பாச மகன்
உயிரை நினைத்து நீ அழுகிறாய் ! என்று !
உயிரை நினைத்து நீ அழுகிறாய் ! என்று !
மெயிலில் பார்த்து நானும் அழுதேன் !
என்னை பார்க்கத்தான் அழுகிறாய் ! என்று !
எனக்கு தெரியாத ! அம்மா !
ஆஸ்திரலியாவில் இருந்தாலும் !
108 -ஆக ஓடி வருவேன் ! அம்மா !
கடைசி யில் வராவிட்டாலும் ,கல்லறைக்கு வருவேன் !
கண்ணீரை காணிக்கை ஆக்குவேன்! கலங்காதே !அம்மா
+++++++++++++++++++++++
உள்ள(த்)தை சொல்லம்மா !!
ஆஸ்திக்கு மகனென்று வளர்த்து !
அயல் நாட்டுக்கு அனுப்பி வைத்தாய் !
ஆஸ்தியோடு வாழ்கிறான் அமெரிக்காவில் !
ஆசைக்கு மகளென்று வளர்த்து !
அடுத்தவர்க்கு தாரை வார்த்து கொடுத்தாய் !
தள்ளாடுகிற உன்னை அஸ்திவாரமாக !
தாங்கி பிடிப்பது யாரம்மா !!
உன் மகள் அல்லவா!சொல்லம்மா !
மகளும் ஆஸ்திதான் எனறு இப்போதாவது!
உள்ள(த்)தை சொல்லம்மா !
ஊர் அறியட்டும் !!!
*******************************