Friday, August 29, 2014

ஆன்லைனில் வேலைவாய்ப்புப் பதிவு

                           ஆன்லைனில் வேலைவாய்ப்புப் பதிவு

ஆன்லைனில் வேலைவாய்ப்புப் பதிவு மேற்கொள்ள   tnvelaivaaippu.gov.in/Empower என்ற   இணையதள முகவரிக்கு சென்று பின்னர், கிரியேட் நியூ யூசர் ஐடி   (create new user ID) என்பதை கிளிக் செய்ய   வேண்டும். பின்னர் தங்களது பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட   விவரங்களை பதிவு செய்து யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (User   Id and Password) உருவாக்கி கொள்ள வேண்டும். பின்,   கண்டினியூ (Continue) செய்ய வேண்டும். பின்னர் தாயின்   பெயர், சாதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இதையடுத்து, காண்டாக்ட் டீடெய்ல்ஸ் (Contact details)   எனும் முகவரியில் கல்வி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இவை   அனைத்ததைம் பதிவு செய்த பின் ஓகே (ok) என்பதை கிளிக்  செய்தால்  பதிவு எண் ஒன்று வழங்கப்படும். அந்த பதிவை நாம் பிரிண்ட்   (print) எடுத்துக் கொள்ளலாம். யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை   தவறாமல் குறித்துக்
கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை புதுப்பித்தல்  அல்லது கூடுதல் பதிவுக்கு இது அவசியமாகும்.

Monday, August 18, 2014

PEN DRIVE - வைரஸ் பிரச்னை

PEN DRIVE - வைரஸ் பிரச்னை

தகவல்களை சேமித்து வைக்க பெரும்பாலான நபர்கள் USB Pendrive-களை பயன்படுத்துவார்கள். இதில் முக்கியமான பிரச்னை வைரஸ் பிரச்னை, வைரஸ்கள் மிக சுலபமாக Pendrive-ல் புகுந்து, தகவல்களை பாதிக்கிறது. அப்போது கணனியில் Pendrive-வை ஓபன் செய்தால் எந்த தகவலும் இருக்காது. ஆனால் Properties சென்று பார்க்கும் போது பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.
கோப்புகளை மீண்டும் திரும்ப பெறுவதற்கு, எந்தவொரு மென்பொருளையும் உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு முதலில்,
1. Pendrive-யை கணனியில் சொருகி கொள்ளுங்கள்.
2. Start –> Run –> cmd –> Enter கொடுக்கவும்.
3. இப்போது உங்கள் Pendrive எந்த டிரைவில் இருக்கிறது என பாருங்கள். இதற்கு My Computer சென்று தெரிந்து கொள்ளலாம்.
4. உதாரணமாக E: டிரைவில் Pendrive இருக்கிறது என வைத்து கொள்வோம், அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5. அதன் பின் attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள், ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.
சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள், உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

Thursday, July 31, 2014

ANDROID PHONE உபயோகிப்பவர்களுக்கு


ANDROID PHONE உபயோகிப்பவர்களுக்கு=தமிழில் எழுத.
 

1) முதலில் நீங்கள் Play Store க்குச் செல்ல வேண்டும்
2) அதில் தேடல் கட்டத்தில் tamil keyboard என type செய்யுங்கள்

3) இப்பொழுது வரும் மென்பொருட்கள் பட்டியலில் ‘Sellinam’ செல்லினம் என ஒரு மென்பொருளும் இருக்கும்.
4) இதை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
5) இன்ஸ்டால் செய்த பிறகு தமிழில் எழுத நீங்கள் செய்ய வேண்டிய வேலை:-
6) முதலில் settings செல்ல வேண்டும்.
7) அங்கு நிறைய settings இருந்தாலும் Input and control (or) Language and input (or) Keyboards and input methods என android version க்குத் தகுந்தாற் போல் உள்ளதைத் தேர்வு செய்யுங்கள்.
8) அதில் செல்லினம் என்பதற்குப் பக்கத்தில் உள்ள கட்டத்தை click செய்து எனேபிள் செய்யுங்கள்.
9) இப்பொழுது எதையும் எழுத முற்படும்போது வரும் key board ஆங்கிலத்தில் இருக்கும்; நீங்கள் தமிழில் எழுதவேண்டும் என்றால் முதலில் keyboard-ல் இடது கீழ் மூலையில் உள்ள EN என்பதைக் click செய்தால் EN என்பது ‘மு' என மாறிவிடும். ஆனால் எழுத்துக்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கும். தமிழில் எழுதவேண்டியவற்றை ஆங்கிலத்தில் டைப் செய்தால் போதும், ‘வணக்கம்’ என்பதற்கு ‘vanakkam’ என டைப் செய்து ‘Enter’ அல்லது ஏதாவது நிறுத்தற் குறியீடுகளைத் தட்டினால் போதும்.
அம்மா – ammaa,
அப்பா – appaa,
சரி – sari,
தவறு – thavaru
10) அடுத்த முறை: keyboard-ல் இடது கீழ் மூலையில் உள்ள ‘மு’ என்றிருப்பதை மீண்டும் அழுத்தினால் ‘த’ என்று ஆகும். தற்போது தமிழ் எழுத்துக்களே வரும். அதனைத் தேவைக்கேற்றவாறு அழுத்தினால் தமிழ் எழுத்துக்கள் பதிவாகும்.
க – க, கா – க+ஆ, கி – க+இ, இப்படியே.....
அமராவதி – அ, ம, ர, ஆ, வ, த, இ.
இப்படியே தங்களுக்குப் பிடித்தமான முறையில் சுலபமாகத் தமிழில் எழுத முடியும்.

Sunday, July 13, 2014

VIDEOS - rAgA illam-opening & Love never Dies

      

   rAgA-illam-Opening-1995 and 1999
                                                                                              LOVE never DIES        

Saturday, July 5, 2014

பழுதடைந்த CD/DVD-தகவல்களை மீட்க



பழுதடைந்த CD/DVD
களை வைத்துக்கொண்டு அதில்
உள்ள தகவல்களை படிக்க
முடியாமல் கவலைப்படுகிறீர்களா?
உங்களிடம் உள்ள பழுதடைந்துள்ள
CD/DVD
களிலிருந்து தகவல்களை மீட்க
இலவச மென்பொருள்கள் உள்ளன.
இவை உங்கள்
தகவல்களை ஒவ்வொரு
செக்டார்களாக படித்து அதை நல்ல
முறையில் மீட்டு தருகின்றன.

1. Isobuster
தரவிறக்கச்சுட்டி :
http://www.isobuster.com/
2.Cd Recovery Tool box
தரவிறக்கச்சுட்டி :
http://www.oemailrecovery.com/
downloads/
CDRecoveryToolboxFreeSetup.exe
3. CDCheck
தரவிறக்கச்சுட்டி :
http://www.kvipu.com/CDCheck/
download.php


Friday, June 20, 2014

FREEKALL

                                         FREEKALL என்ற சேவை அறிமுகம்


இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால் செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. சாதாரண black & white Nokia போன் போதும்..ஐபோன் (iphone) முதல் சாதாரண சைனா போன் வரை அனைத்திலும் இது வேலை செய்யும்.
 
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444” என்ற Toll Free நம்பருக்கு போன் செய்ய வேண்டும்(இந்திய எண்ணிலிருந்து). இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம் எடுக்கப்படமாட்டாது.
நாம் இந்த நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாக கட் ஆகிவிடும். கட் ஆன அடுத்த நொடியில் ”8067915000” என்ற எண்ணில் இருந்து நமது போனிற்கு (mobile) கால் வரும். அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களது நம்பரை (phone number) dial செய்து அவர்களுடன் இலவசமாக பேசிக் கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவா ? ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம் தான் பெங்களுர் மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..
இப்பொழுதே பயன்படுத்தி பயன் அடையுங்கள்

Thursday, June 19, 2014

cctv கேமரா

                                                               cctv கேமரா
 
Webcamera-வை C.C.T.V. Cameraவாக எளிதில் மாற்ற‍லாம் முற்றிலும் இலவசமாக . . ..
சிலர் தனது வீட்டை அல்லது அலுவலகத்தை கண்காணிக்க நினைப்பார்கள். ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கில் செலவா கும் என நினைத்து வைக்காமலே விட்டு விடுவார்கள். எந்த வித செலவும் இல்லாமல் உங்கள் கணிணியில் உள்ள வெப்கேமரா அல்லது லாப்டாப்பில் உள்ள cameraவை எளிதில் cctv கேமராவாக எளிதல் மாற்றிவிடலாம்.
இதை செய்வதற்கு yawcam என்ற மென்பொருளை நாம் பயன்படுத்தி க் கொள்ளலாம். இதில் மகிழ்ச்சி யான செய்தி என்னவெ னில் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் தான். எனவே எந்த செலவும் நமக்கு இல்லை.
இதில் பல்வேறு வசதிகள் உள்ளது. உதாரணமாக motion detection என்ற வசதிஉள்ளது. எதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசைவு ஏற்பட்டால் உடனே நமக்கு email மூலம் alert செய்யும். நாம் கேமரா வை கண்காணிக்காது இருக்கும்போது வீட்டில் யாராவது புகுந்தால் அதை நமக்குதெரியப்படுத்த இந்த வசதி உதவியாக இருக்கும்.


இன்டர்நெட்மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள்வீட்டை அல்லது கடையை கண்காணித்து
கொள்ளலாம். இதில் கூடுதல் ஒரு வசதி என்னவெனில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுின்றது என யாருக்கும்தெரியாது. எதோ கம்யுட்டர் என்றுதான் அனை வரும் நினைத்துக் கொள்ளவார்கள். இதனால் வீட்டில் கடையில் நடக்கும் உண்மை நிலையை யாருக்கும் தெரியாமல் நாம் கண்காணிக்கலாம்.
இந்த மென்பொருளில் பின் வரும் வசதிகள் இடம் பெற்று ள்ளது.
Yawcam features:
.: Video streaming
.: Image snapshots
.: Built-in webserver
.: Motion detection
.: Ftp-upload
.: Text and image overlays
.: Password protection
.: Online announcements for communities
Scheduler for online time
.: Time lapse movies
.: Run as a Windows service
.: Multi languages
பின் வரும் இணையத்திற்கு சென்று இந்த மென்பொருளை இலவச மாக Download செய்து கொள்ளலாம்.:
http://www.yawcam.com/download.php

Saturday, June 14, 2014

தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பம்

புதிய குடும்பஅட்டை கேட்டு விண்ணபித்து 30 நாள் ஆகியும் கிடைக்க வில்லையா?
இந்த தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பத்தை பயன்படுத்தவும்.
 தகவல் அறியும் உரிமைச் சட்டம் 6(1) இன் கீழ் விண்ணப்பம்

பதிவு தபால் ஒப்புகை அட்டையுடன் தேதி:
விடுநர்,...........

பெறுநர்,
பொது தகவல் அலுவலர்,
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005,
மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம்,
___________ மாவட்டம்,
ஐயா,
பொருள் : புதிய குடும்ப அட்டை கேட்ட எனது விண்ணப்ப தேதி: ________ அதற்கான மனு எண் :____புதிய குடும்ப அட்டை கேட்டு நான் செய்த விண்ணப்பத்தின் மீது நாளதுவரை எனக்கு வழங்கிடவில்லை. இதைப் பற்றியும் இப்பொருள் மீது தங்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - இன் கீழ் தகவல்கள் அளிக்க வேண்டுகிறேன்.
         1) மேற்காணும் எனது விண்ணப்பத்திற்கு எண் அளிக்கப்பட்ட பகிர்மானப் பதிவேட்டின் ; பதிவு செய்யப்பட்ட தன்பதிவேட்டின் ; பதிவு அஞ்சல் பதிவேட்டின் சிறப்புப்பதிவேட்டின் ; சம்பந்தப்பட்ட பக்கத்தின் ஒளிநகல்.
        2) மேற்காணும் எனது விண்ணப்பத்தின் மீது எந்த அலுவலர் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனும் நடைமுறைகளைக் காட்டும் ஆணையின் ஒளிநகல்
         3) மேற்காணும் எனது விண்ணப்பத்தின் மீது விசாரணை செய்த அலுவலர்கள் பெயர் பதவி அலுவலக விலாசம் விசாரணை செய்த தேதி ஆகியத் தகவல்களையும் அவர்களின் நாட்குறிப்பின் அந்த நாட்களின் ஒளிநகல்
         4) புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து எத்தனை நாட்களுக்குள் அளிக்க வேண்டும் , அளிப்பதை எந்த காரணங்களால் நிறுத்தி வைக்கலாம், நிராகரிக்கலாம்; என்று கூறும் அரசு ஆணைகளின் ஒளிநகல்
        5) மேற்காணும் எனது விண்ணப்பத்தினைக் கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அனைத்துப் பக்கங்களின் ஒளிநகலையும் அலுவலகக் குறிப்புக்கட்டுடன் வருவாய் ஆய்வாளரின் தனிபதிவேட்டில் சிறப்பு பதிவேட்டில் எனது விண்ணப்பம் பதியப்பட்டுள்ள பக்கத்தின் ஓளிநகல்
        6) நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் எனக்கு குடும்ப அட்டை அளிக்காமல் இன்று வரை கால தாமதம் செய்யும் அலுவலரின் பெயர், பதவி, விலாசம், அதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளக் காரணம் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்
       7) நான் கோரிய புதிய குடும்ப அட்டை எனக்கு அளிப்பதற்கு தங்கள் அலுவலகத்திற்குத் தடையாக உள்ள காரணங்கள் அதை நியாயப்படுத்தும் அரசு ஆணைகளின் ஒளிநகல்
       8) குடும்ப அட்டை விண்ணப்பங்களை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற எத்தனை தினங்களுக்குள் இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட சுற்றறிக்கையின் ஒளி நகல்
       9) 1.5.2013 முதல் 9.6.2014 வரையிலான தங்கள் அலுவலக “புதிய குடும்ப அட்டை வழங்கல் பதிவேட்டின்” ஒளி நகல்
       10) மாவட்ட , கோட்ட , வட்ட , மண்டல துணை வட்ட ஆட்சியர் மற்றும் பிர்க்க வருவாய் அலுவலர்களின் செல்பேசி மற்றும் முகவரிகளை வழங்கவும்
        குறிப்பு: தகவல் அறியும் உரிமைச் சட்ட பிரிவு 4 இன் படி மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு துறை பொது தகவல் அலுவலர்கள் விவரங்கள் அவர்களின் முகவரிகள், எந்த தகவல்களுக்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் தங்கள் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படாத காரணத்தால் உரிய பொது தகவல் அலுவலர் முகவரி தெரியாத காரணத்தாலும் தங்களுக்கு இந்த மனுவை அனுப்புவதோடு சட்ட பிரிவு 6(3) இன் படி நடவடிக்கை வேண்டுகிறேன்.
இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமாக ரூ.10 க்கான நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இணைப்புகள்:
1) எனது புதிய குடும்ப அட்டை மனு
2) புதிய குடும்ப அட்டை கேட்டும் விண்ணப்பித்த மனுவின் ஒப்புகைச் சீட்டு
3) எனது நீக்கல் சான்று நகல்
                                                                                தங்கள் உண்மையுள்ள,

Friday, June 13, 2014

ஆண்-பெண்-ஏழு பருவங்கள்

பெண்களின் ஏழு பருவங்கள்:-
* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

ஆண்களின் ஏழு பருவங்கள்:-
* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.

Thursday, June 12, 2014

To know..மின்னஞ்சல் சரியானதா


இணையதளத்துக்கான லிங்க் http://www.verifyemailaddress.org/

ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள். அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில், நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும்.

நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா, இல்லை போலியானதா என்ற முடிவு வரும்.

குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால் அது Valid என்றும், இல்லை என்றால் not Valid என்றும் வரும். அதை வைத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

Friday, May 30, 2014

/// கவிதைகள்..என்னுடையது ///


                                          பாச மகன்
உயிரை நினைத்து நீ அழுகிறாய் ! என்று !
மெயிலில் பார்த்து நானும் அழுதேன் !
என்னை பார்க்கத்தான் அழுகிறாய் ! என்று !
எனக்கு தெரியாத ! அம்மா !
ஆஸ்திரலியாவில் இருந்தாலும் !
108 -ஆக ஓடி வருவேன் ! அம்மா !
 கடைசி யில் வராவிட்டாலும் ,கல்லறைக்கு வருவேன் !
கண்ணீரை காணிக்கை ஆக்குவேன்! கலங்காதே !அம்மா
             +++++++++++++++++++++++

               உள்ள(த்)தை சொல்லம்மா !! 

ஆஸ்திக்கு மகனென்று வளர்த்து !
அயல் நாட்டுக்கு அனுப்பி வைத்தாய் !
ஆஸ்தியோடு வாழ்கிறான் அமெரிக்காவில் !
ஆசைக்கு மகளென்று வளர்த்து !
அடுத்தவர்க்கு தாரை வார்த்து கொடுத்தாய் !
தள்ளாடுகிற உன்னை அஸ்திவாரமாக !
தாங்கி பிடிப்பது யாரம்மா !!
உன் மகள் அல்லவா!சொல்லம்மா !
மகளும் ஆஸ்திதான் எனறு இப்போதாவது!
உள்ள(த்)தை சொல்லம்மா !
 ஊர் அறியட்டும் !!!
*******************************

Friday, May 23, 2014

Thursday, May 22, 2014

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம்.
நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)
 
தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in

Sunday, May 18, 2014

PENDRIVE- virus

                                                            PENDRIVE- virus
 
வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி...!
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.
நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

Wednesday, May 7, 2014