Saturday, May 27, 2017

தமிழ்நாட்டில் சிவனுக்குரிய ஸ்தலங்களின் பெருமைகள்

தமிழ்நாட்டில் சிவனுக்குரிய  
ஸ்தலங்களின்
பெருமைகள்...

ராஜ கோபுரத்தை விட

 மூலவருக்கு உயர்ந்த விமானம்
 உள்ள இடங்கள்

1,தஞ்சை – பிரகதீஸ்வரர்
2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
4,திருபுவனம் – கம்பேஸ்வரர்

சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள்.

1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்

சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள்.

1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை

காசிக்கு சமமான ஸ்தலங்கள்

1, திருவெண்காடு. 2, திருவையாறு.
 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு. 6, ஸ்ரீவாஞ்சியம்.
 7, விருத்தாசலம். 8, மதுரை.
9, திருப்புவனம்

தருமநூல்கள் 18.

கடவுளால் வகுத்தது தருமத்தை
 பற்றி மட்டும் உபதேசித்தது.

1.மனு, 2.அத்தி, 3.விண்டு, 4.வாசிட்டம்,
 5.யமம், 6.ஆபத்தமம், 7.யாஞ்ஞ வற்கியம்,
 8.பராசரம், 9.அங்கீரசம், 10.உசனம், 
11.காத்தியாயனம், 12.சம்பவர்த்தம்,
 13.வியாசம், 14.பிரகற்பதி, 
15.சங்க்லிதம், 16.சாதாதபம்.
 17.கௌதம், 18.தக்கம்.

பாரதத்தின் முக்தி ஸ்தலங்கள்

1,காசி 2,காஞ்சி 3,மதுராபுரி 4,அரித்துவார் 
5,உஜ்ஜையினி 6,அயோத்தி 7,துவாரகை.

பாரதமே பரமசிவம்.

1,திருப்பரும்பதம் – தலை உச்சி
2,திருக்கேதாரம் – நெற்றி.
3,காசி – புருவநடு
4,பிரயாகை – நெஞ்சு
5,தில்லை – இதயம்
6,திருவாரூர் – மூலம்.

முக்தி தரும் ஸ்தலங்கள்.

திருவாரூர் – பிறக்க முக்தி
காசி – இறக்க முக்தி
திருவண்ணாமலை – நினைக்க முக்தி
சிதம்பரம் – தரிசிக்க முக்தி
வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி
மதுரை – கூற முக்தி
அவினாசி – கேட்க முக்தி.

ஐந்து அற்புதங்கள்.

1, ஆவுடையார் கோவில் கொடுங்கை. 
2, கடாரங்கொண்டான் மதில்
3, திருவீழிமிழலை வௌவ்வால் 
ஒட்டிமண்டபம்
 4, தஞ்சாவூர் கோபுரம் 
5, திருவலஞ்சுழி பலகணி

திவசம் சிறப்பு இடம் 
{பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்.}

காசி, கயா {விஷ்னுபாதம் ஆலமரம்}
திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்}
பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, 
திலதர்ப்பணபுரி, செதிலப்பதி,
 {தசரதன்,ஜடாயுக்கு இராமன்
 லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.}
இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார்,
இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர்.

12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும்.

1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. – பிரம்மா, 
சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு 
{விஷாவகன் – பிரம்மா}
2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, 
மாசி – விஷ்ணு. பிறக்கும்நேரம் 
விஷ்ணுபதி புண்ணிய காலம்.
3, ஆனி, புரட்டாசி, மார்கழி, 
பங்குனி – சிவம். பிறக்கும் நேரம்
 “ஷடசீதி” {ஷடாங்கன் – சிவன்}
ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன 
– புண்ணியகாலம் – சூரியன் தெற்கு
 பயனிப்பது.
தை மாதப் பிறப்பு உத்தராயண –
 புண்ணியகாலம் – சூரியன் வடக்கு
 நோக்கி பயனிப்பது.

பெரிய தேர்கள் உள்ள ஸ்தலங்கள்.

திருவாரூர், திருநெல்வேலி, 
ஸ்ரீவில்லிபுதூர், திருவண்ணாமலை, 
சிதம்பரம், காஞ்சி, மதுரை.

பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்.

1, கேதாரம் – இமயம் {கேதாரேஸ்வரர்}
2, சோமநாதம் – குஜராத் {சௌராஷ்டிரம்,
சோமநாதேஸ்வரர்}
3, மகாகாளேசம் – உஜ்ஜையினி 
{மகா காளேஸ்வரர்}
4, விஸ்வநாதம் – காசி 
{விஸ்வநாதேஸ்வரர்}
5, வைத்தியநாதம் –
{மகாராஷ்டிரம், வைத்தியனாதர்}
6, பீமநாதம் – 
{மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.}
7, நாகேஸ்வரம் – 
{மகாராஷ்டிரம்,
 தாருகாவனம், நாகேஸ்வர்}
8, ஓங்காரேஸ்வரம் –
 மத்தியப்பிரதேசம் 
{அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்}
9, த்ரயம்பகம் –
 {மகாராஷ்டிரம், கௌதம்}
 திரயம்பகேஸ்வரர்.
10, குசுமேசம் – 
மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர்.
11, மல்லிகார்ஜுனம் –
 {ஆந்திரம்} ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர்.
12, இராமநாதம் – 
இராமேஸ்வரம் {தமிழ்நாடு}

சப்த விடங்கத் ஸ்தலங்கள்.
1, திருவாரூர் – வீதிவிடங்கர் – 
அஜபா நடனம்.
2, திருநள்ளாறு – நகரவிடங்கர் – 
உன்மத்த நடனம்.
3, நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் –
 வீசி நடனம்.
4, திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – 
குக்குட நடனம்.
5, திருக்கோளிலி – அவனிவிடங்கர் –
 பிருங்க நடனம்.
6, திருவாய்மூர் – நீல விடங்கர் – 
கமல நடனம்.
7, திருமறைக்காடு – புவனி விடங்கர் –
 ஹம்ஸபாத நடனம்.

பஞ்ச சபைத் ஸ்தலங்களும்,
 பஞ்சாட்சர வடிவமும்.

1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய
திருச்சிற்றம்பலம்
சிவயநம

- *சித்தர்களின் குரல்..

Tuesday, May 16, 2017

SYMBOLS WITH KEYBOARD..

HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD
Alt + 0153..... ™... trademark symbol
Alt + 0169.... ©.... copyright symbol
Alt + 0174..... ®....registered ­ trademark symbol
Alt + 0176 ...°......degre ­e symbol
Alt + 0177 ...±....plus-or ­-minus sign
Alt + 0182 ...¶.....paragr ­aph mark
Alt + 0190 ...¾....fractio ­n, three-fourths
Alt + 0215 ....×.....multi ­plication sign
Alt + 0162...¢....the ­ cent sign
Alt + 0161.....¡..... ­.upside down exclamation point
Alt + 0191.....¿..... ­upside down question mark
Alt + 1...........sm ­iley face
Alt + 2 ......☻.....bla­ck smiley face
Alt + 15.....☼.....su­n
Alt + 12......♀.....female sign
Alt + 11.....♂......m­ale sign
Alt + 6.......♠.....spade
Alt + 5.......♣...... ­Club
Alt + 3............. ­Heart
Alt + 4.......♦...... ­Diamond
Alt + 13......♪.....e­ighth note
Alt + 14......♫...... ­beamed eighth note
Alt + 8721.... ∑.... N-ary summation (auto sum)
Alt + 251.....√.....s­quare root check mark
Alt + 8236.....∞..... ­infinity
Alt + 24.......↑..... ­up arrow

 Alt + 25......↓...... ­down arrow
Alt + 26.....→.....ri­ght arrow
Alt + 27......←.....l­eft arrow
Alt + 18.....↕......u­p/down arrow
Alt + 29......↔...left right arrow

Friday, April 14, 2017

ஆசிரியர் மகிமை..."

"ஆசிரியர் மகிமை..."

T - Tact. - சாமர்த்தியம்
E - Education. - கல்வியறிவு
A - Ability. - திறமை
C - Character. - நன்னடத்தை
H - Health. - ஆரோக்கியம்
E - Enthusiasm. - ஊக்கம்
R - Regularity. - ஒழுங்குமுறை


SCHOOL என்ற ஆறு எழுத்து சொல்லிற்கு விளக்கம்.

S - Sincere. - உண்மை
C - Charecter. - நடத்தை
H - Health. - ஆரோக்கியம்
O - Obedient. - கீழ்ப்படிவு
O - Order. - ஒழுங்கு
L - Learn. - அறிவு


Wednesday, April 12, 2017

தேச பக்த்தர்கள் !!!????

 பி ஜே பி யில்
 இந்திய தலை சிறந்த தேச பக்த்தர்கள் !!!

1) "இந்திரா காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் ?
BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி...
2) "ராஜிவ் காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் ?
BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி...
3) தீவிரவாதி "ஆசாராம் பாபு" வின் வழக்கறிஞர் யார் ?
BJP பாராளுமன்ற உறுப்பினர்(MP) சுப்பிரமணிய சுவாமி...
4) போபால் விசவாயு மூலம் 10,000 இந்தியர்களை கொலை செய்த"வாரன் ஆன்டர்சனின்" வழக்கறிஞர் யார் ?
BJPயின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி...
5) ஊழல் பெருச்சாலி "லலித் மோடி"யின் வழக்கறிஞர் யார்?
BJP மாநில முதல்வர் "வசுந்தரா ராஜி"யின் கணவனும், மகளும்...
6) "வொடபோன்" வரி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் ?
BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி...
7) குஜராத் 500கோடி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் ?
BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி...
8) கடத்தல் மன்னன் "அலேமோ" வின் வழக்கறிஞர் யார் ?
BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி...
9) "சஹாரா ஸ்கேன்" ஊழல் குற்றவாளி "சுப்ராத் ராய்" வழக்கறிஞர் யார் ?
BJP அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்...
இந்தியாவின் முக்கிய வழக்குகளில்
"பணத்துக்காக" குற்றவாளிகளை ஆதரித்து ஆஜரான இவர்கள் தான் நமக்கு
தேச பற்று"
குறித்து பாடம் நடத்துகிறார்கள்...
இவர்கள் தான் கறுப்பு பணத்தை ஒழிக்க போகிறார்களாம்...!
🌋🌋🌋🌋🌋🌋🌋

Tuesday, April 11, 2017

புரூஸ்லீ - சில தகவல்கள் :

புரூஸ்லீ தகவல்கள்:

1940 ஆண்டு அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில்
சைனாடவுனில் பிறந்தார புரூஸ்லீ  

3வயது இருக்கும்போதே அவர்கள் குடும்பம்  ஹாங்காங்க்கு குடிப்பெயர்ந்தது

இயற்பெயர் --லீ ஜுன்பேன்
அமெரிக்க நர்ஸ் ஒருவர் அவர் பெயரை உச்சரிக்க முடியாமல்
அவரை புரூஸ் என்று அழைக்க அதுவே புரூஸ்லீ
என பெயர்நிலைத்து விட்டது

வேகம் என்றால் புரூஸ்லீ.அறிவியலை  மிஞ்சிய வேகம் கொண்வர்
சினிமாவில் ஒரு  நொடிக்கு 24 ஃபிரேம்கள் பயன்படுத்தப்படும்

{ 24 அசையாபடங்கள் ஒட்டப்பட்டால்தான் மூவி - திரையில் தெரியும்
ஆனால் புரூஸ்லி நடிக்கும்போது
34 ஃபரேம்கள் ஓட்டுயாக வேண்டும் }

இல்லை என்றால் மூவ்மென்ட் திரையில் தெரியாது
அறிவியலை  மிஞ்சிய வேகம் கொண்ட அபார சண்டை கலைஞர்

புரூஸ்லீ இறந்த 7 வது நாள் வெளியான படம் தான்
என்டர் தி டிராக்கன்.

Monday, April 10, 2017

சிங்கப்பூர்

சிங்கப்பூர்
நகரமே நாடான நாடு சிங்கப்பூர்
CITY -யும் சிங்கப்பூர்தான் 
COUNTRY யும் சிங்கப்பூர்தான்

Friday, April 7, 2017

தமிழ் ஆண்டுப்பெயர்கள் - தமிழில்

தமிழ் ஆண்டுப்பெயர்கள் - தமிழில்

1 நற்றோன்றல் - பிரபவ
2 உயர்தோன்றல் - விபவ
3 வெள்ளொளி - சுக்கில
4 பேருவகை - பிரமோதூத
5 மக்கட்செல்வம் - பிரசோற்பத்தி
6 அயல்முனி - ஆங்கிரச
7 திருமுகம் - ஸ்ரீமுக
8 தோற்றம் - பவ
9 இளமை - யுவ
10 மாழை - தாது
11 ஈச்சுரம் - ஈஸ்வர
12 கூலவளம் - வெகுதான்ய
13 முன்மை - பிரமோதி
14 நேர்நிரல் - விக்ரம
15 விளைபயன் - விஜூ
16 ஓவியக்கதிர் - சித்ரபானு
17 நற்கதிர் - சுபானு
18 தாங்கெழில் - தாரண
19 நிலவரையன் - பார்த்திப
20 விரிமாண்பு - விய

21 முற்றறிவு - சர்வசித்
22 முழுநிறைவு - சர்வதாரி
23 தீர்பகை - விரோதி
24 வளமாற்றம் - விக்ருதி
25 செய்நேர்த்தி - கர
26 நற்குழவி - நந்தன
27 உயர்வாகை - விசய
28 வாகை - சய
29 காதன்மை - மன்மத
30 வெம்முகம் - துன்முகி
31 பொற்றடை - ஏவிளம்பி
32 அட்டி - விளம்பி
33 எழில்மாறல் - விகாரி
34 வீறியெழல் - சார்வரி
35 கீழறை - பிலவ
36 நற்செய்கை - சுபகிருது
37 மங்கலம் - சோபகிருது
38 பகைக்கேடு - குரோதி
39 உலகநிறைவு - விசிவாவசு
40 அருட்டோற்றம் - பராபவ

41 நச்சுப்புழை - பிலவங்க
42 பிணைவிரகு - கீலக
43 அழகு - சௌமிய
44 பொதுநிலை - சாதாரண
45 இகல்வீறு - விரோதிகிருது
46 கழிவிரக்கம் - பரிதாபி
47 நற்றலைமை - பிரமாதீச
48 பெருமகிழ்ச்சி - ஆனந்த
49 பெருமறம் - இராட்சச
50 தாமரை - நள
51 பொன்மை - பிங்கள
52 கருமைவீச்சு - காளயுத்தி
53 முன்னியமுடிதல் - சித்தார்த்தி
54 அழலி - ரௌத்ரி
55 கொடுமதி - துன்மதி
56 பேரிகை - துந்துபி
57 ஒடுங்கி - ருத்ரோத்காரி
58 செம்மை - ரக்தாட்சி
59 எதிரேற்றம் - குரோதன
60 வளங்கலன் - அட்சய
////////////////////////////

Monday, April 3, 2017

DMK....GOVT:

DMK

அது எப்படி


திமுக ஆட்சியில் மட்டுமே விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றது,,


பள்ளிக்கல்வி முதல் கல்லூரி கல்வி வரை இலவசமாக வழங்கப்படுகிறது,


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி அளிக்கப்படுகின்றது,


கூட்டுறவு வங்கிகளில் தரமான உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றது,


விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை தாங்களே விலை நிர்ணயம் செய்து கொண்டு விற்பனை செய்திட உழவர் சந்தை அமைக்கப் படுகிறது,


படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றிட வன்பொருள் நிற்வனங்கள்( ஹூண்டாய்,ஃபோர்ட், ரெனாட் நிசான், அப்போலோ டயர்ஸ், டேம்ளர்ஸ், நோக்கியா, பாக்ஸ்கான் மற்றும் இன்னபிற நிறுவனங்கள்), மென்பொருள் (Wipro,TCS,CTS,Accendure, Syntel,Polaris,HCL &Infosys) கொண்டு வர முடிகின்றது,


கத்திப்பாரா, கோயம்பேடு போன்ற மேம்பாலங்கள் அமைக்க முடிகின்றது, உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்க முடிகின்றது,


கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப் படுகின்றது, ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைக்க முடிகின்றது,


7அனல் மின் திட்டம் தொடங்கியது, சிறந்த தொழில்நுட்பங்கள் அடங்கிய தலைலைச் செயலகம் அமைக்க முடியும் போது #அதிமுக வால் இது போன்று ஏன் எதுவும் செய்ய முடியாதது கூட எனக்கு கவலை அளிக்க வில்லை!!


ஆனாலும், இன்று வரை எவரும் அதிமுக என்ன செய்தார்கள் என கேள்வி கேட்க மறந்து, இவ்வளவு சாதனைகள் செய்திட்ட திமுக மீது கேள்வி எழுப்புவது ஏன்..?

Wednesday, March 29, 2017

தேசியப் பறவை---தேர்வு செய்த வரலாறு

டோக்கியோவில் 1960-ஆம் ஆண்டு சர்வதேச பறவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

அழிந்து வரும் பறவைகள், விலங்குகளைக் காக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறப்புமிக்க பறவையைத் தேர்வு செய்து அதை தேசியப்பறவை என்று அறிவிக்க முடிவெடுத்தனர்.

அப்போது இந்தியா சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம்
"நீல நாரையை' தேசியப் பறவையாக தேர்வு செய்யப் பரிந்துரைத்தது. இப்பறவை அழகானது என்றாலும் இந்தியாவில் பஞ்சாப், தமிழ்நாடு மாநிலங்களில்  மட்டுமே அதிகம் உள்ள பறவையாகும். எனவே, இப்பறவை வேண்டாம் எனத் தீர்மானித்து, கொக்கு, அன்னம் என ஆலோசிக்கப்பட்டது.

ஆனாலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அப்போதுதான் அழகு ததும்பும்
 ஆண் மயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் காணப்படும் தோகை மயில், புராணம், இலக்கியம் என அனைத்திலுமே சிறப்பிடம் பெற்றிருக்கிறது என்ற அடிப்படையில் அனைவரும் ஏகோபித்த முடிவு எடுத்தனர். 
அதிலிருந்து மயில் தேசியப்பறவை என்று அறிவிக்கப்பட்டது.

ஏ.டி.எம். (Automatic Teller Machine)

ஏ.டி.எம். (Automatic Teller Machine)

உருவான கதை கூட சுவாரஷ்யமானது.

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்து விட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.

ஜோன் வெறுங்கையோடு மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த சொற்ப சில்லறையை வைத்து, கொஞ்சம் சொக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து சொக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார். அப்போதைக்கு அவர் மனைவியை சமாதானப்படுத்தினா லும், பூட்டிய வங்கிக் கவுண்டரும், காசு போட்டால் உதிர்ந்த சொக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. அதன் விளைவுதான் முதல் ஏ.டி .எம். உருவாக வித்திட்டது.

1969இல் இவர் உருவாக்கிய முதல் ஏ.டி .எம். வடக்கு லண்டனின் பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. அதிலும் ஒரு சிக்கல். ஜோனின் மனைவியால் அப்போதைய ஏ.டி .எம். அட்டைக்கான ஆறு இலக்க குறியீட்டை(Pin Number) ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கங்களாகக் குறைத்தார்.

ஏ.டி .எம். தற்போது ஏராளமான மாற்றங்களைக் கண்டு விட்டாலும், அதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதல்தான்!

April Fool Day - (முட்டாள்கள் தினம்)

April Fool Day -
(முட்டாள்கள் தினம்)

ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம்

இன்று ஏப்ரல் முதல் தேதி முட்டாள்கள் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாளை ஆண்டின் துவக்கமாக கருதி வந்தனர். அதன் பின் 16ம் நூற்றாண்டில் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர்.

1582ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13ம் கிரிகோரி, ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு ஜனவரி 1ம் தேதி பிறப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஸ்கொட்லாந்து, ஜெர்மனி, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் படிப்படியாக இந்த மாற்றத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டன.
ஆனால் பல நாடுகள் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர்.

அத்தோடு நில்லாமல், ஏப்ரல் 1ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளைச் சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர்.

இது தான் காலப்போக்கில் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறப்படும் உண்டு.

ஆனால் இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்ற நாளை கடைப்பிடித்ததாகவும் வரலாற்றாசிரியர்கள கூறுகின்றனர்.

தற்போது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

பெரியளவிலான கொண்டாட்டங்கள் போன்றவை இல்லை என்றாலும், நண்பர்கள், குடும்பத்தினர் என தெரிந்த நபர்களிடம் வேடிக்கை செய்வதும் அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதிலும் பெரும்பாலான மக்கள் ஈடுபடுகிறார்கள்.
அதோடு பிரபல டிவி, ரேடியோ, பத்திரிகைகள் போன்றவையும் முட்டாள்கள் தினத்தை ஒட்டி, தங்கள் வாசகர்களையும், நேயர்களையும் ஏமாற்றி பொய் செய்திகளை வெளியிடுவதுண்டு.

முன்பு ஒரு தமிழ் வார இதழ் குஷ்புவுக்கும், பாலச்சந்தருக்கும் கல்யாணம் என்று சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் கூட கடந்த 2005ம் ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதி ஒரு குறும்பு வேலையில் ஈடுபட்டுள்ளது.

'மார்ஸில் (செவ்வாய் கிரகம்) தண்ணீர்' என்று கொட்டையாக ஒரு தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் எழுதிவைத்து, ஒரு குடுவை தண்ணீர் இருக்கும் படத்தையும் போட்டிருந்தது.

பின்னர் அதை ஜோக் என்றது நாசா.

அதேபோல் 2003ல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை கொன்றுவிட்டார்கள் என சில இணையத்தளங்கள் பொய் செய்தியை பரப்பி அதனால் தென்கொரியா பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்கு 1.5 சதவீதம் சரிந்தது.

ஆனால், வரலாற்றில் ஏப்ரல் 1 என்ற தினத்தில் பல்வேறு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனம் தனது ஜி-மெயில் சேவையை அறிவித்தபோது அதை பெரும்பாலானவர்கள் நம்பவில்லை.
முட்டாள்கள் தினத்தை ஒட்டி போலி அறிவிப்பை செய்வதாக பலர் கருதினார்கள். ஆனால் உண்மையில் அதே தினத்தில் இருந்துதான் அந்த சேவை தொடங்கப்பட்டது.

அதோடு இந்திய ரிசர்வ் வங்கியே இந்த நாளில் தான் 1935ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
ஆக, முட்டாள்கள் தினம் கடைப்பிடிப்பது உபயோகமற்ற ஒரு விஷயமாக பலர் கருதுவதுண்டு. ஆனால் முட்டாள் ஆகாமல் இருக்க ஒரு நாளைக்கு மட்டுமாவது நம்மால் முழு விழிப்புணர்வுடன் இருக்க முடியுமா என்பதை பரிசோதித்துப் பார்க்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.