" கவிதைகள் என்னுடையது "
பாச மகன்
உயிரை நினைத்து நீ அழுகிறாய் ! என்று !
மெயிலில் பார்த்து நானும் அழுதேன் !
என்னை பார்க்கத்தான் அழுகிறாய் ! என்று !
எனக்கு தெரியாத ! அம்மா !
ஆஸ்திரலியாவில் இருந்தாலும் !
108 -ஆக ஓடி வருவேன் ! அம்மா !
கடைசி யில் வராவிட்டாலும் ,கல்லறைக்கு வருவேன் !
கண்ணீரை காணிக்கை ஆக்குவேன்! கலங்காதே !அம்மா
////////////////////////
உள்ள(த்)தை சொல்லம்மா !!
ஆஸ்திக்கு மகனென்று வளர்த்து !
அயல் நாட்டுக்கு அனுப்பி வைத்தாய் !
ஆஸ்தியோடு அவனும் வாழ்கிறான்
அமெரிக்காவில் !
ஆசைக்கு மகளென்று வளர்த்து !
அடுத்தவர்க்கு தாரை வார்த்து கொடுத்தாய் !
தள்ளாடுகிற உன்னை அஸ்திவாரமாக !
தாங்கி பிடிப்பது யாரம்மா !!
உன் மகள் அல்லவா!சொல்லம்மா !
மகளும் ஆஸ்திதான் எனறு இப்போதாவது!
உள்ள(த்)தை சொல்லம்மா !
ஊர் அறியட்டும் !!!
****************************
தமிழர்கள் -காலத்தை வகுத்த விதம்
தமிழர்கள் காலத்தை
வகுத்த விதம் பிரம்மிப்பானது.
தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக்
கொண்டு காலத்தைப் பிரித்தார்கள்.
ஒரு நாளைக்கூட ஆறு சிறு
பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.
1. வைகறை
2. காலை
3. நண்பகல்
4. எற்பாடு
5. மாலை
6. யாமம்
என்று அவற்றை அழைத்தார்கள்.
அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்.
அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள்.
ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.
தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
இந்த குருவியின் பெயர் சுரக்காவ் என்பது,இது நிமிடத்திற்கு ஒருமுறை தன் நிறத்தை மாற்றக்கூடிய அபூர்வ பறவை.இதை படம்பிடிக்க 19 போட்டோகிராபர்கள் 62 நாள் காத்திருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சி,இதற்கான சிலவு 25 லட்சமாம்!இறைவனின் படைப்பில்
்்்்்்்்்
கின்னஸ் உருவானது
எப்படி?
உலகளவில் அதிகம் விற்பனையாகியுள்ள புத்தகம்,
கின்னஸ் புத்தகம். இதுவே ஒரு கின்னஸ் சாதனை தானே!
இந்த புத்தகம் உருவானது எப்படி தெரியுமா?
உண்மையில் கின்னஸ் என்பது
அயர்லாந்தை சேர்ந்த ஒரு பீர் கம்பெனி.
1759 முதல் இயங்கிவரும் இந்த பாரம்பரிய
நிறுவனத்தில் 1946ல் சர் ஹக் பீவர் என்பவர் நிர்வாக
இயக்குனராக பொறுப்பேற்றார். பீவர் ஒருநாள் வேட்டைக்கு சென்றார். காட்டில் ‘கோல்டன் ப்ளோவர்’ என்ற பறவையை சுட்டார். அது துப்பாக்கி குண்டு வேகத்தையும் மிஞ்சி பறந்து தப்பியது.
அப்படியென்றால் ஐரோப்பாவிலேயே மிகவேகமாக
செயலாற்றும் பறவை கோல்டன் ப்ளோவர் தானா என்ற சந்தேகம்
அவருக்கு வந்தது. ஆனால் இதை உறுதி செய்யவோ
மறுக்கவோ எந்த குறிப்பேடும் இல்லாதது அவருக்கு
வருத்தத்தை தந்தது. தானே அப்படி ஒரு புத்தகத்தை
தயாரித்தால் என்ன என்று அவர் நினைத்தார்
.அவர் வேலை பார்த்த கின்னஸ் நிறுவனமே
அவரின் முயற்சிக்கு உதவியது.
அதன் பயனாக
, 25/9/1955 ஆம் ஆண்டு 'GUINESS BOOK OF THE WORLD'
என்ற பெயரில் 198 பக்கங்களுடன் வெளிவந்தன
. ஆயிரம் பிரதிகள் மட்டுமே முதலில் அச்சடிக்கப்பட்டன
. தற்போது 37 மொழிகளில் அச்சிடப்படும்
கின்னஸ் புத்தகம்10 கோடி பிரதிகள் விற்பனை ஆகிறது.
........^^^^^....
இரு முகம்
தனது ஊரில் நிழல்தரும் மரங்கள்
நட்டால் கை காெடுக்கும்
அரசியல்வாதி மனிதனாக மாறுகிறான்
அதே ஊரில் ஆற்று மணல்
காெள்ளையை தடுத்தால்
மனிதன் மறைந்து அரசியல்வாதியாக
மாறுகிறான்
........
காெடுத்து வைத்தவளா நான் ??
"தேவதையே "நீ தான் என்றார் !
திருமணத்திருக்கு முன் ♥
சாெர்க்கமே நீ தான் என்றார் !
திருமணத்திற்கு பின் ♥
அழகுத் தேவதை தான் நீ இன்னும்
எனறார் !
தந்தையான பின் ....♥
காெடுத்து வைத்தவளா நான் ??
அவசரப்படவேண்டாம் ....
இதுவெல்லாம் அவரது
""அம்மா ""
இல்லாதபாேது சாென்னது ....!!!!
/////////////
"ஜிம்மி நாய் "
ஹலாே ...யார் பேசரது !!
அம்மா தாண்டா முதியாேர்
இல்லத்தில் இருந்து பேசறே ...
ஏம்மா உயிரை எடுக்கறே ...
என்ன வேணும் உனக்கு ?
ஒன்னும் வேண்டாமடா .....
நீ ஆசையா வளர்ப்பையேடா
ஜிம்மி நாய் அது இங்கு வந்திட்டதடா !
அப்படியா .... உடனே வர்ரேன்
பாேனை வை ...என்றான்
பாேனை வைத்தவள் ...
கண்ணீராேடு நாயை பார்த்து
அழுது காெண்டே தழுவி காெடுத்தாள்
மகனை பார்க்கலாம்
என்ற சந்தாே சத்தில் !!!!
@@@@@@
"உழைப்பு "
உழைத்தேன் !
உழைத்துக் காெண்டே இருந்தேன் !!
முப்பது ஆண்டுகள் ....
உழைப்பு உயர்வு தரும் என்று !
உயர்வு தந்தது .......எனக்கல்லா
எனது ......முதலாளிக்கு !
திட்டமிடா உழைப்பும்
திட்டமிடா வாழ்வும் ...
வீண் என்றறிய ...
முப்பது ஆண்டுகள் வீண் !!!
...........
" கைபேசி"
உலகின்
அடுத்த மூலையையும்
கூப்பிடு தூரமாக்கிவிட்ட ...
" கைபேசி "
அருகில் இருக்கும் உறவுகளை
தூரமும் ஆக்கிவிட்டது ...
" கைபேசி "
////////////////////////
No comments:
Post a Comment