Wednesday, October 19, 2016

மேட்டுர் அணை வரலாறு

மேட்டுர் அணை வரலாறு

நமக்கு தெரிந்ததும் தெரியாததும்;

நமக்கும் நம்தலைமுறைக்கும் சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர்தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார் ராயல்என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ்.

இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டி முடித்துள்ளனர்.

மலைக்க வைக்கும் மாபெரும் திட்டம்.

யாவரும் வியக்கும் மதி நுட்பம்.

மேட்டூர் அணையை இதுவரை இரண்டு முறை மின்னல் தாக்கியது.

இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

தமிழகத்தில் காவிரி கரையோரமாக நிறைய நிலங்களும், விவசாயம் செய்யக்கூடிய ஆட்களும் இருந்தும் போதிய நீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை.

இதைஉணர்ந்த ஆங்கிலேயே அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்து இடத்தை தேடியது.

15 ஆண்டுகள் கழித்து அன்றைய ஆங்கிலேய அரசின் சென்னை மாகாணகவர்னர் ஸ்டான்லி காவிரியின் குறுக்கே அணைக் கட்ட உத்தரவிட்டார்.

இந்த உத்திரவை போட்ட கவர்னர் ஸ்டான்லியின் பெயரால் மேட்டூர் அணை இப்போது ஸ்டான்லி நீர் தேக்கம் என்றும் அழைக்கப்படுகிது.

இந்த அணையில் கடல் போல காட்சியளிக்கும் அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டது.

அணையை கட்டிய பொறியாளர் டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை மேட்டூர் அணையின் சிற்பி அன்றும், இன்றும் புகழப்படுகிறார்.

இனி என்றும்புகழப்படுவார்.

இந்திய அளவிலான பெரிய அணைகளில் ஒன்றான இதன் உச்சநீர் மட்ட அளவாக 120 அடி வரை நீரைத்தேக்கலாம்.

அதன் பிறகு ஓடிவரும் நீர் வரத்து யாவும் உபரியாக அணைக்கட்டில் நிற்காமல் நிரம்பாமல் தானாகவே வெளியேறிச் செல்லும் அற்புதமான இயற்கையுடன் இணைந்த கட்டுமானப்பணி, எந்தக் காலத்திலும் அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான அமைப்புகளுக்கோ ஒருக்காலும் ஊறுவிளைக்க முடியாத தன்மைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்:

21.8.1934 அணைக் கட்ட ஆன செசலவு 4.80
கோடி.

அணையின் நீளம் 5.300 அடி
அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.
அணையின் உயரம் 214 அடி
அணையின்அகலம் 171 அடி
அணையின் சேமிப்பு
உயரம் 120 அடி
அணையின் நீர்பிடிப்பு
பரப்பளவு 59.25 சசதுர மைல் 2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது.

அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் என மொத்தம்11 காவிரிப்பாசனப் பகுதிமாவட்டங்களுக்கு மேட்டூர் தண்ணீர் போகிறது.

மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அது மட்டுமல்லாமல், மேட்டூர் அணையை நம்பி 4000 மீனவர்கள் குடும்பங்களும் உள்ளன.

மேட்டூர்அணையிலிருந்து வெளியே வரும் காவேரி அதே பெயரில் 106, கிலோமீட்டர் தூரம் செல்கிறது.

இதன் கிளை நதிகளாக கொள்ளிடம், பொன்னியாறு, கல்லணை கால்வாய், வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி என்ற பெயரில் பல நதிகளாக 694 கிலோ மீட்டர்தூரம் செல்கிறது.

இதை தாண்டி, 1904 கிலோ மீட்டர்தூரத்துக்கு வாய்கால் மூலம் பாசன வசதியை கொடுக்கிறது.

இப்படி தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் வகையிலும், பல்வேறு மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தன் மண், மக்கள், உறவு மறந்தும், உணவும் தூக்கமும் துறந்தும் மேட்டூர் அணை என்ற பிரம்மாண்டத்தை வடிவமைத்து கட்டிக் கொடுத்த கர்னல் டபுள்யூ.எம்.எல் லீசை, அணையும் நம் மனசும் நிறைந்துள்ளது 

Monday, October 17, 2016

இந்தியாவின்.... ஏவுகணைகள்

இந்தியாவின்.... ஏவுகணைகள்

உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை - இந்தியாவின் பிரம்மோஸ் (ஒலியை விட 2.5 மடங்கு) 
இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்கு மேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்க முடியவில்லை

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை - பிருத்வி

உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம் - இந்தியயாவின் தேஜஸ்

உலகிலேயே அதிவேக போர்விமானம் - சுகோய் 30 ரக இந்திய விமானம்

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது - இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை

உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை - அக்ணி 5

உலகிலேயே GPS தொழில்நுட்பத்துடன் கடலுக்கடியில் நீர்மூழ்கி கப்பலயே சாம்பலாக்கும் ஏவுகணை - இந்தியாவில் K4 ஏவுகணை

உலகிலேயே ராடாரால் கண்டுபிடிக்க முடியாத தரை ஒட்டி சென்று 1000 கி.மீ அப்பால் உள்ள இலக்கை அழிக்கும் ஒரே ஏவுகணை - இந்தியாவின் நிர்பாய்

உலகிலேயே அணு ஆயுதத்தை கொண்டு தாக்கினாலு
இயலாத ஒரே பீரங்கி - அர்ஜுனா டாங்கி.

உலகிலேயே 1 நிமிடத்தில் 20 ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர் இந்தியாவின் பினாகா.

Friday, October 14, 2016

வரலாற்றின் ....தந்தைகள்

*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ்
*2.. புவியலின் தந்தை?* தாலமி
*3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன்
*4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில்
*5..கணிப்பொறியின் தந்தை?*சார்லஸ் பேபேஜ்
*6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ்
*7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*8..பொருளாதாரத்தின் தந்தை?*ஆடம் ஸ்மித்
*9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே
*10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*11..அரசியல் தத்துவத்தின் தந்தை?*பிளேட்டோ
*12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல்
*13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன்
*14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ்
*15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ்
*16..ஹோமியோபதியின் தந்தை?*சாமுவேல் ஹானிமன்
*17..ஆயுர்வேதத்தின் தந்தை?*தன்வந்திரி
*18..சட்டத்துறையின் தந்தை?*ஜெராமி பென்தம்

*19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட்
*20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர்
*21..தொல் உயரியியலின் தந்தை?*சார்லஸ் குவியர்
*22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல்23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக்
*24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட்
*25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர்
*26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன்
*27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர்
*28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன்

*29..தொலைபேசியின் தந்தை?*கிரகாம்ப்பெல்
*30..நகைச்சுவையின் தந்தை?*அறிச்டோபேனஸ்
*31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ
*32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே
*33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா
*34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய்
*35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா
*36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம்
*36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?* வர்க்கீஸ் குரியன்
*37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன்
*38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன்
*39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா
*40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ்41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா

*42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி
*43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
*44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய்
*45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன்
*46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ்
*47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப்
*48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ்
*49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம்
*50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு
*51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு
*52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன்
*53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி
*54..ஜனநாயகத்தின் தந்தை?*பெரிக்ளிஸ்
*55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க்

*56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக்
*57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி
*58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப்*59..மின் அஞ்சலின் தந்தை?*ரே டொமில்சன்
*60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர்
*61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ்
*62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ்
*63..மனோதத்துவத்தின் தந்தை?*சிக்மண்ட் பிரைடு
*64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?*இராபர்ட் ஓவன்
*65..குளோனிங்கின் தந்தை?*இயான் வில்முட்
*66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக்
*67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு
*68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர்
*69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே
*70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?* அவினாசி மகாலிங்கம்