Thursday, October 3, 2024

சிந்திக்க -2025

சிந்திக்க -2025

*******************

மனைவிக்கு  நேரம் #ஒதுக்குங்கள்.

இல்லையெனில்  #சண்டைகளுக்கு 

நேரம் ஒதுக்க வேண்டி #வரும்.!!

*******************************

பத்து தலைமுறையின் ஏழ்மையை 

ஒரே தலை முறையிலே மாற்றும்

 வல்லமை கொண்ட

 ஒரே ஆயுதம் "படிப்பு"

************************** 

கலவரம் ஏற்படுத்த 

ஒரு ரவுடி போதும

அமைதியும் நல்லிணக்கமும்

 ஏற்படத்தான் தலைவன் தேவை

**************************

Google உள்ளே feed 

பண்ணியதைதான் தரும்

பெரியவங்க feel 

பண்ணியதையும் 

நமக்கு தருவாங்க

********************** 

பத்து தலைமுறையின்

 ஏழ்மையை, ஒற்றை

தலைமுறையிலேயே  மாற்றும் 

வல்லமை கொண்டது 

படிப்பு மட்டுமே...

************************** 

 வாழ்க்கை எதிர்மறைகளைக்

 கொண்டது. பிச்சைக்காரன் 

அமைதியுடன் பாதுகாப்பற்று

 உறங்குவான்

      பாதுகாப்புடன் இருப்பான் ஆனால்

 அமைதியாக உறங்க மாட்டான்.

*********************

பேனா தவறாக எழுதியதற்காக  யாரும் 

ஒருபோதும் பேனாவை உடைப்பதில்லை...

அப்பாவி காகிதத்தைத் தானே

 கிழித்தெறிகிறோம்...! 

அப்படித்தான் சில நல்மனிதர்களையும்!!!

*************

 இன்று நீ படிக்கும் புத்தகங்களே

 நீ உட்காரும் நாற்காலியை 

முடிவு செய்கிறது

******************* 

#சூதாட்டம் - #ஜாதகம்  இந்த இரண்டையும்

  #நம்பி  நடந்தவன் எவனும் 

 பணக்காரன்ஆனது இல்லை  

       #இந்த இரண்டையும் நடத்துபவன்

 #ஏழை ஆனது  இல்லை.

       முட்டாள்களே  #வாடிக்கையாளர்கள்  

 அதனால் அவனுக்கு  கவலையில்லை

************************ 

பணம் #உழைத்து வாழ்பவர்களிடம்

 பேசி விட்டு #சென்று விடுகிறது..

      #பிறர் உழைப்பில் வாழ்பவர்களிடம்

 ஏசி போட்டு #தங்கி விடுகிறது!

******************* 

இன்றைய உண்மைகள்..

 ********************

பக்கத்து வீட்டிலிருப்பவர்களிடம் 

முகங் கொடுத்து பேசுவதில்லை.. 

பக்கத்து கிரகத்தில் மனிதன்

 வாழ வாய்ப்பிருக்கா எனஆராய்ச்சி..

மருத்துவத் துறையில்

 மாபெரும் வளர்ச்சி.. நோயாளிகளின்

 எண்ணிக்கையோ நாளுக்கு நாள் அதிகம்...

***************** 

பட்டப் படிப்புகள் அதிகம்...

பொது அறிவு குறைவு...

கை நிறைய சம்பளம்..

மனசு நிறைய நிம்மதி இல்லை..

 வாய் நிறைய சிரிப்பில்லை..

 **************

சாராயம் நிறைந்து கிடக்கு...

 குடிநீர் குறைந்து கொண்டே இருக்கு...

முகநூல் நண்பர்கள் அதிகம்...

முகம் தெரிந்த நண்பர்களோ குறைவு

**************** 

 

 

 

 

No comments:

Post a Comment