நீ இந்தி படித்து இருந்தா
என்ன செஞ்சிருப்பே?
இந்தி படிச்ச வடநாட்டுகாரன்
தன் ஊரை விட்டு இங்கு எதுக்கு வரான்?
அவன் இங்கிலீஷ் படிக்கலை.
இந்தி படிச்சா போதும் இங்கிலீஷ் கூட
தேவையில்லைன்னு சொல்லி சொல்லி
ஆரிய கூட்டம் இந்திக்காரனை கூலிக்கு
வேலை செய்யும் ஆட்களாக மாற்றிவிட்டனர்.
ஆனா நாம அப்படியில்லை. இந்திக்கு
பதிலாக இங்கிலீஷ் படிச்சோம்.
உலகம் சுற்றி வேலை செய்கிறோம்.
பதவிக்கு வருகிறோம்.
சரியான பாதையில் தான் பயணிக்கிறோம்.
நாம் வெறும் கூலிகளாகவில்லை.
ஆளுமை நிறைந்தவர்களாக மாறி இருக்கிறோம்.
ஒருகாலத்தில் மதராஸி என்றால்
வடக்குமாநில மக்களுக்கு இளக்காரம்
இருந்தது. இன்றைக்கு அப்படி இல்லை.
இந்தி பேசும் மக்களை
வாழவைத்துக்கொண்டிருக்கிறோம்,
வேலை வாய்ப்பு கொடுத்து பல ஆயிரம்
லட்சம் குடும்பங்கள் வீடுகளில் தினசரி
அடுப்பெறிய காரணமாக இருக்கிறோம்.
இது எதனால் சாத்தியம் ஆயிற்று?
இந்தியை புறம் தள்ளி அந்த இடத்தில்
ஆங்கிலத்துக்கு இடம் கொடுத்ததால்
சாத்தியம் ஆயிற்று.
உறுதியாக இதே வழியில் பயணிப்போம்.
2020 ல் இந்தியா வல்லரசு ஆகிறதோ
இல்லையோ அடுத்த பத்தாண்டில்
தமிழக இளைஞர்கள் உலகையே திரும்பி
பார்க்கவைப்பார்கள்
/////
அரசே,
தமிழ்நாட்டில் உள்ள பெயரப்பலகைகள்
மைல் கற்கள் போன்றவற்றில் இந்தியில்
எழுத விரும்பினால்
செய்து கொள்!
அதே சமயம் வடநாட்டில் உள்ள
பெயர்ப்பலகைகள் மைல் கற்கள்
ஆகியவற்றில் தமிழிலும் எழுது.
இந்திக்குத் தனி அந்தஸ்து ஏதும்
கிடையாது.
*******************
இந்தி பிரச்சார சபா
தமிழ்நாட்டில் ஆரம்பித்து
100 ஆண்டுகளாகிவிட்டது.
இந்தக் கட்டிடம் கட்டி
60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
வருடம் 10 லட்சம்பேர்
இந்தி கற்கின்றனர்.
தென் இந்தியாவில் அதிகம்பேர்
கற்பது இம்மாநிலத்தில்தான்.
ஏழை மாணவர்களுக்கு இலவசமாய்
இந்தி கற்றுகொள்ளும் வசதியும் உண்டு.
இந்தித் திணிப்பை எதிர்த்து
தமிழகம் கதி கலங்கிய
காலத்திலும் கூட இந்தக்
கட்டிடம் சேதமடையவுமில்லை
இந்தி கற்றுக்கொடுக்கும் எவரும்
தாக்கப்பட்டதாய் சரித்திரமுமில்லை.
இங்கு இந்தி கற்கிறவனை
பேசுகிறவனை வெறுத்ததாக
எந்த ஒரு செய்தியுமில்லை.
ஆனால்.இந்தித் திணிப்பை
எதிர்த்து தன் உயிரை மாய்த்து
போராடியவர்கள் ஏராளம்.
இப்படியான ஒரு எதிர்ப்பு
நிலையை இந்தியத்தில்
எங்காவது காண முடியுமா?
இந்திய துணைக்கண்டத்தில்
தமிழ்நாடுதான்
பரிணாமத்தில் முதலிடம்.
கருத்தை கருத்தால் மட்டுமே
எதிர்கொள்ளும் தமிழ் மண்ணின்
பெருமை இது.
*******************
No comments:
Post a Comment