Sunday, July 13, 2025

உடைவது உலகினில் நிரந்தரமானது...

    
   நட்பு உடைந்து முகநூலானது ...
 
👉சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது .
..
👉வாழ்த்துக்கள் உடைந்து  ஸ்டேட்டஸ் ஆனது .
.
👉உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய்ஆனது ...
 
👉குளக்கரை உடைந்து குளியலறைஆனது ..
.
👉நெற்களம் உடைந்து கட்டடமானது ..
.
👉காலநிலை உடைந்து வெப்ப மயமானது .
..
👉வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ...
 
👉துணிப்பை உடைந்து நெகிழியானது ...
 
👉அங்காடி உடைந்து அமேசான் ஆனது ...
 
👉விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ..
.
👉ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ...
 
👉கடிதம் உடைந்து இமெயிலானது ...
 
விளையாட்டு உடைந்து வீடியோ கேம் ஆனது ...
 
👉புத்தகம் உடைந்து இ-புக் ஆனது ..
.
சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது...
 
👉இட்லி உடைந்து பர்கர் ஆனது ...
 
👉தோசை உடைந்து பிட்சாவானது ...
 
👉குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ...
 
👉பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ...
 
👉வெற்றிலை உடைந்து பீடாவானது ...
 
👉தொலைபேசி உடைந்து 👉கைபேசியானது ...
👉வங்கி உடைந்து ஏ டி எம் ஆனது ...
 
👉நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ...
 
👉புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ...
 
👉மனிதம் உடைந்து மதவெறியானது ...
 
👉அரசியல் உடைந்து அருவெறுப்பானது ...
 
👉பொதுநலம் உடைந்து சுயநலமானது ...
 
👉பொறுமை உடைந்து அவசரமானது ...
 
👉ஊடல் உடைந்து விவாகரத்தானது ...
 
👉நிரந்தரம் உடைவது நிதர்சனம்
 
💗 ஆகையால் உடைவது உலகினில்
      நிரந்தரமானது
***********

 

Saturday, July 12, 2025

தமிழ் எண்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள

 தமிழ் எண்களை எளிதில் ஞாபகத்தில்
வைத்துக்கொள்ள

   

                 



Friday, July 11, 2025

கணியன் பூங்குன்றனார்.

ஒரே பாடலில் வாழ்க்கைப் 
பாடத்தை கற்பித்த 
கணியன் பூங்குன்றனார்.

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை 
அடுத்த மகிபாலன்பட்டி 
சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம்
 பூங்குன்றம். இங்கு பிறந்த 
கணியன் பூங்குன்றனார் 
எழுதிய  பழமையான பாடல் இது.

 *யாதும் ஊரே யாவரும் கேளிர்*

இதன் முதல் வரி மட்டுமே பிரபலம்.
பாடலின் எல்லா வரிகளும் 
வாழ்வின்முழு தத்துவத்தைச் 
சொல்கிறது.

முழு பாடலும் அதன் பொருளும்👇.

*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்,*
*தீதும் நன்றும் பிறர்தர வாரா,*

*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,*
*சாதலும் புதுவது அன்றே,*

*வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும்
 இலமே,*

*முனிவின் இன்னாது என்றலும்
இலமே*

*மின்னோரு வானம் தண்துளி 
தலைஇ ஆனாது**கல்பொருது
 இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*

*நீர்வழிப் படூஉம் புணைபோல் 
ஆருயிர்**முறைவழிப் படூஉம்
என்பது* *

திறவோர்காட்சியின் தெளிந்தனம்*
*ஆதலின் மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும் இலமே,*
*சிறியோரை இகழ்தல் அதனினும்
 இலமே.*

*பொருள்*👇

*"யாதும் ஊரே யாவரும் கேளிர்"* 

எல்லா ஊரும் எனது ஊர்.
எல்லா மக்களும் எனக்கு உறவினர் 
என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை, 
ஆதாரம் என்று வாழ்ந்தால்,
 இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு 
இனிமையானது, சுகமானது.

*"தீதும் நன்றும் பிறர் தர வாரா"*

'தீமையும் நன்மையும் அடுத்தவரால்
 வருவதில்லை' எனும் உண்மையை 
உணர்ந்தால்
சக மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு 
இல்லா ஒரு சம நிலை சார்ந்த 
வாழ்வு கிட்டும்.

*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன"*

துன்பமும் ஆறுதலும் கூட
மற்றவர் தருவதில்லை.
மனம் பக்குவப்பட்டால்,
அமைதி அங்கேயே கிட்டும்.

*"சாதல் புதுமை யில்லை"*

பிறந்த நாள் ஒன்று உண்டெனில்,
இறக்கும் நாளும் ஒன்று உண்டு.
இறப்பு புதியதல்ல. அது
இயற்கையானது.
எல்லோருக்கும்
பொதுவானது.
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் 
வாழ்ந்தால்
எதற்கும் அஞ்சாமல்
வாழ்க்கையை வாழும் 
வரை ரசிக்கலாம்.

*"வாழ்தல் இனிது என* *
மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே"*

இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்ன ஆகும் என்று
எவர்க்கும் தெரியாது.
இந்த வாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.
அதனால், இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்.
துன்பம் வந்தால் வாழ்க்கையை 
வெறுக்கவும் வேண்டாம்.
வாழ்க்கையின் இயல்பை
 உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்.

*"மின்னோரு* *வானம்* 
*தண்துளி தலைஇ* *
ஆனாதுகல்பொருது* 
*இரங்கும்வ மல்லல்* *
பேர்யாற்று நீர்வழிப
*படூஉம் புணைபோல்* *
ஆருயிர் முறைவழிப்
 படூஉம் என்பது 
திறவோர் காட்சியின் 
தெளிந்தனம்"*

இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது.
நாம் வாழ 
மழையையும்
தருகிறது. இயற்கை வழியில் 
அது அது
அதன் பணியை செய்கிறது.
ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி
 செல்லும் படகு போல,
வாழ்க்கையும், சங்கடங்களில் 
அவரவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும். இது இயல்பு என 
மனத்தெளிவு 
கொள்ளல் வேண்டும்.

*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்*
 *இலமே;**சிறியோரை இகழ்தல் 
அதனினும் இலமே"*

இந்த தெளிவு
பெற்றால்,
பெரிய நிலையில் உள்ள 
பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து
 பாராட்டவும் வேண்டாம்.
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.அவரவர் வாழ்வு
அவரவர்க்குஅவற்றில்
 அவரவர்கள்பெரியவர்கள்.

*இதை விட வேறு எவர்*
*வாழ்க்கைப் பாடத்தை*
*சொல்லித் தர முடியும்?*💐💐

Thursday, July 10, 2025

பேலின்ட்ரோம்’ (Palindrome)

 ‘பேலின்ட்ரோம்’ (Palindrome)

எந்த ஒரு வார்த்தையை 
வாசிக்கும் பொழுதும் 
வலமிருந்து இடமாகவோ 
அல்லது இடம் இருந்து வலமாகவோ
 எப்படி வாசித்தாலும்  
எழுத்துக்கள் மாறாமல்
ஒன்றுபோல் 
வார்த்தைகள் அமைவது 
இதற்குப் பெயர்தான்
 ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) என்பதாம்

தமிழில் இதுவரை அறிந்த கேட்ட 
 பாலின்ட்ரோம் வார்த்தைகள்!

விகடகவி
மாவடு போடுவமா,
துவளுவது
தாளாதா
வா தாத்தா வா!
மாலா போலாமா,
தேருவருதே
மேகமே
வாடவா
தாத்தா
கலைக
வினவி
யானை பூனையா,
யானையா பூ யானையா,
பாப்பா
தேருவருதே
தந்த
மாறுமா
தேயுதே
மேளதாளமே.
மாடு ஓடுமா
கலைக
கலக
மோருபோருமோ,
போ வாருவா போ.
மாடமா
மாதமா
மானமா
மாயமா
கற்க
மாமா
காக்கா
சிவா வாசி


ஆங்கிலத்தில் இதுவரை 
கேட்டு அறிந்த 
(PALIMDROME) வார்த்தைகள் !


1: civic
2: Dewed
3: deified
4: dad
5: mom
6: devoved
7: Hannah
8: peeweep
9: repaper
10: kayak
11: minim
12: radar
13: murdrum
14: Malayalam
15: madam
16: lemel
17: level
18: racecar
19: radar
20: redder
21: bob
22: pop
23: tot
24: refer
25: reviver
26: rotator
27: rotavator
28: stats
29: solos
30: tenet
31: terret
32: testset
33: Kinikinik
34: Wassamassaw
35: Yreka Bakery
36: Navan
37: Cain: a maniac.
38: A Toyota.
38: Race fast, safe car.
39.RACECAR
40.MALAYALAM
41.EVE
42.LEVEL
43DEED
44.ROTOR
45.CIVIC
46.POP
47.MADAM
48.EYE
49.NUN
50.RADAR
51.TOOT