Saturday, April 6, 2019

NEW thought 2018..

பிறரை
அழிக்க நினைப்பதால்
மெல்ல மெல்ல
அழிந்து போகிறேன்
அழிறப்பர்
தலைக்கனம்
இருப்பதால்
தினம் தினம் சாகிறேன்
தீக்குச்சி
......
மன்னிப்பதில்
நீ நல்லவனாக இரு
ஆனால்
அவர்களை மீண்டும் நம்பி 
முட்டாளாக இருந்து விடாதே!!!!!
........
நமக்கு மிக
நெருக்கமானவர்களுக்கு
மட்டுமே தெரியும்,
நம்மை எங்கே
அடித்தால்
வலிக்குமென்றும்
......
டீ" குடிக்க மட்டும்
தனி கிளாசை
கொடுத்து விட்டு,

கொடுக்கும்
காசை மட்டும்
ஒரே கல்லாவில்
வர்ணத்தால்
போடுகிறாயே என்றார்
தாழ்த்தப்பட்டவரான
முதியவர்
.....
LIFEISNOWHERE
இதை எப்படி படித்தீர்கள்...?
' LIFE IS NOWHERE என்றா?
'LIFE IS NOW HERE என்றா?
'நாம் பார்க்கிற விதத்தில் தான்
'- வாழ்க்கை இருக்கிறது
என்பதை
'இந்த ஒற்றை வரி உணர்த்துகிறது...!
.....
உலகின் சிறந்த
'6 டாக்டர்கள்
1. சூரிய ஒளி
2. ரெஸ்ட்
3. உடற்பயிற்சி
4. டயட்
5. தன்னம்பிக்கை
6. நண்பர்கள்
....
'யானையிடம் இருந்து 1000
'அடி விலகி இருங்கள்,
' குதிரையிடம் இருந்து 100
' அடி விலகி இருங்கள்,
கொம்பு உள்ள மிருகத்திடம்
இருந்து 10 அடி விலகி
இருங்கள்.
ஆனால் நம்பிக்கை
துரோகம் செய்யும்
மனிதர்கள் இருக்கும்
ஊரை விட்டே விலகி
இருங்கள்!
.........
' "வீசப்படும் #கற்களை விட,
"பேசப்படும் #சொற்கள்
மீது,
' #நிதானமாக இருங்கள்.!
கற்கள்
' #உயிரைக் கொல்லும்.!
சொற்கள்
'#உயிரோடு கொல்லும்.!
.............
சம்பளம் வாங்குன உடனே 
கடனெல்லாம்
அடச்சிட்டு நம்ம கிட்ட 
இருக்குற மிச்சத்த
பாத்தா அடுத்து யார் கிட்ட கடன்
வாங்கலாம்ன்னு 
யோசிக்க வேண்டியதா
இருக்கு!
என்ன வாழ்க்கடா??..
....=.....
யாரோ ஒருவரின்
அர்த்தமே இல்லாத
-நிராகரிப்புக்காக
கவலைப்படாதே
துணிக்கடையில்
பல பேரால் ஒதுக்கப்பட்ட
ஒரு துணி யாரோ 
ஒருவருக்கு
பிடித்து போனதாய்
அமைகிறது.
...........
உயிரே போகும்
நிலை வந்தாலும்
நம்பிக்கையை
மட்டும் இழக்காதோ


இழந்தவைகளை
மீண்டும்
கொண்டு வரும்
ஆற்றல்
அது ஒன்றுக்கு
மட்டும் தான்
உண்டு!
...........
நீங்கள் எந்தப்
பிரச்சனையையுமே
சந்திக்காமல்
அமைதியாகச்
சென்றுகொண்டு
இருக்கிறீர்கள் என்றால்
உங்கள் வாழ்க்கையில்
தவறான பாதையில்
செல்கிறீர்கள்
என்று அர்த்தம்.
..............
கோபப்பட்டு வென்று
விட்டால் கோபம்
பெரியதென்று
அர்த்தமல்ல..
அதைத் தாங்கிக்
கொண்டவரின்
பொறுமை தான்
பெரிது..!!
...........
உனக்கென்று
ஒரு தன்மானம்,
திமிர் இருக்கனும்
"அதை யாருக்காகவும்
எப்போதும்
விட்டுக்கொடுக்காதே..!
.......
விதை அளவு
நம்பிக்கை
விருட்சம் அளவு
பலன் தரும்..
.......
உழைப்பு மூன்று 
தீமைகளைக் களைகிறது.
பொழுது போகாமை
 கெட்டபழக்கம்
வறுமை !!
.........
நேர்மையாளன்
எங்கே போனாலும்
' பிரச்சினைதான்.
'ஏனென்றால்
'எல்லா இடங்களிலும்
தவறுகளே
நிறைந்திருக்கின்றன!
.........
இதை நம்மால்
செய்ய #முடியாது
என்று உன்னை
நம்பும் நீ.....
இதை செய்துபார்த்தால் என்ன
என்ற கேள்வியுடன் ?
சிறிதாக
#முயற்சித்து பார்....
" #எல்லாம்_உன்னுள்ளே "
.........
#தவறான_வழி
 "தோல்வியைத் தரும்.!
பிற்காலத்தில் 
#மனதில்_வலி தரும்.!!
.......
இந்த 26 வார்த்தைகள்!
எவ்வளவு அழகு
*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை
 மனதாரப் பாராட்டுங்கள்.
*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில
 அன்புச் சொற்களைச் சொல்லவும் 
கூட நேரம் இல்லாதது போல்
 நடந்து கொள்ளாதீர்கள்.
*C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது 
படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி 
சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.
*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே
 என்று சோர்வடையாதீர்கள்.
*E - Ego*
மற்றவர்களை விட
 உங்களை உயர்வாக 
நினைத்துக் கொண்டு 
கர்வப்படாதீர்கள்.
*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் 
நியாயமும் உங்கள்
 பக்கம் இருந்தாலும், 
எதிர்த் தரப்பினரை மன்னிக்க
 வழி இருக்கிறதா என்று பாருங்கள்.
*G - Genuineness*
எந்த விஷயத்தையும் 
நேர்மையாகக் கையாளுங்கள்.
*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு
 கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.
*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள்
. நான் ஏன் இப்படி இருக்கிறேன்
 என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். 
அது கொண்டவனையே கொல்லும்.
*K - Kindness*
இனிய இதமான சொற்களை 
மட்டுமே பயன்படுத்துங்கள்.
*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் 
அர்த்தமில்லாமலும்
 பின் விளைவு அறியாமலும்
 பேச வேண்டாம்.
*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப்
 புரிந்துகொள்ளாதீர்கள்.
*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், 
முடிவு எடுத்துவிட்டுப்
 பேச வேண்டாம்.
 பேசிவிட்டு முடிவு எடுங்கள். 
நடுநிலை தவறாதீர்கள்.
*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு 
வைக்காதீர்கள். தேவைக்கு
 அதிகமாக ஆசைப்படாதீர்கள்.
*P - Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் 
ஆகவேண்டும் என உணருங்கள்.
*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே
 பேசுங்கள்.
 அநேகப் பிரச்னைகளுக்குக்
 காரணம்,
 தெரியாததைப் பேசுவதுதான்.
 கூடுமானவரை பேசாமலே 
இருந்துவிடுங்கள்.
*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், 
தேவையில்லாத மிடுக்கையும்
 காட்டாதீர்கள்.
*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே 
சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், 
அங்கே கேட்டதை இங்கேயும்
 சொல்வதை விடுங்கள்.
*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை
 உண்டு என்பதை மறவாதீர்கள்.
*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும்
 என்று காத்திராமல் நீங்களே பேச்சை
 முதலில் தொடங்குங்கள். பிரச்னை 
வரும்போது எதிர்த்தரப்பில் 
உள்ளவரின் கருத்துக்களுக்கும்
 காது கொடுங்கள்.
*W - Wound*
எந்தப் பேச்சும் செயலும்
 யார் மனதையும்
 காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி 
நடத்த வேண்டும்
 என்று எதிர்பார்க்கிறோமோ, 
அப்படியே மற்றவர்களை 
நாம் நடத்துவோம்.
*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள்.
 விட்டுக் கொடுப்பவர்கள்
 கெட்டுப் போவதில்லை; 
கெட்டுப் போகிறவர்கள் 
விட்டுக் கொடுப்பதில்லை.
*Z - Zero*
இவை அனைத்தையும்
 கடைப் பிடித்தால் பிரச்னை
 என்பது பூஜ்ஜியம் 
ஆகும்......
படித்ததில் பிடித்தது.....
........
#எப்போதோ
வரும்
#பிரச்சனை
என்றால்
#நிதானம் கொள்..!
#எப்போதும்
வரும்
#பிரச்சனை
என்றால்
#எதிர் கொள்..!!
...
'விவசாயம் கடினமான வேலை 
என்று
'எந்த விவசாயியும் கூறவில்லை..!
'பிறகு எப்படி விவசாயம் கடினம்
"என்று மக்கள் நம்பினார்கள்..?
ஒன்றை அழிக்கவேண்டுமென்றால்
'அதைபற்றி தவறான எண்ணங்களை
' பரப்பவேண்டும்
'கார்பரேட் இப்படி செய்து அடிமட்ட
' வேலைக்கு அவன் ஆள்சேர்த்தான்
விவசாயம் என்பது ஆரோக்கியமான
ஒன்று
......
யாரும் உங்கள் மனதை
'புரிந்துக்கொள்ளவில்லை என
'நினைத்து வருத்தப்படுவதைவிட,
'யாராலும் புரிந்துக்கொள்ள
'முடியாத மனசு உங்களுக்கு
'இருக்கிறது என்று கர்வப்படுங்கள்..
.......
வாய்ப்புக்காக
காத்திருந்து
ஜெயிக்கிறவன்
இலக்கை அடைகிறான்.
'வாய்ப்பை உருவாக்கி
ஜெயிக்கிறவன்
வேகமாக
இலக்கை அடைகிறான்.
..........
அற்பமாய் யாரையும்
'ஒருபோதும் நினைக்காதீர்.
ஏனெனில் நாளை
அவர்களே அற்புதங்களையும்
நிகழ்த்திட கூடும்
.......
மகான் போல வாழ வேண்டும்
என்று அவசியமில்லை...
மனசாட்சிப்படி வாழ்ந்தால்
போதும்...!
.......
'எல்லா நிலைமைகளிலும்
நிதானமாய் அமைதியாய் இரு!
எல்லா விஷயங்களையும்
நீ மாற்ற முடியாது
எல்லா விஷயங்களும் நீ
நினைப்பது போல் இல்லை
'எல்லா விஷயங்களுக்கும்
காரணம் உண்டு
எல்லா விஷயங்களும்
உனக்காக நடப்பதில்லை
அதனால் நீ அமைதியாய்
இருப்பதே உனக்கு நல்லது
..........
ஏதோ
ஒன்றுக்காக
காலம் நம்மை
காக்க வைத்துக்
கொண்டுதான்
இருக்கிறது...
........
'எல்லா பெண்களையும்
விசிலடித்து திரும்பிப் பார்க்க
வைத்தாலும்,
'செருப்படி வாங்காத
' ஒரே ஜீவன்
Pressure Cooker
........
உங்களை எங்கேயோ
பார்த்த மாதிரி இருக்கே
Facebook ல இருக்கீங்களா இல்ல
யhats app ல இல்ல
T.Letter ல இல்ல
Skype ல இல்லவே இல்ல.
அப்புறம் உங்க வீட்டு மாடியில் தான்
2 வருசமா வாடகைக்கு இருக்கேன்
..........
பாலியல் பலாத்காரம்

உடை எதுவாக
இருந்தாலும் பலாத்காரம்..!
அப்படியென்றால் உடை 
அல்ல பிரச்சினை
எந்த வயதுக்குட்பட்டவர்கள்
மீதும் பலாத்காரம்..!
அப்படியென்றால் வயது 
அல்ல பிரச்சினை
சொந்த உறவினர்கள் மீதும்
பலாத்காரம்..!
அப்படியென்றால் உறவினர்கள் 
அல்ல பிரச்சினை
சமூகத்தில் உலவும்
குற்றவாளிகளை தண்டிக்காத
அரசாங்கம் தான் பிரச்சினை....!
.........♥....
' கடல்லைப் பார்த்து
பயந்தா..
' மீன் கிடைக்காது..
'கனவை பார்த்து
பயந்தா
'தூக்கம் வராது..
' வாழ்கைய பார்த்துபயந்தா
' வாழமுடியாது..
' கஷ்டத்திற்கு..
' இஷ்ட தெய்வம்
உதவாது..
' வாழ்வதற்கு
துணைக்கு வரும்
'உழைப்பு மட்டுமே
'உன்னுடையது..
........
நம்ம கூட பழகுறவன்... ஆடு
மாதிரி தெரியலாம்...  
நரியா இல்லையான்னு
கண்டுபிடிக்கிற விளையாட்டு
தான் வாழ்க்கை...
.........
குறை சொன்னது யார்
என்பதை இரண்டாவது
பார்! சொல்லப்பட்ட
குறை உன்னிடம் உண்டா
என்று முதலாவது பார்!
.........
இரும்பின் துரு
இரும்பையே அழித்து விடும்.
நீங்கள் இரும்பாக இருக்கலாம்
சிந்தனையில் துரு ஏறாமல்
'பார்த்துக்கொள்ளுங்கள்
.........
குரலை உயர்த்திப் பேசுவது
தலைமைத்துவம் அல்ல.
நாம் பேசத்தொடங்கும் போது
மற்றவர் குரல்கள் அடங்குவது
தான் தலைமைத்துவம்.
...........
ஏன் என் கிட்ட
பேசசேலேனு
சண்டை போடுங்க
ஆனா ஏன் என் கூட
பேசுறேனு
சண்டை போடாதிங்க
'ரொம்பவே மனசு
வலிக்கும்
..........
'குத்தும் #ஊசியிடம்
எல்லாம் வாதாடிக்
கொண்டிருந்தால் ஆடை தன்
அழகை இழந்து விடும்....

வெட்டும் #கத்தரிக்கோலிடம்
எல்லாம் வாதாடினால் #ஆடை
'தன் வடிவமைப்பை இழந்து
விடும்....

'சில காயங்கள் நம்மை
நேர்த்தி செய்யுமெனத்
தெரிந்தால்
மகிழ்ச்சியாய் ஏற்றுக்
கொள்ள வேண்டியது தான்
ஆடை போல
..........
ஆண் ஆம்பளை என்று
வீரப்பாக சொல்கிறோம்
ஆனால்
அந்த ஆணையும் ஆணின்
 பெற்றோரையும் 
பார்த்துக்கொள்ள ஒரு
"பெண்" ணை தேடுகிறோம்
"கல்யாணம்" என்று பெயரில்...
..........
அவன் ஒரு சுயநலவாதி...
என்று குறை கூறுவதை விட்டு
நான் ஒரு ஏமாளி என்று
நினைத்துக்கொள்...
அடுத்து ஏமாற வாய்பிருக்காது...!
.......
பெண்ணின் மனதில் உள்ள 
ரகசியத்தை புரிந்து கொள்ள
 நினைப்பவனும்

திமிங்கலத்தை தூண்டில் 
மூலம் பிடிக்க நினைப்பவனும்
ஒன்றே...
.......
சேமிப்பு என்பது மூன்று
 விதமாக இருக்க வேண்டும்!!
சாதம் --- இன்றைய தேவை.
அரிசி --- நாளைய தேவை.
விதை நெல் --- எதிர்கால தேவை.
.......
யாரும் என்னை
ஏமாற்றினால்
நான்
ஏமாந்துவிட்டதாக
அர்த்தமில்லை
நான்
அவர்களை
அதிகமாக
நம்பினேன் என்று
அர்த்தம்
..........
சிறந்த குதிரையானாலும்
சாட்டை அடியிலிருந்து தப்ப
முடியாது
அதே போல் இந்த உலகத்தில்
என்ன தான்
சிறந்த மனிதனாலும்
குற்றச் சாட்டுகளிலிருந்து
தப்ப முடியாது...
...........
முகம் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை.
அன்பான ஆதரவான
ஆறுதலான
மொழிகூறும்
இணைய நட்பும்
ஒருவரம் தான்
............
மனக்கஷ்டம்னு சொன்னா
ஆள் ஆளுக்கு ஆறுதல்
சொல்ல வராங்கல
அதே பணக்கஷ்டம்னு சொன்னா
எல்லாம் தெறிச்சு ஓடுறாங்க
............
'எல்லா மனிதர்களுக்கும் ஒரு
பலவீனம் உண்டு.
ஒன்று பேச வேண்டிய சமயத்தில்
'பேசாமல் இருப்பது..
மற்றொன்று மவுனமாய்
இருக்க வேண்டிய
சமயத்தில் பேசுவது...
............
உங்கள் கண்ணீரை பார்ப்பவர்
எவரும் இல்லை
உங்கள் சோகத்தை பார்ப்பவர்
எவரும் இல்லை.......

உங்கள் வலியும் வேதனையும்
பார்ப்பவர் எவரும் இல்லை..
ஆனால்
உங்கள் தவறினை அனைவரும்
பார்ப்பார்கள்
.........
'கோபம் மனதில் இருக்க
கூடாது
'வார்த்தையில் தான் இருக்க
வேண்டும்
'அன்பு வார்த்தையில்
'மட்டும் இருக்க கூடாது
'மனதிலும் இருக்க வேண்டும்...!
........
மனக்கஷ்டம்னு சொன்னா
ஆள் ஆளுக்கு ஆறுதல்
சொல்ல வராங்க.
அதே பணக்கஷ்டம்னு சொன்னா
எல்லம் தெறிச்சு ஓடுறாங்க.
............
நீ #உயர்ந்து மேலே
 செல்லச் செல்ல,
இன்னும் கீழேயே
 இருப்பவர்களுக்கு
நீ #சிறியவனாய்த் தோன்றுவதில்
 வியப்பொன்றும் இல்லை.
அதனால்,
அவர்கள் உன் முயற்சிகளைப்
 பற்றி எள்ளி நகையாடினால்,
#கண்டு கொள்ளாதே..!
உன் முயற்சியை நோக்கி
 பயணித்து சென்று கொண்டே இரு..!
...........
எதுவுமே சரியில்லாத
போதும்..!!
எல்லாம் சரியாகிவிடும்
என்று நம்புவது தான்
வாழ்க்கை...!!
............
படித்துக்
கற்றுக்கொள்வதை விட
பட்டு கற்கொள்வதை
எளிதாக மறக்க
முடிவதில்லை
............
'கற்றுக்கொள்ள முயற்சிப்பதும்
'கற்றுக்கொண்டதை தொடர்ந்து
'செயலாக மாற்றுவதும் தான்
வெற்றியின் ரகசியம்..!
..........
"நல்லதையே தனியாக
செய்பவன்
தண்டிக்கபடுகிறான்...

தவறையே கூட்டமாக
செய்பவர்கள்
தப்பித்துக்கொள்கிறார்கள்"
..............
சொந்தக்காரனை
நம்பினால்
தகராறு...

சொந்தக்காலை
நம்பினால் வரலாறு!
...........
பணம் இருந்தால் நீங்களா
என ஆச்சர்யமாக
கேட்பதும்...

"அதுவே பணம் இல்லாமல்
இருந்தால்,
'ஓ நீயா என்று
கேவலமாகவும்
பார்ப்பது தான் உலகம்....III.
...........
'கற்றுக்கொள்ள முயற்சிப்பதும்
'கற்றுக்கொண்டதை தொடர்ந்து
'செயலாக மாற்றுவதும் தான்
வெற்றியின் ரகசியம்..!
..........
குறை இல்லாத
மனிதன் இல்லை.
அதை குறைக்க
தெரியாதவன்
மனிதனே இல்லை!
...........
வார்த்தைகளை
"ஆயதமாய் பயன்படுத்தாதே"
'அது நிச்சயமாய் பிறறை
காயப்படுத்தும்
"அதை கேடயமாய் பயன்படுத்து"
'அது உன்னையும் காக்கும்
'உலகிற்கும் உன்னை பிடிக்கும்
..............
NO ONE IS IMPOSING ENGLISH....
THERE ARE NO ENGLISHMEN IN INDIA 
TO IMPOSE ENGLISH....

PEOPLE LEARN ENGLISH VOLUNTARILY
 BECAUSE OF NECESSITY 
FOR ENGLISH KNOWLEDGE....

BUT CENTRAL GOVERNMENT IS
 IMPOSING HINDI ON US, 
WHEN THERE IS NO NECESSITY
 FOR US TO LEARN HINDI.
.............
Sixth Sick Sheik's Sixth Sheep's Sick -
 இதுவே 
ஆங்கிலத்தில் மிகவும் 
கடினமான "Tongue Twister"
..........
உன்னை ஜெயிக்க
யாரும் பிறக்கவில்லை
என நினைத்து
கொள்ளாதே...
எல்லோரையும் ஜெயிக்க
நீ பிறந்து இருக்கிறாய்
என்று
நினைத்துக் காெள் ..!!
வெற்றஉன் பக்கம்.
...........
பிற மனிதர்கள் மீது நிறைய
சந்தேகங்கள் வந்து
தொலைக்கிறதா..அப்படினா
வெட்டியாய் இருக்கிறீர்கள் என
பொருள்
............
ஆன்லைனால் மிச்சப்படுத்திய
நேரத்தை ஆன்லைனிலேயே
செலவழிக்குறோம்..
........
சின்ன நெருப்பாய்
இருந்தால்
காற்று அதனை அணைக்கும்,
காட்டு நெருப்பாய்
இருந்தால்
காற்று அதனை
வளர்க்கும்
..........
அவர் சொன்னார்,
'இவர் சொன்னார்,
'என்பதெல்லாம் போதும்.
' உன் மனம் சொல்வதென்ன,
'சற்று நின்று கேள் ....
.........
தனது பாதையை
'தானே தேடிக்கொள்ளும்
தண்ணீராக இரு..
அடுத்தவர் பாதையை
' தடுக்கும் பாறாங்கல்லாக
இருந்துவிடாதே..!!
.........
வண்டி ஓட்டிட்டே போன்
பேசறவங்களுக்கு வேணா
குடும்பத்து மேல அக்கறை
இல்லாம இருக்கலாம்.
எதிர்ல வண்டி ஓட்டிட்டு
வர எங்களுக்கு குடும்பம்
முக்கியம்
.........
வாகனத்தில் "செல்கையில் "
"செல்" கையில் இருப்பது
ஆபத்து...
...........
உங்கள் சோகங்களை
மணலில் எழுதுங்கள்
மறைந்து போகட்டும்..
உங்கள் மகிழ்ச்சியை
கல்லில் செதுக்குங்கள்.
என்றும் நிலைத்திருக்கும்..!
...............
பந்து எப்படி
வேண்டுமானாலும்
வரலாம்.
திருப்பி அடிக்கும்
திறமையே தேவை
உனக்கு.
.............
கிடைக்காததை
துரத்துவதும்
கிடைத்ததை
மதிக்காததும் தான்
வாழ்க்கை...!!
............
நம்முடைய சொற்கள்
பிறருடைய
இதயத்தில் விதையாக விழ
வேண்டும்...
விஷமாக இறங்கக்கூடாது.
'பூவாக உதிரவேண்டும்...
முள்ளாக கிழிக்கக்கூடாது.
............
தன்முன் கடவுளே வந்து
நின்றாலும்
மனிதன் புத்தகங்களிலும்
புனித நூல்களிலும்
தான் இறைவனை
தேடிக் கொண்டிருப்பான்.
.............
நம்மை சுற்றி இருப்பவர் 
எவரும் சரியில்லை
என்று தோன்ற ஆரம்பித்தால்
முதலில் மாற்றிக் கொள்ள 
வேண்டியது
நம்மை தான்
............
மகனின் பிறப்பு சான்றிதழ்க்கு
லஞ்சம் கொடுக்கும் அப்பா
அப்பாவின் இறப்பு சான்றிதழ்க்கு
லஞ்சம் கொடுக்கும் மகன்
இதுதான் இந்தியா!
.............
தென்னை
இள நீரும் கொடுக்கும்
"கள்ளும் கொடுக்கும்.
எதைக் கொடுப்பது
என்பது
தென்னையின் கையில்
இல்லை.
வளர்ப்பவன் கையில்
இருக்கிறது!
............
ஊசி நுழைந்து
பிரிக்க முடியாத
நட்பை, தாக நுழைந்து
பிரிந்து விடும்...
............
ஒருவன் உன்னை
ஒரு முறை அடித்தால்
அது அவனுடைய தவறு.
அவனிடம்
இரண்டாவது முறையும்
அடி வாங்கினால்
அது உன்னுடைய தவறு.
...............
நல்லவர்களுடன் பழகினால்
"ஏமாற்றாமல்"இருக்க கற்றுக்
கொள்வாய்... ஸ் ப்ளிஸ்..
கெட்டவர்களுடன் பழகினால்
"ஏமாறாமல்" இருக்க கற்றுக்
கொள்ளவாய்...
...............
நிம்மதிக்கான இரண்டு
வழிகள்
விட்டுக் கொடுங்கள்.
இல்லை
விட்டு விடுங்கள்.
...........
எனக்கு ஒரு பிரச்சனை?
என்று ஒரு போதும்
சொல்லாதீர்கள்
பிரச்சனை என்று சொன்னாலே,
கவலையும் பயமும்
கட்டாயம் வரும்,
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லிப்
பாருங்கள்..
மன தைரியமும்,
தன்னம்பிக்கையும்
தானாகவே வரும்?
............
பள்ளிக்கூடம் போன பின்புதான்
விளையாட்டின் அருமை தெரிகிறது!
கல்லூரி போன பின்புதான்
பள்ளியின் அருமை தெரிகிறது!
வேலைக்கு போன பின்புதான்
படிப்பின் அருமை தெரிகிறது!
ஓய்வு பெற்ற பின்புதான்
வேலையின் அருமை தெரிகிறது!
மரணப் படுக்கையில்தான்
வாழ்க்கையின் அருமை தெரிகிறது..!
............
பிறக்கும் போது
பனிக்குடம் உடைகிறது.
இறக்கும் போது மண்குடம்
உடைகிறது,
வாழும்போதாவது
பிறர் மனம் உடையாமல்
பார்த்துக்கொள்வோம்.!
...............
எதையும் அளவோடு வைக்க
 எப்போதும் நினைவுபடுத்துவது
#உப்பு
........
நேர்மையாக
இருப்பவர்களுக்கு
கோபம் அதிகமாக
வரும். காரணம்,
ஏமாற்றங்களைத்
தாங்கும் சக்தி
அவர்களுக்கு
இருப்பதில்லை.
............
உங்கள் #நம்பிக்கைகளை
 "நம்புங்கள்.!
உங்கள் #சந்தேகங்களை
 "சந்தேகப்படுங்கள்.!!
"வாழ்க்கையில்:....
#சந்தோசம் நிலைத்திருக்கும்..!!
............
தவறு #என்னுடையதல்ல, என்பதற்கு
ஆயிரம் துணை #பொய்'கள் வேண்டும்.!
#என்னுடைய தவறு தான், என்பதற்கு
ஒரே ஒரு #உண்மை போதும்.!!
............
நேர்மையாக
இருப்பவர்களுக்கு
கோபம் அதிகமாக
வரும். காரணம்,
ஏமாற்றங்களைத்
தாங்கும் சக்தி
அவர்களுக்கு
இருப்பதில்லை.
.............
உங்கள் தள்ளி விடுவதில்
மற்றவர்கள்
வலிமையானவர்கள்
என நிரூபித்தால்..
கீழே விழுந்தாலும்
எழுந்து நிற்பதில்
நீங்கள்
வலிமையானவர்கள்
என நிரூபியுங்கள்..!
............
முயற்சி செய்

மற்றவர்களிடம் இருந்து,
தனித்து தெரிவதற்கு
 முயற்சி செய்.
அது தான் வெற்றியின் முதல்படி
..............
தழும்புகள்,
'காயத்தை நினைத்து
வருத்தப்படுவதற்காக
அல்ல,
'அந்த காயத்தை கடந்து,
வந்ததற்கு
பெருமைபடுவதற்காக...
...........
தப்பான ஆணை ஒரு பெண்ணால்
நிச்சயம் திருத்த முடியும் என
நம்புகின்ற சமூகம்...
ஒரு தப்பான பெண்ணை ம்
இன்னும் எப்படி தப்பா
பயன்படுத்தலாமுன்னு தான்
பார்க்கிறது.
............
இன்னாரை போல் வாழ வேண்டும்
என்று நாம் நினைப்பதை விட
நம்மை போல் வாழ வேண்டும்
என்று பிறர் எண்ணும் அளவிற்கு
நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு...
.........
An umbrella can't stop the
rain
but it allows us to
stand in the rain.

Confidence
may not bring
success
but it gives us
the power to face any
challenge.
...........
"Here is a puzzle. Solve if u can.
Find the value of  5 coins
Using these 5 coins
 I can pay you any amount from 1 to 31 rupee."
Ans:
1,2,4,8,1 6
..................

"Life is 3"
"Ex+Ex+Ex"
Good Morning Yesterday was
"Experience"
Today Is
"Experiment"
Tomorrow Is
"Expectation"

Use Your
"Experience"
In Your
"Experiment"
To Achieve
Your "Expectation"
..................
ஆசிரியர். TRAIN கண்டு
 பிடிக்கலேன்னா
என்ன ஆகி இருக்கும்..??

மாணவன்:
தண்டவாளம்
வேஸ்ட்டா போயிருக்கும் சார்...!

ஆசிரியர்.
சுதந்திரதினத்துக்கும்,
'குடியரசு தினத்துக்கும் என்ன
 வித்தியாசம்..?,
மாணவன். சுமார் ஒரு
ஆறு மாசம் வித்தியாசம் சார்...!

ஆசிரியர்: யானைக்கு மதம்
பிடித்தால் என்ன செய்யும்...?
மாணவன்: அதுக்கு பிடிச்ச
' மதத்தில் சேர்ந்துடும் சார்...
..........
அறிவுரை என்பது வழிகாட்டி பலகை போல;
அதைக்கூறுபவர் ஒருபோது
ம் கூட வரமாட்டார்கள்!
.......
#முப்பது நாள்களில் ஒரு நாள்கூட
ஒரு #மாதத்திடம்
பொய் சொன்னதில்லை;

ஒரு #மாதம்கூட ஒரு #வருடத்திடம்
#பொய் சொன்னதில்லை
அதனால்தான்
#காலம் - இன்னும் #காலமாகாமல்
வாழ்கிறது
ஆனால்
காலத்துள் வாழும் மனிதன்
#பொய்சொல்லிக் #காலமாகிறான்!
..............
ஆறு
பாறைகளுக்குள்
நுழைந்து பயணிக்கிறது.
'அது அதன் பலத்தினால் அல்ல,
விடாமுயற்சியால்..!
.............
தேவையான இடத்தில்
முற்றுப்புள்ளி வைக்காவிட்டால்!
வார்த்தையும், வாழ்க்கையும்
அர்த்தமில்லாமல் போய்விடும்
...........
மனம் நினைத்தால்
#மலையைக்கூட புரட்டலாம்.
#நினைக்காவிட்டால்,
#புத்தகத்தைக் கூட புரட்ட
முடியாது!

வாழ்க்கை
என்ற புத்தகத்தில்
கஷ்டம் என்ற பக்கத்தை
கசக்கிவிடு..
இஷ்டம் என்ற பக்கத்தை
தொடர்ந்துவிடு..!!
............
 தயவு செய்து யாரும்
தாயை கடவுளுடன்
-இப்பிடாதீர்கள்!
'எந்தவொரு தாயும் தனது
பிள்ளைகளின் துயரங்களைப்
பார்த்தோ /கேட்டோ கல்லாக
நிற்பதில்லை!
......................
நமிர்ந்து நில் !!!
்்்்நீ மரமல்ல ்்

மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்

வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற

மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன.......!
..........
அர்ச்சகரின் தட்டில் 10ரூபாய்
 இட்டேன் அவர்
'என்னை பக்தனாக பார்த்தார்..
பிச்சைக்காரரின் தட்டில்
 10ரூபாய் இட்டேன்)
அவர் என்னை தெய்வமாக பார்த்தார்.
...................
மாமியாராக
ஆனதும்
மகன்
விரோதி
ஆகிவிடுகிறான்
பல #இல்லங்களில்...!!
..............
எடுக்கும் அத்தனை சீட்டுகளிலும்
 கடவுள் புகைப்படம்...
ஏதேனும் ஒரு ​கடவுள்​ எனக்கு
 வரம் கொடுத்திருந்தால்....
சிறகை விரித்து பறந்திருப்பேன்...
#​ஜோசிய_கிளி_புலம்பல்
 ......................
எல்லா வசதிகளும்
வாய்ப்பும் வந்த பிறகு,
மனம் தேடுவது
பழைய சந்தோஷமான,
'நாட்களையே
........................
கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை
 நான் சிற்பி, நீ கல்., 
 உருவம் கொடுத்தபின்பு
 நீ கடவுள், 
நான் தீண்டத்தகாதவன்..!
.....................
எந்த பூச்சிகள் இறந்தாலும்
 எறும்புகளே அதை இறுதி
 ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!
(மிகச் சிரியவையாக இருந்தாலும்
 ஞானம் அதிகமா இருக்கிறது
 இந்த எறும்புக்கு தான்)
.............................
தெருவில் குப்பை போடுகிறவனை 
மரியாதையாகவும் அதை பொறுக்கி
 சுத்தம் செய்பவனை கேவலமாக 
பார்க்கும் சமுதாயம் உள்ளவரை 
நாடு சுத்தம் ஆகாது!!!
..................
தூக்கம் வராமல் முதலாளி...
 தூங்கி வழியும் வாட்ச்மேன். 
என்ன ஒரு முரண்பாடு..!!!
............
நல்ல அனுபவம் கிடைச்சா
பரவசப்படனும்,
மோசமான அனுபவம் கிடைச்சா
பக்குவப்படனும்...
............
தலையில் அதிக பாரம்
வைத்து நடப்பவர்களை
விட..
மனதில் அதிக பாரம்
வைத்து நடைபிணமாய்
வாழ்பவர்களே அதிகம்
...........
நம்ம சொந்தக்காரங்க
'எல்லாம் ஹோம் தியேட்டர்
மாதிரி...
' நாம ஒரு விஷயத்தை
'அவங்க கிட்ட சொன்னா அதை
அப்பிடியே நாளா பிரிச்சு நாலு
'பக்கமும் சொல்லுவானுங்க.
.............................

#ஒவ்வொரு நாளின் #முடிவிலும் நாம்
ஒரு #பாடத்தை கற்றுகொள்கிறோம்
அது போல்
ஒவ்வோரு நாளின் #தொடக்கமும் உன் வாழ்வை #மாற்றக்கூடியது...
.............
திருடன் நல்லவன்...!
ஒரு டாக்டரோட எதிர்பார்ப்பு
எல்லோரும் நோயாளியா இருக்கனும்.

ஒரு வக்கீலோட எதிர்பார்ப்பு
எல்லோரும் பிரச்சனையோட இருக்கனும்.

ஒரு போலீசோட எதிர்பார்ப்பு
எல்லோரும் கிரிமினலா இருக்கனும்.

ஆனா ஒரு திருடன் மட்டும் தான்
"எல்லோரும் வசதியா இருக்கனும்....
ராத்திரி நிம்மதியா தூங்கணும்னு"
நினைப்பான்.
............
#விடா முயற்சி தான் வெற்றி 
தரும் என்றெல்லாம் ஒன்றுமில்லை
கொஞ்சம் #விட்டு_விட்டு
 முயற்சி செய்தாலும்,
#விட்டுக்கொடுத்து முயற்சி
 செய்தாலும் வெற்றி
கிட்டும்
........................
ஒரு கிலோ தேனை
பெறுவதற்காக தேனீக்கள்
4மில்லியன் பூக்களை
சந்திக்கிறது....

அற்ப மனிதன் ஒரு
தோல்விக்கே துவண்டு
விடுகிறான்..!
............
பணமும் பதவியும்
மோசமானவை
என்று ஞானிகள்
ஏன் சொல்கிறார்கள்
என்றால்

அவை
வரக்கூடாதவனுக்கு
வருவதாலும்
கிடைக்கக் கூடாதவனுக்குக்
கிடைப்பதாலும் தான் 
.................
உண்மை என்பது
இருட்டான காட்டுக்குள்ள
இருக்கிற
சின்ன விளக்கு
மாதிரிங்க...

அந்த ஒளியினால்
மொத்த காட்டையும்
பார்க்க முடியாது.

'ஆனா,
நீங்க எடுத்து,
வைக்கபோற அடுத்த
அடியை அது
உங்களுக்கு
காமிக்கும்...!
...........
"தொடர் தோல்வியால்
' வீழ்ந்தாலும், விடாமுயற்சியால்
வென்றிடலாம்"
......................... 
'பேப்பர் போடுறவன் கூட
'கதவை தட்டாமே வெளியே
'தூக்கி எறிஞ்சுட்டுதான்
போறான்..
'வாய்ப்பு மட்டும் கதவை
தட்டுமா என்ன?
'நாமதான் வெளியே போய்
'பொறுக்கணும்..
..........
எனக்கு
பிடிக்காத ஒன்றை
உலகமே சொன்னாலும்
செய்யமாட்டேன்..!!
""எனக்கு பிடித்த
ஒன்றை உலகமே
' ஏதிர்த்தலும் செய்யாமல்
விடமாட்டேன்...
..........
'கோபம் எனும் இருட்டில்
விழுந்து விடாதே, பிறகு
பாசம் எனும் பகல்
'கண்ணுக்கு தெரியாது.
..........
திரும்பி பார்க்க
வைக்கும் முகம்
எல்லோருக்கும் இருக்கும்

ஆனால் திரும்ப தி.சேகர்
நினைக்க வைக்கும்
'குணம் ஒரு சிலருக்கு
மட்டுமே இருக்கும்
.............
உங்கள் பெற்றோரை அவர்கள்
உயிருடன் இருக்கும்போதே
மதியுங்கள். இறந்தபிறகு
அவர்களுடைய கல்லறைக்குச்
சென்று வணங்குவதால் எந்த
பயனும் இல்லை...!
.............
ஏமாற்றியவர்களுக்கு
நன்றி சொல்.!
அவர்கள்
ஏமாற்றத்தை
சொல்லி தரவில்லை...
இனி ஏமாறாமல்
இருக்க
அனுபவத்தை
கற்று தந்து
இருக்கிறார்கள்...!
...............
நல்ல நேரம் 24 மணி நேரம்

இராகு காலம் உழைக்காத நேரம்

கெட்ட நேரம்
தீய எண்ணங்கள்
எழும்போது
..............
தொடங்கும் முன் தயங்காதே!
தொடங்கிய பின் நடுங்காதே!
இடையில் உறங்காதே!
வேதனை கண்டு பதுங்காதே!
சோதனை வரும் துவளாதே!
சாதனை செய்வாய் கலங்காதே!
ஒரு நாள் நிச்சயம் விடியும்!
அது உன்னால் மட்டுமே
முடியும்!
............
வலியோடு போராடினால் தான்,
ஒரு பெண் தாயாக முடியும்....
இருளோடு போராடினால் தான்,
புழு வண்ணத்துப்பூச்சியாக முடியும்,
மண்ணோடு போராடினால் தான்,
விதை மரமாக முடியும்.....
வாழ்க்கையோடு போராடினால் தான்
நீ வரலாறு படைக்க முடியும்....
...........
தமிழ்நாட்டிற்கு தேவை
நேர்மையான
ஆட்சியாளர்கள் அல்ல,

நேர்மையான வாக்காளர்கள்
என்பதை நாம் உணராத வரை
நாமெல்லாம் அடிமைகள் தான்.
..............
பிறரிடம் மன்றாடி தான் உன் பக்க
நியாயங்களை எடுத்து கூற
வேண்டுமென்றால்
உன் மனதோடு கொஞ்சம் போராடி
அவர்களை விட்டு விலகுவதே
நலம்....!!
...........
என் தவறுகளை என்
முகத்தைப் பார்த்து
என்னிடமே கூறுங்கள்
என்னை சுற்றி
உள்ளவர்களிடம் அல்ல...
ஏனென்றால்
என் தவறுகளை நான்தான்,
திருத்திக் கொள்ள முடியும்
மற்றவர்கள் அல்ல
..............
எல்லோருடைய வாழ்க்கையும்
ஒரு மெழுகுவர்த்தி போலதான்.
துாரத்தில் இருந்து பார்த்தால்
ஒளி மட்டுமே தெரியும்.
அருகில் சென்று பாருங்கள்.
அவர்கள் உருகி
கண்ணீர் வடிப்பது தெரியும்.
............
ஜோசியர்:
உங்க ஜாதகப்படி,
பத்து வருஷத்துக்கு
முன்னாடி செய்த
வியாபாரத்தை இப்ப
தலைகீழா
செய்யணுமே?
வந்தவர்: ஆமாங்க...
முன்னால
வைர வியாபாரம்
செஞ்சேன்; இப்ப
ரவை வியாபாரம்
செய்யறேன்!
............
Never Blame Anyone
in your life.
Good People
give happiness,
Bad people
give experiences,
Worst people
give a lesson,
Best people
...............
தலை குனிந்து
என்னைப் பார்...
தலை நிமிர்ந்து
உன்னை நடக்க 
வைக்கிறேன்...!
புத்தகம்
............
நட்பு

கண் உள்ள வரை
“பார்த்திருப்பேன்”
காலம் உள்ள வரை
"நினைத்திருப்பேன்”
என்றோ ஒரு நாள்
"மறந்திருப்பேன்"
அன்று நான்
இறந்திருப்பேன்
................

என்ன நடக்குமோ,
எது நடக்குமோ
என்று யோசித்துக்
கொண்டிருப்பதை விட
முயற்சித்துப் பார்.
கிடைத்தால் வெற்றி..
இல்லாவிட்டால் அனுபவம்
இரண்டுமே நமக்கு
தேவைதான்..!
................
கபடி ஆடலாம்,
கிரிக்கெட் ஆடலாம்,
'பரதநாட்டியம் ஆடலாம்,
கதகளிகூட ஆடலாம்.
'ஆனா, ஆணவத்துல மட்டும்
' ஆடவே கூடாது!
.............
We were all
humans until:
Race disconnected us,
Religion separated us,
Politics divide us,
And Wealth classified us.
...........
நீங்கள்  ...
நீங்களாகவே இருந்தால்
எவரிடத்திலும்...
நீங்கள்தான் நீங்கள்
என்பதை  
நிருபிக்க வேண்டிய
அவசியமில்லை!!
...........
#உனது #திறமையைக் #கொண்டு
#உன்னை #நீயே #வடிவமைத்துக்
#கொள்
#பிறர் #பார்வை #உனக்கான
#அடையாளமல்ல
............
சிரிப்பதற்கு பற்களை கடவுள்
தந்தாலும், சிரிப்பதற்கான
சந்தர்ப்பத்தை நாம்தான்
உருவாக்க வேண்டும்..
..............
பிரச்சனையே வயிறு தான்!
பாதி பேர் குறைக்க ஓடிக்
கொண்டிருக்கிறார்கள்!
பாதி பேர் நிறைக்க ஓடிக்
கொண்டிருக்கிறார்கள்!
..............
திறமை அற்றவன் என்று
எவனையும் எண்ணாதே
'ஒரு வகையில் உனது வெற்றிக்கு
'அவனின் தோல்விதான் காரணம்..!
.................
வேலையில்லாத ஆணிடமும்,
குழந்தையில்லாத
'பெண்ணிடமும்
முதியோர் இல்லத்தில்
தள்ளப்பட்ட
பெரியோர்களிடமும்
கேட்டுப்பாருங்கள்.
வாழ்க்கையின் அர்த்தம்
புரியும்!
.............
தனது ஐம்பதாவது வயதிலும் 
ஒரு மனிதன் இருபதாவது வயதில்
 பார்த்த மாதிரியே 
உலகத்தைப் பாரத்தானென்றால் 
அவன் தனது வாழ்நாளில் முப்பது 
ஆண்டுகளை
 வீணாக்கிவிட்டான் என்பது 
திண்ணம் .--முகம்மது அலி
...............
எடுக்கும் அத்தனை சீட்டுகளிலும்
 கடவுள் புகைப்படம்...
ஏதேனும் ஒரு ​கடவுள்​ 
எனக்கு வரம் கொடுத்திருந்தால்....
சிறகை விரித்து பறந்திருப்பேன்...
#​ஜோசிய_கிளி_புலம்பல்
..............
இரண்டு இடத்தில்
பேசாதீர்கள்
1.முட்டாள்கள் மத்தியில்
2.புத்திசாலிகள் மத்தியில்

இரண்டு பேரும் நம் கருத்தை
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
..............
பிகர் அருகில்
இருந்தால்
"HOTEL BILL"

பிகர் தொலைவில்
இருந்தால்
"PHONE BILL"

'பிகர் தொலைந்தே 
போய்விட்டால்
*BAR BILL"
'எப்படிப் பார்த்தாலும்
 "BILL" நிச்சயம்
இந்த பொண்ணுகளே
இப்படித்தான் பாஸ்
..........
If  a cat crosses road
It doesn't mean bad luck

It means that the cat is
going somewhere
...............
#விமர்சனங்களுக்கு_
மதிப்பளிக்காதீர்கள்

இறைவன்  திருப்பணியில் 
ஒழுங்காக மெழுகுவர்த்திப் பிடிக்கத்
 தெரியவில்லை என ஒரு 
பாதிரியாரால் திருச்சபையை 
விட்டு வெளியேற்றப் பட்டவரே
 பின்னாளில்
#அன்னை_தெரேசா
//////////////////
வானவியலில் அறிவுப் போதவில்லை
 என வானோடிகளுக்காக நடந்த
 நேர்முகத் தேர்வில் 
தெரிவு செய்யப்படாமல்
 புறக்கணிக்கப் பட்டவர்தான்-
பின்னாளில்
#அப்துல்_கலாம்
//////////////////////////////
காதும் கேட்கவில்லை, 
புத்தியும் மந்தம் என ஏழாம் வகுப்பில் 
பள்ளியில் பாதியில்
 வெளியேற்றப்பட்டவரே  பின்னாளில்
#தாமஸ்_ஆல்வா_எடிசன்
////////////////////////////
மும்முறை பல்கேரிய 
இராணுவத்தில்
 சேரத் தகுதி இல்லை என விரட்டி
 அடிக்கப்பட்டு ,
 பின்னாளில் இரண்டாம் உலகப்
 போருக்கேக் காரணமாக இருந்து , 
உலகில் இந்தியா உட்பட்ட
 முப்பத்தாறு தேசங்கள் விடுதலை 
அடையக் காரணமானவர்தான்
#அடால்ஃப்_ஹிட்லர்
////////////////////////////
கருப்பாய், குள்ளமாய் இருப்பதால் ,
 டச்அப் கேர்ள் வேலைக்குக்கூட
 லாயக்கில்லை எனத் தமிழ்
 இயக்குநர் ஸ்ரீதரால்
 நிராகரிக்கப்பட்டவர்தான்-
பின்னாளில் வடஇந்தியாவைக் 
கலக்கியக் கவர்ச்சிப்புயல்
#ஹேமமாலினி
///////////////////////////
அன்று இவர்கள் விமர்சனங்களுக்கு 
மதிப்பளித்திருந்தால் 
இன்று இவர்கள் இல்லை..
#கருத்துக்கள்_எல்லாம்_
தீர்ப்புகள்_இல்லை
#THE_OPINIONS_ARE_NOT_
JUDGEMENTS
................
துன்பத்திலும்
இன்ன்பத்திலும்
நீ நினைவில்
கொள்ள வேண்டிய
ஒரு உண்மையான
விஷயம்
இந்த நிமிடம்
நிரந்தரமில்லை
.............
அடுத்தவர்களுக்காக
வாழாதீர்கள்....
எல்லோருக்கும் பிடிக்கும்படி
எவராலும் வாழமுடியாது
கடவுளாலும் கூட...!
............
உன்னை குறை
கூறும் பலருக்கு
உத்தமனாக
வாழ்வதைவிட
உன்னை நம்பும்
சிலருக்கு
நல்லவனாய் இரு!
...............
'உன் கவலைகளை
'ஆண்டவனிடம் மட்டுமே
சொல்லி அழு

ஏனெனில்
அவர் மட்டும்தான்
'அதை யாரிடமும்
சொல்லி
'சந்தோசப்படமாட்டார்
...........
'திரும்பி பார்க்க
' வைக்கும் முகம்
'எல்லோருக்கும் இருக்கும்
ஆனால் திரும்ப
' நினைக்க வைக்கும்
குணம் ஒரு சிலருக்கு
"மட்டுமே இருக்கும்..
..............
தோல்வி
அடைந்தால்,
மாற்ற
வேண்டியது
வழிகளைத்
தானே தவிர...

இலக்குகளை அல்ல!
..............
தோல்வி என்பது 
வாழ்கையில் கற்று தரும்
பாடங்களில் ஒன்றே தவிர அதில்
அவமானம் ஏதும் இல்லை..!
............
செத்த பிறகுதான்
நரகத்துக்கு போவாங்கன்னு
கேள்விப்பட்டிருக்கேன்

'எனக்கு என்னமோ நாம்
வேற எங்கயோ செத்துத்தான்
இந்த நரகத்துக்கு
வந்திருப்போம்னு தோனுது
...............
உனது விதியைப் படைப்பவன்
நீயே என்பதைப் புரிந்துகொள்;
உனக்குத் தேவையான எல்லா
வலிமையும் உதவியும்
உனக்குள்ளேயே
குடிகொண்டிருக்கின்றன.

-சுவாமி விவேகானந்தர்
.............
எதிலும் நீ நினைப்பதை செய்..!
அதற்காக...
நீ நினைப்பது அனைத்தும்
சரி என.
எண்ணிவிடாதே...!
............
 இதயம் சொல்வதை
 செய்
வெற்றியோ
தோல்வியோ
அதை
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு
.........
பிறரால்
'பாதிக்கப்பட்டவர்களை விட..
பிடித்தவர்களால்
பாதிக்கப்படுபவர்களே
அதிகம்...!
///////////////////// 
நட்பு

கண் உள்ள வரை
“பார்த்திருப்பேன்”
காலம் உள்ள வரை
"நினைத்திருப்பேன்”
என்றோ ஒரு நாள்
"மறந்திருப்பேன்"
அன்று நான்
இறந்திருப்பேன்
................

என்ன நடக்குமோ,
எது நடக்குமோ
என்று யோசித்துக்
கொண்டிருப்பதை விட
முயற்சித்துப் பார்.
கிடைத்தால் வெற்றி..
இல்லாவிட்டால் அனுபவம்
இரண்டுமே நமக்கு
தேவைதான்..!
................
கபடி ஆடலாம்,
கிரிக்கெட் ஆடலாம்,
'பரதநாட்டியம் ஆடலாம்,
கதகளிகூட ஆடலாம்.
'ஆனா, ஆணவத்துல மட்டும்
' ஆடவே கூடாது!
.............
We were all
humans until:
Race disconnected us,
Religion separated us,
Politics divide us,
And Wealth classified us.
...........
நீங்கள்  ...
நீங்களாகவே இருந்தால்
எவரிடத்திலும்...
நீங்கள்தான் நீங்கள்
என்பதை  
நிருபிக்க வேண்டிய
அவசியமில்லை!!
...........
#உனது #திறமையைக் #கொண்டு
#உன்னை #நீயே #வடிவமைத்துக்
#கொள்
#பிறர் #பார்வை #உனக்கான
#அடையாளமல்ல
............
சிரிப்பதற்கு பற்களை கடவுள்
தந்தாலும், சிரிப்பதற்கான
சந்தர்ப்பத்தை நாம்தான்
உருவாக்க வேண்டும்..
..............
பிரச்சனையே வயிறு தான்!
பாதி பேர் குறைக்க ஓடிக்
கொண்டிருக்கிறார்கள்!
பாதி பேர் நிறைக்க ஓடிக்
கொண்டிருக்கிறார்கள்!
..............
திறமை அற்றவன் என்று
எவனையும் எண்ணாதே
'ஒரு வகையில் உனது வெற்றிக்கு
'அவனின் தோல்விதான் காரணம்..!
.................
வேலையில்லாத ஆணிடமும்,
குழந்தையில்லாத
'பெண்ணிடமும்
முதியோர் இல்லத்தில்
தள்ளப்பட்ட
பெரியோர்களிடமும்
கேட்டுப்பாருங்கள்.
வாழ்க்கையின் அர்த்தம்
புரியும்!
.............
தனது ஐம்பதாவது வயதிலும்
 ஒரு மனிதன் இருபதாவது வயதில் 
பார்த்த மாதிரியே உலகத்தைப்
 பாரத்தானென்றால் அவன் தனது
 வாழ்நாளில் முப்பது ஆண்டுகளை 
வீணாக்கிவிட்டான் 
என்பது திண்ணம் .--முகம்மது அலி
...............
எடுக்கும் அத்தனை சீட்டுகளிலும்
 கடவுள் புகைப்படம்...
ஏதேனும் ஒரு ​கடவுள்​ எனக்கு
 வரம் கொடுத்திருந்தால்....
சிறகை விரித்து பறந்திருப்பேன்...
#​ஜோசிய_கிளி_புலம்பல்
..............
இரண்டு இடத்தில்
பேசாதீர்கள்
1.முட்டாள்கள் மத்தியில்
2.புத்திசாலிகள் மத்தியில்
இரண்டு பேரும் நம் கருத்தை
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
..............
பிகர் அருகில்
இருந்தால்
"HOTEL BILL"
பிகர் தொலைவில்
இருந்தால்
"PHONE BILL"
'பிகர் தொலைந்தே போய்விட்டால்
*BAR BILL"
'எப்படிப் பார்த்தாலும் "BILL" நிச்சயம்
இந்த பொண்ணுகளே
இப்படித்தான் பாஸ்
..........
If  a cat crosses road
It doesn't mean bad luck
It means that the cat is
going somewhere
...............
#விமர்சனங்களுக்கு_திப்பளிக்காதீர்கள்

இறைவன்  திருப்பணியில்
ஒழுங்காக மெழுகுவர்த்திப் பிடிக்கத்
 தெரியவில்லை என ஒரு பாதிரியாரால் 
திருச்சபையை விட்டு 
வெளியேற்றப் பட்டவரே பின்னாளில்
#அன்னை_தெரேசா
//////////////////
வானவியலில் அறிவுப் போதவில்லை 
என வானோடிகளுக்காக நடந்த
 நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்படாமல்
 புறக்கணிக்கப் பட்டவர்தான்-
பின்னாளில்
#அப்துல்_கலாம்
/////////////////
காதும் கேட்கவில்லை, புத்தியும் மந்தம்
 என ஏழாம் வகுப்பில் பள்ளியில்
 பாதியில் வெளியேற்றப்பட்டவரே  
பின்னாளில்
#தாமஸ்_ஆல்வா_எடிசன்
//////////////////
மும்முறை பல்கேரிய இராணுவத்தில்
 சேரத் தகுதி இல்லை என விரட்டி அடிக்கப்பட்டு 
, பின்னாளில் இரண்டாம் உலகப் 
போருக்கேக் காரணமாக இருந்து ,
 உலகில் இந்தியா உட்பட்ட
 முப்பத்தாறு தேசங்கள் விடுதலை
 அடையக் காரணமானவர்தான்
#அடால்ஃப்_ஹிட்லர்
////////////////
கருப்பாய், குள்ளமாய் இருப்பதால் , 
டச்அப் கேர்ள் வேலைக்குக்கூட
 லாயக்கில்லை எனத் தமிழ் இயக்குநர்
 ஸ்ரீதரால் நிராகரிக்கப்பட்டவர்தான்-
பின்னாளில் வடஇந்தியாவைக் 
கலக்கியக் கவர்ச்சிப்புயல்
#ஹேமமாலினி
///////////
அன்று இவர்கள் 
விமர்சனங்களுக்கு
 மதிப்பளித்திருந்தால் 
இன்று இவர்கள் இல்லை..
#கருத்துக்கள்_எல்லாம்_தீர்ப்புகள்_இல்லை
#THE_OPINIONS_ARE_NOT_JUDGEMENTS
................
துன்பத்திலும்
இன்ன்பத்திலும்
நீ நினைவில்
கொள்ள வேண்டிய
ஒரு உண்மையான
விஷயம்
இந்த நிமிடம்
நிரந்தரமில்லை
.............
அடுத்தவர்களுக்காக
வாழாதீர்கள்....
எல்லோருக்கும் பிடிக்கும்படி
எவராலும் வாழமுடியாது
கடவுளாலும் கூட...!
............
உன்னை குறை
கூறும் பலருக்கு
உத்தமனாக
வாழ்வதைவிட
உன்னை நம்பும்
சிலருக்கு
நல்லவனாய் இரு!
...............
'உன் கவலைகளை
'ஆண்டவனிடம் மட்டுமே
சொல்லி அழு

ஏனெனில்
அவர் மட்டும்தான்
'அதை யாரிடமும்
சொல்லி
'சந்தோசப்படமாட்டார்
...........
'திரும்பி பார்க்க
' வைக்கும் முகம்
'எல்லோருக்கும் இருக்கும்
ஆனால் திரும்ப
' நினைக்க வைக்கும்
குணம் ஒரு சிலருக்கு
"மட்டுமே இருக்கும்..
..............
தோல்வி
அடைந்தால்,
மாற்ற
வேண்டியது
வழிகளைத்
தானே தவிர...

இலக்குகளை அல்ல!
..............
தோல்வி என்பது வாழ்கையில்
 கற்று தரும்
பாடங்களில் ஒன்றே 
தவிர அதில்
அவமானம் ஏதும் இல்லை..!
............
செத்த பிறகுதான்
நரகத்துக்கு போவாங்கன்னு
கேள்விப்பட்டிருக்கேன்

'எனக்கு என்னமோ நாம்
வேற எங்கயோ செத்துத்தான்
இந்த நரகத்துக்கு
வந்திருப்போம்னு தோனுது
...............
உனது விதியைப் படைப்பவன்
நீயே என்பதைப் புரிந்துகொள்;
உனக்குத் தேவையான எல்லா
வலிமையும் உதவியும்
உனக்குள்ளேயே
குடிகொண்டிருக்கின்றன.

-சுவாமி விவேகானந்தர்
.............
எதிலும் நீ நினைப்பதை செய்..!
அதற்காக...
நீ நினைப்பது அனைத்தும்
சரி என.
எண்ணிவிடாதே...!
♦♦♦♦♦♦♦♦
இந்திய தேசியக் கொடியை 
அதிகாரப்பூர்வமாக
நம் நாட்டில் தயாரிக்கும் 
ஒரே ஒரு ஃபாக்டரி மட்டுமே உள்ளது. 
அது கர்நாடக மாநிலம் தார்வாட் 
மாவட்டத்தில் உள்ள பெங்கேரி 
என்ற கிராமத்தில் உள்ள ’கர்நாடக
 காதி கிராமோத்யோக் 
சம்யுக்த சங்கா’ (KKGSS) என்ற இடத்தில் 
அமைத்துள்ள தொழிற்சாலையில்
 மட்டுமே இந்திய கொடிகள்
 உற்பத்தி ஆகிறது.
..............
தேங்காய் உடைக்கிறார்கள்
வாழ்க்கை சிதறிப் போகாமல் இருக்க..
தேங்காய் பொருக்குகிறார்கள்
வாழ்க்கையில் சிதறிப்போனவர்கள்...
............
பேலின்ட்ரோம்’ (Palindrome)

எந்த ஒரு வார்த்தையை
 வாசிக்கும் பொழுதும்

வலமிருந்து இடமாகவோ
அல்லது இடம் இருந்து வலமாகவோ

எப்படி வாசித்தாலும்  
எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல்
வார்த்தைகள் அமைவது

இதற்குப் பெயர்தான்
 ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) என்பதாம்

தமிழில் இதுவரை அறிந்த கேட்ட
பாலின்ட்ரோம் வார்த்தைகள்!
♥♥♥
விகடகவி
மாவடு போடுவமா,
துவளுவது
தாளாதா
வா தாத்தா வா!
மாலா போலாமா,
தேருவருதே
மேகமே
வாடவா
தாத்தா
கலைக
வினவி
யானை பூனையா,
யானையா பூ யானையா,
பாப்பா
தேருவருதே
தந்த
மாறுமா
தேயுதே
மேளதாளமே.
மாடு ஓடுமா
.............
ஒரு ஆணின்
உண்மையான
குணத்தை தண்ணி
அடிக்கும் போதும்,
ஒரு பெண்ணின்
உண்மையான
குணத்தை தண்ணி
பிடிக்கும் போதும்..
............

நாம் வாழும் வரை
நம்மை யாரும்
வெறுக்ககூடாது.
வாழ்ந்து முடிந்த பின்பு
நம்மை யாரும்
மறக்க கூடாது.
அதுதான் நம்
வாழ்வின் வெற்றி..
.......
   யாரை எங்கே வைக்க
 வேண்டும்
 என்பதை முதலில்
 கற்றுக்கொள்ளுங்கள்
இல்லாவிடில்
நீங்கள் இருக்க வேண்டிய
 இடத்தை மாற்றிவிடுவார்கள்
...............
மதிக்காத உறவுகளின்
வீட்டில் மரமாய் நிற்பதை
விட,
உந்தன் சொந்த வீட்டில்
'வரவேற்கும் கால்மிதியாய்
இருப்பதே மேல்..!
...............
அன்பு அது வாழ வைப்பது...
ஆசை என்றும் நம்மை 
வீழச்செய்வது.....

அறிவு என்றும்
 ஆரோக்கியமானதே....
பணம் என்றும்
 நிரந்தரமற்றது.

இரக்கம் என்பது 
அள்ளிக் கொடுக்கும்.
ஈகை என்பது
 கொடுத்து மகிழும்.

உண்மை என்பது ஊக்கம் 
தருவது.
ஊக்கம் என்பது உழைப்பால் 
வருவது.

எளிமை என்பது 
குணத்தால் வருவது....
ஏற்றம் என்றும் உழைப்பால்
 வருவது...

உழைப்பு என்றும் உயர்வை
 தருவது
/////////////
நீரோடைக்கும் பாறைக்கும்
 இடையே நடக்கும் இடைவிடாத 
போராட்டத்தின் இறுதியில்
நீரோடை வெற்றி பெறுகிறது
தனது பலத்தினால் அல்ல,
 தொடர் முயற்சியினால்
உங்களின் தோல்வி எங்கே 
ஒளிந்துள்ளது தெரியுமா
பிரச்சினைகள் வரும்போது அல்ல
பிரச்சினைகளைக் கண்டு
 நீங்கள் பயந்து விலகும் போது
தோல்வியின் அடையாளம் தயக்கம்
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர்
வென்றதில்லை..!!
...............
முகநூல் மூலமாகவும்  ???
நன்மை செய்வோம்.
தீமையை தடுப்போம்.
நம்மால் களத்திலிறங்க
 இயலாவிடின்,
நன்மை செய்வோரையும்
 தீமையை தடுப்போரையும்
நம் எழுத்தின் மூலமாவது
ஆதரிப்போம்.
..............
ஏறுபவர்களுக்கு
கடைசி_படியாகவும்,
இறங்குபவர்களுக்கு
முதற்படிகளாகவும்
அமைந்துவிடுகின்றன,
#சாதனைபடிக்கட்டுக்கள்.
...........
எதிர்த்து நில்... எதிரியை அல்ல
துரோகியை
பணிந்து செல்... பயத்தால் அல்ல
பணிவால்
துணிந்து செல்... வெற்றியை
நோக்கி
வெகு தூரமல்ல
............
"நம்பிக்கை "
நான்
உன்னுடன் இருப்பேன்
கல்லறைக்குள் இருந்தாலும்
'உயிரோடும் சக்தியோடும்
' இருப்பேன்.
நீ எங்கு இருந்தாலும் என்னை
நினைத்தால் நான் உன்னுடன்
இருப்பேன்.
.............
தவறு செய்கின்றார்கள்
என்று வெறுக்க
'ஆரம்பித்தால்..

'வாழ்க்கையில்
'யாரையும் நேசிக்க
முடியாது..!
............
சேறு
என்னும் வார்த்தையை
உருவாக்கி அதில்
கால்
வைத்தால்தான்
சோறு என்னும்
நுட்பமாய் உணர்த்தும்
மொழி
தமிழ்
,,,,,,,,,,,,,,,,,
உலகத்திலேயே
ரொம்ப
விலை உயர்ந்த விஷயம்
"நம்பிக்கை..."

இதை அடைய வருஷங்கள்
ஆகலாம்...
உடைய
சில நொடிகள்
போதும்...
.............
ஒரு டிஎம்சி என்றால் என்ன?

டிஎம்சி என்கிறார்களே 
அப்படியானால் 
அது
"எந்த அளவு தண்ணீர் என்று 
பெரும்பாலானோருக்கு
தெரியாது.

ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது 
ஆயிரம் மில்லியன்
கியூபிக் ஃபீட். அதைத்தான் சுருக்கி 
டிஎம்சி என்கிறார்கள்.

தெளிவாக
புரியும்படி சொன்னால்
 100 கோடி கன அடி நீர்.
ஒரு கன அடி நீர் என்பது
 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு
2830 கோடி லிட்டர். அதாவது 
ஒரு டிஎம்சி தண்ணீரை
பாட்டிலில் அடைத்
து லிட்டர் 20 ரூபாய்க்கு 
விற்றால் 56
ஆயிரத்து 600 கோடி ரூபாயை 
தேற்றிவிடலாம்.

ஒரு டிஎம்
சியை வைத்து சென்னை 
மாநகருக்கு
34 நாட்கள் குடிநீர்
விநியோகம் செய்யலாம்.

இவ்வளவு
தண்ணீரை 12 ஆயிரம்
லிட்டர் கொள்ளளவு கொண்ட 
லாரிகளில் அடிக்க சுமார் 24
லட்சம் லாரிகள் தேவைப்படும்.
 இப்போது புரிகிறதா ஒரு
டிஎம்சி தண்ணீர் என்றால்
 எவ்வளவு என்று?
...........
தன்னுடைய
தவறுகளிலிருந்து
பாடம் கற்றுக்
'கொள்பவன் புத்திசாலி;

அடுத்தவர்
தவறுகளிலிருந்து
பாடம் கற்றுக்
கொள்பவன் அதிபுத்திசாலி..
...........
வாழ்க்கையை
வளைக்கப் பார்;
முடியாவிட்டால்

வாழ்க்கைக் கேற்ப
உன்னை
வளைக்கப் பார்!
..............
"மகிழ்ச்சி "
வேண்டுமா
என்னிடம் வா !!!
" பணம் "

"அமைதி "
வேண்டுமா
என்னிடம் வா !!!
"மனம் "
..........
"சுருக் "என தைப்பது
முள் மட்டுமல்ல
சொல்லும் தான்
சில நேரங்களில்..!
.............
உலகில் தைரியசாலி
 யார் தெரியுமா?
வெறும் 10 நிமிடம் பெண் 
பார்த்து சென்ற
'ஒருவனை பிடித்திருக்கிறது
 என்று,
சொல்லி வாழ்க்கையையே 
அவனிடம்
' ஒப்படைக்கத் தயாராகும்
''பெண்'
.................
வாய்ப்புகள் உங்கள் முன் 
கொட்டிக்கிடக்கிறது ; 
அதை பயன்படுத்த தயாரா 
என்பதில் தான் உங்கள் 
வெற்றி ஒளிந்திருக்கிறது.
..............
கடவுள் உனக்கு
'கஷ்டங்கள் தரும்
'போது வருந்தாதே...
'அவர் உனக்கு
'கஷ்டங்கள் தருவது
'உன்னை சோதிக்க
'அல்ல உன்னை சுற்றி
' எத்தனை போலி
உறவுகள்
' உள்ளன என்று
காட்டத்தான்..
...............
தாய்க்கு பின்
தாரம்.
ஆனால்
தந்தைக்கு பின்
'தந்தை மட்டுமே.
அந்த இடத்தை
யாராலும் நிரப்ப
முடியாது.
அவர்க்கு நிகர்
அவரே.
............
தேனீக்கள்
தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் 
உலகின் சிறந்த உணவுப் 
"பதப்படுத்தும் தொழில்
நுட்பம்"
.............
ஜாதக நேரம்
உன் செல்வாக்கு உயர்ந்திட்டால்
 செவ்வாய் திசை...
உனக்கு நல்புத்தி வந்துவிட்டால்
புதன் திசை...
நிலையான முயற்சி செய்தால்
சூரிய திசை...
............
நீங்கள் நன்றாக
 வாழ என் 
 கடவுளை வணங்குங்கள்
 என்று கூறும்
 மத போதகர்களும் சரி

எதுவுமே நிலையில்லை 
என்று வேதாந்தம் பேசும்
 சித்தர்களும் சரி
இல்லை இதையெல்லாம் 
நான்தான் படைத்தேன் என்று 
சொல்லும் கடவுளும் 
அவன் அனுப்பிய தூதுவர்களும் சரி
என்னைக்காவது
 மூன்று வேளையும் 
மூச்சு முட்ட உண்ணும் உணவை  
வயக்காட்டில் இறங்கி விவசாயம் 
செய்துள்ளார்களா?
இல்லை விவசாயம் செய்யுங்கள்! 
உங்கள் வாழ்க்கை உயரும் என்று 
சொல்லி கொடுத்தாவது உள்ளார்களா?
யாரோ உழைத்த உணவை 
மூச்சி முட்ட
 தின்றுவிட்டு பேசுகிற பேச்சை பாருங்க 
எம்புட்டு எகதாளமுன்னு!
 எல்லாத்தையும் 
அவன் பாத்துகிறானாம் மொதல்ல
 சோறு போடுற விவசாயத்த
 பாக்கசொல்லுங்கடா....
--சுபாஷ்.
...........
ஆண் இல்லாமல்
'ஒரு பெண்ணால் வாழ முடியும்,
'ஏனெனில் பெண்ணுக்கு
தன்னம்பிக்கை அதிகம்.

பெண் இல்லாமல்
'ஆண் வாழவே முடியாது,
ஏனெனில் ஆணின்
'தன்னம்பிக்கையே 
பெண் தான்..!!
............
முயற்சி ஒரு மந்திரம்
மூன்று பார்ப்பது
தன் வாழ்க்கை
தந்திரம்
............
Overthinking
is the biggest
cause of
unhappiness.
..........
'மற்றவரின் மனதை
நோகடித்து விடாமல்
பார்த்து
பார்த்து வாழ்பவர்கள்
தான்.
அவ்வப்போது
மற்றவர்களால்
மனம் நோகடிக்கப்
படுகிறார்கள்....
..............
காகம் தலையில் எச்சம்
இட்டதற்காக எரிச்சல்
அடையாதீர்.
எருமைக்கு பறக்கும் சக்தி
கொடுக்காத
 கடவுளுக்கு நன்றி
சொல்லுங்க.
இப்படித்தான் வாழ்க்கைய
பாசிட்டிவா எடுத்துக்கனும்.
.............
யோசி==== சிந்தி
ஒரே மொட்டின் தோல் தான்
,பறை கோவிலுக்கு வெளியே,
தவில்
 கோவிலுக்கு உள்ளே.!
இதுலஎங்கே தீட்டு ??
......................................
ஒருவரது
பணத்தை கூட
பயன்படுத்திக்கொள்ளுங்கள்...
தீர்ந்தால் மீண்டும் உழைத்து
சேர்த்து கொள்வான்...
ஆனால்
ஒருவரது பலவீனத்தை மட்டும்
பயன்படுத்திக்கொள்ளாதீர்கள்..
தெரிந்தால் உடைந்து விழுந்து
விடுவான்...
.................
ஒருவர் மீது நிரந்தரமாய்க்
கோபத்தில் இருந்து விட
முடிவதில்லை!
என்பது தான் நம்ம
பலமும்
பலவினமும்
............
என்ன
வாழ்க்கைடா இது
என்று
நினைப்பதை விட
இந்த
வாழ்க்கைக்கு
என்னடா குறை
என்று எண்ணி
வாழுங்கள்...
வெற்றி நிச்சயம்...!!
.................
சோதனைக் காலத்தில்
பொறுமையாய் இரு
'மேகங்கள் மூடிக்கொண்டால்
சூரியன் கூட பிரகாசிக்க
முடியாது
நீயும் நானும் எம்மாத்திரம்
...........
கடலில்
இருக்கும் அத்தனை நீரும்
ஒன்று சேர்ந்தால்
 கூட ஒரு கப்பலை
மூழ்கடிக்க முடியாது

கப்பலுக்குள்
புகுந்தால் மட்டுமே 
அது சாத்தியம்.

"வாழ்வின்
எந்த பிரச்சனையும்
உங்களை பாதிக்கவே
 முடியாது
நீங்கள்
அனுமதித்தால் தவிர"
.............
கடிகாரம்
வெறும் நேரத்தை மட்டுமே
காட்டுகிறது

மனிதர்கள்
தான் கெட்ட நேரம்
நல்லநேரம்
ராகுகாலம்
என
தனிதனியாக பிரித்து 
பார்கிறார்கள
..............
இந்த உலகத்திற்கும்
மனிதனுக்கும் உள்ள 
ஒரே தொடர்பு
'உள்ளே இழுக்கும் மூச்சுக்
காற்றும் வெளியே 
விடும் சுவாசம்
' மட்டும் தான்
அது நின்று விட்டால்
 உலகிற்கும்
நமக்கும் எந்தத் தொடர்பும்
இல்லை!!!
............
அடைகாத்து
உயிர் கொடுத்த
கோழியால்..
தன்னை
காத்துக்கொள்ள
முடியவில்லை
மனிதனிடம்..
.............
நீ
உனக்கென்று
ஒரு தனி
#அடையாளத்தை
ஏற்படுத்திக்கொள்

அது நீ
இருக்கும்போதைவிட,
இல்லாதபோது
#வரலாறு
சொல்லும்
நீ இருந்தாய் என்று.
.............
விழுந்துவிட்டோம் என்று
கண்ணீர் சிந்துவதைவிட..
எழுந்து விட்டேன் என்று
புன்னகை செய்.
...................
நீ விழுந்த போதெல்லாம்
தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை;

மனம் உடையும் போதெல்லாம்
தட்டிக் கொடுக்கும் இந்தக் கை;

தனியே நீ அழும்
 போதெல்லாம்
உன் கண்ணீரைத் துடைக்கும்
 இந்தக் கை;
-அது வேறு யார் கையும் அல்ல,
உன்னுள் உள்ள
உனது
தன்னம்பிக்கை.
...........
வாழ்க்கை தத்துவம்
நம் சட்டையின் முதல்
பட்டனை தவறாக
போட்டுவிட்டால். பின்
வரும் எல்லா பட்டன்களும்
தவறாகவே அமையும்!”...
..............
டை கட்டி வேலை செய்யும்
படிப்பாளியை விட...
எவருக்கும்
கை கட்டாமல் வேலை
செய்யும் விவசாயிகள்
என்றும் உயர்ந்தவர்கள்...
............
எத்தனை சொந்தங்கள்
இருந்தாலும்,
ஒரு ஆணுக்கு மனைவியும்.....
ஒரு பெண்ணுக்கு கணவனும்...
'போல ஒரு இணையான
சொந்தமில்லை
விழதுகள் மரத்தை
 தாங்கலாம்..
' வேர் மட்டுமே அதை
 வாழவைக்கும்
..............
உங்களுக்கு
மதிப்பில்லை என்று
நீங்கள் உணரும்
'இடங்களில் மெளனமாக
'இருக்க பழகுங்கள்,
காலப்போக்கில் உங்கள்
மெளனம் அதற்கான
மதிப்பை தரும்!
.................
வன்முறை மோசமானது
தான்.
ஆனால் அடிமைத்தனம்
வன்முறையை காட்டிலும்
மோசமானது
நேதாஜி
.................
ஒரு மனிதனுக்கு 
முப்பது வயதில் தனது
மனைவியின் இளமை 
ததும்பும் உடல்
அழகு தெரியும்
. நாற்பது வயதில்
அவளது தூய அன்பு
 உள்ளம் புரியும்.
ஐம்பது வயதில் 
அவனுக்கு அவளது
அருமை புலனாகும்.
 அறுபது வயதில்
அவள் இல்லாமல்
 தான் இல்லை என்ற
முடிவுக்கு அவன் 
வருவான். எழுபது
வயதில் அவள் தாயாக,
 அவன் சேய்
ஆவான். எழுபது 
வயதுக்கு மேலேயும்
இருவரும் வாழ்வார்கள்
 என்றால்,
மனைவி தெய்வம்
 ஆவாள்; கணவன்
பக்தனாக ஆவான்.
..............
கிடைக்காததை
துரத்துவதும்,
கிடைத்ததை
மதிக்காததும், 
தான்
வாழ்க்கை.
..............
ஆற்று நீர்
வாதம் போக்கும்.
அருவி நீர்
பித்தம் போக்கும்.
சோற்று நீர்
இரண்டையும் போக்கும்.
.............
ஓர் ஆணின் வாழ்க்கையில்
'முதற் சொந்தம் தாய்
இறுதிச் சொந்தம் தாரம்.
உடன் பிறப்புகள், 
மாமன் மைத்துனர்கள்
ஏனைய உறவுகள்
தாயினால் வருகின்றன;
'பிள்ளைகள், மருமகப்
 பிள்ளைகள்,
பேரன் பேத்திகள்
தாரத்தினால் வருகின்றன.
இருவரும் இல்லாவிட்டால்
ஆண்
ஆணி வேரற்ற மரம்!
கவிஞர் ரௌத்திரன்
...........
அத்தனை பாலியல்
தொந்தரவுகளையும்
தாண்டி பெண்கள் 
வெளியில்
வரக்காரணம்,
 பாதுகாப்பாய் பல
ஆண்கள்
இருக்கிறார்கள் என்ற
நம்பிக்கையில் தான்...!
,,.............
#யோசிக்க #சிந்திக்க

இந்தி திணிப்பு
விஷயத்தில்
இரண்டே இரண்டு 
முடிவுகள் தான் கிடைக்கும்.

1) மத்திய அரசு தனது இந்தி திணிப்பில்
 வெற்றி பெற்றுவிட்டதென்றால்
 இந்தி ஒரு கட்டத்தில் அதிகாரபூர்வ
 தேசிய மொழி ஆகும்.

25% இந்திய மக்கள், அதாவது
 இந்தி பேசும் மக்கள் வெற்றி 
பெறுவார்கள்.  அதை மீதி 75% மக்கள்
 கொஞ்ச காலம் 
ஆரம்பத்தில் சகித்துக்கொள்வார்கள்

பிறகு இந்தியிலே நடக்கும்
 அரசுத் தேர்வுகள் எல்லாவற்றிலும்
 இந்தியைத் தாய்மொழியாகக் 
கொண்ட மக்கள் முன்னிலையிலும் 
மற்றவர்கள் பின் தங்கியும் இருப்பார்கள்.

என்னதான் எல்லோரும்
 முக்கி முக்கி இந்தி படித்தாலும், 
தாலாட்டு முதல் இந்தியிலேயே 
கேட்டு வளரும் ஒரு குழந்தைக்கும்,
 இந்தியை
ஒரு பாடமாக மட்டுமே படித்து
 வளரும் குழந்தைக்கும் எப்படி
 ஒரே மாதிரியான 
மொழியாளுமை இருக்க முடியும்?  

ஆக, இந்தியை தாய்மொழியாகக் 
கொள்ளாத மக்கள் கல்வி,
 வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் 
பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்.

மக்களின் கோபம்
 ஒட்டுமொத்தமாக இந்தியா 
என்ற
போலி கட்டுமானத்தின் 
மீது திரும்பும்,

இறையாண்மை, வேற்றுமையில் 
ஒற்றுமை போன்ற ஏமாற்று கோசங்கள்
 எல்லாம் தவிடுபொடியாகி 
இந்தியா பல நாடுகளாகச் சிதறும்.
பெரும்பான்மை
யினரின் மொழியை மற்றவர்கள் 
மீது திணித்த எல்லா நாடுகளுக்குமே
 இந்த கதிதான் ஏற்பட்டிருக்கிறது
 என்பதுதான் வரலாறு!
ரஷ்யா உட்பட!  

முதலில் இந்தி திணிப்பை 
முழுமனதாக முன் நின்று நடத்திய
 ராஜாஜி,
பின்நாட்களில் பல்டி அடித்து 
இந்தி திணிப்பை
எதிர்த்தது இதைப் புரிந்து
கொண்டபின் தான்!

2) மத்திய அரசின் இந்தி திணிப்பை 
எதிர்ப்பதில் 75% இந்திய மக்கள், 
அதாவது இந்தியை தாய்மொழியாகக்
 கொள்ளாத மக்கள் வெற்றி பெற்று, 
அட்டவணை 8ல் உள்ள மொழிகள் 
எல்லாமே அதிகாரபூர்வ மொழிகள்
 ஆகிவிட்டால்

இந்தியா
என்ற இந்த கட்டுமானம் 
இன்னும் பல ஆண்டுகள் தாங்கும். 
 இந்திய இறையாண்மை காக்கப்படும்.

ஆக முடிவு தேசியவாதிகளின்
 கையில்தான் இருக்கிறது.  

இந்தியை திணித்து இந்தியாவை
இழக்கப் போகிறார்களா?  
எல்லா மொழிகளுக்கும் 
சம உரிமை கொடுத்து இந்தியாவைக் 
காப்பாற்றப் போகிறார்களா?   
அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்! 
 இறுதி வெற்றி எப்படியோ
 நமக்குதான். #StopHindiImperialism
.............
உலகத்திலேயே ரொம்ப
விலை உயர்ந்த விஷயம்
நம்பிக்கை..
இதை அடைய
பல ஆண்டுகள் ஆகலாம்.
ஆனால்.. உடைய
சில நொடிகள் போதும்...!
.............
தஞ்சை பெரியகோவில்
கட்டுமானமும்,
தமிழ்ப்பேரரசர் இராசராசசோழனின்
தமிழ்பற்றும்:

கோபுர உயரம் 216 அடி தமிழில்
உயிர்மெய் எழுத்துக்கள் 216;
 சிவலிங்க
உயரம் 12 அடி தமிழில் உயிர்
எழுத்துக்கள் 12; 
சிவலிங்க பீடம் 18 அடி
தமிழில் மெய் எழுத்துக்கள் 18;
சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே
உள்ள தூரம் 247 அடி
 ;தமிழில் ஆயுத
எழுத்தையும் சேர்த்து மொத்த
எழுத்துக்கள் 247;
 இப்படி ஒரு
மாமனிதா பிறந்த தமிழ்
 இனத்தில் நான்
பிறக்க எனன தவம் செய்தோம்!
............
அடைகாத்து
உயிர் கொடுத்த
கோழியால்..
தன்னை
காத்துக்கொள்ள
முடியவில்லை
மனிதனிடம்..
...........
இரு #கை இருக்கும்போது
 வாழ்'#கை'யை வெறுக்காதே,

இரு #கால்கள் இருக்கும்போது
ஒரு'#காலு'ம் முடியாது
 என பேசாதே.

நம்பிக்'#கை'யோடு வாழ்ந்துபார்,

எக்'#காலு'ம் நீ தோற்கமாட்டாய்..
.........
" பிடித்த எதையும் 
அளவோடு நேசி
  அது நாளை பிடிக்காமல் 
போகலாம்...!
" பிடிக்காத எதையும்
 அளவோடு வெறு
  நாளை அது 
பிடித்ததாகலாம்...!
that's life....
............
கற்றுக்
கொள்வதில்
கேவலம்
பார்க்காதீர்கள்...
...........
உன்னை நீயே
சரி செய்துகொள்...
உலகம் தானாக 
சரியாகிவிடும்....
........
ஹிட்லரையும் சாந்தப்
 படுத்தலாம்
புத்தரையும் சண்டைக்கு 
இழுக்கலாம்
ஒரு பெண் நினைத்தால்!
.........
Femaleல் Male இருக்கு
Womanல் Man இருக்கு
Sheல் He இருக்கு
அடடா....
#Mrsல் Mr -ம் இருக்கார்
#ஆணும்_பெண்ணும்_
சேர்ந்ததே #வாழ்க்கை
.......
#தொலை நோக்கு பார்வை 
என்பது யாதெனின்,
தூரத்தில் டிராபிக் போலீஸ்
 பிடிப்பதை அறிந்து,
யூ டேர்ன் எடுத்து மாற்று
 #பாதையில் செல்வதுதான்
 இப்பாேதைய நிலை
............
எமது நிழலின்
உயரத்தை கூட
எம்மைச்சுற்றி
உள்ள ஒளியே
முடிவு செய்கிறது
............
நடுத்தெருவில் நிற்கும்
நிலை வந்தாலும்
யாருக்கும் தொந்தரவின்றி
ஓரமாய் நில்லுங்கள்...
............
"அ" வுக்கு அடுத்து
"ஆ" வருவதேன்?
அரசனும் 
ஆண்டியாகலாம்
என்பதை அறிந்திட

"இ" வுக்கு அடுத்து
"ஈ" வருவதேன்?
இருப்பவன் ஈய 
வேண்டும்
என இயம்பிட

"உ" வுக்கு அடுத்து
"ஊ" வருவதேன்?
உழைப்பே ஊக்கம் என
உணர்த்திட

"எ" வுக்கு அடுத்து
"ஏ" வருவதேன்?
எதையும் ஏன் என்று
சிந்தித்து பார்க்க

"ஐ" மட்டும் ஏதோடும்
சேராமல் தனித்து
இருப்பதேன்?

அதற்கு நான் ( i )
என்ற அகம்பாவம்
அதிகம் உண்டு.

"ஒ" வுக்கு அடுத்து
"ஓ" வருவதேன்?
ஒற்றுமையே ஓங்கும்
 என்பதை உணர்த்திட.
எனவே
நான் தான் என்கிற
குணம், ஒரு மனிதனை 
தனிமைப்படுத்தி, 
ஒருபெரிய 
பள்ளத்தில் தள்ளி விடும்.
 நம் வரலாற்றில் 
அடக்கத்தால் 
சாதித்தவர்கள் 
ஏராளம்! 
அகம்பாவத்தால் 
அழிந்தவர்கள்
ஏராளம்! ஏராளம்!
//////////////////////
 வீழ்ந்தாலும்
எழுந்துவிடலாம்
என எனக்கிருக்கும்
நம்பிக்கை அதிகம்!
முயன்று பார்!..
.............
எதிர்பார்ப்பதைவிட
எதிர்கொள்வதை
கற்றுக்கொள்ளுங்கள்..
இங்கு எதிர்பார்க்கும்
'வாழ்க்கை கிடைப்பதில்லை..
' எதிர்கொள்ளும்
வாழ்க்கையே கிடைக்கிறது..!
..............
கருவறையில் இருந்து
இறங்கி
கல்லரையை நோக்கி
நடந்து
செல்லும் தூரம் தான்
'வாழ்க்கை
............
ஒடுவதாக இருந்தால்
துரத்திக்கொண்டு ஓடுங்கள்
நிற்பதாக இருந்தால் எதிர்த்து
நில்லுங்கள்
............
என்ன நடந்தாலும், 
எதை இழந்தாலும்
சோர்ந்துபோக மாட்டேன்.
காரணம், நான் 
100 வெற்றிகளைப்
பார்த்தவன் அல்ல;
1000 தோல்விகளைப்
 பார்த்தவன்.
............
✍அழகான வரிகள்....
💐💐💐💐💐💐💐💐💐💐
வாழ்க்கை என்பது நீ சாகும் 
வரை அல்ல.. 
மற்றவர்களின் மனதில் நீ 
வாழும் வரை..
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நாம் தேவையில்லை என்று
 சிலர் நம்மை நினைக்க துவங்கும் 
முன் விலகி நிற்க கற்றுகொள்வது 
சிறந்தது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஆசை படுவதை மறந்து விடு.. 
ஆனால் ஆசைப்பட்டதை 
மறந்து விடாதே..!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மன நிறைவு என்பது 
இயற்கையாக நம்மிடம்
 உள்ள செல்வம்.. 
ஆடம்பரம் என்பது நாம் 
தேடி கொள்ளும் வறுமை..
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
சில நேரங்களில் தனிமை கடினம்..
 சில நேரங்களில் தனிமை தான் 
இனிமையான தருணம்!..
🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾
மரணத்தை பற்றி கவலை படாதே..
 நீ இருக்கும்வரை
 அது வரப்போவதில்லை.. 
அது வரும்போது நீ 
இருக்கபோவதில்லை..
🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃
புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.
. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. 
வெற்றி நிச்சயம்!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
வாழ்க்கை உன்னை எதிர்பாராத
 இடங்களுக்கு கூட்டிக்கொண்டு
 செல்லும்..
 அன்புதான் உன்னை 
வீட்டுக்கு அழைத்து வரும்!
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
அறிவுரை தேவைப் படும் 
போதுதான் ஆணவம்
 கண்ணை மறைக்கும்..!
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
நீ சிரித்து பார்.. உன் முகம்
 உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க 
வைத்து பார்.
. உன் முகம் 
எல்லோருக்கும் பிடிக்கும்..!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁