Sunday, April 29, 2018

kompakonam " temples " around

Kumbakonam temples

I.  From திருக்கொட்டையூர் to திருவைக்காவூர்

1.  திருக்கொட்டையூர் - கோடீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது

2.  திருவலஞ்சுழி - கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  சுவாமிமலை - சுவாமிநாதசுவாமி திருக்கோயில்
    (முருகரின் நான்காவது படை வீடு)
    திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  புள்ளபூதங்குடி – வல்வில்ராமன் திருக்கோயில்
    (திவ்ய தேசம்)
    சுவாமிமலையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

5.  ஆதனூர் - ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்
    (திவ்ய தேசம்)
    புள்ளபூதங்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் 
உள்ளது.

6.  இன்னம்பூர் - எழுத்தறிநாதர் திருக்கோவில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    ஆதனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருப்புறம்பயம் - சாட்சிநாத சுவாமி திருக்கோயில்
   (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
   இன்னம்பூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

8.  திருவிசயமங்கை - விஜயநாதர் கோவில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    திருப்புறம்பயத்திலிருந்து
 5 கி.மீ தொலைவில் உள்ளது.

9.  திருவைக்காவூர் - வில்வவனேஸ்வரர் 
சுவாமி திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    திருவிசயமங்கையிலிருந்து
 3 கி.மீ தொலைவில் உள்ளது.

                                               * * * * *

II.  From திருநாகேஸ்வரம் to திருந்துதேவன்குடி

1.  ஒப்பிலியப்பன் கோயில்
    (திவ்ய தேசம்)
    கும்பகோணத்திலிருந்து 
7 கி.மீ தொலைவில்  உள்ளது.

2. திருநாகேஸ்வரம் - நாகநாதசுவாமி
  கோவில்   (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    ஒப்பிலியப்பன் கோயிலிருந்து 
அரை கி.மீ தொலைவில்உள்ளது.
3.  தேப்பெருமாநல்லூர் - விஸ்வநாதசுவாமி
 திருக்கோயில் திருநாகேஸ்வரத்திலிருந்து
 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4. திருபுவனம் - கம்பகரேஸ்வரசுவாமி 
திருக்கோவில்
   (சரபேஸ்வரர் கோயில்)
   தேப்பெருமாநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

5. திருவிசைநல்லூர் - சிவயோகிநாத சுவாமி கோவில்    
   (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
   திருபுவனத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

6. திருந்துதேவன்குடி - கற்கடேஸ்வரர் திருக்கோயில்
   (நண்டாங் கோயில்)  
   (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திருவிசைநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                     * * * * *

III. From திருவிடைமருதூர் to திருவாவடுதுறை

1.  திருவிடைமருதூர் - மகாலிங்கேசுவரர் கோவில்  
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது

2. தென்குரங்காடுதுறை - ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திருவிடைமருதூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  திருமங்கலக்குடி - பிராணநாதேஸ்வரர் கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    தென்குரங்காடுதுறையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  சூரியனார் கோயில் - சிவசூரியப் பெருமான் கோயில்  
    திருமங்கலக்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
5. கஞ்சனூர் - அக்னீஸ்வரர் கோயில் (சுக்ர ஸ்தலம்)
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    சூரியனார் கோயிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

6.  திருக்கோடிகாவல் - திருக்கோடீஸ்வரர் கோவில்
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    கஞ்சனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

7.  திருவாவடுதுறை - மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திருக்கோடிகாவலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                     * * * * *

IV.  From தாராசுரம் to ஊத்துக்காடு

1.  தாராசுரம் – ஐராவதீஸ்வரர் திருக்கோயில்  
    கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

2. பழையாறை வடதளி (முழையூர்) – சோமேஸ்வரர் திருக்கோயில்
   (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
   தாராசுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  பட்டீஸ்வரம் – தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
    பழையாறையிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
4.  திருசத்திமுத்தம் – சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
    பட்டீஸ்வரம் கோவிலுக்கு ½ கி.மீ தொலைவில் உள்ளது.

5.  ஆவூர் (கோவிந்தகுடி) – பசுபதீஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
     திருசத்திமுத்தம் கோயிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

6.  ஊத்துக்காடு - காளிங்கநர்த்தனர் திருக்கோயில்
    ஆவூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
                              
                                                  * * * * *

V.  From திருக்கருகாவூர் to திருக்கொள்ளம்புதூர்

1. திருக்கருகாவூர் – முல்லைவனநாதர் திருக்கோயில் -
   (முல்லைவனம்)    
   விடியற்கால வழிபாட்டிற்குரியது.
   தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்
   கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.

2.  திருஅவளிவநல்லூர் – சாட்சிநாதசுவாமி திருக்கோயில்
    (பாதிரி வனம்)
    காலை வழிபாட்டிற்குரியது.
    தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்
    திருக்கருகாவூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  ஹரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி)  
    பாதாளேஸ்வரர் திருக்கோயில் (வன்னிவனம்)  
    உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
    தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.
    திருஅவளிவணல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  ஆலங்குடி – ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
    (திருஇரும்பூளை)
    பூளைவனம்
    மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
    தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
    அரித்துவாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது

5.  திருக்கொள்ளம்புதூர் – வில்வவனநாதர் திருக்கோயில்
    (வில்வவனம்)
    அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
    தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
    ஆலங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                        * * * * *

VI. From சிவபுரம் to நாதன் கோயில்

1.  சிவபுரம் - சிவகுருநாதசுவாமி திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
    கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

2.  சாக்கோட்டை (கலயநல்லூர்) - அமிர்தகலசநாதர் திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
    சிவபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  கருவளர்ச்சேரி - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத
    அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில்
    (குழந்தை பேறு வேண்டுபவர்கள் இக்கோயிலில் வழிபடலாம்)
    சாக்கோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  மருதநல்லூர் (கருக்குடி) – சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
    கருவளர்ச்சேரியிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.
5.  கீழக்கொருக்கை – பிரம்மபுரிஸ்வரர் திருக்கோயில்
    (அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் பரிகார ஸ்தலம்)
    மருதநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

6.  நாதன் கோயில் (நந்திபுர விண்ணகரம்) - ஜெகந்நாத பெருமாள்
    திருக்கோயில்
    (திவ்ய தேசம்)
    கீழக்கொருக்கையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                          * * * * *

VII.  From திருநல்லூர் to திருவையாறு

1.  திருநல்லூர் - பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் -
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது

2.  பாலைத்துறை - பாலைவனநாதர் திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திருநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  பாபநாசம் - ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் -
    108 சிவலிங்க கோயில்
    பாலைத்துறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  கபிஸ்தலம் - ஸ்ரீ கஜேந்திர வரதன் திருக்கோயில் -
    (திவ்ய தேசம்)
    பாபநாசத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
5.  திருக்கூடலூர் - ஸ்ரீ ஜெகத்ரட்சக பெருமாள் திருக்கோயில் –
    (திவ்ய தேசம்)
    கபிஸ்தலத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

6.  வடகுரங்காடுதுறை - தயாநிதீஸ்வரர் திருக்கோயில் -
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திருக்கூடலூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திங்களூர் - கைலாசநாதஸ்வாமி திருக்கோயில் –
   (சந்திரன் ஸ்தலம்)
   வடகுரங்காடுதுறையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.

8. திருப்பழனம் - ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் –
   (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
   திங்களூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
9.  திருவையாறு - ஐயராப்பன்  திருக்கோயில் –
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திருப்பழனத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                           * * * * *

VIII.  From அழகாபுத்தூர் to குடவாசல்

1.  அழகாபுத்தூர் - ஸ்வர்ணபுரீஸ்வரர் 
(படிக்காசுநாதர்)
  திருக்கோயில்(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் 
நாச்சியார் கோயில் போகும் வழியில்
 இருக்கிறது. திருநறையூர் என்ற 
ஊரின் முன்னால்அழகாபுத்தூர் உள்ளது

2.  திருநறையூர் -  சித்த நாதேஸ்வரர் 
திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    அழகாபுத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் 
உள்ளது. திருநறையூர்
    பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக 
அருகில் கோயில் உள்ளது.

3.  நாச்சியார்கோவில் - திருநறையூர் 
நம்பி திருக்கோயில்  (திவ்யதேசம்)
   சித்த நாதேஸ்வரர் கோயிலில் இருந்து
 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.

4.  ஆண்டான் கோயில் – ஸ்வர்ணபுரீஸ்வரர் 
திருக்கோயில்  (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
   நாச்சியார்கோயிலில் இருந்து 
கி.மீ. தூரத்தில் உள்ளது.
 
5.  திருச்சேறை – சாரநாதப்பெருமாள் திருக்கோயில்
    (திவ்யதேசம்)
    ஆண்டான் கோயிலில் இருந்து  6 கி.மீ. 
தூரத்தில் உள்ளது.

6.  திருச்சேறை – சாரபரமேஸ்வரர்
  திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
   சாரநாதப்பெருமாள் கோயிலில் 
இருந்து 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

7.  நாலூர் – பலாசவனேஸ்வரர்
  திருக்கோயில்  சாரபரமேஸ்வரர்
 கோயிலில் இருந்து 2  கி.மீ. தூரத்தில்
 உள்ளது.

8.  திருநாலூர் மயானம் - ஞானபரமேஸ்வரர் 
திருக்கோயில  (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    நாலூரிலிருந்து  2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

9.  குடவாசல் - கோணேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    திருநாலூர் மயானத்திலிருந்து 
2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

                                                           * * * * *

IX.  From திருநீலக்குடி to திருப்பாம்பரம்

1.  திருநீலக்குடி - நீலகண்டேஸ்வரர் 
திருக்கோயில்  (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
   கும்பகோணத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில்
 உள்ளது.

2.  திருவைகல் மாடக்கோவில் - வைகல்நாதர்
 திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    திருநீலக்குடியிலிருந்து 9 கி.மீ.
 தொலைவில் உள்ளது.

3.  கோனேரிராஜபுரம் - உமா மஹேஸ்வரர்
 திருக்கோயில்  (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    திருவைகல் மாடக்கோயிலிருந்து
 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

4. திருவீழிமிழலை - வீழிநாத சுவாமி 
திருக்கோயில்  (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
  கோனேரிராஜபுரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில்
 உள்ளது.

5.  திருப்பாம்பரம் - பாம்பு புரேஸ்வரர் கோவில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    திருவீழிமிழலையிலிருந்து 8 கி.மீ. 
தொலைவில் உள்ளது.

Please share with your friends 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Saturday, April 28, 2018

சிஎம்சி வேலூர் "... மருத்துமனை

"சிஎம்சி வேலூர் "

அவள் பெயர் ஐடா ஸ்கேடர், 
அமெரிக்க பெண்மணி. 
அவளின் அப்பாவும் அம்மாவும் 
மருத்துவர்கள் 
ஆனால் மிஷனரிகள்

அக்காலத்தில் இந்தியர்களின்
 அடிதட்டு மக்களுக்கு 
சேவை செய்வதார்க வந்த
 பலரில் அவரும் ஒருவர்கள்.

அப்படித்தான் 14 வயது 
நிரம்பிய ஐடாவும்
 இந்தியா வந்தாள், வந்து 
இருமாதத்தில் அவளின் 
அன்னை அமெரிக்கா 
திரும்பிவிட்டார்

தந்தையுடன் வேலூரில் விடுமுறை 
கழித்துகொண்டிருந்தாள்
 அந்த சிறுமி.  அந்த இரு சம்பவங்களும் 
அவளை புரட்டி போட்டன‌

என்ன சம்பவம்?

அந்த நள்ளிரவில் அவர் வீட்டு
 கதவினை தட்டுகின்றான் 
ஒரு பிராமணன், அவனின் கண்கள்
 டாக்டரம்மாவினை 
தேடுகின்றன.ஐடாவின் 
என்ன என்கின்றார்?
 என் மனைவிக்கு பிரசவம் 
டாக்டரம்மாவினை அனுப்ப முடியுமா?

இல்லை அவள் அமெரிக்கா 
சென்றுவிட்டாள்
 நான் வரட்டுமா என்கின்றார் 
அவர்

இல்லை அய்யா, எங்கள் 
சமூகத்தில் பெண்ணுக்கு
 பெண்ணே பிரசவம் பார்க்க
 வேண்டும் , கட்டுப்பாடு
 அது என்னால் மீறமுடியாது 
என கண்களை துடைத்து
கொண்டே செல்கின்றார்

மறுநாள் அந்த கர்பிணியின்
 இறந்த உடலை 
அந்த ஐடாவின் வீட்டு முன்னால்
 எடுத்து செல்கின்றார்கள். 
குற்ற உணர்வினால் 
அத்தந்தை அழ,
 தன்னையறியாமல் 
ஐடாவும் அழுகின்றாள்

இருநாள் கழித்து ஒரு
 இஸ்லாமியருக்கு அதே தேவை. 
ஆனால் அதே கட்டுப்பாடு.
 டாக்டரம்மா இல்லாததால்
 கண்களை துடைத்துவிட்டு
 செல்கின்றார் 
அந்த இஸ்லாமிய கணவன்

மறுநாள் அதே ஊர்வலம்

மனதால் வெடித்து அழுதாள் ஐடா, 
என்ன தேசமிது? பெண்களை 
படிக்க வைக்கவும் மாட்டார்களாம், 
ஆனால் பெண்ணுக்கு பெண்தான்
 பிரசவம் பார்க்க வேண்டுமாம்

அவளுக்கு ஏதாவது அம்மக்களுக்கு
 செய்ய தோன்றிற்று,
 நிச்சயம் இங்கு மகளிரை படிக்க 
வைக்க முடியாது, 
நாமே டாக்டராகி இவர்களோடு 
தங்கிவிட்டால்?

அந்த வைராக்கியம் அன்றே வந்தது, 
அமெரிக்கா சென்று படித்து
 டாக்டரனாள், பெரும் வேலைவாய்ப்பு
 வந்தாலும் அவள் கண்களில் 
அந்த இரு ஊர்வலங்களும் 
வந்து அவள் வைராக்கியத்தை
 அதிகரித்துகொண்டே இருந்தன‌

திரும்பி அதே வேலூருக்கு
வந்தாள், இனி ஒரு கர்பிணியினை
 சாகவிடமாட்டேன்
 என சொல்லி அந்த 
மருத்துவனையினை 
தொடங்கினாள்

இந்தியாவில் மகளிருக்கான 
முதல் மருத்துமனையாக 
அதுதான் உதித்தது.  

பெண்கள் தயக்கமின்றி 
அவளிடம்சிகிச்சைகு வந்தனர்.
 எந்த மத கட்டுபாடுகளும் அதற்கு
 தடையாக இல்லை

இந்நாட்டு பெண்களை
 படிக்கவிடவில்லை என்றால் 
என்ன, நான் படித்து வந்து
 இப்பெண்களை காப்பாற்றுவேன்
 என சூளுரைத்து அதை
 செய்தும் காட்டினாள் அவள்.

அவள் பெண்ணுரிமை பேசவில்லை, 
கொடி பிடிக்கவில்லை,
 புரட்சி செய்யவில்லை 
மாறாக தன்னால் அந்தகால 
யதார்த்த வாழ்விற்கு 
எதை செய்ய முடியுமோ 
அதை செய்தாள்

அதற்கு அவள் கொடுத்த 
விலை அவளின் வாழ்வு.

நிச்சயம் தனி ஆளாகத்தான்
 போராடினாள், பின்பே
 பல சேவை மருத்துவர்கள் 
அவரோடு இணைந்தனர்.

அவள் தனியே ஏற்றிய 
மெழுகுவர்த்திதான் 
இன்று மிக பிரகாசமாக 
ஒளிகொடுத்துகொண்டிருக்கின்றது

அதுதான் வேலூர் கிறிஸ்தவ 
மருத்துவகல்லூரியாக
 இன்று வளர்ந்து நிற்கின்றது, 
உலகின் மிக தரமான மருத்துவமனை 
என அதற்கு இன்றும் பெயர்

அப்பல்லோ, குளோபல், 
ராமசந்திரா எனபல வந்தாலும் 
மிக பெரியதும், மிக மிக தரமான 
சிகிச்சை கொடுப்பதும் 
அந்த வேலூரி சிஎம்சி 
மருத்துவமனையே

அவள் யார்? அவளுக்கும்
 இம்மக்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஆனால் நம் மக்களுக்காக
 அழுதிருக்கின்றாள்,
 நம் மக்களின் சாவினை 
தடுக்க டாக்டராகி திரும்பி வந்து
 இங்கு தன் வாழ்வினை 
அர்பணித்திருக்கின்றாள்

அன்னை தெரசாவிற்கு 
அவள்தான் வழிகாட்டி

அந்த வணங்கதக்க பெண்மணியின்
 உழைப்பில் உருவான 
அந்த மருத்துவமனைதான் 
இன்று 100ம் ஆண்டுவிழாவினை
 கொண்டாடுகின்றது

ஜனாதிபதி அதற்குத்தான் வந்திருந்தார்

அந்த வெளிநாட்டு தெய்வத்தை 
பற்றி ஒருவார்த்தை 
அவர் சொல்வார் என்றோ, இல்லை
 இந்த பத்திரிகைகள்தான் 
அந்த பெண்ணை சொல்லுமா 
என தேடிபார்த்தால் ஒன்றுமே இல்லை

அவளின் மகத்தான 
இத்தேசம் கொடுக்கும்
 அஞ்சலி இதுதானா?

அவளின் கல்லறை அதே வளாகத்தில்தான்
 இருக்கின்றது,
 நிச்சயம் இந்த நூற்றாண்
டு விழாவில் அவள் கல்லறைக்கு
 அரசு மரியாதை செலுத்த
பட்டிருக்க வேண்டும்

இங்கு நாட்டினை சுருட்
டி தனக்கு எஸ்டேட் கட்டிய
 நடிகைக்கு 
மணிமண்டபம் கட்டுபவர்களுக்கு 
தியாகத்தின் 
மகத்துவம் எப்படி தெரியும்?

ஒரு குற்றவாளிக்கு
 மணிமண்டபமாம், 
எங்கிருந்தோ வந்து இங்கு வந்து 
உழைத்து இன்றுவரை
 மக்கள் நலம்பெற பெரும்
 தொண்டு அற்றியிருக்கும் 
அவருக்கு ஓன்றுமில்லையாம்

இந்த தேசம் மிக மிக நன்றிகெட்ட
 தேசமாக சென்றுகொண்டிருக்கின்றது

நன்றி கெட்டவர்கள் செல்லட்டும்

அந்த வேலூர் மருத்துவமனை 
ஐடா ஸ்கேடரின் கனவு, 
கடந்த 100 ஆண்டுகளாக எத்தனையோ 
லட்சம் மக்களை
அது காப்பாற்றிகொண்டிருக்கின்றது,
 இன்றுவரை 
இந்த நொடிவரை எத்தனையோ
 பேர் நலம்பெற்று 
கொண்டிருக்கின்றனர்

அந்த பலன் பெற்றவர்கள் நிச்சயம் 
மனதில் வாழ்த்துவார்கள், 
அவர் தொண்டையும் அந்த 
மருத்துவமனை பற்றி 
அறிந்தவர்களும்
 இந்த 100ம் நினைவு ஆண்டில் 
அவளுக்கு மாபெரும் 
அஞ்சலியினை செலுத்தலாம்

இங்கு வந்தவர்கள் எல்லாம் மதம் 
பரப்ப வந்தவர் அல்ல,
 உண்மையிலே இம்மக்களுக்
கு ஏதும் செய்ய வாழ்வினை 
அர்பணித்தவர்கள்

அதில் பென்னி குயிக்கும், 
ஐடா ஸ்கேடரும் எந்நாளும் 
நினைவில் நிற்பார்கள்

ஆனாலும் ஜனாதிபதி ஒருவார்த்தை 
அவரை குறிப்பிட்டிருக்கலாம், 
தமிழ அரசு பிரநிதிகளும் 
அவள் பெயரை சொல்லவில்லை. 
அப்படி அவள் இந்நாட்டு மக்களுக்கு
 என்ன துரோகம் செய்தாள்??

அவள் வெளிநாட்டுகாரியாகவும்,
 கிறிஸ்தவராகவும் இருந்ததுதான் 
அவளின் தவறு/

இவர்கள் சொல்லித்தான் 
அவள் புகழ் தெரிய வேண்டுமா?
ச்சயம் இல்லை. தொண்டு 
என்பதும் சேவை என்பதும் 
அரசியலுக்கு அப்பாற்பட்டது

100 ஆண்டுகளை கடந்து
 இந்திய மக்களுக்கு பணிசெய்யும் 
அந்த மருத்துவமனை நிற்கும் 
வரை ஐடா ஸ்கேடர் வாழ்வார்

வாழ்வில் நாம் கண்டு 
வீடும் அதிசய கிறிஸ்தவர்களில்
 அந்த ஐடாவும் ஒருவர்.
 கிறிஸ்தவம் அவர் மனதை 
அப்படி தொட்டிருகின்றது

அந்த மருத்துவமனை
 100 அல்ல, 1000
 ஆண்டுகள் இம்மக்களுக்கு
 தொண்டு செய்யும், காரணம் 
அதன் அடித்தளம் 
மிக மிக உன்னதமான 
மானிட நேயம் எனும் 
அஸ்திவாரத்தால் 
அமைக்கபட்டிருக்கின்றது.

ஜனாதிபதியும் பிரதமரும் 
100ம் ஆண்டில்
 ஐடா ஸ்கேடரை நினைவு கூறாதது 
அவளுக்கு பெருமையே,

அந்த கருணையின் தேவதையினை
 நினைத்து பார்க்காதது
 இவர்களுத்தான் அவமானம்
படித்தேன், பகிருகிறேன்
*********