Sunday, April 2, 2023

உடைவது உலகினில் நிரந்தரமானது

       நட்பு உடைந்து முகநூலானது ...
👉சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ...
👉வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ..
👉உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய்
ஆனது ...
👉குளக்கரை உடைந்து குளியலறை
ஆனது ...
👉நெற்களம் உடைந்து கட்டடமானது ...
👉காலநிலை உடைந்து வெப்ப மயமானது ...
👉வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ...
👉துணிப்பை உடைந்து நெகிழியானது ...
👉அங்காடி உடைந்து அமேசான் ஆனது ...
👉விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ...
👉ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ...
👉கடிதம் உடைந்து இமெயிலானது ...
விளையாட்டு உடைந்து வீடியோ கேம் ஆனது ...
👉புத்தகம் உடைந்து இ-புக் ஆனது ...
சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது...
👉இட்லி உடைந்து
பர்கர் ஆனது ...
👉தோசை உடைந்து பிட்சாவானது ...
👉குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ...
👉பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ...
👉வெற்றிலை உடைந்து பீடாவானது ...
👉தொலைபேசி உடைந்து 👉கைபேசியானது ...
👉வங்கி உடைந்து
ஏ டி எம் ஆனது ...
👉நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ...
👉புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ...
👉மனிதம் உடைந்து மதவெறியானது ...
👉அரசியல் உடைந்து அருவெறுப்பானது ...
👉பொதுநலம் உடைந்து சுயநலமானது ...
👉பொறுமை உடைந்து அவசரமானது ...
👉ஊடல் உடைந்து விவாகரத்தானது ...
👉நிரந்தரம் உடைவது நிதர்சனம்
💗 ஆகையால் உடைவது உலகினில் நிரந்தரமானது
***********

 

No comments:

Post a Comment