Friday, June 1, 2018

FINAL Thought 2018

 ஒரு எழுத்தாளன் 
ஒரு புத்தகத்தை
 தொடங்கி வைக்கிறான். 
வாசகன் 
அதை முடித்துவைக்கிறான் - 
சாமுவேல் ஜான்சன்
 -------------------------
  #கடவுளிடம் எனக்கு 
வாழ்வில் 
ஒரு வெளிச்சம்
 காட்ட மாட்டியா..
என்னு வேண்டிகிட்டு
 விளக்கேற்றினேன்...
ஆனா,
நான் ஏற்றிய விளக்கில் 
தான் 
#கடவுளுக்கே அங்கு
 வெளிச்சம் 
உண்டாயிற்று...
/////////////////////////// 
*கொடுப்பதற்கு நீ பணக்காரனாக 
இருக்க* *வேண்டுமென்பதோ,
பணக்காரன் ஆகும்* 
*வரை காத்திருக்க வேண்டும் 
என்பதோ கிடையாது....*
*உதவ வேண்டும் என்ற குணத்திற்கு
 கால, நேரம் அல்லது ஏழை,
 பணக்காரன் என்பது  கிடையாது*
//////////////////
 கடைசி விவசாயியும் இறந்த
'பிறகுதான் உங்களுக்கு
தெரியும்...!
'கடவுள் விவசாயி வடிவில்
இருந்து இருக்கிறார்
என்று...!
/////////////////////////////
வீட்டுக்கு வந்த
'விருந்தாளிகிட்ட போகும் போது
' ...பாத்து பத்திரமா போயிட்டு
' வாங்கனு சொன்னா அது
“கிராமம்”
போறப்ப வெளி கேட்டை
சாத்திட்டு போங்கனு சொன்னா
அது "நகரம்”
............
"அடக்க முடியாத கோபத்தை
'கட்டி வை... காலம்
உன்னிடம் வரும்...
அப்போது ஒருவனையும்
விடாதே ......
///////////////////////////
*கேட்டது ஒன்று,!*
  *கிடைத்தது ஒன்று!!*  
ஆண்டவனிடம்,
வலிமை கேட்டேன்!
         கஷ்டங்களை
         கொடுத்தார்!!
எதிர் கொண்டேன்,
வலிமை பெற்றேன்.?​
  
அறிவு கேட்டேன்!
       பிரச்சினைகளை
       கொடுத்தார்!!  
சமாளித்தேன்                              
அறிவை  பெற்றேன்.?​


தைரியம் கேட்டேன் !
        ஆபத்துக்களை      
        கொடுத்தார் !!
சந்தித்து மீண்டேன்  ,
தைரியம் பெற்றேன்.


அன்பு கேட்டேன் !
        வம்பர்களை    
        கொடுத்தார்
அனுசரித்து சென்று
வம்பர்களின்
அன்பையும் பெற்றேன்.


வளமான வாழ்வு
 கேட்டேன்!     
      சிந்திக்கும் மூளையை
      கொடுத்தார்.
வளமான வாழ்வு 
கிடைத்தது.?​


*கேட்டது ஒன்று,!*
        *கிடைத்தது ஒன்று!!*
*கிடைத்ததை வைத்து*
        *கேட்டதைப் பெற்றேன்*.?​
//////////////////////////
தேவை முடிந்ததும் நண்பன் 
துரோகி ஆகிறான் ..,,
தேவை தொடங்கும் போது 
துரோகி நண்பன் ஆகிறான் ..,,
இது தான் உலகம் ..,,
#எவர்_தேவைக்கும்_
நீ_பொருள்_ஆகாதே..!!
..............
"மறப்பது"           
புத்திக்கு, மருந்து.!
"மன்னிப்பது" மனதிற்கு, 
மருந்து.!!
..............
அமைதியாய் இருக்கும் 
மனிதனிடம்
 மொத்த பிரபஞ்சமும் 
அடங்கிவிடும்.
 ///////////////////////////
சுயநலம் என்பது மிகச்சிறிய 
உலகம். அதில்
 ஒரே ஒரு மனிதன்தான் 
வாழ்கிறான்.
 //////////////////
பசுவின் மடியை கொசு 
கடித்தாலும் 
அது பாலைக் குடிப்பதில்லை,
 இரத்தத்தைத்தான் குடிக்கும்.
///////////////////
ஆயிரம் உபதேசங்களைவிட
 ஓர் அனுபவம் சரியான 
பாடத்தைக் கற்பிக்கும்.
////////////////////
'மௌனமும், சிரிப்பும் மிகவும்
 சக்தி வாய்ந்த வார்த்தைகள்...
மௌனம் நிறைய பிரச்சனைகளை
 குறைத்து விடும்...
சிரிப்பு நிறைய பிரச்சனைகளை
 தீர்த்து விடும்...
////////////////////////////////
வாய்ப்பு கிடைத்த
விதை துளிர் விட்டு
கன்றாகி
செடியாகி
விருட்சமாகி
பூவாகி
காயாகி
கணியாகி
தன் சுழற்சியை 
முடித்துவிட்டு
மீண்டும் விதயாகி அடுத்த
 வாய்ப்புக்காக,
 காத்திருக்கும்...
 விதை.
வாழ்க்கை ஒரு வட்டம்.   
 ///////////////////////////
வருமானம் செருப்பு போன்றது,
அளவு குறைந்தால் கடிக்கும்...!
அளவு அதிகரித்தால் நடக்க முடியாது..!
////////////////
நான்கு அறிவாலிகளின்
கூற்றுகளை
ஆறு முட்டாள்களால்
 தோர்க்கடிக்கபடுவதே 
 -ஜனனாயகம்
///////////////////////
முறையற்ற  பயிற்சியும்...
முழுமையில்லாத முயற்சியும்...
என்றும்  வெற்றியை
தராது...
முறையான பயிற்சியும்...
முழுமையான முயற்சியும்...   
என்றும் தோல்வியை தராது...!!
///////////////////////// 
அண்ணா சமாதி
மெரினாவுல இருக்கறது 
அண்ணாவுக்கே தெரியாது,
ஆனால்
எம்ஜிஆர், ஜெ, கலைஞர்
மூவருக்கும் தெரியும்.
எம்ஜிஆர் சமாதி 
மெரினாவில் இருப்பது
 அண்ணாவுக்கும் 
எம்ஜிஆருக்கும் தெரியாது,
ஆனால்
ஜெவுக்கும்
கலைஞருக்கும் தெரியும்.
ஜெ சமாதி
மெரினாவில் இருப்பது
 அண்ணா,எம்ஜிஆர்,ஜெ 
மூவருக்கும் தெரியாது,
ஆனால் கலைஞருக்கு
தெரியும்.
கலைஞர் சமாதி
மெரினாவில் இருப்பது 
நால்வருக்குமே தெரியாது...
இவ்வளவு தாங்க
இந்த உலக வாழ்க்கை.
///////////////////////////

நீங்கள் பிறரிடம்
இருந்து
' தனித்திருக்க
விரும்பினால்
'நேர்மையாகவும்,
 உண்மையாகவும்
'இருந்தால் போதுமானது..!
தானாகவே ஒதுக்கி
 வைக்கப்படுவீர்கள்!
............
நீ செய்த வினையும் செய்கின்ற
தீவினையும், ஓர் எதிரொலியைக்
காட்டாமல் மறையாது.
நீ விதைத்த விதைகளை நீயே
அறுவடை செய்த பின்னால்தான்
அந்த நிலத்தில் வேறு பயிர்களைப்
பயிரிட முடியும்.
..........
சந்தோஷம்,
வந்தர்
சீக்கிரம்
அனுபவிச்சிடணும்.
கஷ்டம் வந்தா
சீக்கிரம் அனுப்பி
வைச்சிடணும்...
.............
காத்திரு..
நடக்க இருப்பது
சரியான நேரத்தில்
சரியான இடத்தில்
சரியான காரணத்துடன்
நடக்கும்..!
புத்தர்
..........
வாழ்வில் எதிர்கொள்ளும்
சிக்கல்களைச் 
சிரித்துக்கொண்டே
கடந்துபோக முடிந்தால்
உலகில் உன்னைவிட
வலிமையானவர்
யாருமில்லை.
...........
உயிரும்,
நம்பிக்கையும்
ஒன்னுதான்
ஒருமுறை
பிரிந்தால்
அதுவே
கடைசி..!
............
#எதிர்பார்ப்பு


சந்திக்க பல உறவுகள்
வேண்டும்
#சந்தேகப்படாத உறவுகள்
வேண்டும்
#காலம்தோறும் தொடரும்
நட்பு வேண்டும்
#காலை வாரிவிடாத நண்பன்
வேண்டும்
#எதிர்பார்ப்பு ....
.............
எதுவும் கிடைத்து விட்டது 
என்று #பெருமை கொள்ளாதே.,
நீ அதை #இழப்பது 
மறு நொடியாகக் கூட  இருக்கலாம்....
.........   
#செவ்வாய் என்றால்
#சிவன் கோவில் ஞாபகம்

#வெள்ளி என்றால்
#முருகன் கோவில்
ஞாபகம்

#ஞாயிறு என்றால்
#ஆஞ்சநேயர் கோவில்
ஞாபகம்

இத்தனை ஞாபகம்
உள்ள மனிதர்களே

வரும் வழியில் தான்
#அனாதை இல்லம்
#முதியோர் இல்லம்
#ஊனமுற்றோர் இல்லம்
இருக்கின்றது

இந்த
ஆலயங்களுக்கும்
சென்று வாருங்கள்
அங்கேயும் #கடவுள்
இருக்கின்றன
.................
இருப்பவனுக்கு
இன்கம்டாக்ஸ் பிரச்சனை
இல்லாதவனுக்கு
இன்கம்மே பிரச்சனை
............
அடுத்தவனுக்கு பயந்தவன்
“ஆயுதத்தை”
கண்டுபிடித்தான்..
தனக்குத்தானே பயந்தவன்
"கடவுளை”
கண்டுபிடித்தான்..
.............
"அடக்க முடியாத கோபத்தை
'கட்டி வை... காலம்
உன்னிடம் வரும்...
அப்போது ஒருவனையும்
விடாதே
..........
வாழ்க்கையில்
வெற்றி பெற
"தகுதி" அவசியம்,
அவை
#த(தன்னம்பிக்கை)
#கு-(குறிக்கோள்)
#தி-(திட்டமிடல்)
.........
#செவ்வாய் என்றால்
#சிவன் கோவில் ஞாபகம்

#வெள்ளி என்றால்
#முருகன் கோவில்
ஞாபகம்

#ஞாயிறு என்றால்
#ஆஞ்சநேயர் கோவில்
ஞாபகம்

இத்தனை ஞாபகம்
உள்ள மனிதர்களே

வரும் வழியில் தான்
#அனாதை இல்லம்
#முதியோர் இல்லம்
#ஊனமுற்றோர் இல்லம்
இருக்கின்றது
இந்த
ஆலயங்களுக்கும்
சென்று வாருங்கள்
அங்கேயும் #கடவுள்
இருக்கின்றது
..........
நேசிக்கும் நூறு பேரை
 நேசிக்க துவங்கினாலே.....!!!
வெறுக்கும் நான்கு பேரை பற்றி 
யோசிக்க நேரமிருக்காது....!!!
...........
#காகங்கள் #


#அமாவாசை, #பிதுர்க்கடன்
என்றெல்லாம் சொல்லிக்
கரைந்து அழைக்கும் 
போதெல்லாம்.....,
"ஒரு வாய் சோறு....
உயிரோடு இருக்கையில்
 உருப்படியாகப் போடாத நீ
சாவுக்குப் பின் என்னிடம்
தேடுகிறாயே
உன் தாயை, தகப்பனை " எனக்
கேலி செய்கிறதே....!
#காகங்கள்.
..............
' கிளியை வைத்து 
சம்பாதிப்பவனுக்குத்
தான் தெரியும்,
அவனின் மூலதனம்
கிளி அல்ல ' மக்களின்
மூடத்தனம் என்று
.......................................
பேச நேரம் ' இல்லை 
என்றால் நம்பாதீர்கள்..! 
அவர்களின் முன்னுரிமை 
பட்டியலில் ' நீங்கள் இல்லை 
என்பதே உண்மை ...!
........
நீஉறங்கிக் கொண்டு இருந்தாலும் 
உனக்கு வருமானம்
 வரக்கூடிய வாய்ப்பை
 நீ ஏற்படுத்திக் |கொள்ளாவிட்டால் 
சாகும் வரை
 நீ உழைத்துக்கொண்டே 
இருக்க வேண்டும்..
................................
#பிடித்ததெல்லாம்
 கிடைத்து விட்டால்,
அது #கிடைத்த பின்
 #பிடிப்பதில்லை…
#யாருக்கும்....

#கிடைத்ததெல்லாம்
 #பிடித்து விட்டால்,
  அது #பிடித்த பின்
 #நிலைப்பதில்லை……
#எவருக்கும்....
,.........
மனிதனுக்குத்
 "#துணிச்சலைப்
"போல
உலகில்
உண்மையான
" #நண்பன்"
வேறு யாருமில்லை.
.........   
எடுக்கும் முடிவில்
 தெளிவாய் இரு.. 
முன் வைத்த கால்
 பின் வைக்காதே..?
பயந்தவனுக்கு 
சிறுகல்லும் பாறையாய்
 தெரியும்..?
துணிந்தவனுக்கு 
பாறையும் சிறுகல்லாய் 
தோன்றும்..?
...............
வாழ்க்கையில்
வேடிக்கையான
#மூன்று கட்டங்கள்

1)#டீனேஜ் பருவம்:
நேரம் உண்டு சக்தியுமுண்டு
ஆனால் பணம் இல்லை

2)#தொழில் புரியும் காலம்:
பணம் உண்டு,சக்தி உண்டு
ஆனால் நேரமிருக்காது

3)#வயோதிபபருவம்:
பணம் உண்டு,நேரம் உண்டு
ஆனால் சக்தி இருக்காது
இதான் வாழ்கை.ஒன்றை
தரும்போது
இன்னொன்றை எடுக்கும்
.........  .....
வேலை செய்ய தெரிந்தவர்கள் 
'சம்பளம் வாங்குகிறார்கள் ..!!!!!
 '" யாருக்கு" வேலை செய்ய 'வேண்டும்
 என தெரிந்தவர்கள் 'பதவி 
உயர்வோடு அதிக 
'சம்பளம் வாங்குகிறார்கள் ..!!!!!!
..............
மாத‌மொருமுறை 
பிற‌ந்த‌ தேதியும்

ஒரு நாளைக்கு 
இருமுறை பிற‌ந்த‌ நேர‌மும்

ஒரு ம‌ணிக்கு
ஒரு முறை பிற‌ந்த‌ நிமிட‌மும்

ஒரு நிமிட‌த்திற்கொருமுறை 
பிற‌ந்த‌ வினாடியும் வ‌ரும்போது
ஆண்டிற்கு
ஒரு முறை ம‌ட்டும் பிற‌ந்த‌ நாளை 
கொண்ட‌டுவ‌தேன்?

ஆங்கில‌ப்
புத்தாண்டை கொண்டாடிவிட்டு..
அவ‌ர‌வ‌ர்
மொழியிலும் புத்தாண்டு கொண்டாட்ட‌ம்..

ஆண்டு ம‌ட்டுமா புதிதாய் பிற‌க்கிற‌து?
மாத‌மும், நாட்க‌ளும், 
ஏன் ஒவ்வொரு வினாடியும் புதிதுதானே?

எவ‌ரோ ஒருவ‌ர் ப‌ழ‌க்கிய‌ ப‌ழ‌க்க‌த்தை
எவ‌ரோ ஒருவ‌ர் செய்கின்ற‌ செய‌ல்க‌ளை
க‌ண்ணை மூடிக்கொண்டு க‌டைபிடிக்காதீர்..

விரைய‌ம்
செய்த‌ ஒவ்வொரு வினாடியையும்..
விலை கொடுத்தாலும் 
மீட்க முடியாது

சிந்தித்து
பார்த்து சிலை
போல‌ நிற்காம‌ல்
சிறித‌ள‌வு நேர‌த்தையும்
 சிற‌ப்பாக‌ செல‌வு செய்தால்

சிக‌ர‌த்தை
நோக்கி சிற‌க‌டித்து ப‌ற‌க்க‌லாம்
............
ஒரு செயலைத் 
தொடங்குவதற்கு
 "நோக்கம்" தேவை ஆனால்
 அச்செயலைத் தொடர்ச்சியாக 
செய்ய "ஊக்கம்"  தேவை.
...............
கட்டளை இடுவதை
விட செய்து காட்டுவதே
 தலைவனுக்கு அழகு...
...........

#நேற்று என்பதை
 திருத்த முடியாது...
#நாளை வர உள்ளதையும்
 மாற்ற முடியாது...
 முயன்றால்
#இன்றை மட்டுமே 
மகிழ்ந்திட முடியும்...
............
#சொத்து இருக்குதுனு 
சொல்லுறதுக்கும்...

#சொந்த உழைப்பு 
இருக்குதுனு
 சொல்லுறதுக்கும் ....

நிறையா வித்தியாசம்
 உண்டு....

சொந்த உழைப்பில்
 வாழ்வோமே என்றும்..
.....................
ஓட முடிவெடுத்த பின்னே
ஓய்வுக்கெல்லாம் 
இடமில்லை
தாண்ட நினைத்த 
பின்னே #வெற்றியை
எட்டுவதைத் தவிர 
வழியில்லை..!!
................
பென்சில் கற்றுக்கொடுப்பது
 ஒன்றுதான்
#கூர்மையாக இரு
இல்லை என்றால் 
#சீவி விடுவார்கள்...
............
மெதுவாகச் செல்பவன்
 பத்திரமாக செல்கிறான்; 
பத்திரமாக செல்பவன் '
அதிக தூரம் செல்கிறான்.
.............
குறையை தன்னிடம்
 தேடுபவன் #தெளிவடைகிறான்..!!
குறைகளை பிறரிடம்
 தேடுபவன் #களங்கப்படுகிறான்..!!
............
#சுமைகளை கண்டு நீ
துவண்டு விடாதே ..!!
இந்த உலகத்தை #சுமக்கும்
பூமியே உன் காலடியில்தான் ..!!
.................... 
ஓட முடிவெடுத்த பின்னே
ஓய்வுக்கெல்லாம் இடமில்லை
தாண்ட நினைத்த பின்னே 
#வெற்றியை
எட்டுவதைத் தவிர 
வழியில்லை..!!
................
பந்தயக் குதிரை'ஓடும் போது 
ஓடுதளம் அருகிலுள்ள
'புல்லையோ 
கொள்ளையோ
"பார்ப்பதில்லை ..
ஏனெனில்.. அது தன்
 வெற்றிஇலக்கை 
மட்டுமேமனதில் 
கொண்டு ஓடுகின்றது..!
.............
'எல்லாம் தெரியும் என்று'நினைப்பவரை
 விட'தெரியாது என்று நினைப்பவரே
'அதிக விடயங்களை'தெரிந்து
 வைத்துள்ளனர்
.'தெரியும் என்பவரின் 
தேடல்முடிவடைகிறது
.'தெரியாது என்பவரின் 
தேடல்|தொடர்ந்து செல்கின்றது..
-----------------------------.




No comments:

Post a Comment