Monday, November 23, 2015

புது தகவல்கள் .....


1 எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, 
பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் 
செய்யப்பட்டது இல்லை. 
அது, ஒரு வகை "காட்டன் (cotton)
 "துணியால் செய்யப்பட்டது.
 
2 தேன், மிக எளிதாக ஜீரணமடையும்  
ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா?

  அது ஏற்கனவே தேனீக்களால்
 ஜீரணிக்கப்பட்டுவிட்டது.
3 வண்ணத் திரைப்படங்களுக்கு
 'ஈஸ்ட்மேன் கலர்' என்று பெயர்   சூட்டுவதுண்டு.     
அவ்வாறு சூட்டக் காரணம் என்ன தெரியுமா?
 1883ம் ஆண்டில்    முதன் முதலாக
 வண்ண புகைப்பட ஃபிலிம்மை ஈஸ்ட்மேன் என்பவர்
 கண்டுபிடித்தார். அதன் காரணமாக 
அவருடைய பெயரை வண்ண 
பிலிம்களுக்கு சூட்டலாயினர்.
 4 யானையின் காது முறம் போல
 இருக்கும் என்று கூறுவார்கள்.   
யானையின் காதுக்கு செந்தமிழ்ப் பெயர் 
என்ன தெரியுமா? 'தலாடகம்' என்பது தான்.
நாணயத்தில் தனது உருவத்தை 
பொறித்த முதல் அரசர் அலெக்ஸாண்டர்
  
6 பென்சிலில்  'எச்பி',  எச்பி2'  என்று
குறிப்பிடப்பட்டிருக்கும்.  'எச்'  என்றால்
  ஹார்டு,  'பி'  என்றால்  பிளாக்.
அந்த பென்சிலில்
  பயன்படுத்தப்பட்டுள்ள  கிராபைட்
எந்த  அளவுக்கு  உறுதியாக,
கறுப்பாக  எழுதும்  என்பதை  இது  குறிக்கிறது.

பெரும்பாலானவர்களுக்கு சீட்டு
 விளையாட தெரியும்.  அதில் ராஜா, ராணி    
என்ற சீட்டுக்கள் இருக்கும்.  ஆனால், 
அந்த ராஜா - ராணி எந்த மன்னனை,  
அரசியை குறிக்கிறது தெரியுமா...?
   ஸ்பேட் ராஜா  --  மன்னர் டேவிட்  ( இஸ்ரேல் ).
   ஹார்டின் ராஜா  --  மன்னர் சார்லஸ்  ( பிரான்ஸ் ).
   டயமண்ட் ராஜா  --  ஜூலியஸ் சீசர்  ( இத்தாலி ).
   கிளாவர் ராஜா  --  அலெக்சாண்டர் தி கிரேட்  ( கிரீஸ் ).
   ஸ்பெட் ராணி  --  ஏதெனா  ( கிரீஸ் ).
   ஹார்டின் ராணி  --  ஜூதிக்  ( பிரான்ஸ் ).
   டயமண்ட் ராணி  --  ரேச்சல்  ( எகிப்து  ).
   கிளாவர் ராணி  --  ஆர்ஜீன்  ( கிரீஸ்
 )

No comments:

Post a Comment