீ
பாலாறு – 348 கி.மீ
வைகை – 258 கி.மீ
பவானி – 210 கி.மீ
தாமிரபரணி – 130 கி.மீ

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்:

 தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்:

1. ஊட்டி
2. கொடைக்கானல்
3. குன்னுர்
4. கோத்தகிரி
5. ஏற்காடு
6. ஏலகிரி
7. வால்பாறை

. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்:

1. தால்காட் கணவாய்
2. போர்காட் கணவாய்
3. பாலக்காட்டுக் கணவாய்
4. செங்கோட்டைக் கணவாய்
5. ஆரல்வாய்க் கணவாய்
6. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை- சேர்வராயன் மலை (1500 – 1600 மீ)
7. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – ஆனை மலை (2700 மீ)

தமிழ்நாட்டின் முதன்மைகள்:

✔தமிழ்நாட்டின் முதன்மைகள்:

1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)
7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)
8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்
.பி.டி. தியாகராயர் 9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்
10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்
11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)
12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)
13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்
14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை
15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி
16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்
17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS
18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்
19. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்
20. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி
21. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி
22. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்
23. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசகவதம் (1916)
24. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931)
25. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்
26. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்
27. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)
28. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)
29. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)
30. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)
31. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)
32. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)
33. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)
34. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
35. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்
36. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி)
37. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)
38. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)
39. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)
40. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)
41. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்
42. மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம்
43. மிகப் பழமையான அணை – கல்லணை
44. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை,முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)
45. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)
46. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)
✔1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்

மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:

2. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:

1. நீலகிரி மலை
2. ஆனை மலை
3. பழனி மலை
4. கொடைக்கானல் குன்று
5. குற்றால மலை
6. மகேந்திரகிரி மலை
7. அகத்தியர் மலை
8. ஏலக்காய் மலை
9. சிவகிரி மலை
10. வருஷநாடு மலை
✔
3. தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:

1. ஜவ்வாது மலை
2. கல்வராயன் மலை
3. சேர்வராயன் மலை
4. பச்சை மலை
5. கொல்லி மலை
6. ஏலகிரி மலை
7. செஞ்சி மலை
8. செயிண்ட்தாமஸ் குன்றுகள்
9. பல்லாவரம்
10. வண்டலூர்

அசல் தேன் எது? கலப்பட தேன் எது?

அசல் தேன் எது? கலப்பட தேன் எது?
என்பதை எளிமையான முறையில் கண்டறியலாம்.

1) ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விடுங்கள், அந்த தேனை,
தேன் ஊற்ற‍ப்பட்ட‍ காகிதம் உறிஞ்சாம லும் மேற்கொண்டு அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம்.

ஒரு வேளை, அந்த காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்ல‍து பரவ விட்டாலோ அந்த தேன் கலப்படத் தேன் என்பதை அறியலாம்

2) ஒரு டம்ளர் நிறைய‌ தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒருதுளி தேனை விடுங்கள். அந்த ஒரு துளி தேன், தண்ணீரோடு கரையாம ல் நேராக கீழே சென்று விழுந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம்.
ஒருவேளை அந்த ஒரு துளி தேன் தண்ணீரோடு கலந்துவிட்டால், அது கலப்படத் தேன் என்பதை அறியலாம்.

3) ஒரு தீக்குச்சியின் மருந்து பகுதியில் ஒரு துளி தேனை விட்டு, அந்த தீக்குச்சியை, தீப்பெட்டியின் பக்க‍ வாட்டில் உள்ள‍ மருந்து பட்டையில் உரசுங்கள், உடனே தீப்ப‍ற்றி எறிந்தால், அது அசல்தேன் என்பதை அறியலாம்.
ஒருவேளை அந்த தீக்குச்சி எரியாமல் போனால் அது கலப்படம் தேன் என்பதை அறியலாம்.

Sunday, September 20, 2015

தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் --- பற்றி

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால்
நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!

இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேப்போல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான்.
அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளோம்.
தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.
மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று.
சரி, இப்போது தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம்.

1 - நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.
2 - தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்.
3 - சிறுநீரக பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.
4 - செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய்
தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம். ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம் 5 - எடையைக் குறைக்கும் தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
6 - உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
7 - தலைவலி இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.
8 - நீர்ச்சத்து அதிகமாகும் தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
9 - கர்ப்பிணிகளுக்கு நல்லது கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றன
ர்.

Saturday, September 19, 2015

அடுக்கு மாடி கட்டிடத்தில் UDS என்பது என்ன...

                                                   அடுக்கு மாடி கட்டிடத்தில் UDS
  அடுக்கு மாடி கட்டிடத்தில் UDS என்பது பிரிக்கப்படாத மனை என்பதைக் குறிக்கும்.
2,400சதுர அடி மனை பரப்பில் 500 சதுர அடியில் 2 வீடுகள் (500*2=1000), 750 சதுர அடியில் 4 (750*4=3000) வீடுகள் என மொத்தம் 4,000 சதுர அடியில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது, , 2,400 சதுர அடி பரப்பில் உள்ள மனையில், 4,000 சதுர அடியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதன் விகிதம் என்ன தெரியுமா? 2400/ 4000 = 0.6. இதனைக் கொண்டு நீங்கள் வாங்கும் வீட்டின் சதுர அடியால் பெருக்கினால் அதற்கான பிரிக்கப்படாத மனை.

அதாவது 500 சதுர அடி வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனையின் அளவு (யூ.டி.எஸ்.) 300 சதுர அடி. 750 சதுர அடி வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனையின் அளவு 450 சதுர அடி.
பிரிக்கப்படாத மனையின் அளவு சரியா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? மொத்தம் உள்ள ஃபிளாட்டுகளுக்கான பிரிக்கப்படாத மனையின் அளவைக் கூட்டினால் மொத்த மனையின் பரப்பு வர வேண்டும்.
இப்போது நாம் பார்த்த கணக்குப்படி 500 சதுர அடி உள்ள 2 வீடுகளின் பிரிக்கப்படாத மனையின் பரப்பு 600 (300*2) சதுர அடி. 750 சதுர அடி உள்ள 4 வீடுகளின் மொத்த பிரிக்கப்படாத மனையின் பரப்பு 1,800 (450*4) சதுர அடி. இரண்டையும் கூட்டினால் மொத்தம் பிரிக்கப்படாத மனையின் பரப்பு 2,400 சதுர அடி வந்துவிட்டதா? ஒரு வேளை கணக்குச் சரியாக வராவிட்டால், குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

நன்றி : தி இந்து நாளிதழ் - 19.09.2015

Friday, September 18, 2015

முதல் இந்திய மொழி தமிழ்



இந்தி, ஆங்கிலம், சைனிஷ் டிஜிட்டல் உலகின் எதிர்காலம் - மோடி.

ஆனால் இவர்களுக்குத் தெறியுமா?

1)டிஜிட்டல் மொழியாக அறிமுகம் செய்யபட்ட முதல் இந்திய மொழி தமிழ்.

2) வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா என கண்டறிய அனுப்பப்பட்ட விண்கலத்தில் அனுப்பியது தமிழைதான் இந்தியை இல்லை.

3) சீனா வானொலியில் சைனிஷ்க்கு அப்புறம் தமிழில் வணக்கம் சொல்வது வழக்கம்
.
4) ரஞ்ய நாடாளுமன்றத்தின் நான்கு வாயிலின் ஒரு வாயிலின் பெயர் நம் தமிழின் முதல் எழுத்தான அ

5) உலகம் அழிந்துவிட்டால் அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் மொழி நூல்களில் திருக்குறள் உள்ளது
.
6) லண்டன் கேம்ப்ரிட்ஜில் தமிழ் மொழிக்கென தனி துறை துவங்கப்பட்டுள்ளது.

7) ஆறு நாடுகளில் அங்கிகரிக்கப்பட்ட அலுவல் மொழி.தமிழ்.

Friday, September 11, 2015

முக்கிய கோவில்களின் கோபுர உயரங்கள்




முக்கிய கோவில்களின்
கோபுர உயரங்கள்.


1. ஸ்ரீரங்கம் –236 அடி
2. திருவண்ணாமலை – 217 அடி
(ராஜகோபுரம் கிழக்கு)
3. தஞ்சாவூர் – 216 அடி
(பிரகதீஸ்வரர் கோபுரம்)
4. ஆவுடையார் கோவில் – 200 அடி
5. தென்காசி – 178 அடி
6. கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி
7. மதுரை – 170.8 அடி
(தெற்கு கோபுரம்)
8. ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி
(வடபத்ர சாயி கோபுரம்)
9. மன்னார்குடி – 154 அடி
10. குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி
11. சிதம்பரம் – 140 அடி
(வடக்கு கோபுரம்)
12. திருவானைக்கா – 135 அடி
(கீழ கோபுரம்)
13. சுசீந்திரம் – 134 அடி
14. திருவாடனை – 130 அடி
15. குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி
16. இராமேஸ்வரம் – 126 அடி
(கிழக்கு கோபுரம்)
17. திருச்செந்தூர் – 127 அடி
18. சங்கரன் கோவில் – 125 அடி
19. திருவாரூர் – 118 அடி
   (கீழ கோபுரம்)

Monday, September 7, 2015

ஹலால் என்றால் என்ன?

ஹலால்’ – எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? ஆம், 

பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள்.
அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம்.
ஆனால் அது தான் தவறு. ஹலால் என்பதன் உண்மையான அர்த்தமே வேறு. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஹலால் என்பது உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையைக் குறிக்கும். அந்த முறையின் படி உண்ணும் விலங்குகள் கொல்லப்பட்டால் மட்டுமே இஸ்லாமியர்கள் அந்த இறைச்சியை உண்பார்கள். புரியவில்லையா? சரி, இதனைப் பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.
ஹலால் என்றால் என்ன? ஹலால் என்பது உண்ணும் விலங்குகளை வெட்டும் போது அதன் கழுத்துப் பகுதியானது முழுமையான அறுபடாமல், வலியை உணரச் செய்யும் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுப்பதாகும். முக்கியமாக இந்த முறையில் வெட்டும் முன்பு, ‘பிஸ்மில்லாஹி வல்லாஹு (அல்லாஹும்ம மின்க-வலக) அல்லாஹும்ம தகபல் மின்னி’ என்று கூறி பின் வெட்டுவார்கள்.
என்ன நன்மை?: ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் போது, கால்நடைகளில் உடலில் உள்ள அனைத்துரத்தமும் வெளியேற்றப்படும். இதனால் இரத்தத்தின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.
கூர்மையான கத்தி: ஹலால் முறையில் அறுக்கப் பயன்படும் கத்தி மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும். மேலும் அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது குறைவான வலியை உணருமாறு மிகவும் வேகமாக அறுக்க வேண்டும்.
நரம்பு மண்டலம் அறுபடக்கூடாது: ஹலால் முறையில் வெட்டும் போது கால்நடைகளின் மூச்சுக்குழாயும், இரத்தக்குழாயும் ஒரே நேரத்தில் அறுக்கப்பட்டு உயிரிழக்கச் செய்ய வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் வெட்டப்படாமல் இருக்க வேண்டும்.
தண்டுவடம் அறுபடக்கூடாது: ஹலால் முறையில் வெட்டும் போது, கால்நடைகளின் தண்டுவடம் துண்டிக்கப்படால் இருக்க வேண்டும். ஏனெனில் தண்டுவடம் துண்டிக்கப்பட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் பாதிப்பிற்குள்ளாகி இதயத்தின் செயல்பாடு நின்று போகும் நிலை ஏற்படும். இப்படி இதயம் நின்றுபோனால், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு அங்கேயே தங்கிவிடக்கூடும்.
இரத்தம் வெளியேற்றப்படவும்: பொதுவாக உடலில் கிருமிகள் உருவாதற்கு காரணம் இரத்தம் தான். ஆனால் ஹலால் முறையில் இரத்தம் முழுவதும் வெளியேற்றப்படுவதால், கால்நடைகளின் மூலம் எவ்வித கிருமிகளும் உடலினுள் நுழையாது.விரைவில் கெட்டுப் போகாது: ஹலால் முறையில் கால்நடைகளை வெட்டுவதால், இறைச்சி விரைவில் கெட்டுப் போகாமல், நீண்ட நேரம் இருக்கும். இதற்கு காரணம், வெட்டும் போது கால்நடைகளின் இரத்தம் இறைச்சியில் கலந்துவிடாமல் இருப்பது தான்.
கால்நடைகளுக்கு வலி ஏற்படுவதில்லை: சாதாரணமாக கால்நடைகளைக் கொல்லும் போது அவைகளுக்கு மிகுந்த வலி ஏற்படும். ஆனால் ஹலால் முறையில் வெட்டும் போது, வலியை உணர வைக்கும் நரம்பு முதலில் வெட்டப்படுவதால், அவை வலியை உணர்வதில்லை.
வெட்டும் போது கால்நடைகள் ஏன் துடிக்கிறது?: ஹலால் முறையில் வெட்டும் போதும் கால்நடைகள் துடிப்பதற்கு காரணம், வலி அல்ல. உடலில் இருந்து அனைத்து இரத்தமும் வெளியேற்றப்படுவதால், தசைகள் சுருங்கும் போது, கால்நடைகள் துடிப்பது போன்றும், துள்ளுவது போன்றும் நமக்கும் தெரிகிறது.
ஆய்விலும் உறுதி: இதனை உறுதி செய்யும் விதமாக மேற்கொண்ட ஆய்வில், ஹலால் முறையில் வெட்டிய கால்நடைகள், மற்ற முறையில் வெட்டப்பட்ட கால்நடைகளை விட மிகக்குறைந்த அளவிலேயே வலியை உணர்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Monday, August 31, 2015

வாழ்கை எனும் Ring tone

வாழ்கை எனும் Ring tone 

1)சோகத்தை ~ Delete செய்யுங்க
2)சந்தோஷத்தை save செய்யுங்க
3)சொந்தங்களை~ recharge செய்யுங்க
4)நட்புகளை ~Down load செய்யுங்க
5)எதிரிகளை ~Erase செய்யுங்க
6)உண்மையை ~Broad cast செய்யுங்க
7)துக்கத்தை ~switch off செய்யுங்க
8)வேதனையை ~Not reachable செய்யுங்க
9)பாசத்தை ~In coming செய்யுங்க
10)வெறுப்பை ~out going செய்யுங்க
11)சிரிப்பை ~In box செய்யுங்க
12)அழுகையை ~out box செய்யுங்க
13)கோபத்தை ~Hold செய்யுங்க
14)இன்முகத்தை ~send செய்யுங்க
15)உதவியை ~ok செய்யுங்க
16)இதயத்தை ~vibrate செய்யுங்க

பிறகு பாருங்க வாழ்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்.

Interesting thing about Saturday in 2015

Interesting thing about Saturday in 2015

4/4/2015 Saturday
6/6/2015 Saturday
8/8/2015 Saturday
10/10/2015 Saturday
12/12/2015 Saturday
Calender of 1998 ,
And,
Calendar of 2015 r same
Date & Day even Festivals
are same,

Who said ................
V cannot get back the past

I hope, I am the first who inform u...
Enjoy the year of 1998 in 2015....!
So
We are back to 90s.

Sunday, August 30, 2015

புதிய தலைமை செயலகம்---சிறப்பு அம்சம்



திமுக ஆட்சியில்உருவாக்கப்பட்ட புதிய தலைமை செயலகம் பற்றி என்ன தெரியும் ?

1. இந்தியாவிலேயே மிக பெரிய அரசு கட்டிடம் !!
2. தங்க சான்றிதல் பெற்ற கட்டிடம்.
3. திராவிட தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அடக்கிய கட்டிடம்.
4. தண்ணீர் மற்றும் மின்சார சேமிப்பை குறித்த திட்டம் அடங்கிய கட்டிடம்.
5. சக்கர வடிவிலான 36 isosceles த்ரியாங்க்லஸ் கொண்ட
6. ஒரே சமயத்தில் 500 வாகனங்களை நிறுத்த முடியும்.
7. பூங்கா லைப்ரரி என உள்ளடக்கியது !!
8. ஆசியாவிலே மிக பெரிய சிறந்த பசுமை வீடு கட்டிடம்.
9. ஒரு சட்டமன்றம் இயங்க தேவையான மின்சாரத்தில் அதிக அளவு (20%) தானே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் படைத்த கட்டிடம்.
10. ஆசியாவில் இருந்து பல மாணவர்கள் இந்த கட்டிடம் பற்றி வந்து பார்த்து கற்று படித்தது வரலாறு !
11. சட்டமன்றத்தில் பகல் நேரங்களில் இயற்க்கை சூரிய ஒளி விளக்காக இயங்கும் வண்ணம் அமைக்க பெற்றது.
12. அணைத்து மின் உபகாரணங்களும் தேவை கேற்ப தானாகவே ஆன் ஆப் ஆகும் திறன் கொண்டது.
13. அணைத்து கட்டிடமும் ஓர் இணைப்பில் இணைக்கபட்டே உள்ளது !
இக்கட்டிடம் நடைமுறையில் இருந்திருந்தால் இது தமிழகத்தின்அடையாளமாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் மூக்கின் மேல் விரலையும் வைக்க செய்
திருக்கும்

Saturday, August 29, 2015

சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம்

சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம்
வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.


எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும். சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம். இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதை தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம். இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.
உதாரணம் – ப்ரஷர் குக்கர் – இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது. இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது. இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால்
சிறைச்சாலையில் உள்ள பாரதீய கலவரக்காரர்களை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரபட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷக் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது. பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.
உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும். அதனால் தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும். மிருதுவானால் போதாது.
போஜனம் சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள். அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.
மண்பாண்டம் – 100%
வெண்கலம் – 97%
பித்தளை – 95%


இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13% தான்இருக்கும். இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை, இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள். எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.
இதைப் போன்றே ரிஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் போன்ற காற்று, ஒளி படாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே. Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Wednesday, July 8, 2015

மொபைல் எண், நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க…!

மொபைல் எண், நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க…!

ஒரு மொபைல் நம்பரிலிருந்து நண்பர்களின்
மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைபேசிக்கு அழைக்கும் பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கான இந்த டெக்னிக் (Mobile Number Hiding Technical) இருப்ப‍து வெகு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதில்லை.
அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல்
போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடையமொபைல் நம்பர்
தெரிவதற்கு பதில்Private Number என் று மட்டும் வரும். உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில்தெரியாது.
உங்களுடை மொபைல் நம்பர் 9876543210 எனில்
அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.
இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண் *67 9876543210 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களு டைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார் கள்.
இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது. மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.
இதே முறையை இப்படி யும் செய்யலாம்.
நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர்கேர்க்கு
( Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங் கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது.
அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.
மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென
நினைத்தால், மீண்டும்கஸ்டமர்கேருக்கு போன்செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.
முக்கிய குறிப்பு:
இந்த வசதி மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றாமல் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும். மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார். எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வச தியைப் பயன்படுத்தி தவறான நடவ டிக்கைகளில், தவறான வழி முறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்வீர்கள்.
பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங் களுடைய எண்
மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்

ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.
1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படி?இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.முகவரி:The Director,Directorate of Cencus Operations, Tamilnadu,E-Wing, Third Floor, Rajaji Bhavan,Besant nagar,Chennai-600 090,Phone:91-44-24912993.Mail: dco-tam.rgi@nic.in
2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?* SMS ல் UID STATUS <14 digit EID> என டைப் செய்து 51969 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம் போன் செய்யவும்.*https://resident.uidai.net.in/check-aadhaar-statusஇணைய தளத்தில் பெறலாம்.*
3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?http://eaadhaar.uidai.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

 4. தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?ஆதார் இணையதளமானhttps://resident.uidai.net.inஉள் செல்லவும். பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும். ஆதார் பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP (ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும். பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.
5. ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது (Updation) எப்படி?பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும் கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,* இணையதளமானhttps://resident.uidai.net.inஉள்சென்று செய்யலாம்.*விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம். முகவரி:UIDAI,Post box No.:10,Chhindwara,Mathya Pradesh-480 001,INDIA .அல்லதுUIDAIPost Box No:99Banjara Hills,Hyderabad - 500 034,INDIA.மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்பவும்.