Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, May 30, 2014

/// கவிதைகள்..என்னுடையது ///


                                   

கவிதை 

கதவைத் தட்டாமல் போகிறான் காலைப் பேப்பர் போடுபவன்,வாசலில் வீசிவிட்டுவேகமாய் மறைகிறான்.அவனே தட்டவில்லை என்றால்,வாய்ப்பு மட்டும் தட்டுமா என்ன?அது ஒன்றும் விருந்தாளி அல்ல,காத்திருந்து கதவு திறக்க.வாய்ப்பு தெருவில் நடக்கிறது,கூட்டத்தில் கரைகிறது,காற்றில் மிதக்கிறது,காலடிச் சத்தத்தில் ஒளிகிறது.தேடாத கண்களுக்குஅது வெறும் காற்று,தேடும் கால்களுக்குஅது திறந்த கதவு.உள்ளே உட்கார்ந்துகதவையே பார்க்காதே,வெளியே இறங்கு,வீதியில் நட.பேப்பரைப் போலவாய்ப்பும் வாசலில் இல்லை,வீசப்பட்ட இடத்தில் இல்லை,தேடும் இடத்தில் இருக்கிறது.நீ போ,அது வரும்.நீ தட்டு, அது திறக்கும்.

.......

 பாச மகன்
உயிரை நினைத்து நீ அழுகிறாய் ! என்று !
மெயிலில் பார்த்து நானும் அழுதேன் !
என்னை பார்க்கத்தான் அழுகிறாய் ! என்று !
எனக்கு தெரியாத ! அம்மா !
ஆஸ்திரலியாவில் இருந்தாலும் !
108 -ஆக ஓடி வருவேன் ! அம்மா !
 கடைசி யில் வராவிட்டாலும் ,கல்லறைக்கு வருவேன் !
கண்ணீரை காணிக்கை ஆக்குவேன்! கலங்காதே !அம்மா
             +++++++++++++++++++++++

               உள்ள(த்)தை சொல்லம்மா !! 

ஆஸ்திக்கு மகனென்று வளர்த்து !
அயல் நாட்டுக்கு அனுப்பி வைத்தாய் !
ஆஸ்தியோடு வாழ்கிறான் அமெரிக்காவில் !
ஆசைக்கு மகளென்று வளர்த்து !
அடுத்தவர்க்கு தாரை வார்த்து கொடுத்தாய் !
தள்ளாடுகிற உன்னை அஸ்திவாரமாக !
தாங்கி பிடிப்பது யாரம்மா !!
உன் மகள் அல்லவா!சொல்லம்மா !
மகளும் ஆஸ்திதான் எனறு இப்போதாவது!
உள்ள(த்)தை சொல்லம்மா !
 ஊர் அறியட்டும் !!!
*******************************