Friday, June 20, 2014

FREEKALL

                                         FREEKALL என்ற சேவை அறிமுகம்


இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால் செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. சாதாரண black & white Nokia போன் போதும்..ஐபோன் (iphone) முதல் சாதாரண சைனா போன் வரை அனைத்திலும் இது வேலை செய்யும்.
 
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444” என்ற Toll Free நம்பருக்கு போன் செய்ய வேண்டும்(இந்திய எண்ணிலிருந்து). இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம் எடுக்கப்படமாட்டாது.
நாம் இந்த நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாக கட் ஆகிவிடும். கட் ஆன அடுத்த நொடியில் ”8067915000” என்ற எண்ணில் இருந்து நமது போனிற்கு (mobile) கால் வரும். அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களது நம்பரை (phone number) dial செய்து அவர்களுடன் இலவசமாக பேசிக் கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவா ? ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம் தான் பெங்களுர் மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..
இப்பொழுதே பயன்படுத்தி பயன் அடையுங்கள்

Thursday, June 19, 2014

cctv கேமரா

                                                               cctv கேமரா
 
Webcamera-வை C.C.T.V. Cameraவாக எளிதில் மாற்ற‍லாம் முற்றிலும் இலவசமாக . . ..
சிலர் தனது வீட்டை அல்லது அலுவலகத்தை கண்காணிக்க நினைப்பார்கள். ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கில் செலவா கும் என நினைத்து வைக்காமலே விட்டு விடுவார்கள். எந்த வித செலவும் இல்லாமல் உங்கள் கணிணியில் உள்ள வெப்கேமரா அல்லது லாப்டாப்பில் உள்ள cameraவை எளிதில் cctv கேமராவாக எளிதல் மாற்றிவிடலாம்.
இதை செய்வதற்கு yawcam என்ற மென்பொருளை நாம் பயன்படுத்தி க் கொள்ளலாம். இதில் மகிழ்ச்சி யான செய்தி என்னவெ னில் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் தான். எனவே எந்த செலவும் நமக்கு இல்லை.
இதில் பல்வேறு வசதிகள் உள்ளது. உதாரணமாக motion detection என்ற வசதிஉள்ளது. எதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசைவு ஏற்பட்டால் உடனே நமக்கு email மூலம் alert செய்யும். நாம் கேமரா வை கண்காணிக்காது இருக்கும்போது வீட்டில் யாராவது புகுந்தால் அதை நமக்குதெரியப்படுத்த இந்த வசதி உதவியாக இருக்கும்.


இன்டர்நெட்மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள்வீட்டை அல்லது கடையை கண்காணித்து
கொள்ளலாம். இதில் கூடுதல் ஒரு வசதி என்னவெனில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுின்றது என யாருக்கும்தெரியாது. எதோ கம்யுட்டர் என்றுதான் அனை வரும் நினைத்துக் கொள்ளவார்கள். இதனால் வீட்டில் கடையில் நடக்கும் உண்மை நிலையை யாருக்கும் தெரியாமல் நாம் கண்காணிக்கலாம்.
இந்த மென்பொருளில் பின் வரும் வசதிகள் இடம் பெற்று ள்ளது.
Yawcam features:
.: Video streaming
.: Image snapshots
.: Built-in webserver
.: Motion detection
.: Ftp-upload
.: Text and image overlays
.: Password protection
.: Online announcements for communities
Scheduler for online time
.: Time lapse movies
.: Run as a Windows service
.: Multi languages
பின் வரும் இணையத்திற்கு சென்று இந்த மென்பொருளை இலவச மாக Download செய்து கொள்ளலாம்.:
http://www.yawcam.com/download.php

Saturday, June 14, 2014

தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பம்

புதிய குடும்பஅட்டை கேட்டு விண்ணபித்து 30 நாள் ஆகியும் கிடைக்க வில்லையா?
இந்த தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பத்தை பயன்படுத்தவும்.
 தகவல் அறியும் உரிமைச் சட்டம் 6(1) இன் கீழ் விண்ணப்பம்

பதிவு தபால் ஒப்புகை அட்டையுடன் தேதி:
விடுநர்,...........

பெறுநர்,
பொது தகவல் அலுவலர்,
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005,
மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம்,
___________ மாவட்டம்,
ஐயா,
பொருள் : புதிய குடும்ப அட்டை கேட்ட எனது விண்ணப்ப தேதி: ________ அதற்கான மனு எண் :____புதிய குடும்ப அட்டை கேட்டு நான் செய்த விண்ணப்பத்தின் மீது நாளதுவரை எனக்கு வழங்கிடவில்லை. இதைப் பற்றியும் இப்பொருள் மீது தங்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - இன் கீழ் தகவல்கள் அளிக்க வேண்டுகிறேன்.
         1) மேற்காணும் எனது விண்ணப்பத்திற்கு எண் அளிக்கப்பட்ட பகிர்மானப் பதிவேட்டின் ; பதிவு செய்யப்பட்ட தன்பதிவேட்டின் ; பதிவு அஞ்சல் பதிவேட்டின் சிறப்புப்பதிவேட்டின் ; சம்பந்தப்பட்ட பக்கத்தின் ஒளிநகல்.
        2) மேற்காணும் எனது விண்ணப்பத்தின் மீது எந்த அலுவலர் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனும் நடைமுறைகளைக் காட்டும் ஆணையின் ஒளிநகல்
         3) மேற்காணும் எனது விண்ணப்பத்தின் மீது விசாரணை செய்த அலுவலர்கள் பெயர் பதவி அலுவலக விலாசம் விசாரணை செய்த தேதி ஆகியத் தகவல்களையும் அவர்களின் நாட்குறிப்பின் அந்த நாட்களின் ஒளிநகல்
         4) புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து எத்தனை நாட்களுக்குள் அளிக்க வேண்டும் , அளிப்பதை எந்த காரணங்களால் நிறுத்தி வைக்கலாம், நிராகரிக்கலாம்; என்று கூறும் அரசு ஆணைகளின் ஒளிநகல்
        5) மேற்காணும் எனது விண்ணப்பத்தினைக் கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அனைத்துப் பக்கங்களின் ஒளிநகலையும் அலுவலகக் குறிப்புக்கட்டுடன் வருவாய் ஆய்வாளரின் தனிபதிவேட்டில் சிறப்பு பதிவேட்டில் எனது விண்ணப்பம் பதியப்பட்டுள்ள பக்கத்தின் ஓளிநகல்
        6) நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் எனக்கு குடும்ப அட்டை அளிக்காமல் இன்று வரை கால தாமதம் செய்யும் அலுவலரின் பெயர், பதவி, விலாசம், அதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளக் காரணம் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்
       7) நான் கோரிய புதிய குடும்ப அட்டை எனக்கு அளிப்பதற்கு தங்கள் அலுவலகத்திற்குத் தடையாக உள்ள காரணங்கள் அதை நியாயப்படுத்தும் அரசு ஆணைகளின் ஒளிநகல்
       8) குடும்ப அட்டை விண்ணப்பங்களை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற எத்தனை தினங்களுக்குள் இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட சுற்றறிக்கையின் ஒளி நகல்
       9) 1.5.2013 முதல் 9.6.2014 வரையிலான தங்கள் அலுவலக “புதிய குடும்ப அட்டை வழங்கல் பதிவேட்டின்” ஒளி நகல்
       10) மாவட்ட , கோட்ட , வட்ட , மண்டல துணை வட்ட ஆட்சியர் மற்றும் பிர்க்க வருவாய் அலுவலர்களின் செல்பேசி மற்றும் முகவரிகளை வழங்கவும்
        குறிப்பு: தகவல் அறியும் உரிமைச் சட்ட பிரிவு 4 இன் படி மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு துறை பொது தகவல் அலுவலர்கள் விவரங்கள் அவர்களின் முகவரிகள், எந்த தகவல்களுக்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் தங்கள் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படாத காரணத்தால் உரிய பொது தகவல் அலுவலர் முகவரி தெரியாத காரணத்தாலும் தங்களுக்கு இந்த மனுவை அனுப்புவதோடு சட்ட பிரிவு 6(3) இன் படி நடவடிக்கை வேண்டுகிறேன்.
இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமாக ரூ.10 க்கான நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இணைப்புகள்:
1) எனது புதிய குடும்ப அட்டை மனு
2) புதிய குடும்ப அட்டை கேட்டும் விண்ணப்பித்த மனுவின் ஒப்புகைச் சீட்டு
3) எனது நீக்கல் சான்று நகல்
                                                                                தங்கள் உண்மையுள்ள,

Friday, June 13, 2014

ஆண்-பெண்-ஏழு பருவங்கள்

பெண்களின் ஏழு பருவங்கள்:-
* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

ஆண்களின் ஏழு பருவங்கள்:-
* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.

Thursday, June 12, 2014

To know..மின்னஞ்சல் சரியானதா


இணையதளத்துக்கான லிங்க் http://www.verifyemailaddress.org/

ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள். அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில், நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும்.

நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா, இல்லை போலியானதா என்ற முடிவு வரும்.

குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால் அது Valid என்றும், இல்லை என்றால் not Valid என்றும் வரும். அதை வைத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.