Thursday, September 1, 2016

கவர்ந்த வாசகங்கள்.....

என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*


பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.

✳உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

✳நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.


✳உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.


✳விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.


✳தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.


✳விவாதம் செய்யுங்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.


✳விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்


✳சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.


✳செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.


✳எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்

எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும்
 பாருங்கள். 

✳நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.
 

✳தானாய்த்தான் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.
*யாரோடும் பகையில்லாமல் 
புன்னகித்து வாழுங்கள்...

No comments:

Post a Comment