Saturday, January 31, 2015

..தமிழ் எண்களை அறிவோம் ..

தமிழை அறிவோம்


-------------------------------------------------------------------------
1,2,3,4,5,6,7,8,9,0.என்ற எண்ணுக்கு
 தமிழில் க ,உ ,ங ,ச ,ரு ,சா ,எ ,அ ,கூ ,ஓ .

 இதை எளிதில் ஞாபகத்தில் வைத்துகொள்ள
ஒரு எளியமுறை இதோ....

"க"டுகு - "உ"ளுந்து -"ங"னைத்து - "ச"மைச்சு-"ரு"சிச்சு -"சா"ப்பிட்டேன்-
" எ"ன -"அ"வன்- "கூ"றினான் -"ஓ"-என்றாள்  .
--------------------------------------------------------------------------------------------------






Tuesday, January 27, 2015

Salary day special

Salary day special !!!
9.00 : *beep beep*.. Msg received...
Salary credited to ur a/c
Me : Yipeeee..
9.01 : *beep beep*
Home EMI auto debited..
9.02 : *beep beep*
Car loan EMI auto debited..
9.03 : *beep beep*
Credit card bill auto debited..
9.04 : *beep beep*
Phone bill auto debited..
9.05 : *beep beep*
Electricity bill auto debited..
9.06 : *beep beep*
LIC EMI auto debited..
9.07 : *beep beep*
Medical insurance EMI de
bited.
.
9.08 : *beep beep*
Pls maintain minimum balance...!!!

Thursday, January 22, 2015

CAMPUS questions




    • wesome Answers In 
      IAS Examination

      Read And learn
      Q. How can you drop 
      a raw egg onto
       a concrete floor without 
      cracking it?
      A. Concrete floors are 
      very hard to crack! 
      (UPSC Topper)

      Q. If it took eight men ten 
          hours to build a wall, 
          how long would it take
          four men to build it?
      A.   No time at all it is already
         built. (UPSC 23rd Rank
         Opted for IFS)

      Q. If you had three apples
       and four oranges 
      in one hand and four 
      apples and three oranges
       in the other hand, 
      what would you have?
      A. Very large hands. 
      (Good one)
       (UPSC 11 Rank Opted 
      for IPS)

      Q. How can you lift an 
      elephantwith one hand?
      A. you will never find an elephant 
      with one hand. 
      (UPSC Rank 14 Opted for IES)

      Q. How can a man go eight days 
      without sleep?
      A. No Probs, He sleeps at night.
       (UPSC IAS Rank 98)

      Q. If you throw a red stone i
      nto the blue sea what it will become?
      A. It will Wet or Sink as simple
       as that. (UPSC IAS Rank 2)

      Q. What looks like half apple ?
      A: The other half. (UPSC - IAS Topper )

      Q. What can you never 
      eat for breakfast?
      A: Dinner.

      Q. Bay of Bengal is in which state?
      A: Liquid (UPSC 33 Rank)

      Interviewer said "I shall either
       ask you ten easy questions or one really 
      difficult question. Think well before 
      you make up your mind!
      " The boy thought for a while and
       said, "my choice is 
      one really difficult question."
       "Well, good luck to you, 
      you have made your own choice!
       Now tell me this.
      "What comes first, Day or Night?"
      The boy was jolted into 
      reality as his admission depends 
      on the correctness of his answer, 
      but he thought for a while 
      and said, "It's the DAY sir!"
      "How" the interviewer asked.
      "Sorry sir, you promised me 
      that you will not ask me
       a SECOND difficult question!"
      He was selected for IIM!

      Technical Skill is the mastery 
      of complexity, while Creativity
      is the master of presence of mind.
      This is a famous paper
       written for an Oxford 
      philosophy exam, normally 
       requiring an eight page essay
       answer and expected 
      to be backed up with source 
      material, quotes and 
      analytical reasoning. This guy wrote
       the below answer and 
      topped the exam!

      OXFORD EXAMINATION
       BOARD 1987, 
      ESSAY QUESTION
      Question: 
      What is courage? (50 Marks)
      Answer
       (After 7 blank pages, at the end of the last page…): 
      This is courage





Tuesday, January 20, 2015

Sunday, January 18, 2015

படிப்பு

                                                      படிப்பு

இன்று படிப்பு என்ற படியை நீ ஏறினால்
நாளை மதிப்பு என்ற மாடியை கட்டாயம்
சென்றடையலாம்.
போதிக்கும் போது புரியாத கல்வி
உன் வாழ்க்கையை பாதிக்கும்
போதுதான் புரியும்.
உன்னைவிட்டு யார் பிரிந்தாலும்
நீ கற்ற கல்வி என்றுமே பிரியாது..
பிச்சைபுகினும் கற்கை நன்றே.!
கல்வி ஒன்றுதான் உலகில் அசைக்க முடியாத சொத்து...

Wednesday, January 7, 2015

அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை

                     அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை
  
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதை தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

                விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp , Windows 7 ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்…!!

Thursday, January 1, 2015

கடி ஜோக்



பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், 
அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ 
 அம்மணமா தான் இருக்கும்.2. அதிக மார்க்
 வாங்கி மாநிலத்திலேயே முதல் 
மாணவனா வந்தாலும், ஆம்லெட்
 சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் 
முட்டை வாங்கித்தான் ஆகணும்....3. 
என்னதான் இட்லி மல்லிகைப்பூ 
மாதிரி இருந்தாலும் அதை தலையில் 
வச்சிக்க முடியாது...4. ஒரு பெண் எவ்வளவு
 சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் 
கருப்பாகத்தான் இருக்கும்.5. பொங்கலுக்கு
 மட்டும் தான் அரசு விடுமுறை. 
ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் 
விடுமுறை விடுவதில்லையே ஏன்....?
6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு
 கொம்பு முளைக்காது.7. குச்சி மிட்டாய்ல குச்சி
 இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....
8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி 
தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது.
...9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... 
பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....
10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் 
இருந்தாலும்....அது எத்தனை கிலோனு எடை
போட்டுபார்க்க முடியாது....11. கோழிக்கு கோடி
 கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது 
முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு 
எல்லாம் போடாது...12. வாழ்க்கைக்கும் 
வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்....
ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்.
... ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் 
அடிக்கும்.13. என்னதான் நெருப்புக் கோழியா 
இருந்தாலும்....அதனால் அவிச்ச முட்டை போட
 முடியாது.14. ஒரு சிற்பி உளியால கல்லுல
 அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை
அடிச்சா அது கொலை.15. சும்மா இருக்கிறவன், 
சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள,
 சும்மா சும்மா கிண்டல் பண்ணா.... சும்மா 
இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் 
பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு 
சும்மா சொல்றேன்


கடி தத்துவங்கள்....
1) தண்ணியில கப்பல் போனா ஜாலி
கப்பல்ல தண்ணி போனா காலி!
2) ஈஸி சேர்ல உட்கார்ந்து பரீட்சை 
எழுதினாலும்
சரியா படிக்கலைன்னா பெயில்தான்
 ஆகனும்!
3) காப்பி பொடியில் காப்பி தயாரிக்கலாம்....
இட்லி பொடியில் இட்லி தயாரிக்க முடியுமா?
4) யானை மேல நாம உட்கார்ந்தா சவாரி!
நம்ம மேல யானை உட்கார்ந்தா ஒப்பாரி!
5) தினமும் காலண்டரைக் கிழிக்கிறது
பெரிய விஷயமில்லை, ஒவ்வொரு நாளும்
நாம் என்னத்தைக் கிழிச்சோம்கிறது தான்
பெரிய விஷயம்....
6) என்னதான் ரெண்டு காது இருந்தாலும்,
நாம ஒண்ணுன்னு சொன்னா,
ஒண்ணுன்னு தான் கேட்கும்.
7) பல்லு வலின்னா பல்ல பிடுங்கலாம்............
கண்ணு வலின்னா கண்ண பிடுங்க முடியுமா?
8) பஸ்சு மேலே நாம ஏறலாம்...தப்பில்ல...
பஸ்சு நம்ம மேல ஏறினால்....நாம தப்புவமா...???
9) என் ஜீனியரிங் காலேஜில் 
மெடிக்கல் லீவு எடுக்கலாம்.
மெடிக்கல் காலேஜில் என் ஜீனியரிங் 
லீவு எடுக்க முடியுமா?
10) நம்ம உடம்பு முழுவதும்தான் 'செல்' 
இருக்கு.
ஆனா அதுக்குன்னு ஒரு 'சிம் கார்டு' 
கிடைக்குமா?
11) எறும்பு நினைச்சா
யார் காதை வேணும்னாலும்
கடிக்கலாம்.
யார் நினைச்சாலும்
எறும்பு காதை
கடிக்க முடியுமா?
12) கண்ணா தண்ணீ சூடா இருந்தாலும் 
சில்லுன்னு இருந்தாலும் நெருப்பை 
அணைக்கத்தான் செய்யும் தெரிஞ்சுக்க
எண்ணை சூடா இருந்தாலும் சில்லுன்னு
 இருந்தாலும் நெருப்பை வளர்க்கத்தான் 
செய்யும் புரிஞ்சுக்க
13) டிக்கெட் வாங்கிட்டு
உள்ள போனா அது சினிமாத் தியேட்டர்.
உள்ளே போயிட்டு டிக்கெட் வாங்கினா
அது ஆபரேஷன் தியேட்டர்.
14) தங்கச் செயினை உருக்கினா 
தங்கம் வரும்.
வெள்ளிச் செயினை உருக்கினா
வெள்ளி வரும்.
சைக்கிள் செயினை உருக்கினா 
சைக்கிள் வருமா?

Friday, December 19, 2014

ஆய கலைகள் 64

ஆய கலைகள் 64ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்வோம்.1
.
எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)2. எழுத்தாற்றல் (லிகிதம்)3. கணிதம்4. மறைநூல் (வேதம்)5. தொன்மம் (புராணம்)6. இலக்கணம் (வியாகரணம்)7. நயனூல் (நீதி சாத்திரம்)8. கணியம் (சோதிட சாத்திரம்)9. அறநூல் (தரும சாத்திரம்)10. ஓகநூல் (யோக சாத்திரம்)11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)16. மறவனப்பு (இதிகாசம்)17. வனப்பு18. அணிநூல் (அலங்காரம்)19. மதுரமொழிவு (மதுரபாடணம்)20. நாடகம்21. நடம்22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)23. யாழ் (வீணை)24. குழல்25. மதங்கம் (மிருதங்கம்)26. தாளம்27. விற்பயிற்சி (அத்திரவித்தை)28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)30. யானையேற்றம் (கச பரீட்சை)31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)35. மல்லம் (மல்ல யுத்தம்)36. கவர்ச்சி (ஆகருடணம்)37. ஓட்டுகை (உச்சாடணம்)38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)39. காமநூல் (மதன சாத்திரம்)40. மயக்குநூல் (மோகனம்)41. வசியம் (வசீகரணம்)42. இதளியம் (ரசவாதம்)43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)47. கலுழம் (காருடம்)48. இழப்பறிகை (நட்டம்)49. மறைத்ததையறிதல் (முஷ்டி)50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)51. வான்செலவு (ஆகாய கமனம்)52. கூடுவிட்டுக் கூடுபாய்தல்(பரகாயப் பிரவேசம்)53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)54. மாயச்செய்கை (இந்திரசாலம்)55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

Tuesday, November 25, 2014

love

 இந்துக்கள்  ஒவருவரும் 8 குழந்தைகள்
பெற்றுக்கொள்ளவேண்டும்
 மத்திய மந்தி(ரி)


அதற்கான ..முன்னோட்டம்
இதுதானோ ??










WHEN lovers

அவன் :
கை வளையல் எண்ணி கொண்டே ..பேச பிடிக்கும்!!!


அவள் :
நீ  கொஞ்சுகிற போது ..குத்துகிற மீசை .... பிடிக்கும்!!!

WHEN married

அவன் :
சும்மா ..இருக்கிறாயா .. வளையல்..சத்தம் காதை  துளைக்கிது!!!!

 அவள் :
மோஞ்சியை ..பாரு ..போய் shave பண்ணிக்கிட்டு ..வா
பாக்க ..சகிக்கலை !!!!!





Saturday, November 22, 2014

போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற

                                     
"வரலாற்றின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?
#ஹெரடோடஸ்


 இஸ்லாமின் பிறப்பிடம் எது?
#அரேபியா.


ஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர் யார்?
  முகம்மது நபி  


 புத்தரின் திருமறை என்னவென்று அழைக்கப்பட்டது?
விடை: #பீடகங்கள்


பீடகங்கள் எத்தனை
பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது? அவை யாவை?
#விடை: மூன்று பிரிவுகளாக அவை
சுத்த, வினய, அபிதம்ம பீடங்கள்

 
யாருடைய காலம் பொற்காலம் என்று பழங்கால வரலாற்றில் கூறப்படுகிறது?
விடை: குப்தர் காலம்

  
அக்பர் ஆட்சி செய்த காலம் எத்தனை ஆண்டுகள்?
விடை: 50 ஆண்டுகள்



 அக்பர் எப்போது எங்கு பிறந்தார்?
கி.பி. 1542, அமரக்கோட்டை


 துன்பத்திலிருந்து விடுபட
#புத்தர் கூறும் எட்டு மார்க்கங்கள் யாவை?
1. நல்ல எண்ணம்
2. நற் சிந்தனை
3. சரியான பேச்சு
4. சரியான செயல்
5. சரியான வாழ்வு
6. சரியான முயற்சி
7. சரியான மனநிலை
8. சரியான கவனம்
 

 பெரிய புராணத்தை எழுதியவர் யார்?
  #சேக்கிழார்
. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்?
#திருத்தக்கத்தேவர்
.கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் யார்?
#ஜெயங்கொண்டார்
. பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர் யார்?
#நம்பியாண்டார்_நம்பி
. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
#நாதமுனிகள்



 11. கி.பி.1848 ஆம் ஆண்டு இந்தியக் கவர்னரஜெனரலாக பொறுப்பேற்றவர் யார்?
12. டல்ஹௌசியின் நாடுபிடிப்புக் கொள்கைக்கு பெயர் என்ன?
13.வாரிசு இழப்புக் கொள்கை எப்புரட்சிக்கு வித்திட்டது?
14.
இரண்டாம் ஆங்கில சீக்கியப் போர் நடந்த காலகட்டம் எது?
15.இரண்டாம் ஆங்கில_சீக்கியப்போரை டல்ஹௌசி எந்த ஆண்டு அறிவித்தார்?

#விடை
11.டல்ஹௌசி பிரபு
12. வாரிசு இழப்புக் கொள்கை
13. 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க்கலகம்.
14. கி.பி 1848-1849
15. 1848

  
சார்க் அமைப்பின்
முதல் பொதுச்செயலாளர் யார்?
#ஆஷான்


 வாரத்திற்கு 7 நாட்கள் என்பதனை
உலகிற்கு அறிவித்தவர்கள்
#சால்டியர்கள்



 குதுப்மினாரை
கட்டி முடித்தவரின் பெயர்
#இல்துமிஷ்



 லெமூரியக்கண்டம் என பெயர் வரக் காரணமாக இருந்த விலங்கு எது?
#லெமூர் எனும் குரங்கு



மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள நான்கு
கோபுரங்களில் எந்த திசையிலுள்ள கோபுரம் உயரமானது?
#தெற்கு


தென்னிந்தியப் புரட்சியின் கதாநாயகர்கள் யார்?
#மருது_பாண்டியர்கள்



சிவாஜியை ஔரங்கசீப் எவ்வாறு அழைத்தார்?
#மலை_எலி

 
தத்துவ இயலின் #தந்தை
என்று போற்றப்படுபவர் யார்?
#சாக்ரடீஸ்


 புகழ்பெற்ற
#விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
#தருமபாலர்



"வரலாற்றின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?
#ஹெரடோடஸ்




Friday, November 21, 2014

Saturday, November 1, 2014

ஐவகை நிலங்கள்

ஐவகை நிலங்கள்
----------------------------
1. மலையும் மலை சார்ந்த நிலமும் - #குறிஞ்சி
2. காடும் காடுசார்ந்த நிலமும் - #முல்லை
3. வயலும் வயல் சார்ந்த நிலமும் - #மருதம்
4. கடலும் கடல் சார்ந்த நிலமும் - #நெய்தல்
5. மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் - #பாலை

Wednesday, October 15, 2014

தமிழின் எண்ணியல் வலிமை


தற்பொழுது நாம் பயன்படுத்தி வரும் எண்கள் இந்தோ-அரேபிக் (INDO-ARABIC) எண்கள். ஆனால் உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியில் சிறப்பு எழுத்துக்களால் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று முதல் பத்து வரை மட்டுமின்றி நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனி எழுத்துகள் பயன்பட்டிருந்தன.

கோடி, பத்து கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி, இலட்சம் கோடி, கோடி கோடிக்கும் தமிழ் எண்கள் உள்ளன என்பது தமிழின் எண்ணியல் வலிமையை காட்டுகிறது. தமிழர்கள் உலகம் வியக்கும் கணக்கியலை அக்காலத்திலேயே பயன்படுத்தி உள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது.

இந்து-அரேபிக் (INDO-ARABIC), ரோமன்(ROMAN) எண்களை பற்றி சொல்லிக்கொடுத்த நம் கல்வி, தமிழ் எண்களை பற்றி சொல்லிக்கொடுக்க தவறிவிட்டது. தமிழர் எண்ணியல் தமிழ் மக்களுக்கு சேரும் வண்ணம் இனியாவது நம் பிள்ளைகளுக்கு தமிழ் எண்கள் குறித்து சொல்லிக் கொடுப்போம்




Saturday, October 11, 2014

Sunday, September 14, 2014

Friday, August 29, 2014

ஆன்லைனில் வேலைவாய்ப்புப் பதிவு

                           ஆன்லைனில் வேலைவாய்ப்புப் பதிவு

ஆன்லைனில் வேலைவாய்ப்புப் பதிவு மேற்கொள்ள   tnvelaivaaippu.gov.in/Empower என்ற   இணையதள முகவரிக்கு சென்று பின்னர், கிரியேட் நியூ யூசர் ஐடி   (create new user ID) என்பதை கிளிக் செய்ய   வேண்டும். பின்னர் தங்களது பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட   விவரங்களை பதிவு செய்து யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (User   Id and Password) உருவாக்கி கொள்ள வேண்டும். பின்,   கண்டினியூ (Continue) செய்ய வேண்டும். பின்னர் தாயின்   பெயர், சாதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இதையடுத்து, காண்டாக்ட் டீடெய்ல்ஸ் (Contact details)   எனும் முகவரியில் கல்வி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இவை   அனைத்ததைம் பதிவு செய்த பின் ஓகே (ok) என்பதை கிளிக்  செய்தால்  பதிவு எண் ஒன்று வழங்கப்படும். அந்த பதிவை நாம் பிரிண்ட்   (print) எடுத்துக் கொள்ளலாம். யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை   தவறாமல் குறித்துக்
கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை புதுப்பித்தல்  அல்லது கூடுதல் பதிவுக்கு இது அவசியமாகும்.

Monday, August 18, 2014

PEN DRIVE - வைரஸ் பிரச்னை

PEN DRIVE - வைரஸ் பிரச்னை

தகவல்களை சேமித்து வைக்க பெரும்பாலான நபர்கள் USB Pendrive-களை பயன்படுத்துவார்கள். இதில் முக்கியமான பிரச்னை வைரஸ் பிரச்னை, வைரஸ்கள் மிக சுலபமாக Pendrive-ல் புகுந்து, தகவல்களை பாதிக்கிறது. அப்போது கணனியில் Pendrive-வை ஓபன் செய்தால் எந்த தகவலும் இருக்காது. ஆனால் Properties சென்று பார்க்கும் போது பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.
கோப்புகளை மீண்டும் திரும்ப பெறுவதற்கு, எந்தவொரு மென்பொருளையும் உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு முதலில்,
1. Pendrive-யை கணனியில் சொருகி கொள்ளுங்கள்.
2. Start –> Run –> cmd –> Enter கொடுக்கவும்.
3. இப்போது உங்கள் Pendrive எந்த டிரைவில் இருக்கிறது என பாருங்கள். இதற்கு My Computer சென்று தெரிந்து கொள்ளலாம்.
4. உதாரணமாக E: டிரைவில் Pendrive இருக்கிறது என வைத்து கொள்வோம், அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5. அதன் பின் attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள், ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.
சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள், உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

Thursday, July 31, 2014

ANDROID PHONE உபயோகிப்பவர்களுக்கு


ANDROID PHONE உபயோகிப்பவர்களுக்கு=தமிழில் எழுத.
 

1) முதலில் நீங்கள் Play Store க்குச் செல்ல வேண்டும்
2) அதில் தேடல் கட்டத்தில் tamil keyboard என type செய்யுங்கள்

3) இப்பொழுது வரும் மென்பொருட்கள் பட்டியலில் ‘Sellinam’ செல்லினம் என ஒரு மென்பொருளும் இருக்கும்.
4) இதை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
5) இன்ஸ்டால் செய்த பிறகு தமிழில் எழுத நீங்கள் செய்ய வேண்டிய வேலை:-
6) முதலில் settings செல்ல வேண்டும்.
7) அங்கு நிறைய settings இருந்தாலும் Input and control (or) Language and input (or) Keyboards and input methods என android version க்குத் தகுந்தாற் போல் உள்ளதைத் தேர்வு செய்யுங்கள்.
8) அதில் செல்லினம் என்பதற்குப் பக்கத்தில் உள்ள கட்டத்தை click செய்து எனேபிள் செய்யுங்கள்.
9) இப்பொழுது எதையும் எழுத முற்படும்போது வரும் key board ஆங்கிலத்தில் இருக்கும்; நீங்கள் தமிழில் எழுதவேண்டும் என்றால் முதலில் keyboard-ல் இடது கீழ் மூலையில் உள்ள EN என்பதைக் click செய்தால் EN என்பது ‘மு' என மாறிவிடும். ஆனால் எழுத்துக்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கும். தமிழில் எழுதவேண்டியவற்றை ஆங்கிலத்தில் டைப் செய்தால் போதும், ‘வணக்கம்’ என்பதற்கு ‘vanakkam’ என டைப் செய்து ‘Enter’ அல்லது ஏதாவது நிறுத்தற் குறியீடுகளைத் தட்டினால் போதும்.
அம்மா – ammaa,
அப்பா – appaa,
சரி – sari,
தவறு – thavaru
10) அடுத்த முறை: keyboard-ல் இடது கீழ் மூலையில் உள்ள ‘மு’ என்றிருப்பதை மீண்டும் அழுத்தினால் ‘த’ என்று ஆகும். தற்போது தமிழ் எழுத்துக்களே வரும். அதனைத் தேவைக்கேற்றவாறு அழுத்தினால் தமிழ் எழுத்துக்கள் பதிவாகும்.
க – க, கா – க+ஆ, கி – க+இ, இப்படியே.....
அமராவதி – அ, ம, ர, ஆ, வ, த, இ.
இப்படியே தங்களுக்குப் பிடித்தமான முறையில் சுலபமாகத் தமிழில் எழுத முடியும்.