Thursday, December 24, 2015

நில அளவுகள்


நில அளவைகள் பல்வேறு அளவுகளில் குறிப்பிடப்படுகின்றன. அது பற்றிய விவரம்:-
1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
1 மீட்டர் – 3.281 அடி
1 குழி – 44 சென்ட்
1 மா – 100 குழி
1 காணி – 132 சென்ட் (3 குழி)
1 காணி – 1.32 ஏக்கர்
1 காணி – 57,499 சதுர அடி
1 டிசிமல் – 1 1/2 சென்ட்
1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
1 கிலோ மீட்டர் – 3280 அடி
1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
1 செயின் – 66 அடி (100 லிங்க்)
1 லிங்க் – 0.66 அடி
1 கெஜம் – 3 அடி
8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
22 கெஜம் – 1 செயின் (66 அடி)
10 செயின் – 1 பர்லாங்கு
1 இன்ச் – 2.54 செ.மீ
1 செ.மீ – 0.3937 செ.மீ
1 கெஜம் – 0.9144 மீட்டர்
1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
30 சதுர மைல் – 1 டவுன்சிப்
640 ஏக்கர் – 1 சதுர மைல்.....
////////////////////
நில அளவுகள் அறிவோம்.

♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
♓1 ஏக்கர் – 100 சென்ட்
♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
♓1 மீட்டர் – 3.281 அடி
♓1 குழி – 44 சென்ட்
♓1 மா – 100 குழி
♓1 காணி – 132 சென்ட் (3 குழி)
♓1 காணி – 1.32 ஏக்கர்
♓1 காணி – 57,499 சதுர அடி
♓1 டிசிமல் – 1 1/2 சென்ட்
♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
♓1 கிலோ மீட்டர் – 3280 அடி
♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
♓1 செயின் – 66 அடி (100 லிங்க்)
♓1 லிங்க் – 0.66 அடி
♓1 கெஜம் – 3 அடி
♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
♓22 கெஜம் – 1 செயின் (66 அடி)
♓10 செயின் – 1 பர்லாங்கு
♓1 இன்ச் – 2.54 செ.மீ
♓1 செ.மீ – 0.3937 செ.மீ
♓1 கெஜம் – 0.9144 மீட்டர்
♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
♓30 சதுர மைல் – 1 டவுன்சிப்
♓640 ஏக்கர் – 1 சதுர மைல்..

/////////////////////////////////////
 

Wednesday, December 23, 2015

கண்டுபிடித்தவர்கள்

கண்டுபிடித்தவர்கள்

போனோகிராப் - எடிசன்.

டிரான்சிஸ்டர் - ஷீக்லே.

கேமிரா - லூமியர் சகோதரர்கள்.

பேசும் படம் - வார்னர் சகோதரர்கள்.

காண்டாக்ட் லென்ஸ் - டேவல்.

ஈ.சி.ஜி. இயந்திரம் - ஐந்தோலன்

Monday, December 21, 2015

மனித உடல் -- இரத்தம் பற்றிய சில தகவல்கள்

மனித உடலில் உள்ள ஒடிக்கொன்டிருக்கும்
இரத்தம் பற்றிய சில தகவல்கள் :-

🍎 இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி
🍎 இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்
🍎 இரத்த வகைகள் - A, B, AB, O

🍎 இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது - Rhesus குரங்கில்
🍎 இரத்தத்தில் Rh காரணி இருந்தால் - பாசிடிவ் (Positive)
🍎 இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)

🍎 சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்
🍎 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி
🍎 இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)
🍎 இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%
🍎 மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg
🍎 இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்
🍎 அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB
🍎 அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை - O
🍎 120 mmHg என்பது - Systolic Pressure
🍎 80 mmHg என்பது - Diastolic Pressure
🍎 இரத்த செல்களின் வகைகள் - 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்

3. இரத்த தட்டுகள்
1. இரத்த சிவப்பு அணுக்கள்:-
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்
🍓 ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 5.2 மில்லியன்
🍓 பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 4.5 மில்லியன்
🍓 ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள்
🍓 பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா
2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா
🍉 உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்
🍉 லியூகோசைட்டுகள் வகைகள் - 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்
🍉 துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் -3
☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்
🍉 துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2
☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்
🍉 மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை
🍍இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:-
🍉 நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
🍉 இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%) பேசோஃபில்கள் - 0.1%
🍉 லிம்போசைட்டுகள் - (20 - 30%)
🍉 மோனோசைட்டுகள் - (1 - 4%)
3. இரத்த தட்டுகள் :-
🍈 இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)
🍈 இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்
🍈 இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்
🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000
🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய காரணமான நோய் - டெங்கு

Sunday, December 20, 2015

பரம்பரை..????

பரம்பரை..??

நாம் - முதல் தலைமுறை
.
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

.
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை
.
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை
.
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை
.
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை
.
பரன் + பரை - ஏழாம் தலைமுறை
.
பரன் + பரை = பரம்பரை

.
ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால், ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..

ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக,
பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலைமுறையாக என்று பொருள் வரும்.
வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

Saturday, December 19, 2015

வங்கிக் கணக்கு முடங்காமல் இருக்க

வங்கிக் கணக்கு முடங்காமல் இருக்க..!
 

வங்கிக் கணக்குகள் முடங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
1. அடிக்கடி பயன்படுத்துகிற குறைந்தபட்சம் இரண்டு வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்துக்கொள்வது நல்லது. 
இனி இந்த வங்கிக் கணக்குகளை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களிடம் இருக்கும் பிற வங்கிக் கணக்கு களை உடனடியாக முடித்து விடலாம். 
2. என்றாவது ஒருநாள் ஒரு வங்கிக் கணக்கு தேவைப்படும் என்று நீங்கள் நினைத்தால், அந்தக் கணக்கில் தொடர்ந்து பணத்தைப் போடுவதும் எடுப்பதும் அவசியம். 
3. பயன்படுத்தும் கணக்கு களிலிருந்து அவ்வப்போது பயன்படுத்தாத கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
4. நிரந்த இருப்புக் கணக்கு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றின் மூலம் வரும் வருமானத்தைத் தொடர்ந்து பயன்படுத்தாத கணக்கில் சேமித்து வரலாம்.
இப்போது ஏடிஎம், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற பல வசதிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி தங்களுடைய கணக்கை எப்போதும் செயல்பாட்டில் வைத்து முடங்காமல் பார்த்துக் கொள்ளலாமே!

உப்பும் .......தேனும் ......நோயும் .....!!!!!

உப்பும் .......தேனும் ......நோயும் .....!!!!!

 உப்பு
 உப்பு இல்லாத உணவு குப்பையில் என்று என் பாட்டி சொல்வார்கள் .உப்பு நமக்கு உணவுகளில் சுவைகளை கூட்டி தரும் என்று மட்டும் நமக்கு தெரிந்த விவரம்.
சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ?
இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு. உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்துவிடும், இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது. இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள், இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள்.
ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றால் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும்.
உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும்.
சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உண்ண பத்தியம் உண்டு, கை தேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள்.
 
தேன்.:
 தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும். சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?
தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது . இதனால் தான் தேனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .
ஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள்
 
மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ

1.மாதம் 2 முறையாவது 3 வேலையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .
2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .
தேன் சர்க்கரை நோய்களை தூண்டது .
3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும்
நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .
உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள்) இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணபடுத்த உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது. இன்றைய மருத்துவம் (alaopathy )
இனிப்பை வைத்து வைத்தியம் செய்வது homeopathi .
உப்பும், தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.

Thursday, December 17, 2015

வணிக நிலையங்கங்களுக்கான / தமிழ்ப் பெயர்கள்:

வணிக நிலையங்கங்களுக்கான / தமிழ்ப் பெயர்கள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


1 டிரேடர்ஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : மையம், நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோர்ஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோர்ஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவல்ஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகல்ஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்

5 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லர்ஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பர்ஸ் : மரக்கடை
18 பிரிண்டர்ஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டர்ஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டர்ஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்க்ஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லர்ஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைல்ஸ் : துணியகம்
28 ரெடிமேட்ஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனர்ஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்ட்ஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டாஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைல்ஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பஜார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி
51 போர்டிங் லாட்ஜிங் : உண்டுறை விடுதி
52 பாய்லர் : கொதிகலன்
53 பில்டர்ஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் : கம்பிவடம், வடம்
55 கேப்ஸ் : வாடகை வண்டி
56 கபே : அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்க்ஸ் : பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் : சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் : பைஞ்சுதை
60 கெமிக்கல்ஸ் : வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி
62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் : மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் : குளம்பியகம்
65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வகம்,
66 கம்பெனி : குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளக்ஸ் : வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்க்ஸ் : திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்
71 கூரியர் : தூதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் : மிதிவண்டி
74 டிப்போ : கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனர்ஸ் : உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகல்ஸ் : மின்பொருளகம்
78 எலக்ட்ரானிக்ஸ் : மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் : விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோர்ஸ் : மிதிவண்டியகம்
82 பேக்டரி : தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
84 ஃபாஸ்ட் ஃபுட் : விரைவு உணவகம்
85 ஃபேக்ஸ் : தொலை எழுதி
86 பைனான்ஸ் : நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி
88 கார்மெண்ட்ஸ் : உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
90 ஹார்டு வேர்ஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி : நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்
93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் : சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்
96 பேஜர் : விளிப்பான், அகவி
97 பெயிண்ட்ஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
102 பார்மசி : மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிப்பட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி : நெகிழித் தொழிலகம்
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் : விசைத்தறி
109 பவர் பிரஸ் : மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்
112 ரப்பர் : தொய்வை
113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
115 ஷோரூம் : காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் : வழங்குநர்,
120 லெதர்ஃபேக்டரி : தோல் பதனீட்டகம்
121 டிரேட் : வணிகம்
122 டிரேடர்ஸ் : வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்
124 டிராவல்ஸ் : பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் : தேனீரகம்
126 வீடியோ : வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு
128 ஜெராக்ஸ் : படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே : ஊடுகதிர்.

Wednesday, December 16, 2015

முட்டாள் தினம் உதித்த வரலாறு !

                                            முட்டாள் தினம் உதித்த வரலாறு !

1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 11 நாட்கள் காணாமல் போய் இருக்கும் அது ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் இங்கிலாந்து அரசு "the Roman Julian Calendar" இருந்து "the Gregorian Calendar" மாற்றிக்கொண்டது.
ஜூலியன் வருடம் கிரகோரியன் ஆண்டை விட 11 நாட்கள் அதிகம் இதனை அறிந்த மன்னர் அந்த மாதத்தில் இருந்து 11 நாட்களை அகற்றும் படி உத்தரவிட்டார்.ஆகையால் அந்த மாதத்தில் உழைப்பாளிகள் 11 நாட்கள் குறைவாக உழைத்தனர்.
இதிலிருந்து தான் விடுப்பு ஊதியம்(paid leave) எனும் முறை தோன்றியது.

ஜூலியன் காலேண்டேரில் ஏப்ரல் 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது.ஆனால் கிரகோரியன் காலேண்டேரில் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது.கிரகோரியன் காலேண்டர் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் மக்கள் பழைய வழக்கமான ஏப்ரல் 1 ஆம் தேதியையே புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்.
புதிய முறையை ஏற்க அதிக மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை அரசு சிறிய உத்தரவுகள் பிறப்பித்தும் மக்கள் பழைய வழக்கத்தை விடுவதாக இல்லை.
யோசித்த மன்னர் ஒரு வினோதமான அறிக்கையை வெளியிட்டார்.ஏப்ரல் 1 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுபவர் யாராக இருந்தாலும் அவர் முட்டாளாக அறியப் படுவார் என்று அந்த அறிக்கையில் இருந்தது.
அதிலிருந்து உதித்தது தான் ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினம் (april fool's day).

Tuesday, December 15, 2015

எண் ( 7 ) ஏழின் சிறப்புக்கள்

ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.
எண் ஏழின் சிறப்புக்கள்:
1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007
2. எழு குன்றுகளின் நகரம் ரோம்
3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
4. மொத்தம் ஏழு பிறவி
5. ஏழு சொர்க்கம்(குரான்)
6. ஏழு கடல்கள்
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.
7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
8. ஏழு வானங்கள். (Qur'an)
9. ஏழு முனிவர்கள் (Rishi)
10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)
11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின்
எண்ணிக்கை ஏழு
13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.
16. மேலுலகம் ஏழு
17. கீழுலகம் ஏழு
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்
18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
19. மொத்தம் ஏழு தாதுக்கள்
20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா
21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
22. ஏழு புண்ணிய நதிகள்
23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
24. அகப்பொருள் திணைகள் ஏழு
25. புறப்பொருள் திணைகள் ஏழு
26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
27. கடை ஏழு வள்ளல்கள்
28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்
30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்
31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா
32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு
33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.
34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,
பேரிளம் பெண்)

Friday, December 11, 2015

இயற்கை...சொல்லுவது என்ன ?

                                                       இயற்கை....

26- டிசம்பர் 1932.... சீனாவில் நிலநடுக்கம்.
(இறப்பு 70,000)
26- டிசம்பர் 1939.... டர்க்கியில் நிலநடுக்கம்
. (இறப்பு 41,000)

26- ஜனவரி 1951.... போர்ச்சுகல் நிலநடுக்கம்
(இறப்பு 30,000)
26- ஜூலை 1963.... யுகாஸ்லாவியா நிலநடுக்கம்.
26 - ஜூலை 1976.... சீனாவில் நிலநடுக்கம்.
26- ஜனவரி 2001... குஜராத்தில் நிலநடுக்கம்.
26- டிசம்பர் 2003..... ஈரான் நிலநடுக்கம்.
(இறப்பு 60,000)
26- டிசம்பர் 2004.... சுனாமியின் கொடூரதாண்டவம்.
26- நவம்பர் 2008.... மும்பைத் தாக்குதல்.
26- பிப்ரவரி 2010.... ஜப்பானில் நிலநடுக்கம்.
26- ஜூலை 2010.... தைவான் நிலநடுக்கம்.

26- ஏப்ரல் 2015..... நேபாளத்தில் நிலநடுக்கம்.
 

ஏதோ ஒன்றை இயற்கை சொல்லவருகிறது....
எதையுமே கண்டு கொள்ளாமல் நாம் தான்
இயற்கையை
இன்னும் இன்னும் சீண்டிக்கொண்டே இருக்கிறோம்

Thursday, December 10, 2015

மோட்டார் இன்ஷூரன்ஸ் - க்ளெய்ம்

                                      மோட்டார் இன்ஷூரன்ஸ் - க்ளெய்ம்              

நான் நிறுத்தி நிதானமாகத்தான் வண்டி ஓட்டுறனே… என் வண்டிக்கு நான் எதுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கணும்… என மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுப்பதையே தவிர்த்து வருகின்றனர் நம்முடைய மக்கள். சாலையில் நாம் என்னதான் நிதானமாகச் சென்றாலும், நம் வாகனத்துக்கு முன்னாலும் பின்னாலும் செல்லும் வாகன ஓட்டிகளும் நிதானமாக வருவார்களா என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஆகையால், மோட்டார் இன்ஷூரன்ஸ் என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று.
ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டாலே நமக்கு நிச்சயமாக இழப்பீடு கிடைத்துவிடும் என்று நினைத்துவிடக் கூடாது. இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்தபின் பெரும் பாலான சமயங்களில் க்ளெய்ம் கிடைக்கும் என்றாலும் சில சமயங்களில் க்ளெய்ம் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு என்கிற உண்மையை ஒவ்வொரு பாலிசிதாரரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கிறவர்கள் எந்தெந்த நிலைமையில் க்ளெய்ம் செய்யும்போது இழப்பீடு கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
எதற்கெல்லாம் க்ளெய்ம் இல்லை?
****************************************************
மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின் எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்காது
“வாகனத்தை ஓட்டுகிறவர்கள் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) மது அருந்திவிட்டு அல்லது போதைப் பொருள் சாப்பிட்டு விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் க்ளெய்ம் இல்லை.
வாகனத்தை 16 வயதுக்கு உட்பட்டவர் ஓட்டியிருந்தால், க்ளெய்ம் இல்லை. பழகுநர் உரிமம் பெற்ற ஒருவர் வாகனம் ஓட்டும்போது விபத்துக்குள்ளானால், உரிமம் பெற்ற ஒருவர் அப்போது உடன் இருந்திருந்தால்தான் க்ளெய்ம் கிடைக்கும்.
தனிநபர் வாகன பாலிசியில், வாகனத்தை தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தும்போது பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும். அந்த வாகனத்தை வாடகை டாக்சியாகவோ அல்லது சரக்கு போக்குவரத்து வாகனமாகவோ பயன்படுத்தி, அப்போது விபத்து ஏற்பட்டு க்ளெய்ம் கோரினால் இழப்பீடு எதுவும் கிடைக்காது.
வாகனத்தை ஓட்டுகிறவர்களிடம் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) முறையான மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விபத்து நடந்தால், க்ளெய்ம் கிடைக்காது.
சாதாரண பாலிசியை எடுத்து விட்டு, மோட்டார் சைக்கிள் அல்லது கார் பந்தயங்களில் பங்கேற்று சேதம் ஏற்பட்டால், க்ளெய்ம் கிடைக்காது. பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் அதற்கென இருக்கும் தனி பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பிரீமி யம் சற்று அதிகமாக இருக்கும்.
வழக்கமாக குறிப் பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளும் பராமரிப்புச் செலவு களுக்கு க்ளெய்ம் கிடையாது.
நீதிமன்றம், போக்கு வரத்து அதிகாரி அல் லது போலீஸ் அதிகாரி களால் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்ட வர்களுக்கு க்ளெய்ம் கிடையாது.
டிரைவிங் லைசென்ஸ் இல்லை எனில்..?
**************************************************************
வாகனம் ஓட்டும் உரிமையாளர் அல்லது டிரைவரிடம் முறையான மற்றும் செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றால் இழப்பீடு கிடைக்காது. நாளடைவில் ஏற்படும் வாகனத்தின் தேய்மானத்துக்கு க்ளெய்ம் இல்லை.
நம் நாட்டின் எல்லைக்கு வெளியே விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காது. அடிக்கடி விபத்து ஏற்படுத்துவர்களுக்கு க்ளெய்ம் கிடையாது. ராங் சைட் டிரைவிங் ஓட்டினால் க்ளெய்ம் கிடையாது” என எந்தெந்த நிலையில் க்ளெய்ம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை தெளிவாக விளக்கினார்.
இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தர மறுக்கும்போது,
ன்ஷூரன்ஸ் குறை தீீர்ப்பாளர்களிடம் முறையிடலாம். குறை தீர்ப்பாளர்கள் க்ளெய்ம் வழங்க மறுக்கும்பட்சத்தில் உரிய நீதிமன்றத்தில் வழக்கிட்டு நீதிபதி திருப்தி அடையும்பட்சத்தில் க்ளெய்ம் கிடைக்கும்.
தற்போது இந்தியாவில் ஒரு வாகனத்துக்கு மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுக்க, அதன் மொத்த விலையில் 3 சதவிகிதத்துக்கும் குறைவாகவே செலவாகிறது. சர்வதேச அளவில் இது 5 சதவிகிதமாக இருக்கிறது.
மோட்டார் வாகன பாலிசிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று, நம் வாகன பாதிப்புக்கான பாலிசி (own damage policy). அடுத்து, நம் வாகனத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கான பாலிசி (third party insurance). மேற்கண்ட இரண்டு வகையான பாலிசிகளின் பலன்களை ஒருசேரத் தருவது ஒருங்கிணைந்த பாலிசி (Comprehensive policy). விவரம் தெரிந்த வாகன ஓட்டிகள் அனைவரும் பாலிசி எடுக்கும்போதே மிக கவனமாக இருப்பது நல்லது!

தமிழ்தேசத்தின் திருவள்ளுவர் அவர்கள்

**இவ் உலகின் மிகக் கொடிய பயங்கரவாத தன்மை நிறைந்த
"ஆரியப்பார்ப்பானர்களை"
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பயே எதிர்த்தவர்


எமது தமிழ்தேசத்தின் திருவள்ளுவர் அவர்கள்*******

திருக்குறள் இது அடிப்படையில் மனிதநேயத்தை பரப்புரை செய்கிறன்ற ஒரு வாழ்வியல் நூலாகும்.
மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் ஒரு உன்னத நூலாகும்.
அப்படியான எமது தமிழ்தேசத்தின் மகிமைக்குறிய, உலகார் போற்றும் ஒப்பற்ற தமிழரான திருவள்ளுவரின் நூலான திருக்குறளின் சிறப்புகளை பாரீர்......

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள­்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது.
இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது­­.
திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் தை முதல் நாளாகும் .
திருவள்ளுவர் ஆண்டை அறி வித்தவர் மறைமலை அடிகள்
திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை(அங்கீகாரம்) வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.
திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.
திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.
திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.
திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.
திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணை யாக வைக்கப்பட்டுள்ளது.
கீதையை மட்டுமே தெரிந்திருந்த மிஸ்டர் காந்திக்கு, திருக்குறளை அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.
திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.
திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுத்து ஔ
திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது
திருக்குறளில் உயிரினும் மேலான தாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.
திருக்குறளை முதலில் பயிற்றுவித் தவர் வள்ளலார் இராமலிங்கம்.
இவ் உலகிலேயே திருக்குறளுக்கு 20,க்கும், மேற்பட்ட மாநாடுகள் போட்டு இந் தேசமெங்கும் திருக்குறளை பரப்புரை செய்தவர்
எமது தமிழ்தேசத்தந்தை பெரியார் அவர்கள் மட்டுமே.....

திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு….”

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
“ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்”

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர்.
இந்தியாவில் பிறந்த மாபெரும் மனிதநேய சிந்தனையாளரான
புத்தர் க்கு பிறகு இவ் உலகின் மிகக் கொடிய பயங்கரவாத தன்மை நிறைந்த "ஆரியப்பார்ப்பானர்கள­ை" எதிர்த்தவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு

முன்பயே எமது தமிழ்தேசத்தின் திருவள்ளுவர் அவர்களே.!

Tuesday, December 8, 2015

இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன

இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?

இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும்.

இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.
அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும்.அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே,
ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,
டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,
நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும்,
எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும்தயாரிக்கப்பட்டது ஆகும்.
சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி

இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்

Sunday, November 29, 2015

TAMIL in JAPAN

இந்தியப் பிரதமரை "வணக்கம்' தெரிவிக்க வைத்த ஜப்பான் தமிழறிஞர் நொபுரூ கராஷிமா.

ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவுக்கு, டோக்கியோ நகரத்தில் இந்தியப் பிரதமர் "பத்மஸ்ரீ' விருது வழங்கினார். தமிழை நேசிக்கும் அந்த ஜப்பானியர், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, இருகரம் கூப்பி "வணக்கம்' என்று சொன்னதும், பிரதமர் சிரித்துக்கொண்டே அவருக்குத் தமிழில் "வணக்கம்' தெரிவித்ததும் நெகிழ்ச்சியான நிமிடங்கள்.

இந்தியப் பிரதமரை அந்நிய மண்ணில் "வணக்கம்' தெரிவிக்க வைத்தமைக்கே, அந்த மாமனிதருக்கு நாம் ஆயிரம் வணக்கங்கள் தெரிவிக்கலாம். கைதட்டலுக்கு இடையே தனக்கு வழங்கப்பட்ட "பத்மஸ்ரீ' விருதைப் பெற்றுக்கொண்ட நொபுரூ கராஷிமா, "நன்றி' என்று நல்ல தமிழில் கூறியபோது மீண்டும் கைதட்டல்.

நான் கைதட்டவில்லை. டோக்கியோ நகரில் தமிழ் ஒலித்தது கேட்டு, கண்ணீர் மல்க நின்றுவிட்டேன். முனைவர் நொபுரூ கராஷிமா சாதாரண அறிஞர் அல்லர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ஜப்பானிலுள்ள டாய்ஷோ பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையின் பேராசிரியர்.

சீனக் கடற்கரையோரங்களில் 9 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான பல தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டறிந்தவர். "தென்னிந்திய சரித்திரமும் சமுதாயமும்' என்கிற இவரது புத்தகம் கி.பி. 850-1800 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளின் ஆராய்ச்சி நூல். 

நம்மிடையே வாழும் தலைசிறந்த உண்மையான தமிழறிஞர்களுள் ஒருவர். தமிழுக்குப் பெருமை சேர்த்த ஜப்பானிய அறிஞரை, இந்தியப் பிரதமரே தேடிப்போய் "பத்மஸ்ரீ' விருது வழங்கி கெளரவிக்கிறார்.

நமது தமிழகத்திலுள்ள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் இது முதற்பக்கச் செய்தியாக வந்திருக்க வேண்டாமா..?!

தமிழுக்கு நாம் தரும் மரியாதை இதுதானா..?!

இராசி மண்டலம்.

 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக்
 கொண்டுள்ளது.  
ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன.  
12  வகைகளாக பிறிக்கப்படுகிறது.
 அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :

👆   மேஷம்
✋   ரிஷபம்
✌   மிதுனம்
✊   கடகம்
💪   சிம்மம்
👋   கன்னி
👍   துலாம்
👇   விருச்சிகம்
☝   தனுசு
👌   மகரம்
👏   கும்பம்
👊   மீனம்

🔎ஒவ்வொரு இராசி மண்டலமும் 
தனித்துவம் வாய்ந்தவை. அதன்                                                                            சிறப்பம்சங்களை பட்டியலாக 
கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேஷம் :

1.  வைராக்கியம்  (Assertiveness)
2.  தேசநலன் (Citizenship)
3.  நிறைவேற்றுதல் (Chivalry)
4.  துணிச்சல்  (Courage)
5.  கீழ்படிதல்  (Obedience)
6.  வெளிப்படையாக  (Openness)
7.  ஒழுங்குமுறை  (Order)
8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9.  ஆன்மிகம்  (Spirituality)

🎯  மேஷராசி மண்டலமானது 
ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்
ரிஷபம் :

1.  கருணை  (Mercy)
2.  இரக்கம் (Compassion)
3.  காரணம் அறிதல் (Consideration)
4.  அக்கறையுடன்  (Mindfulness)
5.  பெருந்தன்மை (Endurance)
6.  பண்புடைமை (Piety)
7.  அஹிம்சை  (Non violence)
8.  துணையாக  (Subsidiarity)
9.  சகிப்புத்தன்மை (Tolerance)
 ரிஷபராசி மண்டலமானது 
சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்

✌  மிதுனம் :

1.  ஆர்வம் (Curiosity)
2.  வளைந்து கொடுத்தல்  (Flexibility)
3.  நகைச்சுவை (Humor)
4.  படைப்பிக்கும் கலை  (Inventiveness)
5.  வழிமுறை  (Logic)
6.  எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7.  காரணம்  (Reason)
8.  தந்திரமாக  (Tactfulness)
9.  புரிந்து கொள்ளுதல்  (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு
 மண்டலத்தின் ஆதாரமாகும்.

✊  கடகம் :

1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3.  அறம் (Charity)
4.  உதவுகின்ற  (Helpfulness)
5.  தயாராக  இருப்பது  (Readiness)
6.  ஞாபகம் வைத்தல்  (Remembrance)
7.  தொண்டு செய்தல்  (Service)
8.  ஞாபகசக்தி  (Tenacity)
9.  மன்னித்தல்  (Forgiveness)
கடகராசி மண்டலமானது ஐம்புலன் 
மண்டலத்தின் ஆதாரமாகும்.

💪 சிம்மம் :

1.  வாக்குறுதி  (Commitment)
2.  ஒத்துழைப்பு  (Cooperativeness)
3.  சுதந்திரம்  (Freedom)
4.  ஒருங்கிணைத்தல்  (Integrity)
5.  பொறுப்பு (Responsibility)
6.  ஒற்றுமை  (Unity)
7.  தயாள குணம் (Generosity)
8.  இனிமை  (Kindness)
9.  பகிர்ந்து கொள்ளுதல்  (Sharing)

🎯  சிம்மராசி மண்டலமானது தசை 
மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :

1.  சுத்தமாயிருத்தல்  (Cleanliness)
2.  அருள் (Charisma)
3.  தனித்திருத்தல்  (Detachment)
4.  சுதந்திரமான நிலை (Independent)
5.  தனிநபர் உரிமை (Individualism)
6.  தூய்மை  (Purity)
7.  உண்மையாக  (Sincerity)
8.  ஸ்திரத்தன்மை  (Stability)
9.  நல்ஒழுக்கம்  (Virtue ethics) கன்னிராசி 
மண்டலமானது தோல் மண்டலத்தின் 
ஆதாரமாகும்.

👍 துலாம் :

1.  சமநிலை காத்தல் (Balance)
2.  பாரபட்சமின்மை (Candor)
3.  மனஉணர்வு (Conscientiousness)
4.  உள்ளத்தின் சமநிலை  (Equanimity)
5.  நியாயம் (Fairness)
6.  நடுநிலையாக  (Impartiality)
7.  நீதி (Justice)
8.  நன்னெறி  (Morality)9.  நேர்மை  (Honesty)

🎯  துலாராசி மண்டலமானது சுவாச 
மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :

1.  கவனமாக இருத்தல்(Attention)
2.  விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3.  எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4.  சீரிய யோசனை (Consideration)
5.  பகுத்தரிதல்  (Discernment)
6.  உள் உணர்வு  (Intuition)
7.  சிந்தனைமிகுந்த  (Thoughtfulness)
8.  கண்காணிப்பு  (Vigilence)
9.  அறிவுநுட்பம் (Wisdom)

🎯  விருச்சகராசி மண்டலமானது நிணநீர்
  மண்டலத்தின் ஆதாரமாகும்.

☝  தனுசு :.  லட்சியம்  (Ambition)
2.  திடமான நோக்கம்  (Determination)
3.  உழைப்பை நேசிப்பது  (Diligence)
4.  நம்பிக்கையுடன்  (Faithfulness)
5.  விடாமுயற்சி  (Persistence)
6.  சாத்தியமாகின்ற  (Potential)
7.  நம்பிக்கைக்குரிய  (Trustworthiness)
8.  உறுதி (Confidence)
9.  ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)

🎯  தனுசு ராசி மண்டலமானது எலும்பு
 மண்டலத்தின் ஆதாரமாகும்.

👌 மகரம்:
1.  கண்ணியம்  (Diginity)
2.  சாந்த குணம் (Gentleness)
3.  அடக்கம்  (Moderation)
4.  அமைதி (Peacefulness)
5.  சாதுவான  (Meekness)
6.  மீளும் தன்மை  (Resilience)
7.  மௌனம் (Silence)
8.  பொறுமை (Patience)
9.  செழுமை  (Wealth)

🎯  மகரராசி மண்டலமானது நாளமுள்ள 
சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.கும்பம் :

1.  சுய அதிகாரம் (Autonomy)
2.  திருப்தி (Contentment)
3.  மரியாதை (Honor)
4.  மதிப்புமிக்க  (Respectfulness)
5.  கட்டுப்படுத்துதல்  (Restraint)
6.  பொது கட்டுப்பாடு  (Solidarity)
7.  புலனடக்கம்  (Chasity)
8.  தற்சார்பு  (Self Reliance)
9.  சுயமரியாதை  (Self-Respect)

🎯  கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி 
மண்டலத்தின் ஆதாரமாகும்.
 மீனம் :

1.  உருவாக்கும் கலை (Creativity)
2.  சார்ந்திருத்தல்  (Dependability)
3.  முன்னறிவு  (Foresight)
4.  நற்குணம் (Goodness)
5.  சந்தோஷம்  (Happiness)
6.  ஞானம் (Knowledge)
7.  நேர்மறை சிந்தனை  (Optimism)
8.  முன்யோசனை  (Prudence)
9.  விருந்தோம்பல் (Hospitality)

🎯  மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட 
மண்டலத்தின்ஆதாரமாகும்

Monday, November 23, 2015

புது தகவல்கள் .....


1 எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, 
பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் 
செய்யப்பட்டது இல்லை. 
அது, ஒரு வகை "காட்டன் (cotton)
 "துணியால் செய்யப்பட்டது.
 
2 தேன், மிக எளிதாக ஜீரணமடையும்  
ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா?

  அது ஏற்கனவே தேனீக்களால்
 ஜீரணிக்கப்பட்டுவிட்டது.
3 வண்ணத் திரைப்படங்களுக்கு
 'ஈஸ்ட்மேன் கலர்' என்று பெயர்   சூட்டுவதுண்டு.     
அவ்வாறு சூட்டக் காரணம் என்ன தெரியுமா?
 1883ம் ஆண்டில்    முதன் முதலாக
 வண்ண புகைப்பட ஃபிலிம்மை ஈஸ்ட்மேன் என்பவர்
 கண்டுபிடித்தார். அதன் காரணமாக 
அவருடைய பெயரை வண்ண 
பிலிம்களுக்கு சூட்டலாயினர்.
 4 யானையின் காது முறம் போல
 இருக்கும் என்று கூறுவார்கள்.   
யானையின் காதுக்கு செந்தமிழ்ப் பெயர் 
என்ன தெரியுமா? 'தலாடகம்' என்பது தான்.
நாணயத்தில் தனது உருவத்தை 
பொறித்த முதல் அரசர் அலெக்ஸாண்டர்
  
6 பென்சிலில்  'எச்பி',  எச்பி2'  என்று
குறிப்பிடப்பட்டிருக்கும்.  'எச்'  என்றால்
  ஹார்டு,  'பி'  என்றால்  பிளாக்.
அந்த பென்சிலில்
  பயன்படுத்தப்பட்டுள்ள  கிராபைட்
எந்த  அளவுக்கு  உறுதியாக,
கறுப்பாக  எழுதும்  என்பதை  இது  குறிக்கிறது.

பெரும்பாலானவர்களுக்கு சீட்டு
 விளையாட தெரியும்.  அதில் ராஜா, ராணி    
என்ற சீட்டுக்கள் இருக்கும்.  ஆனால், 
அந்த ராஜா - ராணி எந்த மன்னனை,  
அரசியை குறிக்கிறது தெரியுமா...?
   ஸ்பேட் ராஜா  --  மன்னர் டேவிட்  ( இஸ்ரேல் ).
   ஹார்டின் ராஜா  --  மன்னர் சார்லஸ்  ( பிரான்ஸ் ).
   டயமண்ட் ராஜா  --  ஜூலியஸ் சீசர்  ( இத்தாலி ).
   கிளாவர் ராஜா  --  அலெக்சாண்டர் தி கிரேட்  ( கிரீஸ் ).
   ஸ்பெட் ராணி  --  ஏதெனா  ( கிரீஸ் ).
   ஹார்டின் ராணி  --  ஜூதிக்  ( பிரான்ஸ் ).
   டயமண்ட் ராணி  --  ரேச்சல்  ( எகிப்து  ).
   கிளாவர் ராணி  --  ஆர்ஜீன்  ( கிரீஸ்
 )

உலகத் தமிழ் மாநாடு

உலகத் தமிழ் மாநாடு

உலகத் தமிழ் மாநாடு நடந்த இடங்கள்:-

1.கோலாலம்பூர் -- 1966
2.சென்னை -- 1968

3.பாரிஸ் -- 1970

4.யாழ்ப்பாணம் -- 1974
5.மதுரை -- 1981

6.கோலலம்பூர் -- 1987

7.மொரீசியஸ் -- 1989

8.தஞ்சாவூர் -- 1995

தமிழர்கள் -காலத்தை வகுத்த விதம்

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள். 
1. வைகறை
2. காலை
3. நண்பகல்
4. எற்பாடு
5. மாலை
6. யாமம்

என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

எல்லைக் கோடுகள்

எல்லைக் கோடுகள்

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கோடு--ராட்கிளிப் கோடு.

இந்தியா - சீனா எல்லைக் கோடு--மக்மோகன் கோடு.

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லைக் கோடு--டூராண்ட் லைன்.

யார் கட்டியது ?

எந்த ஆண்டு யார்? கட்டியது.
 
குதுப்மினார் கி.பி.1232-ல் இல்டுமிஸ் என்பவரால் கட்டப்பட்டது.

வில்லியம்கோட்டை கி.பி.1696-ல் கல்கத்தாவில் ஆங்கிலேயர்களால் 
கட்டப்பட்டுள்ளது.

நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி.5-ம் நூற்றாண்டில் குமாரகுப்தரால் நிறுவப்பட்டது.

செயிண்ட்ஜார்ஜ் கோட்டை கி.பி. 1640-ல் சென்னையில் ஆங்கிலேயரால் கட்டப்பட்டுள்ளது.

வேலூர் கோட்டை கி.பி. 16-ம் நூற்றாண்டில் சின்ன பொம்மி நயக்கரால் கட்டப்பட்டுள்ளது.

தாஜ்மகால் கி.பி.1652-ல் ஷாஜகனால் கட்டப்பட்டுள்ளது.

கல்லணை கி.பி.2-ம் நூற்றாண்டில் கரிகாலனால் கட்டப்பட்டது
.
பிரகதீஸ்வரர் கோவில் கி.பி.1010-ல் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ளது.

Sunday, November 15, 2015

சிறப்புப் பெயர்கள்

சிறப்புப் பெயர்கள்

கடல்களின் அரசி - பசிபிக் பெருங்கடல்

அரபிகடலின் அரசி - கொச்சி (கேரளா)

ஏட்ரியாட்டிக்சின் அரசி - வெனிஸ் (இத்தாலி)

மலை வாழிடங்களின் அரசி - ஊட்டி (தமிழ் நாடு)

டெக்கானின் அரசி - புனே (மராட்டியம்)

பால்டிக்கடலின் பேரரசி - ஸ்டாக்ஹோம்(சுவீடன்)

கடற்கரையின் அரசி - கோவா

சாத்பூர மலையின் அரசி - பஞ்ச்மடி

மலைகளின் இளவரசி - கொடைக்கானல்(தமிழ்நாடு)

சுயசரிதைகள்

சுயசரிதைகள்

கிரிக்கட் வீரர் கபில்தேவின் சுயசரிதை - ”ஸ்ட்ரெயிட் பிரம் தி ஹார்ட்”
சதாம் உசேனின் சுயசரிதை - “மென் அண்ட் எ சிட்டி”

எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனின் சுயசரிதை - “த்விகாந்திதா”

ஹிலாரி கிளிண்டனின் சுயசரிதை - “லிவிங் ஹிஸ்டரி

சிதார் இசை மேதை ரவிசங்கரின் சுயசரிதை - “ராகமாலிகை”

எழுத்தாளர் கமலா தாஸின் சுயசரிதை - “மை ஸ்டோரி”

முன்னால் கிரிக்கட் வீரர் ஜாவித் மியாண்டட்டின் சுயசரிதை - ”கட்டிங் எட்ஜ்”

முதல் செயற்கைக்கோள்கள்

முதல் செயற்கைக்கோள்கள்

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் - ஆர்யபட்டா.

ரஷியாவின்முதல் செயற்கைக்கோள் - ஸ்புட்னிக்.

அமெரிக்காவின் முதல் செயற்க்கைக்கோள் - எக்ஸ்புளோரர்.

சீனாவின் முதல் செயற்கைக்கோள் - ஸிஸோம் -1.

பிரான்சின் முதல் செயற்கைக்கோள் - ஏ - 1.

ஜப்பானின் முதல் செயற்கைக்கோள் - ஓசுமி.

வடிவமைப்பாளர்கள்

வடிவமைப்பாளர்கள்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் - சபர்ணா ராய் சவுத்ரி.
 
பழைய டெல்லியை வடிவமைத்தவர் - ஷாஜகான்.

புது டெல்லியைவடிவமைத்தவர் - எட்வின் லூட்தயன்ஸ்
.
கல்கத்தா மாநகரை வடிவமைத்தவர் - ஜாப் சார்நாக்
.
சண்டிகரை வடிவமைத்தவர் - லேதகார் பூசியர்.

ஐதராபாத்தை வடிவமைத்தவர் - முகமது அலி குதுப்ஷா.

தமிழகம்--சில முக்கிய தகவல்கள்

 தமிழ் நாட்டின் தகவல்கள் #----
 

தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு-- 1,30,058 ச.கி.மீ
மக்கள் தொகை. ------------------ 7,21,38,958
ஆண்கள் ----------------------------- 3,61,58,871
பெண்கள்---------------------------- 3,59,58,871
மொத்த மாவட்டங்கள்-------------- 32
தாலுகாக்கள்------------------------ 220
கிராமங்கள்-------------------------- 15,243
நகரங்கள் ---------------------------- 1097
நகராட்சிகள் ------------------------- 148
மாநகராட்சிகள் ---------------------- 10
மாநில பறவை------------------------ மரகதப்புறா
மாநில விலங்கு---------------------- நீலகிரி வரையாடு
மாநில மரம்--------------------------- பனை
மாநில மலர்-------------------------- செங்காந்தள்
மாநில நடனம்------------------------ பரத நாட்டினம்
மாநில விளையாட்டு ---------------- கபடி
மாநில வீரம்--------------------------- மஞ்சுவிரட்டு
அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்-- கன்னியாகுமரி
மிக உயர்ந்த கோபுரம்--------------- ஶ்ரீவில்லிபுத்தூர்
மிக உயர்ந்த சிகரம்----------------- தொட்டபெட்டா (2,636)
உயரமான சிலை-------------------- திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி (133 அடி)
நீளமான ஆறு----------------------- காவிரி
குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் --- பெரம்பலூர் (4,86,971)
மிக சிறிய மாவட்டம் --------------- சென்னை (174 கி.மீ)
மிக பழைய அணைக்கட்டு-------- கல்லணை, திருச்சிராப்பள்ளி
மிக பெரிய கோவில்--------------- தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்
மிக பெரிய தேர்--------------------- திருவாரூர் தேர்
மிக பெரிய பாலம்------------------ பாம்பன் பாலம் ,இராமேஸ்வரம்
மிக பெரிய மாவட்டம் -------------- தர்மபுரி (9622 கிமீ )
முதல் இருப்பு பாதை(ரயில்வே)--- ராயபுரம்-வாலாஜாபேட்டை (1856)
முதலில் வெளியான தமிழ் நாளிதழ்-- சுதேசமித்திரன் (1829)
முதல் பெண் முதலமைச்சர்--------- ஜானகி ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர் மனைவி)
முதல் பேசும் படம்-------------------- காளிதாஸ் (1931)
முதல் மாநகராட்சி ------------------- சென்னை (26-09-1688)
//////////////////////////////////////////////////////////
  நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

📚இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?   

7வது இடம்

📚 இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?   

23 வது இடம்

📚இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?   

16வது இடம்

📚இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

15வது இடம்

📚இந்தியாவின்
 கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

    14வது இடம்

📚சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?   

மதுரை

📚 சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

    2004

 📚 தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?

    72993

📚 தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?

    சென்னை

📚தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

    1076 கி.மீ

📚தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது

    1986

📚 தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?

    கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)

 📚தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?   

சென்னை (23,23,454)

 📚தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?   

சென்னை (46,81,087)

 📚 தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

    68.45 ஆண்டுகள்

📚 தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?   

13 மாவட்டங்கள்

📚தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

    234

 📚 தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?

    1

 📚தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?

    12 துறைமுகங்கள்
 தமிழகத்தில் உள்ளன

📚பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?

    சென்னை

📚 தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

    71.54 ஆண்டுகள்

📚 தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

    15979
📚 தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

    561

 📚தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

    146

📚 தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

    18

 📚 தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

    39

📚 தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?   

தர்மபுரி (64.71 சதவீதம்)

 📚தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?   

பெரம்பலூர் 5,64,511

 📚தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?    

சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)

📚தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?   

நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
 📚தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?

    3,74,901

 📚 தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?

    32

📚தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?   

அரியலூர்

📚தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?   

திருப்பூர்

 📚தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்   

80.33 சதவீதம்

📚தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?   

17.58 சதவீதம்

📚தமிழகததின் மாநில விலங்கு எது?   

 வரையாடு

📚தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?

    சென்னை, எண்ணூர், தூத்துக்குடி

📚 தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?    

காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி

📚 தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2.  கோவை
3. மதுரை 
4. திருச்சி   
5 தூத்துக்குடி 
6 சேலம்


📚 தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?

    999பெண்கள்(1000 ஆண்கள்)

 📚தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?   

1. நீலகிரி         
2. சேலம்         
3. வேலூர்         
4. கன்னியாக்குமாரி


📚 தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?   

1. திருவாரூர்     
2. இராமநாதபுரம் 
3. தூத்துக்குடி     
4. கடலூர்


📚 தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?   

மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)

 📚தமிழ்நாட்டின் இணைய தளம் எது?   

www.tn.gov.in

 📚தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

    சென்னை

📚தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?   

ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்

📚 தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?

    திருவில்லிபுத்தூர் கோபுரம்

📚 தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?

    கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்

📚 தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?

    நீராடும் கடலுடுத்த

📚 தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?   

பரத நாட்டியம்

📚 தமிழ்நாட்டின் மாநில பறவை எது?   

மரகதப்புறா

📚 தமிழ்நாட்டின் மாநில மரம் எது?   

பனைமரம்

📚 தமிழ்நாட்டின் மாநில மலர் எது?   

செங்காந்தர் மலா்

📚 தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

    கபடி

📚தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?

    1,30,058 ச.கி.மீ

📚தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
    7,21,38,958              
ஆண் 36158871       
பெண் 35980087

📚📚📚📚📚📚📚📚📚

வெள்ளக்கோயில்-- வீரகுமார சுவாமி கோயில்

வெள்ளக்கோயில் வீரகுமார சுவாமி கோயில்

 600 ஆண்டு பழமையான இக்கோயில் ஆரம்பத்தில் புற்று வடிவமாக இருந்தது. அதன்பிறகு கோயிலாக கட்டப்பட்டது. புற்றில் இருந்து தோன்றியவர் வீரக்குமாரன் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். வீரகுமார சுவாமி கோயில் வளாகத்தில் பிரமாண்ட குதிரை சிலைகள் காட்சியளிக்கின்றன. இவையனைத்தும் பக்தர்கள் நேர்ந்து வழங்கியவை. இக்கோயிலில் நடத்தப்படும் வெடி வழிபாடும், அதில் பெண்கள் பங்கேற்றால் விபரீதம் நிகழும் என ஊர்வாசிகள் கூறுவதும் ஆச்சரியமளிக்கிறது.

கோயிலில் கிழக்குப்புறத்தில் மகாமுனி சன்னதி இருக்கிறது. அதற்கு அடுத்ததாக எசவட புரவிகள் எனும் 11 பெரிய குதிரை சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5வது குதிரை சிலை, ஆங்கிலேயே துரை ஒருவர் பிடித்து கொண்டு நிற்பது போல உள்ளது. இது ஆங்கிலேய துரை ஒருவரால் காணிக்கையாக வழங்கப்பட்ட சிலை என ஊர்வாசிகள் சொல்கிறார்கள். வீரகுமார சுவாமி கோயிலில் பொட்லி எனப்படும் வெடியை வெடித்து பூஜை நடத்தப்படுகிறதுவெடிச் சத்தம் வீரகுமார சுவாமிக்கு மிகவும் பிடிக்கும் என்று மக்கள் நம்புவதால், காலம்காலமாக வெடியை வெடித்தே மக்கள் வழிபாடு நடத்துகிறார்கள். 

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த வெள்ளைக்கார துரை ஒருவர், குதிரையில் இப்பகுதி வழியாக வந்தார். அப்போது அதிர்வேட்டுகள் வெடித்து வீரகுமார சுவாமி கோயிலில் பூஜை நடந்து கொண்டிருந்தது. துரையின் குதிரை மிரண்டு அங்குமிங்கும் ஓடியது. இதனால் கோபமடைந்த அவர், கோயிலில் வெடி வெடிக்க தடை விதித்தார். ஆனால் அடுத்த நொடியே துரையின் கண்பார்வை போய்விட்டதாம். கடவுள் நிந்தித்ததால் வந்த வினை என்பதை உணர்ந்த துரை, குதிரை செய்து வைப்பதாக வேண்டிக் கொண்ட பிறகு பார்வைதிரும்பியதாக ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள்.

 துரை வழங்கிய குதிரைதான், அதற்கு சாட்சி என்று கூறி திகைக்க வைக்கிறார்கள். வீரகுமாரன் கோயிலில் வழிபாடு நடக்கும் போது ஆண்கள் மட்டும் தான் கலந்து கொள்ள வேண்டும். பெண்கள் வெளியில் இருந்துதான் கும்பிட வேண்டும். மீறி கலந்து கொண்டால் அவர்களுக்கு விபரீதம் நேர்ந்து விடும் என்பதும் இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. கோயிலில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் மகாமுனியம்மன் சன்னதியிலேயே பெண்களை நிறுத்திவிடுகிறார்கள். இந்த கட்டுப்பாட்டை மீறி கோயில் திருவிழாவில் பங்கேற்ற கோவை பெண் ஒருவர், கை கால் விளங்காமல் பட்ட துயரங்களை என்றுமே தங்களால் மறக்க முடியாது என்கிறார்கள் பக்தர்கள். வீரகுமார சுவாமியிடம் மன்னிப்பு கேட்டு விரதம் இருந்த பிறகுதான் அந்த பெண்ணுக்கு நோய் குணமானதாம்.

Friday, November 13, 2015

FB video-autoplay STOP

பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி
 உங்கள் டேட்டவை காலி செய்கிறதா?
இதை படிங்க.

முகநூல் என தமிழில் அழைக்கபடும் பேஸ்புக் சமூக வலைதளத்தில் தினம் தினம் பல புதிய மாற்றங்களை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் பேஸ்புக் தளத்தில் வீடியோகள் அனைத்தும் தானாகவே பிளே ஆகும் வசதியை புகுத்தி இருக்கிறார்கள். இந்த பிரச்சனையை தவிற்க்க என்ன செய்வது?
கணினியில் மற்றும் ஆண்ட்ராய்ட் ஆப்ல, எப்படி தடை செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் கணினியில் எப்படி தடை செய்வது என்பதை பார்க்கலாம்.
உங்கள் பேஸ்புக் கணக்கில் லாகின் செய்த பின் மெனு சென்று Settings >> Video செல்லுங்கள் உங்கள் செட்டிங்ஸ் பக்கத்தில் வீடியோ ஆப்சன் ஸ்கிரீன் வரும். அதில் வலது பக்கம் இரண்டாவதாக இருக்கும் Auto-Play Videos என்பதின் எதிரே கீழே படத்தில் இருப்பது போல Off தேந்தெடுங்கள். தானாகவே Save ஆகி விடும். இனி வீடியோ தானாக பிளே ஆகாது.

பேஸ்புக் ஆண்ட்ராய்ட் ஆப்ல எப்படி தடை செய்வது?
முதலில் மேல் வலது பக்கம் உள்ள Profile settings சென்று அதில் App Settings டச் செய்தால் அடுத்த பக்கத்தில் Video Auto Play என்பதை டச் செய்து அதன் பிறகு வரும் பாப்பப் பாக்ஸ்ல Off என தேந்தெடுங்கள். அவ்வளவுதான்.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் செட்டிங்ஸ் வித்தியாசம் அதிகம் இல்லை.

ஸ்மார்ட் போன்- சென்சார் தொழில்நுட்பம்

 ஸ்மார்ட் போன்- சென்சார் தொழில்நுட்பம்

 ஸ்மார்ட் போன்களில், தற்போது அதிகம் புழக்கத்தில் இருப்பது, சென்சார் தொழில் நுட்பமாகும். எல்லோர் மொபைலையும் சென்சார் இருக்குதுங்க ஆனால் அது என்ன பன்னுது அதோட வேலை என்ன என்று பல பேருக்கு தெரிவதில்லை
இந்த பதிவில் சில முக்கிய சென்சார்ஸ் பற்றி நான் கட்டுரையாக தொகுத்து உள்ளேன் ஆகவே முழுமையாக படியுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
1) PROXIMITY
Proximity சென்சார் அருகிலுள்ள பொருட்களை தொடாமல் அறிய பயன்படுகிறது. மின்காந்த(Electromagnetic) கதிர்களை
பயன்படுத்தி பொருட்களின் மீது பட்டு திரும்பும் கதிர்களை கொண்டு உணர்கிறது.உலோகம் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை உணர ஒவ்வொன்றுக்கும் தனித்தனி Proximity சென்சார்கள் பயன்படுத்தப்படுகிறது. இது மொபைலில் நாம் அழைப்பில்(call) பேசிக்கொண்டு இருக்கும்போது ,தொடுதிரையை அணைத்து வைக்க பயன்படுகிறது.
2) ACCELEROMETER
இது மொபைலில் சாய்தல் (TILT) மற்றும் அசைவு (MOTION) ஆகியவற்றை உணர பயன்படுகிறது. அசைவு மூலம் ORIENTATION நிலையை தானியங்கி (AUTO ROTATE)முறையில் இயக்க முடிகிறது(PORTRAIT AND LANDSCAPE MODE). இது செங்கோன அச்சுக்கள்(ORTHOGONAL AXES) மூலம் இயங்குகிறது. சாய்தல்(TILT) மொபைலில் விளையாட ,MUSIC PLAYER ஆகியவற்றில் பயன்படுகிறது.
3) GYROSCOPE
இது ACCELEROMETER போலவே மொபைலில் ORIENTATION-ஐ பராமரிக்க பயன்படுகிறது. ACCELEROMETER அச்சுக்கள் மூலம் இயங்குகிறது ஆனால் GYROSCOPE சென்சார் சுழல் உந்தம்(ANGULAR MOMENTUM) முறையில் செயல்பட்டு தொடுதிரையின் நிலையை சரியாக அளவிடுகிறது. இதன் மூலம் சிறந்த விளையாட்டு(GAMING EXPERIENCE) அனுபவத்தை பெற முடியும். (எடுத்துக்காட்டாக COUNTER STRIKE போன்ற விளையாட்டுக்கள் )
4) DIGITAL COMPAS
இது புவி காந்தப்புலம்(EARTH MAGNETIC FIELD) மூலம் செயல்படுகிறது.கிழக்கு, மேற்கு,வடக்கு,தெற்கு போன்ற திசைகளை அறிய பயன்படுகிறது.நீங்கள் MAPS போன்ற மென்பொருளை பயன்படுத்தும் போது செயல்பட்டு தானியங்கி(AUTO ROTATE) முறையில் சுழலும்.
5) BAROMETER
இது வளிமண்டல அழுத்தத்தை(ATMOSPHERIC PRESSURE) கணக்கிடுகிறது.இதன் மூலம் உயர்நிலை(ALTITUDE) மற்றும் அவ்வப்போது மாறும் வானிலை மாற்றங்களை அறிய பயன்படுகிறது.உங்கள் மொபைலின் இணைய இணைப்பை பயன்படுத்தி தரவுகளை(DATA) பெற்று நீங்கள் இருக்கும் இடத்திற்கு(GEO-LOCATION) ஏற்ற வானிலை மாற்றங்களை வழங்குகிறது. BAROMETER வேகமான மற்றும் மாற்றங்களை பெற முடியும்.
6) AMBIENT LIGHT
இது தொடுதிரையின் வெளிச்சத்தை(BRIGHTNESS) வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப தானியங்கி(AUTOMATIC) முறையில் இயக்க பயன்படுகிறது. இதன் மூலம் பேட்டரியை மிச்சப்படுத்தவும் மற்றும் தெளிவான திரையையும் பார்க்க உதவுகிறது.
சில சென்சார்ஸ் பற்றி தான் மேலே கூறி உள்ளேன் இன்னும் நிறைய உள்ளன மேலே உள்ளது ஏறத்தாழ இப்போ எல்லோர்கிட்ட இருக்கிற மொபைல்லையும் இருக்கும் ஆகவே அதை மட்டும் இங்கே தொகுத்துள்ளேன்.

விளம்பரம் தொல்லை இல்லாமல் Youtube பார்க்க

                             விளம்பரம் தொல்லை இல்லாமல் Youtube பார்க்க

யூடியூப் பார்க்கும்போது வீடியோ விளம்பரங்கள் (சில சமயம் Skip பட்டனுடன், சில சமயம் ஸ்கிப் பட்டன் இல்லாமல் கிட்டத்தட்ட 15 வினாடிகள் வரை) தொல்லை தருகிறதா ?

விளம்பரங்கள் இல்லாமல் யூ-டியூப் வீடியோக்களை பார்க்க ஒரு நுணுக்கம் இருக்கிறது. இது கூகிள் நிறுவனமே வழங்கும் ஒரு பரிசோதனை, அதனால் கூகிள் இந்த வசதியை தரும் வரை பயன்படுத்தி மகிழ்க.

இந்த வசதியை கொண்டுவர நீங்கள் உங்கள் டெவலப்பர் கன்ஸோலில் ஒரு சிறிய நிரலை உள்ளிட்டு எண்டர் தட்டவேண்டும். வெயிட், வெயிட், ரொம்ப கஷ்டமில்லை, ஈஸி தான்..

ஸ்டெப் 1 : முதலில் உங்கள் ப்ரவுசரை (க்ரோம், பயர்பாக்ஸ், ஓபரா) ஒப்பன் செய்து, ஏதாவது ஒரு யூ.டியூப் வீடியோவை ஓப்பன் செய்க..(பீப் சாங் வேண்டாம் பாஸ்)

ஓப்பன் செய்தாச்சா ? பாட்டு ஓடுதா ? அப்படியே ஓடட்டும் விடுங்க..

ஸ்டெப் 2:  இந்த குறிப்பிட்ட ஷார்ட் கட் கீயை உங்க ப்ரவுசரில் அழுத்தவும்..

க்ரோம், ஓபரா : Control + Shift + J
பயபாக்ஸ் : Control + Shirt + K

இப்ப ஒரு கன்ஸோல் விண்டோ வருதா ?

ஸ்டெப் 3 :  இந்த குறிப்பிட்ட நிரலை உள்ளீடு செய்து எண்டர் தட்டவும்..


document.cookie="VISITOR_INFO1_LIVE=oKckVSqvaGw; path=/; domain=.youtube.com";window.location.reload();
அஷ்டே !!

இனி உங்கள் உலாவியில் யூடியூப் பயன்படுத்தும்போது எந்த விளம்பரமும் வராது !!!


Thursday, November 12, 2015

தேச தந்தைகள்

தந்தைகள்

ஒப்பிலக்கணத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் கால்டுவெல்
.
சிறு கதையின் தந்தை செல்வகேசவராய முதலியார்.

இந்திய சினிமாவின் தந்தை தாதா சாஹேப் பால்கே.

இந்திய விண்வெளியின் தந்தை விக்ரம் சாராபாய்.

இந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தை ஹோமி பாபா.

இந்திய ஓவியத்தின் தந்தை ராஜா ரவிவர்மா

Wednesday, November 11, 2015

முதல் செயற்கைக்கோள்கள்

முதல் செயற்கைக்கோள்கள்

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் - ஆர்யபட்டா.

ரஷியாவின்முதல் செயற்கைக்கோள் - ஸ்புட்னிக்.

அமெரிக்காவின் முதல் செயற்க்கைக்கோள் - எக்ஸ்புளோரர்.

சீனாவின் முதல் செயற்கைக்கோள் - ஸிஸோம் -1.

பிரான்சின் முதல் செயற்கைக்கோள் - ஏ - 1.

ஜப்பானின் முதல் செயற்கைக்கோள் - ஓசுமி.

கின்னஸ் உருவானது எப்படி?

கின்னஸ் உருவானது எப்படி?

உலகளவில் அதிகம் விற்பனையாகியுள்ள புத்தகம், கின்னஸ் புத்தகம். இதுவே ஒரு கின்னஸ் சாதனை தானே! இந்த புத்தகம் உருவானது எப்படி தெரியுமா? உண்மையில் கின்னஸ் என்பது அயர்லாந்தை சேர்ந்த ஒரு பீர் கம்பெனி. 1759 முதல் இயங்கிவரும் இந்த பாரம்பரிய நிறுவனத்தில் 1946ல் சர் ஹக் பீவர் என்பவர் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். பீவர் ஒருநாள் வேட்டைக்கு சென்றார். காட்டில் ‘கோல்டன் ப்ளோவர்’ என்ற பறவையை சுட்டார். அது துப்பாக்கி குண்டு வேகத்தையும் மிஞ்சி பறந்து தப்பியது.
அப்படியென்றால் ஐரோப்பாவிலேயே மிகவேகமாக செயலாற்றும் பறவை கோல்டன் ப்ளோவர் தானா என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. ஆனால் இதை உறுதி செய்யவோ மறுக்கவோ எந்த குறிப்பேடும் இல்லாதது அவருக்கு வருத்தத்தை தந்தது. தானே அப்படி ஒரு புத்தகத்தை தயாரித்தால் என்ன என்று அவர் நினைத்தார்.அவர் வேலை பார்த்த கின்னஸ் நிறுவனமே அவரின் முயற்சிக்கு உதவியது.

அதன் பயனாக, 25/9/1955 ஆம் ஆண்டு 'GUINESS BOOK OF THE WORLD' என்ற பெயரில் 198 பக்கங்களுடன் வெளிவந்தன. ஆயிரம் பிரதிகள் மட்டுமே முதலில் அச்சடிக்கப்பட்டன. தற்போது 37 மொழிகளில் அச்சிடப்படும் கின்னஸ் புத்தகம்10 கோடி பிரதிகள் விற்பனை ஆகிறது.