Wednesday, August 17, 2016

இந்திய தேசிய கொடியை ...வடிவமைத்தவர்

                             இந்திய தேசிய கொடியை ...வடிவமைத்தவர்
 
நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று  பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!
வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரய்யா தியாப்ஜி. 
ஐடியா தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி. 
( பலரும்  தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..! )

இந்த 'பத்ருதீன் தியாப்ஜி' யாரெனில்... இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்களில் முக்கியமான முதல் ஐவரில் ஒருவரின் பேரன்..!
அந்த ஐவரில் மீதி நான்கு பேரை பள்ளி வரலாற்றில் படித்து இருப்பீர்கள். ஆலன் அக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பன், ஒமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி ஆகிய நால்வரை அடுத்த பெயர்தான்... பாரிஸ்டர்.பத்ருதீன் தியாப்ஜி..! (காலம் : 1844 – 1906) தாத்தாவுக்கும் பேரனின் பெயர்தான்..!
 
சர். ஆலன் அக்டேவியன் ஹியூம்,  சர்.வில்லியம் வெட்டர்பன் போன்ற ஆங்கிலேயர்களால், மெத்தப்படித்த இந்தியர்களை அழைத்து, 1885 இல், INC துவக்கப்பட்டது. நோக்கம், பிரிட்டிஷ் அரசுடன் எந்த பிரச்சினை ஆனாலும் சுமுக பேச்சுவார்த்தைக்காக வேண்டி. அதன் முதல் தலைவர்...W.C.பானர்ஜி. 
1886 இல், இ.தே.கா.-இன் இரண்டாம் தலைவர்,  பாரிஸ்டர். D. நவ்ரோஜி.

அடுத்த வருடம், 1887 இல் மூன்றாம் தலைவரானவர்தான் பாரிஸ்டர். பத்ருதீன் தியாப்ஜி. 
இவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய பாரிஸ்டர். (1867)
பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய சீஃப் ஜஸ்டிஸ். (1902)
இவரின் மகன்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் முஸ்லிம் பொறியாளர்.
இவரின் மகளோ முதலில் வெளிநாடு சென்று படித்து வந்த டாக்டர். 
இவரின் பேரன்தான்.... நாம் முதலில் பார்த்தவர்... அவரின் பெயரும் தாத்தாவின் பெயரேதான்..! பத்ருதீன் தியாப்ஜி..!
பிப்ரவரி - 20, 1947 : ஆளும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு விட்டுவிடப் போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீ அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.
ஜூன் 3, 1947 : வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், பாகிஸ்தான் - இந்தியா என்று இரு நாடுகளாக பிரிப்பது பற்றிய தனது திட்டத்தை காங்கிரஸ் & முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். ஆகஸ்ட் 15 ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும் குறித்து தெரிவிக்கிறார்.
அத்துடன், வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், இந்தியா & பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டின் கொடிகளிலும், தங்கள் பிரிட்டிஷ் நாட்டின் சின்னமான யூனியன் ஜாக்கை (நீள பின்புலத்தில் சிகப்பு வெள்ளையில், ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறி)  தத்தம் கொடியின் மூலையில், பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். ( ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல...! )
இதனால், கடுப்பாகிப்போன இருவரும், தங்களுக்கான தனித்துவ கொடி வடிவமைப்பில் முழுமூச்சாக இறங்குகின்றனர். முக்கியமாக அந்த பிரிட்டிஷ் கொடியின்  'யூனியன் ஜாக்' இருக்கவே கூடாது என்று முடிவெடுத்தவர்களாக..!
ஜூன் 23 1947 : கொடி வடிவமைக்க ஒரு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்படுகிறது. ( Ad-hoc Committee; Dr. Rajendra Prasad (Chairman), Abul Kalam Azad, C. Rajagopalachari, Sarojini Naidu, K. M. Pannikkar, K. M. Munshi, B. R. Ambedkar, S. N. Gupta, Frank Anthony and Sardar Ujjal Singh)
முன்னர், 1916 இல் பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்ட, சுதந்திரம் வாங்க போராடிய "இந்திய  தேசிய காங்கிரஸ் கொடியே நம் நாட்டின் தேசிய கொடி" என்ற வாதம் வலுப்பெறுகிறது..! 
 
மேலே  உள்ள இந்திய அரசின் தபால் தலையில் இவர் வடிமைத்த கொடி எவை எவை என்று மிகவும் தெளிவாகவே உள்ளது..!கவனியுங்கள் சாகோஸ்..!
இந்நிலையில், மும்பையில் இருந்து டெல்லிக்கு ஆர்.எஸ்.எஸ். இன் சாவர்கர், முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்படி ஒரு அவரசர தந்தி அடிக்கிறார். அதில், கொடி முழுக்க காவி நிறம் இருக்க வேண்டும் என்றும்(?!) இராட்டை இடம்பெறவே கூடாது என்றும்(?) வேறு எந்த சின்னமும் இருக்கலாம்(!) என்றும் கூறி..!
வேறு சிலர், புலிச்சின்னம் உள்ள நேதாஜி ஏற்றிய கொடிதான் வேண்டும் என்கின்றனர். இப்படியாக ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டு இருக்க, அனைத்து கருத்துக்களையும் அமைதியாக கேட்டு வைக்கிறது அட்ஹாக் கமிட்டி.
இப்போதுதான், முதல் பத்தியில் நாம் பார்த்த பத்ருதீன் தியாப்ஜி, சீனில் என்ட்ரி ஆகிறார்..! அவர், கமிட்டி தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத்தை சந்தித்து, அவரின் தேசிய கொடியின் மாதிரியை சொல்கிறார். தலைவருக்கு இது பிடித்து விடவே, அதற்கு காந்திஜியின் ஒப்புதலையும் பெற்று வருமாறு அனுப்பி வைக்கிகிறார். காந்திஜியிடம், ராட்டைக்கு பதில் அசோக சக்கரம் மாற்றப்படுவதற்கு காரணத்தை இப்படி சொல்கிறார், பத்ருதீன் தியாப்ஜி. 
 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8NdA5_bWV6gX0FAmNtldxHFyMlF43gv0B0PZy_Z_A5H6V0kYNFQP7vkK2SndZKzuqyuG5dVSmDhZY_Li0jHmNIRjP0Bn6jSilzLzvgAy6U5j8WxQZX557FhhlOK0LkVxdzVJ324SidpQ/s1600/national+flag.PNG
 அதாவது, "கிடைமட்டமான சம அளவு மூவர்ணம் கொண்ட இந்திய தேசிய கொடியின் இருபக்கத்தில் இருந்து அதை பார்த்தாலும், இடம் வலம் மாறாமல் கொடி அதே போலவே தெரியவேண்டும். இதற்கு அசோக சக்கரம்தான் சரியாக வரும். இந்திய தேசிய கொடியின் 'இராட்டை' சரியாக வராது" என்றார்..! 
கூர்ந்து கேட்டுவிட்டு இதனை, ஏற்றுக்கொண்ட காந்திஜி, அவரையே உடனே ஒரு 'மாதிரி கொடி' தயார் செய்து கொண்டு வந்து காட்டுமாறு கூறுகிறார்.
மூன்று அளவு நீளமும், இரண்டு அளவு அகலமும் கொண்ட காதி கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய், தனது மனைவி ஸுரியாவிடம் தருகிறார். அவர் ஒரு கைதேர்த்த வண்ணத்தூரிகையாளர்.
கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அந்த அம்மையார், சிகப்பு+மஞ்சள் கலந்து காவி மேலேயும், கரும்பச்சையை கீழேயும், நடுவில் வெள்ளையில் கரு நீல வண்ணத்தில் 24 கால்கள் கொண்ட அசோக சக்கரமும் மிக எழிலாக வரைந்து தருகிறார்.
தியாப்ஜி அதை கொண்டு போய் காந்திஜியிடம் காண்பிக்க, அதற்கு காந்திஜி இன்முகத்துடன் ஒப்புதல் தந்து அட்ஹாக் கமிட்டிக்கு அனுப்ப, அந்த 'கொடி வடிவமைப்பு கமிட்டி' அதையே சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியாக அறிவிக்கிறது... ஜூலை 17, 1947 அன்று அதிகாரபூர்வமாக..!
உலக மகளிர் தினத்தில் மட்டுமின்றி, இந்திய தேசிய கொடி பறந்து கொண்டிருக்கும் 365 தினங்களிலும் தேசிய கொடியை வடிவமைத்த அப்பெண்மணிக்கு, கோடி கரங்கள் தடுத்து மறைத்தாலும் வரலாற்றில் தக்க  இடம் நிச்சயமாக உண்டு..!
ஆதார ஆவணங்கள்
Who designed National Flag : Mrs. Badruddin Tyabji
http://www.flagfoundationofindia.in/tiranga-quiz.html  (official site for national flag)
http://muslims4india.com/contribution/freedom/national-flag.html (The wheel of truth, by Mr.K.Natwar Singh)

Tuesday, August 16, 2016

இந்தியர்களை பற்றி... தெரிந்திருக்க வேண்டிய விசயங்கள்

 இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி... தெரிந்திருக்க வேண்டிய  விசயங்கள்
 
1. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 33% பேர் இந்தியர்கள்.
2. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள்.
3. உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23% பேர் இந்தியர்கள்.
4. அமெரிக்க விண்வெளித்துறை நாசா"வில் (NASA) பணிபுரிபவர்களில் 36% பேர் இந்தியர்கள்.(மூன்றீல் ஒருவர்)
5. உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% பேர் இந்தியர்கள்.
6. உலகில் உள்ள மைக்ரோசாப்ட் (MICRO SOFT) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
7. உலகின் அனைத்து மொழிகளுக்கும் வேராக முதல் தோன்றிய மொழி என்று எடுத்துக்கொள்ளப்படும் தமிழ் ஒரு இந்திய மொழி..
8. சமஸ்கிருதம் (SANSKRIT) தான் அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் வேர் மொழி.
9. ஹாட் மெய்ல்"ஐ (HOT MAIL) உருவாக்கியவரும் ஸ்தாபித்தவருமான ச
பீர் பாட்டியா (SABEER BHATIA) ஒரு இந்தியர்.
10. பூஜ்ஜியத்தையும், வான சாஸ்திரத்தையும் கண்டுபிடித்தவரான ஆர்யபட்டா (ARYABHATTA) ஒரு இந்தியர்.
11. எண்ணியல் முறையை உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
12. அல்ஜீப்ரா"வை (ALGEBRA) உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
13. சதுரங்க (CHESS) விளையாட்டை உருவாக்கியது இந்தியா.
14. இந்தியாவின் சமஸ்கிருத மொழி கணிணி மொழியுடன் மிகவும் ஒத்து போவதாக போர்ப்ஸ் (Forbes magazine) பத்திரிக்கை 1987"ல் அறிவி
த்தது.
15. நுண் கணிதம் (CALCULUS) உருவாக்கியது இந்தியா.
16. திரிகோணமிதி (TRIGNOMETRY) உருவாக்கியது இந்தியா.
17. கூகுள்"ன் (GOOGLE) தற்போதைய தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை ஒரு இந்தியர்.
18. ஹெச்.பி"யின் HEWLETT PACKARD (HP) பொது மேலாளர் ராஜீவ் குப்தா ஒரு இந்தியர்.
19. இன்று உலகில் உள்ள கணிணியில் பயன்படுத்தக்கூடிய பென்டியம் சிப் (PENTIUM CHIP) உருவாக்கிய வினோத் தாம் ஒரு இந்தியர்.
20. பை (PI) 3.14 "க்கான கணக்கீட்டை உருவாக்கிய புத்யானா (BHUTHYANA) ஒரு இந்தியர். ஐரோப்பிய கணக்கியல் உருவாக்கத்திற்கு முன்பு 6"ஆம் நூற்றாண்டுகளிலேயே இதற்கான விளக்கத்தை உரு
வாக்கியவர்.
21. இந்தியாவில் தான் உலகிலேயே மிக அதிகமாக 5600 செய்தித்தாள்களும் 3500 வார மற்றும் மாத இதழ்களும் 1 கொடியே 20 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.
22. 2600 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை உடலுருப்பு, எலும்பு முறிவு, சிறுநீரக கற்கள் மற்றும் தலையின் மண்டை ஒட்டை பிளந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சுஸ்ருதர் (SUSRUDHA) ஒரு இந்தியர்.
23. உலகிலேயே விலை உயர்ந்த 700 கோடி (70 MILLION POUNDS) ரூபாய் மதிப்புள்ள வீட்டை இங்கிலாந்தில் வைத்திருக்கும் இரும்பு தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ஒரு இந்தியர்.
24. உலகின் 4 ஆவது பலமான ராணுவத்தை கொண்டது இந்தியா.
25. மிக அதிகமான போர் வீரர்களை கொண்ட ராணுவத்தின் வரிசையில் 2 ஆம் இடம் இந்தியாவுக்கு.
26. இன்று உலகமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் அஞ்சலை (E Mail) உருவாக்கியபவர் சிவா ஐயாத்துரை என்ற இந்தியர்.
27.ஆசனங்கள் மூலமாக உடலின் அனைத்து உள்ளுருப்புகளை நன்கு இயங்க செய்வதுடன், மனதையும் உடலயும் உற்சாகமாக வைத்திருக்கும் யோகாவை 5000 ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு வழங்கியது இந்தியா.
28.உலகின் பல நாடுகள் பின்பற்றும், புத்தரும், புத்தமதமும் தோன்றிய நாடு இந்தியா.
29.அஹிம்சை மூலமாக எதிரியையும் வெற்றிகாண முடியும் என உலக வரலாற்றில் முதன்முறையாக நிருபித்தது இந்தியா.
30.நிலாவில் நீர் இருப்பதை முதல்முறையாக நிரூபித்த நாடு இந்தியா.
31.வான சாஸ்திரம் மூலம் ஜோதிடகலையை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா.
32.இவற்றையெல்லாம் விட உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு இந்தியா.
இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.

தேசிய பெருமைகள் ....

நமது தேசியச் சின்னம்!
**********************************
குழந்தைகளே! நமது தேசியச் சின்னம் என்ன தெரியுமா? சாரநாத்திலுள்ள அசோகர் ஸ்தூபியில் இருந்து எடுக்கப்பட்ட அசோகச் சக்கரமாகும். அதில் இருப்பவை நான்கு சிங்கங்கள்! ஒன்று மறுபுறத்தில் இருப்பதால் நம்மால் பார்க்க முடிவதில்லை. அவற்றின் கீழே ஒரு சக்கரமும் (தர்ம சக்கரம்-WHEEL OF LAW) இடையே சீறிப்பாயும் குதிரைகளும், காளைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பீடத்தின் கீழே முண்டக உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்ட "வாய்மையே வெல்லும்' என்னும் பொருள் கொண்ட "சத்ய மேவ ஜயதே' என்ற வார்த்தைகள் தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இது இந்தியாவின் தேசியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது!
இந்த தேசியச் சின்னத்தை நமது இந்திய அரசாங்க அலுவலக நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்!
இந்திய குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள், மாநில ஆளுநர்கள், அரசின் தலைமை அதிகாரிகள், மாநில அமைச்சர்கள் மற்றும் தேசிய இலாகாக்களின் ஒரே அதிகார பூர்வ முத்திரை இதுவே!
தேசியச் சின்னம், அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களிலும், சில மிக முக்கிய அதிகாரிகள், மற்றும் வெளிநாட்டு அரசுடனான தொடர்புக்கான எழுது தாள்களிலும் நீல வண்ணத்தில் அச்சிடப்பட வேண்டும். அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் எழுது தாள்களில் சிகப்பு வண்ணத்திலும் அச்சிடப்பட வேண்டும்.
மக்களவை உறுப்பினர்கள் பச்சை வண்ணத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு வண்ணத்திலும் தேசியச் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும்.
/////////////////////////////////

தேசியக் கொடி!
***********************
கடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் வரையறுக்கப்பட்ட நீள, அகலங்களும் கொண்ட மூவர்ணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே ஓர் அசோகச் சக்கரமும் (கடல் நீல வண்ணம் கொண்டது) அதை சுமந்து 24ஆரக் கால்களும் உள்ளன.
தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும், வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம்பிக்கையையும், வீரத்தையும் குறிப்பதாக கற்பிக்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த "பிங்களி வெங்கைய்யா' என்பவரே இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர்.
தேசியக் கொடியின் நீள, அகலம் 3:2 என்ற விகிதத்தில் அமைய வேண்டும்.
மூவர்ணக் கொடியை அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22இல் ஒருமித்த கருத்துடன் அங்கீகரித்தது.
1947ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசித்தபோது ராஷ்டிரபதிபவன் என்று பெயர் சூட்டப்பட்ட தில்லி வைஸ்ராய் ஹவுஸில் 31 குண்டுகள் முழங்க இந்திய தேசியக் கொடி முதல் முதலாகப் பறக்க விடப்பட்டது.
எல்லா வருடமும் ஆகஸ்டு 15ஆம் தேதி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றும் சடங்கு 1948முதல் துவங்கியது.
இந்திய தேசியக் கொடி முதன்முதலாக விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது 1971இல்! அமெரிக்காவின் அப்பல்லோ-15 என்னும் செயற்கைக் கோள் இதை விண்வெளிக்குச் சுமந்து சென்றது.
////////////////////////

தேசிய கீதம்!
*******************
வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டது! (தாகூரின் இந்த முழுப் பாடல் மொத்தம் ஐந்து செய்யுள் கொண்டது. எனினும் முதல் செய்யுள் மட்டுமே தேசிய கீதமாகப் பாடப்பட்டு வருகிறது.)
இந்தியாவின் பூபாளப் பாடல் என்னும் இப்பாடலின் சாராம்சம் வருமாறு...
""இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்!
நின் திருப்பெயர் பஞ்சாப்பையும், சிந்துவையும், குஜராத்தையும், மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும், வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது!
நின் திருப்பெயர் விந்திய, இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது. யமுனை, கங்கை, ஆறுகளின் இன்னொலியில் ஒன்று படுகின்றன. இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது.
அவை நின்னருளை வேண்டுகின்றன. நின் புகழைப் பரப்புகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே, உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!
இந்தப் பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புக் குழு 1950 ஜனவரி 24இல் "ஜன கண மன....பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது.
தாகூர் வங்காள மொழியில் எழுதிய பாடலின் இந்தி மொழி பெயர்ப்பே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
1911, டிசம்பர் 27ஆம் தேதி கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மகா நாட்டில்தான் இது முதன் முதலாகப் பாடப்பட்டது. (மகா நாட்டின் இரண்டாம் தினம்) முதல் நாளில் "வந்தே மாதரம்' பாடலே பாடப்பட்டது.
1912இல் தாகூரின் தத்துவபோதினி பத்திரிகையில் "பாரத விதாதா' என்னும் தலைப்பின் கீழ் இது வெளியிடப்பட்டது.
1919இல் "பஏஉ ஙஞதசஐசஎ நஞசஎ ஞஊ ஐசஈஐஅ' எனும் தலைப்பில் தாகூரே இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
/////////////////////////////////////

வந்தே மாதரம்!
************************
"ஜன கண மன' தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டபோதே சுதந்திர போராட்டத்தில் மக்களுக்கு உத்வேகமூட்டிய வந்தே மாதரம் பாடலுக்கும் தேசிய கீதத்துக்கு வழங்கப்படும் உயர்ந்த இடத்தை வழங்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பாடல்.......
வந்தே மாதரம்!
************************
சஸ்ய சுபலாம் மலயஜ சீதலாம்
சஸ்ய சியாமலாம் மாதரம்!
சுப்ரஜோத்சனா புளகீத யாமி னீம்
புல்லகுசுமித துருமதள சோபினீம்
சுகாசினீம் சுமதுர பாஷிணீம்
சுகதாம் வரதாம் மாதரம்!......
இப்பாடலை அரவிந்தர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்! அதன் தமிழ்ப்பொருள்....
""அம்மா வணங்குகின்றேன். இனிய நீர்ப்பெருக்கினை, இன் கனி வளத்தினை, தனி நறுமலயத் தண்காற்(மலைகளின் குளிர்ச்சி)சிறப்பினை, பைந்நிறப்(சியாமள நிறம்)படினம் பரவிய வடிவினை, வணங்குகிறேன். வெண்ணிலாக் கதிர் விரித்திடும் இரவின் மலர் மணிப் பூந்திகழ் மணம் பல செறிந்தனை. குறுநகையுடன் குலவிய மாண்பினை. நல்குவை இன்பம்! வரம் பல நல்குவை! அம்மா வணங்குகிறேன்!
1882இல் வெளியான பங்கிம் சந்திரரின் ஆனந்த மட் எனும் நாவலில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் செய்யுள் இது.
சமஸ்கிருத மொழியில்தான் வந்தே மாதரம் எழுதப்பட்டது.
1896இல் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மகாநாட்டில்தான் இது முதன் முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.
/////////////////////////////////
 தேசிய மொழி!
**********************
அரசியல் சட்டத்தின் பிரிவு 343(1) இன் படி தேவநாகரி லிபியிலான இந்தியே நாட்டின் அதிகாரபூர்வமான மொழி. இத்துடன் ஆங்கிலத்தையும் அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் அரசியலமைப்புச் சட்டம் அனுமதித்துள்ளது.
அரசியல் சட்டத்தின் எட்டாம் அட்டவணையில் முதன்முதலாக 14 மொழிகள் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. தற்போது இதில் மொத்தம் 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. அவை.....,
1.இந்தி, 2.தமிழ், 3.மலையாளம், 4.வங்காளி, 5.அசாமி, 6.தெலுங்கு, 7.மராத்தி, 8.ஒரியா, 9.பஞ்சாபி, 10.சமஸ்கிருதம், 11.சிந்தி, 12.குஜராத்தி, 13.காஷ்மீரி, 14.உருது, 15.கன்னடம், 16.கொங்கணி, 17.மணிப்பூரி, 18.நேப்பாளி, 19.தோஹ்ரி, 20.போட்டோ, 21.சந்தாலி, 22.மைதிலி போன்றவை.
/////////////////////////////////
 தேசியக் காலண்டர்!
*******************************
சைத்ர மாதத்தை முதல் மாதமாகக் கொண்ட "சக' வருடக் காலண்டரே (1957 மார்ச் 22ஆம் தேதி காலண்டர்) மறு சீரமைப்புக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய தேசியக் காலண்டர்.
சக வருடக் காலண்டர் கி.பி. 78இல் மன்னர் கனிஷ்கரால் துவங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
சக ஆண்டு 365 நாட்கள் கொண்டது. சாதாரண ஆண்டில் சைத்ர முதல் தேதி மார்ச் 22ஆகும். லீப் வருடத்தில் சைத்ர முதல் தேதி 21ஆம் தேதியாகும்.
தேசிய நாட்காட்டி சக ஆண்டு 1879இல் சைத்ர முதல் நாளில் (கி.பி.1957 மார்ச் 22) தொடங்கியது.
சக வருட மாதங்கள் சைத்ரம், வைசாக, ஜேஷ்ட, ஆஷாட, ச்ராவண, பாத்ர, ஆஸ்வின, கார்த்திக, அக்ரஹாயன, பெüஷ, மாகம், பால்குன.
இதனுடன் நாம் இன்று வெகுவாகப் பயன்படுத்தும் ஆங்கிலக் கிரிகோரிய காலண்டரும் புழக்கத்தில் உள்ளது.
கிரிகோரியன் காலண்டர் வருடத்திலிருந்து 78ஐக் கழித்தால் அப்போதைய சகவருடம் கிடைக்கும். (சான்றாக....2016-78=1938--சக வருடம்)
////////////////////////////

தேசிய விலங்கு!
************************
புலி! ஆம்! இதுவே தேசிய விலங்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது! ஆசியப் பகுதியின் சிறப்பு மிக்க விலங்கு இது!
புலி இனம் அழிந்து போகாமல் இருக்க
இந்தியாவில் புலி பாதுகாப்புத் திட்டம் 1973இல் துவங்கப்பட்டது.
தேசியப் பறவை!
************************
மயில்! 1963இல் இந்தியாவின் தேசியப் பறவையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சமஸ்கிருத மொழியின் ஆதி நூலான ரிக்வேதத்தில் மயில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
தேசிய மரம்!
*******************
""அட! அற்புதம்!'' என்று நினைக்கும்படியான மரம்! ஆம் ஆலமரம்! எவ்வளவு சரியான தேர்வு! பல்வேறு மாநிலத்தவரும், பல்வேறு மொழியினரும் விழுதுகளாய் பாரதத் தாயால் உருவாக்கப்பட்டோம்! இன்று அத்தாயை இவ்விழுதுகள் போல் வேரூன்றிக் காப்போம்! என்று கட்டியம் கூறுவது போல் அல்லவா இது அமைந்துள்ளது!
தேசியக் கனி!
*********************
"பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் "மாம்பழம்' தான் நமது தேசியக் கனி!
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மாங்கனிச் சாகுபடி நடந்ததாம்! (அன்னை, தந்தையே உலகம் என்று எல்லோருக்கும் விநாயகர் மூலமாக ஞானம் வழங்கிய கனி அல்லவா?)
தேசிய விளையாட்டு!
*********************************
ஹாக்கி! இதுவரை இந்தியா இந்த விளையாட்டில் 8 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது! இந்த விளையாட்டின் சிறந்த வீரரான தியான்சந்திரன் பிறந்த தினமான ஆகஸ்டு 29ஆம் நாள் "தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப் படுகிறது.
///////////////////////////////

தேசிய விருதுகள்!
****************************
பாரத ரத்னா! இந்தியாவின் மிகச் சிறந்த விருது இதுதான்! இன்னொரு சுவாரசியமான செய்தி! இந்தியாவைப் போல் பாகிஸ்தானின் மிக உயர்ந்த விருது "நிஷான் இ பாகிஸ்தான்' ஆகும். இந்த இரு விருதுகளையும் பெற்ற ஒரே நபர் மொரார்ஜி தேசாய்!
பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையிலுள்ள உயர்ந்த சிவிலியன் விருதுகள் முறையே பத்ம விபூஷண்! பத்ம பூஷண்! பத்மஸ்ரீ! ஆகியவை!
பாரத ரத்னா விருதுகள் பெற்றோரைப் பற்றி மற்றொரு விரிவான கட்டுரையில் பார்ப்போம்!
தேசிய தினங்கள்!
*************************
குடியரசு தினம்..........ஜனவரி 26
சுதந்திர தினம்............ஆகஸ்டு 15
காந்தி ஜெயந்தி...........அக்டோபர் 2
தேசிய நீர் வாழ் உயிரி!
***********************************
டால்பின்! இந்தியாவில் கங்கை நதியிலும், பிரம்மபுத்திரா நதியிலும் மற்றும் கடல் பகுதிகளிலும் காணப்படும் கடல் வாழ் உயிரினம்! அழகும் நட்பும் நிறைந்தது! 1972 வன உயிரியல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவ்வுயிரினம் உட்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப் படுகிறது.
தேசிய நதி!
*****************
2008ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாக "கங்கை' அறிவிக்கப்பட்டது! இந்தியாவின் நீளமான நதி, புனிதமான நதி, மிக அதிக தண்ணீர் பரப்பு கொண்ட நதி. அதிக எண்ணிக்கையிலான துணை நதிகள் கொண்ட நதி என்று பல சிறப்புகள் உடையது இது!
///////////////////////////////

தேசியப் பாரம்பரிய விலங்கு!
******************************************
இந்திய வரலாற்றிலும், கலாசாரத்திலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் "யானை'யே இந்தியாவின் தேசியப் பாரம்பரிய விலங்காகக் கருதப்படுகிறது. ஆசிய யானைகளில் 60 சதவிகிதமும் இந்தியாவிலேயே உள்ளன.
இன்னும் இந்தியாவின் சிறப்புகள் எண்ணில் அடங்காது! எத்தனை மொழி! எத்துணைக் கலாசாரம்! இந்நாட்டின் கலாசாரத்தையும், மாண்பையும், காப்போம்! கல்வி, விளையாட்டு போன்ற அத்தனை துறைகளிலும் மேன்மேலும் சாதிப்போம்! நம் தாய்க்குப் பெருமை சேர்ப்போம்! ஒற்றுமையுடன், அன்புடன், உறவாடுவோம்! ஜெய்ஹிந்த்!
தொகுப்பு: எம்.ஆர்.பெரியாண்டவர்,
தேவிபட்டினம்.
நன்றி : தினமணி நாளிதழ் - 12.08.2016
///////////////////

Friday, August 5, 2016

நமது ‪ தேசிய‬ சின்னங்கள்

                            நமது ‪ தேசிய‬ சின்னங்கள்

தேச தாய் - பாரதமாதா
தேசதந்தை - மகாத்மா காந்தி,
தேச மாமா - ஜவஹர்லால் நேரு,
தேச சேவகி - அன்னை தெரசா,
தேச சட்டமேதை - அம்பேத்கார்,
தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.
தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி,
நாட்காட்டி - 1957 சக ஆண்டு,
நகரம் - சண்டிகார்,
உலோகம் - செம்பு,
உடை - குர்தா புடவை,
உறுப்பு - கண்புருவம்.
தேச கவிஞர் - இரவீந்தரநாத்,
தேச நிறம் - வெண்மை,
தேச சின்னம் - நான்குமுக சிங்கம்,
தேச பாடல் - வந்தே மாதரம்,
தேசிய கீதம் - ஜனகனமன,
தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே, தேசிய நதி - கங்கை,
சிகரம் - கஞ்சன் ஜங்கா,

பீடபூமி - தக்கானம்,
பாலைவனம் - தார்,
கோயில் - சூரியனார்,
தேர் - பூரி ஜெகநாதர்,
எழுது பொருள் - பென்சில்,
வாகனம் - மிதிவண்டி,
கொடி - மூவர்ணக் கொடி,
விலங்கு - புலி,
மலர் - தாமரை,
விளையாட்டு - ஹாக்கி,
பழம் - மாம்பழம்,
உணவு - அரிசி,
பறவை - மயில்,
இசைக் கருவி - வீணை,
இசை - இந்துஸ்தானி,
ஓவியம் - எல்லோரா,
குகை - அஜந்தா,
மரம் - ஆலமரம்,
காய் - கத்தரி.
மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம்,
மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி.
நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,
மொழி - கொங்கனி, பெங்காளி.
பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.
மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).
பெரு உயிரி - யானை,
நீர் உயிரி - டால்பின்,
அச்சகம் - நாசிக்,
வங்கி - ரிசர்வ் வங்கி,
அரசியலமைப்பு சட்டபுத்தகம்,
கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)
நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

Wednesday, February 3, 2016

தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?

தோற்று போனால்
 வெற்றி கிடைக்குமா ?


✌ அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..

✌ அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..

✌ துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..

✌ பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..

✌ சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..

✌ நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..

✌ ஆகவே தோற்று போ,
தோற்று போனால் வெற்றி கிடக்கும்..!!!

Tuesday, February 2, 2016

தமிழ்நாடு -வருவாய் நிர்வாகம் (2010-11):

*தமிழ்நாடு பற்றிய விவரங்கள்: வருவாய் நிர்வாகம் (2010-11):

1. வருவாய் மாவட்டங்கள் – 32.
2. வருவாய் கோட்டங்கள் – 76.
3. தாலுகா – 220.
4. உள்வட்டங்கள் – 1,127.
5. வருவாய் கிராமங்கள் – 16564.
6. கடலோர மாவட்டங்கள் – (2007-08) – 13.
உள்ளாட்சி அமைப்புகள் (2010-11):
1. மாநகராட்சிகள் – 12.
2. நகராட்சிகள் – 150.
3. ஊராட்சி ஒன்றியங்கள் – 385.
4. டவுன் பஞ்சாயத்துகள் – 559.
5. மாவட்டம் – 32.
6. கிராம ஊராட்சிகள் (RD ஊராட்சிகள் கொள்கை விளக்கக் குறிப்பு படி 2011-12) – 12524.
7. குக்கிராமங்கள் – 48452 (தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை படி).

Monday, February 1, 2016

All about 5..ஐந்து

தெரிந்துக்கொள்வோம் - All about 5

1.பஞ்ச கன்னியர்
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.

2.பஞ்சவாசம்
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.

3.பஞ்சாமிர்தம்
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.

4.பஞ்சபாண்டவர்
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.

5.பஞ்சசீலம்
கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.

6.பஞ்சதிராவிடர்
தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.

7.பஞ்சபட்சிவல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.

8.பஞ்சபுராணம்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.

9.பஞ்சரத்தினம்
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
10.பஞ்சவர்ணம்
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

11.பஞ்சாங்கம்
கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.

12.பஞ்சமூலம்
செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.

13.பஞ்சபாதகம்
பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.

14.பஞ்சபாணம்
முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.

15.பஞ்சாயுதம்
சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.

16.பஞ்சபரமோட்டி
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.17.பஞ்சசிகை
தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.

18.பஞ்சதேவர்
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.

19.பஞ்சஸ்தலம்
காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.

20. பஞ்ச பூதங்கள்
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்


Thursday, December 24, 2015

நில அளவுகள்


நில அளவைகள் பல்வேறு அளவுகளில் குறிப்பிடப்படுகின்றன. அது பற்றிய விவரம்:-
1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
1 மீட்டர் – 3.281 அடி
1 குழி – 44 சென்ட்
1 மா – 100 குழி
1 காணி – 132 சென்ட் (3 குழி)
1 காணி – 1.32 ஏக்கர்
1 காணி – 57,499 சதுர அடி
1 டிசிமல் – 1 1/2 சென்ட்
1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
1 கிலோ மீட்டர் – 3280 அடி
1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
1 செயின் – 66 அடி (100 லிங்க்)
1 லிங்க் – 0.66 அடி
1 கெஜம் – 3 அடி
8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
22 கெஜம் – 1 செயின் (66 அடி)
10 செயின் – 1 பர்லாங்கு
1 இன்ச் – 2.54 செ.மீ
1 செ.மீ – 0.3937 செ.மீ
1 கெஜம் – 0.9144 மீட்டர்
1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
30 சதுர மைல் – 1 டவுன்சிப்
640 ஏக்கர் – 1 சதுர மைல்.....
////////////////////
நில அளவுகள் அறிவோம்.

♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
♓1 ஏக்கர் – 100 சென்ட்
♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
♓1 மீட்டர் – 3.281 அடி
♓1 குழி – 44 சென்ட்
♓1 மா – 100 குழி
♓1 காணி – 132 சென்ட் (3 குழி)
♓1 காணி – 1.32 ஏக்கர்
♓1 காணி – 57,499 சதுர அடி
♓1 டிசிமல் – 1 1/2 சென்ட்
♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
♓1 கிலோ மீட்டர் – 3280 அடி
♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
♓1 செயின் – 66 அடி (100 லிங்க்)
♓1 லிங்க் – 0.66 அடி
♓1 கெஜம் – 3 அடி
♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
♓22 கெஜம் – 1 செயின் (66 அடி)
♓10 செயின் – 1 பர்லாங்கு
♓1 இன்ச் – 2.54 செ.மீ
♓1 செ.மீ – 0.3937 செ.மீ
♓1 கெஜம் – 0.9144 மீட்டர்
♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
♓30 சதுர மைல் – 1 டவுன்சிப்
♓640 ஏக்கர் – 1 சதுர மைல்..

/////////////////////////////////////
 

Wednesday, December 23, 2015

கண்டுபிடித்தவர்கள்

கண்டுபிடித்தவர்கள்

போனோகிராப் - எடிசன்.

டிரான்சிஸ்டர் - ஷீக்லே.

கேமிரா - லூமியர் சகோதரர்கள்.

பேசும் படம் - வார்னர் சகோதரர்கள்.

காண்டாக்ட் லென்ஸ் - டேவல்.

ஈ.சி.ஜி. இயந்திரம் - ஐந்தோலன்

Monday, December 21, 2015

மனித உடல் -- இரத்தம் பற்றிய சில தகவல்கள்

மனித உடலில் உள்ள ஒடிக்கொன்டிருக்கும்
இரத்தம் பற்றிய சில தகவல்கள் :-

🍎 இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி
🍎 இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்
🍎 இரத்த வகைகள் - A, B, AB, O

🍎 இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது - Rhesus குரங்கில்
🍎 இரத்தத்தில் Rh காரணி இருந்தால் - பாசிடிவ் (Positive)
🍎 இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)

🍎 சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்
🍎 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி
🍎 இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)
🍎 இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%
🍎 மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg
🍎 இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்
🍎 அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB
🍎 அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை - O
🍎 120 mmHg என்பது - Systolic Pressure
🍎 80 mmHg என்பது - Diastolic Pressure
🍎 இரத்த செல்களின் வகைகள் - 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்

3. இரத்த தட்டுகள்
1. இரத்த சிவப்பு அணுக்கள்:-
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்
🍓 ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 5.2 மில்லியன்
🍓 பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 4.5 மில்லியன்
🍓 ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள்
🍓 பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா
2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா
🍉 உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்
🍉 லியூகோசைட்டுகள் வகைகள் - 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்
🍉 துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் -3
☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்
🍉 துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2
☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்
🍉 மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை
🍍இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:-
🍉 நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
🍉 இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%) பேசோஃபில்கள் - 0.1%
🍉 லிம்போசைட்டுகள் - (20 - 30%)
🍉 மோனோசைட்டுகள் - (1 - 4%)
3. இரத்த தட்டுகள் :-
🍈 இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)
🍈 இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்
🍈 இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்
🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000
🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய காரணமான நோய் - டெங்கு

Sunday, December 20, 2015

பரம்பரை..????

பரம்பரை..??

நாம் - முதல் தலைமுறை
.
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

.
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை
.
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை
.
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை
.
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை
.
பரன் + பரை - ஏழாம் தலைமுறை
.
பரன் + பரை = பரம்பரை

.
ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால், ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..

ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக,
பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலைமுறையாக என்று பொருள் வரும்.
வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

Saturday, December 19, 2015

வங்கிக் கணக்கு முடங்காமல் இருக்க

வங்கிக் கணக்கு முடங்காமல் இருக்க..!
 

வங்கிக் கணக்குகள் முடங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
1. அடிக்கடி பயன்படுத்துகிற குறைந்தபட்சம் இரண்டு வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்துக்கொள்வது நல்லது. 
இனி இந்த வங்கிக் கணக்குகளை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களிடம் இருக்கும் பிற வங்கிக் கணக்கு களை உடனடியாக முடித்து விடலாம். 
2. என்றாவது ஒருநாள் ஒரு வங்கிக் கணக்கு தேவைப்படும் என்று நீங்கள் நினைத்தால், அந்தக் கணக்கில் தொடர்ந்து பணத்தைப் போடுவதும் எடுப்பதும் அவசியம். 
3. பயன்படுத்தும் கணக்கு களிலிருந்து அவ்வப்போது பயன்படுத்தாத கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
4. நிரந்த இருப்புக் கணக்கு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றின் மூலம் வரும் வருமானத்தைத் தொடர்ந்து பயன்படுத்தாத கணக்கில் சேமித்து வரலாம்.
இப்போது ஏடிஎம், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற பல வசதிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி தங்களுடைய கணக்கை எப்போதும் செயல்பாட்டில் வைத்து முடங்காமல் பார்த்துக் கொள்ளலாமே!

உப்பும் .......தேனும் ......நோயும் .....!!!!!

உப்பும் .......தேனும் ......நோயும் .....!!!!!

 உப்பு
 உப்பு இல்லாத உணவு குப்பையில் என்று என் பாட்டி சொல்வார்கள் .உப்பு நமக்கு உணவுகளில் சுவைகளை கூட்டி தரும் என்று மட்டும் நமக்கு தெரிந்த விவரம்.
சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ?
இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு. உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்துவிடும், இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது. இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள், இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள்.
ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றால் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும்.
உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும்.
சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உண்ண பத்தியம் உண்டு, கை தேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள்.
 
தேன்.:
 தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும். சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?
தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது . இதனால் தான் தேனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .
ஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள்
 
மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ

1.மாதம் 2 முறையாவது 3 வேலையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .
2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .
தேன் சர்க்கரை நோய்களை தூண்டது .
3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும்
நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .
உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள்) இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணபடுத்த உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது. இன்றைய மருத்துவம் (alaopathy )
இனிப்பை வைத்து வைத்தியம் செய்வது homeopathi .
உப்பும், தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.

Thursday, December 17, 2015

வணிக நிலையங்கங்களுக்கான / தமிழ்ப் பெயர்கள்:

வணிக நிலையங்கங்களுக்கான / தமிழ்ப் பெயர்கள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


1 டிரேடர்ஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : மையம், நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோர்ஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோர்ஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவல்ஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகல்ஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்

5 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லர்ஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பர்ஸ் : மரக்கடை
18 பிரிண்டர்ஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டர்ஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டர்ஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்க்ஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லர்ஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைல்ஸ் : துணியகம்
28 ரெடிமேட்ஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனர்ஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்ட்ஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டாஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைல்ஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பஜார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி
51 போர்டிங் லாட்ஜிங் : உண்டுறை விடுதி
52 பாய்லர் : கொதிகலன்
53 பில்டர்ஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் : கம்பிவடம், வடம்
55 கேப்ஸ் : வாடகை வண்டி
56 கபே : அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்க்ஸ் : பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் : சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் : பைஞ்சுதை
60 கெமிக்கல்ஸ் : வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி
62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் : மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் : குளம்பியகம்
65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வகம்,
66 கம்பெனி : குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளக்ஸ் : வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்க்ஸ் : திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்
71 கூரியர் : தூதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் : மிதிவண்டி
74 டிப்போ : கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனர்ஸ் : உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகல்ஸ் : மின்பொருளகம்
78 எலக்ட்ரானிக்ஸ் : மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் : விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோர்ஸ் : மிதிவண்டியகம்
82 பேக்டரி : தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
84 ஃபாஸ்ட் ஃபுட் : விரைவு உணவகம்
85 ஃபேக்ஸ் : தொலை எழுதி
86 பைனான்ஸ் : நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி
88 கார்மெண்ட்ஸ் : உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
90 ஹார்டு வேர்ஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி : நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்
93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் : சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்
96 பேஜர் : விளிப்பான், அகவி
97 பெயிண்ட்ஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
102 பார்மசி : மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிப்பட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி : நெகிழித் தொழிலகம்
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் : விசைத்தறி
109 பவர் பிரஸ் : மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்
112 ரப்பர் : தொய்வை
113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
115 ஷோரூம் : காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் : வழங்குநர்,
120 லெதர்ஃபேக்டரி : தோல் பதனீட்டகம்
121 டிரேட் : வணிகம்
122 டிரேடர்ஸ் : வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்
124 டிராவல்ஸ் : பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் : தேனீரகம்
126 வீடியோ : வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு
128 ஜெராக்ஸ் : படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே : ஊடுகதிர்.

Wednesday, December 16, 2015

முட்டாள் தினம் உதித்த வரலாறு !

                                            முட்டாள் தினம் உதித்த வரலாறு !

1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 11 நாட்கள் காணாமல் போய் இருக்கும் அது ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் இங்கிலாந்து அரசு "the Roman Julian Calendar" இருந்து "the Gregorian Calendar" மாற்றிக்கொண்டது.
ஜூலியன் வருடம் கிரகோரியன் ஆண்டை விட 11 நாட்கள் அதிகம் இதனை அறிந்த மன்னர் அந்த மாதத்தில் இருந்து 11 நாட்களை அகற்றும் படி உத்தரவிட்டார்.ஆகையால் அந்த மாதத்தில் உழைப்பாளிகள் 11 நாட்கள் குறைவாக உழைத்தனர்.
இதிலிருந்து தான் விடுப்பு ஊதியம்(paid leave) எனும் முறை தோன்றியது.

ஜூலியன் காலேண்டேரில் ஏப்ரல் 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது.ஆனால் கிரகோரியன் காலேண்டேரில் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது.கிரகோரியன் காலேண்டர் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் மக்கள் பழைய வழக்கமான ஏப்ரல் 1 ஆம் தேதியையே புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்.
புதிய முறையை ஏற்க அதிக மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை அரசு சிறிய உத்தரவுகள் பிறப்பித்தும் மக்கள் பழைய வழக்கத்தை விடுவதாக இல்லை.
யோசித்த மன்னர் ஒரு வினோதமான அறிக்கையை வெளியிட்டார்.ஏப்ரல் 1 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுபவர் யாராக இருந்தாலும் அவர் முட்டாளாக அறியப் படுவார் என்று அந்த அறிக்கையில் இருந்தது.
அதிலிருந்து உதித்தது தான் ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினம் (april fool's day).

Tuesday, December 15, 2015

எண் ( 7 ) ஏழின் சிறப்புக்கள்

ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.
எண் ஏழின் சிறப்புக்கள்:
1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007
2. எழு குன்றுகளின் நகரம் ரோம்
3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
4. மொத்தம் ஏழு பிறவி
5. ஏழு சொர்க்கம்(குரான்)
6. ஏழு கடல்கள்
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.
7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
8. ஏழு வானங்கள். (Qur'an)
9. ஏழு முனிவர்கள் (Rishi)
10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)
11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின்
எண்ணிக்கை ஏழு
13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.
16. மேலுலகம் ஏழு
17. கீழுலகம் ஏழு
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்
18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
19. மொத்தம் ஏழு தாதுக்கள்
20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா
21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
22. ஏழு புண்ணிய நதிகள்
23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
24. அகப்பொருள் திணைகள் ஏழு
25. புறப்பொருள் திணைகள் ஏழு
26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
27. கடை ஏழு வள்ளல்கள்
28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்
30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்
31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா
32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு
33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.
34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,
பேரிளம் பெண்)

Friday, December 11, 2015

இயற்கை...சொல்லுவது என்ன ?

                                                       இயற்கை....

26- டிசம்பர் 1932.... சீனாவில் நிலநடுக்கம்.
(இறப்பு 70,000)
26- டிசம்பர் 1939.... டர்க்கியில் நிலநடுக்கம்
. (இறப்பு 41,000)

26- ஜனவரி 1951.... போர்ச்சுகல் நிலநடுக்கம்
(இறப்பு 30,000)
26- ஜூலை 1963.... யுகாஸ்லாவியா நிலநடுக்கம்.
26 - ஜூலை 1976.... சீனாவில் நிலநடுக்கம்.
26- ஜனவரி 2001... குஜராத்தில் நிலநடுக்கம்.
26- டிசம்பர் 2003..... ஈரான் நிலநடுக்கம்.
(இறப்பு 60,000)
26- டிசம்பர் 2004.... சுனாமியின் கொடூரதாண்டவம்.
26- நவம்பர் 2008.... மும்பைத் தாக்குதல்.
26- பிப்ரவரி 2010.... ஜப்பானில் நிலநடுக்கம்.
26- ஜூலை 2010.... தைவான் நிலநடுக்கம்.

26- ஏப்ரல் 2015..... நேபாளத்தில் நிலநடுக்கம்.
 

ஏதோ ஒன்றை இயற்கை சொல்லவருகிறது....
எதையுமே கண்டு கொள்ளாமல் நாம் தான்
இயற்கையை
இன்னும் இன்னும் சீண்டிக்கொண்டே இருக்கிறோம்

Thursday, December 10, 2015

மோட்டார் இன்ஷூரன்ஸ் - க்ளெய்ம்

                                      மோட்டார் இன்ஷூரன்ஸ் - க்ளெய்ம்              

நான் நிறுத்தி நிதானமாகத்தான் வண்டி ஓட்டுறனே… என் வண்டிக்கு நான் எதுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கணும்… என மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுப்பதையே தவிர்த்து வருகின்றனர் நம்முடைய மக்கள். சாலையில் நாம் என்னதான் நிதானமாகச் சென்றாலும், நம் வாகனத்துக்கு முன்னாலும் பின்னாலும் செல்லும் வாகன ஓட்டிகளும் நிதானமாக வருவார்களா என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஆகையால், மோட்டார் இன்ஷூரன்ஸ் என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று.
ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டாலே நமக்கு நிச்சயமாக இழப்பீடு கிடைத்துவிடும் என்று நினைத்துவிடக் கூடாது. இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்தபின் பெரும் பாலான சமயங்களில் க்ளெய்ம் கிடைக்கும் என்றாலும் சில சமயங்களில் க்ளெய்ம் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு என்கிற உண்மையை ஒவ்வொரு பாலிசிதாரரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கிறவர்கள் எந்தெந்த நிலைமையில் க்ளெய்ம் செய்யும்போது இழப்பீடு கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
எதற்கெல்லாம் க்ளெய்ம் இல்லை?
****************************************************
மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின் எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்காது
“வாகனத்தை ஓட்டுகிறவர்கள் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) மது அருந்திவிட்டு அல்லது போதைப் பொருள் சாப்பிட்டு விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் க்ளெய்ம் இல்லை.
வாகனத்தை 16 வயதுக்கு உட்பட்டவர் ஓட்டியிருந்தால், க்ளெய்ம் இல்லை. பழகுநர் உரிமம் பெற்ற ஒருவர் வாகனம் ஓட்டும்போது விபத்துக்குள்ளானால், உரிமம் பெற்ற ஒருவர் அப்போது உடன் இருந்திருந்தால்தான் க்ளெய்ம் கிடைக்கும்.
தனிநபர் வாகன பாலிசியில், வாகனத்தை தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தும்போது பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும். அந்த வாகனத்தை வாடகை டாக்சியாகவோ அல்லது சரக்கு போக்குவரத்து வாகனமாகவோ பயன்படுத்தி, அப்போது விபத்து ஏற்பட்டு க்ளெய்ம் கோரினால் இழப்பீடு எதுவும் கிடைக்காது.
வாகனத்தை ஓட்டுகிறவர்களிடம் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) முறையான மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விபத்து நடந்தால், க்ளெய்ம் கிடைக்காது.
சாதாரண பாலிசியை எடுத்து விட்டு, மோட்டார் சைக்கிள் அல்லது கார் பந்தயங்களில் பங்கேற்று சேதம் ஏற்பட்டால், க்ளெய்ம் கிடைக்காது. பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் அதற்கென இருக்கும் தனி பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பிரீமி யம் சற்று அதிகமாக இருக்கும்.
வழக்கமாக குறிப் பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளும் பராமரிப்புச் செலவு களுக்கு க்ளெய்ம் கிடையாது.
நீதிமன்றம், போக்கு வரத்து அதிகாரி அல் லது போலீஸ் அதிகாரி களால் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்ட வர்களுக்கு க்ளெய்ம் கிடையாது.
டிரைவிங் லைசென்ஸ் இல்லை எனில்..?
**************************************************************
வாகனம் ஓட்டும் உரிமையாளர் அல்லது டிரைவரிடம் முறையான மற்றும் செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றால் இழப்பீடு கிடைக்காது. நாளடைவில் ஏற்படும் வாகனத்தின் தேய்மானத்துக்கு க்ளெய்ம் இல்லை.
நம் நாட்டின் எல்லைக்கு வெளியே விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காது. அடிக்கடி விபத்து ஏற்படுத்துவர்களுக்கு க்ளெய்ம் கிடையாது. ராங் சைட் டிரைவிங் ஓட்டினால் க்ளெய்ம் கிடையாது” என எந்தெந்த நிலையில் க்ளெய்ம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை தெளிவாக விளக்கினார்.
இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தர மறுக்கும்போது,
இன்ஷூரன்ஸ் குறை தீீர்ப்பாளர்களிடம் முறையிடலாம். குறை தீர்ப்பாளர்கள் க்ளெய்ம் வழங்க மறுக்கும்பட்சத்தில் உரிய நீதிமன்றத்தில் வழக்கிட்டு நீதிபதி திருப்தி அடையும்பட்சத்தில் க்ளெய்ம் கிடைக்கும்.
தற்போது இந்தியாவில் ஒரு வாகனத்துக்கு மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுக்க, அதன் மொத்த விலையில் 3 சதவிகிதத்துக்கும் குறைவாகவே செலவாகிறது. சர்வதேச அளவில் இது 5 சதவிகிதமாக இருக்கிறது.
மோட்டார் வாகன பாலிசிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று, நம் வாகன பாதிப்புக்கான பாலிசி (own damage policy). அடுத்து, நம் வாகனத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கான பாலிசி (third party insurance). மேற்கண்ட இரண்டு வகையான பாலிசிகளின் பலன்களை ஒருசேரத் தருவது ஒருங்கிணைந்த பாலிசி (Comprehensive policy). விவரம் தெரிந்த வாகன ஓட்டிகள் அனைவரும் பாலிசி எடுக்கும்போதே மிக கவனமாக இருப்பது நல்லது!

தமிழ்தேசத்தின் திருவள்ளுவர் அவர்கள்

**இவ் உலகின் மிகக் கொடிய பயங்கரவாத தன்மை நிறைந்த
"ஆரியப்பார்ப்பானர்களை"
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பயே எதிர்த்தவர்


எமது தமிழ்தேசத்தின் திருவள்ளுவர் அவர்கள்***

திருக்குறள் இது அடிப்படையில் மனிதநேயத்தை பரப்புரை செய்கிறன்ற ஒரு வாழ்வியல் நூலாகும்.
மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் ஒரு உன்னத நூலாகும்.
அப்படியான எமது தமிழ்தேசத்தின் மகிமைக்குறிய, உலகார் போற்றும் ஒப்பற்ற தமிழரான திருவள்ளுவரின் நூலான திருக்குறளின் சிறப்புகளை பாரீர்......

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள­்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது.
இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது­­.
திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் தை முதல் நாளாகும் .
திருவள்ளுவர் ஆண்டை அறி வித்தவர் மறைமலை அடிகள்
திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை(அங்கீகாரம்) வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.
திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.
திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.
திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.
திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.
திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணை யாக வைக்கப்பட்டுள்ளது.
கீதையை மட்டுமே தெரிந்திருந்த மிஸ்டர் காந்திக்கு, திருக்குறளை அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.
திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.
திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுத்து ஔ
திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது
திருக்குறளில் உயிரினும் மேலான தாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.
திருக்குறளை முதலில் பயிற்றுவித் தவர் வள்ளலார் இராமலிங்கம்.
இவ் உலகிலேயே திருக்குறளுக்கு 20,க்கும், மேற்பட்ட மாநாடுகள் போட்டு இந் தேசமெங்கும் திருக்குறளை பரப்புரை செய்தவர்
எமது தமிழ்தேசத்தந்தை பெரியார் அவர்கள் மட்டுமே.....

திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு….”

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
“ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்”

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர்.
இந்தியாவில் பிறந்த மாபெரும் மனிதநேய சிந்தனையாளரான
புத்தர் க்கு பிறகு இவ் உலகின் மிகக் கொடிய பயங்கரவாத தன்மை நிறைந்த "ஆரியப்பார்ப்பானர்கள­ை" எதிர்த்தவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு

முன்பயே எமது தமிழ்தேசத்தின் திருவள்ளுவர் அவர்களே.!

Tuesday, December 8, 2015

இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன

இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?

இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும்.

இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.
அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும்.அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே,
ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,
டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,
நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும்,
எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும்தயாரிக்கப்பட்டது ஆகும்.
சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி

இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்

Sunday, November 29, 2015

TAMIL in JAPAN

இந்தியப் பிரதமரை "வணக்கம்' தெரிவிக்க வைத்த ஜப்பான் தமிழறிஞர் நொபுரூ கராஷிமா.

ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவுக்கு, டோக்கியோ நகரத்தில் இந்தியப் பிரதமர் "பத்மஸ்ரீ' விருது வழங்கினார். தமிழை நேசிக்கும் அந்த ஜப்பானியர், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, இருகரம் கூப்பி "வணக்கம்' என்று சொன்னதும், பிரதமர் சிரித்துக்கொண்டே அவருக்குத் தமிழில் "வணக்கம்' தெரிவித்ததும் நெகிழ்ச்சியான நிமிடங்கள்.

இந்தியப் பிரதமரை அந்நிய மண்ணில் "வணக்கம்' தெரிவிக்க வைத்தமைக்கே, அந்த மாமனிதருக்கு நாம் ஆயிரம் வணக்கங்கள் தெரிவிக்கலாம். கைதட்டலுக்கு இடையே தனக்கு வழங்கப்பட்ட "பத்மஸ்ரீ' விருதைப் பெற்றுக்கொண்ட நொபுரூ கராஷிமா, "நன்றி' என்று நல்ல தமிழில் கூறியபோது மீண்டும் கைதட்டல்.

நான் கைதட்டவில்லை. டோக்கியோ நகரில் தமிழ் ஒலித்தது கேட்டு, கண்ணீர் மல்க நின்றுவிட்டேன். முனைவர் நொபுரூ கராஷிமா சாதாரண அறிஞர் அல்லர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ஜப்பானிலுள்ள டாய்ஷோ பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையின் பேராசிரியர்.

சீனக் கடற்கரையோரங்களில் 9 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான பல தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டறிந்தவர். "தென்னிந்திய சரித்திரமும் சமுதாயமும்' என்கிற இவரது புத்தகம் கி.பி. 850-1800 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளின் ஆராய்ச்சி நூல். 

நம்மிடையே வாழும் தலைசிறந்த உண்மையான தமிழறிஞர்களுள் ஒருவர். தமிழுக்குப் பெருமை சேர்த்த ஜப்பானிய அறிஞரை, இந்தியப் பிரதமரே தேடிப்போய் "பத்மஸ்ரீ' விருது வழங்கி கெளரவிக்கிறார்.

நமது தமிழகத்திலுள்ள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் இது முதற்பக்கச் செய்தியாக வந்திருக்க வேண்டாமா..?!

தமிழுக்கு நாம் தரும் மரியாதை இதுதானா..?!