நவம்பர் 4:
கணித மேதை சகுந்தலா தேவி பிறந்த தினம்
இவரின் சாதனைகள்:
1977ல் 188,132,517 என்ற எண்ணின் கன மூலத்தை வேகமாக கணக்கிடுவதில் கணினியை தோற்கடித்தார். அதே ஆண்டில், தெற்கு மெத்தடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் அவர் ஒரு 201 இலக்க எண்ணின் 23வது மூலத்தை 50 நொடிகளில் 546,372,891 கணக்கிட்டார். ஆனால் அதனை சரிபார்க்கU.S. Bureau of Standards யுனிவாக் 1101 என்ற கணினியில் சிறப்பு நிரல் ஒன்றை நிறுவியது குறிபிடத்தக்க விஷயமாகும்.
ஜூன் 18, 1980ல் இம்பீரியல் கல்லூரி, லண்டன் கணினி துறை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க ஐக்கிய எண்கள் 7,686,369,774,870 × 2,465,099,745,779 லை பெருக்கி சரியாக 28 வினாடிகளில் 18.947.668.177.995.426.462.773.730 பதில் அளித்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1977ல் அவர் ஒரு 201 இலக்க எண்ணின் 23வது மூலத்தை கணக்கிட்டார்.
இதை யூனிவாக்-1108 என்ற கணினியை விட 12 வினாடிகள் விரைவாக செய்து முடித்தார்.
No comments:
Post a Comment