Monday, March 6, 2023

உயர்தரம் என்றால் என்ன??????

உயர்தரம் என்றால் என்ன??????


நீங்களும் நானும் உணவகம் தொடங்கிய பின்னர்,

அவாள் உயர்தர சைவ உணவகமாகிப் போனார்கள்.


நீங்களும் நானும் படிக்கத் தொடங்கிய பின்னர்

அவாள் உயர்தரக் கல்வி எனப் பேசினார்கள்.


நீங்களும் நானும் அரசியல் பேசத் தொடங்கிய பின்னர்

அவாள் அரசியல் ஒரு சாக்கடை என்றார்கள்.


நீங்களும் நானும் ஊடகங்களில் போய் அமர்ந்த போது,

  விபச்சார ஊடகம் என்றார்கள்.


இசையே இறைவடிவம் என்றவர்கள் 

நீங்களும் நானும் இசைக்கும் போது டப்பாங்குத்து 

எல்லாம் இசையா என்றார்கள்.


நீங்களும் நானும் படம் இயக்கியபோது, 

சினிமாவே கெட்டு போச்சி என முடித்து கொண்டார்கள்.


நீங்களும் நானும் மருத்துவம் படிக்க சென்றபோது,

இவர்கள் எல்லாம் மருத்துவம் படிச்சி என்னாக போகிறது

 என்றார்கள்....நீட் என்று ஒரு கேட்டையும் போட்டார்கள்.


அவாள் மட்டும் ஆசிரியராக இருந்த போது

 மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள். 

நாமும் ஆசிரியராக தேர்வானபோது 

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்றார்கள்.

 

கஷ்டப்பட்டு நாம் நமக்கான சட்டங்களை இயற்றிய 

போது தீர்ப்பு சொல்லும் இடங்களில் அவாள்கள்.....


நீங்களும் நானும் அரசு துறைகளில் வேலையில்

 அமர தொடங்கிய பின்னர் அவர்கள் 

அதை தனியார் துறை தான் சிறந்தது என்பது போல

                          நமது  சிந்தனையை  மாற்றினார்கள்.


இது எதுவுமே புரியாமல் சாதி, மதம், இனம் என நாம்

  சண்டையிடும்போது இவன்களுக்கு 

இதே வேலையாக போயிடுச்சு, எல்லாத்தையும் நாமே

  வைத்து கொள்வோம் என்று மறுபடியும்

 மனுசட்டம் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

இதில் நீங்களும்.. நானும்....நாமும்.... யார்?

அவாள் யார்?

  புரிந்து கொண்டால் நமக்கும் நல்லது..நமது சந்ததிக்கு

ஒரு நல்ல எதிர்கால சொத்தை விட்டு செல்வோம்.

இல்லையேல், நமது இடுப்பு துண்டை கூட அவர்களுக்கு 

உருவி கொடுத்துவிட்டு நாம் அம்மணமாக

 நிற்க வேண்டியதுதான்...



Friday, March 3, 2023

தமிழில் -ஓரெழுத்து சொல் 42

 

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 

இதில் 42 எழுத்துக்கள்

 ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. 

அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும்

 தனியாக பொருள் உண்டு. அவையாவன பின்வருமாறு

அ -----> எட்டு 

ஆ -----> பசு 

இ ----->  அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி

ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி 

உ -----> சிவன் 

ஊ -----> தசை, இறைச்சி 

எ  -----> வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்

ஏ -----> அம்பு 

ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு 

ஒ  -----> ஒழிவு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை 

ஒள -----> பூமி, ஆனந்தம்

கா -----> சோலை, காத்தல் 

கூ -----> பூமி, கூவுதல்

கு  -----> இருள்

கை -----> கரம், உறுப்பு 

கோ -----> அரசன், தலைவன், இறைவன் 

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

சீ -----> இகழ்ச்சி, திருமகள் 

சே -----> எருது, அழிஞ்சில் மரம் 

சோ -----> மதில் 

தா -----> கொடு, கேட்பது 

தீ -----> நெருப்பு 

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு 

தூ -----> வெண்மை, தூய்மை 

தே -----> நாயகன், தெய்வம் 

தை -----> மாதம் 

ஞா  -----> பொருத்து, கட்டு

நா -----> நாக்கு 

நீ -----> நின்னை 

நே -----> அன்பு, நேயம் 

நை -----> வருந்து, நைதல் 

நொ -----> நொண்டி, துன்பம் 

நோ -----> நோவு, வருத்தம் 

நௌ -----> மரக்கலம் 

பா -----> பாட்டு, நிழல், அழகு 

பூ -----> மலர் 

பே -----> மேகம், நுரை, அழகு 

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை 

போ -----> செல் 

ம  ----->  சந்திரன், எமன் 

மா -----> மாமரம், பெரிய, விலங்கு 

மீ -----> ஆகாயம், மேலே, உயரம் 

மு -----> மூப்பு 

மூ -----> மூன்று 

மே -----> மேன்மை, மேல் 

மை -----> அஞ்சனம், கண்மை, இருள் 

மோ -----> முகர்தல், மோதல் 

யா -----> அகலம், மரம் 

வா -----> அழைத்தல் 

வீ -----> பறவை, பூ, அழகு 

வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் 

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல் 

ள  -----> தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம் 

ளு  -----> நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம் 

று  -----> எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

Thursday, March 2, 2023

தமிழ் எண்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள

 தமிழ் எண்களை எளிதில் ஞாபகத்தில்
வைத்துக்கொள்ள