Tuesday, November 3, 2020

THOUGHTS - 2017...

காேயில் வாசல்
பிச்சைகாரனெல்லாம்
நாத்திகனே ...

காசை  கடவுளிடம்
கேட்பதில்லை .
மனிதனிடமே  
கேட்கிறான்...
///////////////////////////////
கடவுள் இருக்கார் !!!
கோயில்ல சிலையா !!!
வீட்ல அப்பா அம்மாவா !!!
/////////////////////////////
கல்லை கடவுளாக
நினைக்கும்போது
இருக்கும் பயம்.
அந்த கடவுளை திருடும்
திருடனுக்கு ஏன் இருப்பதில்லை..!
தன் வறுமைக்காக
திருட சொன்னதே
அந்த கடவுள் என்பானோ..!
/////////////
கடவுள்
இல்லையென்றால்
எந்த சமூகம்
பொருளாதாரரீதியாக
பாதிக்கப்படுமோ
மற்றவர்களை
மூடநம்பிக்கைகளுக்குள்
அழுத்தி வைத்திருந்தால்தான்
தன்னால் பிழைப்பு நடத்த முடியும்
என எந்த சமூகம் எண்ணுகிறதோ
அந்த  சமுகம்தான் புராணங்கள்
 மூலமும் வேதங்கள் மூலமும்
கடவுள் பிம்பத்தை
கட்டமைத்து காத்து வருகிறது.....
///////////
 கல்லை கடவுளாக
நினைக்கும்போது
இருக்கும் பயம்.
அந்த கடவுளை திருடும்
திருடனுக்கு ஏன் இருப்பதில்லை..!
தன் வறுமைக்காக
திருட சொன்னதே 
அந்த கடவுள் என்பானோ..!
 //////////
 பூனையை விட சிங்கம்
 வலிமையானது என்று
ஒரு பாேதும் ஏற்றுக் 
காெள்வதே இல்லை எலிகள்
//////////////////
  தற்செயலாய்
 கிடைப்பதில்லை வெற்றி...  
தன் செயலால் 
கிடைப்பதுதான் வெற்றி…
 //////////////
 பேசுவதற்காக கண்டுபிடித்த
கைபேசி
எல்லாேரையும் ஊமை
யாக்கிவிட்டது
 ////////////
  அதிக நேரம் இருக்காது
"அதிர்ஷ்டம் "
நீண்ட நேரம் வராது
"சிபாரிசு "
எல்லாப்  பாெழுதும் கிட்டாது
"உதவி "
எப்பாேதும்  ஜெயிக்கும்
"தன்னம்பிக்கை "
////////////
 Wife cool ஆ இருந்தா
 சாப்பாடு Hot ஆ கிடைக்கும்..
Wife Hot ஆ இருந்தா 
சாப்பாடு Cool ஆ கிடைக்கும் 
அவ்ளோ தானுங்க வாழ்க்கை.
 //////////////
  இந்த உலகிற்கு
நான் வந்ததற்குக் காரணம்
எனது பெற்றோர்; 
 இந்த உலகம் என்னிடத்தில்
 வந்ததற்குக் காரணம் 
எனதுஆசிரியர்
 -அரிஸ்டாட்டில்-
////////////

சிபாரிசு ஒருவரை 
அறிமுகம்  மட்டும் செய்யும்..
அவரின் திறமைதான்
 நிலைபெற செய்யும்...!
////////
 வெல்பவர்கள் 
தளர்வதில்லை 
தளர்பவர்கள் 
வெல்வதில்லை 
////////////////////
 மௌனமாயிரு:
 எல்லாம் இருந்தும்
மௌனமாயிருக்கும்
நூலகம் போல

 /////////////////////////
வீரனை எங்கும்
 ஒளித்து வைக்கவும் 
முடியாது...!
கோழையை
 எங்கும் நிறுத்தி 
வைக்கவும் முடியாது...!
/////////////
மனோ தைரியத்தை
இழந்துவிட்டால்
மனிதன் எல்லாவற்றையும்
இழந்தவனாகிறான்..
/////////////////
 உதிர்ந்த பூக்களுக்காக
கண்ணீர் விடாதே.
மலர்கின்ற பூக்களுக்கு
 தண்ணீர் விடு…
 ///////////////
 பிறப்பது ஒரு முறை,
வாழ்வதும் ஒரு முறை,
 பிறகு எதற்கு
 "கோபம்" என்னும்
 "வன்முறை".
 /////////////////////
 கதை கட்ட ஒருவன் 
பிறந்துவிட்டால்
 கண்ணகி வாழ்விலும்
 களங்கமுண்டு.
காப்பாற்ற சில பேர்
 இருந்து விட்டால் 
கள்வர்கள் வாழ்விலும்
 நியாயமுண்டு....!!
. /////////////////////  
எந்நேரமும் உதடுகளில் ஒரு 
புன்னகையை வைத்திருங்கள்.
அது தருகிற தன்னம்பிக்கை 

வேறு எங்கேயும் கிடைக்காது.....!!
 ////////////
நீளமான நான்கு
 விரல்கள் இருந்தாலும்
அதில் குட்டையான கட்டை விரலே
செல் போனில் தட்டச்சு செய்கிறது
உருவத்தை வைத்து எடை போடாதே
///////////////////
தான் மட்டும் முன்னேறினால்
முயற்சியாளன்...
தன்னை சுற்றி இருப்பவர்களையும்
முன்னேற்றினால் வெற்றியாளன்...
/////////////////
 மனோ தைரியத்தை 
இழந்துவிட்டால்
மனிதன் எல்லாவற்றையும்
இழந்தவனாகிறான்..
 ////////////
 உண்மை எளிதாக
பேசிவிடலாம்!
பொய் பேச
அதிக திறமை வேண்டும்!
அடுத்த பொய் பேசும்முன்
,முன்பேசிய
பொய் நினைவில்
நிலை நிறுத்தனும்.!
உண்மைக்கு
அந்த அவசியமில்லை.!!!
////////////////
 கோபம் என்பது பிறர்
செய்யும் தவறுக்கு
நமக்கு நாமே கொடுத்து
கொள்ளும் தண்டனை
////////////
  துன்பம் வரும் போதும்,
இன்பம் வரும் போதும்
கூடவே இருக்கும்
ஒரே நண்பன் நமது
உழைப்பு மட்டும் தான்
 ////////////////
 ஒருவர் இதயத்தில்
 இன்னொருவர் 
வாழ்வது காதல்,
ஆனால்
 ஒருவர்
 இன்னொருவரின் 
இதயமாக வாழ்வது நட்பு
 /////////////
 நினைவுகளை 
உங்களுக்குள் சுமப்பது  வெற்றியல்ல..
உங்களுடைய நினைவுகளை  
அடுத்தவரை சுமக்க வைப்பதுதான் 
 முழுமையான வெற்றி
 /////////////
  "அநுபவம் "
அ--அறிதல் (தெரிந்து கொள்ளுதல்).
நு--நுகர்தல் (அறிந்தவற்றை நுகர்தல் ).
ப--பகர்தல் (நுகர்ந்ததை பகர்தல் ).
வ--வரவேற்றல்

 (நல்ல கருத்துக்களை வரவேற்றல் ).
ம்--கற்றுத் தெளிந்து விட்டோம் 

என்பதைக் குறிக்கும் அறிகுறி.
( எல்லாம் தெரியும் என்பதற்கு "ம்' 
என்று சொல்வது மரபு."
//////////////////
  தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல்
இந்த மூன்றும் தான் ஒருவனை
எப்போதும் காப்பாற்றி
வழி நடத்திச் செல்லும்.
///////////// 
 குற்றம் புரிந்தவனும் தனக்கு
 நியாயம் கேட்கிறான்.
குற்றத்திற்கு ஆட்பட்டவனும்
தனக்கு நியாயம் கேட்கிறான்...
யாருக்கு அதை வழங்குவது என்பதை
 பணம் முடிவு செய்கிறது..!!!
-கவிச்சக்ரவர்த்தி கண்ணதாசன்..
 //////////////////////
 ஒவ்வொருவருக்கும் மற்றவரின் 
குறைகள் "பளிச்"சென்று தெரிகிறது.
ஆனால்... அவரவரின் குறைகள்
மங்கலாகக் கூடத்தெரிவதில்லை

//////////////
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து 
கொள்வதற்கு
 நம்மை நாமே முதற்கண்
புரிந்து கொள்வது அவசியம். -

//////////////////
செயல் நோக்கத்துடன் விதைகளைத் 
தூவிவிட்டு,
 அதைத் தேடி, உண்மையாக உழைப்பவனே....
."வெற்றி" என்னும் நற்கனிகளை 
பெற தகுதியானவன்
//////////////
பணத்திற்கு தலைவனாய் இருந்தால்
 அதை நல்ல செயலுக்கு
 பயன்படுத்துவாய் ,
அதே பணத்திற்கு
 நீ அடிமையாயிருந்தால் 
அது உன்னை தீய 
செயல்களுக்கு 
பயன்படுத்திக்கொள்ளும்.
/////////////
 Be defeated to become victoriuos.*
தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?
*அம்மாவிடம் தோற்று போ,

 அன்பு அதிகரிக்கும்..*
*அப்பாவிடம் தோற்று போ, 

அறிவு மேம்படும்..*
*துணையிடம் தோற்று போ,

 மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*
*பிள்ளையிடம் தோற்று போ,

 பாசம் பன்மடங்காகும்..*
*சொந்தங்களிடம் தோற்று போ,

 உறவு பலப்படும்..*
*நண்பனிடம் தோற்று போ,

 நட்பு உறுதிப்படும்..*
*ஆகவே தோற்று போ,*
தோற்று போனால்

 வெற்றி கிடைக்கும்
/////////////////////////
உங்களால் பறக்க முடியாவிட்டால் 
ஓடுங்கள்.ஓட முடியாவிட்டால் 
நடந்து செல்லுங்கள்..நடக்கவும் முடியாவிட்டால் 
தவழுங்கள்...இலக்குகளை நோக்கி சென்று 
கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது...
////////////////
உன்னை நேசிக்கும் இதயத்தை, 
சாகும் வரை மறக்காதே...
உன்னை மறந்த இதயத்தை,

 வாழும் வரை நினைக்காதே..
/////////////
பொறுமையும், விடா முயற்சியும், 
தன்னம்பிக்கையும்,
சகிப்புத் தன்மையும், தெளிவான 

சிந்தனையும் இருந்தால்......
வாழ்க்கையில் வெற்றிகள் பல குவிக்கலாம்....!
/////////////
வெற்றி -
உனக்கு கொண்டாட மகிழ்ச்சியை தரும்.
 தோல்வி - போராட உனக்கு
 போதுமான வெறியை தரும்.
வெற்றி - உன்னை யாரென்று
 இந்த உலகத்திற்கு காட்டும்.
தோல்வி - நீ யாரென்று
உனக்கே காட்டும்...
/////////////////////////
உதிர்ந்த மலருக்கு
 ஒரு நாளில் மரணம்.
பேசாத உறவுக்கு 
தினம் தினம் மரணம்..
உரியவர்களிடம் 
உரிமையோடு பேசுங்கள்.
உறவுகளை அன்புடன் நேசியுங்கள்..
அன்பை மட்டுமே சுவாசியுங்கள்...
///////////////////
"இது என்னுடையது" 
என்று நினைக்கும் வரை,
 எதையும் விட்டுக் கொடுக்க 
நாம் தயாரில்லை.
"எதுவும் என்னுடையது அல்ல" என்கிற
 பக்குவம் வரும்போது,
விட்டுக் கொடுக்க 
நம்மிடம் ஏதும் இருப்பதில்லை
/////////////////////////
ஆசைகளை அடியோடு ஒழிப்பது
அவ்வளவு எளிதான செயல் அல்ல.
அதற்கு தேவையும் இல்லை. பதிலாக,
 நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து
 வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.
////////////////////
அன்பு என்ற தலைப்பில்
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்...
"அம்மா" யென்றேன் உடனே !
கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்
நீ...என்று !

///////////////////
''பயந்தாங்கொள்ளி, 
திறமைசாலி, புத்திசாலி... யார்?''
''சர்க்கஸ் பார்த்துக்கொண்டு இருக்கும்போது,
எதிர்பாராதவிதமாக சிங்கம் கூண்டைவிட்டு
 வெளியேறிப் பார்வையாளர்கள் மீது பாய்ந்தால்,
அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறவன்
 பயந்தாங்கொள்ளி.
சிங்கத்தை அடக்க முயல்கிறவன்
 திறமைசாலி.
அந்தக் கூண்டுக்குள் ஓடிப் போய்க்
கதவைச் சாத்திக்கொள்கிறவன், 
புத்திசாலி!''
/////////////////////
வாழ்வை வளமாக்கும்
சிந்தனைகள்!

1. நாணயமாக இருப்பவனிடம்
 எப்போதும்
 குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத்
 தெரியவேண்டுமானால்
 பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை
விலைக்கு வாங்குபவன்
திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய
ஆரம்பிக்கிறதோ
 அப்போதுதான்
வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும்
 முதலீடு எப்போதுமே
கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட
 உயர்ந்த வரமும் இல்லை.
 கெட்ட மனைவியை விட
மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான்.
 பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து
ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம்.
ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான
ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும்
நடந்து விடலாம்.
 ஆனால் இரண்டு கை உள்ள
எல்லோருமே எழுதிவிட முடியாது.

10. உழைப்பு உடலை வலிமையாக்கும்.
 துன்பங்களே மனதை வலிமையாக்கும்
//////////////////////////////
 எதையும், எல்லாவற்றையும்
 உங்களால் செய்ய இயலும்...
அதற்குண்டான அனைத்து
சக்தியும் உங்களிடம் உள்ளது
என்பதை நீங்கள்
 முழுமையாக நம்புங்கள்......
 //////////////
மற்றவர்கள் உன்னை கீழே வீழ்த்த
முயன்றால்,
நீ அவர்களுக்குமேலே இருக்கிறாய்
என்று அர்த்தம்..
 ////////////////////////////////
 உழைக்கும்போதே
வெற்றியைப் பற்றி
எண்ணிக்கொண்டிருக்காமல்,
உழைப்பை
கடமையாக கொள்ளுங்கள்..
இயற்கை நியதிப்படி,
 வெற்றி விளைந்தே தீரும்
 ///////////
 மூன்று வழிகள் …...முன்னேற

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக 
அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக 
உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
3. பிறரைக் காட்டிலும் குறைவாக
 பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
/////////////////////////
எதைப் பற்றியும் பிறருக்குக் 
கற்றுக் கொடுக்க 
என்னால் முடியாது;
அவர்களை சிந்திக்க 
வைக்க மட்டுமே
 என்னால் முடியும்
-.சாக்ரடீஸ்.
//////////////////////
ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் 
ஒரு சிறைச்சாலையை மூடுகிறான்
. -விக்டர் ஹியூகோ. 
//////////////////// 
 சமத்துவம் என்பது 
சமமாக நடத்தப்படுவது அல்ல
சம வாய்ப்புகளைப்
 பகிர்ந்துகொள்வது!
-ஏங்கல்ஸ்
///////////////////////////
 சுதந்திரம் என்பது 
கொடுக்கப்படுவதல்ல;
எடுக்கப்படுவது!
- -நேதாஜி--
///////////////////// 
 சிரிப்பு(த)த்துவம்
திருந்துரவன்
 மன்னிப்பு கேட்பான்,
ஆனால்,
மறுபடி மறுபடி 
மன்னிப்பு கேட்பவன் 
திருந்த மாட்டன்
/////////////////
 மலையளவு சொல்லை விட
கடுகளவு செயலே சிறந்தது...
////////////////// 
கோபத்தில் எது கிடைத்தாலும்
வீசி எறிய எல்லோராலும் முடியும்
அந்த கோபத்தையே வீசி எறிய
ஒரு சிலரால் மட்டும் முடியும்..
//////////////////
வெயில் பிடிக்கவில்லை என்றாலும்
ஒதுங்குவதில்லை
அலைகின்றோம்!!!
மழை மனதுக்கு பிடித்திருந்தாலும்
நனைவதில்லை
ஒதுங்கியே நிற்கின்றோம்!!!?
//////////////////
 எதர்த்தமான  உண்மைகள்*
*****************************
*இறப்பு எல்லோருக்கும் வந்தே தீரும்; 
ஆனால் யாரும் இறக்க விரும்புவதில்லை. 
ஆனால் இன்று நிலைமை  விபரீதமாக உள்ளது.*

*உணவுஎல்லோருக்கும் வேண்டும் 
ஆனால் யாரும்; பயிர் செய்ய விரும்புவதில்லை.*

*தண்ணீர் எல்லோருக்கும் வேண்டும் யாரும் 
அதை சேமிக்க விரும்புவதில்லை*

*பால் எல்லோருக்கும் வேண்டும், யாரும்
 பசுவை வளர்க்க விரும்புவதில்லை.*

*நிழல் எல்லோருக்கும் வேண்டும் , 
யாரும் மரம் வளர்க்க விரும்புவதில்லை.*

*மருமகள் எல்லோருக்கும் வேண்டும்,
 யாரும் மகளை பெற்றெடுக்க விரும்பவில்லை.*
  *முடியும் என்று நினைப்பது போல் 
முடியாது என்ற நினைப்பும் அவசியம்.*
*அப்போதுதான் தோல்விகளைத் தவிர்க்க முடியும்.*

*நீ பலமுள்ளவனாக இருக்க விரும்பினால்*
*உன் பலவீனங்களையும் தெரிந்துகொள்.*
*அடிக்கடி அவசியம் இல்லாததை வாங்கினால்*
*விரைவில் அவசியம் உள்ளதை விற்க வேண்டி வரும்.*

*உனது முயற்சி உன்னை பல முறை கைவிடலாம்*
*ஆனால் ஒரு முறை கூட உனது முயற்சியை கைவிடாதே !*
/////////////////////////// 
 நாக்கை
 சிறைவைக்கவில்லை என்றால்…
அந்த நாக்கே 
சிறை செல்ல காரணமாகிவிடுமே...!.

நாக்கு ஒரு தீ !......
ஆக்கவும் அழிக்கவும் வல்லது...
கவனமாக பயண்படுத்தலாமே..
//////////////// 
வெயில் பிடிக்கவில்லை
 என்றாலும் 
ஒதுங்குவதில்லை                         
அலைகின்றோம்!!!  
 மழை மனதுக்கு 
பிடித்திருந்தாலும்
 நனைவதில்லை
ஒதுங்கியே நிற்கின்றோம்!!!?
///////////////////////// 
  லைமுறை தலைமுறையாகப் 
பின்பற்றி  
 வரப்படும் பழக்கம்
 என்பதற்காகவோ, 
 நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் 
என்பதற்காகவோ
எந்த ஒரு கருத்தையும்
 நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல்
ஏற்றுக்கொள்ளக் கூடாது!
-புத்தர்
////////////////////////
  வாழ்க்கையில் இரண்டு 
வாய்ப்புகள் உள்ளது.
 ஒன்று உன்னால்
 மாற்ற முடியாதவற்றை 
ஏற்றுக் கொள்வது 
அல்லது 
ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை
 மாற்றிக்காட்டுவது....!!!
////////////////
ஜெயிக்கணும்ன்னு
 முடிவு பண்ணிட்டா..
மற்றவங்க விமர்சனங்களை பற்றி 
கவலைப்படுறத நிறுத்திடணும்...
//////////////// 
தன்னம்பிக்கை.
நீ விழுந்த போதெல்லாம்

தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை;

மனம் உடையும் போதெல்லாம்

தட்டிக் கொடுக்கும் இந்தக் கை;

தனியே நீ அழும் போதெல்லாம்

உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை;

-அது வேறு யார் கையும் அல்ல,

உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை.

அதை மட்டும் ஒரு போதும் இழந்து விடாதீர்கள்..
/////////
நேற்று வரை புத்தகமே
எல்லாம் என்றிருந்தேன்!
இன்று கைப்பேசியே 
எல்லாமாய் மாறிப்போனேன்!

நேற்று வரை முகம் பார்க்கும்
நட்பையே நினைத்திருந்தேன்!
இன்று முகநூல் நட்பையே
நினைத்திருக்கிறேன்!

நேற்று வரை
 இறை சிந்தனையிலிருந்த நான்!
இன்று இணைய சிந்தனையில்
 இடமாறிப் போனேன்!

நேற்று வரை கடமையாக
 செய்தவை எல்லாம்!
இன்று கடமைக்கு
 செய்வதாய் மாறிப் போனேன்!

நேற்று வரை உறவுகளே
 எல்லாமாய் இருந்தேன்!
இன்று உறவுகளிடம் 
ஏனோ தானோ என்றானேன்!

நேற்று வரை வாழ்க்கையின்
 தேடலில் இருந்தேன்!
இன்று வாட்ஸ் அப் தேடலில் 
மாறித்தான் போனேன்!
///////////////////////////////
 விதைக்குள்ளே இருந்துவிட்டால்
வெளியே வராது  ஆலமரம்...!!!

உங்களுக்குள்ளே இருந்துவிட்டால்
வீணாகும் உங்கள் திறம்...!!
திடமான முடிவெடுங்கள்!
திறமையுடன் முன்னேறுங்கள்!! 
கடின உழைப்பை காணிக்கையாக்குங்கள்
வருங்காலம் உங்களோடு...!!!! 
/////////////////////////
பூமியில் விதைக்கப்பட்ட
 விதை கூட
எதிர்ப்பைச் சமாளித்து
 முளைத்துக் காட்டுகிறது.....!!!

ஒவ்வொரு நாளும்
காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது.......!!!

பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக
விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில்
புலம்பாமல் வாழ்கின்றன......!!!

மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன.......!!!

ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும்
மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன......!!!

சிறியதான உடலையும்,
பல கஷ்டங்களையும் சமாளிக்க
வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல்
வாழ்ந்து காட்டுகின்றன.......!!!

தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்
உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன.......!!!

ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை
என்ற நிலையிலிருக்கும் பலவகை
பூச்சிகளும், அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன.......!!!

இப்படி பலகோடி உயிரினங்கள்
உலகில் வாழ முடியுமென்றால்
நம்மால்
வாழ முடியாதோ.......? 
///////////////////////
 மாற்றத்தை நீங்கள் விரும்பினால் 
அதை முதலில் உங்களிடமிருந்துதான் 
துவங்கவேண்டும்
//////////////////////////// 
 உழைப்பவனுக்கு என்றைக்கும் 
பெயா் கிடைக்காது
 என்பதற்க்கு உதாரணம்
" கோழி கூவுது ".. 
கூவுறது என்னமோ சேவல்
//////////////////// 
 மற்றவர்களை எடைபோடுவதில் 
காலத்தை வீணாக்காதீர்கள். 
ஏனெனில் அவர்களை நேசிப்பதற்கு 
உங்களுக்கு நேரமில்லாமல் போகும்

கதை கட்ட ஒருவன்
 பிறந்துவிட்டால்
 கண்ணகி வாழ்விலும்
 களங்கமுண்டு....

காப்பாற்ற சில பேர்
 இருந்து விட்டால்
 கள்வர்கள் வாழ்விலும் 
நியாயமுண்டு....!!

உண்மையே சொல்ல 
அனைவராலும் முடியும்..
ஆனால்
அதனால் ஏற்படும் 
இழப்புகளை 
தாங்கிக்கொள்ள முடியாது
என்பதால் தான்
பொய் வாழ்கிறது.
//////////////
ஒரு தவறு செய்வதற்கு முன் 
யாருக்கும் தெரியாது 
என்று நினைக்க வேண்டாம்.
உங்களுக்கு தெரியும்.
///////////////
உள் மனதிற்கு பயந்து
 வாழுங்கள், 
மற்றவர்களுக்கு அல்ல.
/////////////////////
நீங்கள் சாப்பிடும் உணவில்
 உங்கள்பெயர் உள்ளதா 
என்று தெரியவில்லை .....
ஆனால்....
நீங்கள் வீணாக்கும்
 உணவில்அடுத்தவர்
 பசி உள்ளது.......!!
//////////////////////

சவால் என்ற_வார்த்தைக்குள்ளே 
வாசல்_என்ற_வார்த்தை
மறைந்திருக்கிறது,
 நீங்கள்_எதிர்கொள்ளும்_
சவால்களிலேதான்
திறக்கின்றன 
 உங்கள்_எதிர்காலத்திற்கான_
வாசல்கள்.
////////////
நம்பிக்கை_உள்ளவனைப்_
புதைத்தாலும்_
முனளப்பான்_
விதைகளைப் போல.
திறமையால்_
விதைத்து_விடுங்கள்,
கருணையால்_
முளைத்து_விடுங்கள் !
//////////////// 
 தோல்விகள் சூழ்ந்தாலும். 
இருளை விளக்கும் கதிரவன் போல 
அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் 
கால் அடி எடுத்து வையுங்கள். 
முடியும் வரை அல்ல, 
உங்கள் இலக்கினை அடையும் வரை. 
இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்
///////////////// 
✍அழகான வரிகள்....
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல..
 மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க 
துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
ஆசை படுவதை மறந்து விடு.. 
ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் 
உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது
 நாம் தேடி கொள்ளும் வறுமை..
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
சில நேரங்களில் தனிமை கடினம்..
 சில நேரங்களில் தனிமை
 தான் இனிமையான தருணம்!..
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
மரணத்தை பற்றி கவலை படாதே..
 நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. 
அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.
. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்..
 வெற்றி நிச்சயம்!
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
வாழ்க்கை உன்னை எதிர்பாராத
 இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. 
அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
அறிவுரை தேவைப் படும் போதுதான் 
ஆணவம் கண்ணை மறைக்கும்..!
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. 
உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..!
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
நீ நேசிக்கும் இதயத்தில் பல
 ஆண்டு காலம் வாழ்வதை விட
 உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் 
வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
வளர்ந்த பின் வளைவது பெருமை.. 
வளைந்தே இருப்பது சிறுமை..
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
விரும்புவதால் கருவறையில் மீண்டும்
 ஒருமுறை இடம் கிடைப்பதில்லை
வெறுப்பதால் கல்லறையும் நம்மை 
விட்டுவிட போவதில்லை
 இருக்கும்வரை மகிழ்சியாக இருப்பபோம்..
 ******
 இரண்டரை மணி நேரம் பார்க்கும்
சினிமாவிற்கே போரடிக்காமல் இருக்க
வில்லன்கள் தேவைப்படும்போது
நீண்ட நெடிய நம் வாழ்க்கைக்கிற்கு
சில எதிரிகளும்
பல துரோகிகளும் அவசியம் தானே.
/////////////////
*தோல்வி*
என்றால் நீங்கள் தோற்றவர் என்று
பொருள் அல்ல. நீங்கள் இன்னும்
வெற்றி பெறவில்லை என்று
பொருள்.
*தோல்வி*
என்றால் நீங்கள் எதையுமே
சாதிக்கவில்லை என்று
பொருள் அல்ல. சில
பாடங்களைக் கற்றுக்கொண்டு
இருக்கின்றீர்கள் என்று
பொருள்.
*தோல்வி*
என்றால் நீங்கள் அவமானப்பட்டு
விட்டதாக பொருள் இல்லை.
முயன்று பார்க்கும் துணிவு
உங்களிடம் உள்ளது என்று
பொருள்.
*தோல்வி*
என்றால் வாழ்க்கை வீணாகி
விட்டதாகப் பொருள் இல்லை.
மீண்டும் ஆரம்பிக்க ஒரு
வாய்ப்புக் கிடைத்துள்ளது
என்று பொருள்.
*தோல்வி*
என்றால் விட்டு விட
வேண்டும் என்று பொருள்
அல்ல இன்னும் செம்மையாக
உழைக்க வேண்டும் என்று
பொருள்.
*தோல்வி*
என்றால் உங்களால் அடைய
முடியாது என்று பொருள்
அல்ல அடைய கொஞ்சம் காலம்
தாமதமாகலாம் என்று பொருள்.
*தோல்வி*
என்றால் கடவுள் உங்களைக் கை
விட்டு விட்டார் என்று
பொருள் இல்லை. உங்களுக்கு
வேறு நல்ல எதிர்காலத்தை
நிர்ணயம் செய்து வைத்து
இருக்கிறார் என்று
..உவர்ப்பாக இருக்கும் வியர்வை துளிதான் 
உங்கள் வாழ்க்கையை
இனிப்பாக மாற்றும்...!

எப்போதும் நதிபோல 
ஓடிக்கொண்டேயிருங்கள்...!
அப்போது தான்
உங்கள் இலக்கை நீங்கள் 
விரைவாகத்
தொடமுடியும்....!
/////////////////
தொடக்கத்தை
சரியாக திட்டமிட்டு
தொடங்கினால்
முடிவு மிகச்சரியாக
இருக்கும்…!!
/////////////////////
💢தர்மம் செய்ய 
10 ரூபாய் பெரியது
~~~~~~~~~~~~~~~~
💢ஷாப்பிங் போக 
1000 ரூபாய் ரொம்ப சிறியது
~~~~~~~~~~~~~~~~~~
💢ஒரு பக்கம் 
கீதையை படிக்க அலுப்பு
💢100 பக்க வார இதழ் 
படிக்க ஆர்வம்
~~~~~~~~~~~~~~~~~~
💢1 மணி நேரம் கடவுளை 
வணங்க சலிப்பு
💢3 மணி நேரம் சினிமா விருப்பம்
~~~~~~~~~~~~~~~~~~~
💢பத்திரிக்கை செய்திகளில் 
எந்த சந்தேகமும் இல்லை
💢வேத வார்த்தைகளில் 
ஆயிரம் சந்தேகம்
~~~~~~~~~~~~~~~~~~~
💢மந்திரம் ஓதுகையில் 
வார்த்தைகளின் தடுமாற்றம்
💢புறம் பேசுகையில் ஒரு வார்த்தை
 கூட தடுமாறுவதில்லை
~~~~~~~~~~~~~~~~~~~
💢பொழுது போக்க முதல் வரிசை
💢கோவிலுக்கு வந்தால் கடைசி வரிசை, 
அதுவும் கதவின் வெளியே
~~~~~~~~~~~~~~~~~~~
💢அனாவசியம்மா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை
💢இருபது நிமிட தியானம் கசக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~
💢மண்டியிட்டு 2 நிமிடம் இறைவனை வணங்க அலுப்பு
💢செல் போணை தோய்வில்லாமல் தேய்ப்பு!

படித்த உண்மை
படிக்காமல் #சரஸ்வதியை கும்பிட்டாலும் ?
உழைக்காமல் #லக்ஷ்மியை கும்பிட்டாலும் ?
#கல்வியும் கிடைக்காது? #செல்வமும் கிடைக்காது?
என்னைக்கவர்ந்த பகிர்வு!
*நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, 
நான் செய்த எந்தத் தவறுக்கும் 
சாட்சி இல்லை என்பதே*
///////////////////
ஓர் உயிருக்கு 
இன்னொரு உயிரை
 உணவாகப் படைத்த 
கடவுளிடமிருந்து என்ன 
விதமான கருணையை
 எதிர் பார்க்கிறீர்கள்?*
🏓🏓🏓🖥🏓🏓🏓
கடைசியில் இது சரியாகும் 
என்று நம்புங்கள். 
சரியாகாவிட்டால் 
இது கடைசி இல்லை 
என்று நம்புங்கள்.*
🏵🏵🏵🖥🏵🏵🏵
*ஆசையை கட்டுப்படுத்த 
புத்தனாக 
பிறக்கத் தேவையில்லை. 
நடுத்தர குடும்பத்தில் 
ஆணாக பிறத்தலே
 போதுமானதாகிறது.*
 ////////////////////
சீதை யின் தீக்குளிப்பில் 
நிரூபிக்கப்பட்டது 
இராவணனின் கற்பு.*
/////////////
வெள்ளி இரவுப் பேருந்துகள்
 கனவுகளையும், 
ஞாயிறு இரவுப் பேருந்துகள் 
நினைவுகளையும் 
சுமந்து செல்கின்றன.*
🏈🏈💻🏈🏈🏈
வாழ்ந்து முடித்த கோழியும் 
வாழ வேண்டிய முட்டையும் 
ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே 
பிரியாணி என்கிறோம்.*
⏰⏰⏰🖥⏰⏰⏰
ஒரு நாளைக்கு ஐந்து டிரெஸ் 
மாற்ற வேண்டுமானால் 
பணக்காரனாக இருக்க வேண்டிய 
அவசியமில்லை, 
கைக்குழந்தையாக 
இருந்தாலே போதும்.*
🛢🛢🛢🖥🛢🛢🛢
உயிர் மட்டுமே உலகின் 
சிறந்த வாசனைப் பொருள். 
அது இல்லையேல்
 உடல் நாற்றமெடுக்கும்.*
♻♻♻🖥♻♻♻
ஏமாற்றங்கள் பழகிவிட்டன. 
இந்த முறை அதில் என்ன புதுமை 
இருக்கப் போகிறது
 என்ற ஆவல் தான் அதிகமாக
 எதிர்பார்க்க வைக்கிறது.*
🖥🛢🖥🛢🖥🛢🖥
உலகத்தின் குறைகளை
 எல்லாம் கண்டு பிடிக்கும் 
சிலருக்கு தன் குறைகள் 
மட்டும் தெரியாமல்
 போவதற்கு பெயர் தான்
 சுயநலம்.*
🍱🍱🍱💻🍱🍱🍱
நெருக்கமானவர்களிடம் 
நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை
 மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் 
அவமானப் படுகிறது 
நம் நம்பிக்கை.*
📲📲📲💻📲📲📲
கழன்று விழும் வரை 
சிலரது முகமூடிகளை 
முகம் என்றே நம்பித்
 தொலைக்கிறோம்.*
  ////////////
ஒற்றை மனமுடையவர்கள்
ஒன்று சேர்ந்தால்
கடலையும் வற்ற வைக்கலாம்
///////////////////////////
   உங்களது இலட்சியத்தை அடைய
வேண்டுமானால் இயற்கையாக ஏழு
குணங்களைப் பெற்றிருக்க வேண்டும்.!


1.தைரியமாக எந்த ஒரு காரியத்தையும்
தொடங்கும் குணம் முதலில் வேண்டும்.!


2. கற்பனைத் திறமையுடன்
எதையும் பார்க்கும் குணம்.!


3. ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை
ஒழுங்கு படுத்தி, அமைக்கும் குணம்.!


4. சிந்தனையைச் சிதறவிடாது
ஒருமுகப்படுத்தி கவனமுடன்
செயல்படுவது.!


5. நேரத்தையும், பணத்தையும்
திட்டமிட்டுச் செலவு செய்வது.!


6. எப்போதும் சுறுசுறுப்புடனும்,
ஊக்கத்துடனும் மனதை வைத்திருப்பது.!


7. இலட்சியத்தை அடையும் வரை
ஒவ்வொரு நிலையிலும் தங்கள்
தவறுகளைத் திருத்திக் கொள்ளல்
மிக அவசியமான ஒன்றாகும்.!

///////////////////////
' உழைக்கும் மனிதனே ,
உயிர் வாழும் உரிமை பெறுகிறான்;
உழைக்காதவன் ,
திருடனுக்கு ஒப்பாகிறான் .
காந்திஜி.
//////////////
தோல்வியை பெற வேண்டுமெனில்
நாம் எந்த சிரத்தையும் மேற்கோள்ள
வேண்டியதில்லை,
தானாக கிடைத்து விடும்,,
"வெற்றி" என்ற ஒன்றுக்காக மட்டுமே
போராடவேண்டி இருக்கிறது..
/////////////////
நீ வெற்றியடைவதை 
உன்னைத் தவிர,
வேறு யாராலும் 
தடுக்க முடியாது
ப்ரெமர்.
//////////////
தலைமுறை தலைமுறையாகப்
பின்பற்றி வரப்படும் பழக்கம் 
என்பதற்காகவோ,
நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள்
என்பதற்காகவோ 
எந்த ஒரு கருத்தையும்
நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல்
ஏற்றுக்கொள்ளக் கூடாது! -
புத்தர்
/////////////////////////
கியாரண்ட்டி என்றால் என்ன..?
வாரண்ட்டி என்றால் என்ன..?

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ 
என்பது எல்லோருக்கும் தெரிந்ததே
. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் 
குறிக்கும் சொல்தான். 
ஆனால் சட்டத்தின் பார்வையில்
 ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது
,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது
. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் 
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் 
அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள்.
 ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை.
 ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.
////////////////////////
 கடல் அலை ஓய்வதும் இல்லை
எல்லா அலைகளும்
கரைக்கு வந்து சேர்வதுமில்லை
எனினும் அது
தன் முயற்சியை நிறுத்தவில்லை!
வெற்றியும் தோல்வியும்
வெகு தூரமில்லை
முயற்சி மேல் முயற்சி செய்
  ///////////////////
 செயல்கள் கடினமாக இருப்பதால்
நாம் துணிந்து அவற்றை செய்யாமல்
இருக்கின்றோம் என்பது
உண்மையல்ல!
நாம் துணிந்து ஒரு செயலை
செய்யாமல் இருப்பதால் தான்
அவை கடினமாக இருக்கின்றன. 
///////////////////
 எந்த ஒரு ஆங்கிலேயனும் 
தனக்கு பிறமொழி தெரிந்தாலும் 
தெரிந்த எம்மொழியிலும்
 கையொப்பம் இடுவதில்லை.... 
///////////////

No comments:

Post a Comment