ஓடி ஓடி உதவி செய்தால்
உலகம் உன்னை போற்றும்
அந்த உதவியை
உலகம் உன்னை போற்றும்
அந்த உதவியை
நீ கேட்டால்
அது உன்னை தூற்றும்.
அது உன்னை தூற்றும்.
இப்படிக்கு
கோடந்தூர் ஆதீனம்
////////////////////////
உனக்கும் கீழ்உள்ளவனுடன்
தொழில் கூட்டு வேண்டாம்
பணம் இல்லா அரசியல்
தலைவன் வேண்டாம்
தலைவன் கஞ்சன் என்றால்
சகவாசம் வேண்டாம்
இப்படிக்கு
கோடந்தூர் ஆதீனம்
////////////////////////
ஒருவனுக்கு நண்பன்
ஒருவனுக்கு விரோதி
இருவருக்கும் நண்பன்
அவர்களுக்கு பணம்
கொடுத்தவன்.
கோடந்தூர்ஆதீனம்
/////////////////////////////
துல்லியம் தோற்றதில்லை
அனுமானம் அவமானத்தில்
முடியும்.
இப்படிக்கு
கோடந்தூர் ஆதீனம்
/////////////////////////////
நீ தனிமையில் இருக்கும்போது
என்ன நினைக்கிறாயோ
அதுதான் உன் வாழ்ககையைத்
தீர்மானிக்கும்.
இப்படிக்கு
கோடந்தூர் ஆதீனம்
/////////////////////////
பேருந்து தேயும்
பிரயாணம் தேயாது.
அசல் குறையும்
வட்டி குறையாது.
பெண்மை குறையும்
ஆண்மை குறையாது.
ஆற்றல் குறையும்
அறிவு குறையாது.
எனவே குறையை விட்டு
நிறையை எடு
இப்படிக்கு
கோடந்தூர் ஆதீனம்
////////////////////////////////
முயற்சி என்பது எஸ்க்கலேட்டர்
(மின்படிக்கட்டு)
போன்றது
முதல் படியில் நீதான்
அடி எடுத்து வைக்கவேண்டும்.
கோடந்தூர்ஆதீனம்
/////////////////////
ஆசை என்ற சாலையில் பயணித்து
உன் தேவையின் அளவை நீ உணர்ந்து
போதும் என்ற எண்ணம் உதயமாகும்போது
வாழ்க்கை என்பது புரியும்.
கோடந்தூர் ஆதீனம்
////////////////////////////
தீப்பந்தம் எப்படி பிடித்தாலும்
மேல் நோக்கி எரியும் அதுபோல்
உயர்ந்த எண்ணங்கள்
உன்னை மேலே உயர்த்தும்.
கோடந்தூர்ஆதீனம்.
//////////////////////
ஆண் என்றால் ஒரு கோடியும்
பெண் என்றால்
இரண்டு கோடியும் போட்டு
மேலே அனுப்பி வைப்பான் தமிழன்.
கோடந்தூர் ஆதீனம்.
/////////////////
பெரிய தவறு நடக்காமல்
இருக்க சிறிய தவறை
திருத்திக்கொள்ளவேண்டும்.
கோடந்தூர் ஆதீனம்
/////////////////
சுயநலவாதியை கும்பிடுவது
நல்லபாம்பை முகர்வதற்க்கு
சமம்.
கோடந்தூர் ஆதீனம்.
//////////////////
வாழ்க்கை என்பது போர்க்களம்
அதை வெல்ல நம்பிக்கைதான்
ஆயுதம்.
கோடந்தூர் ஆதீனம்.
////////////////
புற்களின் மீது காலையில்
விழும் பனித்துளி போன்றது
வாழ்க்கை.
கோடந்தூர் ஆதீனம்.
//////////////
ஆனமீகத்தில் கோவிலில்
சிலைக்குமுன் நிற்பவன்
பக்தியின் அடிவாரத்தில்
இருக்கிறான்.
மக்கள் தொண்டில்
இருப்பவன் பக்தியின்
சிகரத்தில் இருக்கிறான்.
கோடந்தூர் ஆதீனம்
///////////////
/////////////////////////////
அதிக புத்திசாலித்தனம்
முட்டாள்தனத்தில்தான்
முடியும்.
கோடந்தூர் ஆதீனம்
/////////////////
அனுபவம் என்பதெல்லாம்
ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை
வாழ்க்கையில்
எஞ்சியிருப்பதுதான்.
எஞ்சியிருப்பதுதான்.
கோடந்தூர் ஆதீனம்
//////////////////////
மகிழ்ச்சியின் உயரத்தையும்
சோகத்தின் ஆழத்தையும்
அறிந்துகொண்டவன்
மகான் ஆவான்.
கோடந்தூர் ஆதீனம்.
/////////////////////
அமைதி சத்தம் கண்டால்
குழம்பும்.
அன்பு நடிப்பிடம் தோற்கும்.
அறிவு முட்டாள்களிடத்தில்
தடுமாறும்.
நம்பிக்கை
இவை மூன்றையும்
தூக்கி நிறுத்தும்.
கோடந்தூர் ஆதீனம்
வெற்றி பெற்றவன்
வீரனுமல்ல
வீரனுமல்ல
தோல்வியுற்றவன்
கோழையுமல்ல
வெற்றியும் தோல்வியும்
ஒரு போட்டியை வைத்தோ
ஒரு நிகழ்வை வைத்தோ
தீர்மானிக்கமுடியாது.
கோடந்தூர் ஆதீனம்
/////////////////
நாம் ஒரு விசயத்தை
திறம்பட செய்ய
திறம்பட செய்ய
நினைத்தால் அதை நாமே
செய்வதை தவிர
வேறு வழியில்லை.
கோடந்தூர் ஆதீனம்.
////////////////////////
எவனொருவன் நம்மிடம்
முகஸ்துதி செய்கிறானோ அவன்
நம்மை இழிவு படுத்த
தயாராகிவிட்டான் என்று அர்த்தம்.
கோடந்தூர் ஆதீனம்.
////////////////////////
எதையும் முடியாது
என்று சொல்பவன்
என்று சொல்பவன்
முட்டாள்.
அறிவாளி அதைசொல்லமாட்டான்.
வாய்ப்பு இல்லையெனில்
உன் திறமை வெளியே வராது.
கோடந்தூர் ஆதீனம்.
//////////////////
வெற்றி கிடைக்குமா
வியாபாரம் நடக்குமா
இலாபம் வருமா என்று
சிந்திக்கும் அறிவு
தோல்வியில் போய் நிற்க்கும்.
கோடந்தூர் ஆதீனம்
/////////////////////
: தனக்குமேலே உள்ளவனிடம்
அதிக பணத்தை வாங்குபவனையும்
தனக்கு கீழே உள்ளவனுக்கு
அதிக பணம்
அதிக பணம்
கொடுப்பவனையும் நம்பாதே..!!
கோடந்தூர் ஆதீனம்
/////////////////
நான்கு சுவற்றுக்குள் நம்மிடம்
மன்னிப்பு கேட்பவன் நம்மை
கொலைசெய்ய தயங்கமாட்டான்.
கோடந்தூர் ஆதீனம்
////////////////////////////////
ஒளியை நோக்கி
நீ சென்றால் உன் நிழல்
உன் பின் வரும் மாற்றி
நடந்தால் அதுகூட
உன்னைவிட்டு
முன்னே ஓடிவிடும்.
கோடந்தூர் ஆதீனம்
///////////////////////////
No comments:
Post a Comment