Wednesday, November 4, 2020

Thoughts 2018

தேவைபடும் பாேது
"நீ" தேடப்படுவாய்  ....
அதுவரை
 "நீ " அமைதியாய் இரு ..
  //////////////////////////////////////
 உலகில் நாம் விரும்பும்
அத்தனையும்
இரு முறை தான்
அழகாக தெரியும்..
ஓன்று #அடைவதற்கு_முன்பு
இரண்டு #இழந்ததுக்கு_பின்பு
#வாழ்க்கை ..
//////////////
உன்
மனதுள்ளிருக்கும்
''அச்சம் தான்....
உன் முதல் எதிரி
நீ தயங்கி நிற்கும்
நொடிகள் தான்..
உன் முதல் தோல்வி
்்்்்்
இன்டர்வியூவில்
எல்லா கேள்வியும்
கேட்டுட்டு கடைசில வேலை
இல்லைனு சொல்றதும்..
ஏடிஎம்ல் எல்லா கேள்வியும்
கேட்டுட்டு பணம் இல்லைனு
சொல்றதும் ஒன்னுதான்
்்்்
அவமானம்,
தோல்வி,
வறுமை
இவை எல்லாம்
நம்மை நல்ல
சிலையாக மாற்றும்
சிற்பிகள்...
அதனால்,
அவற்றை எண்ணி
வருந்தாதீர்கள்.
்்்
'எல்லோரும்
காதலிக்கின்றார்கள்.
பின்னொரு நாளில்
வருத்தப்படுகிறார்கள்.
சிலர் சேர்ந்ததற்காக!
சிலர் பிரிந்ததற்காக
்்்்
மெளனமும்,
சிரிப்பும் ரொம்ப சக்தி
வாய்ந்த வார்த்தைகள்....
மெளனம் நிறைய
 பிரச்சனைகளை
குறைச்சிடும்...
சிரிப்பு நிறைய பிரச்சனைகளை
தீர்த்து விடும்...
......
ஏமாற்றங்களை தீயிலிட்டு 
பொசுக்குங்கள்....மனதிற்குள் 
வைத்துபூட்டாதீர்கள்.
~~ விவேகானந்தர்
......
மந்திரவாதி ஒரு டம்ளர் நீரை
கவிழ்த்து அதிலிருந்து ஒரு
கைக்குட்டை வர வைத்தான்....
கூட்டத்தில் இருந்த எல்லோரும்
அதிசயத்துடன் கைத்தட்டினர்...
ஒருவர் மட்டும் கைத்தட்டாமல்
உம்மென்று இருந்தார்...
அவரிடம் சென்று,
 "நீங்க ஏன் சிரிக்கல, 
உம்மென்று இருக்கீங்க" 
என்று கேட்டார்...
அதற்கு அவர், "இது ரொம்பவே
 சாதாரணம்...
நீ ஒரு டம்ளர் தண்ணீல
 ஒரு கைக்குட்டை தானே எடுத்தாய்..
என் பொண்டாட்டி ரெண்டு
 சொட்டு கண்ணீருல
ஒரு பட்டு புடவையே
எடுத்துடுவாடா.
......
சிறு தவறுக்காக
ஒருவரை விட்டு.
விலகாதே
அதுவே உன்
பெரும் தவறாகிவிடும்
்்்்்
அனுதாபத்தோடு பார்க்கும்
 கண்களுக்குக்
குற்றவாளியும் நிரபராதி,
ஆத்திரத்தோடு பார்க்கும் 
கண்களுக்கு
நிரபராதியும் குற்றவாளி!
.......
"சைக்கிளிங்"
உடம்புக்கு நல்லது..
"ரீசைக்கிளிங்"
சமூகத்துக்கு நல்லது..
.......
♦♦தமிழர்களின்
அங்கவியல் ஞானம்♦♦


எண்சாண் 
உடம்பிற்குச் சிரசே பிரதானம்  
முதுமொழி....
நீட்டிவைத்தால் கட்டை
 விரலுக்கும்,
நடுவிரலுக்கும் இடையே 
உள்ள தூரம் ஒரு சாண்.  
அவரவர் முகம் அவரவர் கையில் 
ஒரு சாண் அளவுதான்.
கழுத்தும் இடுப்பும் 3 சாண்,
 கால்கள் 4 சாண்,  
ஆகமொத்தம் 8 சாண்.
//////////////////////////////
அக்குபஞ்சர்
ஆற்றலை
அதிகரிக்க ஞான முத்திரை.....
குறைக்க
வாயு முத்திரை......
கட்டை விரலால் ஆட்காட்டி 
விரலை மடக்கிப்பிடிப்பது,
தொடர்ச்சியான
இரத்த நாளங்களும்
, நரம்பு மண்டலமும் 
அனைத்து உறுப்புக்களையும்
 இணைத்துள்ளன.
அவற்றின்
முனைகள் கைகளிலும், 
கால்களிலும்
 முடிகின்றன.

சூஜோக், ரெப்லக்ஸாலஜி 
அவற்றை முறைப்படுத்தி 
வகைப்படுத்தியுள்ளது.

வலி வந்தவுடன் அந்த இடத்தைத்
 அழுத்திச் சரி செய்யும் 
முயற்சி விலங்குகளிடம் கூட உண்டு.
       நாய், பூனை, ஆடு, மாடு நிலத்தில்
 படுத்துப் புரள்வதைப் பார்த்திருப்பீர்கள்.  
ஒரே பாணியில் அதிக நேரம்
 இருந்தால் இரத்த நாளமும்,
நரம்பு மண்டலமும் செயலற்ற
 நிலைக்குச் சென்றுவிடும்.  
அதைச் சரி செய்யும் செயலே 
இது.  இதுதான்
        அக்குபங்சர்.
........

"அயணங்கள்"

அயணங்கள் இரண்டு 
வகைகளாகப்
 பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் 
வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் 
வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு
அயணங்கள் சேர்ந்து ஒரு
தமிழ் வருடமாகும்.
......
உனக்கு சிரிப்பதற்கும் 
பேசுவதற்கும்
நேரம் இல்லையென்றால்,
நீ உன் வாழ்வில்
முன்னேறிக்கொண்டு
 இருக்கிறாய்
என்று அர்த்தம்.
.......
அவசரமாகத் தவறு
 செய்வதை விட,
தாமதமாகச் சரிவர 
செய்வது மேல்..!'
-ஜெபர்சன்.
///////////////
எவன் பிறர்
 நற்செயல்களைப் பார்த்து
மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,
அவனால் நல்ல செயல்கள் 
எதையும்
செய்ய முடியாது.
ஜேம்ஸ் ஆலன்

்்்்
நேரத்தைத் தள்ளிப்
 போடாதே
தாமதத்தால்.
அபாயமான முடிவே 
ஏற்படும்.!
ஷேக்ஸ்பியர்
////////////////////////
காதல்:
ஒருவித தற்காலிக 
மனநோய்.
திருமணம் செய்தால்
 குணமாகிவிடும்.
் ்்்
எல்லோரும் தம்மை
 விட்டு விட்டு..
-வேறுபாாரையோ..
சீர்திருத்த 
முயலுகிறார்கள்...!
ரபிந்த்ரநாத் தாகூர்
////////////////////
நேரத்தைத் தள்ளிப் 
போடாதே
-தாமதத்தால்..
அபாயமான முடிவே 
ஏற்படும்..!
-ஷேக்ஸ்பியர்
்்்்்
நீண்ட நேரம் சிந்தித்தபின் 
உங்கள்
-நாவை அசையுங்கள்.
நீங்கள் அவமானம் 
அடைய மாட்டீர்கள்..!
டால்ஸ்டாயம்
//////////////////
மெதுவாகப் பேசு அது உன்
-ரகசியங்களைப் பாதுகாக்கும்
நல்ல எண்ணத்தோடு இரு.
அது உன் நடத்தையைப்
 பாதுகாக்கும்...!
வள்ளலார்
்்்்்்
நீ நடந்து போக பாதை
 இல்லையே
என்று கவலையடாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை
அவசரமாகத் தவறு செய்வதை விட
தாமதமாகச் சரிவர செய்வது மேல்..!'
்்்்்
கஷ்டம் வரும்போது 
கண்ணை 
மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்
கண்ணை திறந்து பார்
நீ அதை வென்று விடலாம்.
......
அவசியம் 
இல்லாதவரிடம்
உண்மைகளை 
சொல்லாதீர்கள்...             
 அவசியமானவர்களிடம் 
பொய்களை
சொல்லாதீர்கள்…
இரண்டுமே உங்களை 
காய படுத்தும்
......
அன்பு என்பது
அறுக்க முடியாத
இரும்புச் சங்கிலி:
அறுத்தால்,
ஒட்ட முடியாத
கண்ணாடி துகள்கள்,
.....
தடை எதுவென்று
தெரியாத வரைக்கும்
தடுமாற்றம் சரியே.
ஆனால்
தடை இன்னதென்று
தெரிந்த பிறகும்
அதைத் 
தகர்த்தெறியாமல்
இருந்தோமானால்
நம் இலக்கை து
நாம் ஒருபோதும்
அடைய முடியாது!
.......
எதாவது ஒரு வீட்டை
 பாருங்க..
எவ்ளோ பெரிய வீடா 
இருந்தாலும்
கதவு இவ்ளோதான்.
எவ்ளோ பெரிய கதவா
 இருந்தாலும்
பூட்டு இவ்ளோதான்.
எவ்ளோ பெரிய பூட்டா 
இருந்தாலும்
சாவி இவ்ளோதான்.
இத்துனூண்டு சாவியை 
வச்சு
அவ்ளோ பெரிய வீட்டை
 திறக்கிறோம்
வாழ்க்கையும் இதே 
மாதிரி தான்..
எவ்ளோ பெரிய பிரச்சனையா
இருந்தாலும் அதன் தீர்வுக்கு
ஒரு சிறிய மாற்றமோ
சிறிய தீர்மானமோ போதும்...!
......
#பத்து நிமிடம் 
கடவுளாகக் கோயிலி்
  நின்றால் கடவுளாக
 இருப்பதற்கு
 நமக்கே பிடிக்காது
!#அவ்வளவு
 ஊழல் நடக்கிறது 
#கோயில்களில்!..
......
ஒரு கட்டத்தில் 
வாழ்க்கையே
 "#முற்றுப்புள்ளி" என்று 
எண்ண வேண்டாம்..
//////////////////
ஒவ்வொரு "#கோலமும்"
 முற்றுப்புள்ளியில் தான்
 தொடங்குகிறது..!!
........
எழுத படிக்கத்தெரியாத 
பெண் குழந்தைகள்
அனைவருக்கும்
இயல்பாய் வருகிறது...
"#கோலங்கள்"
///////////////////
#முற்றுப்புள்ளிகூட
 கோலத்தின்
 #தொடக்கபுள்ளியாகும்....
......
ஒருவன் நிலை 
தாழ்ந்திருந்தால்
 அவனுக்கு உபதேசம் 
செய்வதைவிட
 அவனுக்கு உதவுவது 
மேலானதாகும்.-புல்வெர
/////////////////
வாழ்க்கையில் எதுவும்
சொல்லிவிட்டு வருவதில்லை...
ஆனால் வந்த எதுவும் எதையும்
 சொல்லி கொடுக்காமல்
போவதில்லை நாம் புரிந்து
 கொண்டோமா என்பது
 தான் கேள்வி...
.......
சில எதிர்பார்ப்புகளின்
ஏமாற்றங்களே  பல
புதிய முயற்சிகளுக்கும்
புதிய வாழ்கைக்கும் நம்மை
கொண்டு செல்கின்றன என்பது
தான் நிதர்சனமான உண்மை.
.......
ஆஸ்கர் விருது தான்
திரைப்படங்களுக்கான விருதுகளில்
உலகிலேயே உயரிய 
விருது என்று
நம்பிக் கொண்டிருப்பதும்
அடிமைத்தனத்தின்
 மிச்சம் தான்!
.......
"பலி ஆடுகள்' கிடைத்தவுடன்
 'கருப்பு
ஆடுகளை' கண்டுக்
கொள்வதில்லை நம்
சமூகம்!
/////////////////
பொய்யை பொத்திக் காக்க
வேண்டியிருக்கிறது!
உண்மையை போட்டு உடைக்க
வேண்டியிருக்கிறது!
///////////////
தேவையான அளவிற்கு
சம்பாதித்து விட்டு, அதன் பிறகு
நல்வாழ்க்கை வாழ ஆரம்பிக்க
வேண்டும் என்று நினைக்கிற
பலர், அந்த எல்லைக்கோடு
எங்கிருக்கிறது என்று
தெரியாததால், கடைசி வரை
சம்பாதித்துக்கொண்டு
மட்டுமே இருக்கிறார்கள்.
வாழாமலே
 //////////////////////////////////
சிறு உளிதான் 
சிற்பம் வடிக்க
பயனாகிறது
//////////////
நீங்கள் எண்ணித் துணிந்தபின் 
உங்களை உலகம் முழுவதும் 
வாளெடுத்து 
எதிர்த்து நின்ற போதிலும்
 கொண்ட 
கருமத்தை கைவிடாதீரகள் 
.-விவேகானந்தர
//////////////////
  இறைவன் படைத்த
 உலகை எல்லாம்
மனிதன் ஆளுகிறான்
மனிதன் படைத்த சிலையில்
எல்லாம் கடவுள் #வாழுகிறான்
//////////////////
தன் பகைவர்களை
 அடக்குபவனை விட
 தன் ஆசைகளை அடக்குபவனே 
சிறந்த வீரன் !-அரிஸ்டாடில்
//////////////////////////
ஒவ்வாரெு ராசியிலும்
"காேள்கள் "
எவ்வாறு இருந்தாலும்
நம்ம
"குறிக்காேள்" சரியாக
 இருந்தால்
 மட்டுமே வாழ்வில் வெற்றி
பெறமுடியும்
///////////////////////////
அடிப்படை தவறானால்
 அத்தனையும் பாழ்
அடிப்படை சரியானால் 
அத்தனையும்  தூள்
///////////////////////////////
 கல்லுக்கு உருவம் 
கொடுக்கும்
 வரை நான் சிற்பி, நீ கல்.,
உருவம் கொடுத்த பின்பு
 நீ கடவுள், 
நான் தீண்டத்தகாதவன்..!
////////////////////////
 "உண்மை தானே "
நாம படிச்ச படிப்பு தான் நம்மள 
பல வேலைகள பண்ண 
விடாம தடுக்குது!
அதுல ஒண்ணு தான்
 "விவசாயம்!"
//////////////////////
#நல்லகாலம்பிறக்குது
காசு வாங்க
ஜோசியக்காரன் சொல்வான்
வாக்கு வாங்க
அரசியல்வாதியும் சொல்வான்,
//////////////
உலகின் தலை சிறந்த 
மனிதனை
ஒவ்வொருவரும் 
தினம் பார்க்கிறோம், 
#கண்ணாடியில்...
////////////////
தனிமையாக இருக்கும்போது 
நமது எண்ணங்களையும்,
மற்றவர்களோடு 
இருக்கும்போது
 நமது வார்த்தைகளையும் 
கட்டுப்படுத்தும்போது,
நமது வாழ்க்கை எளிதாகவும்
நன்கு அனுபவிக்க
 மிகுந்ததாகவும் இருக்கும்!
///////////////////
 WHAT COMES EASY
WON'T LAST.
WHAT LASTS WON'T
COME EASY
 ///////////////////
    Life is 10 percent 
what you make it and
 90 percent how you take it.
—Irving Berlin
////////////////////
 Every word has its power
 choose them carefully_*

Don't mix your *'WORDS'*
 with your *'MOOD'*,
  because
 you have many options
 to change your mood;
 but you never get any option
 to replace your spoken words.
////////////////////////
முற்றுப்புள்ளியை கூட
 மூன்று முறை 
வைத்தால் 
தொடர்ச்சியாகி 
விடும்...
//////////////////////

  உலகிலேயே
பெரிய வன்முறை எது
தெரியுமா திருப்பி தாக்க
முடியாதவர்களிடம் 
காட்டும் வீரம்..
//////////////////////////////////
 பூனையை விட சிங்கம் 
வலிமையானது என்று
எலிகள் 
ஒரு போதும்
 ஒத்துக் கொள்ளாது.
//////////////////
தவறான வழியில்
 வெல்பவனை 
வாழ்த்தியும், 
நேர்மையான வழியில் 
சென்று தோற்பவனை 
தாழ்த்தியும் பேசும் 
சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!
///////////////////////
  வாழ்க்கை,..
ஒரு குத்துச்சண்டை போல!
விழுவதால் அல்ல,..
மீண்டும் எழ மறுக்கும்
 பொழுதே,..
தோற்றவர்களாகிறீர்கள்!
 ////////////////
  வெற்றி  கதவு போன்றது !
தட்டிப் பார்!!
திறக்கவில்லை எனில்
முட்டித் திற.
முட்டியும் திறக்கவில்லை
எனில்
உடைத்து விடு.
 ///////////////////////
  குளம் வற்றிய பிறகுதான் 
கடைசிப்படி கண்ணுக்குத் 
தெரிகிறது.
 நோயில் விழுந்த பிறகுதானே 
ஆரோக்கியத்தின் மேன்மை 
மனிதனுக்குப் புலப்படுகிறது.
/////////////////////
வெற்றியின் விதிகள் 
வகுப்பறையில்
 கற்பிக்கப்படுவதல்ல, 
வாழ்க்கையுடன் முட்டி 
மோதித்தான் 
அதைக் கற்க முடியும்.
//////////////////////

  15 வயதில்
கையில்  எடுத்தேன்,
சாகும் வரை கைவிடவில்லை
அதனாலே இறந்து போகிறேன்
இதை  சொன்னது
சிகரெட்டை கையில் எடுத்த 
புகைப்பவர் அல்ல,
கலப்பையை கையில் எடுத்த 
விவசாயி....!!
///////////////////
''சாமியாருக்கும் 
அரசியல்வாதிக்கும்
 என்ன வித்தியாசம்?''
''வழக்கு, நீதிமன்றம், 
பாலியல் புகார், 
மோசடி என ஏறத்தாழ 
அனைத்திலும் 
இருவரிடமும் ஒற்றுமை
 நிலவுகிறது.
 என்ன... மக்களைப் 
பார்த்தால் 
அரசியல்வாதி 
கும்பிடுகிறார். 
சாமியாரைப் பார்த்தால் 
மக்கள் கும்பிடு கிறார்கள்... 
அதுதான் வித்தியாசம்!''
////////////////////
 கடவுளுக்கும் இது
      தெரியுமா???
கொஞ்ச நேரம் வழி காட்ற 
டூரிஸ்ட் கைடுக்கே
4,5 லாங்வேஜ் தெரியுது..
வாழ்க்கை பூரா வழிகாட்ற 
கடவுளுக்கு   
சமஸ்கிருதம்
தான் தெரியும்ன்னு 
சொல்றானுங்க..
//////////////////// 
🌜வாழ்க்கை!🌛
**********
உங்கள் பிரச்சினைகளை,
எல்லோரிடமும் சொல்லாதீர்கள்!
19 சதவீதம் பேர் கவலைப்பட
 மாட்டார்கள்,..
80 சதவீதம்,.. சந்தோஷப்படுவார்கள்!
அந்த ஒரு சதவீதத்தை,..
 கண்டுபிடியுங்கள்!
************
வாழ்க்கை,..
 ஒரு குத்துச்சண்டை போல!
விழுவதால் அல்ல,..
மீண்டும் எழ மறுக்கும் பொழுதே,..
தோற்றவர்களாகிறீர்கள்!
*******************
தவறான
 மனிதர்களிடமிருந்தே,..
சரியான பாடம் கற்கிறோம்!
**************
இரண்டு நிலைகளில் மட்டுமே,
 அனைத்தும், விலைமதிக்க 
முடியாதவை:
அவை கிடைக்கும் முன்பு!
அவற்றை இழந்த பிறகு!
*******************
ஏழ்மை,.. ஆயிரம் வாழும்
 வழிகளை கற்றுத்தருகிறது,..
பணம்,.. ஆயிரம் வழிகளில் 
சீரழியக் கற்றுத்தருகிறது!
*******************
நம்பிக்கை,.. ஒரு ஸ்டிக்கர் போல!
பிய்த்து எடுத்துவிட்டால்,...
முதல்முறை போல,
மீண்டும் ஒட்டாது!
*******************
வசிக்க,.. மிகவும் 
இதமான இடங்கள், இரண்டு:
விரும்புபவர் எண்ணங்களில்!
நேசிப்பவர் பிரார்த்தனைகளில்!
**********
விதண்டாவாதம் செய்பவரை,..
பேசி, வெல்ல முயலாதீர்கள்!
உங்கள் மௌனப் புன்னகையே,..
அவர்களால் சமாளிக்க
 முடியாத ஆயுதம்!
*************
ஞாபகங்கள்,.. 
அற்புதமானவை!
முன்பு அழுத நாட்கள், 
சிலநேரம், சிரிக்கவைக்கும்!
முன்பு சிரித்த நாட்கள், 
சிலநேரம், அழவைக்கும்!
******************
 தின்ன சோறு 
செரிக்கிற அளவுக்கு
#வேலை செய்யற யாரும்.!
#யோகா'வைப் புடிச்சு
 தொங்கிட்டு
இருக்கத்தேவை இல்லை..!!??
 /////////////////////////////////
 #இரையைத் துரத்தும் 
ஓட்டத்தை விட,
#உயிர் தாங்கும் #
ஓட்டம் வலியது.

நீங்கள்
 #சிங்கமாயிருக்கலாம்.
ஆயினும் ,
உங்கள் #திசை மாற்றும்
 #தந்திரம் மானுக்கானது.
////////////////////////////
 படகு கரை சேர்வதற்கு
 துடுப்பு
மட்டும் உதவும்.
அது போல் 
நம் வாழ்வில்
கரை சேர்வதற்கு 
உழைப்பு
மட்டுமே உதவும்...
////////////////
 முடியுமானால்
 ஏற்றுக்கொள்..!
முடியுமானால் 
மாற்றிக்கொள்.!
இல்லையேல் விலகிக்கொள்..!
////////////////////
போராடும் வரை
 வீண் முயற்சி என்பார்கள் 
வெற்றி பெற்ற பின் 
விடா முயற்சி என்பார்கள் 
இதுதான் நம் சமுதாயம்
 ////////////////////
யார் உதைத்தாலும்
#இலக்கை நோக்கி ஓடும்
கால்பந்தை போல 
இருக்க வேண்டும் 
உனது #குறிக்_Goal
/////////////////////////
 "விதவை" என்பதுகூட
"விதை"வை.. மலர் பூத்து
மறு"மணம்" பரவட்டும்
 என்றேதான் உரைக்கிறது!!!...
///////////////
#தனிமைகள் கிடைப்பது
 உன்னை நீ #தெரிந்து கொள்ள....
#தவறுகள் நடப்பது 
உன்னை நீ #திருத்திக்கொள்ள....
#முயற்சிகள் எடுப்பது 
உன்னை நீ #முன்னேற்றி கொள்ள....
#எதிரிகள் கிடைப்பது 
உன்னை நீ #வளர்த்து கொள்ள..
 /////////////////////////////
 வெற்றிக்கு எஸ்கலேட்டர், லிப்ஃட் 
எல்லாம் கிடையாது.
படிகள் 
மட்டும்தான் உண்டு!
./////////////////////////
 விவசாயி:
மற்றவர்கள் எல்லாம்
 மனிதர்கள்
 செய்யும் தொழிலை
 செய்கிறார்கள் 
ஆனால் 
விவசாயிமட்டும் 
தெய்வத்தின் தொழிலை 
செய்கிறான்.
////////////////////////////
-மனிதன் இல்லாமல் 
மரங்கள் வாழும் 
ஆனால்
 மரங்கள் இல்லாமல்
 மனிதனால்
 வாழுமுடியாது.
//////////////////////////
கோபப்படு
ஆனால்
அதற்கு முன்பு அதை
விட
மும்மடங்கு
பொறுமையாயிரு
பூமி கூட 
பொறுந்திருந்துதான்
பூகம்பத்தை
வெளிப் படுத்துகிறது
//////////////////////////
என்ன நடந்தாலும் சரி..
ஒரு கை பார்த்து விடலாம் 
என்ற
 #அசாத்தியத் துணிச்சலே
பல நேரங்களில் நம்மை
 #ஜெயிக்க வைக்கும் ஆயுதம்!
/////////////////////
#தோற்று விட்டோம் என்று 
துவளாதே
#வென்று விட்டோம் எனத்
 துள்ளதாதே
#நாம்_நாமாக இருப்போம்...
.துணிச்சலுடன்....!
/////////////////////
உலகம் மிகவும்
 பாதிக்கப்பட்டிருக்கிறது..
மோசமான மக்களின்
 வன்முறையால்
 மட்டும் அல்ல...
நல்ல மக்களின் 
அமைதியின்
காரணமாக...
உங்களைச் சுற்றியுள்ள 
கெட்ட 
காரியங்களுக்கு மௌனமாக 
இருக்காதே...
///////////////////
தீமையின் வெற்றிக்கு ஒன்றே 
ஒன்று தான் தேவை.
 நல்லவர்கள் சும்மாயிருப்பது.
~~எட்மண்ட் பர்க்
///////////////////////////////

 *வாழ்க்கையில் 
நாம் குறைக்க 
வேண்டிய சில (உ)ப்புகள்:-*

கணவன்கள் - *படபட(உ)ப்பு*
மனைவிகள் - *நச்சரி(உ)ப்பு*
டீன் ஏஜ்கள் - *பரபர(உ)ப்பு*
மாணவர்கள் - *ஏய்(உ)ப்பு*
மாமியார்கள் - *சிடுசிடு(உ)ப்பு*
மருமகள்கள் - *கடுகடு(உ)ப்பு*
வழக்கறிஞர்கள் - *ஒத்திவை(உ)ப்பு*
மருத்துவர்கள் - *புறக்கணி(உ)ப்பு*
அரசியல்வாதிகள் - *ஆர்ப்பரி(உ)ப்பு*
முதியவர்கள் - *தொணதொண(உ)ப்பு*

ஆனால், சிறிதும்  
குறைக்கத்
 தேவையில்லாத
ஒரே உப்பு
*சிரி(உ)ப்பு.* 😀

இது மனதுக்கும், உடம்புக்கும்
*மிகச்சிற(உ)ப்பு.*
/////////////////////////////
 வெற்றிக்கு வழி காட்டும் 
சிந்தனைகள்.

01. வெற்றியின் விதிகள் 
வகுப்பறையில்
 கற்பிக்கப்படுவதல்ல,
 வாழ்க்கையுடன் முட்டி
 மோதித்தான் 
அதைக் கற்க முடியும்.

02. எல்லாவிதமான 
கல்விகளும் 
கற்கப்பட்டாலும், ஆசிய நாட்டு
 பாடசாலைகளில்
 வெற்றியின் அறிவியல்
 கற்பிக்கப்படாமல் 
தந்திரமாக நீக்கப்பட்டுள்ளதை 
புரிதல் அவசியம்.

03. உலகக் 
கோடீஸ்வரர்களில்
 80 வீதமானவர்கள் 
மிகவும் சாதாரண
 குடும்பத்தில் பிறந்து
 முன்னேறியவர்களே.

04. ஒரு புதிய சமுதாயத்தை 
படைக்க
 வேண்டுமானாலும்,
 உங்களை நீங்களே
 ஒரு புதிய மனிதராகப் புத்தாக்கம்
 செய்ய வேண்டுமானாலும் 
முதலாவது தேவை
 வெற்றியைப்பற்றிய 
அறிவியலாகும்.

05. பிரச்சனைகளுக்கு
 தீர்வு காணும்
 இலட்சிய வெறியுடன் 
உறங்கச் செல்பவர்களுக்கு 
தூக்கத்தில் வரும் கனவுகளில்
 தீர்வு கிடைக்கும்.

06. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 
நீங்கள் செய்யப் போகும் மாபெரும்
 சாதனையை கனவு காணுங்கள்.
 அந்தத் துறையின் முன்னோடிகள்
 உங்களுக்கு மாலையிடக் காண்பீர்கள்.

07. எந்தத் துறையில் பணி செய்வது
 உங்களுக்கு இனிமையான
அனுபவமாகத் தோன்றுகிறதோ 
அந்தத் துறையை
 நீங்கள் சாதிப்பதற்கான 
துறையாக தேர்வு செய்யுங்கள்.

08. பணம் சேர்ப்பதுதான் 
உங்கள்
 இலக்கு என்றால் எதற்காக 
சேர்க்கிறீர்கள்
 என்ற கேள்விக்கு உங்களிடம் 
தெளிவான 
பதில் இருக்க வேண்டும்.
 பிள்ளைகளுக்காக சேர்க்கிறீர்கள்
 என்றால்
 அந்தப் பணம் தமக்கு எதற்காக
 கிடைக்கிறது
 என்ற தெளிவு 
அவர்களுக்கு வேண்டும்
. இரண்டுமே இல்லாமல்
 பணத்தைச் 
சேர்த்து எதுவுமே இல்லாமல் 
மடிவோரே மனதரில் அதிகம்.

09. கால் போன போக்கில்
 அலையும் மனதை தெளிவான
 திட்டமிட்டு செலுத்த 
முதன்மையான 
ஒரு திட்டம் வேண்டும்.

10. இலக்குகளை உருவாக்கத்
 தெரிந்தவர்கள், குறி நிர்ணயிக்கப்பட்ட
 ஏவுகணை போல செயற்படுகிறார்கள்
. நடைப்பிணமாய் வாழ்வோரில்
 இருந்து இவர்கள் வேறுபட்டு 
நிற்கிறார்கள்.

11. உங்களது முதன்மை இலக்கு 
பிரமாண்டமானதாக இருந்தால் 
அதைப் பகுதி பகுதியாக பிரித்து எ
ழுதிக் கொள்ளுங்கள். 
பின் சிறிது சிறிதாக முன்னேறுங்கள்.

12. ஒருவரது எதிர்காலம் 
அவருடைய அன்றாட வேலை 
முறையால் தீர்மானிக்கப்படுகிறது.

13. எதை மேம்படுத்த வேண்டும்,
 ஏன் மேம்படுத்த வேண்டும்,
 எப்படி மேம்படுத்த வேண்டும்,
 என்ன காலத்திற்குள் 
மேம்படுத்த வேண்டும்
 என்ற கேள்விகளுக்கு 
விடை தேடி வையுங்கள்.

14. இனிப்பாக இருந்தாலும், 
கசப்பாக இருந்தாலும்
 திட்டத்தை மனதில் 
வைத்து முன்னேற வேண்டும்.

15. சரியாகத் திட்டமிடத் தவறும்
 அனைவரும் தோல்விக்காக 
திட்டமிடுகிறார்கள் 
என்பது தோல்வியின் 
விதிகளில் ஒன்றாக இருக்கிறது.

23. இலட்சியத்துடன் இணைக்கப்படாத
 உழைப்பு மெய் வருந்தக் கூலி 
தருமேயல்லாது சிறப்பான பலன்களை 
அள்ளித்தராது.

24. ஒரு பணியை தொலை நோக்குடன்
 அணுகத் தெரியாதவருக்கு 
அதில் முழுமையான ஈடுபாடு இருக்காது.

25. உங்களது உழைப்பு சரியான 
விளைவை தரவேண்டுமானால் 
ஒரு பணியை தொடங்க முன்பாகவே,
 அதனை உங்கள் மனதிற்குள்
 பயிற்சி செய்து நிறைவேற்றுவது
 ஒரு சிறந்த யுக்தி
//////////////////////
 நிராகரிப்புகளின்
மூலம்
ஒருவனை
நிர்மூலமாக்கிவிடலாம்
என்று சிலர்
நினைக்கிறார்கள் ,
உண்மையில்
நிராகரிப்புகளுக்குப்
பிறகுதான்
ஒருவனுடைய  விஸ்வரூபமே
வெளிப்படுகிறது...
/////////////
அறிவும் ஆற்றலும் மிகுந்த 
இடத்தில் 
சாதியும் மதமும்
 தலைதெறித்தோடும்.
  கோடந்தூர் ஆதீனம்.
//////////////////
முட்டாளுக்கும் கஞ்சனுக்கும் 
அறிவுறை கூறுவது
காற்றுக்கும் கள்ளிக்கும் வேலி 
போடுவதற்கு நிகரானது.
  கோடந்தூர்ஆதீனம்.
////////////////
எங்கே விழுந்தாயென 
பார்க்காதே,
எங்கே வழுக்கினாயென 
பார்!
/////////////////////////////////
 கிடங்கு வெட்டி..
கேபிள் புதைத்தவுடன். .
சாலை போடாமல்....
சாலை போட்டபின்
கிடங்கு வெட்டிக்
கேபிள் புதைக்கும்
கேனயன் தேசமிது.!  
////////////////////
ஆலையை மூடிப்
புகையிலை, சிகரெட்
உற்பத்தி செய்யத்
தடைவிதிக் காமல்,
மக்களி டத்தில்
குட்கா, புகையிலை,
சிகரெட் பிடிப்பதை
நிறுத்தச் சொல்லும்
கிறுக்கர்கள்  தேசமிது.!
///////////////////////
மது விலக்கிற்கு
ஒரு துறையை வைத்துக்
காவலர் போட்டுச்
சம்பளம் கொடுத்துச்
சாராயத் தையும்
அரசே விற்கும்
அறிவிலி தேசமிது.!
//////////////////////
வேலை வழங்கத்
துப்பே இல்லை!
வீணாக இங்கே
வேலை வாய்ப்பு
அலுவகம் எதற்கு?
வெட்டியாய்... இது ஒரு,
வீணர்கள் தேசமிது.!
///////////////////
பிளாஸ்டிக் பைகள்
உற்பத்தி செய்யப்
பெட்டிகள் வாங்கி
அனுமதி அளித்து...,
யாரும் வாங்கிப்
பயன் படுத்த
வேண்டாம்; என்று
விளம்பரம் செய்யும்
முட்டாள் தேசமிது.!
////////////////////////////
உழைத்து சாப்பிடும்
மக்களை எல்லாம்
காவல் காத்து
வழிகாட்டாமல்,
லத்தியைக் காட்டி
வழிப்பறி  செய்யும்;
திருடர்கள் தேசமிது.!
///////////////////
ஊழல் தடுப்பு,
லஞ்ச ஒழிப்புக்
காவ‌ல்துறை‌கள்;
எல்லாம் இருந்தும்
ஊழல் லஞ்சத்தை
ஒழிக்க முடியாத
என்னடா தேசமிது?
///////////////
கடலிலிருந்து எழுந்து 
ஆர்ப்பரித்து வரும்
 அலைக்கோ கரையை
 கடப்போம் என்ற நம்பிக்கை !
கரையில் நிற்கும்
 மனிதனுக்கோ அது
 கரையை கடந்து வராது 
என்ற நம்பிக்கை !
////////////////////////
நம்பிக்கை முரண்படலாம்...
ஆனால் நம்பிக்கையின்றி
 வாழ்க்கை சுழற்சியில்லை... 
/////////////////////
 விடுதலையை மக்கள் 
விரும்பிவிட்டால்
 விமானத்தையே 
கல்லை வைத்து வீழ்த்துவார்கள்.
  - பிடல் காஸ்ட்ரோ
//////////////
 தோல்வியில் முழுமையான
 தோல்வி எதுவென்றால்                                                                                                                                                                                                                                                                                                                                                                       
பெற்ற தோல்வியில் இருந்து  
எந்தவொரு பாடமும்
 கற்றுக்கொள்ளாதுதான்                                                                                                                                                              
 #வீரமாமுனிவர்
////////////////////////
பணம்
தேவையான அளவில் 
இருந்தால் - அதில்
தேவன் குடியிருப்பான்
தேவைக்கு 
அதிகமா யிருந்தால் - 
 அதில்
சாத்தான் குடியிருப்பான
//////////////////////
விழுவதெனில் உம் காலில் விழு...
நீ உயர்ந்தவன்...
எழுவதெனில்
உன் கைப்பிடுத்தே எழு...
உன் கை தான் உனக்கு உதவி...
/////////////////////////////
கைக்குட்டையை
 நழுவவிடுவதைப்போல்
 உன் கவலைகளைத்
 தொலைத்து விடு...
சட்டைப்பையில் 
போனாவைப்போல்
 மகிழ்ச்சியை என்றும் 
உன் நெஞ்சில் வை...
நாளைச் சூரியன்
மலைகளுக்கு மத்தியில்
 உதிக்காது...
உன் தோள்களுக்கிடையில் 
உதயமாகும்..
////////////////////////////////

ஆட்டுக்குட்டிக்காக
 நீதிமன்றம்
 செல்பவன் தன் பசுவை
இழப்பான்!
////////////////
புத்தகம்..
அறிவின் பொக்கிஷம்.
புத்தகம் நம்மை 
வடிவமைக்கும் 
ஆயுதம்.
///////////////////////////////
வீரனைப் போரிலும்,
யோக்கியனை கடனிலும்,
மனைவியை வறுமையிலும்,
நண்பனை கஷ்ட காலத்திலும்,
அறிந்து கொள்ளலாம்...!
///////////////////////////
புத்தகத்தை திறந்தேன் 
தூக்கம் வந்தது...
முகநூல்லை திறந்தேன் 
தூக்கம் போனது....
புத்தகத்தில் ஒரு
 ஆசிரியரிடம்
 பாடம் கற்றேன்..
முகநூலில் கவிஞர்கள்..
சிந்தனையார்கள்.
.சமூக போராளிகள்
.சமூக ஆர்வலர்களிடம் 
பாடம் கற்றேன்..
காலத்தின் மாற்றம்...
மாற்றத்தையும் ஏற்று
மாறாத_புத்தகத்தையும்
 ஏற்று 
உற்சாகத்துடன் 
பயணிப்போம் உறவுகளாக..!!
//////////////////////////////
விதையிட்டு தண்ணீர் 
விடுங்கள்..
ஆக்சிஜன் தரும் மரம்
 வளரும்...
//////////////////////////
"முன்பே நிரம்பி இருக்கும் 
ஒரு கோப்பையில்,
மேலும் நிரப்ப முடியாது.
வெற்றாக உணருங்கள்...
நிறப்பப்படுவீர்கள்."
நீங்கள் கற்றது எதுவாக
  இருந்தாலும், 
அதை மறந்து விடுங்கள்.
அப்போதுதான் அதை விட சிறந்த
 ஒன்று உங்களுக்கு கிடைக்கும்.
//////////////////////
உலகின்
அடுத்த மூலையையும்
கூப்பிடு தூரமாக்கிவிட்டது
செல்போன்
அருகில் இருக்கும் உறவுகளை
தூரமும் ஆக்கிவிட்டது
செல்போன்
///////////////////////////
முடிவுகளை திடமாய்
 எடுங்கள்.,
இல்லையேல் எடுத்த 
முடிவுகளை
 திறமையாய் முடியுங்கள்...
///////////////////////// 
வாட்சப்பில் வந்தது

'கொல்' 'கொள்ளையடி'
சரித்திரம் அதிகம் 
கேட்ட வார்த்தைகள்

''தழுவு'' ''முத்தமிடு''
கட்டில்கள் அதிகம் 
கேட்ட வார்த்தைகள்

''ஆராரோ'' ''சனியனே''
தொட்டில்கள் அதிகம் 
கேட்ட வார்த்தைகள்

''உனக்கெப்போது 
கல்யாணம்?''
விலைமகள் அதிகம் 
கேட்ட வார்த்தைகள்

''உருப்போடு'' - 
உருப்படமாட்டாய்''
வகுப்பறைகள் அதிகம் 
கேட்ட வார்த்தைகள்

''இன்னொரு ஜென்மம்
என்றொன்றிருந்தால்''
பூங்காக்கள் அதிகம் 
கேட்ட வார்த்தைகள்

''கடைசியாய் எல்லாரும்
முகம்பார்த்துக் கொள்ளுங்கள்''
மயானங்கள் அதிகம்
 கேட்ட வார்த்தைகள்

''சவால் விடுகிறேன் -
 சபதம் செய்கிறேன்'
மேடைகள் அதிகம் 
கேட்ட வார்த்தைகள்

'பாலாறு - தேனாறு'
பொதுஜனம் 
அதிகம் கேட்ட வார்த்தைகள்

''மறக்காமல் கடிதம் போடு''
ரயிலடிகள் 
அதிகம் கேட்ட வார்த்தைகள்

''அய்யா குளிக்கிறார்''
தொலைபேசி
 அதிகம் கேட்ட வார்த்தைகள்

'அப்பா கோபமாயிருக்கிறார்'
குழந்தைகள் 
அதிகம் கேட்ட வார்த்தைகள்

'தயவுசெய்து' - 'மன்னியுங்கள்'
ஐரோப்பா 
அதிகம் கேட்ட வார்த்தைகள்

''நேற்றே வந்திருக்கக் கூடாதா''
கடன் கேட்போன் 
அதிகம் கேட்ட வார்த்தைகள்

'இனிமேல் ஆண்டவன் 
விட்ட வழி'
மருத்துவமனைகள் 
அதிகம் கேட்ட வார்த்தைகள்
////////////////////////////
தோல்வி என்னும் 
சொல்லைத் தொலைத்து
விலகி நிற்கும் 
வெற்றியென்றுரைப்போம்

எதிரி என்ற வார்த்தை எதற்கு?
தூரத்து நண்பன் 
சொல்லித் திளைப்போம்

சதிபதி இருவர்
 சண்டைகள் இட்டால்
முரட்டு அன்பென்று 
மொழிந்து பார்ப்போம்

இலைகள் கழிந்த
 கிளைகள் கண்டால்
அடுத்த வசந்த ஆரம்பம் 
என்போம்

நொந்த தேகம் நோயில்
 விழுந்தால்
உடம்பே கொள்ளும்
 ஓய்வென்றுரைப்போம்

வெள்ளைச் சட்டையில் 
மைத்துளிபட்டால்
மையைச் சுற்றிலும் 
வெண்மையென்போம்

நிலவைத் தொலைத்த
 வானம் என்பதை
விண்மீன் முளைத்த 
விண்வெளி என்போம்

எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்

உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்

பழைய வார்த்தைகள் 
பறித்துப் பறித்துப்
புதிய நிலத்தில் 
பதியன்போடுவோம்

புளித்த வார்த்தைகள் 
மாறும்போது
சலித்த வாழ்க்கையும்
சட்டென்று மாறும்

- வைரமுத்து
//////////////////////////
தீமையின் வெற்றிக்கு ஒன்றே 
ஒன்று தான் தேவை.
 நல்லவர்கள் சும்மாயிருப்பது.
~~எட்மண்ட் பர்க்
////////////////
நம்மைப்பற்றி நாம் 
மதிப்பிடும்போது
 நமக்கு உள்ள திறமைகளை 
வைத்து 
மதிப்பிடுகிறோம்.
ஆனால் மற்றவர்களோ
 நாம் செய்து
 முடித்த செயல்களை 
வைத்தே 
மதிப்பிடுகிறார்கள்.
~~லாங்பெலோ
/////////////////////////////////
பணத்தால் வாங்க 
முடிந்த விஷயங்களில் 
உங்கள் பணத்தை 
செலவிடுங்கள். 
பணத்தால் வாங்க முடியாத 
விஷயங்களில் 
உங்கள் நேரத்தை 
செலவிடுங்கள்.
//////////////////
உங்களால் நினைவுகளை
 மறைக்க முடியும், 
ஆனால் அவற்றை
 உருவாக்கிய
 வரலாற்றை உங்களால் 
அழிக்கமுடியாது.
//////////////////
கனவுகள் உங்களை 
கட்டுப்படுத்தக் கூடாது.
 நீங்கள்தான் கனவுகளைக்
 கட்டுப்படுத்த வேண்டும்.
 ////////////////////////// 
செயலும் வாய்ப்பும்
 சந்திக்கின்ற போதுதான் 
அதிஷ்டம் நம்மை
அணைக்கின்றது.
ரேடி சேப்புல் ஜானியர்
/////////////
முற்றுப்புள்ளியை கூட 
மூன்று முறை வைத்தால் 
தொடர்ச்சியாகி விடும்....
 //////////////////////////
Who is Buddhist ???
எல்லாவற்றையும்
 துறந்து
 எத்தொல்லையும் 
இல்லாமல் 
துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் 
வைத்துக் கொண்டு, 
எல்லாத் துயரையும்
 அனுபவித்தபடி
 துறவியாய் வாழ்ந்தாள் 
யசோதரா.
எது கடினம்.?
சொல்லுங்கள் யார் துறவி இப்போது.!!!
.. //////////////////////////
பேசி தீர்க்க முடியாத
 பிரச்சினைகள் என எதுவும் இல்லை..
பேசவே கூடாது என்பதுதான்
 பலருக்கு பிரச்சினை...!
அறிவுரை என்பது வழிகாட்டி 
பலகை போல;
அதைக்கூறுபவர் ஒருபோதும் 
கூட வரமாட்டார்கள்!
//////////////////
ஒவ்வொரு நாளையும் 
அதுவே 
கடைசி நாள் என்பது 
போல் கழிக்க வேண்டும்
 .-ப்ப்லியன் சைரஸ
////////////////////
சின்னஞ்சிறு
 செலவுகளைப் பற்றியும் 
கவனமாய் இரு.
அடித்தளத்திலுள்ள
 சிறு ஓட்டை கூட
 பெரிய கப்பலையே
 மூழ்கடித்து விடலாம் .-பிராங்ளின

* உழைப்பின் சக்தியே 
உலகில் மிக உன்னதமானது; 
அதை வெற்றி கொள்ளும்
 ஆற்றல் வேறெந்த 
சக்திக்கும் கிடையாது!
- ஆபிரகாம் லிங்கன்
/////////////
ஒருவர் நிழலில் வாழவேண்டு
என்று முடிவெடுத்த பின்..
அவர்கள் நகர்வுக்கு ஏற்ப நாம்
 நடந்தாக வேண்டும்...
/////////////////

வெளிபார்வைக்கு  அழகாய் 
தோன்றினாலும்
உள்ளுக்குள் கல் மனசு...
கடவுள் சிலை..
//////////////////////////
எப்போதும் தயாராக இருங்கள் , 
வாய்ப்புகள் எந்த நேரத்திலும்
 வரக்கூடும் .-சங் எச் கிம
///////////////
விவசாயி:
மற்றவர்கள் எல்லாம் மனிதர்கள் 
செய்யும் தொழிலை செய்கிறார்கள் 
ஆனால் விவசாயிமட்டும் 
தெய்வத்தின் தொழிலை செய்கிறான்.
//////////////////
-மனிதன் இல்லாமல்
 மரங்கள் வாழும்
 ஆனால்
 மரங்கள் இல்லாமல் 
மனிதனால்
 வாழுமுடியாது.
/////////////
கோபப்படு
ஆனால்
அதற்கு முன்பு அதை
விட
மும்மடங்கு
பொறுமையாயிரு
          பூமி கூட 
பொறுந்திருந்துதான்
பூகம்பத்தை
வெளிப் படுத்துகிறது
//////////////////
நீ !
சிங்கம்,
ஆதலால்
கர்ஜித்து, வீறுகொண்டு 
எழுந்து வா
///////////////
நம்மைப்போல
#கடவுளுக்கும் '#ழ' கர '#ல' கர 
பிரச்சனை இருக்குது
போல,
நல்ல '#வழி' யை காட்டுன்னா.
நல்ல #வலி' யை தான் குடுக்கறார்.!!
//////////////////////
'ஊரே தெரியாமல் பிறந்து,
'உலகே அழும்படி மறைந்தால்,
அதுதான் வாழ்க்கை...!
 /////////////////////
பென்சிலுக்கு பின்னாடி
இருக்கிற ரப்பர் மாதிரி பல
பிரச்சனைகளுக்கு தீர்வு
அதிலேயே
இருக்கும்.
 நாம் தான் அதை
விட்டு விட்டு எல்லா
இடத்திலேயும்
தேடிக்கிட்டு இருக்கிறோம்
///////////////////
ஆசைப்படுவதற்கு
தகுதி தேவையில்லை.
அதை..
அடைவதற்கான தகுதியை
உருவாக்கிக் கொள்...!
/////////////////////////
உழைப்பு, உடலை 
வலிமைப்படுத்தும்
கஷ்டங்கள், உள்ளத்தை 
வலிமைப்படுத்தும்! 
– ஃபிளெமிங்
/////////////////////////
உன்னை
"புரிந்து கொள்ளாத
எதுவும் உன்னுடன்
'- நிலைப்பதில்லை
உன்னை
புரிந்து கொண்ட
எதுவும் உன்னை விட்டு..
விலகுவதும் இல்லை.
///////////////////
சரியானது எது என்று தெரிந்த
பிறகும் அதைச் செய்யாமல்
இருப்பதற்குப் பெயர்தான்
கோழைத்தனம்..!
///////////////////////
குறை இல்லாத மனிதன் 
என்று யாருமில்லை
அதை குறைக்க தெரியாதவன்
மனிதனேயில்லை இல்லை
////////////////
சாவின் விளிம்புவரை
சென்றவன் கும்பிடாத
தெய்வங்களே இல்லை,
கஷ்டத்தின் விளிம்புவரை
சென்றவன் திட்டாத
தெய்வங்களே இல்லை!
///////////////////////
கோவித்துவிடுவார்களோ என
ஒவ்வொரு வார்த்தையும்
தேர்ந்தெடுத்து பேசுவதற்கு,
பேசாமல் அமைதியாக 
இருப்பதே
மேல்!.
//////////////////
எதிரி எப்பவுமே
எதிரிதான்
நண்பன்தான் அடிக்கடி
பரிசீலிக்கபட 
வேண்டியவன்  
////////////////////////
அதிர்ச்சியை
அலட்சியமாக
கடக்க பேரதிர்ச்சியை
அனுபவித்தவர்களால்
தான் முடியும்.....
//////////////////
'வேற வீட்டுக்கு வாழ போற
பொண்ணு' என்பதே காரணம்,
மகளின் மீதான அம்மாவின்
கண்டிப்பிற்கும் அப்பாவின்
அதீத செல்லத்திற்கும்!
///////////////////////////
விருப்பம் இருந்தால் ஆயிரம்
வழிகள்;
விருப்பம் இல்லாவிட்டால்
ஆயிரம் காரணங்கள்.
///////////////////////////////
தவறுகள் வெற்றியின் முதற்படி
என்பது உண்மையல்ல..!
திருத்தப்பட்ட தவறுகளே
வெற்றியின் முதற்படி..!
/////////////////////////
பெண் ஒரு அழகிய இசைக்கருவி,
இரைச்சல் வருகிறதே என்று குறை
சொல்வது முட்டாள்தனம்.
மீட்டத் தெரியவில்லை என்பதை
ஒத்துக்கொள்ளுங்கள்.!
/////////////////////////////
சூரியன் உதிக்கும் போதும்,
மறையும் போதும் #ரசிக்கும்,
இந்த #உலகம்.
 #உச்சிக்கு 
வந்தால் திட்டித்தீர்க்கும்.!
#சூரியனை மட்டுமல்ல..
#மனிதனின்
 வளர்ச்சியையும்
 கூட தான்..!!
/////////////////////////////
ஒரு #கல்,
எவ்வளவு #தூரம்
#பயணிக்க வேண்டும் என்பது
நாம் எறியும் #விசையை 
பொருத்தது,
ஒரு #சொல்,
எவ்வளவு தூரம்
பயணிக்க வேண்டும் என்பது
நாம் சொல்லும் #நாவை பொருத்தது.
////////////////
காத்திருப்பில் எல்லாம் கனிந்து 
விடுமென்றும் இருந்து விடாதீர்கள்,
சில நேரங்களில்
அவை அழுகியும் விடலாம்.....
///////////////
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
/////////////////
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
///////////
தவறுகள் அனுபவங்களை 
கொடுக்கும்.
அனுபவங்கள் தவறுகளை
 குறைக்கும்.
////////////////////////////
தன்னந்தனியே 
எவனொருவன் 
நிற்கத்
 துணிகிறனோ அவனே 
வலிமை மிக்க மனிதன்.
ஹென்றி இப்ஸன்
//////////////////
"படிப்பு தகுதி"
இங்கே
விவசாயி என்பதற்கான
படிப்புத் தகுதி
"படிக்காமல் இருப்பதே"
என நிர்ணயி க்கப்பட்டிருக்கும் 
போல!
படிக்காதவன் மட்டுமே
 விவசாயி ஆகிறான்!
.///////////////////////
#இரை எங்கு இருந்தாலென்ன
#இறக்கையாய் உந்து சக்தி
 உன்னோடு இருக்கையில்!
#இலக்கு தொலைவில்
 இருந்தாலென்ன 
ஈட்டியாய் பாயும் 
உன் #நம்பிக்கை இருக்கையில்!
/////////////////////////////
போராட்டம் எத்தனை
 வந்தாலென்ன,
#எரிமலையாய் 
#துணிவு
 இருக்கையில்!
/////////////////////////
#சவால்கள் எத்தனை 
வந்தாலென்ன,
#சாதிக்க நீ வெறியுடன் 
துடிக்கையில்!
/////////////////////////
#ஆயிரம் கைகள்
 மறைத்தாலென்ன
#ஆதவனை மறைக்க இயலுமா
ஆயிரம் #செம்மறிகள் சேரினும்,
#சிங்கத்தை எதிர்க்க இயலுமா,  
/////////////////////////////////
ஒரு #கல்,
எவ்வளவு #தூரம்
#பயணிக்க வேண்டும் 
என்பது
நாம் எறியும் #விசையை 
பொருத்தது,
ஒரு #சொல்,
எவ்வளவு தூரம்
பயணிக்க வேண்டும்
 என்பது
நாம் சொல்லும் 
#நாவை பொருத்தது.
///////////////////////////
மனைவியிடம் மண்டியிட்டு
 மன்னிப்பு கேட்டால் 
அது "யோகா". 
மனைவி திட்டுவதை காதில் 
வாங்கி கொள்ளாவிட்டால் 
அது "தியானம்".
யோகாவும் தியானமும்

 நம் வாழ்க்கைக்கு 
ரொம்ப முக்கியம் மக்களே...
////////////////////////
நீ நேசிக்கும் இதயத்தில்
 பல ஆண்டு காலம் வாழ்வதை விட
 உன்னை நேசிக்கும் இதயத்தில் 
சில நொடிகள் வாழ்ந்து பார்
 இதயத்தில் சுகம் தெரியும்
🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄
வளர்ந்த பின் வளைவது
 பெருமை..
 வளைந்தே இருப்பது 
சிறுமை..
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
விரும்புவதால் கருவறையில்
 மீண்டும் ஒருமுறை 
இடம் கிடைப்பதில்லை
வெறுப்பதால் கல்லறையும் 
நம்மை விட்டுவிட போவதில்லை 
இருக்கும்வரை மகிழ்சியாக 
இருப்பபோம்..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
















No comments:

Post a Comment