சிந்திக்க -2025
எப்படி முடியும் என்பதற்கும்
எப்படி முடியாது என்பதற்கும்
உள்ள தூரமே துணிச்சல்
இன்று நீ படிக்கும் புத்தகங்களே
நீ உட்காரும் நாற்காலியை முடிவு செய்கிறது
அலமாரியில் இறந்த உடல் ஒன்று இருந்தது
அவன் பெயர் புத்தகம் என்று தெரிய வந்தது
விசாரணையில் கொலையாளி மொபைல்
என்று தெரியவந்தது..!
துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு
எடுக்கிறோமோ, அப்போதே
வாழ்க்கையில் பாதி அபாயத்தை
கடந்துவிட்டோம் என்பது உறுதி
பேனா தவறாக எழுதியதற்காக யாரும் ஒருபோதும் பேனாவை உடைப்பதில்லை.. .அப்பாவி காகிதத்தைத் தானே கிழித்தெறிகிறோம்.. அப்படித்தான் சில நல்மனிதர்களையும்!!!
மனைவிக்கு நேரம் #ஒதுக்குங்கள். இல்லையெனில் #சண்டைகளுக்கு நேரம்ஒதுக்க வேண்டி #வரும்.!!
பத்து தலைமுறையின் ஏழ்மையை
ஒரே தலை முறையிலே மாற்றும்
வல்லமை கொண்ட
ஒரே ஆயுதம் "படிப்பு"
**************************
கலவரம் ஏற்படுத்த
ஒரு ரவுடி போதும
அமைதியும் நல்லிணக்கமும்
ஏற்படத்தான் தலைவன் தேவை
**************************
Google உள்ளே feed
பண்ணியதைதான் தரும்
பெரியவங்க feel
பண்ணியதையும்
நமக்கு தருவாங்க
**********************
கடவுள், மதம், சம்பிரதாயங்கள்
சடங்குகள் அனைத்தும் மனிதனால்
படைக்கப் பட்டவை என்பதை நாம்
உணர்ந்தால் நாமும் புத்திசாலிகளே.
................
பத்து தலைமுறையின்
ஏழ்மையை, ஒற்றை
தலைமுறையிலேயே மாற்றும்
வல்லமை கொண்டது
படிப்பு மட்டுமே...
**************************
வாழ்க்கை எதிர்மறைகளைக்
கொண்டது. பிச்சைக்காரன்
அமைதியுடன் பாதுகாப்பற்று
உறங்குவான்
பாதுகாப்புடன் இருப்பான் ஆனால்
அமைதியாக உறங்க மாட்டான்.
****
சூதாட்டம் - ஜாதகம் இந்த இரண்டையும்
நம்பி நடந்தவன் எவனும் பணக்காரன்
ஆனது இல்லை இந்த இரண்டையும் நடத்துபவன்
#ஏழை ஆனது இல்லை. முட்டாள்களே
வாடிக்கையாளர்கள் அதனால் அவனுக்கு
கவலையில்லை
************************
பணம் #உழைத்து வாழ்பவர்களிடம்
பேசி விட்டு #சென்று விடுகிறது..
#பிறர் உழைப்பில் வாழ்பவர்களிடம்
ஏசி போட்டு #தங்கி விடுகிறது!
*******************
இன்றைய உண்மைகள்..
********************
பக்கத்து வீட்டிலிருப்பவர்களிடம்
முகங் கொடுத்து பேசுவதில்லை..
பக்கத்து கிரகத்தில் மனிதன்
வாழ வாய்ப்பிருக்கா எனஆராய்ச்சி..
மருத்துவத் துறையில் மாபெரும் வளர்ச்சி..
நோயாளிகளின எண்ணிக்கையோ
நாளுக்கு நாள் அதிகம்...
*****************
பட்டப் படிப்புகள் அதிகம்...
பொது அறிவு குறைவு...
கை நிறைய சம்பளம்..
மனசு நிறைய நிம்மதி இல்லை..
வாய் நிறைய சிரிப்பில்லை..
**************
சாராயம் நிறைந்து கிடக்கு...
குடிநீர் குறைந்து கொண்டே இருக்கு.
.முகநூல் நண்பர்கள் அதிகம்.. முகம்
தெரிந்த நண்பர்களோ குறைவு
****************
கடவுள் எங்கே நம்மை பார்க்கப் போகிறார்
என நினைத்து #தவுறுகள் பல செய்து பின்பு
முதுமையில் #மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட போது.. அங்கே
எழுதப்பட்டிருந்தது " ICU"
***********************
"இயற்கை"க்கு எல்லாமே ஒன்னுதா நமக்கு
வேண்டுமானால் லியனார்டோ டாவின்சி
ஸ்பெஷலாக இருக்கலாம். நியூட்டன்
ஸ்பெஷலாக இருக்கலாம் காந்தி ஸ்பெஷலாக
இருக்கலாம். ஆனால் இயற்கைக்கு X ஆக
இருந்தால் என்னY ஆக இருந்தால் என்ன?
எல்லாம் ஒன்றுதான் இயற்கையின் முன்பு,
ஷேக்ஸ்பியரும் ஒன்றுதான், செல்லத்துரையும்
ஒன்றுதான்.
****************
பயத்தை விட கொடிய வைரஸ் ஏதுமில்லை
தைரியத்தை விட பெரிய தடுப்பூசி ஏதுமில்லை
******
நண்பன்
நூறு மருத்துவர்கள் செய்யமுடியாத சிகிச்சையை
ஒரு நண்பன் தருவான் ஆறுதல் நட்பு என்பது
மின்விசிறியல்ல இயற்கை காற்று அதற்கு
மின்தடை வராது.உலகின் அதிபதியாக இருப்பினும்
ஒரு நண்பன் இல்லாவிட்டால் அவன் ஏழை தான்.
************
டீன்ஏஜைத் தாண்டும் போதும் டிரையினேஜைத்
தாண்டும போதும் ரொமப உஷாரா இருக்கனும் இல்லைன்னா வாழ்க்கை நாறிடும் ********
நமக்கு #தேவையானதை, தேடுவதை காட்டிலும்,
முக்கியமானது,#எதுவென்றால்,
தேவையில்லாதது,எதுவென்று #அறிந்து,
அதனை முதலில்,#தொலைத்து விட்டு,
தேடுவது தான்,#வெற்றிக்கான முதல்படி.
***********
எந்த ஒரு #காயத்திற்கும் நண்பன் #மருந்தாவான் ஆனால் நண்பன் #ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே #இல்லை ***
***************
கடவுள் எப்பொழுதுமே உடைந்த
பொருள்களை ரொம்பஅழகா
பயன்படுத்திடுவார். உடைந்த மேகங்கள் தான்
மழை பொழியும்..உடைந்த நிலம் தான்
உழும் வயலாகும். உடைந்த நெல் தான் விதையாகும்... உடைந்த விதைகள் தான் புதிய செடிகளுக்கு வாழ்க்கை கொடுக்கும் அதனால் எப்பவாவது உடைஞ்சு #நொறுங்கி போனா நம்புங்க. கடவுள் உங்களை பெரிய #விஷயங்களுக்கு தயார் படுத்தறார்ன்னு...
*************
கடவுளிடம் கேட்டது ஒன்று
கிடைத்தது ஒன்று!!
கிடைத்ததை வைத்து
கேட்டதைப் பெற்றேன்
**************
ஒருவரை முட்டாளாக்குவதற்கான
இரண்டு வழிகள்,ஒன்று பொய்யை நம்ப வைப்பது,
இன்னொன்று உண்மையை நம்ப விடாமல் தடுப்பது...
……
பிடித்த விசயம் நடந்தால் கடவுள் காரணமாம்
பிடிக்காத விசயம் நடந்தால் விதி காரணமாம் தான் மட்டும் எதுக்குமே காரணம்
இல்லையாம் மனிதன்
***********
ஒவ்வொரு வெற்றியும் ஒரு பரிசு!
ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்!
ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய வாய்ப்பு..!
………
தேவையானது தேவைற்றது
என்று எதுவும் இல்லை. காலம்
அறிந்து தேடுதல் தேவையானது.
காலம் தவறிய தேடுதல் தேவையற்றது.
*****
.
No comments:
Post a Comment