Tuesday, October 1, 2024

சிந்திக்க - 2024

அமைதியா ருக்கும் 

மனிதனிடம் மொத்த

#பிரபஞ்சமும் அடங்கிவிடும்.

...........

நீ எதற்கு அதிகம்

பயப்படுகிறாயோ

அதையே எதிர்த்து நில்.

......

 சுயநலம் என்பது

 மிகச்சிறிய உலகம். 

    அதில் ஒரே ஒரு 

மனிதன்தான்  வாழ்கிறான்.

 **********

பெண் என்பவள் #பிரபஞ்ச சக்தி! அதை ஆக்க சக்தியாக

ஆக்குவதும் அழிவு சக்தியாக

மாற்றுவதும் பெற்றவர்கள்

கையில்தான் உள்ளது!

...........

எத்தனையோ கவிதைகள்,

புத்தகங்கள் இலக்கியங்கள்

#படித்திருக்கிறேன்.... ஆனால் நீ அலை பேசியில்

சொல்லும் "ம்" என்ற வார்த்தைக்கு

ஈடான எந்த வார்த்தையும்

#அகராதியில் இல்லை.

..........

 என் கண்ணே..என்றேன் 

ஓரகண்ணால்  பார்த்தாள் 

பாதி உயிர் போய்விட்டது 

     உதட்டில் சிரித்தால்  பாதியில்

பாதிஉயிர் ..போய்விட்டது 

   கொஞ்ச உயிரும்  facebookil  

அவள்  ஜோடியா இருப்பதை

பார்த்த  போது போய்விட்டது 

     எங்கிருந்தாலும் வாழ்க ..

***************** 

சுதந்திர தினத்திற்கும் குடியரசு 

தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் 

உள்ள வேறுபாடுகள்.......*

*#முதல் வித்தியாசம்......*

பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி 

 ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே

 கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள

 கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் 

அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக

 செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு "கொடியேற்றம்" 

 அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது.,


இருபத்து ஆறு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று

கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். 

அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி

  திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் 

 இதை கொடியை பறக்கவிடுதல்

  அதாவது flag unfurling என்பார்கள்..

,.............

வார்த்தைகள் பலம் 

மிகுந்த ஆயுதம் தாக்குவதற்கு

பயன்படுத்தாதே 

தற்காத்துக் கொள்வதற்கு

மட்டுமே பயன்படுத்து.

 *************

 அறியாமை தவறல்ல 

அறிந்துகொள்ள முயலாமை

முற்றிலும் தவறு...!

************************

மெளனமாக இருப்பது மிகவும் நல்லது. 

அது ஒரு விரதம் தான்._

ஆனால் வாயை மட்டும் 

மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து

 கொண்டிருக்குமானால் 

அது மெளனமாகாது. 

அதானால் எந்தப் பயனும் இல்லை.

****************** 

நீ உறங்கிக் கொண்டு இருந்தாலும் 

உனக்கு  வருமானம் வரக்கூடிய 

 வாய்ப்பை  நீ ஏற்படுத்திக் 

கொள்ளாவிட்டால்   சாகும் வரை

 நீ உழைத்துக்கொண்டே

 இருக்க வேண்டும்..!!?

********************* 

மே, பதற்றப்படாதே!

 மெல்ல மெல்லத்தான் 

எல்லாம் நடக்கும்.  

   தோட்டக்காரன் - நூறு குடம் நீர் 

ஊற்றினாலும் பருவம் வந்தால்

 தான் பழம் பழுக்கும்...!!

,..............

நேரமும் வாய்ப்பும் எல்லோருக்கும்

 எப்பொழுதும் இருந்து கொண்டே 

தான் இருக்கின்றன...

      முயற்சி எடுப்பவர்கள்

 மட்டுமே தாங்கள் நினைத்ததை 

அடைகின்றனர்....

////////////

நம் நாட்டுச் சித்தரிடம் ,,,,,

இந்த உலகில் எந்தெந்த உயிரினங்கள்

  குட்டி போடுகின்றன? 

எந்தெந்த உயிரினங்கள்

 முட்டை இடுகின்றன? - இதுதான் கேள்வி. 


இந்தக் கேள்விக்கு நிச்சயமாக அவரால் 

பதில் சொல்ல முடியாது, 

ஒரு வேளை சொன்னாலும் நீண்ட

 பட்டியலே போட வேண்டியிருக்கும் 

முடிவிருக்காது என்பது அவர்கள் யூகம். 


சித்தன் உடனே

 சிக்கனமாய் இரண்டே இரண்டு 

வரிகளில் பொருத்தமாய், 

பொறுமையாய் பதில் சொன்னார். 


 *காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் 

எல்லாம் குட்டி போடும்,  

காதுகள் வெளியே தெரியாத உயிரினங்கள்

 எல்லாம் முட்டை இடும்...

***************** 

 வாழ்க்கை எதிர்மறைகளைக் கொண்டது.

 பிச்சைக்காரன் அமைதியுடன் 

பாதுகாப்பற்று உறங்குவான்.

     பாதுகாப்புடன் இருப்பான் ஆனால்

 அமைதியாக உறங்க மாட்டான்.

********************** 

ஏழை  அப்பா 

சாக்லெட் கேட்டு அழுதிருந்தால்,

பல் சொத்தை ஆகிடும்னு     சொல்லியிருப்பேன்..

       ஐஸ் கிரீம் கேட்டு அழுதிருந்தால்,

ஜலதோஷம் பிடிச்சிரும்னு   சொல்லியிருப்பேன்..

      இட்லி கேட்டு அழும் குழந்தையிடம்எப்படி

சொல்வேன்..என்னிடம் காசு  இல்லை என்று....?

         ஏழை ..அப்பா

 ************************

நல்லவனாய் இரு.... ஆனால் 

கவனமாய் இரு....

    உலகின் அத்தனை ஏமாற்று 

பேர்வழிகளும் நல்லவர்களைத் 

தான்  தேடுகிறார்கள்..!!!

**************** 

 கடவுள் நம்பிக்கை இல்லாதவரை

 தன்னம்பிக்கைக் காப்பாற்றும்

ஆனால் தன்னம்பிக்கை இல்லாதவரை

 கடவுளாலும் காப்பாற்ற முடியாது

********************** 

பெண் என்பவள்
#பிரபஞ்ச சக்தி!
அதை ஆக்க சக்தியாக ஆக்குவதும் 
அழிவு சக்தியாக மாற்றுவதும்
#பெற்றவர்கள் கையில்தான் உள்ளது!
*************
நாம் விரும்பிய படி எல்லாம்
 வாழ்க்கைசெல்லுவதில்லை
வாழ்க்கைசெல்லும் வழியே
 நாம் சென்று கொண்டுஇருக்கின்றோம்!
**************
40 வயதுக்கு மேல் வாழ்க்கையில்
 #தைரியம் என்பது,
நம் கையில் இருக்கும் #பணத்தை 
பொருத்தே அமைகிறது.
***************

 

 

 





 

Sunday, December 10, 2023

ஊரும் அதன் முன் பெயர்களும்

                                     ஊரும் அதன் முன் பெயர்களும்
 
ஆறுக்காடு - ஆற்காடு
ஏரிக்காடு - ஏற்காடு
ஈரோடை - ஈரோடு
ஒத்தைக்கால் மண்டபம் - உதகமண்டலம் - ஊட்டி
கருவூர் - கரூர்
குன்றூர் - குன்னூர்
குடந்தை - கும்பகோணம்
குளிர் தண்டலை - குளித்தலை
கோவன்புத்தூர் - கோயம்பத்தூர் கோவை
வெற்றிலைக்குன்று - வத்தலக்குண்டு
பொழில் ஆச்சி - பொள்ளாச்சி
புளியங்காடு - திண்டிவனம்
தன்செய்யூர் - தஞ்சாவூர் - தஞ்சை சேரலம் - சேலம்
தகடூர் - தர்மபுரி
திண்டீஸ்வரம் - திண்டுக்கல்
திருஆவினன்குடி - பழனி
திருச்சீரலைவாய் - திருச்செந்தூர்
தில்லை - சிதம்பரம்
நாலுக்கோட்டை - சிவகங்கை
மதிரை - மதுரை
ஆரைக்கல் - நாமக்கல்
புதுகை - புதுக்கோட்டை
புதுவை - பாண்டிச்சேரி
செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு
தர்மபுரம் - தாம்பரம்
செருந்தணிகை - திருத்தணி
உகுநீர்க்கல் - புகைநற்கல் - ஒகேநக்கல்
மதராசப்பட்டினம் - சென்னை
பெரும்புலியூர் - பெரம்பலூர்
************

 

Tuesday, May 2, 2023

சிந்தியுங்கள் ...

             ***********

நல்லவனாய் இரு.... ஆனால்

 கவனமாய் இரு....

     உலகின் அத்தனை ஏமாற்று 

பேர் வழிகளும் நல்லவர்களைத்

 தான்  தேடுகிறார்கள்..!!!

      *********************

தவறு செய்பவர்களை கடவுள் 

தண்டிப்பதாக இருந்தால் ...

     கோவில் பக்கம் மனித

 நடமாட்டமே இருக்காது...!!

******************************

யாரையும் கோமாளியாக 

எண்ணிச் சிரிக்காதே

    வாழ்க்கை சீட்டுக் கட்டைப்போல்

       ஒரு சூதாட்டம்

ராஜா ராணிகளை விட      

     ஜோக்கருக்கே 

மதிப்பு அதிகம்!

/////////////////////

ஒரு ஆண் தன் வாழ்நாளில் 

வெளிப்படுத்தாத உண்மை..!

       தன் மனைவி தான் 

தன்னுடைய பலம் என்று..!

******************* 

நீ கொடுப்பது எதுவாயினும் அதனை

 பலமடங்கு பெரிதாக்குவது 

குணம்….

எனவே நீ அவளுக்கு சிறிய அளவில்

 ஏதாவது தொல்லை கொடுத்தாயானால் 

அவள் உடனே அதையே °டன்° கணக்கில் 

உனக்குத் திருப்பிக்கொடுப்பாள் 

என்பதையும் புரிந்துகொள்....

*********************

1. #இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே

  இருக்கனும் 

2. புரட்டி போட்டாலும் #தோசை 

மாதிரிபொறுமையாஇருக்கனும். 

3. உள்ள ஒன்னும் இல்லாட்டாலும்

#பூரி மாதிரி மகிழ்ச்சியில 

உப்பி இருக்கனும். 

4. ஓட்டை விழுந்திருந்தாலும்

 #வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும். 

5. #உப்புமா மாதிரி அவசரத்துக்கு

 கை கொடுக்கனும். 

6. #பொங்கல் மாதிரி குழைவா பேசனும். 

7. அடிச்சி துவைச்சாலும் #பரோட்டா மாதிரி

  தாக்கு பிடிக்கனும். 

8. #பிரியாணி மாதிரி #பிரபலமா  இருக்கனும்

9. #சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும். 

10. #ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது. 

11 . #நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது.

12. #பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது. 

13. #ஆப்பம் மாதிரி தொப்பையோட

  இருக்க கூடாது. 

14. #புட்டு மாதிரி உள்ளதெல்லாம் 

கொட்ட கூடாது. 

15 . #கேசரி மாதிரி இனிமையா பேசனும். 

16 .#பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும். 

17 .#அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும். 

18 . #அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும். 

19 .#சோறு மாதிரி மனசு நிறைந்து இருக்கனும்.

20 .#புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும். 

21 .#ஐஸ்_கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும். 

22 #டிகிரி_காபி மாதிரி நம்ம வாழ்க்கை

 மணக்கனும். 

23. #ஊறுகாய் மாதிரி காரமா 

கோபப்டக்கூடாது.

24 #உப்பு" மாதிரி தவிர்க்க 

முடியாதவரா இருக்கனும்.. .

   ****************